கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நாடளாவிய ரீதியில்... 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மூடப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். அந்த நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கையிருப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துவதற்கு மேலதிக ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பல்வேறு கலவர சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283683 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரணில் பதவி விலகாவிட்டால்... பொதுஜன பெரமுனவின், இசைக்கு ஏற்ப ஆட வேண்டும் – எதிர்க்கட்சி! தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து பதவியில் இருந்தால், பொதுஜன பெரமுனவின் இசைக்கு ஏற்ப ஆட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிக்க விரும்பினால், பொதுஜன பெரமுனவிற்கு பணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கத்தை பல கட்சி அரசாங்கம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் அது பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இருவரைத் தவிர ஏனையவர்கள் பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டவர்கள். திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21வது திருத்தம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பது சமநிலையில் உள்ளது. 21வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு வரவிடாமல் தடுப்பதும் சமநிலையில் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2022/1283676 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
மே 9 சம்பவம் குறித்து... ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை, நியமிக்குமாறு கோரிக்கை! கொழும்பு – கொள்ளுப்பிட்டி மற்று காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் அடக்குமுறை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட களங்கம் மிகவும் வலுவானவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைக்கான அடிப்படைக் காரணம், அதற்குக் கட்டளையிட்டவர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் அதைச் செய்தவர்கள் யார் என்பதை நாட்டின் முன் அம்பலப்படுத்த வேண்டும் என அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர. இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அத்துரலியே இரத்தின தேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். https://athavannews.com/2022/1283662 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய... சுமார் 500 கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். திறந்த கணக்கு முறைக்கு உணவினை இறக்குமதி செய்வது கடந்த 6ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283650 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர்... இராஜினாமா இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை எனக் கூறி, அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்க அமைச்சர் உத்தேசித்துள்ள நிலையில், அபிவிருத்திகளை மீளாய்வு செய்வதற்கும், பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு வழிகாட்டுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மே 21 மற்றும் 23 திகதிகளில் அமைச்சர் நிர்ணயித்த இரண்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில், நாட்டிற்கு மிக விரைவான வருவாயை ஈட்டித் தரும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1283635
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.