Jump to content

காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள்.

அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி ,பெப்ரவரி ,மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 2000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து,ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ்,நைஜரியா,சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, கூழைக்கடா,பாம்புத்தாரா,சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன்,வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிக்கு விதவிதமான பறவைகள், இங்கேயே கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக்கொடுத்து, மார்ச் மாத இறுதியில் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதும் வழமையாகிவிட்டது.

மேலும் இப்பறவைகள் யாவும் இயற்கை சூழலை பாதுகாப்பதிலும் வேளாண்மை செய்கைக்கு விவசாயிகளுக்கு உதவுவனவாகவும் செயற்படுகின்றன.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://www.meenagam.com/காலநிலை-மாற்றத்தின்-கார/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி......நன்றி கிருபன்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி ,பெப்ரவரி ,மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 2000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து,ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ்,நைஜரியா,சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள பறவைகளுக்கும் விண்டர் பிடிக்காமல் கொலிடே போகுதுகள் இங்கு கொரனோ அது இது என்று இரண்டு வருடமாய் அடைத்து  வைத்திருக்கான்கள் இன்னும் ஒருவருடம் இப்படியே போனால் மண்டை பிழைத்து  அவனவன் கத்தியும் துவக்குடனும் திரிவான்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான செய்தி. பறவைகளிடம் நாம் வாழ்க்கை பற்றி சிறிது கற்று கொள்வோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு வலசை போகும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் அம்பாறை மட்டுமன்றி வடக்கில் தொண்டமனாறு, வல்லை வெளி, மண்டைதீவு ஆகிய பகுதிகளுக்கும் வந்து தங்கிச் செல்கின்றன (இதனால் தான் மாணவர்களுக்கான வெளிக்கள ஆய்வு நிலையமொன்று தொண்டமானாற்றில் இருக்கிறது - இந்த வெளிக்கள ஆய்வு நிலையம் அடிச்சு விடும் முன்னோடி ஓ.லெவல் விஞ்ஞானப் பரீட்சைத் தாள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரிஜினல் பேப்பரை விடக் கடினமாக இருக்கும். தொண்டமானாறுப் பேப்பரில் பாஸ் மார்க்ஸ் எடுத்தால் ஓ.லெவல் நிச்சயம் தாண்டலாம் என்ற அளவுக்கு கடினம்!😂). 

இந்த பறவைகள் பற்றி சுவாரசியமான பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, ஆயிரக் கணக்கான மைல்கள் ஓய்வின்றிப் பறக்கும் போது, இவை பயன்படுத்தும் சக்தி இவற்றின் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து உருவாகிறது. கொழுப்பு, கிளைகோஜன் என்ற சேமிப்பு மாப்பொருளை விட அதிக சக்தியைத் தருவதால் இந்த ஏற்பாடு. அதே நேரம் கொழுப்பை எரிக்கும் போது உருவாகிற தண்ணீர் மூலக் கூறுகளும் பறவைகளுக்கு உதவும். 

எனவே, இந்த வலசை போகும் பறவைகளின் இறைச்சி மிகவும் எண்ணைத் தன்மையானது. இது எப்படி எனக்குத் தெரியும்? 90 களில் வலசை போன ஒரு கூழைக்கடா, ஏதோ காரணத்தால் திசை மாறி கந்தர்மடத்தில் இருந்த ஐங்கரன் வாத்தியாரின் யுனிவேர்சல் கல்வி நிலயத்தின் தண்ணீர் தடாகத்தின் மீது இறங்கி விட்டது. வெளிப்படையாக எந்த காயங்களும் இருக்கா விட்டாலும் அடுத்த 3 வாரங்கள் வரை பறவை எங்கும் போகாமல் தடாகத்திலேயே தங்கி விட்டது. 3 வாரங்களின் பின்னர் ஐங்கரன் வாத்தியோடு நின்ற சில மாணவர்கள் இறைச்சியாக்கி சமைக்க முயற்சித்த போது தான்  இந்த எண்ணை விடயம்  தெரியவந்தது.   

வடக்கில் வலசை போகும் பறவைகள் பற்றிய தகவல்:   

http://www.mangrovesforthefuture.org/news-and-media/news/sri-lanka/2015/international-migratory-bird-day-inspires-jaffna-youth-in-ecosystem-conservation/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பறவைகளின் உலகம் விசித்திரமானது அதிலும் காகங்கள் இன்னும் புத்தி கூர்மையானவை மூன்றாய் இருந்த எண்ணிக்கையை பத்துக்கு  மேல் கொண்டுவந்துள்ளேன் இந்தவிடயத்தில் விவசாயி விக்குக்கு நன்றி சொல்லணும் .

தொண்டமானறு வெளிக்கள நிலையத்தில் ஒருவாரம் தங்கி இருக்க வேண்டி வந்தது ஒவ்வொரு விடியலும் சொர்க்கம் மறு  ஆண்டு ஆமி ஆக்கிரமித்தது அங்கிருந்த அரிதான பொருட்களை இடைக்காடில் உள்ள நாட்சார் வீடொன்றில் கொண்டுபோய் அடுக்கியது நியாபகம் உள்ளது .ஆனால் காட்டுக்கூட்டம் போல் இடை ஆறுதல் தேடிவந்த பறவையை என் கண்பார்வையில் யாரும் கொல்லவில்லை  கொல்லவும்  விடவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் இருக்கிறம் இதெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.