Jump to content

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?

Recommended Posts

5 hours ago, Nathamuni said:

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

இவ்வளவு சொல்லிட்டியள், எங்களுக்கு நெருக்கமானவையை விட்டிட்டியளே?

தமிழீழம் உருவாக்கினார் தேசிய …

அவர் மகன் …., 

நாதம், தொடருங்கள் … யாழ் களம் காத்திருக்கிறது!

Link to comment
Share on other sites

 • Replies 105
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அக்னியஷ்த்ரா

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

ரஞ்சித்

எம்மை அழிக்க எம் ஐ - 17 ரக உலங்கு வானூர்திகளை வழங்கியது இந்தியா. இன்று அதே உலங்கு வானூர்தியில் தனது தளபதியை இழந்திருக்கிறது. தமிழர்கள் நிச்சயமாக மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம் இது. எம்மை அழிக்கத் து

tulpen

நாத முனி, இது எல்லாம் கர்மா என்றால் ஈழப்போரில் இறந்தவர்களும் முள்ளிவாய்காலில் பலியானவர்களுக்கும் அவர்களது கர்மாதான் காரணம் என்று கூறுவீர்கள் போலிருக்கிறது.   கர்மாவும் இல்லை ஒரு மண்ணும்இல்லை.  இத

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

கர்மா.... சும்மா இல்லை....

யாரு இவரு? சர்மாவின் தம்பியா?😝

யாழ் களத்தில் எதுவித அடிப்படை உண்மையும் இல்லாதவற்றை விதைக்கக்கூடாது என்று ரூல்ஸ் இருக்கு நாதம்ஸ்.  

சதியோ, விதியோ பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமடைந்தது நமக்கு கவலையான விடயம் இல்லை.

—-

கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு- ஹெலிகாப்டர் விபத்து சதியா? விசாரணை தீவிரம்

spacer.png

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படைத் தளபதி உள்பட 14 பேர் பயணித்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதனை குன்னூர் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் இருந்தது.

மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது வானில் கடுமையான மேகமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. பனி மூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் ஹெலிகாப்டர் தொடர்ந்து பயணித்தது. ஆனால் மேட்டுப்பாளையத்தை கடந்தபோதே ஹெலிகாப்டர் தள்ளாடியபடியே சென்று உள்ளது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சென்ற போதும் பனிமூட்டமாகவே காணப்பட்டது. அப்போது திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் விமானத்தின் ஒரு இறக்கை மோதியது. இதேபோல் ஹெலிகாப்டரின் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதியது.

தொடர்ந்து மற்றொரு மரத்தில் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மீட்க ஓடி வந்துள்ளனர். ஆனால் ஹெலிகாப்டர் டமார், டமார் என சத்தம் வந்ததால் வெடி பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அதன் அருகே செல்ல பயந்து உடனடியாக தீயணைப்புதுறை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர்.

முப்படை தளபதி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உடனடியாக விமானப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த காட்டேரி பகுதிக்கு விரைந்தனர். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? பனி மூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஹெலிகாப்டரில் ஏதாவது கோளாறு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடமும் உள்ளூர் போலீசார் உதவியுடன் விமானப்படையினர் விசாரித்தனர்.

விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஆகும். ஏனென்றால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் பாதுகாப்பானது என்பதால் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் தாங்கள் செல்வதற்கு இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

பொதுவாகவே இந்த ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி புறப்பட்ட இந்த எம்.ஐ.17 வி.5 ரக ஹெலிகாப்டரும் பரிசோதிக்கப்பட்டது.

spacer.png

அதன்பின்னரே முப்படை தளபதி உள்பட 14 பேர் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். பலமுறை பரிசோதிக்கப்பட்டும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.

பொதுவாகவே ராணுவ உயர் அதிகாரிகள் பயணிக்கும் போதும், அவர்கள் செல்லக்கூடிய விமானம், ஹெலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். விபத்தில் சிக்கிய இந்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி எல்லாம் விபத்துக்குள்ளானது கிடையாது.

அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. மேலும் பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது தெரியவில்லை.

உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக சில வேலைகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே ஹெலிகாப்டரில் என்ன நடந்தது என தெரிய வேண்டும் என்றால் அதில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே தெரியவரும். அதனால் அந்த கருப்பு பெட்டியை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.இதன் காரணமாக கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை கொண்டு விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.(15)

http://www.samakalam.com/கருப்பு-பெட்டி-கண்டுபிடி/

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாரு இவரு? சர்மாவின் தம்பியா?😝

யாழ் களத்தில் எதுவித அடிப்படை உண்மையும் இல்லாதவற்றை விதைக்கக்கூடாது என்று ரூல்ஸ் இருக்கு நாதம்ஸ்.  

சதியோ, விதியோ பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமடைந்தது நமக்கு கவலையான விடயம் இல்லை.

—-

காலம்காத்தால உங்களுக்கு என்ன நடந்தது? 😆

உங்கள் நிலைப்பாட்டில் இது தலைவிதி அல்ல, விபத்து.

பிறகு ஏன்....

எனக்கு ரூல்ஸ் பற்றி சொல்லி விட்டு, விசாரணையில் இருக்கும் ஒரு அடிப்படை உண்மையே தெரியாத ஊக விசயத்தை இணைக்கிறீர்கள். 🙄

7 hours ago, கற்பகதரு said:

இவ்வளவு சொல்லிட்டியள், எங்களுக்கு நெருக்கமானவையை விட்டிட்டியளே?

தமிழீழம் உருவாக்கினார் தேசிய …

அவர் மகன் …., 

நாதம், தொடருங்கள் … யாழ் களம் காத்திருக்கிறது!

மேலே வாசிக்கவில்லை போல.....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

இந்திய கண்டுபிடிப்பு கர்மா எமது ஆட்களும் வெளிநாடுகளுக்கு வந்த பின்பும் காவி கொண்டு திரிகிறார்கள்.

கர்மா என்ற சமஸ்கிருத சொல்லு பலருக்கு பிடிக்கவில்லை போல....

தலையெழுத்து, தலைவிதி.... ஊழ்வினை, முன்பிறப்பு கொடுப்பனை, எல்லாம் ஊழ், கொடுத்து வைத்தவன்(ள்), எல்லாம் கொண்டு வந்தது...... பலி, சாபக்கேடு.....விட்ட கண்ணீர்... சும்மா விடுமா?, வயிறு எரிந்து திட்டினாள்(ன்)….. என்று தமிழில் பல சொற்கள் கொண்டு சொல்வோம்.

நான், நீங்கள் வெளிநாடு வந்தது.... தலையெழுத்து......

மகிந்தா, கோத்தாவுக்கு ஏது நடந்தால்.... (இயற்கையாக)...... தமிழர்கள் கர்மா என்று சொல்ல மாட்டார்கள்..... மேலுல்ல சொற்களில் எதையாவது தான் சொல்வார்கள்.

நமது பகுத்தறிவு நம்பிக்கை வேறு,  சில தொன்று தொட்ட பழக்கக்கள், வழக்கங்கள் வேறு.

****

எனது நண்பரின் அண்ணன்...... வவுணியாவில் இருந்து கொழும்பு லொறியில் சரக்குடன் போனார்.... கட்டுநாயக்கா அண்மையில் லொறி மக்கர் பண்ண.... இறங்கி நிண்டு இருக்கிறார்.....

பின்னால் வந்த காரில் இருந்த ஏஜன்சிகாரர் இவரைக் கண்டு இறங்கி வந்து விசாரித்து.... காதில் குசுகுசுத்தார்.

அப்படியே கிளினரிடம் லொறியை பார்க்கச் சொல்லிவிட்டு...... விமானம் ஏறியவர்..... அடுத்த நாள் ஜெர்மனியில்.....

மூன்றாம் மாதம்....... மாரடைப்பு..... பெட்டியில் மீள வந்தார்.....

இது விபத்தா...... ?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

13 hours ago, Kapithan said:

அதாவது, 

உங்களால் முடியாது என்று சொன்னால் அதற்குப் பெயர் கர்மா..☹️

முயற்சிகள் செய்யாமல் சும்மா  இருந்த பின்னர் பழியை கர்மாவின் மேல் போடலாம் கண்டியளோ..

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டியதாகிவிட்டத. என்ர தலையெழுத்து பாருங்கோ..🤪

முயற்சியே செய்யாமல் விதி or கர்மா மேல் பழியைப்போடுவது சோம்பேறித்தனம். எவ்வளவு முயற்சிசெய்தும்  நமக்கு கிடைக்காமல் எந்தவொரு முயற்சியும் செய்யாத ஒருவருக்கு அது கிடைக்கும்போது அது கர்மா or விதியாகிறது!!

 • Like 1
Link to comment
Share on other sites

கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி இந்த வருடம் இந்திய தளபதி ஹெலிக்கொப்டர் விபத்துக்களில் பலி – பிரபல ஆய்வாளர் தெரிவிப்பது என்ன?

இந்திய முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் ஒப்பிட்டு டுவிட்டரில் கருத்துக்கள்வெளியாகின்றன.
rawat-taiwan-300x175.jpeg
லடாக்கில் காணப்படும் நிலை காரணமாக இந்த ஹெலிக்கொப்டர் விபத்தி;ன் பின்னணியில் சீனா இருக்கலாம் என தெரிவித்துள்ள டுவிட்டர் பயனாளர்கள் தாய்வானில் கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி சென் யி மிங்கும் பல முக்கிய இராணுவதளபதிகளும் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் தாய்பேயிற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
சென் தாய்வான் இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரி என்பதும் விமானப்படையின் முக்கிய அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தயாரிப்பான யுஎச் 60 எம் பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டரே விபத்துக்குள்ளானது.
accc757460cedb093d8f9dafb7c16faa-300x171
இந்திய முப்படை தளபதியும் தாய்வானின் முப்படைகளின் பிரதானியும் ஹெலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்டமையை ஒப்பிட்டு புவிமூலோபாய நிபுணர் பிரம்ம செல்லானே கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
ஜெனரல் ராவத்தின் மரணத்திற்கும் 2020 இல் தாய்வானின் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சென் யி மிங் உட்பட பலமுக்கிய அதிகாரிகள் ஹெலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்டமைக்கும் இடையில் அச்சமூட்டுகின்ற சமாந்திரம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு ஹெலிக்கொப்டர் விபத்தும் சீனா இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கியமானவராக காணப்பட்டவரை அகற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த இரு விபத்துக்களிற்கும் இடையில் தொடர்பில்லை,ஆச்சரியமான சமாந்திரம் காணப்பட்டாலும் இந்த இரு விபத்துகளிற்கும் இடையில் தொடர்பில்லை,மேலும் வெளிச்சக்தி தொடர்புபட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
202112081419306309_Tamil_News_Tamil-News
இந்த இரு விபத்துக்களும் ஹெலிக்கொப்டர் பராமரிப்பு குறித்த முக்கியமான கேள்விகளையே எழுப்பியுள்ளன குறிப்பாக முக்கிய அதிகாரிகளின் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் ஹெலிக்கொப்டர்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளனஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த டுவிட்டர் பதிவினை கருத்தில் எடுத்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் இது இந்தியாவும் ரஸ்யாவும் எஸ் – 400 ஏவுகணை விடயத்தில் நெருங்கிவருவதால் – அமெரிக்கா அதனை கடுமையாக எதிர்த்ததால் இந்த விபத்தில் அமெரிக்க இருக்கலாம் என சந்தேகிப்பதை போல உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Eppothum Thamizhan said:

முயற்சியே செய்யாமல் விதி or கர்மா மேல் பழியைப்போடுவது சோம்பேறித்தனம். எவ்வளவு முயற்சிசெய்தும்  நமக்கு கிடைக்காமல் எந்தவொரு முயற்சியும் செய்யாத ஒருவருக்கு அது கிடைக்கும்போது அது கர்மா or விதியாகிறது!!

🤣🙏😂

சும்மா குந்திக்கொண்டிருக்கலாம் என்கிறீர்கள். 🤦🏼‍♂️

ஊரில் இருந்துகொண்டு இப்படிக் கதைத்தால்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மேற்கு நாடுகளுக்கு வந்த பின்னரும் இப்படிக் கூறுவோரை என்ன செய்வது..? 

ஊரில் இருந்து நன்மைகள் எதனையும் காவி வந்தீர்களோ இல்லையோ இந்த் சாதி, சமயம், பிரதேசம், கர்மா, தலையெழுத்து போன்ற துருப்பிடித்த துக்கடாக்களையெல்லாம் கொண்டுவந்து தலையில் வைத்தி ஆடுவீர்கள்..

அடங் கொய்யால.....😂

3 hours ago, Nathamuni said:

எனது நண்பரின் அண்ணன்...... வவுணியாவில் இருந்து கொழும்பு லொறியில் சரக்குடன் போனார்.... கட்டுநாயக்கா அண்மையில் லொறி மக்கர் பண்ண.... இறங்கி நிண்டு இருக்கிறார்.....

பின்னால் வந்த காரில் இருந்த ஏஜன்சிகாரர் இவரைக் கண்டு இறங்கி வந்து விசாரித்து.... காதில் குசுகுசுத்தார்.

அப்படியே கிளினரிடம் லொறியை பார்க்கச் சொல்லிவிட்டு...... விமானம் ஏறியவர்..... அடுத்த நாள் ஜெர்மனியில்.....

மூன்றாம் மாதம்....... மாரடைப்பு..... பெட்டியில் மீள வந்தார்.....

இது விபத்தா...... ?

இது மரணம். 

இதில் உங்களுக்கு சந்தேகமா..?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

இவ்வளவு சொல்லிட்டியள், எங்களுக்கு நெருக்கமானவையை விட்டிட்டியளே?

தமிழீழம் உருவாக்கினார் தேசிய …

அவர் மகன் …., 

நாதம், தொடருங்கள் … யாழ் களம் காத்திருக்கிறது!

3 hours ago, Nathamuni said:

மேலே வாசிக்கவில்லை போல.....

3 hours ago, Nathamuni said:

பலி, சாபக்கேடு.....விட்ட கண்ணீர்... சும்மா விடுமா?, வயிறு எரிந்து திட்டினாள்(ன்)….. என்று தமிழில் பல சொற்கள் கொண்டு சொல்வோம்.

18 hours ago, Nathamuni said:

போராட்டத்தை தேர்த்தெடுத்த, தலைவருக்கு, வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளைகளுக்கும்..... அப்படி ஒரு முடிவு.... கர்மா.....

ஊசி போட்ட வலியே இல்லை 🤣🍌💉

Edited by goshan_che
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

முயற்சியே செய்யாமல் விதி or கர்மா மேல் பழியைப்போடுவது சோம்பேறித்தனம். எவ்வளவு முயற்சிசெய்தும்  நமக்கு கிடைக்காமல் எந்தவொரு முயற்சியும் செய்யாத ஒருவருக்கு அது கிடைக்கும்போது அது கர்மா or விதியாகிறது!!

இது கர்மா இல்லை எப்போ. இது அதிஸ்டம். லக். Luck is a random occurrence.
லக்கிற்கு ஒரு reasoning உம் தேவையில்லை. அது தற்செயலாக நடக்கும் நற்செயல்.

கர்மா அப்படி அல்ல அது பின்னால் எமது முந்திய செயல்கள் reasoning ஆக இருப்பதாக சொல்லபடுகிறது.

Link to comment
Share on other sites

55 minutes ago, Kapithan said:

🤣🙏😂

சும்மா குந்திக்கொண்டிருக்கலாம் என்கிறீர்கள். 🤦🏼‍♂️

தமிழில்தான் எழுதியிருக்கிறேன் வடிவாக வாசியுங்கள்! சும்மாயிருக்க சொல்லவில்லையே!!

ஊரில் இருந்து நன்மைகள் எதனையும் காவி வந்தீர்களோ இல்லையோ இந்த் சாதி, சமயம், பிரதேசம், கர்மா, தலையெழுத்து போன்ற துருப்பிடித்த துக்கடாக்களையெல்லாம் கொண்டுவந்து தலையில் வைத்தி ஆடுவீர்கள்..

சமயம், கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாம் உங்களுக்கு துருப்பிடித்த தூக்கடாவாகத்தான் இருக்கும். ஏனென்றால் உங்கள் டிசைன் அப்படி!

அடங் கொய்யால.....😂

இது மரணம். 

இதில் உங்களுக்கு சந்தேகமா..?

ஒருவர் இறந்தால் அது மரணம்தான். நல்ல கடுபிடிப்பு!👏

இது தற்செயலான விபத்தா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்றுதான் அவர்களே விசாரிக்கிறார்கள். உங்களுக்கு ஏன் எரியுது!!

👆

49 minutes ago, goshan_che said:

இது கர்மா இல்லை எப்போ. இது அதிஸ்டம். லக். Luck is a random occurrence.
லக்கிற்கு ஒரு reasoning உம் தேவையில்லை. அது தற்செயலாக நடக்கும் நற்செயல்.

இதைத்தான் விதியென்பது! கர்மா என்ற சொல்லை நாங்கள் பாவிப்பதேயில்லை!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

விசாரணையில் இருக்கும் ஒரு அடிப்படை உண்மையே தெரியாத ஊக விசயத்தை இணைக்கிறீர்கள்.

அந்த ஊக விசயம் எது?

விசாரணை என்று வந்தால் பல கோணங்களிலும் விசாரிப்பார்கள். செய்தி அவை பற்றிச் சொல்லும், ஆனால் கர்மாதான் காரணம் என்று அறுதியாகச் சொல்லாது😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் விதியென்பது! கர்மா என்ற சொல்லை நாங்கள் பாவிப்பதேயில்லை!!

ஆனால் விதி - என்பதை நாம் விளங்கி கொள்ளும் விதம் வேறுபடுகிறது எப்போ.

1. விதி என்பது ஒரு random நிகழ்வு. அதற்கு பின்னால் காரணிகள், விளக்கம் ஏதும் இல்லை. ஒரு காரில் ஓடி கொண்டு போகும் போது குறுக்கே விழும் மரம் எப்போ விழுகிறது, அது விழும்போது உங்கள் கார் எங்கே நிக்கிறது என்பதை போன்ற random நிகழ்வுகளின் சேர்க்கை.

இந்த விதி முன்பே தீர்மானிக்க பட்டதல்ல (not pre determined).

இதுதான் உங்கள் விதி பற்றிய விளக்கம் என்றால் - அதில் முரண்பட எனக்கு ஒன்றும் இல்லை. It’s another way of describing good/bad luck.

2. ஆனால் நம்மில் பலர் விதியை ஒரு முன்கூட்டியே தீர்மானிக்க பட்ட நிகழ்வுகளின் ஒழுங்காகவே கருதுகிறோம். “தலைவிதி”, “எழுதியதே நடக்கும்” என்பது இப்படி விளங்கி கொள்வதால்தான்.

இது random அல்ல. ஏன் இப்படி எழுத பட்டது? என்ற கேள்விக்கு ஒரு காரணம் இருக்கும் (ஊழ்வினை). 

ஆகவே விதியை இப்படி விளங்கி கொள்வது - is another way of describing karma.

Edited by goshan_che
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி - யூரூப்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

அந்த ஊக விசயம் எது?

விசாரணை என்று வந்தால் பல கோணங்களிலும் விசாரிப்பார்கள். செய்தி அவை பற்றிச் சொல்லும், ஆனால் கர்மாதான் காரணம் என்று அறுதியாகச் சொல்லாது😜

அது சகலருக்கும் புரியுமே.....

தலையெழுத்து என்று யாரும் அங்கே சொல்லப்போவதும் இல்லை.

இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டதால்.... நாம்..... நான் மேலே சொன்ன தமிழ் சொற்களை பாவிக்கிறோம்.

ஈரானிய படைத்தலைவர் ஒருவர் அமெரிக்க டோர்ன் தாக்குதலில் ஈராக்கில் கொல்லப்பட்டார்....

யாரும்... இங்கே.... கர்மா, தலைவிதி என்று சொல்லவில்லையே.... காரணம் எமக்கும், அவருக்கும் சம்பந்தமே இல்லை....

ஆக... இந்த சொற்பாவணைகள்..... பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வருவது எதிர்பார்க்கக் கூடியது தானே..

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

19 hours ago, goshan_che said:

நான் ஒரு முறை பள்ளி போகும் போது 8 உடல்களை கண்டேன்😔.

ஆனால் இங்கே பதிவாளர் சொல்லவருவது “அதே இந்திய இராணுவத்தின் இன்றைய தளபதி” என்பதே என நான் நினைக்கிறேன்.

குறித்த அந்த செயலில் ஈடுபட்ட தளபதி இவர் என சொல்வதாக நான் நினைக்கவில்லை.

கோஷன் இந்த பதிவாளர் செய்ய விரும்பியது என்ன என்பது தெளிவானது. ஒரு வதந்திக்கான விதையை மெதுவாக ஊன்றியுள்ளார்.

தமிழ் தேசிய அரசியலை நன்கறிந்த அவருக்கு தெரியும் தான் ஊன்றிய சிறிய விதை பல பொய்யர்களால்  மேலும் உருமாற்றம் செய்யப்பட்டு   பரப்பப்பட்டு பெரிய மரமாக ஆக்கப்படும் என்பது. 

 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட இந்திய ராணுவத்தின் உயரதிகாரி காஷ்மீரிலும், நாகலாந்திலும் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 

காஷ்மீரில் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதியான ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளில் அதிதீவிரமாகப் பங்காற்றியவர். இவரது மரணச் செய்திகளில் பின்னூட்டங்களை இட்டுவரும் காஷ்மீரி முஸ்லீம்களின் கதைகளைக் கேட்கும்போது இவர் அம்மக்கள் மீது நடந்துகொண்டவிதம் தெளிவாகிறது.

அதேபோல மத்திய இந்தியாவில், இந்திய - சர்வதேச கம்பெனிகளின் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடிவரும் நக்ஸலைட்டுக்கள் மற்றும் மார்க்ஸிஸ்ட் போராளிகளுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளை இவர் எடுத்திருக்கிறார். கிளர்ச்சியாளர்களைக் கொல்கிறோம் என்கிற போர்வையில் பல அப்பாவிகளை இவர் தலைமை தாங்கிய ராணுவப் பிரிவு கொன்றிருக்கிறது. நாகலாந்தில் இந்திய ராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்களை நடத்திவந்த கெரில்லாக்களின் தளங்கள் அமைந்திருந்த பர்மிய காட்டுப்பகுதிக்குள் தனது கொமாண்டோக்களை அனுப்பி தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்.

1987 இல் இந்திய ராணுவம் ஈழத்தில் ஆடிய நரவேட்டையினை நான் நேரடியாக அனுபவித்தவன். எனது அயல் வீட்டாரில் 7 பேர் புகையிலைக் குடிலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டதை நேரில் கண்டவன். தப்பி ஓடிய தெருக்களின் புதர்களுக்குள் அலங்கோலமாகக் கிடந்த பெண்களின் உடல்களை என்ன நடந்ததென்றே தெரியாமல் பார்த்துக்கொண்டு ஓடியவன்.  எம்மை பலாலி வீதியால் கோண்டாவில் நோக்கி நடக்கச் சொல்லிவிட்டு எம் பின்னால் தமது ராணுவத்தாங்கியை ஓட்டிவந்த வீரர்கள் அவர்கள். புலிகளின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அப்பாவிகளை கேடயங்களாகப்  பாவித்த வீரர்கள்.

கொல்லப்பட்ட இந்த அதிகாரி ஈழத்திற்குச் செல்லவில்லையென்பதனால் மட்டும் இவர் பரிசுத்தர் ஆகிவிடப்போவதில்லை. இவருக்கு ஈழத்திற்கு வரச் சந்தர்ப்பம் 1987 இல் கிடைத்திருந்தால் நிச்சயம் இவரும் கொலைகளில் ஈடுபட்டுத்தான் இருப்பார், இதனை யாராலும் மறுக்கமுடியாது.

ஈழத்தமிழரை இவர் தனிப்பட்ட ரீதியில் கொல்லவில்லையென்பதனால் மட்டுமே இவர் நல்லவர் ஆகிவிடப்போவதில்லை.

பலவீனமான மக்கள் கூட்டங்களை தனது ஆயுத பலத்தினால் மிரட்டி, ஆக்கிரமித்து, கொலைகளில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தின் எந்த அதிகாரியும் கொலைகாரனே. இவர் மட்டும் விதிவிலக்கா என்ன? 

எம்மில் பல்லாயிரக்கணக்கானோரின் கொலைகளுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒரு நாட்டு ராணுவத்தின் பிரதானியொருவருக்கு நாம் வெள்ளையடிக்கவேண்டிய தேவையென்ன? 

கொல்லப்பட்ட இந்திய தளபதிக்கும், இலங்கை ராணுவத்தின் தளபதியொருவருக்குமிடையில் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? அப்படியில்லையென்றால், இந்த வெள்ளையடித்தல் ஏன் நடைபெறுகிறது?
 
 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

எனது நண்பரின் அண்ணன்...... வவுணியாவில் இருந்து கொழும்பு லொறியில் சரக்குடன் போனார்.... கட்டுநாயக்கா அண்மையில் லொறி மக்கர் பண்ண.... இறங்கி நிண்டு இருக்கிறார்.....

பின்னால் வந்த காரில் இருந்த ஏஜன்சிகாரர் இவரைக் கண்டு இறங்கி வந்து விசாரித்து.... காதில் குசுகுசுத்தார்.

அப்படியே கிளினரிடம் லொறியை பார்க்கச் சொல்லிவிட்டு...... விமானம் ஏறியவர்..... அடுத்த நாள் ஜெர்மனியில்.....

மூன்றாம் மாதம்....... மாரடைப்பு..... பெட்டியில் மீள வந்தார்.....

இது விபத்தா...... ?

இது விபத்து இல்லை மாரடைப்பு   ஹார்ட் அற்ராக்கால் இறந்துள்ளார். இலங்கையிலும் பலர் மாரடைப்பால் இறக்கின்றனர் தானே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இது விபத்து இல்லை மாரடைப்பு   ஹார்ட் அற்ராக்கால் இறந்துள்ளார். இலங்கையிலும் பலர் மாரடைப்பால் இறக்கின்றனர் தானே

உங்களுக்கு விளங்கவைக்க.... எனக்கு கொடுப்பினை இல்லை போல கிடக்குது....😁

காசை , ஏஜன்சிகாரனிடம் கொடுத்து..... அங்கை போய்....குடும்பத்தை நினைத்து மாரடைப்பால் சாகிறத்துக்கு..... லொறிலயே செத்திருக்கலாமே.....🤦‍♂️

Edited by Nathamuni
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

சோழனும் பாண்டியனும் செய்த கொடுமைக்கான பலனைதான் இப்போ இலங்கையில் நீங்கள் அனுபவிக்கிறீகள் என எம்மை நம்ப வைத்து விட்டால் - நாம் நம்மை கொடுமை படுத்துபவர்களை விட்டு விட்டு, “விதியே” என ஒதுங்கி விடுவோம் அல்லவா?

இடம் - வலம்
விதி - மதி

அதே போல்

விதியை மதியால் வெல்ல வேண்டும்.

இன்று விதியை மதியால் வெல்பவர்கள் மகிந்தவும் அவர் தொடர்சர்களும் மட்டுமே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

கொல்லப்பட்ட இந்திய தளபதிக்கும், இலங்கை ராணுவத்தின் தளபதியொருவருக்குமிடையில் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? அப்படியில்லையென்றால், இந்த வெள்ளையடித்தல் ஏன் நடைபெறுகிறது?

ஒரு வித்தியாசமுமில்லை இல்லை ரஞ்சித்.

இவர் அப்போ சீனா எல்லையில் நிக்காமல் இலங்கை வந்திருந்தால் இவரின் படைகளும் நரவேட்டை ஆடியே இருக்கும்.

ஆனால் வரலாறு முக்கியம். இவர் இலங்கை வராமல் - வந்தார் என நாம் சொன்னால் - நாம் சொல்லும் உண்மையும் பொய்யாகி விடும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

இடம் - வலம்
விதி - மதி

அதே போல்

விதியை மதியால் வெல்ல வேண்டும்.

இன்று விதியை மதியால் வெல்பவர்கள் மகிந்தவும் அவர் தொடர்சர்களும் மட்டுமே.

எனது பார்வையை சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் proactive (வரு முன் காத்தல்), reactive (வந்த பின் காத்தால்) என சொல்வார்கள்.

ஒரு விடயத்தை எதிர்வுகூறி( forecast பண்ணி ) அதனை வெட்டி ஆடலாம் (proactive). அல்லது எதிர்வு கூற முடியாத விடயம் நடந்த பின் அதை தக்க படி வெட்டி ஆடலாம் (reactive).

இதைதான் எம் முன்னோர் விதியை மதியால் வெல்லுவது என்றார்கள். இதில் விதி என்பது நான் மேலே எப்போதும் தமிழனுக்கு கொடுத்த 1ம் அர்த்தத்தில் வருகிறது.

இல்லாமல், முன்பே தீர்மானிக்க பட்ட தலை எழுத்தை, தலைவிதியை, கர்மாவை (இவை உண்மை என்றால்) மதியால் வெல்ல முடியாது. அப்படி வெல்ல முடிந்தால் அது தலை எழுத்தே இல்லை.

சுருக்கமாக

Bad/good luck ஆல் நடக்கும் random நிகழ்வுகளை ஓரளவுக்கு மதியால் வெல்லலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். ஆனால் Karma (அது உண்மை என்றால்) வை மதியால் வெல்ல முடியாது. அப்படி முடியும் என்றால் அது கர்மாவே இல்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இங்கே வருமுன் காத்தல் வந்த பின் காத்தல் கர்மா விதி பற்றி நன்றாகவே சொல்லப்படுகின்றது. 🤣

இங்கே வருமுன் காத்தல் வந்த பின் காத்தல் கர்மா விதி மதி பற்றி நன்றாகவே சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

முன்பே தீர்மானிக்க பட்ட தலை எழுத்தை, தலைவிதியை, கர்மாவை (இவை உண்மை என்றால்) மதியால் வெல்ல முடியாது. அப்படி வெல்ல முடிந்தால் அது தலை எழுத்தே இல்லை.

சுருக்கமாக

Bad/good luck ஆல் நடக்கும் random நிகழ்வுகளை ஓரளவுக்கு மதியால் வெல்லலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். ஆனால் Karma (அது உண்மை என்றால்) வை மதியால் வெல்ல முடியாது. அப்படி முடியும் என்றால் அது கர்மாவே இல்லை.

💯உண்மை.
கர்மா தலைவிதி என்பதே  ஏமாற்று. மதியால் அவற்றை வெல்ல முடியும் என்கின்ற போதே தெரிகிறதே அப்படி  ஓன்றுமே இல்லை என்பது.

23 minutes ago, goshan_che said:

முன்பே தீர்மானிக்க பட்ட தலை எழுத்தை, தலைவிதியை, கர்மாவை (இவை உண்மை என்றால்) மதியால் வெல்ல முடியாது. அப்படி வெல்ல முடிந்தால் அது தலை எழுத்தே இல்லை.

கர்மா தலைவிதி இப்படி தான் நடக்கும் என்று தான் எழுதி வைத்தாகிவிட்டதே பின்பு எதற்காக  கோவிலுக்கு சென்று சாமிக்கு இலஞ்சம் கொடுத்து உருகி உருகி வணங்குகிறார்கள்?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் தமது உரிமைக்காக சகல வழிகளாலும் போராடி விட்டார்கள்.
இனி எப்படி?

ஏன் நிறைவேறவில்லை?

தந்தை செல்வா தொடக்கம் தலைவர் பிரபாகரன் ஈறாக சுமந்திரன் வரைக்கும் என்ன நடந்துகொண்டிருக்கின்றது?

விதியா தலைவிதியா கர்மாவா விதியில்லையா விவேகமில்லையா இல்லையேல் சதியா?

அல்லது கொடுப்பினை இல்லையா? 

Link to comment
Share on other sites

39 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள் தமது உரிமைக்காக சகல வழிகளாலும் போராடி விட்டார்கள்.
இனி எப்படி?

ஏன் நிறைவேறவில்லை?

தந்தை செல்வா தொடக்கம் தலைவர் பிரபாகரன் ஈறாக சுமந்திரன் வரைக்கும் என்ன நடந்துகொண்டிருக்கின்றது?

விதியா தலைவிதியா கர்மாவா விதியில்லையா விவேகமில்லையா இல்லையேல் சதியா?

அல்லது கொடுப்பினை இல்லையா? 

எல்லாம் மாயை. சும்மா இருப்பதே சுகம் 🤗

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.