Jump to content

வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் ஜெரா தம்பி தன் முகநூலில் எழுதியிருப்பது....

//

வடக்கின் கரையோரம் முழுவதும் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. அதுவும் பருத்தித்துறை முனைப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாகவே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலினால் பல கோடி சொத்திழப்பை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களிடம் சொன்னார்கள். தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் சொன்னார்கள். ஊடகங்களிடம் பேசினார்கள். மீனவ சங்கங்களின் ஊடாக அறிக்கை வெளியிட்டார்கள். யாழ். இந்திய துணைத்தூதரக வாசலில் போராடினார்கள். எம்பஸி போராட்டக்காரர்களுக்கு ஒரு மைலோ பக்கெற் மட்டும் கொடுத்தனுப்பியது. எந்தத் தீர்வையும் கிடைக்கவில்லை. இந்திய இழுவைப்படகுகளினால் அறுத்தெறியப்படும் வலைகளுக்கா ஒரு சத நஷ்ட ஈட்டைத்தானும் கொடுக்கவில்லை எனவேதான் மீனவ மக்கள் இந்தியாவை எதிர்க்கின்றனர். வெறுக்கின்றனர்.
இதனைச் சரியாகக் கற்ற கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், தம் அதிகாரிகளை நேற்றைய தினம் பருத்தித்துறைக்கே அனுப்பியிருக்கிறது. சாதாரண மக்களால் புகைப்படம் கூட எடுக்க முடியாத கடற்கரைப் பகுதியில் ட்ரோன் விட்டுக்காட்டியிருக்கிறது. "இங்கயிருந்து இந்தியா எவ்வளவு தூரம்" என்ற கேள்வியைக்கூட யதார்த்தமாக கேட்டிருக்கிறது. பூகோள வரைபடமே அறிந்திராத அந்த சீனத்தூதரக அதிகாரிகளுக்கு "வெறும் 32 மைல்கள் தான்" என அப்பாவித்தனமான பதில்வேறு கிடைத்திருக்கிறது.
நேற்றைய தினமே, சுற்றுலாவிகளின் தளமாக மாறிவிட்ட - யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமாகிய யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த சீன அதிகாரிகள், Virtual Library க்கு உதவத் தயார் என்றிருக்கின்றனர். அதற்கு அருகில் யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடமாகிய இந்திய பண்பாட்டு மண்டபம் திறக்கப்படாமல் நிமிர்ந்து நிற்கிறது. அது பேயாமல் நிற்கட்டும்.
இன்றையதினம், யாழ்ப்பாணத்தின் இன்னொரு கலாசார அடையாளமாகிய நல்லூர் ஆலயத்திற்கு, "ஒட்டிக்கோ கட்டிக்கோ" வேஷ்டியோடு களமிறங்கியிருக்கின்றனர். இராஜதந்திர பயணமாக யாழ்ப்பாணம் வரும் அதிகாரிகள் மேலாடையை கழற்றிவிட்டு ஆலயத்திற்குள் நுழையவே சிரமப்படும்நிலையில், "சும்மா ஒரு பயணமாக" வந்த சீன அதிகாரிகள் எடுக்கும் சம்பளத்துக்கு அதிகமாகவே செலவழித்திருக்கிறார்கள். இந்த செயற்பாடுகளே இன்றையதினம் யாழ்ப்பாணத்தின் சுவைகரமான செய்தி.
இதன் விளைவாக, நல்லூருக்கு அருகில் உள்ள மருதடி பக்கமிருந்து எழுந்த தீய்ஞ்ச வாசணை இன்னும் மணந்துகொண்டிருக்கு என்றார் ரியோ ஐஸ்கிறீம் கடையில் வேலை செய்யும் நண்பர். ஆனாலும் இந்த சப்பை மூக்கர்கள் யாழ்ப்பாணத்தின் இன்னொரு கலாசார அடையாளமாகிய தம் கடை பக்கம் வரவில்லை என்ற ஏக்கம் அவரின் பேச்சில் தொனித்தது.
இந்தப் பயணத்தினூடாக சீனா சொல்லவருவதென்னவென்றால், நாம் உங்களுக்கு (இந்தியா, தமிழர்கள்) மிக அருகில் வந்துவிட்டோம். படலையைத் திறவுங்கள்.
//
Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிழம்பு said:

ஊடகவியலாளர் இதில் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். (பிறப்பால் வரும் இயல்புகளை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கூகிள் மப்பில் அளவீடு செய்யும் வசதி உள்ளது உண்மையிலே கேட்டு இருப்பாரா என்று சந்தேகமா உள்ளது .

 .

வீடியோவில் வடிவா கேழுங்கோ.. அவர் அப்படித்தான் கேட்கிறார்.. அதற்கு அந்த ராணுவ அதிகாரியும் பதில் சொல்கிறார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வீடியோவில் வடிவா கேழுங்கோ.. அவர் அப்படித்தான் கேட்கிறார்.. அதற்கு அந்த ராணுவ அதிகாரியும் பதில் சொல்கிறார்..

நன்றி இன்னும் பார்க்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சீனாவிடம் பட்டுள்ள கடனை இனி நல்லூர் கந்தன்தான் அடைக்க வேண்டும். 

On 15/12/2021 at 06:55, குமாரசாமி said:

Bild

சீனாக்காரன் காணி பாத்த போது எடுத்த படம்.

ஆமி சார் பிழையான பக்கம் நின்று துவக்கை பிடிக்கின்றார். ஆபத்து கடல் பக்கமாகத்தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு தமிழ் மக்களுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் முன்னெடுக்க தாம் தயார் - யாழில் சீனத் தூதுவர்

(ஆர்.யசி)

வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நட்புறவை பலப்படுத்திக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், வடக்கிற்கான சகல உதவிகளையும் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக சீனத் தூதுவர் கீ சென் ஹொங் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.

265924199_974834896772825_51509348070887

இந்திய - சீன பூகோள அரசியலில் சிக்கிக்கொள்ள நாம் விரும்பவில்லை, எனினும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தவும், வடக்கின் அபிவிருத்திக்கும் யார் உதவிகளை செய்ய முன்வந்தாலும் அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வோம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் மற்றும்  நன்னீர் மீன்வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இருவருக்கும் இடையிலான  சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

இலங்கை - சீன கூட்டு முயற்சியான குயிலான்  நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

266034532_610830366867279_62553286870469

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 13.75 மில்லியன் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களையும். 6 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் உள்ளிட்ட கடல் உபகரணப்பொருட்களையும் சீன தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் வடக்கின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வடக்கிற்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நீண்டகால உறவுமுறை இருந்ததாகவும், தொடர்ந்தும் அந்த நட்புறவை பேணிப்பாதுகாக்க தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

s2.jpg

வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீனவர்களுக்கான உதவிகளை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், கடல் அட்டை வளர்ப்பு மூலமாக உள்ளூர் வருவாயை அதிகளில் ஈட்டிக்கொள்ள முடியும் எனவும், ஏனைய மீன்பிடி செயற்பாடுகளை விடவும் இதில் நலன்கள் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சந்திப்பு குறித்து கேசரிக்கு தெரிவிக்க அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறுகையில், 

சீன- தமிழர் உறவை கட்டியெழுப்ப தாம் தயாராக உள்ளதாகவும், நீண்டகால நட்புறவு இரு தரப்பினருக்கும் இடையில் இருப்பதாகவும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். அதேபோல் உதவிகளை வழங்கவும் தாம் தயாராக உள்ளதாக கூறினார்.

எம்மை பொறுத்தவரையில் எமக்கு பூகோள அரசியலில் சிக்கிக்கொள்ள நாம் தயாராக இல்லை, இந்திய சீன அரசியல் நகர்வுகளில் எம்மை இணைத்துக்கொண்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலைப்பாட்டில் நாம் இல்லை, ஆனால் எமக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அடுத்த கட்ட நவீன செயற்பாடுகளில் எம்மை இணைத்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. எனவே அதற்காக யார் எமக்கு உதவிகளை வழங்கினாலும் அவற்றை பெற்றுக்கொள்ளும் நிலையில் நாம் உள்ளோம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

அதேபோல்  மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுத்தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளேன். 

கடலட்டை பண்ணை முதலீட்டின் ஊடாக ஐந்து மடங்கு இலாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதலீட்டின் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் அது நல்ல விடயம் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளேன் என்றார். 

வடக்கு தமிழ் மக்களுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் முன்னெடுக்க தாம் தயார் - யாழில் சீனத் தூதுவர் | Virakesari.lk

2 hours ago, ஏராளன் said:

ஊடகவியலாளர் இதில் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். (பிறப்பால் வரும் இயல்புகளை)

நன்றி ஏராளன்... அடுத்த முறை இப்படியான பதங்களை கண்டால் அகற்றி விட்டு பகிர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

போற போக்கைப்பாத்தால் மன்டரின் விரைவாக படிக்கத்தான் வேணும் போல.😂

நி ஹா🙏🏾

3 hours ago, பிழம்பு said:

சாதாரண மக்களால் புகைப்படம் கூட எடுக்க முடியாத கடற்கரைப் பகுதியில்

நல்லா அளக்கிறார் ஊடகவியளாலர்.  நான் வளைச்சு வளைச்சு படம் எடுத்துள்ளேன். 3 வேறு வேறுதரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பூகோள வரைபடமே அறிந்திராத அந்த சீனத்தூதரக அதிகாரிகளுக்கு

இதை அங்கதமாக சொல்கிறாரா அல்லது சீனாவின் இலங்கை தூதுவர் இவ்வளவு விபரம் தெரியாதவர் என நினைகிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிழம்பு said:

265924199_974834896772825_51509348070887

சீனாக்காரருக்கு போட்டிருக்கிற மாலைகளை பார்த்தால்.... இனி... சங்குதான் போலை கிடக்குது... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சீனத்தூதர் கந்தனைத் தரிசித்து என்ன நேர்த்திக்கடன் வைத்திருப்பார்?  😁

இந்திய தூதர் பதின்மூன்று வடை மாலையோட ஓடியாந்து முருவனைப் பார்த்து முழுசிக் கொண்டு நிக்கப்போறார்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஊடகவியலாளர் இதில் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.

தமிழ் ஊடகவியலாளர் அப்படி மோசமான முறையில் குறிப்பிட்டிருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்னதான் சொன்னாலும் குத்தி முறிஞ்சாலும்,  தலைகீழாக நின்றாலும், ஏன் நித்தியானந்தா ஸ்வாமிகள் மாதிரி ஜம்ப் பண்ணிக் குதித்தாலும் ஆட்டம் புதுடில்லியை விட்டு நகராது. டிசைன் அப்படி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

எங்கடை கோணல் மாணல் சிங்கங்கள் இப்பிடி நேர்த்தியாய்  பட்டுவேட்டி கட்டினதை நான் இன்னும் காணேல்லை....பாருங்கோ அச்சடிச்சமாதிரி பட்டுவேட்டி கட்டியிருக்கிறாங்கள்.கூட்டிக்கொண்டு வந்த டக்ளஸ் அண்ணை ஆளுக்கொரு தங்கச்சங்கிலி போட்டு விட்டுருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அனேகமா இனி எல்லைதாண்டி வலைகளை அறுத்து விளையாடும் விளையாட்டு நிப்பாட்டுவினம் பாரிய படகுகளின் சொந்தக்காரர்   இப்ப ஆளும்கட்சி ஆட்களின் பினாமிகள்தானே முதலாளிகள் தானே டெல்லி சொல்ல அடங்குவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

போற போக்கைப்பாத்தால் மன்டரின் விரைவாக படிக்கத்தான் வேணும் போல.😂

வெள்ளைக்காரன்(ஆங்கிலேயர்கள்) எங்களை இங்கிலிஸ் படிக்கச்சொல்லி வெருட்டி அடிச்சு சட்டிபானை உடைச்ச மாதிரி சீனாக்காரன் செய்யமாட்டான். அவன் தானாகவே தமிழை அறப்படிச்சு செய்ய வேண்டியதை செய்து கொண்டு அமடசக்காய் இருப்பான்.😁

எப்பிடி நாட்டுக்குள்ளை நுழையுறாங்கள் பாருங்கோ..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

யார் என்னதான் சொன்னாலும் குத்தி முறிஞ்சாலும்,  தலைகீழாக நின்றாலும், ஏன் நித்தியானந்தா ஸ்வாமிகள் மாதிரி ஜம்ப் பண்ணிக் குதித்தாலும் ஆட்டம் புதுடில்லியை விட்டு நகராது. டிசைன் அப்படி. 

நான் நினைக்கிறேன் அது விலகி போய்  நிறைய நாள் ஆகிவிட்டது. ஆனால் தமிழர் தரப்பு உணர பிந்தி விட்டது அல்லது எடுத்த முயற்சிகள் தடுக்கப்பட்டது உள்ளூர் அரசியல்வாதிகளின்  கைங்கரியத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வீடியோவில் வடிவா கேழுங்கோ.. அவர் அப்படித்தான் கேட்கிறார்.. அதற்கு அந்த ராணுவ அதிகாரியும் பதில் சொல்கிறார்..

இதற்குரிய பதிலை கொஞ்ச நாட்களில் எங்களுக்கு கேட்கக்கூடிய மாதிரி இருக்கும். Times of India, The Hindu and WION வெளுத்து கட்டுவார்கள் . Ambassador proxy protocol எப்படி வழிநடத்தியது என்பது தெரியாது. நல்லதொரு சக்கரை பொங்கல் சமைத்து பக்கத்தில் இருக்கும் துணைத் "அவாள்" தூதரகத்துக்கு அனுப்பி விட்டால் எல்லாம் முடிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் வந்தால் என்ன.. ஜப்பான் வந்தால் என்ன..சீனன் வந்தால்.. என்ன எங்கட சனத்தை சோத்துப் பார்சலுக்கு ஏங்க வைப்பதில்  தான் தமிழ் அரசியல் வியாதிகள் அக்கறையாக உள்ளன.

அதுசரி.. கூட்டமைப்பு கும்பலைக் காணேல்ல.. ஹிந்திய எஜமான விசவாசம் போல. தலையில துண்டப் போட்டிக்கிட்டு ஒளிச்சிருந்து பார்ப்பினம் போல. 

On 15/12/2021 at 11:55, குமாரசாமி said:

Bild

சீனாக்காரன் காணி பாத்த போது எடுத்த படம்.

இதில ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தினால்.. ஹிந்தியாவின் தென்கோடி இலக்குகளை சும்மா கல்லெறிஞ்சே அழிக்கலாம். 

ஹிந்தியா புலி அழிக்கப் போய் வாங்கிக் கொண்ட வினைகள் பல. எதிர்காலம் ஹிந்தியாவுக்கு நல்லா அமையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஊடகவியலாளர் இதில் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.

உண்மை,அவர் தனது பாங்கில் எழுதுகிறார். தனது கருத்துகளை வாசிப்பவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும் அதாவது அவர்கள் எப்படி கருதுவார்கள் என்பதை சிந்திக்கத் தவறி விட்டார் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டைக்குள் காய்வதை விட பருத்தித்துறையில் காய்வது சீனனுக்கு மிக அனுகூலமாகும். இதன் பலாபலனை எங்கட தமிழ் விசுக்கோத்துகள்.. ஹிந்திய எஜமான விசுவாசத்தில் கோட்டை விடப் போகுதுகள்.

ஹிந்தியாவை எங்கள் தந்தை நாடென்று புலிகள் சொல்லிக் கொண்டாலும்.. அதே ஹிந்தியா தான் அவர்களை அழிக்கவும் முன்னின்றது.

சீனாவை கொஞ்சமாவது நம்பி நடக்கலலாம்.. அபிவிருத்தியாவது மிஞ்சும். ஹிந்தியாவை கொஞ்சமும் நம்ப முடியாது. மீறி நம்பினால்.. பிஞ்ச பாயும் மிஞ்சாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

spacer.png

எங்கடை கோணல் மாணல் சிங்கங்கள் இப்பிடி நேர்த்தியாய்  பட்டுவேட்டி கட்டினதை நான் இன்னும் காணேல்லை....பாருங்கோ அச்சடிச்சமாதிரி பட்டுவேட்டி கட்டியிருக்கிறாங்கள்.கூட்டிக்கொண்டு வந்த டக்ளஸ் அண்ணை ஆளுக்கொரு தங்கச்சங்கிலி போட்டு விட்டுருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். 😁

கட்டிக்கோ ஒட்டிக்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஐயோ ஐயோ,

அட்லீஸ்ட் அந்த மாப்பாணரையாவது சீனனுடன் எமது அரசியல் பற்றி பேச சொல்லுங்கப்பா.

வழமையா எல்லாத்திலயும் குறுக்கால ஓடுற சிவாஜி கூட ஒண்டும் செய்யேல்லை.

சந்திக்க கூட வேண்டாம் சந்திக்க முயற்சி எண்டு  செய்தி வந்தாலே இந்தியாவுக்கு கலக்குமே

நம்மடை அரசியலை அப்படியே தூக்கிக்கொண்டு போய் RAW இடம் கொடுத்துவிட்டு 
பூரா Proxy கூட்டத்தை வைத்துக்கொண்டு இனி கூப்பாடு போட்டு என்ன பயன்....
வரும் வாய்ப்பையெல்லாம் இழந்து ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கத்தான் நாம்  லாயக்கு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

ஏற்கனவே யாழில் தெருநாய்களின் காப்பகம் மன்னிக்கவும் அவர்களின் எம்பஸி உண்டே .

இருந்தும் என்ன பயன்? சீனன் மூலஸ்தானத்தில் வந்து நின்று தூரம் கேக்கிறான். இனி எட்டிப்பாப்பான், ஒட்டுகேப்பான். இனி இவர்கள் தூங்கின மாதிரித்தான்......

14 hours ago, பிழம்பு said:

பருத்தித்துறைக்கு சென்ற சீன தூதுவர் எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது என கேள்வி எழுப்பினார்.

14 hours ago, பிழம்பு said:

வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி செங்ஹொங் தலைமையிலான குழு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும்  மன்னார்  உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளது. 

வயித்தில புளியை கரைச்சு ஊத்தி, ஓடித்திரியிறதை பார்த்து ரசிக்க நினைச்சிருப்பார் தூதுவர்!

புலிகளை அழிக்க ஓடியோடி உதவி செய்து, கொண்டாடி, தூங்கி இருக்க இப்படி ஒரு பேரிடி வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.  பரதேசியளை கெஞ்ச வைத்து, அலைய விட்டு, கம்பு சுத்தலாம் என்று எண்ணியிருப்பார். இப்பதான் ஆட்டமே  ஆரம்பிக்குது, போகப்போக அசையமுடியாமல் இறுக்கிற  இறுக்கில் முழி பிதுங்கப்போகுது. அப்பவும் நம்மட செம்மலுகள் இந்தியாவுக்காக அழுது, துக்கம் கொண்டாடுவினம்.  சீனனுக்குத்தான் தெரிந்த கலை, எதிரியின் பெலவீனம் என்ன? எங்கே? எப்போ அடித்தால் காலைத்தூக்குவினம் என்று. சரியாக கணித்து நகர்ந்திருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 13.75 மில்லியன் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களையும். 6 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் உள்ளிட்ட கடல் உபகரணப்பொருட்களையும் சீன தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் வடக்கின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வடக்கிற்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நீண்டகால உறவுமுறை இருந்ததாகவும், தொடர்ந்தும் அந்த நட்புறவை பேணிப்பாதுகாக்க தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அட .... அட... நாங்களோ  தாய் நாடு, தந்தை நாடு என்று சொல்லிக்கொண்டிருக்க, அவர்களோ எங்களோடு என்னமா உறவு கொண்டாடுறாங்கள்?

குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு குடுக்குமாம். பொங்கலோடு  தீர்வுப்பொதியும் வரும்போல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 13.75 மில்லியன் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களையும். 6 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் உள்ளிட்ட கடல் உபகரணப்பொருட்களையும் சீன தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் வடக்கின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வடக்கிற்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நீண்டகால உறவுமுறை இருந்ததாகவும், தொடர்ந்தும் அந்த நட்புறவை பேணிப்பாதுகாக்க தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

என்ன சாத்தான் செய்வது 
இந்தியாவுக்கு வாலை காட்டி சீனனுக்கு தலையை காட்டும்  அரசியல் செய்யுமளவுக்கு நமக்கு வக்கில்லையே,  
நம்மால் முடிந்தது இத்துப்போன 13 ஐ தூக்கி சுமந்து செத்துப்போவது மட்டுமே....
அவனே எம்மை சந்திக்கவந்தாலும் தேசிக்காய்கள் புறக்கணிப்பு என்ற செய்தி மட்டுமே வரும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.