Jump to content

‘நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி

December 6, 2021
 
IMG 20211206 161116 'நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்"- முன்னாள் போராளி

நடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாளில்  விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவித்த அவர்,

வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அது எமது பாரம்பரிய கலாசார முறை என்றும் நாட்டில்  அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்றோம்.  மாறாக விடுதலை புலிகளின் தடை செய்யப்பட்ட கொடி போன்ற பொருட்களை எதனையும் நாங்கள் எங்கும் காட்சிப்படுத்தி நினைவு கூரவில்லை . நாட்டின் சட்டத்திட்டங்களை மீறி நாங்கள் எதனையும் செய்யவில்லை . சட்டத்திற்கு உட்பட்டு எமது உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்றோம். இதற்காக நீதிமன்றம் வரையும் சென்றிருக்கின்றோம் .

எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு வரையும் சென்று பல்வேறு அரச தரப்பு பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வலியுறுத்தியிருந்தோம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றி எனது சாட்சியத்தை வழங்கியிருந்தேன், அதற்குப்பின்னர் அச்சுறுத்தும் செயற்பாடாக  பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன். இவ்வாறான விசாரணைகள் முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் மீது சுமத்தப்படும்போது நாட்டைவிட்டு வெளியேறக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் இலங்கைத்தீவில் சிங்களவர்களுக்கு அதாவது கிரிமினல்களுக்கு முண்டுகொடுக்கும் சாமரம் வீசும் தமிழ் அரசியல் வியாதிகள் மற்றும் காவாலிகளைத்தவிர்ந்த அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள் அதன்பின்பு தமிழ் அரசியல் வியாதிகள் மற்றும் சிங்களத்தின் அடிவருடிகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குத்துக்கரணம் அடிப்பார்கள். காலப்போக்கில் தமிழ் அரசியல் வியாதிகள் உட்பட்ட இந்தக்காடைக்கூட்டம் மன அழுத்தத்தில் வியாதிஸ்டடாக அலைந்து திரிந்து அத்தீவில் இறுதியில் மிஞ்சியிருந்த இனக்குழுமம் எனும் பெயரைப்பெற்று அற்றுப்பொவர்.

இதன் முன்னுதாரணமாக ஆரம்பகட்டத்தில்

அதற்குத்தோதாக தமிழ்ப்பெண்கள் அனைவரும் சிங்களவரைத் திருமணம் செய்து தமிழ் இளைஞருக்குப் பொம்பிளை கிடைக்காது கட்டாந்தரையில் குந்தியிருந்து வானத்தை அண்ணாந்து பார்ப்பர்.

இது காலத்தின் சாபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சனமும் நாட்டை விட்டுத்து ஓடுது இதுல நாமும் தான்  ஐயா  காத்துக்கொண்டிருக்கிறம்  ஓட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்கள சனமும் நாட்டை விட்டுத்து ஓடுது இதுல நாமும் தான்  ஐயா  காத்துக்கொண்டிருக்கிறம்  ஓட 

தமிழர்களை அழித்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என கிரிபத் சாப்பிட்டவயள் எல்லாம் பொய்த்துவிட்டது. இனி என்ன ஈசலைப் பிடித்துச் சாப்பிடவேண்டும் அல்லது நாட்டைவிட்டு ஓடவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2021 at 17:37, Elugnajiru said:

தமிழர்களை அழித்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என கிரிபத் சாப்பிட்டவயள் எல்லாம் பொய்த்துவிட்டது. இனி என்ன ஈசலைப் பிடித்துச் சாப்பிடவேண்டும் அல்லது நாட்டைவிட்டு ஓடவேண்டும்

காலப்போக்கில அதுதான் நிலமை போலிருக்கு விடிஞ்சு எழும்பினா என்ன பொருளுக்கு என்ன விலை என்று தெரியல 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.