Jump to content

அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? - நிலாந்தன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? நிலாந்தன்.

December 19, 2021

spacer.png

 

கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. அவர்கள் எங்கே போனார்கள் யாரை கண்டார்கள் போன்ற விபரங்கள் ஏற்கனவே செய்திகளாக வந்துவிட்டன. இச்செய்திகளுக்கு அப்பால் இதுபோன்ற விஜயங்களின் ராஜதந்திர இலக்குகளை-diplomatic objectives-உய்த்துணரும் விதத்தில் அண்மைக்கால சம்பவங்கள் சிலவற்றை தொகுத்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் பெருந்தொற்று நோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். எனினும் அவர் வடக்கிற்கு வருகைதந்த காலகட்டம் எதுவென்று பார்த்தால் அது பின்வரும் விவகாரங்களின் தொகுப்பாகக் காட்சி தருகிறது.

முதலாவது தமிழக மீனவர்களால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அதுதொடர்பாக வாதப்பிரதிவாதங்கள், உயர்மட்டச் சந்திப்புகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. குறிப்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மீனவர்களுக்கு ஆதரவாக கடல்வழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த சில கிழமைகளின் பின் சீனத் தூதரகக் குழு வடக்கிற்கு வந்திருக்கிறது. இங்கே அவர்கள் மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் நிவாரணப் பொதிகளையும் வழங்கியிருக்கிறார்கள். அதாவது இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு சீனா நிவாரணம் வழங்குகிறது. இவ்வாறு வடபகுதி மீனவர்களுக்கு சீனா நிவாரணம் வழங்குவது என்பது இதுதான் முதல் தடவை.

இரண்டாவது விவகாரம் யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சீனா நிர்மாணிக்கத் திட்டமிட்டிருக்கும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள். இம்மூன்று தீவுகளிலும் சீனா மின்சக்தி திட்டங்களை நிர்மாணிக்குமாக இருந்தால் அது இந்தியாவின் தெற்கு மூலையில் இருந்து கிட்டத்தட்ட 50 கிலோ மீற்றர் தூதரத்திற்கு சீனா வந்துவிட்டதைக் குறிக்கும். அதுகுறித்து அரசியல் விமர்சகர்களும் குறிப்பாக தமிழக யூடியூப்பர்களும் அதிகமாக விவாதித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று வெளிப்படையாக காணப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது.

அண்மையில்,இம்மாதம் முதலாம் திகதி சீனா மேற்படி மின்சக்தி திட்டங்களில் இருந்து பின்வாங்கியிருப்பதாக ஒரு ருவிற்றர் செய்தி கிடைத்தது. மூன்றாவது தரப்பு ஒன்றின் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக அத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக சீனத் தூதரகம் அந்த ருவிற்றர் குறிப்பில் தெரிவித்திருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சீனத் தூதுவர் அது ஒரு போலிச் செய்தி என்று மறுத்திருக்கிறார். தங்களது திட்டத்தை கைவிடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். எனினும் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த மற்றொரு செய்தியில் இலங்கைத் தீவின் பாதுகாப்புத்துறை செயலர் தெரிவித்த ஒரு கருத்துப்படி அந்த மின்சக்தி திட்டங்கள் தொடர்பில் முடிவுகள் இறுதியாக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. அம்மின்சக்தி திட்டங்கள் தொடர்பான செய்திகள் முன்பின் முரணாக வெளிவருவது என்பது அது ஒரு சர்ச்சையாக தொடர்ந்தும் இருப்பதைத்தான் காட்டுகிறது.

மூன்றாவது விவகாரம் தமிழ்மக்களின் உள்வீட்டுப் பிரச்சினை. டெலோ இயக்கம் 13ஆவது திருத்தத்தை ஒரு கொழுக்கியாக பயன்படுத்தி இந்தியாவை உள்ளே கொண்டு வரவேண்டும் என்று ஒரு முயற்சியை முன்னெடுக்கின்றது. ஆனால் தமிழரசுக் கட்சி அதை கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலும் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கவில்லை. கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுமந்திரன் அமெரிக்காவை நோக்கி போனார். அமெரிக்காவை கையாள்வதன் மூலம் இந்தியாவை கையாளலாம் என்று அவர் நம்புகிறாரோ தெரியவில்லை. அதேசமயம் டெலோவின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்துகொண்டிருந்த அதே காலப்பகுதியில் சீனத் தூதரகம் கூட்டமைப்பை சந்திக்க விரும்பியதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதை சம்பந்தர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. என்ன காரணத்தை கூறி எப்படி மறுத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு தெரியாது. அதுபோலவே சுமந்திரன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு புதுடில்லி கூட்டமைப்பை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. ஆனால் சம்பந்தர் அச்சந்திப்பையும் ஒத்தி வைத்திருக்கிறார். என்ன காரணத்துக்காக ஒத்தி வைத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

இவ்வாறாக சீனத் தூதரகத்தின் அழைப்பை கூட்டமைப்பு கௌரவிக்காத ஒரு பின்னணியில்; புதுடில்லியின் அழைப்பை தமிழரசுக்கட்சி கௌரவிக்காத ஒரு பின்னணியில் சீனத் தூதுவர் வடக்குக்கு வருகை தந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களோடு பேசும்போது “இந்தியாவும் சீனாவும் சிறந்த அயலவர்கள்: சிறந்த நண்பர்கள் ; சிறந்த பங்காளிகள்” என்று கூறியிருக்கிறார். அவர் ஒரு ராஜதந்திரி. அப்படித்தான் கூறுவார். ராஜதந்திரிகள் கூறுவதை ஒன்றில் வார்த்தைகளுக்கு இடையில் இருக்கும் அர்த்தங்களுக்கூடாக விலகிக்கொள்ள வேண்டும். அல்லது அவர்கள் வெளிப்படையாக கூறுவதை தலைகீழாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அவர் நல்லூரில் அதாவது ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்தின் நடுத்தர வர்க்கச் சைவர்களின் முக்கிய கோவில்களில் ஒன்றாகிய நல்லூரில் வெறும் மேலோடு அர்ச்சனைத் தட்டை கையில் ஏந்தியபடி காட்சி தருவதும் ஒரு ராஜ்ய நகர்வுதான். சீனத் தூதுவர் மட்டுமல்ல யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ராணுவத் தளபதி உட்பட வேறுபலரும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு அதை ஒரு இலகுவான பண்பாட்டு ராஜ்ய நகர்வாக கருதுகிறார்களோ தெரியவில்லை.

எதுவாயினும் சீனா நிவாரணப் பொதியுடன் வடக்கிற்கு வந்திருக்கிறது. நிவாரணத்தோடு வரும் ஒரு நாட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க தேவையில்லை. அதேசமயம் அந்த நிவாரண அரசியலுக்குப் பின்னால் இருக்கும் ராஜதந்திர இலக்குகளை குறித்து தமிழ்மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அந்த ராஜிய நகர்வு ஒரு விடயத்தை உணர்த்துகிறது. சீனா தமிழ் மக்களை ஏதோ ஒரு விதத்தில் அணுக முயற்சிக்கிறது என்பதே அது.

ஏற்கனவே சுமந்திரனின் தூதுக்குழு அமெரிக்காவுக்கு சென்று திரும்பி இருக்கிறது. இந்தியா கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு கேட்டிருக்கிறது. இப்பொழுது சீனா யாழ்ப்பாணத்துக்கு நிவாரணத்தோடு வந்திருக்கிறது. இவை தமிழ் மக்களின் பேர வாய்ப்புகள் உயர்வதை காட்டுகின்றனவா?

ஏனெனில் இலங்கை தீவை கையாள முற்படும் எல்லா பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் கையாண்டு வருகின்றன. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுக்கூடாக அவை கொழும்பிலுள்ள அரசைத்தான் கையாள்வதுண்டு. கொழும்பை கையாள முடியாத போது தமிழ் மக்களை கையாண்டு அதன்மூலம் கொழும்பை வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பார்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலான இனப்பிரச்சினையின் அரசியல் அப்படித்தான் காணப்படுகிறது.

சீனா, ராஜபக்சக்களிடம் பெற்ற அனுகூலம் எனப்படுவதும் ஒருவிதத்தில் இனப்பிரச்சினையின் மறைமுக விளைவுதான். கடந்த ஐநா தீர்மானத்தின் போது சீனா திட்டவட்டமாக இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நின்றது. அது மட்டுமல்ல,அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையை குறைப்பதற்கும் சீனா பாடுபட்டது. கடந்த மார்ச் மாத ஐநா கூட்டத் தொடருக்கு சில மாதங்களுக்கு முன்னரே கொழும்புக்கு வருகை தந்த சீனப் பிரதானிகள் ஐநாவில் சீனா அரசாங்கத்தின் பக்கம் நிற்கும் என்பதனை துலக்கமாக தெரிவித்திருந்தார்கள்.

எனவே இன்றுவரையிலுமான சீன அணுகுமுறைகளை தொகுத்துப்பார்த்தால் சீனா இனப்பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி இச்சிறிய தீவில் தனக்கு வேண்டியவற்றை பெற்றிருக்கிறது. ஆனால் இந்த ராஜ்ய அணுகுமுறையில் சீனா என்றைக்குமே வெளிப்படையாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் பக்கம் நின்றதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களோடு கதைக்கும்பொழுது சீனத் தூதுவர் இனப்பிரச்சினை நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த உள்நாட்டு விவகாரத்திற்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. ராஜதந்திர உதவிகளை வழங்கியது. தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. 2009க்குப்பின்னிருந்து சீனா ஐநாவில் அரசாங்கத்தின் பக்கமே நிற்கிறது. எனவே இனப்பிரச்சினையில் சீனா திட்டவட்டமாக ஒரு பக்கம்தான் நிற்கிறது. நிச்சயமாக தமிழ் மக்களின் பக்கம் நிற்கவில்லை.

தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாள வேண்டிய தேவை சீனாவுக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டாலும் தமிழ் மக்களை நெருங்கி வந்து கையாளத் தேவையான பண்பாட்டு இணைப்போ,,மொழிப் பிணைப்போ, புவியியல் அருகாமையோ சீனாவுக்கு இல்லை. மேலும் மேற்கு நாடுகளில் பலமடைந்து காணப்படும் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ற காரணியும் சீனாவில் இல்லை. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் மக்களை கையாள வேண்டிய தேவையும் சீனாவுக்கு குறைவு. கையாளத் தேவையான வாய்ப்புகளும் சீனாவுக்கு குறைவு. அதேசமயம் இனப் பிரச்சினையின் காரணமாக சீனாவை நோக்கித் திரும்பிய ராஜபக்சக்களை சீனா தனது வியூகத்தின் பங்காளிகள் ஆக்கிக்கொண்டது என்பதே சரி.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் இந்தியாவை நம்பத் தயாரற்ற தமிழ் விமர்சகர்கள் சிலர் சீனாவையும் தமிழர்கள் ஒரு பேர வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று எழுதுவதுண்டு. எனினும், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தரப்பில் இருந்து யாரும் சீனாவை அவ்வாறு அணுகுவதற்கு எத்தனிக்க வில்லை.

இப்பொழுது சீனத் தூதுவர் நல்லூரில் வேட்டி கட்டிக்கொண்டு வெறும் மேலோடு அர்ச்சனைத் தட்டுடன் வந்து நிற்கிறார். இந்தப் பண்பாட்டு தோற்றம் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லப் போதாது. ஏனெனில் மாவோ சேதுங் கூறியதுபோல அரசியல் அதிகாரம் எனப்படுவது சீனா, இலங்கை அரசுக்கு வழங்கிய துப்பாக்கி முனையில் இருந்தே பிறக்கிறது. நிச்சயமாக அர்ச்சனைத் தட்டுக்களிலிருந்து அல்ல.

 

https://globaltamilnews.net/2021/170647

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும். இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 
  • உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது? Marder.
  • ஆனால் பாருங்கோ….. தமிழ் நாட்டு “டாஸ்மார்க்”  சரக்கு நம்பிக்கையானது. உடனை உயிர் போற அளவுக்கு, அவ்வளவு பாதகம் இல்லை. சத்து டானிக் மாதிரி…. உற்சாகம் தருமாம்.
  • எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (நா.தனுஜா)     எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அச்சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும் அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தவறான தகவல்கள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைமீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் கடுமையான விசனத்தை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் காரணமாக குறிப்பாக எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பன குறித்தும் அவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டு நிர்வாகம், வணிக செயற்பாடுகள் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றின்மீது ஏற்பாடுத்தியுள்ள தாக்கம் குறித்தும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அரசாங்கம் கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்களை வெளியிட்டுவந்துள்ளது. இருப்பினும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தவறான நம்பிக்கையினால் அவர்கள் இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது. அடுத்த தடவை நாட்டிற்கு அவசியமான எரிபொருள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ள திகதி அறியப்படாதவொன்றாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே கையிருப்பிலிருந்த நிதி ஏன் உரியவாறு கையாளப்படவில்லை என்பதற்கான சரியான விளக்கமெதுவும் வழங்கப்படவில்லை.  அரசாங்கத்தின் அறிவிப்புக்களால் ஏற்பட்ட விளைவுகள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவுகின்ற குழப்பநிலையையும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அவநம்பிக்கையையும் காண்பிக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய தற்போதைய நிலை குறித்து அரசாங்கம் உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய நேரத்தில் வழங்கத்தவறியமை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.  பெற்றோல், டீசல் மற்றம் மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சுமார் 24 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் காத்திருக்க வேண்டியிருப்பது பாரிய நேரவிரயத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் வன்முறைகளையும் மக்கள் - பொலிஸாருக்கு இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன. எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், கறுப்புச்சந்தையில் எரிபொருள் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளால் மிகக்குறைந்தளவிலான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இம்மாதம் முதல் வாரத்தில் எரிவாயுக் கொள்கலன்கள் கப்பல் மூலம் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.  எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்ற இலங்கையின் ஏற்றுமதிகள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் நீதி நிர்வாக செயற்பாட்டின்மீது எதிர்மறைத்தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. மேலும் அனைத்து மக்களுக்கும் நியாயமானதும், சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.  இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து அனைவருக்கும் நியாயமானதும் சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதையும், பொதுப்போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.  அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும், அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு அரசாங்கத்தின்மீதான தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      https://www.virakesari.lk/article/130281
  • உரிமைக்காக எழு தமிழா! Posted on June 27, 2022 by மாலதி  73 0 உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022) பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசினால் நடத்தப்பட்டது ஒரு இன அழிப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்வதோடு, அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டியும், தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத் தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தமது உணர்வினை உரக்கச் சொன்னார்கள்.     உரிமைக்காக எழு தமிழா! – குறியீடு (kuriyeedu.com)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.