Jump to content

கடமையைச் செய்ய....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

181127-Tharavai-Thuyilum-Illam.th.jpg

கடமையைச் செய்ய....

மேனி ஒடுங்கி
மெல்லிய நடையொடு
ஒரு கையிலே
துணிப் பையொன்று
மறு கையிலே
நெய்ப் பந்தமொன்று
திருநகரிலிருந்து
கனகபுரம் நோக்கி
அன்னையவர்கள்
நடந்துகொண்டிருந்தாள்!
இது அவனுக்காய்
விளக்கேற்றும்
பன்னிரெண்டாவது ஆண்டு
விடுமுறை கிடைத்தால்
ஓடி வருவான்
அவனுக்காகவே
சமைக்கத் தோன்றும்
சேர்ந்து உண்டு
மகிழ்வான் அவன்
வெளிநாட்டில் இருந்து
பணம் தருவார்கள்
மனம் தருவது
அவன் மட்டுமே
குடிசையைக் கூட
கோவிலாக்குவான்!
இரு குழைந்தைகளுக்கு
அப்பா அவன்
தாய்வீடு வந்தால்
அவனே குழந்தை
விடைபெறும் நேரம்
விழிகொண்டு பாரான்
தொடர்ந்து சென்று
வாசலில் நின்றால்
திரும்பிப் பார்த்து
கவனம் என்பான்!
அவன் உடலை
தொட்டு அழவும்
கொடுப்பனை இல்லை
கொடுமையானது
அன்னையர் வாழ்வு
எத்தனை அன்னையர்
துடிக்கின்றனரோ!

விடுதலைக்காகச்
சாவை அணைத்தோர்
மீண்டும் வந்தா
நீதியைக் கேட்பார்
விட்டுச் சென்ற 
ஈகத்தை வைத்து
ஈழத்தை மீட்கும்
கடமையைச் செய்ய
ஏற்றும் சுடரிலே 
சத்தியம் செய்வோம்!

ஆகுதியானோரை அகமேந்தி
நன்றியுடன்
நொச்சி
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2021 at 05:09, nochchi said:

181127-Tharavai-Thuyilum-Illam.th.jpg

கடமையைச் செய்ய....

மேனி ஒடுங்கி
மெல்லிய நடையொடு
ஒரு கையிலே
துணிப் பையொன்று
மறு கையிலே
நெய்ப் பந்தமொன்று
திருநகரிலிருந்து
கனகபுரம் நோக்கி
அன்னையவர்கள்
நடந்துகொண்டிருந்தாள்!
இது அவனுக்காய்
விளக்கேற்றும்
பன்னிரெண்டாவது ஆண்டு
விடுமுறை கிடைத்தால்
ஓடி வருவான்
அவனுக்காகவே
சமைக்கத் தோன்றும்
சேர்ந்து உண்டு
மகிழ்வான் அவன்
வெளிநாட்டில் இருந்து
பணம் தருவார்கள்
மனம் தருவது
அவன் மட்டுமே
குடிசையைக் கூட
கோவிலாக்குவான்!
இரு குழைந்தைகளுக்கு
அப்பா அவன்
தாய்வீடு வந்தால்
அவனே குழந்தை
விடைபெறும் நேரம்
விழிகொண்டு பாரான்
தொடர்ந்து சென்று
வாசலில் நின்றால்
திரும்பிப் பார்த்து
கவனம் என்பான்!
அவன் உடலை
தொட்டு அழவும்
கொடுப்பனை இல்லை
கொடுமையானது
அன்னையர் வாழ்வு
எத்தனை அன்னையர்
துடிக்கின்றனரோ!

விடுதலைக்காகச்
சாவை அணைத்தோர்
மீண்டும் வந்தா
நீதியைக் கேட்பார்
விட்டுச் சென்ற 
ஈகத்தை வைத்து
ஈழத்தை மீட்கும்
கடமையைச் செய்ய
ஏற்றும் சுடரிலே 
சத்தியம் செய்வோம்!

ஆகுதியானோரை அகமேந்தி
நன்றியுடன்
நொச்சி
 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👌

படித்தோருக்கும், படித்துக் கருத்திட்ட புரட்சிகரத்தமிழ்த் தேசியனவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.