Jump to content

"தமிழ் மக்களில் கொஞ்சம் விசரக்கூட்டம் "

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப விடுதலைப் போர் சுமந்திரனுக்கு எதிரான போராட்டமாக மாறிப் போட்டுது. ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா? 👀

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

இப்ப விடுதலைப் போர் சுமந்திரனுக்கு எதிரான போராட்டமாக மாறிப் போட்டுது. ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா? 👀

சுமந்திரனைப் புறக்கணித்தால் அல்லது சும்மின் தகுதிக்கு நிகரான அல்லது சும்மை விட அதிக தகுதியுடைய ஒருவரை/பலரை TNA க்குள்ளீர்த்தால்  இந்த எதிர்ப்பிற்கான தேவை குறைந்து போகும். 

Link to comment
Share on other sites

😂மண்டையால போகுது!

முழுவதும் கேட்காமல் இந்த "சொற் சிலம்பம்" பற்றி  2 கேள்விகள்:

1. சாம்ராஜ்ஜியம் (empire), இராச்சியம் (kingdom), தேசம்/நாடு (nation-state) இவையிடையேயான வேறு பாடுகள் என்ன? 

2. வரலாற்றில் இருந்த ஏதாவதொரு சாம்ராஜ்ஜியத்தில் மக்கள் சிறுபான்மை பெரும்பான்மை என வகுக்கப் பட்ட உதாரணங்கள் இருக்கின்றனவா? முக்கியமாக அந்த வகுப்பிற்கான தேவை இருந்ததா? 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

ராஜபக்‌ஷக்கள் தமது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த 13வது திருத்தத்தில் வந்த மாகாணசபையையே நீக்கி ஒரே நாடு ஒரே சட்டம் என்று சிங்கள மேலாதிக்கத்தை தமிழ், முஸ்லிம் இனங்கள்மீது கொண்டுவருவதுதான் நடக்கவாய்ப்புள்ளது.

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

அண்மையில் சுமந்திரன் IBC தமிழுக்கு வழங்கிய செவ்வி இங்கே பகிரப்படுகிறது.

இச் செவ்வியின் போது சுமந்திரன் நம்பும் தமிழ் தேசியம், உள்ளக சுயநிர்ணயம் இலங்கை நாட்டில் சட்டரீதியாக பெற்றுக்கொவதற்கான சாத்தியப்பாடும், அது தொடர்ந்தும் மறுக்கப்படுகின்ற பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் இது தொடர்பில் தமிழ்த் தலைமைகளின் முயற்சிகள் மற்றும் அதில் சர்வதேச சமூகத்தின் வகிபாகத்தை பற்றி கலந்துரையாடி இருந்தார்.

மேலும் பிராந்திய மற்றும் உலக வல்லரசு நாடுகள் தமிழர் பிரச்சினையை ஒரு துருப்புசீட்டாக பாவிப்பதை எமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றிக்கொள்வது பற்றியும் வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்பிற்கும் இந்தியவின் பாதுகாப்பு கரிசனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் ஹிந்துத்துவ கொள்கைகள் நிலைகொள்வதற்கான சாத்தியப்பாடுகள், 2020 தேர்தலில், சுமந்திரனுக்கான விருப்பு வாக்குகள் அரைவாசியாக சரிவதற்கான காரணங்கள், வடகிழக்கில் இந்தியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள், தமிழ் அரசியலில் அப்புக்காத்து அரசியலின் செல்வாக்கு, மற்றும் ஆயுத போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

 • Like 1
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உள்ளக சுயநிர்ணய கோரிக்கை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கோருவோம் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருப்பது உண்மையா??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

தமிழ்நாட்டு தமிழரை தேடிவருவார்கள். அவர்களே பெரும்பான்மை தமிழர், அதோடு அவர்கள் இந்தியாவில் ஒரு பலம்பொருந்திய தேசிய இனம்.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குணாவின் நஞ்சுண்ட காட்டை வாசித்த போது அவர் எமது விடுதலை போராட்டத்தில்  ஏற்பட்ட தவறுகளை சீர்பார்த்து, சுயவிமர்சனம் செய்து முன்செல்வார் என்று பார்த்தால், திரும்பவும், குண்டு சட்டிக்கில் குதிரை ஓடுகின்றார். அன்ரன் பாலசிங்கம் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் ரேஞ்சுக்கு அரசியல் விமர்சனம் செய்கிறார். 

Edited by zuma
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அண்மையில் சுமந்திரன் IBC தமிழுக்கு வழங்கிய செவ்வி இங்கே பகிரப்படுகிறது.

இச் செவ்வியின் போது சுமந்திரன் நம்பும் தமிழ் தேசியம், உள்ளக சுயநிர்ணயம் இலங்கை நாட்டில் சட்டரீதியாக பெற்றுக்கொவதற்கான சாத்தியப்பாடும், அது தொடர்ந்தும் மறுக்கப்படுகின்ற பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் இது தொடர்பில் தமிழ்த் தலைமைகளின் முயற்சிகள் மற்றும் அதில் சர்வதேச சமூகத்தின் வகிபாகத்தை பற்றி கலந்துரையாடி இருந்தார்.

மேலும் பிராந்திய மற்றும் உலக வல்லரசு நாடுகள் தமிழர் பிரச்சினையை ஒரு துருப்புசீட்டாக பாவிப்பதை எமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றிக்கொள்வது பற்றியும் வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்பிற்கும் இந்தியவின் பாதுகாப்பு கரிசனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் ஹிந்துத்துவ கொள்கைகள் நிலைகொள்வதற்கான சாத்தியப்பாடுகள், 2020 தேர்தலில், சுமந்திரனுக்கான விருப்பு வாக்குகள் அரைவாசியாக சரிவதற்கான காரணங்கள், வடகிழக்கில் இந்தியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள், தமிழ் அரசியலில் அப்புக்காத்து அரசியலின் செல்வாக்கு, மற்றும் ஆயுத போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலம் காலமாக உள்ளக சுயநிர்ணய உரிமையத்தானே தமிழ் அரசியல் தலைவர்கள் கேட்டு போராடினார்கள்?
உள்ளக சுயநிர்ணய உரிமை கேட்டு களைத்த பின்னர்தானே தனிநாட்டைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவை அன்றைய தமிழின தலைவர்கள் முடிவெடுத்தார்கள்.

இனி மீண்டும் ஆரம்பத்திலிருந்து என்றால் சுமந்திரனும் தனித்தமிழீழம் என்ற கோட்பாட்டுக்கு  வருவாரா?

ஏனெனில் சிங்கள இனவாத அரசின் செயல்பாடுகள் அப்படி.

தலைவர் பிரபாகரன் என்றுமே இந்தியாவிற்கு குரோதமில்லாத சர்வதேச அரசியல் நிலைப்பாட்டையே விரும்பியிருந்தார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலம் காலமாக உள்ளக சுயநிர்ணய உரிமையத்தானே தமிழ் அரசியல் தலைவர்கள் கேட்டு போராடினார்கள்?
உள்ளக சுயநிர்ணய உரிமை கேட்டு களைத்த பின்னர்தானே தனிநாட்டைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவை அன்றைய தமிழின தலைவர்கள் முடிவெடுத்தார்கள்.

1) இனி மீண்டும் ஆரம்பத்திலிருந்து என்றால் சுமந்திரனும் தனித்தமிழீழம் என்ற கோட்பாட்டுக்கு  வருவாரா?

ஏனெனில் சிங்கள இனவாத அரசின் செயல்பாடுகள் அப்படி.

தலைவர் பிரபாகரன் என்றுமே இந்தியாவிற்கு குரோதமில்லாத சர்வதேச அரசியல் நிலைப்பாட்டையே விரும்பியிருந்தார்.

1) எதிர்காலத்தில் "தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சுமந்திரன் சொல்லாதவரைக்கும் okeyதான் 😂

Edited by Kapithan
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

1) எதிர்காலத்தில் "தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சுமந்திரன் சொல்லாதவரைக்கும் okeyதான் 😂

இல்லை நாங்கள் எல்லோரும் மக்கள்.🤣

ஐசே உமக்கு சர்வதேச சட்டங்கள் லோக்கள் தெரியுமா? 😎
 
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய இன மக்களை அவர்கள் வாழும் நாட்டின் சனத்தொகையினை வைத்து பெரும்பான்மையென்றோ அல்லது சிறுபான்மையென்றோ வகைபிரிப்பது சரியானதாகப் படவில்லை. ஒரு நாட்டில் வாழும் பல தேசிய இனங்களில் அவர்கள் தனித்தன்மையான மொழியும், கலாசாரமும், மதவழிபாட்டு முறையும் கொண்ட மக்கள் கூட்டம் என்று அடையாளப்படுத்தப்படுவதே சரியானது என்பது எனது எண்ணம். 

அதனாலேயே தேசியச் சிறுபான்மையினர் என்பது எந்தவொரு இன, மத, கலாசார தனித்துவம் கொண்ட மக்கள் கூட்டத்தையும் குறிப்பதற்குப் பாவிக்கப்படல் ஆகாது என்று நினைக்கிறேன். தேசியச் சிறுபான்மையினர் எனும்போது அந்த தேசத்தினுள் வாழும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினருக்குள் இந்தச் சிறுபான்மையினரும் அடக்கப்பட்டு ஈற்றில் உள்வாங்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல், அந்த நாட்டில் இருப்பது ஒற்றைத்தேசியமே என்று நாளடைவில் வாதிக்கவும் வாய்ப்புண்டு. 

தேசியம் என்பது தேசத்திலிருந்து வருவது. தேசம் என்பது ஒரு இன, மத, சமய தனித்துவத்தைக் கொண்ட மக்கள் பூர்வீக காலம் தொட்டு வாழ்ந்து வரும் தாயகப் பகுதி. 

இலங்கை ஒரு தேசம் அல்ல. ஆனால், இரு தேசங்களைக்கொண்ட நிலத்தால் ஒன்றுபட்ட நாடு. இன்னொரு வகையில் சொல்வதானால், இரு தேசிய இனங்கள் தங்களின் தனித்துவமான பூர்வீக வாழிடங்களை ஒரு நிலப்பரப்பில் கொண்டிருக்கும் பகுதி, அவ்வளவே.

சிறுபான்மைத் தேசிய இனங்கள், சிறுபான்மையினர், இனச்சிறுபான்மையினர் என்று சர்வதேசத்தில் பாவிக்கப்பட்டு வரும் பல சொற்பதங்கள் தொடர்பான பாரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஆய்வுகளில் சிறுபான்மையினர் எனும் பதம் பாவிக்கப்படுதல் தவறானது எனும் பொதுவான எண்ணக்கரு உருப்பெற்று வருகிறது. முடிந்தவர்கள் தேடிப்பாருங்கள்.

குணா சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

கொசுறு : சிறுபான்மைக் குழுக்கள் அல்லது சிறுபான்மை இனக்குழுக்கள் எனும் சொற்பதம், பெரும்பான்மையினர் அனுபவிக்கும் சலுகைகளை, உரிமைகளை அதேயளவில் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லற்படும் ஒரு இனக்குழுமம் என்றும் சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். அண்மையில் இங்கிலாந்தின் தென்னாசிய விவகாரச் செயலாளர் பாவித்த பதம் கூட இதன் அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கலாம். இதுகூட எனது அனுமானம்தான். அல்லது, அவர் இதுபற்றிய எந்த பிரக்ஞையுமில்லாமல் வெறுமனே சிறுபான்மையினர் ( சுமந்திரனின் மொழியில் சொல்வதானால் எண்ணிக்கையில் குறைந்த மக்கள்) எனும் தொனியில் கூடப் பாவித்திருக்கலாம். 

Ethnic minority, minority ethnic or minoritised ethnic

These terms usually refer to racial and ethnic groups that are in a minority in the population. In the UK, they usually cover all ethnic groups except White British. For example, they include White minority ethnic groups such as Polish or Gypsy, Roma and Irish Traveller.

‘Minority ethnic’ is sometimes preferred over ‘ethnic minority’. Use of minority ethnic was proposed to help counter the use of the term ‘ethnic’ when referring to people who are not White British. Some felt that by not putting ‘ethnic’ first, ‘minority ethnic’ better recognised the fact that everyone has an ethnicity including White British people.

‘Minoritised ethnic’ (or the similar term ‘racially minoritised’) has been recommended more recently as it recognises that individuals have been minoritised through social processes of power and domination rather than just existing in distinct statistical minorities. It also better reflects the fact that ethnic groups that are minorities in the UK are majorities in the global population.

As we discuss further below, you should take care when using umbrella terms such as these. Users should be aware of the negative consequences of grouping all minoritised individuals together in this way, especially when there is significant diversity between them.

Always consider use of these terms carefully and be sure and prepared to clarify which races and/or ethnicities you are actually speaking about.

Edited by ரஞ்சித்
 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை, பெரும்பான்மை எனும் பதங்கள் பாவிக்கப்படும்போதே ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தின் மீது தனது செல்வாக்கினைச் செலுத்துதல் என்பது இலகுவாக ஆகிவிடுகிறது. அல்லது அதற்கான அந்தஸ்த்தினை பெரும்பான்மையினத்திற்கு கொடுத்து விடுகிறது.

அப்படியானால், இலங்கையர்கள் என்று பொதுவாக அழைக்கப்படுதல் சாத்தியமா? இல்லை. ஏனென்றால், இலங்கை என்பது ஒரு நாடேயன்றி, தேசமல்ல. ஆகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் அல்லது இலங்கையில் வாழும் சிங்களவர்கள் என்கிற பதங்களே சரியானதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

கிருபண்ணை 
யு டோன்ட் ஒரி ...அம்பிகா அண்ட்ரியை இறக்குறோம், மனித உரிமை பற்றி கலர் கலராக பீலா விட்டு இலங்கை அரசாங்கத்தை பேதிபுடுங்க வைத்து  தீர்வை அள்ளுறோம்... ஓகே  

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிருபண்ணை 
யு டோன்ட் ஒரி ...அம்பிகா அண்ட்ரியை இறக்குறோம், மனித உரிமை பற்றி கலர் கலராக பீலா விட்டு இலங்கை அரசாங்கத்தை பேதிபுடுங்க வைத்து  தீர்வை அள்ளுறோம்... ஓகே  

அம்பிகா ஆன்ரியின் தலைமைத்துவத்தையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளும் தகுதி இன்னமும் தமிழ் மக்களிடம் இல்லை.! அம்பிகா ஆன்ரியின் பெறுமதி தெரியும்போது காலம் கடந்திருக்கும் ஏனெனில் அவர் சர்வதேச அளவில் பெரிய ஆளாகிவிடுவார்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

அம்பிகா ஆன்ரியின் தலைமைத்துவத்தையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளும் தகுதி இன்னமும் தமிழ் மக்களிடம் இல்லை.! அம்பிகா ஆன்ரியின் பெறுமதி தெரியும்போது காலம் கடந்திருக்கும் ஏனெனில் அவர் சர்வதேச அளவில் பெரிய ஆளாகிவிடுவார்!

அப்போதும் டோன்ட் வொரி ...
கமலா ஹரிசுக்கே தமிழச்சி என்ற  நேம் பிளேட் அடிச்சு ஒட்டி கதிகலங்க வைத்த ஆக்கள் நாம், அம்பிகா அன்ரி அந்தளவுக்கு போயிருவரோ, போனாலும் நோ பிராப்லம் ஏகப்பட்ட சமாச்சாரம் கைவசம் இருக்கு, கைவரிசையை காட்டி  அன்ரியை அப்படியே அபேஸ் பண்ணிவிடலாம்    

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா?

முடியவே முடியாது 
காரணம் அவர் ஒரு  தரப்பட்ட தலைவர் (proxy)
நீங்கள் அவரை தவிர்த்து எதனை முன்னெடுத்தாலும் அதற்குள் சில அகப்புறக்காரணிகளால் மீண்டும் அவர்  வலுவாக செருகப்பட்டு  அதனை ஹை ஜாக் செய்து திரும்பவும் முன் கொண்டுசெல்பவராக முன்னிலைப்படுத்தப்படுவார் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

முடியவே முடியாது 
காரணம் அவர் ஒரு  தரப்பட்ட தலைவர் (proxy)
நீங்கள் அவரை தவிர்த்து எதனை முன்னெடுத்தாலும் அதற்குள் சில அகப்புறக்காரணிகளால் மீண்டும் அவர்  வலுவாக செருகப்பட்டு  அதனை ஹை ஜாக் செய்து திரும்பவும் முன் கொண்டுசெல்பவராக முன்னிலைப்படுத்தப்படுவார் 

அப்படிச் செருகப்படும் பலவீனமான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நன்மையான விடயம். 

எமது பலவீனமான நிலையை ஏற்றுக்கொள்வதுதான் (சுய)  விடுதலைக்கான முதற்படி. 

Link to comment
Share on other sites

16 hours ago, ரஞ்சித் said:

ஒரு தேசிய இன மக்களை அவர்கள் வாழும் நாட்டின் சனத்தொகையினை வைத்து பெரும்பான்மையென்றோ அல்லது சிறுபான்மையென்றோ வகைபிரிப்பது சரியானதாகப் படவில்லை. ஒரு நாட்டில் வாழும் பல தேசிய இனங்களில் அவர்கள் தனித்தன்மையான மொழியும், கலாசாரமும், மதவழிபாட்டு முறையும் கொண்ட மக்கள் கூட்டம் என்று அடையாளப்படுத்தப்படுவதே சரியானது என்பது எனது எண்ணம். 

அதனாலேயே தேசியச் சிறுபான்மையினர் என்பது எந்தவொரு இன, மத, கலாசார தனித்துவம் கொண்ட மக்கள் கூட்டத்தையும் குறிப்பதற்குப் பாவிக்கப்படல் ஆகாது என்று நினைக்கிறேன். தேசியச் சிறுபான்மையினர் எனும்போது அந்த தேசத்தினுள் வாழும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினருக்குள் இந்தச் சிறுபான்மையினரும் அடக்கப்பட்டு ஈற்றில் உள்வாங்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல், அந்த நாட்டில் இருப்பது ஒற்றைத்தேசியமே என்று நாளடைவில் வாதிக்கவும் வாய்ப்புண்டு. 

தேசியம் என்பது தேசத்திலிருந்து வருவது. தேசம் என்பது ஒரு இன, மத, சமய தனித்துவத்தைக் கொண்ட மக்கள் பூர்வீக காலம் தொட்டு வாழ்ந்து வரும் தாயகப் பகுதி. 

இலங்கை ஒரு தேசம் அல்ல. ஆனால், இரு தேசங்களைக்கொண்ட நிலத்தால் ஒன்றுபட்ட நாடு. இன்னொரு வகையில் சொல்வதானால், இரு தேசிய இனங்கள் தங்களின் தனித்துவமான பூர்வீக வாழிடங்களை ஒரு நிலப்பரப்பில் கொண்டிருக்கும் பகுதி, அவ்வளவே.

சிறுபான்மைத் தேசிய இனங்கள், சிறுபான்மையினர், இனச்சிறுபான்மையினர் என்று சர்வதேசத்தில் பாவிக்கப்பட்டு வரும் பல சொற்பதங்கள் தொடர்பான பாரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஆய்வுகளில் சிறுபான்மையினர் எனும் பதம் பாவிக்கப்படுதல் தவறானது எனும் பொதுவான எண்ணக்கரு உருப்பெற்று வருகிறது. முடிந்தவர்கள் தேடிப்பாருங்கள்.

குணா சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

கொசுறு : சிறுபான்மைக் குழுக்கள் அல்லது சிறுபான்மை இனக்குழுக்கள் எனும் சொற்பதம், பெரும்பான்மையினர் அனுபவிக்கும் சலுகைகளை, உரிமைகளை அதேயளவில் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லற்படும் ஒரு இனக்குழுமம் என்றும் சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். அண்மையில் இங்கிலாந்தின் தென்னாசிய விவகாரச் செயலாளர் பாவித்த பதம் கூட இதன் அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கலாம். இதுகூட எனது அனுமானம்தான். அல்லது, அவர் இதுபற்றிய எந்த பிரக்ஞையுமில்லாமல் வெறுமனே சிறுபான்மையினர் ( சுமந்திரனின் மொழியில் சொல்வதானால் எண்ணிக்கையில் குறைந்த மக்கள்) எனும் தொனியில் கூடப் பாவித்திருக்கலாம். 

Ethnic minority, minority ethnic or minoritised ethnic

These terms usually refer to racial and ethnic groups that are in a minority in the population. In the UK, they usually cover all ethnic groups except White British. For example, they include White minority ethnic groups such as Polish or Gypsy, Roma and Irish Traveller.

‘Minority ethnic’ is sometimes preferred over ‘ethnic minority’. Use of minority ethnic was proposed to help counter the use of the term ‘ethnic’ when referring to people who are not White British. Some felt that by not putting ‘ethnic’ first, ‘minority ethnic’ better recognised the fact that everyone has an ethnicity including White British people.

‘Minoritised ethnic’ (or the similar term ‘racially minoritised’) has been recommended more recently as it recognises that individuals have been minoritised through social processes of power and domination rather than just existing in distinct statistical minorities. It also better reflects the fact that ethnic groups that are minorities in the UK are majorities in the global population.

As we discuss further below, you should take care when using umbrella terms such as these. Users should be aware of the negative consequences of grouping all minoritised individuals together in this way, especially when there is significant diversity between them.

Always consider use of these terms carefully and be sure and prepared to clarify which races and/or ethnicities you are actually speaking about.

ரஞ்சித், நன்றி. உங்கள் வாதங்கள் பெரும்பாலானவை மறுக்க இயலாதவையாக இருக்கின்றன. விரிவான கருத்தை மாலையில் இடுகின்றேன். 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

கமலா ஹரிசுக்கே தமிழச்சி என்ற  நேம் பிளேட் அடிச்சு ஒட்டி கதிகலங்க வைத்த ஆக்கள் நாம்

🤣

அதை மறக்க தான் முடியுமா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

அப்படிச் செருகப்படும் பலவீனமான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நன்மையான விடயம். 

இந்தியாவில் போனை அணைத்துவிட்டு குப்புறப்படுத்துகிடந்துவிட்டு 
தமிழர்களுக்கு தீர்வு வாங்கித்தரவந்த கூத்தாடி Proxy க்களை அப்போதே அடித்து திரத்தாமல் 
அவர்களோடு சேர்ந்து 11 வருடங்களாக கூத்தாடிய அனைவரும் இந்தப்பலவீனமான நிலைக்கு காரணம் 
அதாவது யானை தன்மீதே மண்ணை வாரியிறைத்தது போல..... ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் 
என்று சிந்திய இரத்தச் சூடு அடங்கும் முன் கூத்தாடிகளுடன் சேர்ந்து  கூத்தாடி யுத்தக்குற்றவாளி  பொன்சேகாவுக்கு குத்தோ குத்து என்று குத்தினோமோ அன்றோடு எல்லாமே கம்மாஸ். தேசியமெல்லாம் ஜஸ்டு புஸ்வாணம், ICU இல் மூச்சை இழுக்கும் 13 இற்கு இந்திய ,அமெரிக்க  CPR கொடுத்து கொஞ்சம் எழுப்பி பார்க்கலாம் அம்புட்டுத்தே ,பார்த்து  13 இற்கு மூச்சு வருதாம் என்ற விடயம்  இலங்கை அரசு காதில் விழுந்தாலே போதும்  பியூஸயே புடுங்கிடும். 

 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டிலும் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கும் கானாக்காரனுக்கும் பொம்பிளைப் பிள்ளை ஒன்று பிறந்திருக்கு.

எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்பம் எதிர்காலத்தில் அது கமலா கரீஸாக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

நான் வாழும் நாட்டிலும் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கும் கானாக்காரனுக்கும் பொம்பிளைப் பிள்ளை ஒன்று பிறந்திருக்கு.

எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்பம் எதிர்காலத்தில் அது கமலா கரீஸாக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு 

நடந்தது எதுவோ அது நன்றாகவே நடந்தது. நடக்கப்போவது எதுவோ, அதுவும் நன்றாகவே நடக்கும். 🙏

இத நா சொல்லலீங்க. பக்வான் கிஸ்ணர் சொல்லீக்லாப்ல..😂

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • LAST VISITED March 14, 2019 March 14, 2019 அருமையானதொரு கருத்தாளர் 2019 மார்ச் 14 க்கு பிறகு ஆள் இந்தப்பக்கம் இல்லையாமே பெயரை மாத்தி போட்டாரோ ?
  • இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 
  • (எம்.மனோசித்ரா) இறக்குமதி செய்யப்படவுள்ள சீன அரிசி , சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , 'உண்மையாகவே அது குறித்து தெரியாது' என்று அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் குறிப்பிட்டனர்.  மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்ற போது , 'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதா?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இது தொடர்பில் கேட்டறிந்து அது குறித்து தெரியப்படுத்துவோம்.  இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார். சேதனப் பசளையில் சீன அரிசி உற்பத்தி செய்யப்பட்டதா ? என்ற கேள்விக்கு தடுமாறிய 3 அமைச்சரவை பேச்சாளர்கள் ! | Virakesari.lk
  • (நா.தனுஜா)   இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதுடன் அங்கு மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டியது அவசியமாகும்.    இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதுடன் இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையுடன் இணைந்ததாக பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் ஜனவரிமாதம் 'தமிழ் மரபுரிமை மாதமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினையும் கொண்டாடும் வகையிலேயே இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டர் நகரிலுள்ள மத்திய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். நிகழ்வை ஆரம்பித்துவைத்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான எலியற் கொல்பர், கடந்தகால மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார். அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் டாவே, ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவை பிரித்தானிய பாராளுமன்றத்தில் தான் சமர்ப்பித்தமை குறித்து சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதுடன் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டும்.  இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். இந்தத் தைப்பொங்கல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவணிகங்கள் தொடர்பான அமைச்சருமான போல் ஸ்கல்லி பிரிட்டனின் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் மிகையான பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதே தைப்பொங்கல் பண்டிகையின் தாற்பரியமாகும்.  இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படுவதுடன் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டார். அதேவேளை இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவை நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்திய பிரசாரம் மேலும் வலுவான முறையில் நடைபெறுவதைக் காணவிரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்தார்.  அத்தோடு 'இதுவிடயத்தில் தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கப்படவேண்டும்.  எமது அரசாங்கத்தின்கீழ் மனித உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது' என்று சுட்டிக்காட்டிய அவர், என்றேனும் ஒருநாள் இராணுவமயமற்ற சுயநிர்ணய உரிமையுடனான தமிழர் தாயகத்தைக் காண்போம் என்றும் கூறினார். இலங்கையில் ராஜபக்ஷாக்களின் மீள்வருகை அனைவருக்குமான தீவின் எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ரீட்டிங் சுட்டிக்காட்டிய அதேவேளை, தென்னாபிரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறுகோரி நான் போராடினேன்.  இப்போது இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் லெமி குறிப்பிட்டார். அதன்படி அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நீங்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் டேவிட் லெமி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் - பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் | Virakesari.lk
  • கரும்பு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரும்பு......!  💐
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.