Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நவீனமாக உருளைக்கிழங்கு பயிரிடல் +அறுவடை ......!   😁

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2021 at 14:41, ஜெகதா துரை said:

ஆஹா,குரங்குப்புத்தி,குங்கிட்ட  நிறையவே இருக்கு ..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரார்த்தனை செய்யும் கைகள் போன்று வாழைக்குலை.....!   🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை பிக்பாஸ்லை ஈழத்தை பூர்வீகமாயும் ஜேர்மனி சுட்கார்ட் நகரை சேர்ந்த  குமர் ஒண்டு களம் இறங்கியுருக்கு.....பேர் மதுமிதாவாம்.😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இந்தமுறை பிக்பாஸ்லை ஈழத்தை பூர்வீகமாயும் ஜேர்மனி சுட்கார்ட் நகரை சேர்ந்த  குமர் ஒண்டு களம் இறங்கியுருக்கு.....பேர் மதுமிதாவாம்.😁

யாராய்... இருக்கும்? 🤔
அப்ப... இந்த  முறை,  "பிக் பாசை"  பார்க்க வைத்துவிடுவார்களோ என்று, யோசனையாக  இருக்குது. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு, இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க
விஷயத்தை மனைவியிடம்
பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும்
மூணு மணி நேரம் தான் இருக்கு.
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்ததும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும்.
சுடுகாட்ல புக் பண்ணனும்.
உங்களுக்கென்ன காலைல
எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.
ஜாலியா போயிருவீங்க!!
கணவன்: 😭😭
 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 8 people, child and text that says 'virakesari.lk hours ago எனது பேத்தியை முதன்முறையாக தொட்டுத் தூக்கிய தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது ஜனாதிபதி வ முள்ளி வாய்க்கால்'

இந்த படங்களை யாராவது அவர்களது சமூக ஊடகங்களில் போட  வேண்டியது தானே ....சுத்தி ,சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிக்காமல் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ராணி திரையரங்கு 

Screenshot-2021-10-06-11-37-12-354-com-a

அடிமை பெண்(1969) மலரும் நினைவுகளை கிளறுவதன்ன ரெல் மீ..!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
244251759_4409823699082917_2522475917364
 
அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான்.
.
"டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்"
.
"1200 டாலர் ஆகும்"
.
அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு.
.
கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட
"டாக்டர் என் பல்லை பிடுங்க
இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?"
.
"ஒரே ஒரு வழி இருக்கு.
அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம்.
$500 டாலர் குடுத்தா போதும்.
ஆனா ரொம்ப வலிக்கும்"
.
"பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க.
நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்"
.
டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
.
பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்:
"இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும் ஒரு பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை.
எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி..
எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்"
என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
.
மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
.
எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார்.
.
"நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான்.
அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன்.
அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான்.
அந்த பயபுள்ளை தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !"
என்று புலம்பித் தீர்த்து விட்டார் 😭😭😭😭😭
 • Like 4
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அன்புத்தம்பி said:
244251759_4409823699082917_2522475917364
 
அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான்.
.
"டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்"
.
"1200 டாலர் ஆகும்"
.
அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு.
.
கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட
"டாக்டர் என் பல்லை பிடுங்க
இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?"
.
"ஒரே ஒரு வழி இருக்கு.
அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம்.
$500 டாலர் குடுத்தா போதும்.
ஆனா ரொம்ப வலிக்கும்"
.
"பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க.
நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்"
.
டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
.
பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்:
"இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும் ஒரு பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை.
எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி..
எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்"
என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
.
மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
.
எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார்.
.
"நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான்.
அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன்.
அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான்.
அந்த பயபுள்ளை தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !"
என்று புலம்பித் தீர்த்து விட்டார் 😭😭😭😭😭

பழைய பகிடி ஒன்று:

டாக்டர் பல்லை பிடுங்கி ஒருவரை சிறிது நேரம் வெளியே இருக்க சொல்லி விட்டார்.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் உள்ளே கூப்பிட்டார்.

வெளியே வேறு பலர் காத்திருந்தனர்.

உள்ளே இருந்து பெரிய சத்தம் வந்தது. 

வெளியில் இருந்த ஒருவர் கேட்டார்: என்னது, பல்லை பிடுங்கும் போது, சத்தம் போட்டார்.... இப்ப எதுக்கு மீண்டும் சத்தம் போடுறார்.. 

காத்திருந்த ஒருவர் சொன்னார்.... முதல் சத்தம் பல்லை பிடுங்கினத்துக்கு.... இரண்டாவது சத்தம்...  பீஸ் பிடுங்கிறதுக்கு... 

 • Haha 1
Link to comment
Share on other sites

On 3/10/2021 at 09:49, குமாரசாமி said:

இந்தமுறை பிக்பாஸ்லை ஈழத்தை பூர்வீகமாயும் ஜேர்மனி சுட்கார்ட் நகரை சேர்ந்த  குமர் ஒண்டு களம் இறங்கியுருக்கு.....பேர் மதுமிதாவாம்.😁

ஓம் அம்மா அப்பா From சீலங்காவாம்.😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரசித்து கொண்டே இருக்கிறேன் அவளுடைய ஒவியம் போன்ற இருவிழிகளை.....:cool:

Bild

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிரைச்சாலை....😁

Bild

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
*படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"*
 
*********
வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...
காட்டுமரம் நான்..!
எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,
எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!
தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...
தறிகெட்டு போனதென்னவோ
நான்...
படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...
இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .
பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...
பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...
பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...
பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...
இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...
எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .
வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...
கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .
வேசிக்கு காசு
வேணும் ...
வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .
வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...
தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,
நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...
மாமனாரான மாமன்...!
பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,
தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .
இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?
மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,
வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,
சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,
தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .
கடைசி மூன்று மாதம்...
அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...
வாசனையாய் வந்து போனாள்..,
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,
ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...
கருகருவென
என் நிறத்தில்...
பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?
'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '
என்று சொல்லி திரும்பினேன் .
ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...
அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று
கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,
கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,
சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...
அதே அந்த பெண்
குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...
கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,
வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...
தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
என்னைப் போலவே
சப்பை மூக்கு,
என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,
பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,
கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,
எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,
தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,
முன் சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...
விளையாடிக் கொண்டு இருந்தேன்!
ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,
கனவுகூட
கருப்பாய் இருந்தது,
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,
இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,
அதே கருப்பு,
அதே சிரிப்பு,
கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...
பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...
எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .
வீடு நோக்கி நடந்தேன்,
பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...
கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை
நெடுநேரம்...
பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....
விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு
வரச் சொன்னேன்,
பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,
பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !
பல்லில்லா வாயில் பெருவிரல் !
இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,
அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,
பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...
சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,
ஒரு வயதானது ...
உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,
'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...
சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...
எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,
முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,
ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே...
'அப்பா'தான்!
அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,
அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...
உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,
அவள் வாயில் இருந்து வந்த..,
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,
இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...
அம்மா சொல்லித் திருந்தவில்லை,
அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,
முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...
படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...
திருமணம்
செய்து வைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,
நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...
அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...
இந்த_கடைசி_மூச்சு..!
ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத் தெரியாதா என்ன?
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?
வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...
......................வாசலில் ஏதோ சலசலப்பு,
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,
என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,
அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,
'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,
அவள் எச்சில்
என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
அடங்குகிறது........................
.......................
"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,
மகளின் ..
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

e71e1f7b-8420-46bb-af78-0ebf29a3e6de.jpg

 • Haha 1
Link to comment
Share on other sites

 • nunavilan changed the title to குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.