Jump to content

செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சம்பந்தன் விலகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சம்பந்தன் விலகல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மருத்துவ ஆலோசனைக்கமைய செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அவர் அரசியல் கலந்துரையாடல்கள், ஊடக சந்திப்புகள், விருந்தினர் சந்திப்பு ஆகியவற்றில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளார்.

எனினும் அவர் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவார்.

பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
1977 ஆம் ஆண்டு முதல் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.
 

http://www.samakalam.com/செயற்பாட்டு-அரசியல்-நடவட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சம்பந்தன் விலகல்

ஏற்கனவே கொப்புக்கொப்பாய் தாவுற சின்ராசுவை இனி கையிலை புடிக்கேலாது.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏற்கனவே கொப்புக்கொப்பாய் தாவுற சின்ராசுவை இனி கையிலை புடிக்கேலாது.....🤣

🤣 சின்ராசுதானா இனி நாட்டாமை?

2 hours ago, கிருபன் said:

செயற்பாட்டு அரசியல்

ஐயா இவ்வளவு நாளும் செயல்பட்டுத்தான் இருக்கிறார். நாங்கதான் கவனிக்கேல்ல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

🤣 சின்ராசுதானா இனி நாட்டாமை?

ஐயா இவ்வளவு நாளும் செயல்பட்டுத்தான் இருக்கிறார். நாங்கதான் கவனிக்கேல்ல🤣.

இதைத்தான் நானும் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! பன்னெடும் காலமாக தமிழ் மக்களுக்காக உழைத்து களைத்துவிட்டீர்கள் ..👍

இனி வரும் காலங்களில் பூரண உடல் நலத்தோடு வாழ இறைவனை இறைஞ்சுகிறோம்.

👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஏற்கனவே கொப்புக்கொப்பாய் தாவுற சின்ராசுவை இனி கையிலை புடிக்கேலாது.....🤣

பொன்ராசா இல்லாட்டி சின்ராசா செயல்பட தானே வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து தம்பி வா தலைமை ஏற்க வான்னு அழுதுகிட்டே சும்ம கூப்புடுவாரு…😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செயற்பட்ட போதும் ஒன்றும் வெட்டி விழுத்தல்ல.. எனி செயற்பாடாமல் இருக்கப்போராருன்னு கவலையாவா இருக்கும் சனம்..!!

அதுசரி.. செயற்பாடற்றவருக்கு எதுக்கு தலைமைப் பதவி...?! பதவி ஆசை பாடை ஏறும் வரை தீராது போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

🤣 சின்ராசுதானா இனி நாட்டாமை?

ஈழத்தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட சிங்கம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட சிங்கம். 🤣

இல்லை மிச்சம் எல்லாரும் சீ வி யுடன் சேர்ந்தால், சேர்ந்து பொறுப்பான அரசியல் செய்தால், சின்ராசுவை தட்டி அடக்கலாம்.

செய்வீர்களா?

செய்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு அரசியல் தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன்- சம்பந்தன் அறிவிப்பு

December 21, 2021
spacer.png
 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் வரை நான் ஓய்வுபெறப் போவதில்லைஎன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. துறக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நான் வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்லன். தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்த வன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறாமல் அரசியலில் இருந்து நான் விடை பெறப் போவதில்லை.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக் கையை நாம் நீண்டநாள் களாக முன்வைத்தபோதும், அந்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாது இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்துகின்ற போக்கு காணப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்கால சுபீட்சமும் அமைதியும் சுயநிர்ணயமும் உள்ளடக்கிய அரசியல் தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

தந்தை செல்வா என்னை அரசிய லுக்கு வரும்படி அழைத்த போது நான் மூன்றுமுறை மறுத்தவன் பின்பே அரசியலுக்குள் வந்தேன். நான் அரசியலுக்கு வந்ததன் காரணம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு, நிரந்தரமான, நிச்சயமான தீர்வைப் பெறவேண்டும் என்பதற்காகவேயாகும். அதற்காக கடந்த 50 வருடங்களாக நான் போராடி வந்திருக் கின்றேன். என்னுடைய வருகை வெறும் அரசியல் மயப்பட்ட தாக, அனு கூலங்களை அனுபவிக்க வேண்டும் என் பதற்காக அமைந்த ஒரு பயணம் அல்ல’ என்றார்.


https://www.ilakku.org/i-will-not-rest-political-solution-is-found-tamils/
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை முற்றாக அழிக்கும் வரை ஓய மாட்டேன் எண்டு வாசிச்சுப் போட்டன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

50 வருடங்களாக நான் போராடி வந்திருக் கின்றேன்.

அட கடவுளே! இன்னுமா? இது என்ன தமிழருக்கு பிடித்த சோதனை?  மக்கள் தாங்குவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில நல்ல ஸ்பட்ல ஒரு  சின்ன நிலம் காலியா இருந்தா நேர காலத்தோட சொல்லுங்கப்பா தமிழர் தேசத்தின் பிதாமகனுக்கு ஒரு சிலைய வச்சுடுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

தமிழினத்தை முற்றாக அழிக்கும் வரை ஓய மாட்டேன் எண்டு வாசிச்சுப் போட்டன்..!

அவரின் வீராவேசத்தை நினைத்து குழம்பிப் போனீர்கள் போலுள்ளது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2021 at 01:09, goshan_che said:

இல்லை மிச்சம் எல்லாரும் சீ வி யுடன் சேர்ந்தால், சேர்ந்து பொறுப்பான அரசியல் செய்தால், சின்ராசுவை தட்டி அடக்கலாம்.

செய்வீர்களா?

செய்வீர்களா?

கோசான்… உசாராக இருந்தால்…

கட்டாயம்  செய்வம்  செய்வம்… 

(சிலோன்  ஜெயலலிதா பாணியில் வாசிக்கவும்) 😜 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2012ல் டெய்லி மிரர் வெளியிட்ட கார்ட்டூன்...

2021ல் 9 ஆண்டுகளுக்கு பின்னான நிலைமை..... மாறவில்லை போல...

அய்யா களைத்துப்போய் விட்டார்.... யாரு அய்யாவின் இடத்தில.... இருக்கப் போகினம்?

cart600(1).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோசான்… உசாராக இருந்தால்…

கட்டாயம்  செய்வம்  செய்வம்… 

(சிலோன்  ஜெயலலிதா பாணியில் வாசிக்கவும்) 😜😂🤣

🤣 அண்ணை…சத்தியாமா..இது வேற லெவல் …👏🏾👏🏾👏🏾👍🏿🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.