Jump to content

வெற்றியர்


Recommended Posts

Vanie J Kalapan is with Param Latha and 

267715920_10160039186944236_678851298289

267481580_10160039186954236_592288859453

269014526_10160039186394236_256217395902

269480321_10160039186484236_720551925064

269302746_10160039186449236_540338615502

268423564_10160039188494236_111295076872

 
💐தென்மராட்சியின் சிற்பிகள்💐
1. சிரஞ்சீவி.பூலோகசிங்கம் வெற்றிவேலு
(முன்னாள் அதிபர் ,யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி)
தோன்றில் புகழொடு தோன்றுக அஃதின்றேல் தோன்றில் தோன்றாமை நன்று என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க,முப்பத்து மூன்று ஆண்டுகள் ஒரே கல்லூரியாம் சாவ இந்துவில் அதிபராய் ஆசானாய் கண் துஞ்சாது பசி நோக்காது ,மெய்வருத்தம் பாராது கடமை வீரனாய் ,பௌதீக வளங்களால் பின் தள்ளப்பட்டிருந்த எம் கல்லூரியை கவின் கல்லூரியாய் மாற்றிய சிற்பி
.ஈழ வள நாட்டில் செழுமை நிறைந்த தென்மராட்சிப் பதியில் வளமிகு நுணாவிலில் பூலோகசிங்கம் பொன்னம்மா தம்பதியினரிற்கோர் செல்வ மகவாக 30.04.1922 வந்து உதித்தார்.
வெற்றி வேலு என்ற பெயரிற்கேற்ப தான் மட்டுமல்ல தென்மராட்சி மண்ணிற்கே வெற்றியைத் (சாவ-இந்து)தேடித் தந்த மனிதர்.
அப்போது இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் சரித்திரத்தில் கிரீடம் பதிக்கப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை .
தந்தையார் தலைசிறந்த வைத்தியராக விளங்கினார்.
குமாரசாமி ,சுந்தரலிங்கம் ,வேதநாயகி ,செல்வநாயகி ,இராஜநாயகி என்ற உடன் பிறந்தவர்களுடன் மிகவும் கெட்டிக்காரனாக வளர்ந்தார்.
இவருடைய தந்தை வழிப் பாட்டனார் சுப்பிரமணியம் தென்மராட்சி பிரிவின் பதிவாளராக இருந்தார்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக இந்தப் பதிவாளர் பதவி இவர்கள் குடும்பத்திற்கு உரித்தாக இருந்தது .
தாய் வழிப்பாட்டனார் கதிர் வேலு உடையார் ஒரு நில உரிமையாளர் ஆவர்.
சிறு வயதிலேயே பெரும் அறிவாற்றல் மிகுந்த இவர் ஆரம்ப கல்வியை ஶ்ரீ கணேச வித்தியாலயத்தில் கற்றார், இவருடைய தாய் வழிப் பாட்டனார் இப் பாடசாலையின் ஸதாபகராகவும் இவர் முதல் மாணவராயும் இருந்தார்கள்.
தொடர்ந்து டிறிபேர்க் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி போன்ற பிரபல கல்லூரிகளில் கல்வியையும் பெற்றி ஒரு சிறந்த கல்வியாளனாக ஜொலித்தார்.
இவர் புனித பத்திரிசியார் கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீரனாக விளங்கினார்.
சொக்கர் விளையாட்டில் சிறந்து விளங்கினார். ஒழுக்கத்தில் புகழ் பெற்ற கத்தோலிக்க வணபிதா father Longஇவருடைய அதிபராவார்.
இவர் அயர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்து இருந்தார்.மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.
இவர் Father long அவர்களது ஒழுக்க கோட்பாடுகளை பின்பு சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மகத்தான வளர்ச்சியிற்குப் பயன்படுத்தினார்.
தந்தையின் விருப்பிற்கிணங்க சில காலம் யாழ்ப்பாணக் கல்லூரியில் மருத்துவக் கற்கை நெறியை (pre medical course)கற்றார்.தனது தேடலிற்கு சரியான விடை கிடைக்காத காரணத்தினால் அதை விட்டு புகையிரத நிலையத்தில் எழுதுவினையராய் சில காலம் கடமையாற்றினார்.அப்போதுதான் தன் திறமையை நிரூபிக்கும் களத்தை மூத்த அண்ணன் குமாரசாமியின் உந்து கோலுடன் பற்றிக் கொண்டார்.இந்தியாவிற்கு சென்று சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் (madras Christian college)இல் கற்று விஞ்ஞானப் பட்டதாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஆளுமையும் இளமைத் துடிப்பும் கொண்ட விஞ்ஞானப் பட்டதாரியை 1951 சாவகச்சேரி இந்துக்கல்லூரி அன்னை பற்றிப் பிடித்து தனதாக்கி கொண்டாள்.திரு A.S கனகரட்ணம் அதிபர் காலப்பகுதியில் இவரது திறமைகளைஅவர் வெளிக்கொணர்ந்தார்.தனது ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கற்பித்தலினால் குறுகிய காலப் பகுதியில் எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்தார்.அதிபர் இவரிடம் முக்கியமான பொறுப்புக்களை கொடுத்திருந்தார் .
1952-1953 காலப்பகுதியில் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த இவர் அதிபருடன் இணைந்து சிறந்த மாணவர் சபையை உருவாக்கினார்.
மாணவர்களினால் மாணவர் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களை வழிநடாத்தும் பணியை ஒழுங்கமைத்து இந்து அன்னையை நெறிப்படுத்தினார்
பாடசாலை பரிசளிப்பு விழாப் பொறுப்பை முதன் முதல் ஏற்று சிறப்புற நடாத்தி எல்லோர் பாராட்டையும் பெற்றார்.
1954 புரட்டாதி மாதம் இரண்டாம் திகதி சக ஆசிரியை நாகேஸ்வரி அவர்களை திருமணம் செய்து நல் இல்லறம் கொண்டு சிறந்திட்டார்.
ஆசிரியை நாகேஸ்வரி அவர்கள் நற்பண்புகளும் பொறுமையும் கொண்ட குணவதியாக இருந்தமை இவருடைய வாழ்வு ஏற்றம் பெற்றமைக்கு மிகவும் முக்கிய காரணம் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
நாகேஸ்வரி ஆசிரியர் கோண்டாவில் கிராமத்தில் புகழ் பூத்த சேனாதிராசா நாகரத்தினம் அவர்களின் மகளாவார் .
உயர்திரு வெற்றிவேலு அவர்கள் 1956 இல் அந்நாளிலேயே இவர் லண்டனிற்கு சென்று உயர் கல்வியை(P.G.C.E)பெற்று மேலும் சிறப்புற்றார்.
லதா,அசோகன்,குமாரன்,இராதாகிருஷ்ணன்,செல்வரஜனி இவரின் பெயர் சொல்லும் பிள்ளைகளாவர் .இவர்கள் தந்தைக்கும் சற்றும் சளைக்காது நல்ல குணவான்களாகவும் கல்விமான்களாகவும் இருக்கின்றார்கள்.
அதற்கேற்ப சிவகுமார்,புவனேஸ்வரி,வாசுகி,தாரணி ,முகுந்தன் என்ற சிறப்பான மருமக்களும் அமைந்திருந்தனர்.
ஹரி சரவணா,சிந்தி வைதேகி
ஹரி கஜன்,அரன் செந்தூரன்
,விதுஷா,ஹிமவான்,சாம்பவி,வருண்,ஜீவன்,
கீர்த்தனா,கீர்த்திகன் என்ற அன்னாரது பதினொரு பேரமக்களும் சுட்டித்தனம் மிக்க கெட்டித்தனமாக அவரை மகிழ்வித்திருந்தனர்.
அதிபர் கந்தையா அவர்களால் முன் மொழியப்பட்ட சாவ இந்துவின் விஞ்ஞான ஆய்வுகூடம் இவர் அயராத உழைப்பால் எம் கைகளிற்கு கிடைத்தது என்றால் மிகையாகாது.
இதை நிர்வகிக்கும் குழுவின் செயலாளராக இருந்த இவர் 1964 தொடங்கி 1970 களில் அதை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
1968 இல் சாவ இந்துவின் உப அதிபராக கடமையேற்ற இவர் 1970 களில் பதில் அதிபராக உயர்ந்தார்.
இவர்1981இல் இவர் சிறந்த தரம் வாய்ந்த அதிபராக நியமிக்கப்பட்டார்.
இது சாவகச்சேரி இந்துக்கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டது .
இவர் தன் ஆசிரியப் பணி காலத்தில் கல்லூரிக்கு ஒழுக்கத்தை பேண மாணவர் முதல்வர் அணியை அறிமுகப்படுத்தி இருந்தமை மிகவும் சிறப்பம்சமாகும்.
ஜனநாயக முறையில் அமைந்த மாணவர்கள் வாக்கெடுப்பில் மாணவர் முதல்வர் அணி இன்றும் தெரிவு செய்யப்படுவது கல்லூரியின் தனிச்சிறப்பாகும்.
1972 களில் அரசு பாரம்பரிய தொழிற்கல்விகளை (மரவேலை,கயிறு வேலை)அறிமுகப்படுத்தியத போது இவர் வாதிட்டு தனது மாணவர்களிற்கு மின்சார மற்றும் ஆட்டோ மொபைல் மெக்கானிக் வேலைகளை அறிமுகப்படுத்து இருந்தமை என்றும் நினைவில் நிற்கும் விடயங்களாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல் ல என்ற இவர் தாரக மந்திரம் பெற்றோர்கள் மாணவர்களிடையே மூடக்கொள்கைகளை களைய உந்து கோலாயிற்று.
இதனால் பல மாணவர்கள் பயன் பெற்றிருந்தார்கள்.இன்றும் நல்ல வேலைகளில் உள்ளார்கள் .பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் இதற்குரிய கட்டடம் 1973 இல் அமைக்கப்பட்டு
தொழினுட்ப வேலை வாய்ப்புகள் மத்திய கிழக்கு நாடுகள் வரை விஸ்தீரணப்படுத்தப்பட்டமை தென்மராட்சி மண்ணின் வளர்ச்சியிற்கு மைல் கல்லாக அமைந்திருந்தது.
குழைக்காட்டுள் அமைந்திருந்த எம் பாடசாலை இலங்கையில் ஒரு தலை சிறந்த பாடசாலையாக உருவெடுக்க ஆரம்பித்தது .
இவர் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல நல் உள்ளங்களின் பேராதரவையும் நிதி உதவியையும் பெற்றிருந்தார்.
கௌரவபாராளுமன்ற உறுப்பினர்கள் நவரத்தினம்,குமாரசாமி,ஐனாதிபதிஐயவர்த்தன ,நிதி அமைச்சராயிருந்த N.M .பேரேரோ ஆகியோரிடம் தன் சொந்த விருப்பு வெறுப்பிற்கப்பால் பல சிபார்சுகளையும் உதவிகளையும் பெற்றார்.இதன் மூலம் மிகப் பரந்த அளவில் இந்துக்கல்லூரியை அபிவிருத்தி செய்தார்.
ஒவ்வொரு செக்கனும் கல்லூரியை மனதிருத்தி செதுக்கிய சிற்பி ஆவர் .கல்லூரியின்
திறத்த வெளிப் பகுதியில் மீசாலையைச் சேர்ந்த பெரும் வர்த்தகர் M.T சுப்பிரமணியம் அவர்கள் உதவியுடன் குடி நீர் வசதியை ஏற்படுத்தி இருந்தார்.M.T சுப்பிரமணியம் உதவியுடன் இவர் திறந்த வெளி அரங்கம் அமைத்து இருந்தமை யாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
அதிபர் ஏற்பாட்டில் தென் இந்திய பிரபல பாடகர் பித்துக்குழி முருகதாஸ் அவர்களது நிகழ்வு பாடசாலை நிதி சேகரிப்பிற்காய் இடம் பெற்று பெரு வரவேற்பை பெற்றது
பழைய மாணவர் சங்க (OSA)விஞ்ஞான கூட கட்டட நிதிக்காக மாணவர்களிடம் நிதிசேகரிக்கும் அட்டைகள் விநியோகிக்கப்பட்டடது .முதன் முறையாக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் நேரடியான செயற்பட்டமை இவரால் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது .
இவருடைய காலப்பகுதியில் கல்வியும் இணைப்பாட விதான செயற்பாடுகளும் ஒருமித்து பிரமாண்ட வளர்ச்சி கண்டிருந்தது .
இந்தியாவில் இருந்து நாட்டியத் தாரகைகள் தேஜஸ்வினி மற்றும் பங்கஜம் வரவழைக்கப்பட்டு பல இடங்களிலும் நிகழ்ச்சி ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வானது இலங்கை வானொலியில் விளம்பரப்படுத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.இதன் மூலம் பாடசாலையிற்கு தேவையான பெருமளவு நிதி பெறப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் 1977 ஆம் ஆண்டு நூலகம் ஆனது ஜேர்மனியின் உயர் அலுவலர் உருஸா முல்லரால் திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் பின் அந்த நேரம் வலிமை பெற்ற ஜேர்மனிய நாட்டு உயர் அலுவலகரை வரவேற்று உபசரித்த இவரின் அறிவார்ந்த செயல் பலரின் கவனத்தையும் பாராட்டையும் இந்துக்கல்லூரியின் பால் ஈர்த்துது .
உபசரிப்பை மகிழ்வோடு ஏற்ற அவர் ஒரு தொகுதி புத்தகங்களையும் அன்பளிப்புச் செய்தார்.
1979களில் அரசு உதவுயுடன் இரட்டை மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டது .தற்போது அது வெற்றிவேலு கேட்போர் கூடம் என அழைக்கப்படுகின்றது.
1980 இல் தென்மராட்சியில் உள்ள சகல மாணவர்களும் பயன் பெறும் பெருநோக்கில் இடைநிலைக் கல்வி தேர்வு முறையை (Grade 6 Admission Test )அறிமுகம் செய்து சமத்துவத்தைப் பேணும் ஐனநாயவாதியானார்.
எல்லோரையும் ஒரு குடையுள் திரட்டி சாவ இந்து சாம்ராஜ்யத்தை கொடிகட்டி பறக்கச் செய்து தனது62 வது வயதில் 1984 சித்திரை மாதம் ஓய்வு பெற்றார்.
“வெற்றியர்” என மாணவர்கள் செல்லமாக அழைக்கப்படும் இவர் மாணவர் அன்பில் திண்டாடும் அளவிற்கு அவரின் பிரியாவிடை நிகழ்வு கோலாகலமாக இருந்தது.
பழைய மாணாக்கர் சங்கம் 85000 ரூபாக்களை (அந்நாளில் மிகப் பெரிய தொகை)அன்பளிப்பாக வழங்கியதென்றால் மிகையாகாது.
அதில் பெரும் பங்கை பாடசாலை புலமைப்பரிசிலிற்காக பெருந்தன்மையாக திருப்பி அளித்தும் விட்டார்.
பாடசாலை வரலாற்றில் சிருஷ்டிப்பில் பிரம்மனாய் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டார்.
ஓய்வு காலத்தில் சமுகப் பணிகளில் பெரும் ஈடுபாட்டுடன் இருந்த இவர் தன் இல்லத்தின் அருகாமையில் இருந்த கொல்லங்கிராய் வீரகத்தி விநாயகர் ஆலய நிர்வாக சபையின் உப தலைவராக இருந்த இவர் ஆலய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.
1984 இல் இணக்க சபை உறுப்பினராக இருந்து மக்களின் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்த்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.
1987-1989 களில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு பிரஜைகள் குழு உறுப்பினராக இருந்து மக்களிற்கு பல நன்மைகள் செய்தார்.
தனது ஐம்பதாவது கல்யாண நாளை வள்ளுவனும் வாசுகியுமாய் காதல் நன்மனையாளுடன் புரட்டாதி 02 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு ,பிள்ளைகள் மருமக்கள் பேரமக்கள் உற்றார் உறவுகள் சூழ கொண்டாடி மகிழ்ந்தார்.நல்ல மகவாய்,கணவனாய்,தந்தையாய் ,ஆசானாய் ,அதிபராய்,வழிகாட்டியாய்,நண்பனாய் இன்னோரன்ன நல் உதாரண புருஷனாய் வாழ்வாங்கு வாழ்ந்து
2008 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி இவ் பூவுலகை நீத்தார்
இன்றும் இந்துஅன்னை மைந்தர்களின் மனங்களில் தந்தையாய் வாழ்கின்றார்.
அவர் சிருஷ்டிப்பில் உருவான இந்து ஆலயக் குழந்தைகள் நாம் உலகெங்கும் ஓழுக்கத்துடன் சாதனைகளை எமதாக்கி அவர் தாள்களில் அர்ச்சிப்போம்.
 
ஆக்கம்:வாணி ஜெ கலாபன்
 
Link to comment
Share on other sites

  • 6 months later...

289060659_10217023723544386_736808904883

288773688_10217023724624413_243187482870

The bicycle that ruled Thenmarachi (தென்மராட்சி) for 14 years from 1970 to 1984. Principal Vettivelu’s official vehicle.

தகவல் வெற்றிவேலு குமரன்

 

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

289060659_10217023723544386_736808904883

Tht ruled Thenmarachi (தென்மராட்சி) for 14 years from 1970 to 1984. Principal Vettivelu’s official vehicle.

தகவல் வெற்றிவேலு குமரன்

சையிக்கிள் எத்தனை கறள்கட்டி இருந்தாலும் அதற்குப் பூக்கட்டி அழகுபார்க்க அதிபர் தவறவில்லை.😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.