Jump to content

அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டினர் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த 2016ம் ஆண்டு வழிவகை செய்யப்பட்டது. இதன்படி,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சேரலாம் என்கிற நிலை ஏற்பட்டது. இது தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று அதிமுக மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளை தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது, "தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தகுதித்தேர்வாக நடத்தப்படும்" என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில், இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம் பெறும். தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 வகுப்பு நிலையில் இருக்கும். கட்டாய தமிழ் தாள் தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பிற தாள்கள் திருத்தப்படாது.

தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்படுகிறது. பொதுத்தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தேர்வு முகமைகளில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்" இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சியில் இனி கட்டாய தமிழ் தேர்வு - BBC News தமிழ்

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

 • பிழம்பு changed the title to அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!
 • Replies 54
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

தி.மு.க அரசு ஆரவாரமில்லாமல் பல முன்னெடுப்புகளை தமிழ் வளர்ச்சிக்காகச் செய்து வருகிறது. மேலெ இருக்கிற நடவடிக்கை மூலம், வேற்று மாநிலத்திலிருந்து குடியேறிகளாக வந்தோரின் இரண்டாம் தலைமுறையினர் கூட தமிழை உரி

ராசவன்னியன்

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே! சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவி

பெருமாள்

இன்றைய தமிழ்நாட்டின் நிலை கவனமாக பாருங்கள் . இன்றைய தக்காளி விலை நிலவரம், கிலோ ஒன்றிற்கு: 1. news7 - ரூ. 35 2. One India - ரூ. 30 3. புதிய தலைமுறை - ரூ. 25 4. தந்தி - ரூ. 20 5. கலைஞர

 • கருத்துக்கள உறவுகள்

தரம்.. மிகச்சரியானதும் மிகநீதியானதும்… யூகே வரோணும் எண்டாலே ielts கேக்குது யூகே கவர்மெண்ட்.. அரசவேலைக்கே தமிழ்தேவை இல்லை நிலமை தமிழ்நாட்டில இவ்வளா நாளும்.. நல்லவேளை சீமான் இல்லை.. இதை சீமான் சொல்லி இருந்தா தீவிரவாதி எண்டு தொடங்கி இருப்பானுக..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

தி.மு.க அரசு ஆரவாரமில்லாமல் பல முன்னெடுப்புகளை தமிழ் வளர்ச்சிக்காகச் செய்து வருகிறது. மேலெ இருக்கிற நடவடிக்கை மூலம், வேற்று மாநிலத்திலிருந்து குடியேறிகளாக வந்தோரின் இரண்டாம் தலைமுறையினர் கூட தமிழை உரிய முறையில் கற்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்! 

திராவிடன் , தெலுங்கன், கன்னடன் என்று யூ ரியூப் சனல்களில் திட்டிக் கொண்டிருப்பதை விட இது போன்ற உள்ளீர்க்கும் நடவடிக்கைகளே தமிழை வளர்க்கும்!

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

Link to comment
Share on other sites

48 minutes ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

இதென்ன சீமானின் செல்வாக்கை இவ்வளவு சுருக்கி விட்டீர்கள்? சீமானின் இயற்கை சூழல் பாதுகாப்பு திட்டங்களைத்  தான் மேற்கு நாடுகளின் பசுமை இயக்கங்களும், லிபரல் கட்சிகளும் அமல்படுத்துகின்றன!🤪

 • Haha 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு அறிவிப்பை கொடுத்துவிட்டு டாஸ்க் மாஸ்க் மதுக்கடையை கூடிய நேரத்துக்கு திறக்க அறிவித்து உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதே போல தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பில் இருந்து ஜந்தாம் வகுப்புவரை ஆரம்ப பாடசாலைகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அரசாணை 1996 ல் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது சீமான் என்ற நபர் யாரென்றே தெரியாது. அந்த அரசாணை 2001 ல் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அத்த ஜெயலலிதா ஈழத்தாய் என்று சீமானால் கொண்டாடப்பட்டார். 

இதே போல் ஈழத்தமிழ் அகதிகளின் பிள்ளைகள் உயர்கல்வி கற்கும் வசதியும்  ஜெயலலிதாவால்  தடுக்கப்பட்டது. 

ஊழல் ஊழல் என்று வாய் கிழிய கத்தும் சீமான் ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சசிகலா என்று வரும் போது அந்தம்மா அந்தம்மா என்று குழைகிறார். பம்முகிறார். சிறையால் வெளியே வந்த பின் அவரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு திராவிட தலைகளும் ஒன்றுக்கொன்று ஊழலிலும்,தமிழர் துரோகத்திலும் சளைத்தவர்களல்ல. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அடிமைகளுக்கு இப்போதிருக்கும் ஸ்டாலின் இதுவரை பரவாயில்லை எனலாம். தமிழர்களின் சாபக்கேடு எந்தக் கொள்ளி பரவாயில்லை என தெரிவு செய்வதில்தான் நிலைமை உள்ளது.
 
பெரும்பான்மை பெற்று சீமான் தலையெடுக்க கனகாலம் ஆகும், அல்லது அவருக்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இதே போல தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பில் இருந்து ஜந்தாம் வகுப்புவரை ஆரம்ப பாடசாலைகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அரசாணை 1996 ல் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது சீமான் என்ற நபர் யாரென்றே தெரியாது. அந்த அரசாணை 2001 ல் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அத்த ஜெயலலிதா ஈழத்தாய் என்று சீமானால் கொண்டாடப்பட்டார். 

உங்களின் சிந்தனைகளை  மாற்றுவது நல்லது ஐந்தாம் வகுப்பென்ன அந்த அந்த மாநிலங்களில் அவர்களின் மொழி கட்டாயமாக படிப்பிப்பது அவர்களின் அடிப்படை உரிமை இந்த உண்மை கூட விளங்காமல் அல்லது உங்கள் பார்வையில் மற்ற மொழிக்காரர்கள் மேன்மையானவர்கள் எண்ணம் சிறுவயதிலே பதிந்து இருக்கனும் ஆனபடியால்தான் ஒன்றில் இருந்து ஐந்து மட்டும் தமிழ் கட்டாய பாடமாகினது பெரிதாக தெரிகின்றது .

கீழே தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மலையாளம் 

Malayalam made compulsory in Kerala schools from classes 1 to 10......

https://english.mathrubhumi.com/news/kerala/malayalam-made-compulsory-in-kerala-schools-from-classes-1-to-10-malayalam-language-learning-1.2797814
 
அடுத்து தெலுங்கு 

AP Makes Telugu Compulsory in Schools: Details Inside

https://english.sakshi.com/news/andhrapradesh/ap-makes-telugu-compulsory-schools-details-inside-140546

ஹிந்தி இங்கு ஹிந்தி இல்லாவிட்டால் பட்ட படிப்பு கிடையாது எனும் நிபந்தனையை போட்டு ஹிந்தியை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள் 

https://www.hindustantimes.com/delhi/du-circular-makes-hindi-test-compulsory-for-graduation-degrees/story-6wRYoEUzaVXnXJa6eRqdKI.html#:~:text=Students of Delhi University (DU,a circular said on Thursday.&text=Hindi was not compulsory in,CBCS)%2C implemented last year.

என்னசெய்வது கொடிபிடிக்காதே போராடாதே அவர்கள் தருவதை அமைதியாக இருந்து வாங்கிக்கொள்ளுங்கள் நூற்றாண்டு அடிமைகளுக்கு போதிக்கப்பட்ட இலவச விடயம் இலகுவில் மாறாது .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இரண்டு திராவிட தலைகளும் ஒன்றுக்கொன்று ஊழலிலும்,தமிழர் துரோகத்திலும் சளைத்தவர்களல்ல. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அடிமைகளுக்கு இப்போதிருக்கும் ஸ்டாலின் இதுவரை பரவாயில்லை எனலாம். தமிழர்களின் சாபக்கேடு எந்தக் கொள்ளி பரவாயில்லை என தெரிவு செய்வதில்தான் நிலைமை உள்ளது.

இந்த பக்கத்தில் இப்படி அறிவிக்கிறார்கள் அடுத்த பக்கம் அதே கட்சியினர்  உலகின் தொன்மை மிக்க தூங்கா  நகர் மதுரையில்  அவமானகரமான பெண்களுக்கு மட்டும் மதுபான விடுதி திறக்கின்றார்கள் இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் மது மயக்கம் இனி தமிழ் பெண்களும் வெறியில்  .

இந்த மதுக்கடைகளுக்கு சப்பிளை செய்யப்படும் 95 வீத மதுப்போத்தல்கள் அதே கட்சியினரின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியாதா ?

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பெருமாள் இயல்பாக நடக்கும் விடயங்களை சீமான் கூறி தான் செய்கிறார்கள் என்று கூறப்படுவதற்கே அப்படி அல்ல என்பதை ஆதாரத்துடன் கூறியிருந்தேன்.  மற்றபடி எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கும் வக்காலத்து வாங்குமளவுக்கு எவரும் சுத்தமானவர்கள் அல்ல.  ஸ்ராலின், எடப்பாடி போலவே சீமானும் ஒரு சாதாரண பதவி ஆசை பிடித்த ஒரு அரசியல் வாதியே. ஏற்கனவே கூறியது போல ஊழலுக்காக தண்டனை பெற்ற ஜெயலிதாவையோ சசிகலாவையோ பற்றிப பேச்சு எழும்பது பம்முவது அந்தம்மா அந்தம்மா என்று குழைவது போன்ற செயல்களே சீமான் நேர்மையற்றவர்கள் என்பதை காட்ட போதுமானது. ராச வன்னியன் கூறியது போல உள்ளதற்குள் இப்போதைக்கு பரவாயில்லை என்றால் அது ஸ்ராலின் தான். சில வேளை எதிர் காலத்தில் நிலைமை மாறலாம். 

மற்றப்படி ஊழல்கள் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  பொதுவான தெற்காசிய நாடுகள் முழுவதும் இப்படியான அரச ஊழல்கள் பிரபலம் மிகுந்தவை.   ஊழல்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல ஆசிய நாடுகளில் வாழும்  மக்களும் காரணம். ஊழல் கலாச்சாரத்தில் வளர்ந்த மக்கள் உள்ள இடத்தில் பொது துறை ஊழல் என்பது சாதாரணமானது.   

ஊழலுக்கும் திருட்டுக்கும் இன மத பேதம் இல்லை.  சீமான் கட்சியிலும் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள். என்ன அந்த திருடர்களுக்கு திருட சான்ஸ் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ஆட்சிக்கு  வந்தால் ஏதோ திருட்டே நடக்காத  சுத்தமான ஆட்சி நடக்கும் என்பது போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி பரப்புரை செய்வர்களில் பெரும்பாலோனோர் போராட்டத்தை வைத்து மக்கள் பணத்தை திருடிய திருடர்களே. 

அண்மையில் சீமான் கட்சியின் துரைமுருகனின் ரெலிபோன் பேச்சு கேட்டேன்.  சாக்கடையை விட மோசமான கீழ்தர தூசண உரையாடல். இப்படியான சாக்கடை தண்ணீரே வெட்க்படும் அளவுக்கு தரம் தாழ்ந்து உரையாடும் இவர்கள் தான் இன்று தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்று அவர்களால் அழைக்கபடும் இனவெறி பேசும் தரம் தாழ்ந்த நபர்கள்.  அதற்ஆக திமுக சரியா அதிமுக சரியா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அனால் திமுக, அதிமுகவை விட தரம் மோசமான தரம் தாழ்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்களே நாம் தமிழர் கட்எசியினர். அவர்களை  தேர்தலில் விரட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி. 🙏🏻

Edited by tulpen

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே!

சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவிடுகிறது. வெகுசன மக்களின் நம்பிக்கையை பெற இன்னும் பல காலமெடுக்கும் ஐயா.

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் செயல் - மிக சிறப்பு.

தம்பிகள் - எரியுதடி மாலா🤣.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே!

சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவிடுகிறது. வெகுசன மக்களின் நம்பிக்கையை பெற இன்னும் பல காலமெடுக்கும் ஐயா.

நான் சீமான் பக்தன் கிடையாது அதேபோல் ஸ்டாலின் எதிர் ஆளும் கிடையாது அரசியலில் எந்த விடயம் நடந்தாலும் உடனே கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுக்க முடியாது தமிழ்நாடு என்று பெயரை வைத்துக்கொண்டு தமிழில் compulsory(கட்டாயம்) படிக்கணும் போட்டி தேர்வுக்கு தமிழ் கட்டாயம்  என்ற சட்டம் கொண்டுவருவது மிக தாமதமானது  அதுவும் இவ்வளவு காலம் போனபின் இவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்றாலும்  வரவேற்க கூடியது .

முன்பும் தமிழ் படிப்பிக்கணும் என்று  கொண்டுவந்தவர்கள் தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தில் தான் படிப்பிப்போம் என்று கோர்ட் ஏறி தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் என்பது இல்லாமல் ஆக்கினார்கள் அந்த தனியார் கல்லூரி உரிமையாளர்கள் அதே கட்சியினர் தான் என்பதும் உங்களுக்கு தெரியும் . அவர்களே சட்டம் கொண்டு வந்தார்கள் அவர்களே கோர்ட் ஏறி அந்த சட்டத்தை செல்லாது ஆக்கினார்கள் . அதே போல் இந்த அரச ஆணையும் நீர்த்து போகுமோ ?

இங்கு குதிரைகள் ஓடியபின் லயத்தை பூட்டுவதுபோல அரசவேலைகளில் வெளிமாநிலத்தவர் நிரப்பிய பின் இந்த அரச ஆணை வந்துள்ளது ஒருபக்கம் தமிழ் மக்களை மகிழ்ச்சி படுத்தியபடி  சிந்தனையை மழுங்கடிக்கும் விதமாக மதுபான கடைகளை அதிக  நேரம் திறக்க அனுமதி கொடுத்தது மட்டுமல்லாது உலகிலே முதன்முதல் பெண்கள் மட்டும் மது அருந்தும் பார் அதுவும் தமிழர்  கலாசார பெருமைமிக்க மதுரை  நகரில் திறந்து உள்ளார்கள் . மதுபான ஆலைகள் யார் முதலாளிகள் என்று நான் இங்கு சொல்லதேவையில்லை அனைவருக்கும் தெரிந்த விடயம் .

மேல் உள்ள எதிர்வு கூறல்களை தாண்டி தமிழுக்கு நல்லது நடக்கணும் என்று மனம் விரும்புது ஆனால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் மனதில் நின்றபடி உள்ளது .

Edited by பெருமாள்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

கட்சிகளில் மட்டுமல்ல வெண்திரைகளிலும் காணலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

கட்சிகளில் மட்டுமல்ல வெண்திரைகளிலும் காணலாம்.

இன்றைய தமிழ்நாட்டின் நிலை கவனமாக பாருங்கள் .

இன்றைய தக்காளி விலை நிலவரம், கிலோ ஒன்றிற்கு:

1. news7 - ரூ. 35
2. One India - ரூ. 30
3. புதிய தலைமுறை - ரூ. 25
4. தந்தி - ரூ. 20
5. கலைஞர் டிவி - ரூ. 15
6. நக்கீரன் - ரூ. 10
6. கோயம்பேடு மார்க்கெட் - ரூ. 130

 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெருமாள் இயல்பாக நடக்கும் விடயங்களை சீமான் கூறி தான் செய்கிறார்கள் என்று கூறப்படுவதற்கே அப்படி அல்ல என்பதை ஆதாரத்துடன் கூறியிருந்தேன்.  மற்றபடி எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கும் வக்காலத்து வாங்குமளவுக்கு எவரும் சுத்தமானவர்கள் அல்ல.  ஸ்ராலின், எடப்பாடி போலவே சீமானும் ஒரு சாதாரண பதவி ஆசை பிடித்த ஒரு அரசியல் வாதியே. ஏற்கனவே கூறியது போல ஊழலுக்காக தண்டனை பெற்ற ஜெயலிதாவையோ சசிகலாவையோ பற்றிப பேச்சு எழும்பது பம்முவது அந்தம்மா அந்தம்மா என்று குழைவது போன்ற செயல்களே சீமான் நேர்மையற்றவர்கள் என்பதை காட்ட போதுமானது. ராச வன்னியன் கூறியது போல உள்ளதற்குள் இப்போதைக்கு பரவாயில்லை என்றால் அது ஸ்ராலின் தான். சில வேளை எதிர் காலத்தில் நிலைமை மாறலாம். 

மற்றப்படி ஊழல்கள் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  பொதுவான தெற்காசிய நாடுகள் முழுவதும் இப்படியான அரச ஊழல்கள் பிரபலம் மிகுந்தவை.   ஊழல்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல ஆசிய நாடுகளில் வாழும்  மக்களும் காரணம். ஊழல் கலாச்சாரத்தில் வளர்ந்த மக்கள் உள்ள இடத்தில் பொது துறை ஊழல் என்பது சாதாரணமானது.   

ஊழலுக்கும் திருட்டுக்கும் இன மத பேதம் இல்லை.  சீமான் கட்சியிலும் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள். என்ன அந்த திருடர்களுக்கு திருட சான்ஸ் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ஆட்சிக்கு  வந்தால் ஏதோ திருட்டே நடக்காத  சுத்தமான ஆட்சி நடக்கும் என்பது போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி பரப்புரை செய்வர்களில் பெரும்பாலோனோர் போராட்டத்தை வைத்து மக்கள் பணத்தை திருடிய திருடர்களே. 

அண்மையில் சீமான் கட்சியின் துரைமுருகனின் ரெலிபோன் பேச்சு கேட்டேன்.  சாக்கடையை விட மோசமான கீழ்தர தூசண உரையாடல். இப்படியான சாக்கடை தண்ணீரே வெட்க்படும் அளவுக்கு தரம் தாழ்ந்து உரையாடும் இவர்கள் தான் இன்று தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்று அவர்களால் அழைக்கபடும் இனவெறி பேசும் தரம் தாழ்ந்த நபர்கள்.  அதற்ஆக திமுக சரியா அதிமுக சரியா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அனால் திமுக, அதிமுகவை விட தரம் மோசமான தரம் தாழ்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்களே நாம் தமிழர் கட்எசியினர். அவர்களை  தேர்தலில் விரட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி. 🙏🏻

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழக அரசின் செயல் - மிக சிறப்பு.

தம்பிகள் - எரியுதடி மாலா🤣.

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, குமாரசாமி said:

Bild

கருமம், கருமம்..! 🥵

கண்மணிகள், கண்றாவியாகி விடக்கூடாது.

'ஆண்கள் மட்டும் குடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் ஏன் அவற்றை செய்யக்கூடாது..?' என தோன்றும், பலரும் கேட்கலாம்..நாடு தாங்குமா..? 

ஆனால் 'பெண்களை நம்பித்தான் குடும்ப வாழ்வியலே சுழல்கிறது' என்பதை அவசியம் ஒத்துக்கொள்ள வேண்டும்..!

Link to comment
Share on other sites

24 minutes ago, குமாரசாமி said:

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

18 minutes ago, பெருமாள் said:

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

👇 உங்கள் இருவருக்கும் முதலில் "சீமான்" என்ற பெயரை இந்த திரியில் உச்சரித்தது யாரென்று மறக்கிற அளவுக்கு வெள்ளிக் கிழமை என்ன தான் நடந்தது?😂

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

உங்கள் இருவருக்கும் முதலில் "சீமான்" என்ற பெயரை இந்த திரியில் உச்சரித்தது யாரென்று மறக்கிற அளவுக்கு வெள்ளிக் கிழமை என்ன தான் நடந்தது?😂

யார் உச்சரித்தது ? நான் தேவையற்று பெயர்களை இழுப்பது கிடையாது வெள்ளிக்கிழமை பிரச்சனையில் யாருடனோ கொள்ளுப்பட்டுவிட்டு கடைசியாக பக்கத்து இலைக்கு சொதி  திரியில் நின்றநீங்கள் வெள்ளி மரக்கறி சாப்பாடு கோசான் வேறை  வந்து ஆட்டுக்கால் பாயா போட்டுகொண்டு நின்றவர் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

Tamil_News_large_1653743.jpg

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள "விஷால் டி மால்" என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது:

இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.

கேடு விளைவிக்க மாட்டோம்:

மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1653743

 • Like 1
Link to comment
Share on other sites

Just now, பெருமாள் said:

யார் உச்சரித்தது ? நான் தேவையற்று பெயர்களை இழுப்பது கிடையாது வெள்ளிக்கிழமை பிரச்சனையில் யாருடனோ கொள்ளுப்பட்டுவிட்டு கடைசியாக பக்கத்து இலைக்கு சொதி  திரியில் நின்றநீங்கள் வெள்ளி மரக்கறி சாப்பாடு கோசான் வேறை  வந்து ஆட்டுக்கால் பாயா போட்டுகொண்டு நின்றவர் .

வடிவாகப் பாருங்கோ கீழே👇! நீங்கள் சீமானை இழுத்த குமாரசாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறியள்😂. அவரை உச்சரிக்கிற அளவு பெரிதாக இந்த திரியில் அவர் தொடர்பான எதுவும் இல்லை! 

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

3 minutes ago, ராசவன்னியன் said:

Tamil_News_large_1653743.jpg

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள "விஷால் டி மால்" என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது:

இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.

கேடு விளைவிக்க மாட்டோம்:

மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1653743

பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நீங்கள் சீமானை இழுத்த குமாரசாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறியள்😂. அவரை உச்சரிக்கிற அளவு பெரிதாக இந்த திரியில் அவர் தொடர்பான எதுவும் இல்லை! 

நான் எங்கு குமராசாமியை வைது  கொண்டு இருக்கிறன் ? உங்களுக்கு தெரிந்துகொண்டே வார்த்தை ஜாலம் பண்ணி ஆட்களை குழப்புவது உங்கள் வாடிக்கை குட்டையை குழப்பி மீன்  பிடிக்கும் விளையாட்டு .

இதேபோன்ற அறிக்கையை தானே அதே கட்சியை சேர்ந்த தலைவர் 2006ல் அறிவித்தவர் என்ன நடந்தது ?

 • Like 1
Link to comment
Share on other sites