Jump to content

வடக்கில் வேலை வாய்ப்பின்மை உச்ச நிலையில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வேலை வாய்ப்பின்மை உச்ச நிலையில்

வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

North-300x200.png

ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின் றனர் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். ஒட்டுமொத்தமாக இலங்கையில் உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.

அரசாங்கம் அடுத்த வருடம் வேலை வாய்ப்பை வழங்காது என்று அறிவித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதி களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற் சாலைகள் வடக்கில் தொடரந்தும் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.
 
https://thinakkural.lk/article/155451

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின் றனர் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

தோட்டக்காணியெல்லாம் புல்லு முளைச்சு காடாய்க்கிடக்குதாம்.  வயல் விதைக்க ஆக்கள் இல்லையாம்.

ஏன் தம்பி தங்கச்சிமாரே  தோட்டம் செய்ய வெக்கமே? ஆடு மாடு மேய்ச்சால் மரியாதை குறைவே? 😡

கொஞ்சம் பொறுங்கோ இன்னும் கொஞ்சக்காலத்தாலை உலகம் முழுக்க பஞ்சம் வருமாம். அப்ப வீட்டிலை இருந்து மவுசை உருட்டுங்கோ🖱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பகுதி வேலைக்கு ஆள் இல்லை என்டு அழுகினம்.இன்நொரு பகுதி வேலை இல்லை என்டு அழுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒரு பகுதி வேலைக்கு ஆள் இல்லை என்டு அழுகினம்.இன்நொரு பகுதி வேலை இல்லை என்டு அழுகினம்.

2 hours ago, குமாரசாமி said:

அரசவேலை இருந்தா மட்டும் சொல்லுங்க.

வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்தும் கட்டமைப்புகள் ஒன்றும் இல்லை.
தோட்டவேலையை கொஞ்சம் கௌரவ குறைச்சல் என்று நினைச்சதால இப்ப செய்ய நினைச்சாலும் அனுபவம் இல்லாதது பெரும் பின்னடைவு. நெருக்கடி வர வர எல்லோரும் கமம் செய்யத் தொடங்குவினம், அது தான் தற்காத்துக் கொள்ள ஒரே வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் நீங்கள் எப்படியான வேலைகள் செய்து காசை அனுப்புகின்றீர்கள் என்று ஊரில் உள்ளவர்களுக்கு சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

அரசவேலை இருந்தா மட்டும் சொல்லுங்க.

தரைப்படை,  விமானப்படை, கடற்படையில் சேர்ந்தால் இன்னும் ஐந்து வருட முடிவில் லெப்ரினன்ர், கொமாண்டர் பதவியுயர்வு என்று கேள்விப்பட்டேன் உண்மையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

தரைப்படை,  விமானப்படை, கடற்படையில் சேர்ந்தால் இன்னும் ஐந்து வருட முடிவில் லெப்ரினன்ர், கொமாண்டர் பதவியுயர்வு என்று கேள்விப்பட்டேன் உண்மையே?

அங்கேயும் விவசாயம் தானாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கேயும் விவசாயம் தானாம்.

ஆமா ...கௌரவமான விவசாயி, கௌரவமான மேசன் ,கௌவரவமான தச்சன் 
சிங்களப்பகுதிகளில் முக்கால்வாசி இராணுவத்தில் இருந்து  வெளியால வந்து மீன் விக்கிறதாக கேள்வி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்திற்கு ஆட்களையெடுக்கும் வேலை இன்னும் நடப்பதாகவே தெரிகிறது. இன்றிலிருந்து 2030 வரையான காலப்பகுதியில் வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்தது 15 - 20 வீதமான பணம் பாதுகாப்புச் செலவீனங்களுக்காகவே ஒதுக்கப்படப்போகிறது.

சுகாதார சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றிற்கு ஒதுக்கப்பட்டுவந்த பணம் பாரிய சதவீதங்களினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் (இந்த கொரோணா காலத்திலும்), அரச சேவைகளுக்கான புதிய நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு, சம்பள அதிகரிப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான். நாடு ராணுவ  மயமாக்கலினுள் சிறிது சிறிதாக உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் சில காலத்தில் ராணுவமே ஆட்சியில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஓய்வுதிய திட்டம் நிறுத்தபட்டதில் இருந்து "கையூட்டு" இல்லா அரச வேலையை அவ்வளவாக ஆரும் விரும்புவது இல்லை ..

போட்ட காசை திரும்ப எடுக்க இயலாது ( ?) அங்கு நிலவரம் என்ன.? ஓய்வுதியம் உண்டா.?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இங்கு ஓய்வுதிய திட்டம் நிறுத்தபட்டதில் இருந்து "கையூட்டு" இல்லா அரச வேலையை அவ்வளவாக ஆரும் விரும்புவது இல்லை ..

போட்ட காசை திரும்ப எடுக்க இயலாது ( ?) அங்கு நிலவரம் என்ன.? ஓய்வுதியம் உண்டா.?😊

ஓய்வூதியம் உண்டு, ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கப் போவதாக செய்திகள் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

லெப்ரினன்ர், கொமாண்டர் பதவியுயர்வு

6 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கேயும் விவசாயம் தானாம்.

அப்போ இந்தப் பதவி உயர்வுகள் கிடைக்குமோ இல்லையோ? ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் Electrical வேலை செய்ய ஆட்களில்லை, Plumbing வேலைசெய்ய ஆட்களில்லை, முதியோரை வீட்டிலிருந்து பராமரிக்க ஆட்களை தேடினால் அதற்கும் ஆட்களில்லை, ஆனால் வேலையில்லா திண்டாட்டம் மட்டும் இருக்கிறது. ஊர் நல்லா விளங்கீடும் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.