Jump to content

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

  • தாம் போல்
  • பிபிசி
6 டிசம்பர் 2021, 02:38 GMT
தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன மருத்துவர்கள் முதன்முதலில் மர்மமான சளி, காய்ச்சல் பாதிப்புடன் வந்த நோயாளிகளைப் பார்த்தார்கள். அப்போதிருந்து, கோவிட்-19 இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதற்கும் மேலாக, மிகவும் அச்சுறுத்தக்கூடிய புதிய திரிபு என்று விவரிக்கப்படுவதும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியுமா?

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது.

ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது.

பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது.

ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்.

ஜெர்மனியும் இதேபோன்ற நடவடிக்கையைத் திட்டமிடுகிறது. இப்போதைய அச்சம் என்ன, ஆபத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, நான் சுகாதாரத் துறை மற்றும் இதர வல்லுநர்களிடம் பேசினேன்.

ஆதரவு: தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றுகிறது

கோவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்கு ஆதரவான வாதம் மிகவும் எளிமையானது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். நோயின் தீவிரம் குறைந்தால், நோய்த் தாக்குதலால் ஏற்படும் மரணங்களும் குறைகின்றன. மேலும், மருத்துவமனைகளிலும் நெருக்கடி குறையும்.

வரலாற்று ரீதியாக, நோய்த்தடுப்பு பிரசாரங்கள் பெரியளவு வெற்றியைக் கண்டுள்ளன. பெரியம்மை போன்ற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தியதோடு, மற்ற நோய்களிலும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைத்துள்ளன.

"தேவைகள், அதிக தடுப்பூசி விகிதங்களைப் பெறுதல் மற்றும் தனிநபர்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி சமூகங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு இடையிலான நேரடி உறவைக் காட்டக்கூடிய நல்ல உதாரணங்கள் எங்களிடம் உள்ளன," என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வரலாறு துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜேசன் ஸ்வார்ட்ஸ்.

"தடுப்பூசிகள் முற்றிலுமாக வேலை செய்கின்றன அதைக்காட்ட எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன." என்கிறார் ஜேசன்.

ஆஸ்திரியா தற்போது முன்மொழிந்துள்ளவற்றை விட மென்மையான கட்டுப்பாடுகள் மூலமாகவே, தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இலக்கை அடைந்துள்ளது.

தடுப்பூசி

பட மூலாதாரம்,PA MEDIA

பிரான்ஸ் நாட்டின் உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் செல்வதற்கு தேவையான தடுப்பூசி பாஸ், கட்டாய தடுப்பூசி விதியைத் தவிர்க்க முடியும் என்று அரசு நம்பும் அளவுக்கு செலுத்திக் கொண்டவர்களின் விகிதத்தை உயர்த்துவதாக நம்பப்படுகிறது.

எதிர்ப்பு: தடுப்பூசியின் மீது சந்தேகம்

லண்டனில், ஜூலை மாதம் ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கி சில மணிநேரங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதே இதன் கருத்து. குறிப்பாக, கோவிட் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் எதிர்ப்புகளை ஈர்த்துள்ளன. அதோடு கட்டாய முகக்கவசம் என்பதைவிட ஒரு படி மேலே கட்டாய தடுப்பூசி விதிமுறை இருக்கிறது.

"தடுப்பூசியைப் பொறுத்தவரை, மக்கள் மிகவும் வினோதமாகச் சிந்திக்கிறார்கள்," என்கிறார் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியிலுள்ள குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் பொது சுகாதார மருத்துவர் வகீஷ் ஜெயின்.

"தம்முடைய உடலில் செலுத்தப்படும் எதையும், மக்கள் ஒரே மாதிரியாகச் எடுத்து கொள்வது கிடையாது. கல்வியாளர்களும் மற்றவர்களும் கோட்பாட்டளவில் இதை ஒரு கட்டுப்பாடு என்று நினைத்தாலும், மக்கள் இதை உணர்ச்சிகரமாக எதிர்கொள்கிறார்கள்." என்கிறார்.

தடுப்பூசி போட ஒருபோதும் வற்புறுத்தாத சிலர் எப்போதும் இருப்பார்கள். அதேநேரம், தடுப்பூசி எதிர்ப்பாளராக இல்லாமலே கூட, தடுப்பூசியின் மீது சந்தேகம் கொள்ளமுடியும்.

ஆஸ்திரிய ஆய்வு ஒன்றின்படி, நாட்டின் ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 14.5 விழுக்காடு பேர் தடுப்பூசி போடத் தயாராக இல்லாதவர்கள். கூடுதலாக, 9 விழுக்காடு பேர் முழு முற்றான தடுப்பூசி எதிர்ப்பாளர்களாக இருந்தாலும், செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

'This is a war': A protester holds up a needle sign in Melbourne, Australia

பட மூலாதாரம்,ANADOLU AGENCY

 
படக்குறிப்பு,

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த பேரணி

கட்டாய தடுப்பூசிகளுக்கு எழும் எதிர்ப்புகளைவிட அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக உள்ளதா என்பதை அரசுகள் எடைபோட வேண்டும். ஆனால், கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான கேத்லீன் பவல் சொல்வது படி, சட்டரீதியாக வழக்கு ஒன்றுள்ளது.

"தான் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்ய ஒரு தனி நபருக்கு உரிமை இருப்பது போல ஒரு மோசமான நோயால் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்பும் உரிமை எதிரில் உள்ளவர்களுக்கும் உண்டு." என்கிறார் கேத்லீன்.

ஆதரவு: மற்ற வழிகளில் முயன்று பார்த்துவிட்டோம்

கோவிட் சில காலமாக நம்மிடையே உள்ளது. தடுப்பூசிகளும்தான்.

ஐரோப்பாவில் குறைந்தபட்சம், பல மாதங்களாக தடுப்பூசி செலுத்த முயன்றும்கூட, பரவலாக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. இப்போதைய கடுமையான கட்டுப்பாடுகளின் வேகம், இவ்வளவு கால முயற்சிகளுக்குப் பின்னணியிலுள்ள ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய கண்டம் முழுக்கவே மேற்கிலிருந்து கிழக்கு வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதத்தில் பெரிய வேறுபாடு உள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டெர் லேயன், கட்டாய தடுப்பூசிகள் பற்றி சிந்திக்கவேண்டிய நேரம் இது என்று கூறினார். இருப்பினும், தனிப்பட்ட அரசுகள் அதுபற்றி முடிவு செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"எங்களிடம் உயிர் காக்கும் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், அவை எல்லா இடங்களிலும் போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.

எதிர்ப்பு: பிற வழிகள் இருக்கின்றன

கட்டாய தடுப்பூசிக்கு ஆதரவாக வலுவான சுகாதார வாதம் இருந்தாலும்கூட, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுமட்டுமே ஒரே வழி இல்லை.

தடுப்பூசி

பட மூலாதாரம்,MORSA IMAGES

"அரசியல்வாதிகள் கட்டாய தடுப்பூசி முடிவையே எடுக்க விரும்புகிறார்கள் என்பது கடந்த காலத்தை பார்த்தால் தெரிகிறது. அது பிரச்னைக்கு விரைவான பதிலைக் கொடுப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறார்கள்," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி குழுவின் சமூக அறிவியல் ஆய்வாளரான சமந்தா வாண்டஸ்லாட்.

"மக்கள் உண்மையில் தடுப்பூசிகளை அணுகுவதை உறுதிசெய்யத் தேவைப்படும் பிற விஷயங்களை அரசு புறக்கணிப்பதை நான் விரும்பவில்லை."

பிப்ரவரி வரை ஆஸ்திரியா தடுப்பூசிகளை கட்டாயமாக்காது, இன்னும் வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது. "பயப்படுபவர்களுக்கு, நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, ஆபத்து குறைவாக இருப்பவர்களுக்கு - அவர்களுடைய கேள்விகள் மற்றும் கவலைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்" என்று பல்கலைக்கழகத்தின் சுகாதார உளவியலாளர் பார்பரா ஜூன். தேசிய ஒளிபரப்பாளர் ஓஆர்எஃபிடம் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில், 24 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள். ஐரோப்பிய சராசரியைவிட பாதிக்கும் குறைவானவர்கள். ஆனால், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 7 விழுக்காடு சராசரியை விட அதிகம். தடுப்பூசிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், அதைப் போட்டுக்கொள்பவர்கள் குறைவாக இருப்பதற்கு தவறான தகவல் பரவுவது காரணமாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அரசு சில சூழ்நிலைகளில் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குகிறது. ஆனால், ஓமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகமாகியுள்ளது. இதை அரசுகள் மட்டுமே செய்வதில்லை.

ஆதரவு: ஊரடங்கு சுழற்சி முடிவுக்கு வரவேண்டும்

கட்டாய தடுப்பூசி என்பது மட்டுமே ஒரே கட்டுப்பாடு அல்ல. பெரும்பாலான அரசுகள் கோவிட் பாஸ் முதல் பயணத் தடை வரை சில வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உயிர்கள் காப்பாற்றப்படுவது மட்டுமின்றி, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்கு முடிவு வரும்.

"உங்கள் சுதந்திரம் கிடைப்பது மட்டுமின்றி, பொருளாதார சேதங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவருவது பற்றியது," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் உய்ஹிரோ மையத்தின் ஆல்பர்ட்டோ கியூபிலினி. கொரோனா நச்சுயிரியால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குச் சாதகமான கட்டுப்பாடுகளாஇ இவர் ஆதரிக்கிறார்.

தடுப்பூசி

பட மூலாதாரம்,ANDRIY ONUFRIYENKO/GETTY IMAGAES

"கையில் வேறொரு வழி இருக்கும்போது, மக்கள் மீது ஊரடங்கு உட்பட பெரிய சுமைகளைச் சுமத்த வேண்டியதில்லை."

எதிர்ப்பு: கட்சிகள் அரசியல் வாய்ப்பாகப் பார்க்கின்றன

இந்தத் திட்டத்தின் வெற்றி எதிர்கால பிரசாரங்களில் அவநம்பிக்கையை உருவாக்கமுடியுமா என்பது போன்ற நீண்டகால விளைவுகள் குறித்த கவலைகள் உள்ளன.

"நெருக்கடியின்போது கொண்டுவரப்படும் கட்டாயத் திட்டங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தொற்றுநோய் மீட்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோயியல் நிபுணர் Dr.டிக்கி புடிமேன் அல்-ஜசீராவிடம் கூறினார்.

"மக்களிடையே சதிக் கோட்பாடுகள், தவறான நம்பிக்கைகள், தவறான புரிதல்கள் இருக்கையில், [இத்தகைய திட்டங்கள்] அவர்களுடைய கருத்துகளைத்தான் வலுப்படுத்தும்."

அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டும் வாண்டெஸ்லாட், "குறிப்பாக, ஐரோப்பாவில் கட்சிகள் தடுப்பூசி எதிர்ப்பைத் தட்டிக் கொடுப்பதையும் வாக்குகளைப் பெற இது ஒரு வழியாக இருக்குமென்று கருதுவதையும் நாங்கள் கண்டிக்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

"பல கட்சிகள், வலதுசாரி என்று சொல்லிக்கொண்டு, அரசியல் பிரசாரத்தில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு, கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளை நீக்க விரும்புவதாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதுதான் அச்சமாக இருக்கிறது. அது நடந்துவிட்டால், இதை ஒரு கொள்கை நடவடிக்கையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு எங்கள் கையில் இருக்காது." என்கிறார்.

https://www.bbc.com/tamil/science-59540429

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.