Jump to content

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்

202112080747172037_Tamil_News_Death-Pod-சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரத்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அந்த எந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசே ஒப்புதல் வழங்கியுள்ளதுதான்.

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த எந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த எந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம். அடுத்தாண்டு முதல் இந்த எந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.https://www.kuriyeedu.com/?p=376429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nochchi said:

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்

மிசின் நல்லதெண்டால் நானும் ஒண்டு வாங்குவம் எண்டு யோசிக்கிறன்.... இப்ப இல்லை கொஞ்ச வருசம் போக....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அளித்த உயிரை இயற்கையே உங்களுக்கான காலம் வரும் போது.. மீளப் பெற்றுக் கொள்ளும். இதில் எதற்கு வலிந்து செத்துத் தொலையுறீங்க.. ஒரு குறிக்கோளே இல்லாமல்.. அல்லது அடையாமல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இயற்கை அளித்த உயிரை இயற்கையே உங்களுக்கான காலம் வரும் போது.. மீளப் பெற்றுக் கொள்ளும். இதில் எதற்கு வலிந்து செத்துத் தொலையுறீங்க.. ஒரு குறிக்கோளே இல்லாமல்.. அல்லது அடையாமல். 

இயற்கை அளித்த உடலுக்கு வயதுகள் வர வர வலிகள் இல்லாமல் விட்டால் வலிந்து உயிரை மாய்க்க வேண்டிய அவசியமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மிசின் நல்லதெண்டால் நானும் ஒண்டு வாங்குவம் எண்டு யோசிக்கிறன்.... இப்ப இல்லை கொஞ்ச வருசம் போக....😂

நானும் பெரும்ஸ்சும் ஏலவே வெயிட்டிங் லிஸ்டில இருக்கிறம்🤣. அப்படித்தானே @பெருமாள்.

இங்கயும் அடிகடி private members bill எண்டு பாலிமெண்டில வரும் ஆனால் வெல்லாது.

துல்ப்ஸ் லக்கி @tulpen.

Link to comment
Share on other sites

263945344_3137253153176237_2909663694265

இந்த இயந்திரம் நோயாளிகளை அவர்கள் இறப்பதற்கு முன் ஆழ்ந்த கோமா நிலைக்குத் தள்ளும். "சர்க்கோ தற்கொலை பாட்" நைட்ரஜனால் நிரப்பப்படுவதன் மூலம் கோமாவிற்கு தள்ளுகிறது.

இதன் மூலமாக ஒட்சிசன் அளவை விரைவாகக் குறைத்து, ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் உள்ளே இருக்கும் நபரைக் கொல்லும். இது எந்த மருந்தும் இல்லாமல் ஒரு விரைவான மற்றும் அமைதியான மரணம் என்றும் கூறப்பப்பட்டுள்ளது.

கருணை கொலைக்கு உள்ளாகும் நபர் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியை உணரலாம் இந்த முறையின் மூலம் முப்பது வினாடிகளில் மரணம் ஏற்படும் என்றும், எந்த பீதியும் இல்லை, மூச்சுத் திணறலும் இல்லை என, இதனை உருவாக்கியுள்ள நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

இந்த இயந்திரம் உள்ளே இருந்தும் இயக்கும் விதமாக பொத்தான்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது,

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் சட்டப்பூர்வ மறு ஆய்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 3D பரிமாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருணைக்கொலை மெஷின் 2022-இல் சுவிட்சர்லந்து நாட்டில் செயல்பட தயாராக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நானும் பெரும்ஸ்சும் ஏலவே வெயிட்டிங் லிஸ்டில இருக்கிறம்🤣. அப்படித்தானே @பெருமாள்.

எனக்கு  முன்வரிசையில் நீங்கள் அதுக்கு முன் துல்பன் வழக்கம்போல் 30வருட போர் என்ன தந்தது தேவையற்ற இழப்பு என்று வழக்கம்போல் புலம்புகிறார் நீங்கள் இந்த நேசமணி 🤣பிழையான தகவலை தந்துவிட்டார் என்று கடுகடுத்து கொண்டு நிக்கிறியள் அன்றுதான் மூவரும் சந்திக்கிறேம்  நீண்ட வரிசை திடிரென அமைதி அமைதி என்று இயந்திர குரல் இயந்திரமனிதர்கள் எமது வரிசையை ஒழுங்கு படுத்துகிறார்கள் நாட்டின் நலன் கருதி தேவையற்ற முதியோர்கள் பூமியை விட்டு அகற்ற படுகிறீர்கள் அவரவர் பெயர்களின் வரிசையில் வரவும் என்றவுடன் பெருமாள் என்று நீண்ட திரையில் பெயர் உடன் எனது டிஜிட்டல் பாஸ்போட் சைஸ் படம் ஓடுகின்றது இயந்திரமனிதர்கள் விரைந்து வந்து என்னை அந்த மிஸினில் படுக்க வைக்கிறார்கள் ஆரம்பத்தில் சுகந்தமாக இருக்கின்றது  திடிர் என்று வலி தோன மிஷனை உடைத்துக்கொண்டு ஓடுகின்றேன் சத்தமுடன் .

படுக்கப்போற நேரம் science fiction books கலை  படிக்க வேண்டாம் என்று எத்தனை தரம் சொல்வது தூரத்தில் இருந்து கேட்ப்பது  போல் ஒரு உணர்வு டாங்க்  நிறைந்தது போல் உணர்வு வோஸ் ரூம் போயிட்டு எட்டி பார்க்கையில் யாழ் கடைசியாக பார்த்த பக்கம் அரையும்  குறையுமாக நீங்கள் @ போட்டபடி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

🤣சுடச் சுட ஒரு கோப்பி குடியுங்கோ எல்லாம் சரியாகிடும்.

Link to comment
Share on other sites

15 hours ago, goshan_che said:

நானும் பெரும்ஸ்சும் ஏலவே வெயிட்டிங் லிஸ்டில இருக்கிறம்🤣. அப்படித்தானே @பெருமாள்.

இங்கயும் அடிகடி private members bill எண்டு பாலிமெண்டில வரும் ஆனால் வெல்லாது.

துல்ப்ஸ் லக்கி @tulpen.

கோஷான், ஜாலியா அனுபவிக்க இந்த உலகில் எவ்வளோ பாக்கி இருக்கு. இப்ப என்ன அவசரம்? அவுஸ்ரேலிய விஞ்ஞானி David Goodall போல் 100 வயதுக்கு பிறகு அதைப் பற்றி யோசிப்போம்.😂

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

எனக்கு  முன்வரிசையில் நீங்கள் அதுக்கு முன் துல்பன் வழக்கம்போல் 30வருட போர் என்ன தந்தது தேவையற்ற இழப்பு என்று வழக்கம்போல் புலம்புகிறார் நீங்கள் இந்த நேசமணி 🤣பிழையான தகவலை தந்துவிட்டார் என்று கடுகடுத்து கொண்டு நிக்கிறியள் அன்றுதான் மூவரும் சந்திக்கிறேம்  நீண்ட வரிசை திடிரென அமைதி அமைதி என்று இயந்திர குரல் இயந்திரமனிதர்கள் எமது வரிசையை ஒழுங்கு படுத்துகிறார்கள் நாட்டின் நலன் கருதி தேவையற்ற முதியோர்கள் பூமியை விட்டு அகற்ற படுகிறீர்கள் அவரவர் பெயர்களின் வரிசையில் வரவும் என்றவுடன் பெருமாள் என்று நீண்ட திரையில் பெயர் உடன் எனது டிஜிட்டல் பாஸ்போட் சைஸ் படம் ஓடுகின்றது இயந்திரமனிதர்கள் விரைந்து வந்து என்னை அந்த மிஸினில் படுக்க வைக்கிறார்கள் ஆரம்பத்தில் சுகந்தமாக இருக்கின்றது  திடிர் என்று வலி தோன மிஷனை உடைத்துக்கொண்டு ஓடுகின்றேன் சத்தமுடன் .

படுக்கப்போற நேரம் science fiction books கலை  படிக்க வேண்டாம் என்று எத்தனை தரம் சொல்வது தூரத்தில் இருந்து கேட்ப்பது  போல் ஒரு உணர்வு டாங்க்  நிறைந்தது போல் உணர்வு வோஸ் ரூம் போயிட்டு எட்டி பார்க்கையில் யாழ் கடைசியாக பார்த்த பக்கம் அரையும்  குறையுமாக நீங்கள் @ போட்டபடி 

 உங்களுக்கு போர் தொடங்க திடீரென்று தப்பி ஓடிவந்த ஞாபகம் flashback dream form ல வந்துட்டுது போல.  யுத்தம் முடிந்ததால் யுத்த செய்தி  பாக்க முடியாமல் இப்ப boring  எண்டு இப்படி எல்லாம்   தாறுமாறா முடிவெடுக்காதேங்க. 30 வருட போர் எந்த நன்மையும் தரவில்லை என்று நான் புலம்ப, ஐயோ ஜாலியா பார்த்து ரசிச்ச 30 வருடப்போர்  முடிஞ்சு போச்சே என்று நீங்கள் புலம்ப ஒரே புலம்பல் தான் போங்க. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

கோஷான், ஜாலியா அனுபவிக்க இந்த உலகில் எவ்வளோ பாக்கி இருக்கு. இப்ப என்ன அவசரம்? அவுஸ்ரேலிய விஞ்ஞானி David Goodall போல் 100 வயதுக்கு பிறகு அதைப் பற்றி யோசிப்போம்.😂

🤣 இப்ப இல்லை துல்ப்ஸ்.

எல்லாம் ஆடி அடங்கினாப்பிறகு, நான் கோஷானோ, துல்பெனோ, பெருமாளோ எண்டு விளங்காத ஒரு நிலை வருமெல்லா - அதுக்கு கொஞ்ச நாளுக்கு முதல்.

ஆனா அப்படி ஒரு நிலை வரமுன்னம் செய்யவேணும். நாங்களா வெளிகிட்டு சுவிஸ் வரோணும். அந்த நிலை வந்திட்டால் capacity இல்லை எண்டு செய்ய விடமாட்டாங்கள். கூட்டி போறவை மீதும் சட்டம் பாயும்.

உங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை - இப்படி ஒரு நிலை வந்தால் செய்யவும் என எழுதி வைத்து விட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

39 minutes ago, goshan_che said:

இல்லை கோஷான் டேவிட் குடால் 2018 ம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை  இங்கு வந்தார்.  வழமையான ஏற்பாடுகளின் பின்னர் புதன் கிழமை  I am happy to have the chance to end my life என்ற இறப்புக்கு முதல் நாள் பத்திரிகையாளரை சந்தித்து பேட்டி கொடுத்தார். ஒரு நாள் முழுவதும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் Basel ல் உள்ள botanical garden ல் மகிழ்சசியாக பொழுதை கழித்தார்.

அடுத்த நாள் வியாழன்  காலை இறுதி காலை உணவை எடுத்த பின்னர்  காலை 10 மணியளவில் Liestal ல் உள்ள மருத்துவமனைக்கு தானாக சென்று மருத்துவ சோதனைகளின் பின்னர் தனது மரணப் படுக்கையில் படுத்து அங்கு அவருக்காக தயார் செய்து வைத்திருந்த ஊசி மருந்தை தானாக எடுத்து ஏற்றினார்.

பிற்பகல் 1.00 மணியளவில் பத்திரிகைகள் அவரது மறைவு செய்தியை அறிவித்தன.  

இந்த தைரியம் எனக்கு வராது. வரும்போது மரணம் வரட்டும். 

Link to comment
Share on other sites

19 hours ago, nochchi said:

‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

அதுசரி இந்த மெசினின் தரத்தை ஆய்வுக்குள்ளாக்கி நாங்கள் வலியே இல்லாது தற்கொலை செய்துகொண்டோம் என்று உறுதிப்படுத்தியவர்கள் யாவர்? அவர்கள்தந்த உறுதிப் பத்திரங்கள் எங்கே.?? 

18 hours ago, குமாரசாமி said:

மிசின் நல்லதெண்டால் நானும் ஒண்டு வாங்குவம் எண்டு யோசிக்கிறன்.... இப்ப இல்லை கொஞ்ச வருசம் போக....

இதிலும் கஞ்சத்தனமா சாமியார்? கொஞ்ச வருசம் போக விலைகுறையும் என்ற நப்பாசையில் மண்விழும்!!

கோத்தபாய, மோடி போன்றவர்களே இனித் தொடர்ந்து ஆட்சிக்கு வருவார்கள். மிசின் விலை எகிறும்.😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பெருமாள்,@goshan_che,@tulpen சட்டுபுட்டுடென ஒரு முடிவுக்கு வாங்கப்பு  ,எங்களுக்கு வேற வேலை இருக்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இல்லை கோஷான் டேவிட் குடால் 2018 ம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை  இங்கு வந்தார்.  வழமையான ஏற்பாடுகளின் பின்னர் புதன் கிழமை  I am happy to have the chance to end my life என்ற இறப்புக்கு முதல் நாள் பத்திரிகையாளரை சந்தித்து பேட்டி கொடுத்தார். ஒரு நாள் முழுவதும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் Basel ல் உள்ள botanical garden ல் மகிழ்சசியாக பொழுதை கழித்தார்.

அடுத்த நாள் வியாழன்  காலை இறுதி காலை உணவை எடுத்த பின்னர்  காலை 10 மணியளவில் Liestal ல் உள்ள மருத்துவமனைக்கு தானாக சென்று மருத்துவ சோதனைகளின் பின்னர் தனது மரணப் படுக்கையில் படுத்து அங்கு அவருக்காக தயார் செய்து வைத்திருந்த ஊசி மருந்தை தானாக எடுத்து ஏற்றினார்.

பிற்பகல் 1.00 மணியளவில் பத்திரிகைகள் அவரது மறைவு செய்தியை அறிவித்தன.  

இந்த தைரியம் எனக்கு வராது. வரும்போது மரணம் வரட்டும். 

இப்ப என்னவும் கதைக்கலாம் ஆனால் அப்ப எனக்கும் தைரியம் வருமா எண்டு சொல்ல முடியாதுதான்.

ஆனால் இதில் வீரம் பேச எதுவுமில்லை.

அல்சைமர்ஸ் போன்ற வருத்தங்கள் வந்து விட்டதாகவும், அதற்கு மருந்து இல்லை என்றும், அந்திமகாலம் இப்படித்தான் இருக்க போகிறது என்பதும் தெளிவாக தெரிந்து விட்டால், அதன் பின் இது ஒரு cold calculation தான். 

வெள்ளனவே போவதா? அல்லது இருந்து துன்பத்தை அனுபவிப்பதா?

அவரவர் மனநிலையை பொறுத்து இந்த தெரிவு மாறுபடும்.

5 minutes ago, நந்தன் said:

@பெருமாள்,@goshan_che,@tulpen சட்டுபுட்டுடென ஒரு முடிவுக்கு வாங்கப்பு  ,எங்களுக்கு வேற வேலை இருக்கு😁

மிசின் செலவையும் ஏற்க ரெடி போல கிடக்கு🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவலையெல்லாம் யாராவது எனது பிறந்தநாளுக்கு உந்தக் கோதாரியை வாங்கி பரிசளித்து விடுவார்களோ என்றிருக்கு .......அப்படி பரிசு வந்தால் உறவுகள் எல்லாம் கூடி நின்று ஒருக்கால் உது வேலைசெய்யுதோ என்று சோதித்துப் பாருங்கோ என்று தள்ளி விடப்போகுதுகள்.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது அப்படி போறதா இருந்தால், களத்தில் ஒரு போட்டோவையாவது பதிந்துவிட்டு செல்லுங்களப்பு..! 😉 இத்தனை நாள் நம்முடன் களமாடியது இந்த அன்பர்தான் என நினைவில் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 உங்களுக்கு போர் தொடங்க திடீரென்று தப்பி ஓடிவந்த ஞாபகம் flashback dream form ல வந்துட்டுது போல.  யுத்தம் முடிந்ததால் யுத்த செய்தி  பாக்க முடியாமல் இப்ப boring  எண்டு இப்படி எல்லாம்   தாறுமாறா முடிவெடுக்காதேங்க. 30 வருட போர் எந்த நன்மையும் தரவில்லை என்று நான் புலம்ப, ஐயோ ஜாலியா பார்த்து ரசிச்ச 30 வருடப்போர்  முடிஞ்சு போச்சே என்று நீங்கள் புலம்ப ஒரே புலம்பல் தான் போங்க. 😂

உங்களை யார் சாமி மாறச்சொன்னது துல்பன்  துல்பனாகவே  இருப்பது தான் சிறப்பு அதே போல் நாங்களும் .

1 hour ago, நந்தன் said:

@பெருமாள்,@goshan_che,@tulpen சட்டுபுட்டுடென ஒரு முடிவுக்கு வாங்கப்பு  ,எங்களுக்கு வேற வேலை இருக்கு😁

கதிரை வாடகைக்கு விடுவது போல் ஒரு மிசினை வாங்கி வைத்து வாடகைக்கு விடும் ஐடியா உள்ளது இந்த வியாபாரத்துக்கு முதல் போட விரும்புவர்கள்  கையை தூக்கலாம் .🤣

6 hours ago, goshan_che said:

சுடச் சுட ஒரு கோப்பி குடியுங்கோ எல்லாம் சரியாகிடும்.

கோப்பியெல்லாம் காலையில்தான் பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ராசவன்னியன் said:

யாராவது அப்படி போறதா இருந்தால், களத்தில் ஒரு போட்டோவையாவது பதிந்துவிட்டு செல்லுங்களப்பு..! 😉 இத்தனை நாள் நம்முடன் களமாடியது இந்த அன்பர்தான் என நினைவில் கொள்ளலாம்.

அப்பவும் தலை மாற்றி தான் படம் அனுப்புவம் 🤣 ஊரை விட்டு கிளம்பும்போதே தலைமாற்றிய படமும் புனைபெயரும்தான் .சொந்த மண்ணில் வாழ்வது வரம் அது இல்லாதவனுக்கு எதைப்போட்டு எதை  பெருமைகாண்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

கதிரை வாடகைக்கு விடுவது போல் ஒரு மிசினை வாங்கி வைத்து வாடகைக்கு விடும் ஐடியா உள்ளது இந்த வியாபாரத்துக்கு முதல் போட விரும்புவர்கள்  கையை தூக்கலாம் .🤣

நாய் வித்த காசு குரைக்காது.

மனிசன் செத்த காசு (பேயாக வந்து) மிரட்டாது🤣.

1 hour ago, ராசவன்னியன் said:

யாராவது அப்படி போறதா இருந்தால், களத்தில் ஒரு போட்டோவையாவது பதிந்துவிட்டு செல்லுங்களப்பு..! 😉 இத்தனை நாள் நம்முடன் களமாடியது இந்த அன்பர்தான் என நினைவில் கொள்ளலாம்.

நான் போகும் போது pay per view வில் லைவ் டெலிகாஸ்டே போடுறன் சாரே🤣.

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

என்னுடைய கவலையெல்லாம் யாராவது எனது பிறந்தநாளுக்கு உந்தக் கோதாரியை வாங்கி பரிசளித்து விடுவார்களோ என்றிருக்கு .......அப்படி பரிசு வந்தால் உறவுகள் எல்லாம் கூடி நின்று ஒருக்கால் உது வேலைசெய்யுதோ என்று சோதித்துப் பாருங்கோ என்று தள்ளி விடப்போகுதுகள்.......!  🤔

நாங்கள் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்க மறந்த, தவறிய பல உறவுகள் எங்கள்மீது கடுப்பாக இருப்பதற்குச் சந்தர்ப்பம் உண்டு. அவர்களில் யாராவது உந்த மெசினை எங்களுக்குப் பரிசாகத் தந்தாலும் உங்களுக்குத் தரமாட்டார்கள், ஏனென்றால், யாழ்களம் உருவாகிய நாள்தொட்டு நீங்கள் இன்றுவரை இணைந்த, இணைந்து வெளியேறிய அனைத்து உறவுகளையும் நினைவில் வைத்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து மகிழவைத்து வருவதால்..... எந்த உறவுகளாலும் உங்களுக்கு எந்தத் துன்பமும் நேர்ந்திடாது உறவே.🙌  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கண்டுபிடித்தவர் தான் முதலில் இந்த வில்லைக்குள் படுத்து தற்கொலை செய்து காட்டலாம்.

'தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்று வள்ளுவர் சொன்னார்.

யார் இங்கு முன்னோடிகள். சயனைட் வில்லைகளை கழுத்தில் மாலையாக அணிந்தார்களே.

எமக்கு ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் போது euphoria எனும் நிலை ஏற்படும். எமது கவனங்கள் மெல்ல மெல்ல குறையும். ஆனால் இதன்போது மிகவும் சந்தோசமாக உணர்வோம். விமான பயணத்தில் இது ஏற்பட சாத்தியம் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Paanch said:

நாங்கள் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்க மறந்த, தவறிய பல உறவுகள் எங்கள்மீது கடுப்பாக இருப்பதற்குச் சந்தர்ப்பம் உண்டு. அவர்களில் யாராவது உந்த மெசினை எங்களுக்குப் பரிசாகத் தந்தாலும் உங்களுக்குத் தரமாட்டார்கள், ஏனென்றால், யாழ்களம் உருவாகிய நாள்தொட்டு நீங்கள் இன்றுவரை இணைந்த, இணைந்து வெளியேறிய அனைத்து உறவுகளையும் நினைவில் வைத்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து மகிழவைத்து வருவதால்..... எந்த உறவுகளாலும் உங்களுக்கு எந்தத் துன்பமும் நேர்ந்திடாது உறவே.🙌  

ஹலோ நண்பரே நான் யாழ் உறவுகளைச் சொல்லவில்லை......சொந்த ரத்த பந்த உறவுகளைச் சொல்கிறேன்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

ஜாலியா அனுபவிக்க இந்த உலகில் எவ்வளோ பாக்கி இருக்கு. இப்ப என்ன அவசரம்?

23 hours ago, nedukkalapoovan said:

இயற்கை அளித்த உயிரை இயற்கையே உங்களுக்கான காலம் வரும் போது.. மீளப் பெற்றுக் கொள்ளும். இதில் எதற்கு வலிந்து செத்துத் தொலையுறீங்க..

நல்ல கருத்துக்கள் 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.