-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ராசவன்னியன் · Posted
யார் செய்ததோ..? யார் சொல்வதோ..! யார் சொல்வதோ..!! -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தெற்கிலும், வடக்கிலும்.... இந்திய உதவியுடன், வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24 வீடமைப்புத் திட்டங்களும், மாத்தறையில் ஒன்றும் மேற் கொள்ளப்படுகின்றதோடு... அம்பாந்தோட்டையில் மேலும் 26 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தெற்கில் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும். இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் பெறப்பட உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 24 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1294330 -
By தமிழ் சிறி · Posted
நவம்பர் மாதம்... இலங்கை திரும்புகின்றார், கோட்டா! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இன்று தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1294331 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
சாணக்கியன் போன்றவர்களுக்கு... கட்சிக்குள், முன்னுரிமை வழங்க வேண்டும் – பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும். எதிர்கட்சி தலைவராக கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டவர். இவ்வாறு தங்களது மாவட்டங்களில் அகதி வாழக்கை வாழந்து கொண்டிருக்கின்ற மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்காத தலைவராக இருந்து கொண்டு இருப்பதனால் ஏனைய மாவட்டங்களை பற்றி சிந்திக்க மாட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களையே மாவட்ட நிலையில் மறந்து வருகின்றீர்கள்.எனவே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுக்கோப்பு இல்லாமல் போய் உள்ளது.இதற்கு காரணம் தலைமைத்துவம் தான்.சரியான வழிநடத்தல் இன்மையினால் தான் இந்நிலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சிக்கு மாத்திரம் உரித்தானது என கடந்த கால செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்பது சிரமம்.இந்த பிரிவுகளை நீங்களாகவே ஏற்படுத்தி கொண்டுள்ளீர்கள்.20 வருடங்கள் நம்பி கெட்ட பின்னர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றோம்.கடந்த காலங்களில் தொழிலாளர் வர்க்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி இருந்தது. ஏனெனில் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்தீர்கள்.அக்காலத்தில் மக்கள் உங்களை அங்கீகரித்திருந்தார்கள்.நாங்களும் அச்சந்தர்ப்பத்தில் உங்கள் பின்னால் வந்தோம்.ஒழுங்கான வழிநடத்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்மையால் தான் கடந்த 32 வருடங்களாக இணைந்து செயற்பட்ட நாம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டோம். நாங்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை மதிக்கின்றவர்கள்.போராட்டங்களை மதிக்கின்றவர்கள்.அண்ணன் பிரபாகரனின் போராட்டங்களை கூட மதித்திருக்கின்றோம்.தமிழீழ விடுதலை புலிகளோ அல்லது பிரபாகரனோ தற்போது இருந்திருந்தால் எமது தொழிற்சங்க உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். ஏனெனில் எமது பாதை சரியானது.இதனை நீங்கள்(தமிழ் தேசிய கூட்டமைப்பு)புரிந்து கொள்ளவில்லை.எங்களை போன்ற ஒரு தலைவர்களை வழிநடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை.ஆகவே தான் உலக தமிழ் மக்களும் தொழிற்சங்கங்களும் தற்போது ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதை குறைத்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://athavannews.com/2022/1294328 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தமிழ் சமூகம், பொருளாதாரத்தில் மாத்திரமல்ல... அதைவிட பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது – சாணக்கியன் கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம். அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும். மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றினைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1294309
-
Recommended Posts