Jump to content

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோண்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டியது கட்டாயம். மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1257342

 

 

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: நீராரும் கடலுடுத்த பாடலின் வரலாறும் பின்னணியும்

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
25 ஜனவரி 2018
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு?

(அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று இன்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஷயம் சர்ச்சையானபோது பிபிசி தமிழில் வெளியான செய்தி தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றை, பின்னணியை ஆராய்ந்தது. அதனை இப்போது மறு பகிர்வு செய்கிறோம்.)

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றார். "மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்" என்று கூறிய அவர் "இது எங்கள் சம்பிரதாயம்" என்றும் தெரிவித்தார்.

தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்" என்று கூறிய அந்த நிர்வாகி, "தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?" என்று கேள்வி எழுப்பினார்.

"சர்ச்சைக்குள்ளான அந்த நிகழ்ச்சி தனியார் நிகழ்ச்சி என்பதால், இறைவணக்கம்தான் போட்டிருக்கவேண்டும், ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் போட்டார்கள் என்று தெரியவில்லை", என்றும் அவர் கூறினார்.

 

’தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?': சங்கரமடம் கேள்வி

பட மூலாதாரம்,SHRI KANCHI KAMAKOTI PEETAM, KANCHIPURAM

காஞ்சி மடம் தமிழுக்கு நிறைய செய்திருப்பதாகக் கூறிய அவர், "1930களிலேயே தமிழ்ப் பண்டிதர்களுக்கு சம்ஸ்கிருத பண்டிதர்களுக்கு சமமாக தங்கத்தாலான தோட்டா, (கங்கனம் போன்ற ஓர் ஆபரணம்) போட்டிருக்கிறார் அப்போதைய சங்கராச்சாரியார்" என்றார் அவர்.

"கடந்த காலத்தில் சங்கர மடத்தின் கல்வி நிறுவனங்களின் விழாக்களுக்கு குடியரசுத் தலைவர் போன்றவர்கள் வருகை தந்தபோது அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது மடாதிபதிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்த தரவுகளைத் திரட்டிவருகிறோம். அது கிடைத்தால் சமூக வலைத்தளத்தில் தெரிவிப்போம்", என்றார் அவர்.

தமிழ்த்தாய் வாழ்த்து, பின்னணி என்ன?

'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? சங்கராச்சாரியார் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுக்கிறார்? தமிழ்த் தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை என்ன சொல்கிறது? இதன் பின்னணியைப் பார்ப்போம்.

பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றபோது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. ஆனால், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்துநின்றார். இந்த காட்சிகள் தொலைக் காட்சியில் வெளியானதை அடுத்து இது பெரும் விவகாரமாக வெடித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லையென்று சங்கரமடத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல என்று அவர்கள் கூறியதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891ல் வெளியான தமது 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா.

 

மனோன்மணீயம் சுந்தரனார்

 

படக்குறிப்பு,

மனோன்மணீயம் சுந்தரனார்

1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

நீக்கப்பட்ட வரிகள்

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்..." என்பதே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்

மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை.

மதச்சார்பின்மையும் தமிழ் வாழ்த்தும்

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

 

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை.

 

படக்குறிப்பு,

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை.

1970ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.

மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பாரதிதாசன் பாடல் பரிசீலனை

பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார்.

விஜயேந்திரர் கலந்துகொண்டது நேரடியாக அரசு நிகழ்ச்சி அல்ல என்றபோதும், ஆளுநர் கலந்துகொண்டதால் இது அரசு நிகழ்ச்சிக்கு ஒப்பானதே என்று கூறினார் ராசேந்திரன்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது சங்கர மடத்தின் மரபல்ல என்று கூறியிருப்பது மனதை வேதனைப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

"சங்கராச்சாரியார்கள் உயர்ந்த பீடத்திலும், பார்க்க வருகிறவர்கள் தரையில் அமர்வதாகவுமே இவர்கள் மரபு இருந்துள்ளது. ஆனால், ஜெயலலிதா வந்தபோது அவருக்கு சரியாசனம் கொடுத்து அவர்கள் அந்த மரபை மீறவில்லையா?" என்று கேட்டார் ராசேந்திரன்.

 

மு.கருணாநிதி M.Karunanidhi

பட மூலாதாரம்,GNANAM

 

படக்குறிப்பு,

மு.கருணாநிதி

தேசிய கீதம் என்பதுகூட அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதல்ல, அரசியல் நிர்ணய சபையால் அச்சபை முடிவதற்கு முன்பு கடைசி நேரத்தில் ஏற்கப்பட்டதுதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் குறித்த இழிந்த பார்வையா?

இதுகுறித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகுவிடம் கேட்டபோது, "தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரரின் செயல் நிச்சயம் தமிழை, தமிழர்களை அவமதிக்கும் செயல்தான். இது ஒரு தனித்த செயல் மட்டுமல்ல. தமிழ் மொழி பற்றி, சங்கரமடத்தின் பார்வையை வெளிக்காட்டுவதே இந்தச் செயல். தமிழ் பற்றிய சங்கர மடத்தின் பார்வைக்கு பல சான்றுகள் உண்டு," என்றார்.

"ஆட்சி மொழிக் காவலர் ராமலிங்கனார் அப்போது மடாதிபதியாக இருந்த சந்திரசேகரரை ஒரு முறை சந்தித்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சந்திரசேகரர் சம்ஸ்கிருதத்திலேயே பதில் சொன்னதாகவும், தமிழ் தெரிந்தும் அவர் ஏன் தமிழில் பேசவில்லை என்று கேட்டபோது, பூஜை நேரத்தில் அவர் 'நீச பாஷை'யில் பேசமாட்டார் என்று பதில் சொல்லப்பட்டதாகவும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதை ராமலிங்கனாரே பதிவு செய்துள்ளார். இதுதான் தமிழ் குறித்த சங்கர மடத்தின் பார்வை," என்றார் தியாகு.

 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அமர்ந்திருக்கும் விஜயேந்திரர்

பட மூலாதாரம்,TWITTER

"கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், இந்திய தேசியத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பொது நிகழ்வுகளில் பங்கேற்ற நேரங்களில் கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதெல்லாம் பெரியார் எழுந்து நின்றுள்ளார். அது சக மனிதர்களுக்கான மரியாதை," என்றார் அவர்.

இந்த செயலுக்கு தண்டனையெல்லாம் அளிக்க சட்டத்தில் வழியில்லை. ஆனால், இதுபற்றி விஜயேந்திரர் விளக்கம் அளிக்கவேண்டும். வருத்தமாக இருந்தாலும், தமிழ் பற்றிய அவர்களது பார்வையாக இருந்தாலும் அவரே அதை வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றார் தியாகு.

அரசியல் எதிர்வினை

தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இது தமிழ்த்தாயை அவமானப்படுத்தியதாகவே கருதப்படும் என்று குறிப்பிட்டார்.

தி.க., ம.தி.மு.க., பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயேந்திரருக்கு இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக காவல் நிலையம் ஒன்றில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியினர் தீவிரமாக கருத்துக்களை கூறிவந்த நிலையில், இந்த விவகாரம் வெடித்திருப்பது சமூக வலைதளங்களில் வாதப் பிரதிவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

#tamil_insulted, #விஜயேந்திரா_மன்னிப்புக்கேள் என்ற ஹேஷ்டாகுகளுடன் பலரும் கண்டனக் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

(பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் அளித்த தகவல்களுடன்.)

https://www.bbc.com/tamil/india-42812647

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வர் போற வாற இடங்களிலை எல்லாம் ஒரே உத்தரவுகளாய் இருக்கின்றது. எல்லாம் இல்லாவிட்டாலும் ஒரு சிலதாவது நிறைவடைய வாழ்த்துக்கள். 😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஸ்டாலின் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கின்றார்.... பாராட்டுகள்!

ஐயோ எரியுதடி மாலா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் சிக்ஸர் சிக்ஸராக அடிக்க வெளிநாட்டில் உள்ள அண்ணாமாருக்கு பிரஷர் ஏறபோகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஐயோ எரியுதடி மாலா🤣

42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஸ்டாலின் சிக்ஸர் சிக்ஸராக அடிக்க வெளிநாட்டில் உள்ள அண்ணாமாருக்கு பிரஷர் ஏறபோகிறது.

 

யார் செய்தாலும் ஊழல்,லஞ்சம்  இல்லாமல் செய்தால் சந்தோசம். நீங்கள் அனைவரும் நினைக்கும் போல் நல்ல செயலுக்கு எதிரிகள் அல்ல.

இன்னும் நாள் இருக்குத்தானே.......உத்தரவிட்டதெல்லாம் செயல் வடிவங்களாக உருப்பெறுகின்றதா என பார்ப்போம்.

ஆடு அறுக்க முதல் வேறு எதையும் அறுத்து புழகாங்கிதம் அடையாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

யார் செய்தாலும் ஊழல்,லஞ்சம்  இல்லாமல் செய்தால் சந்தோசம். நீங்கள் அனைவரும் நினைக்கும் போல் நல்ல செயலுக்கு எதிரிகள் அல்ல.

இன்னும் நாள் இருக்குத்தானே.......உத்தரவிட்டதெல்லாம் செயல் வடிவங்களாக உருப்பெறுகின்றதா என பார்ப்போம்.

ஆடு அறுக்க முதல் வேறு எதையும் அறுத்து புழகாங்கிதம் அடையாதீர்கள்.

அண்ணை நான் உத்தரவையிட்டு புளகாங்கிதம் அடையவில்லை அண்ணை.

உத்தரவுக்கே, அதுக்கு சிக்ஸர் எண்டு சொன்னதுக்கே, எரிய போகுது என்பதையே சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை நான் உத்தரவையிட்டு புளகாங்கிதம் அடையவில்லை அண்ணை.

உத்தரவுக்கே, அதுக்கு சிக்ஸர் எண்டு சொன்னதுக்கே, எரிய போகுது என்பதையே சொன்னேன்.

ஐயா ஸ்டாலின் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் ஒரே உத்தரவாய் கிடக்கு அதுதான் சொன்னனான்.......அங்காலை மோன்காரன்ரை உத்தரவுகளும் எக்கச்சகம்.😁

எல்லாம் சிமாஸ்கோப் படம் பாத்தமாதிரி கிடக்கு.....இன்னும் நாள் இருக்கெல்லே....பிறவு சந்திப்பம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள். செயல்வடிவம் பெறவைப்பதிலே அதன் வெற்றி  தங்கியுள்ளதென்பதை அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

நன்றி - யூரூப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/9YNzO7JOCg/

ஒரு பக்கம் தமிழ்தாய் வாழ்த்து

அடுத்த பக்கம் தமிழே எழுத வாசிக்க தெரியாத தலைமுறை.

வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்நாடு மாநில அரசிற்கு..

கருணாநிதியை விட ஸ்ராலின் ஆபத்தானவர் (Stalin is more dangerous than Karunanidhi) என எச்.ராஜா வகையராக்கள் புலம்புவதே இப்போதைக்கு போதுமானது... மற்றும்படி சொல்வதற்கேதும் இல்லை.. பொறுத்திருந்து பார்பதே சரி.. கோத்தபாய தொடங்கும் போதும் இப்படித்தான் அமர்க்களப்பட்டார்..

சற்றும் தாமதிக்காது, தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு நாள் என்ற அறிவிப்பினையும் உடனடியாக வெளியிடுவதே சாலச் சிறப்பு... இன்னும் ஒரு மாதமே  இருக்கின்றது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

 சிக்ஸர்  சிக்ஸர்  சிக்ஸர்  சிக்ஸர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

Bild

 சிக்ஸர்  சிக்ஸர்  சிக்ஸர்  சிக்ஸர் 😁

அண்ணை நீங்கள் பகிர்ந்திருப்பதின் படி, இடது பக்கம் உள்ளது பொய் செய்தி. வலது பக்கம் உள்ளதுதான் உண்மையான செய்தி?

நான் விளங்கி கொண்டது சரிதானே?

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

அண்ணை நீங்கள் பகிர்ந்திருப்பதின் படி, இடது பக்கம் உள்ளது பொய் செய்தி. வலது பக்கம் உள்ளதுதான் உண்மையான செய்தி?

நான் விளங்கி கொண்டது சரிதானே?

நீங்கள் விளங்கி கொண்டது தான் சரி.  fact check செய்யப்பட்டு மிக தெளிவாக எது பொய் செய்தி எது உண்மை செய்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றை பொய் செய்திகளுடன் பரப்புபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றார்கள்.  உண்மை வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்களை இலக்கு வைத்து தான் இவ்வாறான பொய் வரலாற்றுப் பதிவுகள்  இணையத்தில் ஆங்காங்கே துணுக்குகள், மீம்ஸ் கள் போலப் பரப்பப்படுகின்றன.  பொறுமையாக வரலாற்றை வாசித்து அறிய முடியாதவர்கள் இந்த துணுக்குகள், மீம்ஸ்கள் நம்புவிடுவர். அதுவும்  fact check செய்து தெளிவாக தமிழில் எழுதி இருப்பதை தவறாக விளங்குவதென்பது கொடுமை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

வரலாற்றை பொய் செய்திகளுடன் பரப்புபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றார்கள்.  உண்மை வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்களை இலக்கு வைத்து தான் இவ்வாறான பொய் வரலாற்றுப் பதிவுகள்  இணையத்தில் ஆங்காங்கே துணுக்குகள், மீம்ஸ் கள் போலப் பரப்பப்படுகின்றன.

முதலில் மதம் மாற்றிகளும் மதவாதிகளும் தான் அப்படியான மோசடிகளை செய்துவந்தனர். இப்போது அரசியல் காரணங்களுக்காகவும் அப்படி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அண்ணை நீங்கள் பகிர்ந்திருப்பதின் படி, இடது பக்கம் உள்ளது பொய் செய்தி. வலது பக்கம் உள்ளதுதான் உண்மையான செய்தி?

நான் விளங்கி கொண்டது சரிதானே?

Bild

Bild

Link to comment
Share on other sites

30 minutes ago, குமாரசாமி said:

Bild

Bild

குமாரசாமி நீங்கள் இணைத்தது ஒரு சிலரால் வேண்டுமென்று பரப்பப்பட்ட fake பதிவு.  

நீங்கள் இணைத்த பொய் பதிவு பலரால்  fact check செய்யப்பட்டு உண்மையில் “ திராவிடர் நல் திருநாட்டில்” என்று இருப்பதை வெளிக்காட்டி நிற்க நீங்கள் மீண்டும் அந்த பொய் பதிவை இணைத்துள்ளீர்கள். 

Fact check செய்யப்பட்ட இணைய முகவரி. 

https://tamil.factcrescendo.com/dravidian-parties-not-changed-tamil-national-anthem/

large.8EDA4F87-36D9-4E01-AE06-A1CB7FA0BF78.png.2a7b92781b42237f1ce4a3b77f511d46.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழலை பிடிக்கப்போனவன் ஊழல் செய்வதுபோல் https://tamil.factcrescendo.com/ழும் விமரிசனம்கள் உண்டு .

On 17/12/2021 at 21:59, குமாரசாமி said:

ஐயா ஸ்டாலின் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் ஒரே உத்தரவாய் கிடக்கு அதுதான் சொன்னனான்.......அங்காலை மோன்காரன்ரை உத்தரவுகளும் எக்கச்சகம்.😁

எல்லாம் சிமாஸ்கோப் படம் பாத்தமாதிரி கிடக்கு.....இன்னும் நாள் இருக்கெல்லே....பிறவு சந்திப்பம்.🤣

எல்லா உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டால் சந்தோசம் ஆனால் செய்வது ஒன்று நடப்பது வேறு பொனகிழமை குவாரிகள் சங்கம் பொங்கியெழுந்துவிட்ட்டது கடைசியா இந்தக்கிழமை 

Image

இதையும் பக்ட் செக் ன் சொந்தக்காரர்கள் உண்மையா பொய்யா என்று அறிந்து சொல்லவும் 😶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

இதையும் பக்ட் செக் ன் சொந்தக்காரர்கள் உண்மையா பொய்யா என்று அறிந்து சொல்லவும் 😶

இதிலையும் சரி பிழை இருக்குமோ?

 

Bild

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

ஊழலை பிடிக்கப்போனவன் ஊழல் செய்வதுபோல் https://tamil.factcrescendo.com/ழும் விமரிசனம்கள் உண்டு .

எல்லா உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டால் சந்தோசம் ஆனால் செய்வது ஒன்று நடப்பது வேறு பொனகிழமை குவாரிகள் சங்கம் பொங்கியெழுந்துவிட்ட்டது கடைசியா இந்தக்கிழமை 

Image

இதையும் பக்ட் செக் ன் சொந்தக்காரர்கள் உண்மையா பொய்யா என்று அறிந்து சொல்லவும் 😶

ஒரு பொய் முயற்சி பிடிபட்டு விட்டது, இனி தொடர்பேயில்லாமல் கிறீசைப் பூசிக் கொண்டு ஓட வேண்டியான்!😎 #எரியுதடிமாலா! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஒரு பொய் முயற்சி பிடிபட்டு விட்டது, இனி தொடர்பேயில்லாமல் கிறீசைப் பூசிக் கொண்டு ஓட வேண்டியான்!😎 #எரியுதடிமாலா! 

உங்களை போல்தான் நானும் நடைமுறையில் வந்தால் சந்தோசம் என்று எழுதியுள்ளேன் இதுக்குமேல அதென்ன எரியுதடிமாலா  அதனென்ன மாலா ?

15yearsofimsaiarasan23ampulikesi hashtag on Twitter

ஓ  அக்கா மாலா வை சொல்கிறிர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

அதென்ன எரியுதடிமாலா  அதனென்ன மாலா ?

இதில் வடிவேலுவின் ரியாக்‌ஷன் (நிலை)தான் எரியுதடி மாலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

 

 

ஓ  அக்கா மாலா வை சொல்கிறிர்களா ?

பெருமாள்,  உரையாடல்களில் "பேச்சு உருவகம்" (figure of speech , சரியான மொழிபெயர்ப்பா?) என்று ஒரு முறை இருக்கிறது.

ஒரு நிலைமையை பொட்டில் அடித்தது போன்று புரியச் செய்ய இதை எல்லா மொழிகளிலும் பயன்படுத்துவர். இந்த "பேச்சு உருவகத்தில்" சொல்லப் படுவது மொழிப்பரிச்சயம் குறைந்தோருக்கு குழப்பமான புரிதலை ஏற்படுத்தும். உதாரணமாக நீங்கள் "எரியுதடி மாலா" உணர்த்த நினைப்பதை தவறவிட்டு விட்டு, "மாலா" யாரென்று அதிவேக நெடுஞ்சாலையில் ஏறித் தேடி, பிழையான எக்சிற்றை எடுத்திருப்பது போல! 😎

இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க வழி: வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

ஒரு பொய் முயற்சி பிடிபட்டு விட்டது, இனி தொடர்பேயில்லாமல் கிறீசைப் பூசிக் கொண்டு ஓட வேண்டியான்!😎 #எரியுதடிமாலா! 

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் முழுப்பாடலும் படித்தால் இறை நம்பிக்கை உண்மையானது அதை கருணாநிதி அவர்கள் அந்த இறைநம்பிக்கை மற்றும் தமிழால் மற்றைய திராவிட மொழிகள் பெற்ற செழுமைகள் உள்ள பகுதியை தூக்கி விட்டு தங்களுக்கு ஏற்றவாறு வெட்டி  கொத்தி வைத்துள்ளனர் .

கொசுறாக இந்தமனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார்  தமிழரல்ல கிரீஸை  பூசிக்கொண்டு கூகிள் பன்னும்கோ விடைகள் குவிந்து கிடக்கின்றன  .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.