Jump to content

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.

(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;

(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;

(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை

(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;

(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;

(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;

(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;

(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.

– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.

– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

https://curia.europa.eu/juris/document/document_print.jsf?docid=250005&text&dir&doclang=EN&part=1&occ=first&mode=lst&pageIndex=0&cid=1340620&fbclid=IwAR0khH1_suUzyzG6p5hQ5Vf_6GS0zgP86EEz30QrbGFH7k_2nQflqKvaA84

https://athavannews.com/2021/1252823

Link to comment
Share on other sites

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! வழக்கின் அனைத்து செலவுகளையும் தவராஜ் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு! தமிழாக்கம் நடராஜா குருபரன். #cvria #european_court_of_justice
 
EU-Court-750x375.jpg
விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சை வழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி "பயங்கரவாதச் செயல்" என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.
(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது
செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்,
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;
(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;
(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை
(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;
(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;
(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;
(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;
(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;
(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
- விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.
- பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.
- பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.
- விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.
- விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2021 at 17:52, nunavilan said:

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்

இதனை தாங்கள் உற்பத்தி செய்யலாம்.. தங்களுக்கு ஒத்துவராத இடங்களில் கொட்டலாம்.. மில்லியன் கணக்கில் அகதிகளை உருவாக்கலாம்.. அதெல்லாம்.. அதி உச்ச மனிதபிமானம்.. மனித உரிமைகள் காப்பு ஆகும்.

சரி.. அங்கீகரிக்கப்பட்ட சிரிய அரசு மீது ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட மிலேச்சதனமான தாக்குதல்களில் இவை பாவிக்கப்பட்டு.. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் தானே..??! மில்லியன் கணக்கில் இடம்பெயர்ந்தார்கள் தானே.. அப்போ அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஏன் ஐரோப்பிய நீதிமன்றம் தண்டிக்கவில்லை.. தடை போடவில்லை..??! 

சிரியா மீதான தாக்குதலுக்கு எங்கு இவர்கள் ஒப்புதல் வாங்கினார்கள்..??! ஈராக்.. லிபியா.. சோமாலியா.. சேர்பியா மீதான தாக்குதல்களுக்கு.. ஐநாவில் ஒப்புச்சப்புக்காவது தாங்களே தங்களுக்கு வாங்கிச்சினம்...

கொசொவாவில்..அரசுக்கு எதிரான.. போராளிகளுக்கு இவையே மேற் குறிப்பிட்ட அத்தனையையும் சப்பளை செய்திச்சினமே.. அப்போ ஐரோப்பிய நீதிமன்றம் என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டிருந்தது.

நீதிமன்றங்கள் எப்போ பக்கச் சார்ப்பாக தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்தனவோ அப்ப தான்.. மக்களுக்கு ஆயுதங்கள் மீது நம்பிக்கை அதிகரித்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமும் விதிவிலக்கல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் பட்டியலிட்ட ஒவ்வொரு விடயத்தையும் ஒரு வழக்காக இதே நீதிமன்றில் போட முடியும்! செய்வீர்களா? செய்ய மாட்டீர்கள். ஏனெனில் வழக்கு ஆவணங்களைத் தயாரிக்கும் போதே நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் செயல் புரிந்தோர் இறைமையுடைய நாடுகள் என்பது உச்சந்தலையில் உறைக்கும்!

எனவே, தடையான அமைப்புகளையும், இறைமையுடைய நாடுகளையும் ஒப்பிட்டு பிரச்சார எழுத்து/பேச்சு மட்டுமே செய்ய முடியும்! வேறெந்தப் பயனும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

கொசொவாவில்..அரசுக்கு எதிரான.. போராளிகளுக்கு இவையே மேற் குறிப்பிட்ட அத்தனையையும் சப்பளை செய்திச்சினமே.. அப்போ ஐரோப்பிய நீதிமன்றம் என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டிருந்தது.

20 minutes ago, Justin said:

நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் செயல் புரிந்தோர் இறைமையுடைய நாடுகள் என்பது உச்சந்தலையில் உறைக்கும்!

Kosovo Liberation Army.

The Kosovo Liberation Army (KLA; Albanian: Ushtria Çlirimtare e Kosovës [uʃˈtɾija t͡ʃliɾimˈtaɾɛ ɛ ˈkɔsɔvəs], UÇK) was an ethnic Albanian separatist militia that sought the separation of Kosovo from the Federal Republic of Yugoslavia (FRY) and Serbia during the 1990s and the eventual creation of Greater Albania due to the presence of a vast ethnic majority of Albanians in the region,[b] stressing Albanian culture, ethnicity and nation.[2][3][4] It was considered a terrorist group until the breakup of Yugoslavia.[14]

Allies 21px-Flag_of_Albania_%281992%E2%80%93200 Albania

https://en.wikipedia.org/wiki/Kosovo_Liberation_Army

The KLA received large funds from the Albanian diaspora in Europe and the United States, but also from Albanian businessmen in Kosovo.[38] It is estimated that those funds amounted from $75 million to $100 million and mainly came from the Albanian diaspora in the Switzerland, United States and Germany.[22] The KLA received the majority of its funds through the Homeland Calls Fund, but significant funds were also transferred directly to the war zones. Apart from the financial contributions, the KLA also received contributions in kind, especially from the United States and Switzerland. These included weapons, but also military fatigues, boots and other supporting equipment.[39]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

இணைப்பிற்கு நன்றி! இதே விக்கிபீடியாவில் கொசோவாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்பியோர் ரஷ்யாவின் பெரும்பான்மையினராகிய சிலாவிக் இனத்தவர் என்பதும், அதனால் மேற்குலகம் கொசோவா விடுதலை அமைப்பை ஆதரித்தது என்பதையும்  நீங்கள் காணவில்லையா அல்லது அப்படி ஒரு தகவலே இல்லையா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைப்புக்களாயிருந்தாலும் சரி, நாடுகளாயிருந்தாலும் சரி..

வல்லாதிக்க நாடுகளுக்கு நீங்கள் வேண்டபடுகிறவர்களாயிருந்தால் நீங்கள் மனிதாபிமானிகள்,

வேண்டபடாதவர்களாயிருந்தால்  நீங்கள் சர்வதேச  பயங்கரவாதிகள்.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து அமெரிக்க கூட்டாட்சிவரை  சர்வதேச சமூகத்திற்கு எந்த வகையிலும் புலிகள் அச்சுறுத்தலாய் இருந்ததில்லை...

இருந்தும் ஏன் தடை செய்யப்பட்டார்கள் என்றால்...

எமது நிலமும், மக்கள் முக்கியத்துவமும் சர்வதேச நிலபரப்பில் ...  அதியுச்ச கவன ஈர்ப்பை பெறவில்லை...

எந்த வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தை எம் போராட்ட அமைப்பு பக்கம் ஈர்க்க புலம் பெயர் ஈழதமிழர் எதுவுமே பெரிதாக செய்ததில்லை, 

புறநடையாக  வானொலிகளில் கவிதை படிப்பது, இணைய தளங்களில் ஆவேசமா பேசுவது, விரல்களை கொண்டு விசை பலகையை தட்டி விரிந்து கிடக்கும் இந்தியா சீனாவை திட்டி தீர்ப்பது... என்பதை தவிர ....

அதில் பிறரை குற்றம் சொல்ல ஏதுமில்லை, புலிகள் எனும்  ராட்சத தமிழர்களின் கேடயம் எம்மை சுற்றி இருக்கும்வரை எவனாலும் எம்மை ஏதும் செய்ய முடியாது, இந்த கோட்டையை எவரும்  தாண்டி வந்து  தமிழரை தொட முடியாது என்ற அழகழகான ஆசையில், அதீத நம்பிக்கையில் நாம் எல்லாருமே வாழ்ந்தோம்.

போய் முடிந்தது புலிகள் மட்டுமல்ல, ஈழ தமிழர்கள் இதுவரை சந்திருக்காத நம்பிக்கை விசுவாசம், வீரம், மானம், அர்ப்பணிப்பு, தியாகம், நேர்மை, ஜாதி மத பேதமற்று மக்களை மக்களாகவே பார்க்கும் ஒரு மாபெரும் பேரியக்கம்.

இனிமேல் புலிகள் தடையை எடுக்க சொல்லி எவனையும் கேட்கலாம்,

அவர்களும் தடையை எடுக்கலாம்...

எடுத்தாலும் அந்தகால புலிகளை தாயக விடுதலையிலும் சரி , தன்மான உணர்விலும் சரி எந்த கூட்டத்தினாலும் மீள கொண்டுவர முடியாது.

ஒற்றுமை என்றால் என்னவென்று தெரியாத ஒரு இனத்தில் பிறந்ததால் ஒற்றையாய் இருந்து எம் தலைவர் இந்த இனத்தை திருத்த எவ்வளவோ முயற்சி செய்தார்...

அவர் இனி திரும்பி வரபோவதில்லை, எத்தனை தடைகளை எம் மீது போட்டாலும் சரி விலக்கினாலும் சரி...

இப்போது தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பி எம் டபிள்யூ காரில் அலைபவர்களை மனசில் வைத்து சர்வதேசம் தடையை போட்டாலும் விலக்கினாலும்...

எமக்குள்ள பாதிப்பு என்றுமே அப்படியே இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

இணைப்பிற்கு நன்றி! இதே விக்கிபீடியாவில் கொசோவாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்பியோர் ரஷ்யாவின் பெரும்பான்மையினராகிய சிலாவிக் இனத்தவர் என்பதும், அதனால் மேற்குலகம் கொசோவா விடுதலை அமைப்பை ஆதரித்தது என்பதையும்  நீங்கள் காணவில்லையா அல்லது அப்படி ஒரு தகவலே இல்லையா?

1 hour ago, Justin said:

நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் செயல் புரிந்தோர் இறைமையுடைய நாடுகள் என்பது உச்சந்தலையில் உறைக்கும்!

1 hour ago, nedukkalapoovan said:

It was considered a terrorist group until the breakup of Yugoslavia.[14]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, valavan said:

அவர் இனி திரும்பி வரபோவதில்லை, எத்தனை தடைகளை எம் மீது போட்டாலும் சரி விலக்கினாலும் சரி...

இப்போது தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பி எம் டபிள்யூ காரில் அலைபவர்களை மனசில் வைத்து சர்வதேசம் தடையை போட்டாலும் விலக்கினாலும்...

எமக்குள்ள பாதிப்பு என்றுமே அப்படியே இருக்கும்.  

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை. எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில் அதனை ஆரம்பித்தவர்கள் விடுதலையை பெற்றுக் கொடுத்ததாக இல்லை. அதேபோல்.. ஆரம்பித்த போராட்ட வடிவத்தாலேயே வென்றி கொண்டதாகவும் இல்லை.

அது.. தென்னாபிரிக்க கறுப்பின விடுதலையாக இருக்கட்டும்.. கிழக்குத் திமோர் விடுதலையாக இருக்கட்டும்.. கொசாவோ விடுதலையாக இருக்கட்டும்.. நாங்கள் சமீப கால வரலாற்றில் கண்டவற்றில் கூட இதுவே தான் யதார்த்தமாகும்.

ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்த நெல்சன் மண்டேலா.. பின்னர் ஜெயிலில் தான் அதிகம் இருந்தார்.. போராட்டக் களத்தில் அல்ல. ஆனால் இறுதியில் ஆயுதமற்ற வழியில் தான் விடுதலை அவருக்குச் சாத்தியமானது. 

ஒருவேளை தலைவர் இருந்திருந்தால் கூட.. இன்றைய பூகோள நகர்வுகளை கருத்தில் கொண்டு அவரும் நிச்சயம்.. எமது தாயக விடுதலையை பிறிதொரு வடிவில் நகர்த்தவே முயன்றிருப்பார். அதனால் தான் என்னவோ.. வழமையாக வலிந்து யுத்தத்தை ஆரம்பிக்கும் புலிகள் கடைசிவரை.. 4ம் கட்ட ஈழப்போரில்.. வலிந்து தாக்குதல்களை தவிர்த்தே வந்தனர். 

புலிகள் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை அதன் தேவையை உலகறியச் செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். ஒரு பிராந்தியத்துக்குள் தந்தை செல்வாவால் ஒலித்த தமிழீழக் கோரிக்கை இன்று சர்வதேசப் பரப்பில் ஒலிக்கிறது என்றால்.. அது புலிகளால் தான். எனவே புலிகள் ஆரம்பித்த வடிவில் இல்லை என்றாலும்.. தமிழீழ தேச விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய வழிகளை ஆராய்ந்து அதனை முன்னகர்த்திச் செல்வதே தமிழ் மக்களுக்கும் மண் மீட்க போராடி வீழ்ந்த தியாகிகளுக்கும் செய்யும் இனக்கடமையாக இருக்க முடியும். அதையே சிறை மீண்ட பின் மண்டேலா செய்து காட்டினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

சரி, இந்த அமைப்பிற்கு உதவிய நாடுகள், கண்டும் காணாமலிருந்த நாடுகளை நீதிமன்றில் நிறுத்த முடியுமா? இல்லையல்லவா?

மேலும் இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் - நாட்டின் தலைவராக வந்த பின்னர் கூட- போர்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது ஹேக்கில் தடுப்பில் இருக்கிறார். இதன் அர்த்தம் தடை செய்யப் பட்ட அமைப்புகளும் இறைமையுடைய அரசுகளும் நீதிமன்றில் ஒன்றாகப் பார்க்கப் படுவது கிடையாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

நீதி என்பது எல்லோருக்கும் சமனாக இருக்க வேண்டும். அது இல்லாமல் இப்படிப் பக்கச்சார்ப்பாக அமைவது தான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நீதிச் சமனிலைக்காகவும் தான் இந்த உலகில் குரல்கொடுக்க வேண்டி உள்ளது. எமக்கான நீதி அந்தக் குரலின் வெற்றியில் தங்கியுள்ளது.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும்.. இறைமயற்ற நாட்டு மக்கள் ஆகிய எமக்கும்.. அப்படி இந்த உலகில் வாழும் பிற இன மக்களுக்கும்... நீதி மறுக்கப்படக் கூடாது. அவர்களும் தமக்கான அரசியல் சமூக பொருண்மிய விடுதலையுடன் கூடிய உரிமையை சுவைக்க உரித்துடையவர்களே. அதனை ஐரோப்பிய நீதிமன்றக் கணவான்கள் மறுதலிக்கக் கூடாது.. தங்களுக்கு எட்டிய அறிவை மட்டும் வைச்சுக் கொண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 21:59, nedukkalapoovan said:

நெடுக்கர் நீங்கள் கூறுவது சரி.ஆனால் மண்டேலாவைப்போல் மதிநுட்பத்தோடு மக்களை இணைத்துப் பயணிகக்கூடிய, மக்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய தலைமையென்று யாராவது இருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 21:23, Justin said:

எனவே, தடையான அமைப்புகளையும், இறைமையுடைய நாடுகளையும் ஒப்பிட்டு பிரச்சார எழுத்து/பேச்சு மட்டுமே செய்ய முடியும்! வேறெந்தப் பயனும் இல்லை!

ஏன் தலிபானும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்புத்தானே? இப்போ அவர்கள் ஆட்சி செய்யும்போது வாய்பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 21:19, nedukkalapoovan said:

நீதி என்பது எல்லோருக்கும் சமனாக இருக்க வேண்டும். அது இல்லாமல் இப்படிப் பக்கச்சார்ப்பாக அமைவது தான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நீதிச் சமனிலைக்காகவும் தான் இந்த உலகில் குரல்கொடுக்க வேண்டி உள்ளது. எமக்கான நீதி அந்தக் குரலின் வெற்றியில் தங்கியுள்ளது.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும்.. இறைமயற்ற நாட்டு மக்கள் ஆகிய எமக்கும்.. அப்படி இந்த உலகில் வாழும் பிற இன மக்களுக்கும்... நீதி மறுக்கப்படக் கூடாது. அவர்களும் தமக்கான அரசியல் சமூக பொருண்மிய விடுதலையுடன் கூடிய உரிமையை சுவைக்க உரித்துடையவர்களே. அதனை ஐரோப்பிய நீதிமன்றக் கணவான்கள் மறுதலிக்கக் கூடாது.. தங்களுக்கு எட்டிய அறிவை மட்டும் வைச்சுக் கொண்டு. 

On 4/12/2021 at 21:10, Justin said:

சரி, இந்த அமைப்பிற்கு உதவிய நாடுகள், கண்டும் காணாமலிருந்த நாடுகளை நீதிமன்றில் நிறுத்த முடியுமா? இல்லையல்லவா?

மேலும் இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் - நாட்டின் தலைவராக வந்த பின்னர் கூட- போர்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது ஹேக்கில் தடுப்பில் இருக்கிறார். இதன் அர்த்தம் தடை செய்யப் பட்ட அமைப்புகளும் இறைமையுடைய அரசுகளும் நீதிமன்றில் ஒன்றாகப் பார்க்கப் படுவது கிடையாது! 

2 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் தலிபானும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்புத்தானே? இப்போ அவர்கள் ஆட்சி செய்யும்போது வாய்பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

நீங்கள் மூவரும் ஒருவரோடு ஒருவர் மூர்கமாக உடன்படுகிறீர்கள் (agreeing violently).

உள்நாட்டு சட்டமும், சர்வதேச சட்டமும் ஒன்றல்ல. 

உள்நாட்டு சட்டத்தில் இருக்கும் நீதியின் மேலாண்மை (rule of law), சட்டத்தின் முன் அநேகரும் சமன் (equality before law) என்பன சர்வதேச சட்டத்தில் வெறும் பேச்சளவில்தான் உண்டு.

சர்வதேச சட்டம் என்பது சட்டமே அல்ல, அது ஒரு உலக ஒழுங்கு (world order) என்பது ஒரு பார்வை.

இதில் state party களே எல்லாம். Judge, jury and executioner. அரிதாக சில non state parties பங்களிக்கும்.

குறிப்பாக பலமான state parties அல்லது வசதியான state parties இன் கூட்டுக்களே, எதிரெதிராக இருந்து இந்த ஒழுங்கை தீர்மானிக்கின்றன.

மனித நாகரீகத்தில் நாடுகள் என்ற concept  வந்த நாள் முதல் இதுதான் நிலை. இனியும் இது மாறப்போவதில்லை.

உலகம் முழுதும் ஒரு ஒற்றை தலைமையின் கீழ் வந்து, world parliament, world police என்று வரும் வரை இதுதான் தொடரும் (அப்படி வராது என சொல்லி தெரிய தேவையில்லை).

ஆகவே பலம் பொருந்திய நாடுகளின் நலனுக்கு ஏற்ப ஒரு சமயம் மண்டேலாவை பயங்கரவாதி என்பார்கள், மறு சமயம் பங்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து தேனீர் கொடுத்து, வெஸ்மினாடரில் சிலையும் வைப்பார்கள்.

இந்த உலக ஒழுங்கை தமக்கு சாதகமாக வளைத்து, பலமான நாடுகளுக்கு நண்பணாகி, அவர்களுக்கு உதவியாக இருக்கும் இடத்தில் எம்மை position  பண்ணி, தமது போராட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு போகும் non state party தலைவர்களே - இந்த ஒழுங்கில் ஈர்க்கப்பட்டு வெற்றி ஈட்டி, ஈற்றில் அவர்களே state party யும் ஆகிறார்கள்.

மண்டேலா, காந்தி இந்த அணுகுமுறையில் வெற்றி ஈட்டிய உதாரணங்கள்.

அரபாத் ஒரு அளவுக்கு முன்னேறினாலும் இஸ்ரேல் மிக தந்திரமாக அவரின் பாதையை அடைத்து விட்டது. ஹமாஸ், ஹிஸ்புல்லா உசார் மடையர்கள் இதற்கு துணை போனார்கள்.

தலிபான் மிக அண்மைய உதாரணம். Revolutionary students front, stable state party in Afghanistan, state sponsors of terrorism, terrorists, de-listed insurgents, peace talk partners, state party in Afghanistan.

👆🏼 1996-2021 வரை தலிபான் பற்றிய மேற்கின் பார்வை இது.

அடிப்படையில் ஒரே தலிபாந்தான்.

மாறிகள் (variables) - மேற்கு மீதான தலிபானின் அணுகுமுறையும், மேற்கின் பிராந்திய, பாதுகாப்பு தேவைகளும் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nochchi said:

நெடுக்கர் நீங்கள் கூறுவது சரி.ஆனால் மண்டேலாவைப்போல் மதிநுட்பத்தோடு மக்களை இணைத்துப் பயணிகக்கூடிய, மக்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய தலைமையென்று யாராவது இருக்கிறார்களா?

இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

ம்கூம் 

Link to comment
Share on other sites

23 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கூம் 

ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

என்ன சார்வாள்  செய்வது 
பொன் ராமநாதன் காலத்திலிருந்தே நமக்கு அந்த தகுதி கிடையாதே, சிங்களவனுக்கு காவடி எடுப்பது தானே எமக்கு பிடிக்கும், லண்டன் போய் வழக்குப்பேசி தேரில் இழுத்துச்செல்லப்படுவதற்கு போட்ட முயற்சி (effort) இல் ஒரு இரண்டு வீதம் தன்னோட சொந்த இனத்தின் நன்மைக்காக போட்டிருந்தாலே போதுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

என்ன செய்வது தலைவராவதை பலர் விரும்புவதில்லை காலை வாருவது வழமைதானே 

Link to comment
Share on other sites

புலிகள் இப்போதும் பலத்துடன் இருந்து தமது கடந்த கால தவறுகளை திருத்தி,  அந்த பலத்தை வைத்து பேரம் பேசி தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை (அது தமிழீழமாய் இருக்கவேண்டும் என்றில்லை)  பெற்று கொடுப்பார்கள் என்றால் தடையை நீக்குவதில் அரசியல் பலன் தமிழ் மக்களுக்கு உண்டு. 

இப்போது தடையை நீக்கினால் புலம்பெயர் சுயநல புலிவால்கள் தமது திருட்டை தொடர மட்டுமே இந்த title ஐ பயன்படுத்துவார்கள். உருப்படியாக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகள் பட்டறிவு உணர்ததி நிற்கிறது. 

ஆகவே இனி தடை நீக்கி எந்த பலனும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2021 at 13:18, tulpen said:

புலத்தில் இருக்கும் அத்தனை மக்களும் முட்டாள்கள். உங்களைத் தவிர??

இது ஒரு வகை மனநோய் தான்.???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடை நீக்க முயற்சி தவிர வேறெந்த நேரத்திலும் நா.க.த.அ பெயர் செய்திகளில் வருவதில்லை. தற்போது சில விடயங்கள் செய்ய முடியாமல் தவிக்கிற புலிகளின் வால்கள் தவிர வேறு எவருக்கும் தடை நீக்கத்தால் ஒரு பயனுமில்லை! மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இந்த தடை நீக்க முயற்சி தவிர வேறெந்த நேரத்திலும் நா.க.த.அ பெயர் செய்திகளில் வருவதில்லை. தற்போது சில விடயங்கள் செய்ய முடியாமல் தவிக்கிற புலிகளின் வால்கள் தவிர வேறு எவருக்கும் தடை நீக்கத்தால் ஒரு பயனுமில்லை! மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

அதாவது புலிகள் பயங்கரவாதிகள் தான்.

அப்படியே உலகத்தில் அவர்கள் பெயர் நிலைப்பதற்காக பாடுபடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

அதாவது புலிகள் பயங்கரவாதிகள் தான்.

அப்படியே உலகத்தில் அவர்கள் பெயர் நிலைப்பதற்காக பாடுபடுகிறீர்கள்?

இப்போது தமிழர்கள் செய்ய வேண்டிய முதல் பத்து அவசரச் செயல்பாடுகளை பட்டியலிடச் சொன்னால், ஊர், உலக நிலவரம் தெரிந்த எவரும் "புலிகளின் பெயரை நற்பெயராக மீள உலகுக்குக் காட்டுதல்" என்பதை அந்தப் பத்துக்குள் சேர்க்க மாட்டார்கள்! 

இல்லாமல் போன ஒரு அமைப்பை, தியாகத்தை நன்றியுடன் தமிழ் மக்கள் நினைவுகூர்கின்றனரா இல்லையா? இதை விட இல்லாத ஒரு அமைப்பை exonerate செய்யும் முன்னெடுப்புகள் தமிழருக்கு ஒரு செயற்பாட்டு ரீதியான நன்மையும் தரா என்பதால் அது அவசியமில்லை!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

யார் அவர்கள் சுமத்திரன் ஆட்களோ ?

யாழில் பொய்களை  விதைப்பதே உங்கள் நோக்கமா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.