Jump to content

திரை கடல் ஓடினார்கள், தமக்குத் திரவியம் தேடியல்ல!


Recommended Posts

உலகெங்கும் பரந்துள்ள ஈழத்தமிழன், அவன் புலம்பெயர்ந்த குறுகிய காலத்தினுள்ளேயே கல்வியில், வர்த்தகத்தில் சிகரங்களை தொட்டான், ஆனால் இன்றோ அவன் வாழும் நாடுகளெங்கும் சிறைகளையும் நிரப்பத் தொடங்கியுள்ளான். ஏன் என்ன குற்றம் செய்தான்? கொலைகளுக்காகவா? கொள்ளைகளுக்காகவா? .... இல்லை தாம் வாழும் நாடுகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தமைக்காகாவா??? ....

இல்லவே இல்லை!!! ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக, உலகின் ஓர் மூலையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் தொப்புள்கொடி உறவுகளுக்கு குரல் கொடுத்தமைக்காக! அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு மேல் பொருளாதார தடைகளால் அன்றாடம் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றியதற்காக! இரத்தவெறி பிடித்த இனவாத மிருகங்களின் கொலைக்கரங்களிலிருந்து தம்மை பாதுகாக்க உதவியமைக்காக!

இவைகளுக்கு இன்று சர்வதேசம் வழங்கும் பட்டம் "பயங்கரவாதம்". தம் மக்களை காப்பாற்றும் பயங்கராவதத்தில் ஈடுபட்ட எம்மவர்களில் பலர் கல்வியில் சிகரங்களைத் தொட்டவர்கள். விரும்பியிருந்தால் பாரிய ஊதியங்களுடன் தொழில் புரிந்து ஏனையோர் போன்று புலத்தில் வாழ்வை மனைவி, பிள்ளைகள், குடும்பங்களுடன் அனுபவித்திருக்கலாம். மாடமாளிகைகளில் வாழ்ந்திருக்கலாம்.

மாறாக இரவு பகல் பாராது ஓயாது எம் உறவுகளுக்காக உழைத்தார்கள். இவர்கள், இவர்களது குடும்பங்கள் கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் ஒன்று இரண்டல்ல! கலங்கவில்லை, தடம் புரளவில்லை. பல சோதனைகள் தம்மை நோக்கி வர இருப்பதை முன் கூட்டியும் அறிந்தும், முன் வைத்த காலை பின் வைக்காது "எம் மக்கள், எம் மக்கள், எம் மக்கள்" என்பதே இலக்காக இருந்தது.

இன்று புலத்தில், எம்மக்களை காப்பாற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சிறைகளில் வாடும் எம்முறவுகளின் பலரின் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை இடர் கொண்டுள்ளார்கள். சிலரது குடும்பங்கள் மிக வறுமையான நிலையில் கூட வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

சர்வதேசத்தின் கண்களின் பயங்கரவாதிகளாகியுள்ள எம்மவர்கள், தாயகத்தில் ஓர் போராளி தன் மக்களுக்காக தன்னை எவ்வாறு அர்ப்பணிக்கின்றானோ, அவ்வர்ப்பணிப்புகளுக்கு ஈட்டான அர்பணிப்புகளுடன் பயணித்தவர்கள். தாயகத்தில் எழுதப்பட இருக்கும் புதிய அத்தியாயத்தில் முக்கிய பங்காளர்கள் இவர்கள்.

எமக்கென்று ஓர் நாடு இருந்து, இதே செயல்களை நாம் செய்திருப்பின், அதை சர்வதேசம் "இராஜதந்திர செயற்பாடுகள்" என்று அழகாக அழைத்திருக்கும். எமக்கென்று ஓர் நாடில்லாதமையால், நாம் "பயங்கரவாதிகள்" ஆக்கப்பட்டிருக்கிறோம்.

மாறி வரும் உலக ஓட்டத்தில், எம் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இல்லாது போகும். அதற்காக நாம் பாரிய அளவில் உழைக்க வேண்டும். அது எமது கடமையுமாகும்.

எவ்விடர் வரினும் பயணங்கள் தொடரப்பட வேண்டும் ......

Link to comment
Share on other sites

புலம்பெயர்நாடுகளில் முன்னணித் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களைச் சிறைப் பிடிப்பதன் மூலம், அடுத்தவர்கள் வளராமல் ஒதுங்குவார்கள் எனஇந்த நாடுகளின் செயற்பாட்டாளர்கள் நினைக்கின்றார்கள்.

ஒருவரை ஜெயலில் அடக்க முயும்போது, அடுத்தவர்கள் எம் விடுதலைக் கனவை, அதை விட வீராப்புடன் சுமந்து செல்ல வேண்டும். மரணத்தைத் தவிர, எமக்கு எதையுமே சிங்ள தேசம் தாயகத்தில் விட்டு வைக்கவில்லை. புலத்திலும், சிறைகளைத் தவிர, எதையும் விட்டு வைக்க இந்த நாடுகள் முனையவில்லை. அதைப் பேரெழுச்சி மூலம் தான் வெல்ல முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.