Jump to content

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வெள்ளனவே போவதா? அல்லது இருந்து துன்பத்தை அனுபவிப்பதா?

அவரவர் மனநிலையை பொறுத்து இந்த தெரிவு மாறுபடும்.

எனது வாழ்கை மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது.அது பிள்ளைகளாக இருந்தாலும் சரி
எனது கடமைகளை நானே செய்ய வேண்டும். மெல்ல மெல்ல நடந்தாவது எனது முக்கிய தேவைகளை நானே செய்ய வேணடும்.இல்லையேல் அந்த  பெட்டியை நாட வேண்டும்

மூன்றாமவர் எனக்கு உணவூட்டுவதும், பம்பஸ் மாத்துவதுமாக இருந்தால் நான் குழந்தையல்ல. மற்றவர்களுக்கு பாரமானவன்.

எனவே எனது தெரிவு சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இந்த சிந்தனையில் இருந்து தான் விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. நீண்டகால நோக்கில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாத முதுமை வந்து உறவுகள் வாரிசுகளெல்லாம் அவரவர் வேலைகளை கவனிக்கவே நேரமில்லாமல் ஓடி திரிய, படுத்த படுக்கையில் இயற்கை உபாதைகளை கழித்தபடியும்...

பத்து மீட்டர் எழுந்து நடக்கவே பத்து நிமிடம் செலவிடும் நிலமை வந்தும்,  மூட்டுக்களும் தசை நார்களும் ஏற்படுத்தும் வலி தாங்காது இயலாமையின் காரணத்தால் இரவு பகலா கண்ணீர் விட்டு அழுதும் வாழும்  வாழ்வைவிட இந்த தற்கொலை இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக அமையகூடும்.

இளமையில் கொடிய நோய் வந்து உடம்பிற்குள் புற்றுநோய் என்ற பெயரில்  புற்றெடுத்து ஒவ்வொரு வினாடியும் மரண வலியை அனுபவித்துக்கொண்டு மூக்காலும் வாயாலும் ஆசன வாயிலினாலும் ரத்தபோக்கை அனுபவித்துக்கொண்டு வாழும் ஒரு வாழ்வைவிட இந்த தற்கொலை இயந்திரத்தை நாடுவதில் தவறில்லை என்று பலர் உணர்ந்திருக்ககூடும்,

அதனால்தான் ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாமாக பூமியைவிட்டு புறப்படும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நம்மவர்கள் ஓரளவு குடும்ப உறவுகளை பராமரிக்கும் கலாச்சாரத்தை கொண்டதினால் இறப்புவரை தம் இரத்த உறவுகளை பராமரித்து வழியனுப்பி வைக்கிறார்கள்,

ஆனால் வெள்ளையரை பொறுத்த வரையில் பல பெற்ற பிள்ளைகளே எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது, அதுவும் அன்னையர் தினம் தந்தையர் தினத்தில் ஒரு பூங்கொத்தை கொண்டுவந்து கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்கள், அதையும் மீறி தாய் தந்தையர் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினால் மன்னிக்கவும் நாங்கள் பிஸி இனிமேல் அழைக்க வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்.

அவர்கள் கொடிய நோயில் விழுந்தால் ஆஸ்பத்திரி சுவர்களும் அண்ணாந்து பாக்குற வானமும் மட்டுமே உறவுகள், அதனால் தற்கொலை இயந்திரத்தை மனமுவந்து ஏற்பார்கள்.

கேள்விபட்டதில்  உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை செய்துகொள்ள தற்கொலையை அங்கீகரித்த சுவிசுக்கு மனுபோட்டிருக்கிறார்கள் என்றறிந்தேன்.

பாதிப்புக்களை பொறுத்து பலருக்கு வாழ்வு நரகமாகவும் மரணம் சொர்க்கமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

மன்னிக்க வேண்டும் தனி,

வெளிநாட்டில் இருப்போர் இதயத்தை, பாசத்தை வங்கியில் சேமிப்பு பெட்டியில் வைத்து விட்டு இருப்பவர்கள் அல்ல.

நான் உட்பட என்னை சுற்றி பலர் தமது பெற்றாரை ஊரில் இருந்து எடுப்பித்து வீட்டில் வைத்து பரமரிக்கவே செய்கிறோம்.

அதே சமயம் கொழும்பில் இருந்தபடி பெற்றோரை கைதடிக்கு அனுப்பியவர்களையும் கண்டுள்ளோம்.

நாம் மட்டும் அல்ல, லண்டனில் பெரிய வேலைகளை எல்லாம் விட்டு விட்டு பெற்றாரை பார்க்க ஊருக்கு போன பல வெள்ளையினத்தவரும் உள்ளார்கள்.

ஆகவே இதில் வெளிநாடு, உள்நாடு, இனம் என்ற பேதம் அதிகம் இல்லை.

ஆனால் இங்கே care home இல் இருப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே ஏற்கப்பட்டுள்ளது. அங்கே abuse நடக்கவில்லை என்பதல்ல, ஆனால் பலர் தம் சம வயதை ஒத்தோருடன் கூடி வாழ்ந்து கடைசி காலங்களை அமைதியாக கழிப்பதும் உண்மை. ஒருவரும் அதை பெற்றாரை கைவிட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதில்லை.

ஆனால் இங்கேயும் ஆசிய சமுதாயத்தில் இந்த பார்வை (நான் உட்பட) தொடரவே செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் வெளிநாட்டை ஏன் முன்னிலைப்படுத்துக்கிறேன் என்றால் நம்ம நாட்டை போல் அல்ல வேலை குடும்பம் , தூரம் இவை அனைத்தும் பாராமரிக்க இடம் கொடுக்குமா என்பதே எனது கேள்வியாக இருந்ததது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வெளிநாட்டை ஏன் முன்னிலைப்படுத்துக்கிறேன் என்றால் நம்ம நாட்டை போல் அல்ல வேலை குடும்பம் , தூரம் இவை அனைத்தும் பாராமரிக்க இடம் கொடுக்குமா என்பதே எனது கேள்வியாக இருந்ததது .

வெளிநாட்டில் ஒரு காலத்தில் தனியாக வந்த ஆண்கள் 3 வேலை செய்வதால் 24 மணத்தியாலத்யில் 28 மணத்தியாலம் (🤣) வேலை செய்த காலம் உண்டு தனி. அப்போ நேரப்பிரச்சனை இருந்தது ஆனால் இப்போ அப்படி வெகு குறைவு.

அநேகமானோர் சுய தொழில், வேலை என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டார்கள்.

மற்றையபடி வேலை, குடும்பம், இயந்திர மயமாக்கம் எல்லாம் இலங்கையை விட 10% கூட என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

உண்மையில் வயது போனவர்களை பார்ப்பது வெளிநாட்டில் இலங்கையுடன் ஒப்பிட்டால் இலகு.

அவர்களுக்கு உடல் முடியாமல் போனால் வந்து பம்பர்ஸ் மாத்துவது முதல் குளிப்பாட்டுவது வரை அரசு ஆட்களை அனுப்பும் (பம்பார்சும் தரும் -நீங்களோ அவர்களோ எவ்வளவு செல்வந்தராக இருப்பினும்). ஒரு நாளைக்கு 3/4 முறை கூட வருவார்கள், தேவையை பொறுத்து. தகுந்த உரிமையோடு இருந்தால் மருத்துவமும் பிரச்சனை இல்லை. நமக்கு சமைக்கிற அதே சாப்பாடு, தமிழ் டிவி. இதை விட வேறு என்ன தேவைகள் அவர்களுக்கு. 

எப்படியோ 16 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்களை வீட்டில் தனியே விட்டு போக முடியாது. ஆகவே கணவன் அல்லது மனைவி வீட்டில் நிற்பார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் அவர்கள் நிற்பார்கள்.

மனமுண்டானால் மார்க்கமுண்டு.

பிகு

ஆனால் நான் சுவிஸ் போகாட்டில் கேர் ஹோம் போற ஐடியாதான். போய் கொஞ்சம் வெள்ளை கிழவியள துரத்தி விளையாடலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது 

மிசின் வந்தது “என்னை பார்க்க ஆட்கள் இல்லையே”, “எனக்கு வாழ பிடிக்கவில்லை” என விரக்தியில் தற்கொலை செய்பவர்களுக்காக அல்ல, உடல் உபாதைகளால் இனி எனக்கு ஏற்படப்போகும் சித்திரவதைக்கு ஒத்த வாழ்வில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று கோருபவர்கள் தம்மை தாமே “கருணை கொலை” செய்துகொள்ளவே.

கருணை கொலைக்கும், அவர்களை பார்க்க ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா, அவர்கள் குடும்பம் அவர்களை விரும்புகிறதா என்பதற்கும் அதிக சம்பந்தமில்லை.

பிகு

இயந்திர மயபட்ட மேற்குலகை விட, குடும்ப விழுமியங்களை அதிகம் பேணும் நாடு என கருதப்படும் இலங்கையில் தற்கொலை வீதம் அதிகம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெசினை அப்படி ஆசைபட்டால் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் இறந்த பின்பு உங்களை சொர்க்கத்தில் வாழவைத்து இனிமையான வாழ்கை தருவோம் என்கின்ற மதமாற்றிகளின் பேச்சை நம்பிவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

நன்று. 
உங்கள் மனநிலை எமது நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு அநேகமாக உண்டு. தாய் தந்தையரை வயோதிபகாலத்தில் வைத்து பார்ப்பது ஒருவித மன மகிழ்ச்சிதான்.

நிற்க...

நான் சொல்ல வந்த விடயம் நீங்கள் நினைக்கும் விடயமல்ல.
 கூடுதலான மனிதர்களுக்கு வயோதிபம் வர வர நோய் நொடிகளும் தேடிவரும்..சில நோய்கள் மாற்றக்கூடியது சில நோய்களுக்கு மருந்தே இல்லை.எனது தாயாருக்கு திடீர் மரணம். அவர் சாகும் வரைக்கும் தனது தேவைகளை தானே கவனித்து வந்தார்.அவர் இறக்கும் போது 80 வயது.எனது அம்மாவிற்கும் நோய்கள் இருந்தது. ஆனால் பெரும் வலிகள் இல்லாத நோய்கள்.மாத்திரைகள் பாவித்தால் இல்லாமல் போய்விடும். அம்மா இறந்த போது என்னை பெற்றெடுத்து வளர்த்த தெய்வம் என்ற ரீதியில் நான் அழாமலே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. இருந்தாலும் அம்மா இறக்கும் வரைக்கும் தன்னைத்தானே கவனித்து யாருக்கும் பாரமாய் இல்லாமல் போய் சேர்ந்துவிட்டார் என்றோரு உள்ளூர மகிழ்ச்சி எனக்குள் இருந்தது.

அம்மாவைப்போல் நான் வலியில்லாத வாழ்க்கை வாழமாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது.ஏனெனில் எலும்புவலிகள் மூட்டுவலிகள் என பல வலிகளுக்கு இப்போதே பஞ்சவர்ண நிறங்களில் மாத்திரைகள் உணவுக்கு பதிலாக எடுக்க வேண்டிய கட்டாயம்.

எனது சந்ததிக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் முடிய வயதும் கணக்காக வர நானே அந்த  பெட்டியை தேடிச்செல்வது உதிசமானது.

நான் அருந்தி அந்தரிப்பதை மற்றவர்கள் பார்த்து கவலைப்படக்கூடாது அதே போல் நானும் வலிகளால் அவதிப்படக்கூடாது.

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இந்த சிந்தனையில் இருந்து தான் விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. நீண்டகால நோக்கில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.

நல்லமனம் வாழ்க.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நன்று. 
உங்கள் மனநிலை எமது நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு அநேகமாக உண்டு. தாய் தந்தையரை வயோதிபகாலத்தில் வைத்து பார்ப்பது ஒருவித மன மகிழ்ச்சிதான்.

நிற்க...

நான் சொல்ல வந்த விடயம் நீங்கள் நினைக்கும் விடயமல்ல.
 கூடுதலான மனிதர்களுக்கு வயோதிபம் வர வர நோய் நொடிகளும் தேடிவரும்..சில நோய்கள் மாற்றக்கூடியது சில நோய்களுக்கு மருந்தே இல்லை.எனது தாயாருக்கு திடீர் மரணம். அவர் சாகும் வரைக்கும் தனது தேவைகளை தானே கவனித்து வந்தார்.அவர் இறக்கும் போது 80 வயது.எனது அம்மாவிற்கும் நோய்கள் இருந்தது. ஆனால் பெரும் வலிகள் இல்லாத நோய்கள்.மாத்திரைகள் பாவித்தால் இல்லாமல் போய்விடும். அம்மா இறந்த போது என்னை பெற்றெடுத்து வளர்த்த தெய்வம் என்ற ரீதியில் நான் அழாமலே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. இருந்தாலும் அம்மா இறக்கும் வரைக்கும் தன்னைத்தானே கவனித்து யாருக்கும் பாரமாய் இல்லாமல் போய் சேர்ந்துவிட்டார் என்றோரு உள்ளூர மகிழ்ச்சி எனக்குள் இருந்தது.

அம்மாவைப்போல் நான் வலியில்லாத வாழ்க்கை வாழமாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது.ஏனெனில் எலும்புவலிகள் மூட்டுவலிகள் என பல வலிகளுக்கு இப்போதே பஞ்சவர்ண நிறங்களில் மாத்திரைகள் உணவுக்கு பதிலாக எடுக்க வேண்டிய கட்டாயம்.

எனது சந்ததிக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் முடிய வயதும் கணக்காக வர நானே அந்த  பெட்டியை தேடிச்செல்வது உதிசமானது.

நான் அருந்தி அந்தரிப்பதை மற்றவர்கள் பார்த்து கவலைப்படக்கூடாது அதே போல் நானும் வலிகளால் அவதிப்படக்கூடாது.

கடுமையான உடலை வருத்திய வேலைகள் செய்தனிங்களோ அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2021 at 04:26, ராசவன்னியன் said:

யாராவது அப்படி போறதா இருந்தால், களத்தில் ஒரு போட்டோவையாவது பதிந்துவிட்டு செல்லுங்களப்பு..! 😉 இத்தனை நாள் நம்முடன் களமாடியது இந்த அன்பர்தான் என நினைவில் கொள்ளலாம்.

எனக்கும் இப்படி ஆசை ஒன்றுள்ளது, அதனால் உரியவர்களிடம் கூறியுள்ளேன்😁..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

ஆனால் இங்கே care home இல் இருப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே ஏற்கப்பட்டுள்ளது. அங்கே abuse நடக்கவில்லை என்பதல்ல, ஆனால் பலர் தம் சம வயதை ஒத்தோருடன் கூடி வாழ்ந்து கடைசி காலங்களை அமைதியாக கழிப்பதும் உண்மை. ஒருவரும் அதை பெற்றாரை கைவிட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதில்லை.

எனது வீட்டில் நான் வயதாகியபின் care homeல் இருக்கவிரும்புகிறேன் எனக்கூறிய பொழுது “ what kind of Sri Lankan woman are you???🤪” எனக்கேட்டார்கள்.. அவர்களுக்கு நான் கூறியது இதுதான் just want to live for me.!! 

Aged careல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனாலும் சில சமயங்களில் அப்படி போய் இருப்பது நல்லது என நினைப்பதுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

கண்டது சந்தோசம்.

இங்கே எமது ஆக்கள் பலர் இப்படி ஹோம் நடத்துவதை வியாபாரமாக செய்கிறார்கள். அப்படி ஒன்றில் நமது அடுத்த சந்ததிகளை இறக்கி விட்டால் - கொஞ்சம் கெத்தா அதே ஹோமில இருக்கலாம் 🤣.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் இப்படி ஆசை ஒன்றுள்ளது, அதனால் உரியவர்களிடம் கூறியுள்ளேன்😁..

நானும் சொல்லி வைத்துள்ளேன். எனக்கு ஏதும் நடந்தால் யாழில் ஒரு கணக்கை திறந்து இன்னார் ஆகிவிட்டார் அன்னார் என அறிவிக்குமாறு🤣.

பிகு

இத வாசிச்சிட்டு நான் வராத நாளில எவணும் காரியம் செய்யாமல் இருக்கோணும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்.

நமக்கு இந்த தலைப்பில் ஒரு சந்தேகம். இதில சாகும் போது வலி இருந்ததா.. இல்லையான்னு.. இதில சிக்கி செத்துப்போன எவர் வந்து சொன்னதாக.. இந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்...?? அதை வேறு நம்பி இங்கு கருத்தாடுகிறார்கள்..???! 

எல்லாம் வியாபாரம்.. போலி விளம்பரம். இவர்களின் மேற்படி கூற்றைக்கூட மெய்ப்பிக்க எதுவும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

நமக்கு இந்த தலைப்பில் ஒரு சந்தேகம். இதில சாகும் போது வலி இருந்ததா.. இல்லையான்னு.. இதில சிக்கி செத்துப்போன எவர் வந்து சொன்னதாக.. இந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்...?? அதை வேறு நம்பி இங்கு கருத்தாடுகிறார்கள்..???! 

எல்லாம் வியாபாரம்.. போலி விளம்பரம். இவர்களின் மேற்படி கூற்றைக்கூட மெய்ப்பிக்க எதுவும் இல்லை. 

எனக்கு ஒன்றை வாங்கி தாங்கோ நான் ரெஸ்ட் பண்ணி சொல்லுறேன் புறோ.☺️🙆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

எனக்கு ஒன்றை வாங்கி தாங்கோ நான் ரெஸ்ட் பண்ணி சொல்லுறேன் புறோ.☺️🙆 

எனக்கு இருக்கிற ஒரு நல்ல தங்கச்சியை பரிசோதனைக்கு அனுப்ப சித்தமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

கடுமையான உடலை வருத்திய வேலைகள் செய்தனிங்களோ அண்ணை?

அதையேன் பேசுவான்....
ஜேர்மனிக்கு வந்த புதிசிலை  வேலைசெய்ய வெளிக்கிட்டது இன்னும் ஓய்வில்லை. நெருப்புவெக்கைக்கு முன்னாலை 12- 13 மணித்தியாலம் நிண்ட நிலையிலை வேலை.வாலிப வயதிலை எதையும் யோசிக்காமல் வேலை செய்ததின்ரை பலன் இப்ப தெரியுது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2021 at 04:44, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

இதில் இன்னொரு பக்கமும் இருக்கு. 

தாயகத்தில் இருந்து பிள்ளைகளால் இங்கே அழைக்கப்பட்ட பெற்றோர்கள் மிகப் பெரிய இலாபம் தரும் மூலதனம் பல பிள்ளைகளுக்கு.

அவர்களுக்கு வரும் பென்சன் பணம் மற்றும் அவர்களை பராமரிக்க கிடைக்கும் பணம் என நிரந்தர வருமானம்.

இதில் மிகப்பெரிய மோசடி அல்லது அநியாயம் என்னவென்றால் சோறும் கறியுடனும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இவர்களுக்கு இப்படி வருமானம் வருவதோ அது எவ்வளவு என்பதோ சாகும் வரை தெரியவருவதில்லை. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

உண்மைதான். இதனால் ஆளுடன் ஆள் புடுங்கு பட்ட சகோதர்கள் எல்லாம் உண்டு. 

அதே போல் சற்று உடல் நிலை சுகமாக உள்ள பெற்றார் சம்பளமில்லாத டிரைவர், பிள்ளை பாதுகாவலர், சமையல்காரர் ஆகினதும் உண்டு🤣.

இதை போல் மறு வழமாக, பிள்ளைகளுடன் செலவில்லாமல் வாழ்ந்த படி ஊரில் எவர் என்ன எண்ட கேள்வி இல்லாமல் அரசு தரும் பணத்தை £50,100 என்று விசுக்குபவர்களும், அதே பணத்தை வட்டிக்கு விடும் பெருசுகளும் கூட உண்டு🤣.

புலம்பெயர் வாழ்வின் வினோதங்கள் ஒரு நாவல் எழுதும் தரத்தில் இருக்கிறது.

தனித்த பெற்றோரை வைத்து பராமரிப்பது கூட சில வேளைகளில் சம்பந்படாத,படக் கூடாத உறவுகளால் சகோதரர்களுக்குள் புடுங்குப் பாடுகளை ஏற்படுத்தப் பார்க்கிறது.என்ன செய்வது வீட்டுக்கு வீடு வாசற் படி என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன். அந்த நிலை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையளுக்குள்ளை வயது போன தாய் தேப்பனை வைச்சு பராமரிக்கிற பிரச்சனை ஊரிலையும் எக்கச்சக்கம். தாங்களாய் உணர்ந்து வயோதிபமடம் போன பெற்றோரும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.