Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாற்றுரு

Recommended Posts

மெய்யுடல் தனை 
மென்மையாகத் தழுவிச் செல்லும் இளந்தென்றலின் 
அழகான ஒரு தீண்டலில் கலந்திருக்கின்றது 
கரைப்பதற்கும் கரைந்து கொள்ள இசைவதற்குமான முடிவு! 

அழகுடல் தனையுடைய அணங்கவளின் ஆரவாரமான நகைப்பொலியினைப் போல
சலசலத்து ஓடும் நதியின் ஓட்டத்தில் சிக்குண்டு ஓரிடத்தில் நிலையாமல் தடுமாறி தன்னுரு மாறும் கல்லின் முடிவற்ற தீர்வில் அமைந்திருக்கின்றது 
நகர்ந்து செல்வதற்கும் 
நகராமல் நிலை கொண்டு எதிர்த்து நிற்பதற்குமான தெளிவு! 

பொய்யுடல் தனைப் பொலிவுடன் அலங்கரிக்கும் பூமாலை தனிலிருந்து நுதல் தழுவி முகம் வருடி உடல் தீண்டி காலடியில்  கழன்று விழும் பூவிதழின் நிலையற்ற நிலையாமையில் மறைந்திருக்கின்றது
பயன்பெறுவதற்கும் பயன்மட்டும் பெறுவதற்குமுண்டான வேறுபாடு!

-தமிழ்நிலா.

Edited by தமிழ்நிலா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ்நிலா said:

பொய்யுடல் தனைப் பொலிவுடன் அலங்கரிக்கும் பூமாலை தனிலிருந்து நுதல் தழுவி முகம் வருடி உடல் தீண்டி காலடியில்  கழன்று விழும் பூவிதழின் நிலையற்ற நிலையாமையில் மறைந்திருக்கின்றது
பயன்பெறுவதற்கும் பயன்மட்டும் பெறுவதற்குமுண்டான வேறுபாடு!

அருமை..!  நல்லதொரு கவிதை பகிர்விற்கு நன்றிகள்..💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை..!  நல்லதொரு கவிதை பகிர்விற்கு நன்றிகள்..💐

மிக்க நன்றிகள் சகோதரன் 🙏

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.