அன்று வன்னியில் பொருளாதாரத் தடையை புலிகள் எவ்வாறு முறியடித்து இருந்தனர்? கற்க வேண்டிய பாடம்

By
நிழலி,
in எங்கள் மண்
-
Tell a friend
-
Topics
-
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
4
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
கேடு கெட்ட அரசியல் வியாபாரிகளை நாட்டை விட்டே துரத்துங்கள்.
-
By goshan_che · Posted
உங்கள் அனுபவம் எனக்கிலை ஆகவே அதை பற்றி நான் கூறுவது சரியாக இருக்க முடியாது. ஆனால் நேர்வழியில் எங்கே இருந்தாலும் வாழலாம் என்பது என் நம்பிக்கை. மேலே பிரபா சொன்னது போல அவா (greed), மற்றது மாட்டிகொண்டால் அசிங்கம் என்ற பயம் - இவைதான் எந்த வழியில் ஒருவர் போகிறார் என்பதை தீர்மானிக்கிறன. மனிதர் அடிப்படையில் இருவகைதான். 1. களவு செய்வோர்/ செய்ய துணிந்தோர் 2. செய்யாதோர் ( நல்லெண்ணம்,வாய்ப்பில்லை, பயம் இப்படி பல காரணம்கள்). எப்போது ஒரு நாட்டில் 1ம் வகையினர் அதிகமாகிறனரோ அப்போ அந்த நாடு சீரழிய தொடங்கும். இதை தமிழ் நாட்டில் 1947-2022 காலப்பகுதியை பார்த்தால் தெளிவாக தெரியும். காமராஜரோ, ராஜாஜியோ, அண்ணாவோ - கொள்கைகள் மாறினாலும் ஊழலின் நிழல் கூட படாதவர்களாக இருந்தார்கள். ஆனால் அதன் பின் வந்த ஒவ்வொருவரும் ஊழலில் ஒவ்வொரு படிநிலை மேலே போனார்கள். இந்த சரிவு தனியே தலைவர்கள் மட்டத்தில் மட்டும் அல்ல, அடுத்த நிலை தலைவர்கள், அதிகாரிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் என ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட்டது. விளைவு? 75 வருடங்கள் முன், படிப்பறிவு இல்லாமல் கொள்கைக்காக வாக்கு செலுத்திய மக்கட்கூட்டம். இன்று, அதீத படிப்பறிவுடன் இருந்தும், வாக்கு போடுவதாக கூறி எல்லா கட்சியிடமும் காசு வாங்கும் ஒரு கூட்டமாக மாறிப்போயுள்ளது. அங்கே இப்போ வாக்குக்கு காசு வாங்குவது ஒரு பெரிய விசயமே இல்லை. ஊழல் என்பது ஒரு போதும் பொதுவாழ்வில் மட்டும் இருக்கும் விடயம் அல்ல. ஒரு நாடு இன்று ஊழலில் நாசமாகி கிடக்கிறது என்றால், பத்து இருபது வருடங்கள் முன் அந்த நாசம் தனி மனிதர் வாழ்வில் ஏற்று கொள்ளதக்கதாக ஆகி விட்டிருக்கும். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் - 47-22 தமிழ்நாடு போன பாதையில் கனடா இப்போ போகிறது போல் படுகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். -
எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அரசாங்கத்துக்கு எதிராக... பாரிய போராட்டத்திற்கு, அழைப்பு. அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(18) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1295055
-
Recommended Posts