Jump to content

சைக்கிளும் நானும்....  

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளும் நானும்....

அப்பா அரச உத்தியோகம், அவரிடம் ஒர் றலி சைக்கிள் இருந்தது அதில் தான் அவர் வேலைக்கு சென்று வருவார் .அந்த சைக்கிளில் தான் நான் சைக்கிள் ஒட கற்றுக்கொண்டது.அப்பா வேலையால் வந்தவுடன்  வீட்டு சுவரின் சாத்திவிட்டு  செல்வார் சைக்கிளுக்கு ஸ்டாண்டு வாங்கி பூட்டுவது வீண் செலவு என நினைத்திருக்கலாம் ...அவர் வைத்து விட்டு சென்றவுடன்   வீட்டு முற்றத்தில உருட்டிக்கொண்டு திரிவேன் ,பிறகு பெடலில் காலை ஊண்டி ஒரு பக்கமாக ஒடி திரிந்தேன் ஒரு படி முன்னேறி

பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்.அந்த காலத்தில் ஆண்களின் சைக்கிள் தான் அதிகம் விற்பனையில் இருந்தது ,பெண்கள் சைக்கிள் யாழ் மாவட்டத்தில் குறைவு பொருளாதாரத்தில் அதிக உச்சத்தில் இருந்த ஒரு சிலர் வாங்கி வைத்திருந்தாரகள் அவர்களும் வீதிகளில் சைக்கிளை ஓடுவதில்லை.

இரண்டு மூன்று தடவை விழுந்து எழும்பி கையில் காலில் இரத்தம் வந்து அதை பாரத்த அம்மா நாளையிலிருந்து நீ சைக்கிளை தொடக்கூடாது என கட்டளை போட , அதை அப்பா தனது அன்பான வீட்டோ அதிகாரத்தால் "அவன் ஆண்பிளை பெடியன் இப்படி விழுந்து எழும்பினால் தான் சைக்கிள் பழக முடியும் நீ எடுத்து ஓடு கவனமா ஒடு "என்றார் .

"இவன் சைக்கிளை உடைச்சு கிடைச்சு போட்டான் என்றால்"

" அது றலி சைக்கிள் லெசில உடையாது நீர் பயப்படாதையும்"

"நான் சொன்னா யார் தான் கேட்கிறீயள் "

அம்மா அப்பாவின் செல்ல சண்டையில் காலமும் ஓட நானும் சைக்கிள் ஓட கற்றுக்கொண்டேன் .

கடைகளுக்கு  சென்று வர அனுமதி அப்பா தந்தார் அம்மா தரவில்லை .

அம்மாவின் அந்த தடையை அப்பாவும் மீறவில்லை.

அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டபின்பு ஒரு நாள் அனுமதி தந்தார் ,தான் நடந்து பின்னுக்கு வருவதாகவும் என்னை மெல்லமாக கரையால் ஓடிக்கொண்டு செல்லும் படி.

எனக்கு ஒரே புளுகம் ,அப்பொழுது எனது வயது பத்து அல்லது பன்னிரெண்டாக இருக்கும் என நினைக்கிரேன்..அடுத்த நாள் பாடசாலை சென்று நண்பர்களிடம் நான் தனியா றோட்டில் சைக்கிள் ஒடி கடைக்கு போனனான் என பெரிய பில்டப் கொடுத்தேன்.சிலருக்கு அது பொறாமையாக இருந்தது சிலர் கண்டு கொள்ளவில்லை காரணம் அவர்கள் ஏற்கனவே சைக்கிள் ஓட தெரிந்தவர்கள்.

ஒரு நாள்  அம்மா

 "தம்பி கடைக்கு போய் உப்பு வாங்கி கொண்டு வா" 

"நடந்து போக மாட்டேன்"

"நடந்து போகமுடியாட்டி உன்ட சின்ன காலால் ஒடி போய் வாங்கி கொண்டுவா"

"அம்மா சைக்கிளில் ஓடி போய் வாங்கிட்டு வரட்டே"

" உந்த மூலைகடைக்கு போறதற்கு ஏன்டா சைக்கிள்"

"அம்மா பீளிஸ் அம்மா பீளிஸ்"

"கரையால போய் கரையால வரவேணும்,றோட்டுக்கு போக கூடாது ,வா நான் படலையடியில் பார்த்து கொண்டு நிற்கிறேன் "

" தேவையில்லையம்மா  நீங்கள் சமையலை பாருங்கோ நான் ஒடி போயிட்டு ஒடி வாரன்"

"வந்திட்டார் முளைச்சு மூணு இலை விடவில்லை எனக்கு பாடம் எடுக்க,

வா சைக்கிளை எடுத்துக்கொண்டு"

அம்மா படையலடியில் நின்று பார்க்க நான் சைக்கிளில் போய் பொருட்களை வாங்கி வருவது வழக்கமாகி விட்டது சிறுதுகாலம் போக அம்மா என்னை தனியாக சென்று வர அனுமதித்தார்.அதாவது "பி " பிளேட் கிடைத்த மாதிரி .

"அம்மா நாளைக்கு ஸ்கூளுக்கு சைக்கிளில் போகட்டா"

"மெல்ல மெல்ல தொடங்கிட்டாய் என்ன,கடைக்கு போக,ஸ்கூலுக்கு போக சைக்கிள் வேணும் எண்டு"

"அம்மா பிளீஸ் பிளீஸ்"

"அப்பரை போய் கேள் ...தனியா கடைக்கு அனுப்பினதுக்கு என்னை ஏசினவர்"

தந்தைகள் வழமையாக தாய்மார்கள் ஊடாக தான் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பட்டுத்துவார்கள் என்பது நான் தந்தையான பின்பு தான் புரிந்தது.

."பி"பிளேட் கழட்டி ஏறிந்து விட்டு முழு லைசன்ஸ் உடன் ஓடுவது போன்ற சந்தோசம்.

அடுத்த நாள் தயங்கியபடி போய்

" பப்பா இன்றைக்கு ஸ்கூலுக்கு உங்கன்ட சைக்கிளை கொண்டு போகட்டே"

அவர் முழுசி பார்த்தார், பிறகு  சமதானமாகி

"பெரியவர் சைக்கிளை கொண்டு போனால் நான் வேலைக்கு நடந்தே போவது"

"நீங்கள் பஸ்சில் போங்கோ"

" நான் ரிடையர் ஆன பின்பு நீ சைக்கிளில் போகலாம் அது வரை நடந்து போ"

"எப்ப ரிடையர் ஆக போறீயள்"

"பெரியவர் நீங்களே அதையும் சொல்லுங்கோ"

"பப்பா"

என செல்லமா அழைத்து விட்டு ஓடிசென்று விட்டேன்.

அப்பாவிடம் எனது பேச்சு எடுபாடாது என தெரிந்த கொண்டு மீண்டும் அம்மாவிடம் தஞ்சம் புகுந்தேன்.

"அம்மா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தாங்கோவன் ஸ்கூலுக்கு போக"

" அடே சும்மா விளையாடதே சைக்கிளின் விலை எவ்வளவு என உனக்கு தெரியுமா?"

"இல்லை அம்மா "

"ஆயிரம் ரூபா வரும் இப்ப அவ்வளவு காசுக்கு எங்கே போவது"

"பப்பாவிடம் கேளுங்கோ "

"அவர் வரட்டும் கேட்கிறேன் ,அவரே பதினைந்து வருசமா ஒரே சைக்கிளை வைத்து கொண்டு ஒடுறார் இரண்டு மாதமா சைக்கிள் டயர் புதுசு போட வேணும் காசு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ புது சைக்கிளுக்கு நிற்கிறாய்"

எனது சைக்கிள் கனவு பேச்சுவார்த்தையிலயே போய் கொண்டிருந்த்தது....தீர்வு இல்லாத தமிழர் பிரச்சனை போல..

ஒரு நாள் உறவுக்கார் புது சைக்கிளில் எங்கன்ட வீட்டுக்கு வந்தார் எனக்கு மீண்டும் ஆசை வந்து விட்டது அவரிடம் சென்று சைக்கிளின் விலை விபரங்களை கேட்டேன்.

அவரது கொம்பனியில் பணி புரிபவர்களுக்கு, ஐந்நூறு முற்பணம் கட்டி மாதம் மாதம் நூறு கட்டினால் கொடுப்பதாக கூறினார்.

"அப்ப எனக்கும் அப்படி எடுத்து தரமுடியுமா?"

"வை நொட் ,அப்பரிட்ட கேள் அவர் சரி என்றால் ஒழுங்கு படுத்தி தாரன்"

அம்மாவிடம் கேட்டு அப்பரின் சம்மதம் பெற்று கொண்டேன்.

அம்மாவின் கணக்கு புத்தகத்திலிருந்து ஐநூறு பணமும் எடுத்து வைத்துகொண்டு எனது புது சைக்கிள்  உறவுக்காரனை காத்துகொண்டிருந்தேன் ஒரு கிழமையல்ல ஒரு மாதமல்ல ....ஐந்தாறு மாதங்கள்

அவரும் வீட்டுபக்கம் வரவில்லை,இறுதிவரை நானும் புது சைக்கிள் ஒடவில்லை.

அப்பாவுக்கு தூர இடத்துக்கு மாற்றலாகி செல்ல வேண்டி வந்தது அப்பாவின் சைக்கிள் எனது சைக்கிள் ஆனது.

அம்மா அல்லது அப்பாவிடம் சொல்லி அனுமதி எடுத்து சைக்கிளை ஓடும் காலம் போய் நானே என்னுடைய விருப்பம் போல சைக்கிளை எடுத்து ஓடும் வயசு வந்துவிட்டது.

சைக்கிள் டயர் அடிக்கடி பஞ்சராகும் உருட்டிகொண்டு சைக்கிள் கடைக்கு போனால் கடைக்காரர் சொல்லுவார்

"அடுத்த முறை வரும் புது டயரும் டியுப்பும் போட காசோட வாரும் இந்த டயர் நல்ல வழுக்கையா போய்விட்டது என்ட மண்டையை மாதிரி .டியூப்பில்   ஒட்டு போட இடமில்லை"

"அண்ணே பார்த்து ஒட்டி தாங்கோ"

"இது தான் கடைசியா போடுறது இதற்கு பிறகு இதை திருத்த ஏலாது"

"சரி அண்ணே"

பிறகு ஒரு மாதிரி அம்மாவிடம் காசு வாங்கி ஒரு டயரும் டியுபுப்பும் போட்டேன் .ஒன்றை திருத்த அடுத்த திருத்த வேலை வந்து விடும் சீட் பிய்ந்து போகும்,பெடல் கழன்று விழும்,சைக்கிள் செயின் அறுந்து போகும் இப்படி பல செலவுகள் அதை எல்லாம் திருத்த காசு வீட்டை கேட்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

பாடசாலலை,டியுசன் போன்றவற்றுக்கு பாவிப்பதற்காக கிடைத்த சைக்கிளை பின்பு நான் ஊர் சுற்றுவதற்கும் பெண்களின் பின் சுற்றுவதற்கும் பயன்படுத்த தொடங்கி விட்டேன் .கல்விக்கு பயன்படுத்தியதை விட காதல் ஒட்டத்திற்கு காதல் வாகனமாக பயன் படுத்தியது அதிகம் .இறுதியில் கல்வியிலும் வெற்றியில்லை காதலிலும் வெற்றியில்லை .

வழமையா நேரம் கிடைக்கும் பொழுது யாழ்.கொமில தான் பொழுதை போகிறனான்....இப்ப கொஞ்ச காலமா உந்த யூடியுப்பில மினக்கெட வெளிக்கிட்டன்..

அப்படி அன்றும் யாழ்ப்பாணத்து யூடியுப்பர்களின் சனலை நோண்டி கொண்டிருந்தேன் பலர் செய்யும் நல்ல சேவைகளை பார்த்து ரசித்துகொண்டிருந்தேன் .....புலம் பெயர்ந்த உறவுகளின் உதவிகள் அந்த மாதிரி போய் சேர்ந்து கொண்டிருந்தது.....

தாயக உறவுகளில் அநேகர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு  போக சைக்கிள் வேணும் என்ற கோரிக்கையை வைத்து கொண்டிருந்தார்கள் ....புலம் பெயர் உறவுகளும் பணத்தை வாரி இறைத்து சைக்கிளை வாங்கி கொடுக்க யூப்டியுப்பர்களுக்கு துணையாக இருந்தார்கள் ...

அன்று ஆயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட முடியாமல்  இருந்த பலர்   ....இன்று ஊர் பெயர் தெரியாத பலருக்கு இருபதாயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர்.....எல்லாம் அவன் செயல் ....

 • Like 16
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁

நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத சிறுவயது அனுபவம்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆனாலும் அனேகமாக இது வீட்டுக்கு வீடு வாசல்படி என்ற மாதிரியே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

கறள் புடிச்ச றலி சைக்கிள் கதைக்கு  நன்றி புத்தன்.😁
எண்டாலும் பட்டும் படாமலும் நாசுக்காய் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.அதுதான் உந்த யூரியூப்பர்மாரை பற்றி
 யாழ்ப்பாணத்து யூரியூப்பர்மார் நல்ல விசயங்களை செய்யினம் போலதான் கிடக்கு. போற போக்கை பாத்தால் இனி  முழுநேர தொழிலாயும் செய்வினம் போல கிடக்கு. நல்லது நடந்தால் சந்தோசம்.
இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

பிள்ளை உண்மையைத் தானே சொல்லியிருக்கு.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 21:51, விளங்க நினைப்பவன் said:

மிகவும் தகவல்கள் கொண்ட interesting பதிவு

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி விளங்க நினைப்பவன்

On 1/12/2021 at 22:39, suvy said:

சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁

நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  

On 1/12/2021 at 22:39, suvy said:

சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁

நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சுவி.....நான் பால் தான் குடிப்பேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2021 at 01:38, ஈழப்பிரியன் said:

மறக்க முடியாத சிறுவயது அனுபவம்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆனாலும் அனேகமாக இது வீட்டுக்கு வீடு வாசல்படி என்ற மாதிரியே.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈழப்பிரியன் ....நீங்கள் சொல்வது போல் வீடுக்கு வீடு வாசற்படான்று.....ஆனால் இன்று வீட்டுக்கு வீடு புலம்பெயர் உ ழைப்பாளிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2021 at 02:06, குமாரசாமி said:

கறள் புடிச்ச றலி சைக்கிள் கதைக்கு  நன்றி புத்தன்.😁
எண்டாலும் பட்டும் படாமலும் நாசுக்காய் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.அதுதான் உந்த யூரியூப்பர்மாரை பற்றி
 யாழ்ப்பாணத்து யூரியூப்பர்மார் நல்ல விசயங்களை செய்யினம் போலதான் கிடக்கு. போற போக்கை பாத்தால் இனி  முழுநேர தொழிலாயும் செய்வினம் போல கிடக்கு. நல்லது நடந்தால் சந்தோசம்.
இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கு.சா...நானும் அந்த யூ டியுப்பை பார்த்தேன் ....

On 2/12/2021 at 11:19, உடையார் said:

மறக்க முடியாத சிறுவயது அனுபவம்👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க உடையார்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 10:00, putthan said:

பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்

எனது சைக்கிள் ஓட்டும் அனுபவமும் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்பாவின் அப்பா காலத்து Humber சைக்கிள் ஃபிரேம் வீட்டில் இருந்தது. அதற்கு ஸ்ரிரிங் லொக் இருக்கும். லொக் பண்ணினால் ஹாண்டிலை திருப்பேலாது! அத்தான் இரண்டு சில்லுகளையும் சீற்றையும் வாங்கி தானே பூட்டி சைக்கிளாக்கிவிட்டார்.

புத்தர் யூரியூப்பில் பொழுதை ஒரேயடியாக போக்காமல் யாழிலும் அடிக்கடி கிறுக்கல்களை எழுதலாம்தானே!

spacer.png

அண்ணனும் நானும் சேர்ந்தே பழகினோம். இரண்டு பேருமே கெந்திப் பழகி, கவுட்டுக்குள்ளால் (பாருக்குக் கீழே) காலை வைத்துத்தான் ஓடினோம்😁 புதுப் பெடல் வலது காலில் வெட்டி அது இப்போதும் பெரிய வடுவாக இருக்கின்றது. இடது காலை இடது பெடலில் வைத்து கெந்தி வலக்காலை சீற்றுக்குப் பின்பக்கமாக உயர்த்தி பாருக்கு மேலால் கொண்டுவந்து வலது பெடலில் வைத்து முதன்முதலாக ஓடியது இப்போதும் சந்திரனுக்கு ரொக்கெட்டில் போகும் உணர்வுடன் அப்படியே இருக்கின்றது.😀

அதன் பின்னர் அத்தான் ஒரு பழைய ரலி சைக்கிளின் ஃபிரேமை வாங்கி சில்லுகள் பூட்டி எனக்குச் சைக்கிளாக்கித் தந்தார். அதுதான் நான் ஊரில் இருக்கும்வரை எனது சைக்கிள். இறுதியாக ஊரை விட்டு அந்த சைக்கிளில்தான் தனங்கிளப்பு  வெளிக் காத்துக்குள்ளால் அப்பாவுடன் டபிள்ஸில் பூநகரியூடாக வெள்ளாங்குளம், மல்லாவி, பாண்டியன்குளம், இரணை இலுப்பங்குளம் என்று ஏ9 பாதையைப் பார்க்காமலேயே வவுனியா வந்தேன்.

எனது சைக்கிளுக்கும் என்னைப் பற்றிய ஆயிரம் கதைகள் இருக்கும். இப்போது துருப்பிடித்திருக்கின்றதா அல்லது அழிந்தே போய்விட்டதா என்றே தெரியாது!

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 10:06, குமாரசாமி said:

கறள் புடிச்ச றலி சைக்கிள் கதைக்கு  நன்றி புத்தன்.😁
எண்டாலும் பட்டும் படாமலும் நாசுக்காய் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.அதுதான் உந்த யூரியூப்பர்மாரை பற்றி
 யாழ்ப்பாணத்து யூரியூப்பர்மார் நல்ல விசயங்களை செய்யினம் போலதான் கிடக்கு. போற போக்கை பாத்தால் இனி  முழுநேர தொழிலாயும் செய்வினம் போல கிடக்கு. நல்லது நடந்தால் சந்தோசம்.
இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

நானும் பார்த்தேன்.  பரவாயில்லாமல் செய்யிற ஒன்று இரண்டில் அவர்களும் ஒன்று என்று நினைக்கிறேன்.

Edited by Sabesh
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 05:00, putthan said:

அன்று ஆயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட முடியாமல்  இருந்த பலர்   ....இன்று ஊர் பெயர் தெரியாத பலருக்கு இருபதாயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர்.....எல்லாம் அவன் செயல் ....

நல்ல கதை புத்தன் அண்ணா. கிட்டத்தட்ட என் கதையும் அது தான்.  அந்த காலத்தில பலருக்கு இப்படித்தான் இருக்கும்.  வெளியிடப் பாடசாலைக்கு 6ம் வகுப்பில் சேர்ந்ததும் வீட்டில ஒரு புதுசா பழசோ சைக்கிள் கேக்க தொடங்கி ஒரு வருசத்துக்கு பிறகு நடந்தது.  அதுவரை ஊரில் இருந்து அந்த பாடசாலைக்கு செல்லும் அண்ணா மாரிடம் கதைத்து விடுவார்கள்.  விடிய வெள்ளன அவர்கள் சொல்லுற நேரத்திலும் பார்க்க 5 நிமிடம் முதலே அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் சென்று வந்தேன்.  அப்படி ஏற்றிச் சென்ற அண்ணன் ஒருத்தர் உங்கள் நாட்டிலும் இருக்கிறார் :)

இந்த u-tubers ஐ நானும் சில வாரங்களாக பார்க்கிறேன்.  அவர்களுக்கும் அட் வருமானம் வரட்டுமென்று பார்ப்பேன்.  சிலர் மிகவும் சிறப்பாக செய்வது போன்று தான் தோன்றுகிறது.    நீங்கள் பயன்தரு மரங்கள் வளர்க்க உதவிய காணொளி பார்த்தேன் அதன் பின்னர் நன்றாக பராமரிப்பவர்களுக்கு வழங்கிய பரிசுத்தொகை காணொளியும் பார்த்தேன்.

சில நேரங்களில் கஸ்ர பட்டு வேலை செய்வது கஸ்ரம் போன்ற தொனியில் உதவிகள் கேக்கும் போது கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்கிறது.  சிலரது சூழ்நிலையை புரிந்து கொண்டாலும், பலர் கஸ்ர பட்டு வேலை செய்வதே ஒரு பிரச்சனையாக கூறுகிறார்கள்.  சிலர் அடிப்படை உதவியாக என்ன வேணுமென்று கேட்டல், வலு சிம்பிளா ஒரு சைக்கிள் எண்டு சொல்லுகினம். பெடியை பார்த்தா 3-4 ஆம் வகுப்பா தான் இருக்கும்.  O/L அல்லது  A/L படிக்கிற பிள்ளை என்றால் பரவாய் இல்லை.  நானா கொடுக்கிறேன் ...குடுக்கிறவை குடுக்கட்டும் என்று கடந்து போகிறேன்.

Edited by Sabesh
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கே இவர்களுடைய இனிமையான சைக்கிள் அனுபவங்களை படிக்கும் போது அப்போது யாழ்பாணம் உலக அளவிலேயே மிகவும் குறைந்த அளவு  CO 2 வை வெளியேற்றிய ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் சைக்கிள் பற்றிய நினைவுமீட்டல் அந்தநாள் ஊர் ஞாபகங்களை கொண்டு வந்தது.

பத்து பன்னிரண்டு  வயசிலேயே ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரராக இருப்பது சைக்கிளுக்கு மட்டும்தான். அதை ஓடிக்கொண்டு ஒழுங்கை வழிய திரிவதும் பெல் அடிப்பதும், போட்டிக்கு ஓடுவதும், சுகானுபவங்கள், அந்த சுகம் இப்போ பென்ஸ் கார் ஓடிக்கொண்டு திர்ந்தாலும் வருவதில்லை.

                              Screenshot-7.png                          

பிளையிங் பிஜன் ,றல்லி, ஹீரோ ,ஏசியா, லுமாலா, ஷொப்பர் .

உங்களில் யார் பிரபுதேவா என்பதுபோல் எங்களில் யாரும் இதில் ஒரு சைக்கிளுடன் ஓடி திரிந்திருப்போம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சைக்கில் என்டா என்ன சும்மாவா.அந்தக் காலத்து காதல் வாகனம் எல்லோ.கிறுக்கல் அந்த மாதிரி புத்தன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

புத்தனின் சைக்கிள் பற்றிய நினைவுமீட்டல் அந்தநாள் ஊர் ஞாபகங்களை கொண்டு வந்தது.

பத்து பன்னிரண்டு  வயசிலேயே ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரராக இருப்பது சைக்கிளுக்கு மட்டும்தான். அதை ஓடிக்கொண்டு ஒழுங்கை வழிய திரிவதும் பெல் அடிப்பதும், போட்டிக்கு ஓடுவதும், சுகானுபவங்கள், அந்த சுகம் இப்போ பென்ஸ் கார் ஓடிக்கொண்டு திர்ந்தாலும் வருவதில்லை.

                              Screenshot-7.png                          

பிளையிங் பிஜன் ,றல்லி, ஹீரோ ,ஏசியா, லுமாலா, ஷொப்பர் .

உங்களில் யார் பிரபுதேவா என்பதுபோல் எங்களில் யாரும் இதில் ஒரு சைக்கிளுடன் ஓடி திரிந்திருப்போம்.

அப்போது ரலி சைக்கிளுக்கு சமனாக ரட்ச் என்ற சைக்கிளும் இருந்தது.ரீகல் என்ற சைக்கிளும் ஞாபகம் வருது......வளவன் ........!  😁

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் போல நகைசுவையான ஒரு பதிவு..பல பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்துள்ளது. எனது சைக்கிளை மட்டும் என் அப்பா ஒருவருக்கும் கொடுக்காமல் வைத்திருக்கிறார்(இதில் எனது சகோதரிகளுக்கு கொஞ்சம் கடுப்பு). இந்த lockdownல் பொழுது போகாமல் இருக்க அதை வளவிற்குள் ஓடுவதும் வழமை.. 

spacer.png

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.