Jump to content

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

திரும்பத் திரும்ப கதைக்கும் ஒரு விடயம்! நாவலர் சாதீயத்தை ஒழிக்க எதுவும் செய்யவில்லை. அதனை சைவ சமயத்தோடு தக்கவைக்கவே அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். 

நாவலரைப் பற்றிய முன்னைய திரிகள்

👆🏿தமிழ் சிறி ஐயாவின் ஆற்றாமை!

👇🏾விசுகு ஐயா

👇🏾நிழலியின் சிக்ஸர்!

https://yarl.com/forum2/thread-3339.html

👆🏿இதில் 2005 இல் @narathar சொன்னதில் ஒரு மாற்றமுமில்லை.

எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது.

👆🏿யாழின் பல முன்னாள், இன்னாள் கருத்தாளர்களின் சுவாரசியமான கருத்துக்கள். இதுக்கு மேல் புதிதாக எதை உரையாடப்போகின்றோம்😄

சில சாம்பிள்ஸ்

நெடுக்ஸின் பம்மல்!👇🏾

சபேசனின் விளக்கம்👇🏾 

நாவலர் அச்சிட்டு வெளியீடு செய்த நூல்களில் சாதி எனும் பதம் எத்தனை தடவைகள் உள்ளன என்று கூறுங்கள். இப்போது தானே PDF வடிவில் இலகுவாக சொற்களின் எண்ணிக்கைகளை அறியலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 191
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இங்கு நாவலரை எதிர்ப்பதால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை.

சைவ சமய மறுப்பு கொண்டவர்கள் கூட (களவாக)  ஆடி அமாவாசை விதரம் இருக்கும் காலம் இது.

ஆனால் ஒன்று இங்கு யாழ் இணையத்தில் நாவலரை எதிர்ப்பவர்கள் ஊரில் இருக்கும் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாவலர் சாதியத்தை சைவ சமயம் ஊடாக ஊக்குவித்தவர் ஆகையால் நீங்கள் நாவலர் பெயரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் புறக்கணியுங்கள் முடிந்தால் சைவ சமயத்தையும் புறக்கணியுங்கள் என்று கூவலாம்.

“ஆனால் தாயக மக்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு எது வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்”

நாவலர் பெருமான் மது, மாமிசம் விலத்தி வைக்கப்பட வேண்டியன. சைவ அனுட்டானங்களை கடைப்பிடிப்பவர்கள் மது, மாமிசம் உட்கொள்பவர்களுடன் விலத்தி நிற்க வேண்டும் என காட்டமாக அறிவுறுத்துகின்றார். கோபம் வராதா பின்ன.  இந்த கொள்கையை எதிர்க்கத்தானே வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாவலர் பெருமான் சாதி வெறி கொண்டவர் என்பது அபத்தமானது.

👇🏾
 
38 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நாவலர் அச்சிட்டு வெளியீடு செய்த நூல்களில் சாதி எனும் பதம் எத்தனை தடவைகள் உள்ளன என்று கூறுங்கள்.

இந்த அபத்தமான கேள்விக்கு நீங்களே எண்ணிப் பதிலைக் கொடுக்கலாம். எனக்கு குரங்கின் மயிரைச் சிரைக்கும் முக்கியமான வேலை இருக்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நாவலர் பெருமான் மது, மாமிசம் விலத்தி வைக்கப்பட வேண்டியன. சைவ அனுட்டானங்களை கடைப்பிடிப்பவர்கள் மது, மாமிசம் உட்கொள்பவர்களுடன் விலத்தி நிற்க வேண்டும் என காட்டமாக அறிவுறுத்துகின்றார். கோபம் வராதா பின்ன.  இந்த கொள்கையை எதிர்க்கத்தானே வேண்டும்.

நீங்கள் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால், ஆறுமுக நாவலர் குறிப்பிடும் சைவத் தமிழர் என்று இங்கே ஒருவரும் இல்லை என்றாகிவிடும். 

பின்னர் நானோ நீங்களோ விவாதிப்பதில் பயனேதும் இல்லை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாவலர் காலத்துக்கு போகிறீர்கள்.

ஒரு புகழ் மிக்க வழக்கறிஞர். கட்சி ஒன்றின் தலைவர். அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடாத்தி.... கொண்டு வருகிறார்....

வெய்யில்..... களைப்பு..... அப்பகுதி.... கட்சித்தலைவர் வீட்டின் முன்னால், கதிரையில் ஓய்வு....

அவர்.... தாழ்தப்பட்டவர்..... அய்யா.... களைத்துப் போய் விட்டீர்கள்..... தேத்தண்ணி குடிக்கிறீர்களா, போடச் சொல்லவா?

அய்யா, அவரைப் பார்த்தார்.... சில கணம்... சிந்தித்தார்..... சா..சா.... உந்த வெய்யிலில... தாரும் வெக்கையா....குடிக்க ஏலுமே தம்பி.... உந்த தென்னையில.... இரண்டு இளனீர் இறக்குமன் குடிப்பம்....

இது, போராட்டம் தொடங்க முதல் நடந்த சம்பவம்.

நாவலர், அந்தக்காலத்தில்..... சமூக சூழலுக்கு அமைய எழுதியது தவறு தான்.... ஆனாலும் அதை இப்போது தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை.

நான்கு நல்லதுக்காக, இரண்டு கெட்டதை கவனிக்க்கூடாது என்பார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு பைபிள் தமிழில் கிடைத்து. அவரது ஆங்கில புலமையால், உண்டான மேல் மட்ட தொடர்பால், சைவம் தலைக்க எடுத்த முயல்வுகளில் தடைகள் இருக்கவில்லை.

சைவ பரிபாலன சபையும் பிறந்தது.

மேலும், எனது கேள்வி ஒன்றுக்கு பதில் தந்த, சைவத் தமிழ் அறிஞர்..... நாவலருக்கு சாதி வெறி என்பதிலும் பார்க்க அவர்கள் மேல் கோபம் இருந்தது என்றார். அவர்களே, மதமாறுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்றும், நாவலர், அவர்களிடம் சைவ பிரசங்கத்துக்கு போனபோது, நீர் தானே பைபிளை தமிழில் எழுதினது.... இப்ப ஏன்.... சைவம் என்று வாறியள் என்று பல இடங்களில்.... விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.

ஆக.... அவரது எழுத்தில் அந்த கோபம் இருந்திருக்கலாம். மேலும்.... அவரது இறுதிக்காலத்தில், அதீத கிறிஸ்தவ மதமாற்றம்..... அதில் தமிழில் பைபிள் எனும் தனது பங்கு குறித்து மிகவும் விரக்தியடைந்து இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாவலரின் கோபம் மதம்மாறியவர்கள் மேல் இருந்ததாமா? 

உங்களுக்கு பதில் சொன்ன சைவத் தமிழ் அறிஞர் ஏன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மதம்மாறினார்கள் என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டார். சாதியில் குறைந்தோர் என்று கருதியோருக்கு சமூகத்தில் கல்வி கற்கும் வசதிகள் நாவலர் வழியில் நின்றோரால் மறுக்கப் பட்ட போது "எல்லாரும் படிக்கலாம்" என்று பள்ளிக் கூடங்களைத் திறந்து விட்டனர் வெஸ்லியன் சபை உட்பட்ட ஆங்கிலப் பாதிரிமார். உயர்வு தரும் கல்வியா, அல்லது ஒதுக்கி வைக்கும் மதமா என்ற கேள்வி எழுந்த போது மக்கள் கல்வியைத் தேர்ந்து மதத்தை மாற்றினர். 

பிரச்சினையின் மூலத்தையே புரிந்து கொள்ளாமல் நாவலர் போன்ற சாதிமான்களுக்கு வெள்ளையடிக்க இன்றும் யாழில் குத்தி முறிவோர் சிலரைப் பார்க்கிறோம் இந்த திரியில்.

அன்று கல்விக்காக மதத்தை தமிழர்கள் மாற்றியிருக்கா விட்டால், இன்று குஜராத் போல அறிவற்ற சாதி , மத வெறியர்கள் நிறைந்த ஒரு பிரதேசமாக இருந்திருப்போமென நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

திரும்பத் திரும்ப கதைக்கும் ஒரு விடயம்! நாவலர் சாதீயத்தை ஒழிக்க எதுவும் செய்யவில்லை. அதனை சைவ சமயத்தோடு தக்கவைக்கவே அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். 

நாவலரைப் பற்றிய முன்னைய திரிகள்

👆🏿தமிழ் சிறி ஐயாவின் ஆற்றாமை!

👇🏾விசுகு ஐயா

👇🏾நிழலியின் சிக்ஸர்!

https://yarl.com/forum2/thread-3339.html

👆🏿இதில் 2005 இல் @narathar சொன்னதில் ஒரு மாற்றமுமில்லை.

எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது.

👆🏿யாழின் பல முன்னாள், இன்னாள் கருத்தாளர்களின் சுவாரசியமான கருத்துக்கள். இதுக்கு மேல் புதிதாக எதை உரையாடப்போகின்றோம்😄

சில சாம்பிள்ஸ்

நெடுக்ஸின் பம்மல்!👇🏾

சபேசனின் விளக்கம்👇🏾 

எல்லாத்தையும் தேடி பிடிச்சதுக்கு நன்றி ஜி.

குரங்குக்கு சிகை அலங்காரம் செய்யும் அதீத வேலைப்பளுவுக்கு மத்தியில் இதை செய்துள்ளீர்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எல்லாத்தையும் தேடி பிடிச்சதுக்கு நன்றி ஜி.

குரங்குக்கு சிகை அலங்காரம் செய்யும் அதீத வேலைப்பளுவுக்கு மத்தியில் இதை செய்துள்ளீர்கள்🤣.

கிருபனின் நினைவாற்றல் மெச்சத்தக்கது.

இத்தனை வருடங்கள் கடந்தும் யாழ் கள உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் மாறவேயில்லை என்பதைக் காட்டிய அரிய snapshot கிருபனுடையது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

நாவலரின் கோபம் மதம்மாறியவர்கள் மேல் இருந்ததாமா? 

உங்களுக்கு பதில் சொன்ன சைவத் தமிழ் அறிஞர் ஏன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மதம்மாறினார்கள் என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டார். சாதியில் குறைந்தோர் என்று கருதியோருக்கு சமூகத்தில் கல்வி கற்கும் வசதிகள் நாவலர் வழியில் நின்றோரால் மறுக்கப் பட்ட போது "எல்லாரும் படிக்கலாம்" என்று பள்ளிக் கூடங்களைத் திறந்து விட்டனர் வெஸ்லியன் சபை உட்பட்ட ஆங்கிலப் பாதிரிமார். உயர்வு தரும் கல்வியா, அல்லது ஒதுக்கி வைக்கும் மதமா என்ற கேள்வி எழுந்த போது மக்கள் கல்வியைத் தேர்ந்து மதத்தை மாற்றினர். 

பிரச்சினையின் மூலத்தையே புரிந்து கொள்ளாமல் நாவலர் போன்ற சாதிமான்களுக்கு வெள்ளையடிக்க இன்றும் யாழில் குத்தி முறிவோர் சிலரைப் பார்க்கிறோம் இந்த திரியில்.

அன்று கல்விக்காக மதத்தை தமிழர்கள் மாற்றியிருக்கா விட்டால், இன்று குஜராத் போல அறிவற்ற சாதி , மத வெறியர்கள் நிறைந்த ஒரு பிரதேசமாக இருந்திருப்போமென நினைக்கிறேன். 

நான் கற்றது யாழ் இந்துக் கல்லாரியில்..... அதுவும் பத்தொன்பதாம் நூறாண்டில் ஆரம்பித்த கல்வி ஸ்தாபனம்....  

நாம், சாதியம் பற்றி பேசினால், அதனுள், மதம் பற்றி பேசுவது தவிர்க்க முடியாமல் போனமை காரணமாக, உங்கள் கருத்துகள் புரிந்தாலும்,

மன்னிக்கவேண்டும்.

உங்கள் பெயர், காரணமாக, இவ்விடயத்தில் உங்களுடன், கருத்தாடுவது.. ஆரோக்கியமானதல்ல என்பதால், தவிர்த்து நகர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ஏன் என் பெயர் உரையாடலுக்குத் தடையாக இருக்க வேண்டுமென விளங்கவில்லை. நாம் பேசுவது historical facts ஆக இருக்கும் போது கிறிஸ்தவன், இந்து , சைவன் என்ற முகம் பார்த்துப் பேச வேண்டியதில்லை!

ஆங்கில மிசனரிப் பாடசாலைகளின் வளர்ச்சியைப் பார்த்த பின்னர், இந்துக் கல்லூரி ஆரம்பித்தது 1886 இல் என்று நினைக்கிறேன், சரியா?

யாழ் மத்திய கல்லூரி 1816 இல் ஆரம்பிக்கபட்டது நாவலரோடு சேர்ந்து பைபிளை தமிழில் மொழிபெயர்த்த வெஸ்லியன் பாதிரியாரால். அங்கே தான் நான் படித்தேன். எல்லோருக்கும் சாதி, சமூக நிலை வேறுபாடில்லாமல் கல்வியைக் கொண்டு வந்தது மத்திய கல்லூரி போன்ற ஆங்கிலப் பாதிரிமார் ஆரம்பித்த கல்வியகங்களே என்ற தரவை ஏற்றுக் கொள்ள சைவன், கிறிஸ்தவன் , இஸ்லாமியன் என்ற பின் தொடுப்புகள் அவசியமற்றவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாவலரின் தவறை சுட்டிக்காட்டியவர்கள் பன்னாடைகள் மற்றும் ஆதரித்து எழுதியவர்கள் அன்னப்பறவைகள் ஆகையால் இனிமேல் இந்த திரியில் எழுதியவர்களில் நான் உட்பட நாவலரின் சாதிவெறியை சுட்டிகாட்டியவர்களை தவிர மற்றையவர்கள் நல்லதை எடுங்கோ தீயதை விடுங்கோ வகையறா ஆகையால் அவர்கள் எல்லாம்..

கருணாவைப்பற்றிவாற திரியில் கருணாவை கொம்மான் கும்மான் என்று பேசமாட்டார்கள்.. கருணாபுலிகளில் இருக்கும்போது செய்த நல்லவற்றை மட்டும் ஆகா ஓகோ என்று பாராட்டுபவர்கள் இனியும் அப்படித்தான் செய்வார்கள்.. ரதியையும் திட்டமாட்டார்கள்..😂😂

ட்களஸ் சைக்கிள் தையல்மிசின் எல்லாம் வாங்கி குடுத்தவர்.. தீவுசனத்துக்கு தோழர்களோட தோழில அரிசிமூட்டை சுமந்து குடுத்தவர்.. தமிழனை சுட்டுகொன்றாலும் உஷ்.. மூச்சு விடமாட்டம்… ஏனெண்டா அவர் செய்த நல்லதை மட்டும்தான் பாக்கோனும்.. நாங்கள் யார்..? அன்னப்பறவை எல்லோ.. அவர் செய்த நல்லத விட்டிட்டு அவற்ற கெட்டதை மட்டும் திரிக்கு திரி எழுதுற பன்னாடை ஆக்களோ நாங்கள்.. நாங்கள் அன்னப்பறவையள்.. அத்தியடி குத்தியன் எண்டும் திட்டமாட்டம்..😂😂 ஏனெண்டா நாங்கள் அன்னப்பறவையள்..😂😂

மகிந்தா.. ஜயோ சொல்லவே வேணும்.. எவ்ளா நல்ல மனுசன்.. ஏ9 றோட்டெல்லாம் போட்டு தந்தது… அந்த மனுசனை போய் கூடாம சொல்லுவமோ.. அவற்ற மகன் யாழ்ப்பாணம் எல்லாம் வாறவர்.. அந்தாளின்ர நல்லதுகள மட்டும் எடுத்து கதைக்கிறனாங்கள்..இனிமேலும் கதைப்பம்.. 

இந்தியா.. ஜயோ எவ்ளா உதவி செய்தது.. பிளைட்டாலா அரிசிமூட்டை எல்லாம் போட்டது.. சிங்களவனோட சேந்து எங்கள அழிச்சாலும் செய்த நல்லதை மட்டும்தான் கதைப்பம்..

திமுக மற்றும் திராவிடம்.. நோ சான்ஸ்.. திட்டவே மாட்டம்..😂

இப்பிடி யாழில நல்லதை மட்டும்தான் கதைப்பம்.. இனி யாழிலை சண்டை வராது.. ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை சாங் தான் யாழில்..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலவரே..... ஞாயிறு வெதும்பலோ?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நாவலரின் கோபம் மதம்மாறியவர்கள் மேல் இருந்ததாமா? 

உங்களுக்கு பதில் சொன்ன சைவத் தமிழ் அறிஞர் ஏன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மதம்மாறினார்கள் என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டார். சாதியில் குறைந்தோர் என்று கருதியோருக்கு சமூகத்தில் கல்வி கற்கும் வசதிகள் நாவலர் வழியில் நின்றோரால் மறுக்கப் பட்ட போது "எல்லாரும் படிக்கலாம்" என்று பள்ளிக் கூடங்களைத் திறந்து விட்டனர் வெஸ்லியன் சபை உட்பட்ட ஆங்கிலப் பாதிரிமார். உயர்வு தரும் கல்வியா, அல்லது ஒதுக்கி வைக்கும் மதமா என்ற கேள்வி எழுந்த போது மக்கள் கல்வியைத் தேர்ந்து மதத்தை மாற்றினர். 

பிரச்சினையின் மூலத்தையே புரிந்து கொள்ளாமல் நாவலர் போன்ற சாதிமான்களுக்கு வெள்ளையடிக்க இன்றும் யாழில் குத்தி முறிவோர் சிலரைப் பார்க்கிறோம் இந்த திரியில்.

அன்று கல்விக்காக மதத்தை தமிழர்கள் மாற்றியிருக்கா விட்டால், இன்று குஜராத் போல அறிவற்ற சாதி , மத வெறியர்கள் நிறைந்த ஒரு பிரதேசமாக இருந்திருப்போமென நினைக்கிறேன். 

வசதி, வாய்ப்புக்களை மனதில்கொண்டு மதம் மாறினார்கள். வசதி, வாய்ப்புக்களை காண்பித்து மதம் மாற்றப்பட்டார்கள், மதம் மாற்றப்படுகின்றார்கள்.

யாழ் வேளாளர் அன்றும், இன்றும் மதம் மாறியதற்கு காரணம் உங்கள் நாவலர் மத மாண்மியம் மூலம் விளக்கப்பட முடியாதே. இதற்கு இனி ஒரு புது தியரி கண்டுபிடியுங்கள்.

31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்கு நாவலரின் தவறை சுட்டிக்காட்டியவர்கள் பன்னாடைகள் மற்றும் ஆதரித்து எழுதியவர்கள் அன்னப்பறவைகள் ஆகையால் இனிமேல் இந்த திரியில் எழுதியவர்களில் நான் உட்பட நாவலரின் சாதிவெறியை சுட்டிகாட்டியவர்களை தவிர மற்றையவர்கள் நல்லதை எடுங்கோ தீயதை விடுங்கோ வகையறா ஆகையால் அவர்கள் எல்லாம்..

கருணாவைப்பற்றிவாற திரியில் கருணாவை கொம்மான் கும்மான் என்று பேசமாட்டார்கள்.. கருணாபுலிகளில் இருக்கும்போது செய்த நல்லவற்றை மட்டும் ஆகா ஓகோ என்று பாராட்டுபவர்கள் இனியும் அப்படித்தான் செய்வார்கள்.. ரதியையும் திட்டமாட்டார்கள்..😂😂

ட்களஸ் சைக்கிள் தையல்மிசின் எல்லாம் வாங்கி குடுத்தவர்.. தீவுசனத்துக்கு தோழர்களோட தோழில அரிசிமூட்டை சுமந்து குடுத்தவர்.. தமிழனை சுட்டுகொன்றாலும் உஷ்.. மூச்சு விடமாட்டம்… ஏனெண்டா அவர் செய்த நல்லதை மட்டும்தான் பாக்கோனும்.. நாங்கள் யார்..? அன்னப்பறவை எல்லோ.. அவர் செய்த நல்லத விட்டிட்டு அவற்ற கெட்டதை மட்டும் திரிக்கு திரி எழுதுற பன்னாடை ஆக்களோ நாங்கள்.. நாங்கள் அன்னப்பறவையள்.. அத்தியடி குத்தியன் எண்டும் திட்டமாட்டம்..😂😂 ஏனெண்டா நாங்கள் அன்னப்பறவையள்..😂😂

மகிந்தா.. ஜயோ சொல்லவே வேணும்.. எவ்ளா நல்ல மனுசன்.. ஏ9 றோட்டெல்லாம் போட்டு தந்தது… அந்த மனுசனை போய் கூடாம சொல்லுவமோ.. அவற்ற மகன் யாழ்ப்பாணம் எல்லாம் வாறவர்.. அந்தாளின்ர நல்லதுகள மட்டும் எடுத்து கதைக்கிறனாங்கள்..இனிமேலும் கதைப்பம்.. 

இந்தியா.. ஜயோ எவ்ளா உதவி செய்தது.. பிளைட்டாலா அரிசிமூட்டை எல்லாம் போட்டது.. சிங்களவனோட சேந்து எங்கள அழிச்சாலும் செய்த நல்லதை மட்டும்தான் கதைப்பம்..

திமுக மற்றும் திராவிடம்.. நோ சான்ஸ்.. திட்டவே மாட்டம்..😂

இப்பிடி யாழில நல்லதை மட்டும்தான் கதைப்பம்.. இனி யாழிலை சண்டை வராது.. ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை சாங் தான் யாழில்..😂😂

நாலவர் பெருமானை கருணா, டக்லஸ், மகிந்தா ஆகியோருடன் ஒப்பிடும் அளவிற்கு அவரால் பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் போல. ஆழ்ந்த அனுதாபங்கள். கர்த்தரின் கிருபை உங்களை காப்பாற்றட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நியாயத்தை கதைப்போம் said:

வசதி, வாய்ப்புக்களை மனதில்கொண்டு மதம் மாறினார்கள். வசதி, வாய்ப்புக்களை காண்பித்து மதம் மாற்றப்பட்டார்கள், மதம் மாற்றப்படுகின்றார்கள்.

யாழ் வேளாளர் அன்றும், இன்றும் மதம் மாறியதற்கு காரணம் உங்கள் நாவலர் மத மாண்மியம் மூலம் விளக்கப்பட முடியாதே. இதற்கு இனி ஒரு புது தியரி கண்டுபிடியுங்கள்.

வசதி வாய்ப்பு, படிப்பு, பணம், பணியாரம் அல்லது ஒன்றுமேயில்லாமல் just for giggles ! மதம் மாறுவது அவரவர் உரிமை! இதை ஏற்கனவே யாழில் பல இடங்களில் விவாதித்தாயிற்று - என் நிலைப்பாடு இது தான் என்று எல்லோருக்கும் தெரிந்ததே!- அதை விடுங்கள்.

ஆனால், ஒரு மதத்தில் இருந்த ஒரு ஒதுக்கல் பிரச்சினையால் மக்கள் அதை விட்டு விட்டுப் போயினர் என்ற வரலாற்றுத் தகவல் உங்களுக்குப் புதிய தியரி! வேறெதையெல்லாம் புதிய தியரி என நம்புகிறீர்கள்? உலகம் கோளமென்று சொல்கிறார்கள், புதிதாக இருக்கிறதா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சிலரின் மறைமுக கருத்து என்னவென்றால் தாழ்த்தப் பட்டவர்கள் என்று சொல்லப்படுவர்கள் தான் மதம் மாறினார்கள் என்ற மாதிரி உள்ளது.அது உண்மை என்றால்  பிழை யாருடையது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஏன் நாவலர் காலத்துக்கு போகிறீர்கள்.

ஒரு புகழ் மிக்க வழக்கறிஞர். கட்சி ஒன்றின் தலைவர். அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடாத்தி.... கொண்டு வருகிறார்....

வெய்யில்..... களைப்பு..... அப்பகுதி.... கட்சித்தலைவர் வீட்டின் முன்னால், கதிரையில் ஓய்வு....

அவர்.... தாழ்தப்பட்டவர்..... அய்யா.... களைத்துப் போய் விட்டீர்கள்..... தேத்தண்ணி குடிக்கிறீர்களா, போடச் சொல்லவா?

அய்யா, அவரைப் பார்த்தார்.... சில கணம்... சிந்தித்தார்..... சா..சா.... உந்த வெய்யிலில... தாரும் வெக்கையா....குடிக்க ஏலுமே தம்பி.... உந்த தென்னையில.... இரண்டு இளனீர் இறக்குமன் குடிப்பம்....

இது, போராட்டம் தொடங்க முதல் நடந்த சம்பவம்.

நாவலர், அந்தக்காலத்தில்..... சமூக சூழலுக்கு அமைய எழுதியது தவறு தான்.... ஆனாலும் அதை இப்போது தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை.

நான்கு நல்லதுக்காக, இரண்டு கெட்டதை கவனிக்க்கூடாது என்பார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு பைபிள் தமிழில் கிடைத்து. அவரது ஆங்கில புலமையால், உண்டான மேல் மட்ட தொடர்பால், சைவம் தலைக்க எடுத்த முயல்வுகளில் தடைகள் இருக்கவில்லை.

சைவ பரிபாலன சபையும் பிறந்தது.

மேலும், எனது கேள்வி ஒன்றுக்கு பதில் தந்த, சைவத் தமிழ் அறிஞர்..... நாவலருக்கு சாதி வெறி என்பதிலும் பார்க்க அவர்கள் மேல் கோபம் இருந்தது என்றார். அவர்களே, மதமாறுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்றும், நாவலர், அவர்களிடம் சைவ பிரசங்கத்துக்கு போனபோது, நீர் தானே பைபிளை தமிழில் எழுதினது.... இப்ப ஏன்.... சைவம் என்று வாறியள் என்று பல இடங்களில்.... விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.

ஆக.... அவரது எழுத்தில் அந்த கோபம் இருந்திருக்கலாம். மேலும்.... அவரது இறுதிக்காலத்தில், அதீத கிறிஸ்தவ மதமாற்றம்..... அதில் தமிழில் பைபிள் எனும் தனது பங்கு குறித்து மிகவும் விரக்தியடைந்து இருந்தார்.

நாவலரை தூக்கிப்பிடித்தால் அவரது நற்செயல்களுடன், அவரது பிற்போக்கான குணாம்சமும் சேர்ந்தே வரும். இது உங்களுக்குப் புரியாததல்ல. 

உண்மையில் இங்கே நாவலரோ அல்லது அவரது பிற்போக்கான சிந்தனைகளோ பிரச்சனை அல்ல. அது சகலரும் அறிந்த உண்மை. இங்கே கவனிக்கப்பட வேண்டியது இரண்டு விடயங்களை.

1) நாவரரை திடீரென  முன்னிறுத்துபவர்களது உண்மையான  நோக்கம்.

2) நாவலரது பிற்போக்கான சிந்தனைகளை மறுதலிப்பவர்களது கபடத்தனம். 

தெளிவாகக் கவனியுங்கள். சைவ சமயத்தையும், அதன் வெளிப்படையான குறியீடாகவுள்ள கோவில்களையும், சைவ சமயத்தையும் பின்பற்றுபவர்களையும் கொன்று குவித்த, அழித்த சிங்கள அரசிடம்தான் இவர்கள் போய் நிற்கிறார்கள்.

இவர்கள் தமது மக்களை காட்டியும் கூட்டியும் கொடுக்கிறார்களா இல்லையா?

அவர்களுக்கா வாதிடும் ஒரு கூட்டம் இங்கே....🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்கு நாவலரின் தவறை சுட்டிக்காட்டியவர்கள் பன்னாடைகள் மற்றும் ஆதரித்து எழுதியவர்கள் அன்னப்பறவைகள் ஆகையால் இனிமேல் இந்த திரியில் எழுதியவர்களில் நான் உட்பட நாவலரின் சாதிவெறியை சுட்டிகாட்டியவர்களை தவிர மற்றையவர்கள் நல்லதை எடுங்கோ தீயதை விடுங்கோ வகையறா ஆகையால் அவர்கள் எல்லாம்..

கருணாவைப்பற்றிவாற திரியில் கருணாவை கொம்மான் கும்மான் என்று பேசமாட்டார்கள்.. கருணாபுலிகளில் இருக்கும்போது செய்த நல்லவற்றை மட்டும் ஆகா ஓகோ என்று பாராட்டுபவர்கள் இனியும் அப்படித்தான் செய்வார்கள்.. ரதியையும் திட்டமாட்டார்கள்..😂😂

ட்களஸ் சைக்கிள் தையல்மிசின் எல்லாம் வாங்கி குடுத்தவர்.. தீவுசனத்துக்கு தோழர்களோட தோழில அரிசிமூட்டை சுமந்து குடுத்தவர்.. தமிழனை சுட்டுகொன்றாலும் உஷ்.. மூச்சு விடமாட்டம்… ஏனெண்டா அவர் செய்த நல்லதை மட்டும்தான் பாக்கோனும்.. நாங்கள் யார்..? அன்னப்பறவை எல்லோ.. அவர் செய்த நல்லத விட்டிட்டு அவற்ற கெட்டதை மட்டும் திரிக்கு திரி எழுதுற பன்னாடை ஆக்களோ நாங்கள்.. நாங்கள் அன்னப்பறவையள்.. அத்தியடி குத்தியன் எண்டும் திட்டமாட்டம்..😂😂 ஏனெண்டா நாங்கள் அன்னப்பறவையள்..😂😂

மகிந்தா.. ஜயோ சொல்லவே வேணும்.. எவ்ளா நல்ல மனுசன்.. ஏ9 றோட்டெல்லாம் போட்டு தந்தது… அந்த மனுசனை போய் கூடாம சொல்லுவமோ.. அவற்ற மகன் யாழ்ப்பாணம் எல்லாம் வாறவர்.. அந்தாளின்ர நல்லதுகள மட்டும் எடுத்து கதைக்கிறனாங்கள்..இனிமேலும் கதைப்பம்.. 

இந்தியா.. ஜயோ எவ்ளா உதவி செய்தது.. பிளைட்டாலா அரிசிமூட்டை எல்லாம் போட்டது.. சிங்களவனோட சேந்து எங்கள அழிச்சாலும் செய்த நல்லதை மட்டும்தான் கதைப்பம்..

திமுக மற்றும் திராவிடம்.. நோ சான்ஸ்.. திட்டவே மாட்டம்..😂

இப்பிடி யாழில நல்லதை மட்டும்தான் கதைப்பம்.. இனி யாழிலை சண்டை வராது.. ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை சாங் தான் யாழில்..😂😂

அடி பின்னீடீங்க புலவரே.

#நல்லதை மட்டும் பேசுவோம் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தப் பட்டியலில் நீங்கள் அமிர், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சிவ சிதம்பரம் ஆகியோரைத் தவறவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ் வேளாளர் அன்றும், இன்றும் மதம் மாறியதற்கு காரணம் உங்கள் நாவலர் மத மாண்மியம் மூலம் விளக்கப்பட முடியாதே. இதற்கு இனி ஒரு புது தியரி கண்டுபிடியுங்கள்.

ஏன் முடியாது?

நாவலர் நல்ல தடிச்ச வெள்ளார்தானே?

சைவ பெருங்குடிதானே?

ஏன் வலு கட்டாயமாக சைவ நிந்தனை செய்த கிறீஸ்தவரின் மதத்தை பரப்பும் பைபிளை மொழி மாற்றி கொடுத்தார்?

சோத்துக்குத்தானே?

ஆகவே தாழ்தபட்ட மக்கள் மனிதர் என்ற கெளரவம் தேடி மதம் மாற,

உயர் குடி என தம்மை அழைக்கும் மனோவுயாதியில் இருந்தவர்கள் சோத்துக்கு மாறி இருக்கலாம்.

தாம் சோத்துக்கு மாறியதால் ஏனையவரையும் அப்படி நினைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதல்லாம் சரி.ஆறுமுக நாவலர் என்டுதான் எனக்குத் தெரியும்.இங்கு( திரியில் ) 2 முகம் இருக்கு.மிச்ச 4 முகங்கள் எங்கே.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை சிலரின் மறைமுக கருத்து என்னவென்றால் தாழ்த்தப் பட்டவர்கள் என்று சொல்லப்படுவர்கள் தான் மதம் மாறினார்கள் என்ற மாதிரி உள்ளது.அது உண்மை என்றால்  பிழை யாருடையது.

இங்கே கனடாவில் எனக்குத் தெரிந்த உயர்சாதிப்  பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கத்தோலிக்க பாடசாலையில் சேர்ப்பதற்காக கத்தோகிக்கராக தன்னை மாற்றிக்கொண்டார். 

ஆனால் நடைமுறையில் அவர் சைவ சமயத்தைத்தான் தொடர்ந்தும் பூசிக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இங்கே கனடாவில் எனக்குத் தெரிந்த உயர்சாதிப்  பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கத்தோலிக்க பாடசாலையில் சேர்ப்பதற்காக கத்தோகிக்கராக தன்னை மாற்றிக்கொண்டார். 

ஆனால் நடைமுறையில் அவர் சைவ சமயத்தைத்தான் தொடர்ந்தும் பூசிக்கிறார். 

ஏற்கனவே கூறியது தான், மதம் மாறியவர்கள் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப மாறினார்கள் & மாறுகிறார்கள்.

இன்று ஆட்சியில் சிங்களவர்கள் இருப்பதால் அவர்களிடம் தான் போகவேண்டும் நடைமுறை உதவிகளுக்கு. அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல.

இங்கு யாருமே நாவலரினது சாதியத்தை தூக்கிப்பிடிக்கவும் இல்லை வளர்கவும் இல்லை. 

நாவலரின் பெயரில் சைவசமயம் வளர்க்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நாலவர் பெருமானை கருணா, டக்லஸ், மகிந்தா ஆகியோருடன் ஒப்பிடும் அளவிற்கு அவரால் பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் போல. ஆழ்ந்த அனுதாபங்கள். கர்த்தரின் கிருபை உங்களை காப்பாற்றட்டும்.

இப்போது நீங்கள் அன்னமா அல்லது பன்னாடையா? என்கின்ற கேள்வி எழுகிறது. 

ஏனென்றால் ஓணாண்டி கூறியது நன்மையானவற்றை மட்டும் கதைப்போம் என்கின்ற வேடதாரிகள் தொடர்பானது. நீங்கள் கூறுவதோ ...🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாவலரின் பெயரால் சைவசமய வினாவிடை போட்டி நடந்தால் சிறீலங்காவில் சாதியத்தை காட்டி எத்தனை பேர் புறக்கணிப்பர்?

2 minutes ago, Kapithan said:

இப்போது நீங்கள் அன்னமா அல்லது பன்னாடையா? என்கின்ற கேள்வி எழுகிறது. 

ஏனென்றால் ஓணாண்டி கூறியது நன்மையானவற்றை மட்டும் கதைப்போம் என்கின்ற வேடதாரிகள் தொடர்பானது. நீங்கள் கூறுவதோ ...🤦🏼‍♂️

பன்னாடை வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்யும்? எதனை தன்னில் வைத்துள்ளதோ அவற்றை வைத்தே ஒப்பீடும் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

இங்கே கனடாவில் எனக்குத் தெரிந்த உயர்சாதிப்  பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கத்தோலிக்க பாடசாலையில் சேர்ப்பதற்காக கத்தோகிக்கராக தன்னை மாற்றிக்கொண்டார். 

ஆனால் நடைமுறையில் அவர் சைவ சமயத்தைத்தான் தொடர்ந்தும் பூசிக்கிறார். 

இது பிரிட்டனில் கூட இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே மதம் மாற்றப்பட்டனர், தாழ்தப்பட்டவர் மட்டுமே மிசனரி பாடசாலைகளால் பயன் அடைந்தார்கள் என்பது தவறு.

அங்கேயும் சாதீயம் இருந்தது என்பது மறுக்க முடியாது.

யாழ் இந்து, வைத்தீஸ்வரா, மகாஜனா, வேலணை மத்திய மகா வித்தியாலயம் போன்ற கல்விக்கூடங்களில் தாழ்த்தப்பட்டோரும் கல்வி பயின்றார்கள்.

இப்போது ஆட்சியில், பிரதமராக இருக்கும், மகிந்தவை சந்தித்த காரணமாக,ஆறுமுக நாவலரை ஒரேயடியாக போட்டுத் தாக்க முடியாது.

இன்று இலங்கையில் பாடசாலையில் மூன்று முதல் பன்னிரண்டு வரை, சைவ சமயக்கல்வி கற்பிக்கப் படுவதன் காரணம், நாவலர்.

இது தமிழக பாடசாலைகளில் இல்லை.

தவிர, நாவலர், யாழிலும், சிதம்பரத்திலும் சைவப் பிரகாச பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்த வழிவகை செய்தார். அவை இன்றும் நடக்கின்றது. அங்கே உயர் சாதியினர் மட்டுமே கற்க முடியும் என்று சொன்னதாக தெரியவில்லை.

ஆகவே, நாவலர், சைவசமயத்துக்கு மட்டுமல்ல, தமிழர்கள் கல்வி கற்கவும் பெரும் தொண்டாற்றி உள்ளார்.

ஆக, கிறிஸ்தவ மிசனரிகள் மட்டுமே தான் படிக்க வைத்தது, அறிவுக்கண் திறந்தது என்பது தவறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.