Jump to content

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள்

spacer.png

தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது.

எனினும், கடந்த வாரம் முழுவதும் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டதால் தோண்டும் பணிகள் நாளை (02) வரை ஒத்தி வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி முற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும்  மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பொன்றை மேற்கொண்டு நாம் அந்த பக்கமாக வருகிறோம். 

வந்ததும் சந்திப்போம் என கூறியுள்ளனர். பின்னர் குறிப்பிட்ட நாளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் , தாம் திட்டமிட்டுள்ள தோண்டும் பணிகளுக்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இரகசியமாக அதனை செய்ய உதவுமாறும் கோரியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து முல்லைத்தீவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இரண்டு செயலாளர்களின் வருகை தொடர்பில் தகவல் கிடைத்து விசாரிக்கும் வரையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்திருக்கவில்லை.

இதன்படி, அவர் ஏதேனும் கடமை மீறலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

https://www.thaarakam.com/news/e5b4e1aa-cab7-480b-bf77-808ab5b8bc6b

Link to comment
Share on other sites

19 minutes ago, கிருபன் said:

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

.

கடற்றொழில் அமைச்சர் எங்கட அத்தியடி குத்தியன் அல்லவா, அவர் எப்ப சிங்களவனாக மாறினவர்?

Link to comment
Share on other sites

3 hours ago, zuma said:

கடற்றொழில் அமைச்சர் எங்கட அத்தியடி குத்தியன் அல்லவா, அவர் எப்ப சிங்களவனாக மாறினவர்?

அவர் எப்ப தமிழனாக இருந்தவர்?

 • Like 1
 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

அவர் எப்ப தமிழனாக இருந்தவர்?

அவரின்ற எடுபிடி, பாராளுமன்றில, ஆமைக்கறியைப் பற்றிக் கதைக்க, இவர் டோஸ் விட்டாராம்..... நீ வாயை மூடு.... கொலை வழக்கு சிக்கலிருக்கிறதால,  நானே வாய் திறக்கிறேல்ல.... வாயை திறந்தா.... வம்பு... இதுக்கிள நீ வேற எண்டு ஓவ் ஆக்கிப் போட்டாராமே.... 😁

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது.

எனினும், கடந்த வாரம் முழுவதும் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டதால் தோண்டும் பணிகள் நாளை (02) வரை ஒத்தி வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

12 வருடங்கள் ஆகிவிட்டன போர் நிறைவடைந்து. இது அண்மையில் புதைக்கப்பட்டதா? நாள், நட்சத்திரம் பார்த்து தோண்டுவது என்றால்.. 🤔 

Link to comment
Share on other sites

13 hours ago, கிருபன் said:

விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது.

தமிழ் மக்களிடம் வீட்டுக்கு ஒருவரை போராட அனுப்பவேண்டும் இல்லாவிட்டால் தலைக்கு 3-6 லட்சம் தரவேண்டுமென்று அடித்து பிடுங்கியதெல்லாவற்றையும் யாரோ சம்பந்தமில்லாத ஒருவன் வந்து தூக்கிக்கொண்டு போகிறான். எல்லாவற்றையும் பல்லைக்கடித்துக்கொண்டு சகித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஈற்றில் பரிசாக  கிடைத்தது முழு  அம்மணம் மட்டுமே, நாம் போராட்டத்தை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் மிகப்பெரிய இமாலய தவறுகளை எமது பக்கமும் இழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம்  

 • Like 4
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது போதும் இப்ப ஒராள் தலைதெறிக்க ஓடோடி வரப்போறார்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அக்னியஷ்த்ரா said:

தமிழ் மக்களிடம் வீட்டுக்கு ஒருவரை போராட அனுப்பவேண்டும் இல்லாவிட்டால் தலைக்கு 3-6 லட்சம் தரவேண்டுமென்று அடித்து பிடுங்கியதெல்லாவற்றையும் யாரோ சம்பந்தமில்லாத ஒருவன் வந்து தூக்கிக்கொண்டு போகிறான்

இது ரெம்ப அபந்தமான வார்த்தைகள். 16 கிராம் தங்கம் தான் தமிழீழ மண்மீட்பு நிதிக்காகக் கோரப்பட்டது. (ஒரு தொகையினர் அதை விடக் கூடக் கொடுத்திட்டு கொழும்புக்கு போக அப்படியே வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக தாமாக அள்ளிக்கொடுத்தது போக) அதிலும் பலருக்கு குலுக்கல் முறையில் அது தங்கமாகவோ பணமாகவோ திருப்பியும் கொடுக்கப்பட்டது. ஏற்பவரின் விருப்புக்கு அமைய. 

எங்கட அனுபவத்தில்.. எங்கட வீட்டில் அம்மா கொடுத்த தங்கம்.. 1997 இல் வன்னிக்கு வரச் சொல்லி அழைப்பு அனுப்பப்பட்டு திருப்பி தமிழீழ தங்க நாணயமாகக் கையளிக்கப்பட்டிருந்தது. 

இதில எங்கு கட்டாயம்.. எங்கு பிடுங்கினது..???!

தமிழீழ வைப்பகத்தில் வைப்பு வைக்கப்பட்டிருந்த மக்களின் நகைகள் தான்.. போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ வைப்பகத்தால்.. பாதுகாக்கப்பட முடியாத நிலையில்.. எதிரிகளிடம் சிக்கியது. அது புலிகளின் சொத்தல்ல. தமிழ் மக்கள் தங்களின் தங்கத்தை பாதுக்காக்க வைத்த இடத்தில் சிங்களம் அபகரித்துக் கொண்டது. இதனை தெளிவு படுத்தியும்.. மகிந்த கும்பல்.. அதனை திருப்பிக் கொடுக்கவில்லை... இன்னும். 

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

இதில எங்கு கட்டாயம்.. எங்கு பிடுங்கினது..???!

நீங்கள் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்தின் இறுதிப்பகுதியிலும் கிழக்கில் இருந்தநீங்களோ ....? 
எனது தலையை காப்பாற்றவே எனது அம்மா இழந்தது 6 லட்சங்கள்...எனது தாய்வழி உறவினர்கள் அநேகம் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் தொடர்பான தகவல்களை எடுத்துக்கொண்டு கடைக்கு பிரிஸ்டல்(Bristol தற்போதைய பெயர் Viceroy ) வாங்கச்சென்ற அம்மப்பாவை சைக்கிளில் ஏற்றி  எங்கேயோ கொண்டுபோய் வைத்துக்கொண்டு வீட்டிற்கு ஆளனுப்பி கடத்திவிட்டதாகவும் குறிப்பிட்ட அளவு பணம் போராட்டத்திற்கு தந்தால் மட்டுமே விடமுடியுமென்று சொல்ல எனது அம்மம்மா இரண்டு தங்கச்சங்கிலிகளை அடமானம் வைத்துவிட்டு மீட்டு வந்ததை கண்கூடாக பார்த்தவன். 
இதற்கு பிறகும் வந்து அது கிழக்கின் விடிவெள்ளி அணி,கொம்மான் அணி என்றும் புலிகள் பெயரால்  ஒட்டுக்குழு என்றும் சப்பைக்கட்டு கட்ட வரவேண்டாம்,
செய்தது யார் அவர்களுக்கு கிழக்கு மாகாண அணியில் என்ன பொறுப்பு என்று அக்கு வேறு ஆணி வேறாக எனக்குத்தெரியும். ஆகவே மேற்கொண்டு வானத்தை பார்த்து துப்ப விரும்பாமையால் நான்  அமைதி காப்பது எமது போராட்டத்தின் விம்பத்தையாவது குலையாமல் வைத்திருக்கக்கூடும் (இத்தனைக்கும் மத்தியில் எனது குடும்பத்திலும் ஒரு மாவீரன் உண்டு)     

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பவுண் கொடுக்காதவர்களை பங்கருக்குள் போட்ட வரலாறும் உண்டு. சரி, அதை விடுவோம்..

வடக்கில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களிடம் பட்டகடன் இந்த தங்கப்புதையல் பறிகொடுப்பில் ஈடு செய்யப்படுகின்றது என ஒரு கதைக்கு வைத்து கொள்வோம். 

தங்கம் கைவிட்டு போனால் பரவாயில்லை. அடுத்த தடவை சிங்களவனிடம் குடும்பத்துக்கு நாலு பவுண் டபிளாய் கேட்டு கணக்கை சமன் செய்யலாம்.

ஆனால், சாரை சாரையாக பறி கொடுக்கப்பட்ட  ஆயிரமாயிரம் லட்சம்  உயிர்களை எப்படி ஈடு செய்வது?

சிந்திய இரத்தம், கொட்டிய இரத்தம் எல்லாம் எப்படி ஈடு செய்யப்பட முடியும்.

Edited by நியாயத்தை கதைப்போம்
எ.பி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இரண்டு பவுண் கொடுக்காதவர்களை பங்கருக்குள் போட்ட வரலாறும் உண்டு. சரி, அதை விடுவோம்..

வடக்கில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களிடம் பட்டகடன் இந்த தங்கப்புதையல் பறிகொடுப்பில் ஈடு செய்யப்படுகின்றது என ஒரு கதைக்கு வைத்து கொள்வோம். 

தங்கம் கைவிட்டு போனால் பரவாயில்லை. அடுத்த தடவை சிங்களவனிடம் குடும்பத்துக்கு நாலு பவுண் டபிளாய் கேட்டு கணக்கை சமன் செய்யலாம்.

ஆனால், சாரை சாரையாக பறி கொடுக்கப்பட்ட  ஆயிரமாயிரம் லட்சம்  உயிர்களை எப்படி ஈடு செய்வது?

சிந்திய இரத்தம், கொட்டிய இரத்தம் எல்லாம் எப்படி ஈடு செய்யப்பட முடியும்.

நியாயத்தை கதைப்பம் என்று பெயரை வைச்சிட்டு.. எப்ப பார் ஒரு தலைப்பட்சமாவே கதைக்கிறீங்கண்ணே.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பு இடம்பெயர்வு செய்ய முன்.. கிழக்கில் இருந்து அதே தொகையிலும் அதிகமான தமிழ் மக்கள் முஸ்லிம்களால் விரட்டி வெட்டி அலற அலற அகதியாக களைக்கப்பட்டதை எப்படி மறந்தீர்கள். 

கல்முனை முதல்.. மூதூர் வரை எம் மக்கள் உடுத்த உடுப்போடு உயிரை பணயம் வைத்து கிழக்கில் இருந்து வடக்கிற்கு கடல்வழியாக வந்திறங்கிக் கொண்டிருந்த காலங்கள் எப்படி மறந்து போச்சுது. அந்த மக்கள் யாழ் இந்துக் கல்லூரி உட்பட பல இடங்களில் இடைத்தங்கலாக தங்கி இருந்த நினைவுகள் இப்பவும் கண்ணில் நிலைநாடுது. ஆனால்.. உங்கள் பலருக்கு சோனிய.. போய் வாங்க என்று பத்திரமா அனுப்பி வைச்சது.. அதுவும் பல சதித்திட்டங்களை எல்லாம் மன்னித்து அனுப்பி வைத்தது மறந்து போச்சுது.

இதே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்.. அதே முஸ்லிம்களுக்கு ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது வழங்கிய அடைக்கலத்தைக் கூட மறந்து.. தமிழ் மக்களை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளோடும் இனப்படுகொலை அரசுகளோடும் சேர்ந்து நின்று கொன்றது.. கொள்ளையடிச்சது.. விரட்டி அடிச்சது.. இப்படியான நியாயங்களையும் கதையுங்கோவன். 

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்தின் இறுதிப்பகுதியிலும் கிழக்கில் இருந்தநீங்களோ ....? 
எனது தலையை காப்பாற்றவே எனது அம்மா இழந்தது 6 லட்சங்கள்...எனது தாய்வழி உறவினர்கள் அநேகம் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் தொடர்பான தகவல்களை எடுத்துக்கொண்டு கடைக்கு பிரிஸ்டல்(Bristol தற்போதைய பெயர் Viceroy ) வாங்கச்சென்ற அம்மப்பாவை சைக்கிளில் ஏற்றி  எங்கேயோ கொண்டுபோய் வைத்துக்கொண்டு வீட்டிற்கு ஆளனுப்பி கடத்திவிட்டதாகவும் குறிப்பிட்ட அளவு பணம் போராட்டத்திற்கு தந்தால் மட்டுமே விடமுடியுமென்று சொல்ல எனது அம்மம்மா இரண்டு தங்கச்சங்கிலிகளை அடமானம் வைத்துவிட்டு மீட்டு வந்ததை கண்கூடாக பார்த்தவன். 

இதற்கு பிறகும் வந்து அது கிழக்கின் விடிவெள்ளி அணி,கொம்மான் அணி என்றும் புலிகள் பெயரால்  ஒட்டுக்குழு என்றும் சப்பைக்கட்டு கட்ட வரவேண்டாம்,

செய்தது யார் அவர்களுக்கு கிழக்கு மாகாண அணியில் என்ன பொறுப்பு என்று அக்கு வேறு ஆணி வேறாக எனக்குத்தெரியும். ஆகவே மேற்கொண்டு வானத்தை பார்த்து துப்ப விரும்பாமையால் நான்  அமைதி காப்பது எமது போராட்டத்தின் விம்பத்தையாவது குலையாமல் வைத்திருக்கக்கூடும் (இத்தனைக்கும் மத்தியில் எனது குடும்பத்திலும் ஒரு மாவீரன் உண்டு)     

ஏனோ நமக்கு இப்படியான அனுபவங்கள் அமையல்ல. ஆனால்.. தமிழின விடுதலைக்கான போராட்டத்திற்காக இழந்தவை பல. அதை வைச்சு ஒரு அனுதாபமோ சலுகையோ ஏன் அகதி அந்தஸ்தோ கோரியதில்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம்-  அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய தினமும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே நேற்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகையநிலையிலேயே ஏற்கனவே நீதிமன்றம்  அறிவித்த திகதியான நேற்று, மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://athavannews.com/2021/1254008

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.