Jump to content

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி.

Recommended Posts

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்கு வந்து விட்டதாகவும் பலர் நாடகமாடினார்கள்.
ஆனால் அந்த ஒப்பந்தம் என்பது ஒரு நாளிலே தூக்கி எறியப்பட்டு வெற்று காகிதமானது.
தமிழர்கள் தனிநாட்டில்தான் உரிமைகளோடு வாழ முடியும் என்பது முடிந்த முடிவு.
ஆனாலும் நாம் தனியாக இயங்க முடியாது. அனைத்துலகம் என்பது உள்ளது. ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட முடியும் என்று அந்த அனைத்துலகம் கூறுகிறது. அதனூடே அமைதியைப் பெற்றுவிட முடியும்- தமிழர்கள் தங்களது உரிமையைப் பெற்றுவிட முடியும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
சிங்கள தேசம் உண்மையில் எதனையும் செய்யாது என்று அந்த அனைத்துலகம் நம்பும் வரை அவர்கள் சொல்லுகிற இந்த நாடகத்துக்குள்ளே நாங்களும் நடிக்க வேண்டியதுள்ளது.
சிங்கள தேசமானது சமாதானமாக வாழ விரும்பி ஏதாவது ஒரு தீர்வை முன்வைக்குமேயானால் நாம் அதனை பரிசீலிப்போம் என்று கூறியுள்ளோம். அந்த வகையில்தான் தற்போதைய “அரசியல்” நடைபெறுகிறது.
ரணில் வந்தால் தீர்வைத் தருவாரா?
கடினமான பாதையூடாக பயணிக்கின்ற போது வேறு ஒரு பக்கத்தை காண்பிக்கின்ற போது அதனூடே தப்பித்து வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ளலாம் என்பதைப் போன்ற நிலை சிக்கலானது.
கடந்த கால தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இத்தகையதொரு நிலைப்பாட்டில்தான் மாவட்ட சபை, மாகாண சபை என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தன. அவர்களுக்கு ஒன்றுமே நடைபெறாது என்பது தெரியும்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க.
ஒற்றையாட்சிக்கு வெளியே வந்து சந்திரிகா கொண்டு வந்த ஒரு தீர்வுத் திட்டத்தை எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க.
தமிழ் மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஏதும் செய்துவிடுவார் என்று கருதுவது பொய்யானது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான போராட்டம் நடத்தும் ஆளுமையற்றவர் ரணில் விக்கிரமசிங்க. ஆளுமையுடன் அவர் போராட்டம் நடத்தியது இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால்
2 ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்து அவர்களின் மரபணுக்களுக்குள்ளே ஊறிவிட்ட சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்க வேண்டும். ரணிலுக்கு அது கொஞ்சம் கூட கிடையாது.
ஆக ரணில் வந்தால் தீர்வுத் திட்டம் வந்திருக்கும் என்று கருதுவது கடினமான பாதையூடே செல்லும் போது தப்பித்தல் போன்றதாகும்.
ரணில் வந்தால் என்ன? மகிந்த ராஜபக்ச வந்தால் என்ன? அடுத்த தலைமுறை தலைவராக இருந்தால் என்ன? எல்லாமும் ஒன்றுதான்.
கடந்த அரச தலைவர் தேர்தலில் விடுதலைப் புலிகள் முடிவெடுத்தது என்பது மகிந்தவோ ரணிலோ வெல்ல வேண்டும் என்பதற்கல்ல. அரச தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கு ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்கிற கொள்கை சார்ந்த முடிவுதான் அது.
அன்று ரணிலோடு நின்று சமாதானத்தில் கெட்டிக்காரர்களாக காட்டிக்கொண்ட மிலிந்த மொறகொடவும் ஜி.எல்.பீரிசும் இன்று பேசுகின்ற பேச்சுக்கள் என்ன? பதவிக்காக கட்சி மாறிப் போகின்றார்கள். அவர்கள் அனைவருமே ஒரு நாடகத்தின் மிகப்பெரும் நடிகர்கள்.
ஆகவே அவர் வந்தால் தீர்வு கிடைக்கும்? இவர் வந்தால் தீர்வு கிடைக்கும் என்று குழம்பக்கூடாது.
அமைதிப் பேச்சுகள் என்பது அனைத்துலக ஒழுங்கின் கீழ் நடைபெறுவதானது. சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை அந்த அனைத்துலகம் உணர வேண்டும். அதிலே அனைத்துலகம் சரியாக இருந்தால் இந்தப் போராட்டத்தில் பல சிக்கல்கள் வராது .
May be an image of 1 person and standing
 
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ் களத்தில் இருக்கும் சில பேருக்கு தமிழ் வாசிக்கத்தெரியாது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்.  

ஆகக் குறைந்தது செவிடில்லை என்டாவது நினைக்கிறன்! 😏

https://eelam.tv/watch/ய-ய-க-அவர-கள-ன-ப-ங-க-தம-ழ-உர-y-yogi-039-s-speech-for-pongku-tamil_SLhrsbpK37HnCWC.html

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நன்னிச் சோழன் said:

யாழ் களத்தில் இருக்கும் சில பேருக்கு தமிழ் வாசிக்கத்தெரியாது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்.  

சீச்சீ நீங்கள் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நாங்கள் நாட்டுக்கு நல்லவற்றை திரும்பியும் பாரோம் என்று விரதமிருப்போராக்கும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, nochchi said:

சீச்சீ நீங்கள் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நாங்கள் நாட்டுக்கு நல்லவற்றை திரும்பியும் பாரோம் என்று விரதமிருப்போராக்கும். 

விளிம்பிலும் திருந்தார். 

Link to comment
Share on other sites

இதனால்தான் கவலையும், வேதனையும், ஆத்திரமும் வருகிறது. புதிதாய் வந்த அரசியல் மேதைகளுக்கு இது தெரியாது. நாங்கள் தோற்று விட்டோம் என்பதனால் திரும்ப அது சுழலுகிறது.

Link to comment
Share on other sites

எல்லா மனிதர்களுக்கும் சொந்தமாக சிந்திக்கும் மூளை இருக்கும் போது யோகி தனது தரப்பை, தங்கள் அரசியல் தவறை நியாயப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தின் பெயரில் அமைப்பு ரீதியாக, பரப்புரை ரீதியாக  கூறியதை ஒரு வேத வாக்காக கொள்ள வேண்டியதில்லை. 

நாம் விரும்பியோ விரும்பாமலோ சிங்களவரகள் தான் அங்கு ஆட்சியில் இருப்பார்கள். தீர்வுக்கு அவர்களிடம் தான் Negotiation செய்யவேண்டும். இல்லை என்றால் உலகில் பலம் வாய்ந்த அரசாங்ககளுடன் நட்பை வளர்தது  அரசியல் பலமுள்ளவர்களாக மாற வேண்டும்.  

அடைந்தால் மகாதேவி அன்றேல் மரண தேவி என்ற உணர்சசி அரசியல் அதனுடன் இணைந்த போர் இரண்டும்  பேரழிவையே தந்தது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2021 at 17:46, tulpen said:

மிகத்தவறான

பொய்யான

வலராற்றுடன்  பயணிக்காத எழுத்து

அடைந்தால்  மகாதேவி

ஆனால்  சிறீதேவியை  தந்தாலும்  பரிசோதிப்போம்  என்று  தான் சொல்லப்பட்டது

ஆனால் சரளாவும்  இல்லை  என்பதால்  தான் .......???

Link to comment
Share on other sites

41 minutes ago, விசுகு said:

மிகத்தவறான

பொய்யான

வலராற்றுடன்  பயணிக்காத எழுத்து

அடைந்தால்  மகாதேவி

ஆனால்  சிறீதேவியை  தந்தாலும்  பரிசோதிப்போம்  என்று  தான் சொல்லப்பட்டது

ஆனால் சரளாவும்  இல்லை  என்பதால்  தான் .......???

எல்லாத்தையும் ஏதோ குறை சொல்லி நிராகரித்து காலத்தை கடத்தி இருந்த வலு எலஙாத்தையும் இழந்ம பின்  சரளாவை கட்டினாலும்  ஒரு  பிரயோசனம் இல்லை. சரி அதை விடுங்க.  சிங்களவர் யாராக இருந்தாலும் தீர்வு தர மாட்டார்கள் என்றால் யாரிட்ட தீரவை பெறுவது. யாருடன் Negotiation செய்வது என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2021 at 17:46, tulpen said:

எல்லா மனிதர்களுக்கும் சொந்தமாக சிந்திக்கும் மூளை இருக்கும் போது யோகி தனது தரப்பை, தங்கள் அரசியல் தவறை நியாயப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தின் பெயரில் அமைப்பு ரீதியாக, பரப்புரை ரீதியாக  கூறியதை ஒரு வேத வாக்காக கொள்ள வேண்டியதில்லை. 

நாம் விரும்பியோ விரும்பாமலோ சிங்களவரகள் தான் அங்கு ஆட்சியில் இருப்பார்கள். தீர்வுக்கு அவர்களிடம் தான் Negotiation செய்யவேண்டும்.

இப்போது தான் கண்டேன் நல்லதொரு விளக்கம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எல்லாத்தையும் ஏதோ குறை சொல்லி நிராகரித்து காலத்தை கடத்தி இருந்த வலு எலஙாத்தையும் இழந்ம பின்  சரளாவை கட்டினாலும்  ஒரு  பிரயோசனம் இல்லை. சரி அதை விடுங்க.  சிங்களவர் யாராக இருந்தாலும் தீர்வு தர மாட்டார்கள் என்றால் யாரிட்ட தீரவை பெறுவது. யாருடன் Negotiation செய்வது என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

மீண்டும் மீண்டும் தவறான வரலாற்றுடன் பயணிக்காத வரலாற்றுத்திரிப்பு

புலிகள்  நோர்வேயிடமும் சர்வதேசத்திடமும்  கொண்டு வந்து விட்டார்கள்

இப்ப  நீங்க  எங்க  நிற்கிறீர்கள்

மீண்டும்  சுப்பற்ற  கொல்லைக்குள்ளயா???

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

மீண்டும் மீண்டும் தவறான வரலாற்றுடன் பயணிக்காத வரலாற்றுத்திரிப்பு

புலிகள்  நோர்வேயிடமும் சர்வதேசத்திடமும்  கொண்டு வந்து விட்டார்கள்

இப்ப  நீங்க  எங்க  நிற்கிறீர்கள்

மீண்டும்  சுப்பற்ற  கொல்லைக்குள்ளயா???

பிரான்ஸ் உங்களின் அகதி புகலிட விண்ணப்பதை ஏற்றுக் கொண்டவுடன் உங்களுக்கு தீர்வு கிடைத்து விட்டது.

நான் கூறியது எங்களை போல் வெளியே வராமல் அல்லது வர முடியாமல் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் தமக்கு ஒரு அரசியல் தீர்வுக்காக சிங்களவருடன் தான் Negotiation செய்ய வேண்டும் என்ற ஜதார்தத்தை. 

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

பிரான்ஸ் உங்களின் அகதி புகலிட விண்ணப்பதை ஏற்றுக் கொண்டவுடன் உங்களுக்கு தீர்வு கிடைத்து விட்டது.

நான் கூறியது எங்களை போல் வெளியே வராமல் அல்லது வர முடியாமல் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் தமக்கு ஒரு அரசியல் தீர்வுக்காக சிங்களவருடன் தான் Negotiation செய்ய வேண்டும் என்ற ஜதார்தத்தை. 

மீண்டும் மீண்டும்  தனி  மனிதத்தாக்குதல்????

Edited by விசுகு
Link to comment
Share on other sites

7 minutes ago, விசுகு said:

மீண்டும் மீண்டும்  தனி  மனிதத்தாக்குதல்????

இதிலென்ன தனிமனித தாக்குதல்?

ஶ்ரீலங்காவுடன் பேசாமல் தனியே நோர்வே சர்வதேசத்துடன் பேசி தீர்வை கொண்டுவர முடியும் என்று நீங்கள் செம ஜோக்கடிகலாம். நான் ஜோக் அடிக்க கூடாதா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் “தாமாக” தீர்வை தரமாட்டார்கள். 

என்பதே உண்மை.

ஆகவே தீர்வை எப்படி பெறலாம்?

2 வழியில்.

1. அவர்கள் தர தேவையில்லை என நாமே தீர்வை பறித்து எடுத்தல் (தனிநாடு). இந்த முறை தலைவரால் கூட முடியவில்லை. இப்போ இருக்கும் (புலத்திலும், வெளியிலும்) தலைமைகளை வைத்து இது சாத்தியமில்லை என நாம் எல்லாரும் ஏற்போம் என நினைகிறேன்.

2. எதோ ஒரு வகையில் அவர்களை தீர்வை தர “நெருக்க” வேண்டும்.

இதுதான் இப்போதைய கள யதார்த்தம்.

2009 க்கு முன் ஒரு இராணுவ சமநிலையோடு, நிழல் அரசை கொண்டிருந்த போது புலிகள் 1ம் வழியை தேர்ந்து எடுத்து அதற்கு யோகி அவர்கள் கொடுத்த கொள்கை விளக்கத்தை, தலை கீழான களயதார்தம் உள்ள இன்றைய நிலையில் பாவிக்க முடியாது.

ஆனால் அவர்களை ஒரு தீர்வை தர நெருக்குவது கூட எவ்வளவு கஸ்டமான விடயம் என்பதை விளங்கிகொள்ள யோகி அவர்களின் இந்த கட்டுரை உதவும்.

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

ஆனால் அவர்களை ஒரு தீர்வை தர நெருக்குவது கூட எவ்வளவு கஸ்டமான விடயம் என்பதை விளங்கிகொள்ள யோகி அவர்களின் இந்த கட்டுரை உதவும்.

கோஷான், 

இன்றைய நிலையில்  அவர்களை தீர்வை நோக்கி நெருக்குவது கடினமான விடயம் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் முன்பு அப்படி இருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்தமான அரப்பணிப்புகளால் உருவான பலமான நிலையில் அவர்கள் ஒரளவுக்கு இறங்கி வர தயாராக இருத்தனர் என்ற உணமையை தமிழ் மக்களுக்கு மறைத்து இவ்வறான பழைய,  காலத்துக்கொவ்வாத கூற்றுக்களை  ஏதோ வேத வாக்குகள் பொல பரப்புவதால் எமக்கு கிடைக்கப்போகும் நன்மையை விட தீமை தான் அதிகம்.  

ஓரு அமைப்பின் தவறுகளை முழுவதுமாக மூடி மறைத்து, தமிழ் மக்களை சுதந்திரமாக சிந்திக்க விடாமல் பழைய பிடிவாத அரசியல் கொள்கையுடன் கட்டிப்போடும் செயல் எதிர்காலத்தில் ஒரு அரசியல் தீர்வை காண மிகப்பெரும் தடையாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

ஆகவே எதிர்கால சந்ததியை தாமாக சிந்திக்க விடுவோம். எமது முன்முடிவுகளை அவர்கள் மீது திணித்து அவர்களை மூளைச்சலவை செய்வது அவர்களுக்கு நாம் செய்யும் தீமை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

பழைய,  காலத்துக்கொவ்வாத கூற்றுக்களை  ஏதோ வேத வாக்குகள் பொல பரப்புவதால் எமக்கு கிடைக்கப்போகும் நன்மையை விட தீமை தான் அதிகம்.  

உண்மை தான் தேவனால் அருளப்பட்ட கூற்றுக்கள் மாதிரி இவற்றை சொல்லி கொண்டிருந்தால் நன்மை வரப்போவதில்லை. தீமைகள் மட்டுமே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஓரு அமைப்பின் தவறுகளை முழுவதுமாக மூடி மறைத்து, தமிழ் மக்களை சுதந்திரமாக சிந்திக்க விடாமல் பழைய பிடிவாத அரசியல் கொள்கையுடன் கட்டிப்போடும் செயல்

அப்ப  மற்றைய அமைப்புக்கள் என்ன புத்தன் போல் இருந்தனவா ? அதெந்த அமைப்பு பெயரை சொல்ல முடியவில்லையா ? அந்த அமைப்பை இயங்கவிடாமல் மற்றைய அமைப்புகள் கொடுத்த தொந்தரவு நிச்சயம் நமது எதிர்கால சந்ததிக்கு சொல்லுபட  வேணும் . மற்றய  அமைப்புக்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ் ஈழ கனவுடன் வந்த உறுப்பினர்களை தமிழ்நாட்டு கடற்கரையோர சவுக்கம் காட்டுக்குள் அரை  உயிருடன் புதைத்த கதைகளும் நமது அடுத்த சந்ததிக்கு முதலில் சொல்லணும் அடுத்து வரும் சந்ததிகள் புத்திசாலிகள் பொய்யான தரவுகளை புறம் தள்ளுவார்கள் .

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

எந்த அமைப்புமே பத்தன் என்று நான் கூறவில்லை. அப்படி கூறுவதற்கு நான் எந்த அமைப்பிலும் பக்தி  வைத்த பூசாரியல்ல. 

போராட வந்த இளைஞரகளை போட்டுத் தள்ளிய விடயத்தில் எல்லா இயக்கங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எல்லா இயக்க தலைவர்களின் கையிலும் மக்களின் இரத்தகறை சம அளவில் உள்ளது. 

ஆனால் நான் இங்கு எனது முன்னய கருத்து அது பற்றியல்ல.

Edited by tulpen
வசனத் திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

போராட வந்த இளைஞரகளை போட்டுத் தள்ளிய விடயத்தில் எல்லா இயக்கங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எல்லா இயக்க தலைவர்களின் கையிலும் மக்களின் இரத்தகறை சம அளவில் உள்ளது. 

இதை நான் மறுக்கிறேன் ஊர் சண்டியர்களும்  தெரு கொள்ளையர்களும் இயக்கம் நடத்துகின்றோம் எனும் போர்வையில் கிளம்பி தென்னிந்திய இலங்கை வடகிழக்கு பொதுமக்களுக்கு சொல்லென தொல்லைகளை கொடுத்தது வரலாறு சிங்கள ராணுவத்தை விட பொதுமக்கள் அதிகம் பயந்தது இந்த மாற்று இயக்கங்களை பார்த்துதான் இவர்களின் கோழைத்தனமான செயற்பாடுகளை இங்கு எழுதினால் 1000 பக்கம் போகும் பொறுத்து பார்த்தே புலிகள் இவர்களையெல்லாம் தடை செய்தார்கள் என்பது வரலாறாக இருக்கின்றது சந்தடி சாக்கில் கொலைகாரர்களையும் கொள்ளக்காரர்களும் உள்ள குழுக்கள் தங்களை இயக்கம் என்று அழைத்துக்கொண்ட குழுக்களையும்  உண்மையில் போராட என்று கிளம்பி ஆகுதியானவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

பெருமாள் உங்க பிரச்சனை என்ன?  வெள்ளிடை மலையாக தமிழ்மக்கள் அறிந்த விடயத்தை பற்றி இங்கு நீங்கள் வந்து தேவையில்லாமல் மறுப்பறிக்கை விடுவது  ஏனோ? இந்த மறுப்பறிக்கையை உங்கள் மனச்சாட்சி  கூட நம்பாது.😂 மகிந்த, கோட்டாவும் கூட இப்படி தான் மறுப்பறிக்கை விடுவார்கள். 

 ஆனால் இந்த  உரையாடல் அது பற்றியல்லவே! 

Edited by tulpen
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, tulpen said:

பெருமாள் உங்க பிரச்சனை என்ன?  வெள்ளிடை மலையாக தமிழ்மக்கள் அறிந்த விடயத்தை பற்றி இங்கு நீங்கள் வந்து தேவையில்லாமல் மறுப்பறிக்கை விடுவது  ஏனோ? இந்த மறுப்பறிக்கையை உங்கள் மனச்சாட்சி  கூட நம்பாது.😂 மகிந்த, கோட்டாவும் கூட இப்படி தான் மறுப்பறிக்கை விடுவார்கள். 

 ஆனால் இந்த  உரையாடல் அது பற்றியல்லவே! 

நடந்த உண்மைகளை சொல்வது தவறா ?

மாற்று இயக்கங்கள் எனும் போர்வையில் இருப்பவர்களால்  தமிழர்களின்  தேசிய விடுதலை போராட்டம் எப்படி சிதைக்கப்பட்டது என்பதை  அடுத்து வரும் தலைமுறைகள் அறியனும் என்பதில் உங்களுக்கோ எனக்கோ அனைத்து தமிழருக்கும் மாற்று கருத்து  இருக்காது என்று நினைக்கிறன் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

நடந்த உண்மைகளை சொல்வது தவறா ?

மாற்று இயக்கங்கள் எனும் போர்வையில் இருப்பவர்களால்  தமிழர்களின்  தேசிய விடுதலை போராட்டம் எப்படி சிதைக்கப்பட்டது என்பதை  அடுத்து வரும் தலைமுறைகள் அறியனும் என்பதில் உங்களுக்கோ எனக்கோ அனைத்து தமிழருக்கும் மாற்று கருத்து  இருக்காது என்று நினைக்கிறன் .

உண்மைகளை கூறுவது நிச்சயமாக தவறில்லை. ஆனால்  தனி ஒரு இயக்க விசுவாசம் இல்லாமல் போதுவாக அனைத்து உண்மைகளையும் கூறவேண்டும். பழைய அரசியல்வாதிகள் என்ன தவறு செய்தார்கள் புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் அனைத்தும் போராட்டத்தை எப்படி சிதைத்து பேரழிவை உண்டாக்கி பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு மக்களை கொண்டுவந்தார்கள் என்பது அடுத்துவரும் தலைமுறைகள் அறியவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதை நான் வரவேற்கிறேன். 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.