Jump to content

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

53 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

பட மூலாதாரம்,SANGARAN

இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ''மாவீரர் தினம்'' அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகள் அனைவரையும், நவம்பர் மாதம் 27ம் தேதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இலங்கை தமிழர்கள் நினைவுகூர்கின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு தூபிகள் மற்றும் நினைவிடங்களில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய சந்திகள் மற்றும் பிரதேச நுழைவாயில்களிலும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை காண முடிகின்றது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு முன்னதாக நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த போதிலும், தமிழர் தரப்பு நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில், சில நீதிமன்றங்கள் தடை விதித்த போதிலும், மேலும் சில நீதிமன்றங்கள் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற அனுமதி வழங்கியிருந்தன.

இந்த நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழர் தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் என்று அழைக்கப்படும் லெப்டினன்ட் சங்கரின் வீட்டில் இன்று முற்பகல் ஈகை சுடரேற்றி நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா அஞ்சலி நிகழ்வு

பட மூலாதாரம்,KOGULAN

 
படக்குறிப்பு,

வவுனியா அஞ்சலி நிகழ்வு

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கேப்டன் பண்டிதரின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதி யுத்தம் இடம்பெற்ற நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதேபோன்று, உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

நந்திக்கடல் பகுதியில் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, துரைராசா ரவிகரன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.

நீதிமன்றத்தின் முடிவு என்பது, அஞ்சலி செலுத்துவதற்கான தீர்ப்புதான் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எஸ்.சிறிதரனும், இன்றைய தினம் ''மாவீரர்கள்'' என்று விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் போற்றப்படும் முன்னாள் போராளிகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மேலும், வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்திருந்தார்.

வவுனியா அஞ்சலி நிகழ்வு

பட மூலாதாரம்,KOGULAN

 
படக்குறிப்பு,

வவுனியா அஞ்சலி நிகழ்வு

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களினால் மாவீரர்களுக்கு ஈகை சுடரேற்றி, முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு - கடற்படை பகுதியில் பெருந்திரளாக ஒன்று கூடிய மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலும், மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து இன்று மாலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

''மாவீரர்கள்'' என்று அழைக்கப்படுபவர்கள் நினைவு இல்லங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அண்மையில் துப்புரவு செய்திருந்தன.

இதன்போது ராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதும், தாம் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாக தமிழர் தரப்பு கூறியிருந்தது.

மாவீரர் தினத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்குமானால், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, வீடுகளில் மாத்திரம் நினைவேந்தல்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது.

எனினும், பாதுகாப்பு தரப்பு இதற்கு தடை விதிக்குமானால், அந்த தடைகளையும் மீறி, மாவீரர் தினத்தை தாம் அனுஷ்டிப்பதாக செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன்.
 
படக்குறிப்பு,

தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது..

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை காணொளிப் பதிவு செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளருக்கு உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், ராணுவ வீதி தடையைக் காணொளியாகப் பதிவு செய்துகொண்டிருந்த நபரை விசாரணை செய்ய முயற்சித்த போது, அவர் ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த வேளையிலேயே தடுமாறி வீழ்ந்ததாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ராணுவத்தினர், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தை அடுத்து, ஊடகவியலாளரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59445766

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கெடுபிடிகளுக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது.

IMG-20211127-WA0025.jpg

பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிசாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

பல்வேறு அச்சுறுத்தல் தடைகளையும் தாண்டி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திடலுக்குள் இராணுவத்தால் உள்நுழைய அனுமதிக்கப்பட்ட உறவுகள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் பொதுச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

IMG-20211127-WA0028.jpg

இதன்போது உறவுகளை இழந்தவர்கள், மதத் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை,இதனை கண்டு அஞ்சலி செய்ய தீருவில் திடலுக்கு வெளியே ஒன்று கூடி தீபங்களை ஏற்றி பொதுமக்கள் அஞ்சலித்த பொழுது மிகக் கேவலமான முறையில் சிவில் உடையில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் தீபங்களை தட்டி விட்டதுடன் அநாகரிகமான முறையில் செயற்பட்டனர்.

IMG-20211127-WA0027.jpg

இதேவேளை இந் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் பொலிசாரும் நடந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

3__4_.jpeg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செய்தனர்.

3__1_.jpeg

அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து இராணுவத்தினர், போலீசார், மற்றும் இராணுவ  புலனாய்வாளர்களும் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள்  நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். 

3__3_.jpeg

பின்னர் சாவகச்சேரி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர். 

யாழ்ப்பாணம் - சாட்டி

 

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், சாட்டி பகுதியில் இன்று 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Chatty___10_.jpeg

Chatty___9_.jpeg

Chatty___12_.jpeg

Chatty___7_.jpeg

Chatty___8_.jpeg

Chatty___6_.jpeg

Chatty___5_.jpeg

Chatty___1_.jpeg

Chatty___2_.jpeg

Chatty___4_.jpeg

 

https://www.virakesari.lk/article/117994

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

IMG_9228__1_.jpg

முல்லைத்தீவு கடற்கரையில் தமிழரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக முற்பட்ட வேளை பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

IMG_9223.jpg

இந்நிலையில் அவரது மனைவி வீதியில் இருந்து போராட்டம் மேற்கொண்டதுடன் என்ன தடைவந்தாலும் நினைவேந்தல் மேற்கொள்வேன் எனக் கூறி நினைவேந்தலை மேற்கொள்ள ஆயத்தங்களை மேற்கொண்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடினர்.

IMG_9220.jpg

IMG_9229.jpg

இதையடுத்து மக்கள் 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் சுடர் ஏற்றி அஞ்சலி மேற்கொண்டனர்.

a37f48ba-e9c2-42d5-a1ee-586a33ddf363.jpg

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .

IMG_9234.jpg

IMG_9239.jpg

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில்  உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் !

 

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர்களுக்காக  சுடரேற்றி  தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார்.

IMG_0964_resized_4_-_Copy.JPG

IMG_0923_resized_2_-_Copy.JPG

IMG_0931_resized_2_-_Copy.JPG

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/117993

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்

மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணி அளவில் சுடர் ஏற்றி தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தப்பட்டது.

bf83da35-f6bc-49e1-a939-0633c19194ca.jpg

இன்று (27) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த பட்டுருந்த நிலையில் தமிழர் தேசிய  வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இடம் பெற்றது. 

301e6047-2c06-476a-a233-1169f8b11a96.jpg

401369f7-e6b5-4ae7-b717-c8f5d0069432.jpg

5329b0ee-4144-4f07-b0a9-16b1414e56bd.jpg

36f0cd09-7817-4e1e-8aa5-3e73183f2321.jpg

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,,மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நினைவேந்தல்

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.

1667d3d1-019e-481e-a408-cce1c63b31e1.jpg

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

413df506-0976-4a6c-aae3-c73a9b6de7d9.jpg

e64f4317-87b4-4a92-b5f5-3cfc39d55a0b.jpg

5db0a6ee-716b-457e-844f-a4423b2b79e4.jpg

07cbd3b8-6722-4ad0-904b-73c4e424d205.jpg

90ec478c-67ea-4343-9f1d-854c63aa534a.jpg

இதன் போது மாலை  தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் மாவீரர்தினம் அனுஸ்டிப்பு

காணாமல்போன உறவினர்களால் வவுனியாவில் மாவீரர்தினம் அனுஸ்டிப்பு

 

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர்தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபட்டது.  

IMG_6611.jpeg

மாலை 6.05மணிக்கு அகவணக்கம் செலுத்தபட்டு பிரதான ஈகைசுடர் ஏற்றிவைக்கபட்டது. 

மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகை சுடர்ஏற்றி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.  

IMG_6571.jpeg

9eb9b0a7-8825-49d8-b727-c85e003a6e92.jpg

de76cd6d-70d4-4f93-88cc-30574730a0d9.jpg

IMG_6613.jpg

மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

வவுனியா

 

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

IMG20211127180651_01.jpg

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

IMG20211127180713_01.jpg

IMG20211127180956_01.jpg

IMG20211127180856_01.jpg

IMG20211127181149_01.jpg

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட செ.அரவிந்தன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" 

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்து கொண்ட 2021ம் ஆண்டுக்கான "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" நவம்பர் 27 இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

IMG_20211127_181751.jpg

கடற்புலி கப்டன் கிருபன், மேஜர் நகுலன் ஆகியோரின் உறவினரும், முன்னாள் போராளியுமாகிய பார்த்தீபன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். 

IMG_20211127_181045.jpg

IMG_20211127_181102.jpg

IMG_20211127_181130.jpgIMG_20211127_181143.jpgவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கச் செயலாளருமாகிய கோ.ராஜ்குமார் அவர்களுக்கு நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 2021ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

 

சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி

 

தமிழ் தேசிய மாவீரர் நாளான இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

01__2___2_.jpg

01__3___2_.jpg

 

01__1___2_.jpg

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ கெடுபிடிகளே மாவீரர் நினைவுகளை மக்கள் மனதில் அணையாமல் சுடர்விட்டு எரியச் செய்கின்றன,  நம் மாவீரரின் தியாகங்களை, மக்கள் மனதில் அவர்களுக்காய் ஏங்கும் ஏக்கத்தை உலகெங்கும் பறைசாற்றுகின்றன. அதே நேரம் இராணுவத்தினரின் மிலேச்சத்தனத்தையும் வெளிக்கொண்டு வருகிறது. அவர்கள் இறந்தாலும் மக்களின் விடுதலையையே உணர்த்துகிறார்கள். எதற்காக மடித்தார்களோ அதையே திரும்ப திரும்ப ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

ஏன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று எழுதப்பட்டுள்ளது?

பிபிசி இன்னமும் கோர்த்துவிடுவதிலே தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

தமிழ் மக்களால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு என்று எழுதினால் அப்படி என்ன தான் குறைந்து போய்விடும்.

எமது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டோம். என்று கூவிக்கூவி திரிந்தாலும் யதார்த்தம் அதுவல்ல நமக்கு வேண்டிய விடுதலை இன்னும் கிடைக்கவில்லை, மக்கள் அதற்காக போராடிக்கொண்டிருகிறார்கள்  என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

நாங்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டோம். என்று கூவிக்கூவி திரிந்தாலும் யதார்த்தம் அதுவல்ல நமக்கு வேண்டிய விடுதலை இன்னும் கிடைக்கவில்லை, மக்கள் அதற்காக போராடிக்கொண்டிருகிறார்கள்  என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன!

முன்னரை விட இப்போது உலகெங்கும் ஆடம்பரமில்லாமல் அதிகளவு மாவீரர் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்து விட்டது. அதாவது உண்மையான தமிழன் எங்கிருக்கின்றானோ அங்கெல்லாம் மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chatty___1_.jpeg

 

மாவீரர்களுக்கு சிங்கள இராணுவம் அணிவகுப்பு மரியாதை... என்று எடுத்துக்கொண்டு இச்சூழலை கடந்து செல்வதே சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கையறு நிலையில் நின்ற எம் வீரர்களை, போர்தர்மம் அறியாதவர்கள் இவ்வாறே கூடி நின்று அவர்களின் துகிலுரிந்து, கைகளையும் கண்ணையும் கட்டி, சித்திரவதை செய்து குதூகலித்து கொன்று கொண்டாடியது. ஆனால் அந்த காட்சிகளை மக்கள் பார்ப்பதை தடுப்பதிலிருந்து அவர்கள் தங்களை மறைத்து தங்கள் முகங்களை  புனிதர்களாக காண்பிக்க முனைந்தாலும், செயற்பாடுகள் இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும் கழுகுக் கூட்டங்கள் இவர்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று எழுதப்பட்டுள்ளது?

பிபிசி இன்னமும் கோர்த்துவிடுவதிலே தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

தமிழ் மக்களால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு என்று எழுதினால் அப்படி என்ன தான் குறைந்து போய்விடும்.

எமது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

BBC இந்திய/பார்ப்பன ஊதுகுழலாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

முன்னரை விட இப்போது உலகெங்கும் ஆடம்பரமில்லாமல் அதிகளவு மாவீரர் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்து விட்டது. அதாவது உண்மையான தமிழன் எங்கிருக்கின்றானோ அங்கெல்லாம் மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இல்லை அண்ணர்....உலகெங்கும் ..பேப்பர் ,வதிவிட  அந்தஸ்து இல்லாத குண்டர்,....--- --- ---- கேசுகள்தான் 

இதனைக் கொண்டாடுகினம்...கனடாவில் தமிழ்க்கடைகள்  பூட்டு  இவையும் அந்தக் கேசுகள்தான்..இன்று..கிரவுண்டிலை குவிந்த சனமும் அதே....வரப்போகினம் இப்ப..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இல்லை அண்ணர்....உலகெங்கும் ..பேப்பர் ,வதிவிட  அந்தஸ்து இல்லாத குண்டர்,....--- --- ---- கேசுகள்தான் 

இதனைக் கொண்டாடுகினம்...கனடாவில் தமிழ்க்கடைகள்  பூட்டு  இவையும் அந்தக் கேசுகள்தான்..இன்று..கிரவுண்டிலை குவிந்த சனமும் அதே....வரப்போகினம் இப்ப..

நீங்கள் கூறுவது தவறு அல்வாயன்.

உலகெங்கிலும் உள்ள தமிழர் எல்லோரும் மனப்பூர்வமாக மாவீரர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். 

குண்டர்கள் காசு மட்டும் சேர்ப்பினம். தாங்கள் கொண்டாட.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

 

https://www.bbc.co.uk/send/u50853736

இந்த இணைப்பிலே எமது கண்டத்தை பதிவு செய்யலாம். உறவுகள்  களத்திலே சுட்டுவதைவிட இவர்களுக்கு எழுதவும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி அனுப்பப்பட்டது

தொடர்பு கொண்டதற்கு நன்றி

 

Back to BBC News தமிழ்

இந்த விவரங்களை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்

குறிப்பு எண்0c0a738b-44ae-440f-ad32-8d8e47a99a79

We'll keep your submission for up to 270 days – and if we don't use it we'll then delete it and any other information you sent us.

உங்கள் மனம் மாறி இதை பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால் குறிப்பு எண்ணை சுட்டி, bbctamil_puhaar@bbc.co.uk என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும். If you submitted something for a programme or online, we won’t be able to remove it once we use it.

கவலை வேண்டாம் உங்கள் தரவுகளை நாங்கள் பாதுகாப்போம். மேலதிக தகவல்களுக்கு அந்தரங்க அந்தரங்க கொள்கைகளை படிக்கவும்.

14 minutes ago, nochchi said:

https://www.bbc.co.uk/send/u50853736

இந்த இணைப்பிலே எமது கண்டத்தை பதிவு செய்யலாம். உறவுகள்  களத்திலே சுட்டுவதைவிட இவர்களுக்கு எழுதவும்.

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்தி அனுப்பப்பட்டது

தொடர்பு கொண்டதற்கு நன்றி

 

Back to BBC News தமிழ்

இந்த விவரங்களை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்

குறிப்பு எண்0c0a738b-44ae-440f-ad32-8d8e47a99a79

We'll keep your submission for up to 270 days – and if we don't use it we'll then delete it and any other information you sent us.

உங்கள் மனம் மாறி இதை பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால் குறிப்பு எண்ணை சுட்டி, bbctamil_puhaar@bbc.co.uk என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும். If you submitted something for a programme or online, we won’t be able to remove it once we use it.

கவலை வேண்டாம் உங்கள் தரவுகளை நாங்கள் பாதுகாப்போம். மேலதிக தகவல்களுக்கு அந்தரங்க அந்தரங்க கொள்கைகளை படிக்கவும்.

 

நன்றி,
ஈழப்பியனவர்களைப்போல் களஉறவுகள் தங்கள் கண்டணங்களைப் பதிவுசெய்வது நன்மைபயக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.