Jump to content

இலங்கையர்  பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்


Recommended Posts

இலங்கையர்  பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
Murder-300x180.png
 
 
இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
Murder-1-300x176.png
 
தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியாகின்றன.
 
கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகின்றன.
 
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பெரும் கும்பலொன்று கோஷங்களை எழுப்பியவாறு காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
 
உடலை அவர்கள் எரிப்பதைக்  காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
 
இந்தப் படுகொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து பொலிஸார் இதுவரையில் எதனையும் தெரிவிக்கவில்லை.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்படும் அளவுக்கு இந்தாள் வேலை செய்யபோன இடத்தில், அந்நியநாட்டில் வாயை சும்மா வைத்து இராமல் என்னத்தை சொல்லி தொலைச்சுதோ? இவர் கீழ் வேலை செய்தவர்கள் தனிப்பட்ட கோபத்தில் பழி வாங்கிய சம்பவமாகவும் அமையலாம்.. யாருக்கு தெரியும்.

மனுசரை உயிருடன் தெருவில் எரிப்பது 1983ல் இலங்கையில் நடந்தது. அது இப்போதும் தொடர்கின்றது பாகிஸ்தானில். இங்கும் இலங்கையரே பாதிக்கப்பட்டு உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61aa259e3fd64.png

Pic: Priyantha Kumara

அந்த ஐயா இறை நிந்தனை  செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அடித்து உதைத்து உயிரோடு நெருப்பு வைத்து எரித்து சாகடிக்கப்பட்ட பட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

மனுசரை உயிருடன் தெருவில் எரிப்பது 1983ல் இலங்கையில் நடந்தது. அது இப்போதும் தொடர்கின்றது பாகிஸ்தானில். இங்கும் இலங்கையரே பாதிக்கப்பட்டு உள்ளார்.

அதாவது மனிதரை எப்படி உயிருடன் எரிப்பது என்று இலங்கையில் காண்பித்த இனத்தை சேர்ந்த இலங்கையரை எரிச்சிட்டாங்கள் எண்டு சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரீக்கீ ஈ லப்பைக் பாகிஸ்தான் என்ற மதவெறி கட்சியின் குரான் வசனங்கள் உள்ள போஸ்டரைக் அந்த இலங்கையர் கிழித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டார் என்றே முல்லைநிலவன் சொன்னது போல் அவர்  இறை நிந்தனை  செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அடித்து உதைத்து உயிரோடு நெருப்பு வைத்து எரித்து சாகடிக்கப்பட்ட பட்டார்.
இப்படியாக பலர் பாக்கிஸ்தானில் கொல்லபட்டுள்ளனர். தனிபட்ட பிரச்சனைகளை பழிவாங்குவதற்கும் முஸ்லிம் மதத்தை நிந்தித்துதவிட்டார் என்று குற்றம் சாட்டபட்டு அடித்து கொல்லபடுவதாக அங்கே உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பல்குழல் எரிகுண்டுகள் வீசி கருக்கிக் கொல்ல ஆயுத சப்பிளை செய்த போது பாகிஸ்தான் இனிச்சது.. இப்ப கசுக்குதாமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களிட்ட கிழமைக்கு ஒரு கப்பல் ஆயுதமும்,குண்டும் வாங்கி தமிழர்களை அழிச்ச பாவம் அங்கையே வேலை செய்யுது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

1983ல் இலங்கையில் நடந்தது. அது இப்போதும் தொடர்கின்றது பாகிஸ்தானில். இங்கும் இலங்கையரே பாதிக்கப்பட்டு உள்ளார்.

1983 ல் இலங்கையில்  பாதிக்கப்பட்டது தமிழர், சிங்களவர்களல்ல. இன்றும்  இலங்கையில்  வேறு வழியில் தமிழருக்கு எதிராக தாக்குதல்  தொடர்ந்து கொண்டே இருகிறது.  இன்று இந்தச் சம்பவம் நடந்தது பாகிஸ்தானில். தமது மதத்துக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படுகிறது.  தாக்கப்பட்ட  நாடு,  தாக்கப்பட்டவர்கள், காலம், காரணம் வேறு வேறாக இருக்கும்போது இதை 1983 உடன் ஒப்பிடுவது எதற்கு என்று புரியவில்லை. புத்தரின் சின்னம் பதித்த உடையை அணிந்ததற்காக எத்தனை வெளிநாட்டுப்பயணிகளை நீதிமன்றம் கொண்டு சென்று நாட்டை விட்டு வெளியேற்றினார்கள்.  சிறுபான்மை இன மக்களின் உரிமைகளையும், உடமைகளையம், உயிர்களையும் பறித்தார்கள். போன இடங்களிலும் தங்கள் திமிரை காட்டினால் அவர்கள் பாணியிலேயே பாடம் எடுத்திருக்கிறார்கள். சகிப்புத்தன்மை, மனித நேயம் இல்லாத மதம் இப்படிதான் மதம் பிடித்து அலையும். தங்களை சுய பரிசோதனை செய்து திருத்திக்கொள்ளும் காலம் வந்திருக்கிறது.  மத வெறியரால் இன வெறியருக்கு பாடம் புகழ்த்தி  ஞான சார தேரரை உசுப்பி விட்டிருக்கிறானுகள்! இலங்கை பாகிஸ்தான் போர் வெடிக்கப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

மனுசரை உயிருடன் தெருவில் எரிப்பது 1983ல் இலங்கையில் நடந்தது. அது இப்போதும் தொடர்கின்றது பாகிஸ்தானில். இங்கும் இலங்கையரே பாதிக்கப்பட்டு உள்ளார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டமை – நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

December 4, 2021
spacer.png

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக தொிவித்து கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் முக்கிய குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனா்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக இருந்த இலங்கையரான 40 வயதான பிரியந்த குமார தியவடன என்பவா் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பின்னா் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தாா்.

சிசிடிவி காணொளிகளை வைத்து பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனா்.

வெளிநாட்டைச் சேர்ந்த மேலாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சியால்கோட்டில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் யாசிர் ராசா பிபிசி உருது மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
 

https://globaltamilnews.net/2021/169820

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக' பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார தியவடன

4 டிசம்பர் 2021, 06:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
killing of a Sri Lankan citizen in Pakistan

பட மூலாதாரம்,REUTERS

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார் என்று பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி காணொளிகளை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இலங்கையர் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டுவதாகக் கூறி பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பிபிசி உருது மொழி சேவைக்கு கிடைத்த மருத்துவமனை வட்டாரத் தகவல்கள், பிரியந்த குமார தியவடனவின் உடல் மிகவும் மோசமாக எரிந்து போயிருந்ததாகத் தெரிவிக்கின்றன.

பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?

பிரியந்த குமார தியவடன

பட மூலாதாரம்,RESCUE 1122

 
படக்குறிப்பு,

பிரியந்த குமார தியவடன

சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பிரியந்த குமார தியவடன மேலாளராக கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியது.

"தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த முகமது பஷீர் என்பவர் கூறியுள்ளார்.

நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டிருந்தநேரத்தில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இந்த நிகழ்வு தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை கூறுகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்த மேலாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சியால்கோட்டில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் யாசிர் ராசா பிபிசி உருது மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இதுவொரு கொடூரமான சம்பவம் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் உஸ்மான் பஸ்தார் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதி இல்லை. மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமாட்டார்கள் என்பது உறுதி," என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார தியவடன

பட மூலாதாரம்,RESCEU 1122

 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார தியவடன

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த சம்பவம் தொடர்பில் ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

"இலங்கையைச் சேர்ந்தவர் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். விசாரணை நடத்தப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முழுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன," என பாகிஸ்தான பிரதமர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இலங்கை அரசு சொல்வது என்ன?

உள்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலையைப் பராமரிப்பது கருதி பிரியந்த குமார தியவடன குறித்த தகவல்களை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்லை என்று இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரதமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசு சார்பாக, இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.

பாகிஸ்தான் பிரதமர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றமையை தாம் வரவேற்பதாகவும் தினேஷ் குணவர்தன கூறுகின்றார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான முழுமையாக தகவலை பெற்றுக்கொள்வதற்காக தாம் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"பாகிஸ்தானில் தீவிரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை மூர்கத்தனமானது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதைப் பாராட்டும் அதே வேளையில், தீவிரவாத சக்திகள் சுதந்திரமாக உலவ அனுமதித்தால், அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-59530452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட போராட்டத்தை பற்றி எழுதேக்க பாக்கோனும் முஸ்லீம்காரனுவள.. குண்டியத்தூக்கி மேசையில வச்சுக்கொண்டு எழுதுவானுங்க பயஙகரவாதிகள் தீவிரவாதிகள் கொலைகாரனுங்கள் எண்டு.. ஆனா உலகத்திலையே மிகமோசமான கொடூரமான ஜந்துக்கள் எண்டால் மதவெறிபுடிச்ச இவனுங்கதான்.. மிகமோசமான முட்டாள் முஸ்லீம் அடிப்படைவாதிகள் போல இன்னொரு கொடூர விலங்கு இந்த பூமியில் இல்லை.. படிப்பறிவு இல்லாத காட்டுவாசிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் எங்கள் கண்மணியாம் ரஸூல் நபிகள் நாயகம் ஸல்லல்ஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்  அவரது  குடும்பத்தினருக்கு..

83இல்  கண்ணால்  கண்டவை மனத்தில் ஓடுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் ந‌ட‌ந்த‌ கொலை வன்மையான‌ க‌ண்டன‌த்துக்குரிய‌து... இத‌ற்கும் இஸ்லாத்துக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை.

received_597587708273127.jpeg

பாகிஸ்தானில் ந‌ட‌ந்த‌ கொலை வன்மையான‌ க‌ண்டன‌த்துக்குரிய‌து

என்ப‌துட‌ன் இத‌ற்கும் இஸ்லாத்துக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என்ப‌தும் உண்மையாகும்.

 

கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர் அங்குள்ள‌ இய‌க்க‌ம் ஒன்றின் போஸ்ட‌ர்க‌ளை கிழித்து குப்பையில் போட்ட‌த‌னால் அந்த‌ இய‌க்க‌த்தின‌ர் இக்கொடுமையை செய்திருப்ப‌துட‌ன் இத‌ன் மூல‌ம் இது க‌ட்சி, இய‌க்க‌ வெறிச் செய‌ல்தானே த‌விர‌ ம‌த‌ வெறிய‌ல்ல‌.

 

இல‌ங்கையில் ஒரு கால‌த்தில் ஜேவிபியும் த‌ம‌து பிர‌ச்சார‌ போஸ்ட‌ர்க‌ளை த‌டை செய்தோரை கொன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் உள்ள‌ன‌. அதே போல் த‌மிழ் ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளும் செய்துள்ள‌ன‌.

 

எது எப்ப‌டியிருப்பினும் பொதும‌க்க‌ள் ச‌ட்ட‌த்தையும் நீதியையும் கையில் எடுப்ப‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌ ஒன்றாகும்.

 

அதே போல் இல‌ங்கையில் க‌ட‌ந்த‌ ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ஹ‌க்கீம் ரிசாத் ஆகியோரின் ந‌ல்லாட்சியின் போது திக‌ன‌யில் ஒரு முஸ்லிம் வாலிப‌ர் கொல்ல‌ப்ப‌ட்டு தீயில் எரிக்க‌ப்ப‌ட்ட‌ போது அன்றைய‌ அர‌சாங்க‌ம் இத‌ற்காக‌ எவ‌ரையும் கைது செய்யாம‌ல் புதின‌ம் பார்த்த‌ நிலையில் பாகிஸ்தான் அர‌சாங்க‌ம் இல‌ங்கைய‌ர் கொலையில் ஈடுப‌ட்டோரில் நூற்றுக்க‌ன‌க்கானோரை கைது செய்திருப்ப‌து பாராட்ட‌த்த‌க்க‌ விட‌ய‌மாகும்.

 

ஆக‌வே, த‌னியார் வெறித்த‌ன‌மான‌ இய‌க்க‌ங்க‌ள் உல‌கில் ஒழிக்க‌ப்ப‌டுவ‌தோடு இத்த‌கைய‌ இய‌க்க‌ங்க‌ள் உருவாக‌ கார‌ண‌மான‌ நாடுக‌ளும் அர‌ச‌ இராணுவ‌ங்க‌ளும் த‌ம்மை திருத்திக்கொண்டு அமைதியான‌ உல‌கை நோக்கி வ‌ர‌வேண்டும்.

Mubarak Abdul Majeed

- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

https://www.madawalaenews.com/2021/12/i.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையான கண்டனங்கள் ...அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் ...சமூக வலைத்தளங்களில் சில முஸ்லிம்கள் இவருக்கு இந்த மரணம் தேவை தான் எழுதியுள்ளார்கள் ....இலங்கை முஸ்லீம்கள் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறியது ஆச்சரியமளிக்கின்றது ...தமிழ்நாட்டு முஸ்லீம்கள் இவ்வாறு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

இலங்கை முஸ்லீம்கள் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறியது ஆச்சரியமளிக்கின்றது ...தமிழ்நாட்டு முஸ்லீம்கள் இவ்வாறு இல்லை 

மத்தியகிழக்கு நாடுகளில் இருந்துவரும் இவர்கள் இனத்துக்கு என்று வரும் பணத்தை என்று கண்டனரோ அன்றில் இருந்து அவர்கள் திமிர் பிடித்து போயுள்ளனர் .அதே மதம் எனும் போர்வை தழ்நாட்டிலும் ஊடுருவுது பர்தா  போடாதவர்கள் கீழானவர்கள் போல் போஸ்டர் அடிக்கினம் நல்லகாலம் 2030க்கு பிறகு அநேக நாடுகள் மின்சார வாகனம்கள் தான் என்று இப்பவே திட்டம் இட்டு அதை நோக்கி செல்வதால் இவர்களின் திமிர்த்தனம் இன்னும் சிறிது காலம்தான் அதன்பின் அரபிகள் வேர்வை சிந்தி கஷ்டப்பட்டால் தான் உவ்வா எனும் நிலை மதத்துக்கு பிடித்த மதவெறி இறங்கும் .சக மனிதர்களின் நேசம் என்றால் அப்போதுதான் புரியும் @வன்னியன்அண்ணா சொல்லுவார் பழைய அரபிகளின் மத்தியகிழக்கில் பெற்றோல் கண்டுபிடிக்கமுன் இருந்த வயதானஅரபிகளின்  கருணையும் அன்பும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியந்த குமாரவை காக்க முயன்ற நபருக்கு பாக். பிரதமர் வீர பதக்கம் வழங்குவதாக அறிவிப்பு

சியால்கோட்டில் தனது உயிரைப் பணயம் வைத்து கும்பலிடம் இருந்து இலங்கை தொழிற்சாலை மேலாளரை காப்பாற்ற முயன்ற நபருக்கு வீரப் பதக்கம் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

imran-khan-pakistan-AP.jpg?XyzH8VK31InxQ

மாலிக் அட்னான் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் தாக்குதலை முன்னெடுத்த ஒரு குழுவைத் தானே எதிர்கொண்டு, இலங்கை பிரஜை மீதான தாக்குதலை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

பின்னர் கும்பலிடம் இருந்து இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார காப்பாற்ற முயன்றார். 

இருப்பினும் அவரது தீவிர முயற்சி பலனளிக்காது போக தாக்குதல்தாரிகள் தமது கடவுளை அவமதித்ததாக கூறி, பிரியந்த குமார மீது மூர்க்கத்தனமான தாக்குதலை முன்னெடுத்து அவரது உடலை எரித்துக் கொன்றனர்.

இந் நிலையில் தனது உயிரைப் பணயம் வைத்து தாக்குதல் கும்பலிடம் இருந்து இலங்கை தொழிற்சாலை மேலாளரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னான் என்ற நபருக்கு வீர பதக்கம் வழங்கப்படும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இம்ரான் கான் தனது டுவிட்டரில்,

"பாதிக்கப்பட்டவரை உடல் ரீதியாக பாதுகாக்க முயற்சிப்பதன் மூலம் தனது சொந்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது உட்பட, சியால்கோட்டில் கண்காணிப்பு கும்பலிடம் இருந்து பிரியந்த தியவடனாவுக்கு அடைக்கலம் கொடுக்கவும், காப்பாற்றவும் தன்னால் முடிந்தவரை முயற்சித்த மாலிக் அட்னானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலுக்கு தேசத்தின் சார்பாக நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன், "நாங்கள் அவருக்கு தம்கா ஐ ஷுஜாத் விருதை வழங்குவோம்" என்று கூறியுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/118489

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 15:18, ரதி said:

இலங்கை முஸ்லீம்கள் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறியது ஆச்சரியமளிக்கின்றது


ஆழ்ந்த அனுதாபங்கள் 

அப்ப ஈஸ்டர் தாக்குதலில் எங்கிருந்தீர்கள் நீங்க நினைக்கிறமாதிரி இப்ப அவங்கள் இல்லை முற்றுமுழுதாக அரபிகள் போல மாறுகிறார்கள் ஆண்கள் சரம் கட்டாமல் அரபிகள் போடும் உடை பெண்கள் கறுப்பு கபாயா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  தொழுகை கட்டாயம் வெள்ளிக்கிழமை இன்னும் அதிகம் ( இதில் பெண்கள் பாவம் ) 

சில மத ஊதுகுழல்களால் ( மெளலவி ) சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:


ஆழ்ந்த அனுதாபங்கள் 

அப்ப ஈஸ்டர் தாக்குதலில் எங்கிருந்தீர்கள் நீங்க நினைக்கிறமாதிரி இப்ப அவங்கள் இல்லை முற்றுமுழுதாக அரபிகள் போல மாறுகிறார்கள் ஆண்கள் சரம் கட்டாமல் அரபிகள் போடும் உடை பெண்கள் கறுப்பு கபாயா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  தொழுகை கட்டாயம் வெள்ளிக்கிழமை இன்னும் அதிகம் ( இதில் பெண்கள் பாவம் ) 

சில மத ஊதுகுழல்களால் ( மெளலவி ) சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கிறார்கள்

அது தான் சவூதியின் வகாபிசத்தை பரப்பி விட்டார்களே.

அதுக்கு மருந்தடிக்கத்தான்... நம்ம, பிக்கர் ஞானசேரரை இறக்கியிருக்கு....

வெட்டியாடுவார்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்ட நிலையில்  சிங்கள  பேரினவாத  அரசு பாகிஸ்தானுக்கு அனுப்பிய  35000   கண்களை  யாருடையது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 10:48, ரதி said:

சமூக வலைத்தளங்களில் சில முஸ்லிம்கள் இவருக்கு இந்த மரணம் தேவை தான் எழுதியுள்ளார்கள் ....இலங்கை முஸ்லீம்கள் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறியது ஆச்சரியமளிக்கின்றது

அவர்களது மதம் அப்படி போதித்து கொடூரமானவர்களாக அவர்களை மாற்றியுள்ளது.மற்றய நாடுகளிலும் அது தான் நிலைமை. அவர்களில் மதத்தை தாண்டி நீதியாக சிந்திப்பவர்கள் குறைவானவர்கள்.தமிழ்நாடு முஸ்லிம்கள் பற்றி எனக்கு சரியாக தெரியாது ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்  அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட உலகிற்கு எடுத்துக்காட்டான  மதம் என்று புழுகிவிடுவதை செய்திகளில் படித்திருக்கிறேன்.

On 5/12/2021 at 11:15, பெருமாள் said:

2030க்கு பிறகு அநேக நாடுகள் மின்சார வாகனம்கள் தான் என்று இப்பவே திட்டம் இட்டு அதை நோக்கி செல்வதால்

சவுதி அரேபியா மெக்கா தரிசனம் என்று சாமி கும்பிட வரும் முஸ்லிம் பயணிகளின் வருமானத்தை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சவுதி அரேபியா மெக்கா தரிசனம் என்று சாமி கும்பிட வரும் முஸ்லிம் பயணிகளின் வருமானத்தை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடும்.

ஓவரா  ஆடுறாங்கள் காலம் விரைவானது எண்ணெய் தேவை குறைவாகும்போது விலை கூடும் அதனால் எண்ணெய் எடுப்பது அதிக சிலவு எனும் நாடுகள் எண்ணெயை உற்பத்தி செய்ய தொடங்கும் போட்டி கூடும் லாபம் குறையும் திமிரும் குறையும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சவுதி அரேபியா மெக்கா தரிசனம் என்று சாமி கும்பிட வரும் முஸ்லிம் பயணிகளின் வருமானத்தை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடும்.

 

1 hour ago, பெருமாள் said:

ஓவரா  ஆடுறாங்கள் காலம் விரைவானது எண்ணெய் தேவை குறைவாகும்போது விலை கூடும் அதனால் எண்ணெய் எடுப்பது அதிக சிலவு எனும் நாடுகள் எண்ணெயை உற்பத்தி செய்ய தொடங்கும் போட்டி கூடும் லாபம் குறையும் திமிரும் குறையும் .

 

யூகேயின் ரோயல் மெயில் பங்கு சந்தைக்கு வந்த போது அதில் பெரும் பங்கை வாங்கியது கட்டார் அரசின் சவரின் பண்ட்.

கூடவே British Petroleum மட்டும் அல்ல சவுதி, யூ ஏ ஈ, கட்டார் போன்ற நாடுகளும் கூட beyond petroleum என சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.

அவர்களிடம் உலகில் அதிக சூரிய பண்ணைகளை ஏற்படுத்த கூடிய நிலமும் கடலும் இருக்கிறது. அண்மையில் யூகே மொரொக்கோவில் ஒரு பெரிய சூரிய பண்ணையை அமைத்து மின்சாரத்தை எடுத்து வரலாம் என ஒரு திட்டம் பிரேரிக்க பட்டது.

தவிரவும் டுபாய் போன்ற நகரங்கள் லண்டனுக்கு நிகரான நிதி வர்தக மையங்களா மாறி விட்டது. நான் 2010 இல் போனபோதே துபாயின் வருமானத்தில் 20% மோ என்னமோதான் எண்ணை என்றார்கள்.

நிச்சயம் மாற்றம் வரும். அண்மையில் சில நகரங்கள் ghost cities ஆக வாய்புள்ளதாக ஒரு கட்டுரை படித்தேன். குவைத், பஹ்ரேய்ன், ஓமான்,  ஈராக் போல எண்ணையை மட்டும் நம்பி தூங்கி கொண்டிருக்கும் நாடுகள் அடி வாங்கலாம்.

ஆனால் MBS தலைமையிலான சவுதி, கட்டார், யூ ஏ ஈ என்பன தக்கண பிழைக்கும் வழியில் நடக்க தொடங்கி விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கொல்லப்பட்டவர் கிறிஸ்தவராக, இலங்கையராக  இருப்பினும் கண்டிக்க மனம் வரவில்லை. 
கீழுள்ள சம்பவம் தான் கண்முன்னே வந்து செல்கிறது  
spacer.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.