Jump to content

இலங்கையர்  பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டதற்கு இந்து ஒன்றியம் கண்டனம்!

பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம்  தெரிவித்துள்ளது.

இலங்கை இந்து ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலையே கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பிரியந்த குமார என்ற இளம் பொறியியலாளர் பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் மிகக் கொடூரமான முறையில் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார். மத நிந்தனையில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டிய இஸ்லாமியர்கள் அவரை கொடும் சித்திரவதை செய்து, எரித்துக் கொன்றுள்ளனர் என அறியமுடிந்துள்ளது.

குர்ஆனின் கடும்போக்குவாத சிந்தனைகளில் இருந்து, 1947 ஆம் ஆண்டு தோன்றிய பாகிஸ்தான் நாடு, தனது தோற்றத்தின்போதே சுமார் 30 லட்சம் இந்து, சீக்கிய, பெளத்த மக்களை கொலை செய்துதான் தோன்றியது. பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்ட, பாரத தேசத்தின் பகுதியில் வாழ்ந்த இந்து, சீக்கிய, பெளத்த மக்கள் மீது முஸ்லிம்கள் கொடிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். இதனால், 1947 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக பாகிஸ்தான் உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மத நிந்தனைச் சட்டத்தால் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத நிந்தனையை காரணம் காட்டி பல நூறுபேர் பாகிஸ்தானில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இஸ்லாம் அமைதியானதொரு மார்க்கம், அதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களதான் இப்படியான கொடூரங்களைச் செய்வதாக முஸ்லிம்களும், முஸ்லிம் அடிப்படை வாதத்துக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பலர் பேசுவதையும் காணமுடிகிறது.

பிரியந்த குமாரவின் கொலையை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிலர் ஆதரிப்பதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://athavannews.com/2021/1254887

  • Like 1
Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

 கொல்லப்பட்டவர் கிறிஸ்தவராக, இலங்கையராக  இருப்பினும் கண்டிக்க மனம் வரவில்லை. 
கீழுள்ள சம்பவம் தான் கண்முன்னே வந்து செல்கிறது  
spacer.png

கொல்லபட்டவரின் மகனின் படத்தை பார்க்க மனசை பிசைவதாக உணர்ந்தேன். இந்த படமும் கூடவே மனதில் வந்தது.

தனிமனிதராக அவருக்காக இரங்கினாலும் ஒரு இனமாக ஒற்றை கொலைக்கு அவர்கள் ஏதோ காருண்யவாதிகள் போல காஷ் டேக் செய்வதை நினைக்க கடுப்புதான் வருகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

 கொல்லப்பட்டவர் கிறிஸ்தவராக, இலங்கையராக  இருப்பினும் கண்டிக்க மனம் வரவில்லை. 
கீழுள்ள சம்பவம் தான் கண்முன்னே வந்து செல்கிறது  
spacer.png

வரலாறு எப்பொழுதும் சில தடயங்களை விட்டு வைக்கும், தடம் திரும்ப உதவி செய்யும்.நியாயம் பெற வழிவகுக்கும்.நீதி கிடைக்கவில்லையெனில் சினம் கொண்டு பாய்வது இயல்பே...

இடம், பொருள், ஏவல் உணர்ந்திருந்தால் அந்த கிறிஸ்தவ சிங்கள  இலங்கையர் சாவினை  தவிர்த்து இருந்திருப்பார்.

Link to comment
Share on other sites

இலங்கையின் கண்களில் பார்வையை இழந்தோம்

இலங்கை எங்களுக்கு கண்களைத் தானமாக வழங்கியது, ஆனால் நாங்கள் பார்வையை
இழந்துவிட்டோம் என்று பாகிஸ்தானின் முன்னணி கண் வைத்தியர் நியாஸ் ப்ரோஹி வருத்தம் தெரிவித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 35,000 விழிவெண்படலங்களை பெற்றுள்ள
பாகிஸ்தான், இலங்கையிடமிருந்து கண் தானம் பெறுவதில் முதலிடத்தில் உள்ளது என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவை ஒரு குழுஅடித்துக் கொலை செய்த நாள் முதல், நாட்டில் உள்ள பலரைப் போலவே தானும் துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக பாகிஸ்தான் - இலங்கை கண் தான சங்கத்தின் உறுப்பினரான டொக்டர் ப்ரோஹி கூறினார்.

இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கை கண் தான சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ள அவர்,"நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம், நாம் பார்வையை இழந்து
விட்டோம் " என்றும் தெரிவித்துள்ளார்.கராச்சியில் உள்ள பிரபல ஸ்பென்சர் கண்
வைத்தியசாலையின் முன்னாள் தலைவரான ப்ரோஹி, இதுவரை பல கண் அறுவை
சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கு இலங்கை 83,200 விழிவெண்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.இலங்கையின் நன்கொடைகளில் 40 சதவீதம் பாகிஸ்தான், பெற்றுள்ளது.

அதிக அளவில் பாகிஸ்தான் தானம் பெறுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.பாகிஸ்தானின்
ஸ்பென்சர் கண் வைத்தியசாலையில் டொக்டர் எம்.எச்.ரிஸ்வியால் மேற்கொள்ளப்பட்ட முதல் கண் அறுவை சிகிச்சை இலங்கையால் தானமாக வழங்கப்பட்ட விழிவெண்படலத்தைக் கொண்டே செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையின்-கண்களில்-பார்வையை-இழந்தோம்/150-286614

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

தனிமனிதராக அவருக்காக இரங்கினாலும் ஒரு இனமாக ஒற்றை கொலைக்கு அவர்கள் ஏதோ காருண்யவாதிகள் போல காஷ் டேக் செய்வதை நினைக்க கடுப்புதான் வருகிறது.

 இப்படியான காட்சிகளை நேரடியாக அனுபவித்தேன். சந்திரிகா அம்மையார் உருவாக்கப்பட்ட, லட்சுமண் கதிர்காமர் தைரியத்தில் பயங்கரவாத புலனாய்வு அமைப்பினர் இதி கொடூரங்கள் நடந்தேறியது. ஆக முன்னாள் கலவரத்தில் சிங்களவர்கள் மட்டுமே பங்கு விட்டிருந்தார்கள். ஆனால் எங்கள் காலத்தில் முஸ்லிம்களும், சிங்களவர்களும் சேர்ந்தே செய்தார்கள். புங்குடுதீவை பூர்விகமாகக் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டு பீடி  ஆண் குறிகள் முற்றிலுமாக சுடப்பட்டு (இதனைச் செய்தவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் துணை  புலனாய்வாளர்) பின்னாளில்  அவரது காயங்கள் ஆறாது இருந்தது.  ஆனால் பின்னாளில் அவரை நாங்கள் காணவில்லை.

நடந்த இடம் பழைய பாஸ்போர்ட் வழங்கும் இடத்தில். அது 6ம் மாடி என அழைக்கப்பட்ட  இடத்துக்கு  அண்மையில் இருந்தது. உங்கள் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

பின்னாளில் சில முஸ்லீம் புலனாய்வாளர்கள் சாகடிக்கப்பட்டார்கள் அவரும் அடங்கலாக.

 

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

இப்படி "சொறி" (Sorry) என்று கூட சொல்லாதவர்கள் ஆளும்-வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். சுட்டும் விரலால் பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது மற்றெல்லா விரல்களும் இங்குள்ள இவர்களை காட்டுகின்றன.
பிரியந்த குமாரவை கொலை செய்த பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுக்கு உச்ச தண்டனை வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதை நாம் கோருகிறோம்.
ஆனால், நம் நாட்டில், மிருசுவில் தமிழ் கிராமத்தில், பாலகர்கள் உட்பட 8 பேரை கொலை செய்ததால், கைதாகி, எமது ஆட்சியின் போது ஜூன் 2015ம் வருடம், முதன் முறையாக, இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சிப்பாயை, ஜனாதிபதி கோதாபாய பதவிக்கு வந்த உடனேயே, 2020ம் வருடம் முதல் வேலையாக விடுவித்தார்.
இன்று இவர்கள்தான் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுகிறார்கள்..!
இப்படி பல. இது ஒரேயொரு உதாரணம் மட்டுமே.
நடந்தவைகளை ஒப்புவித்து ஒப்பாரி அரசியல் செய்பவன் நானில்லை. ஆனால், இந்த இரட்டை நிலைப்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இலங்கையிலும் நடந்த குற்றங்களை ஏற்று “சொறி” சொல்லும் காலம் வர வேண்டும். இல்லாவிட்டால் மீட்சி இல்லை.
கீழே படங்கள்:
(1)பாகிஸ்தானில் சிலர் "சொறி ஸ்ரீலங்கா" என்கிறார்கள்.
(2)விடுதலை பெற்ற ரத்நாயக்க தன் வீடு போய் தான் கொலை செய்த வயதை ஒத்த தன் அப்பாவி மகளை கொஞ்சுகிறார்.
(3) சிப்பாய் ரத்நாயக்க
262116783_10216077791416723_906665799430
 
 
264861389_10216077797656879_836623880668
 
 
261117877_10216077797376872_387064447029
 
 
  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

குவைத், பஹ்ரேய்ன், ஓமான்,  ஈராக் போல எண்ணையை மட்டும் நம்பி தூங்கி கொண்டிருக்கும் நாடுகள் அடி வாங்கலாம்.

ஆனால் MBS தலைமையிலான சவுதி, கட்டார், யூ ஏ ஈ என்பன தக்கண பிழைக்கும் வழியில் நடக்க தொடங்கி விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். 

சவுதி துபாய் போன்ற நாடுகள் நபிகள் நாயகம் அய்யா சொன்னது எக்காலத்துக்குமான தேவவாக்கு என்று நம்பாமல்  செயல்படுவது அவர்களுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.