கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் பதியப்பட்டது December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 21, 2021 நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர், பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கவுண்டமணி பட காமெடி போல நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 'நினைவுச்சின்னம்' படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு "இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு..." என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர் பட்டத்தின் கயிற்றை விடுவதற்குள் அவருக்கு பின்னால் நின்ற இளைஞர்கள் கயிற்றை விட்டு விட்டனர். அடுத்த நொடி காற்றின் வேகத்துக்கு ஜெட்டாக வானை நோக்கி பறந்த பட்டத்தோடு அந்த முன்வரிசை இளைஞரும் தூக்கிச்செல்லப்பட்டார் முன்னதாக இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இதனால் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போயினர் பட்டத்தின் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்திருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில், 'யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ?' என்ற எதிர்பார்ப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர் ஹீரோயினை காப்பாற்ற செல்லும் ஹீரோ போல பட்டத்தின் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்க இயலாமல் அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். இதையடுத்து 'தன் கையே தனக்கு உதவி' என்று சமயோசிதமாக யோசித்த அந்த பட்டக் கயிறு ஜேம்ஸ் பாண்டு, கயிற்றின் பின் நகர்ந்து வர ஆரம்பித்தார் மெல்ல மெல்ல கயிற்றில் தொங்கியபடியே நகர்ந்து, வந்த அந்த இளஞர் சுமார் இருபது அடி உயரம் வரை வந்தார், அதற்கு மேல் நகர இயலாத நிலையில் தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார் விழுந்த வேகத்தில் உடலில் ஏற்பட்ட உட் காயங்களுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள் தெரிவித்தனர் இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2K லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல், ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாலிமர் செய்திகள் 5 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 (edited) 59 minutes ago, ராசவன்னியன் said: இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2K லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல், ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 2k கிட்ஸ்ன்னா… புள்ள அநேகமா இவுரு ரசிகையா இருக்கும்… Edited December 21, 2021 by பாலபத்ர ஓணாண்டி 1 Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted December 21, 2021 Share Posted December 21, 2021 றிஸ்க் எடுக்காமல் பெடியள் விடமாட்டாங்கள் போல. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 34 minutes ago, ராசவன்னியன் said: நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர், பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கவுண்டமணி பட காமெடி போல நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 'நினைவுச்சின்னம்' படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு "இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு..." என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர் பட்டத்தின் கயிற்றை விடுவதற்குள் அவருக்கு பின்னால் நின்ற இளைஞர்கள் கயிற்றை விட்டு விட்டனர். அடுத்த நொடி காற்றின் வேகத்துக்கு ஜெட்டாக வானை நோக்கி பறந்த பட்டத்தோடு அந்த முன்வரிசை இளைஞரும் தூக்கிச்செல்லப்பட்டார் முன்னதாக இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இதனால் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போயினர் பட்டத்தின் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்திருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில், 'யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ?' என்ற எதிர்பார்ப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர் ஹீரோயினை காப்பாற்ற செல்லும் ஹீரோ போல பட்டத்தின் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்க இயலாமல் அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். இதையடுத்து 'தன் கையே தனக்கு உதவி' என்று சமயோசிதமாக யோசித்த அந்த பட்டக் கயிறு ஜேம்ஸ் பாண்டு, கயிற்றின் பின் நகர்ந்து வர ஆரம்பித்தார் மெல்ல மெல்ல கயிற்றில் தொங்கியபடியே நகர்ந்து, வந்த அந்த இளஞர் சுமார் இருபது அடி உயரம் வரை வந்தார், அதற்கு மேல் நகர இயலாத நிலையில் தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார் விழுந்த வேகத்தில் உடலில் ஏற்பட்ட உட் காயங்களுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள் தெரிவித்தனர் இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2K லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல், ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாலிமர் செய்திகள் முன்னம் ஊரில் இருக்கும் போது எமது கோவில் வயலில் பட்டம் விடப்போவோம். அறுவடை முடிந்து அதன் பின் நைட்றஜனை மண்ணுக்கு இறக்க சணல் பயிரிட்டு அதுவும் வெட்டி ஒதுக்கப்ட்ட நாட்களில்தான் காற்று வீசும் (சோளக்காத்து?). நமது சைசுக்கு ஏற்ப வீட்டிலேயே ஈக்கில், சணல், டிசு பேப்பர், கோதம்பமா பசை கொண்டு நாமே வீடு, முகோணம், இப்படி எளிய வடிவில் பட்டம் செய்து கொண்டு போவோம். நைலோன் மெல்லிய இழையால் பட்டம் பறக்க விடப்படும். பெரிய அண்ணாமார் ஆளை விட பெரிய பட்டம் கொண்டு வருவார்கள். மூங்கிலால் கட்டுவது. முகட்டில் “விண்” கட்டி இருப்பார்கள். அது மேலே ஏற் ஏற கூ..கூ என ஒலி எழுப்பும். விண் கூவுது என்போம். “பெரிய ஆக்களிண்ட பட்டங்களை ஆசைக்கும் வேண்டி ஏத்த வேண்டாம். காத்து தூக்கி போடும்” என்பார்கள் வீட்டில். ஆனாலும் ஆசை கேட்காமல் ஏற்கனவே ஏறி ஆடிக்கொண்டிருக்கும், மரத்தில் கட்டப்பட்ட பட்டங்களை கெஞ்சி கூத்தாடி ஒரு நிமிடம் வரையில் “கொன்ரோல்” பண்ணியதுண்டு. ஓனர் அண்ணா பக்கத்திலயே பார்த்து கொண்டு நிப்பார் . அப்போதெல்லாம் இப்படி ஒரு வளர்ந்த மனிதனை 40 அடி தூக்கும் என தெரியாது. தெரிந்திருந்தால் வயல் பக்கமே தலைவைத்தும் படுத்திருக்க மாட்டேன். ஊரை விட்டு வந்த பின் பட்டம் விடுவதை மறந்து பட்டம் எடுக்கும் முயற்சியில் காலம் வீணாகியதுதான் மிச்சம். கொழும்பில் கோல்பேசில் வகை வகையாக நாகரீக பட்டங்கள் காற்றில் அலையும். பார்த்ததோடு சரி. கொவிட்டுக்கு முதல் சுப்பர் மார்கெட்டில் கண்டு ஒன்றை வாங்கி வந்தேன். பழைய கதை எல்லாம் சொல்லி அடுத்த காற்று காலம் ஏத்துவோம் எண்டு மகனுக்கும் சொல்ல அவருக்கும் ஒரே குதூகலம். இப்ப எங்க கிடக்கோ தெரியாது. தேட வேணும். தேடவைத்த @ராசவன்னியன் சாருக்கு நன்றி. #ஒரு பட்டதாரியின் சுயசரிதை 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் யாயினி Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 சரி இதையும் பாருங்கள் 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 (edited) 54 minutes ago, goshan_che said: முன்னம் ஊரில் இருக்கும் போது எமது கோவில் வயலில் பட்டம் விடப்போவோம். அறுவடை முடிந்து அதன் பின் நைட்றஜனை மண்ணுக்கு இறக்க சணல் பயிரிட்டு அதுவும் வெட்டி ஒதுக்கப்ட்ட நாட்களில்தான் காற்று வீசும் (சோளக்காத்து?). நமது சைசுக்கு ஏற்ப வீட்டிலேயே ஈக்கில், சணல், டிசு பேப்பர், கோதம்பமா பசை கொண்டு நாமே வீடு, முகோணம், இப்படி எளிய வடிவில் பட்டம் செய்து கொண்டு போவோம். நைலோன் மெல்லிய இழையால் பட்டம் பறக்க விடப்படும். பெரிய அண்ணாமார் ஆளை விட பெரிய பட்டம் கொண்டு வருவார்கள். மூங்கிலால் கட்டுவது. முகட்டில் “விண்” கட்டி இருப்பார்கள். அது மேலே ஏற் ஏற கூ..கூ என ஒலி எழுப்பும். விண் கூவுது என்போம். “பெரிய ஆக்களிண்ட பட்டங்களை ஆசைக்கும் வேண்டி ஏத்த வேண்டாம். காத்து தூக்கி போடும்” என்பார்கள் வீட்டில். ஆனாலும் ஆசை கேட்காமல் ஏற்கனவே ஏறி ஆடிக்கொண்டிருக்கும், மரத்தில் கட்டப்பட்ட பட்டங்களை கெஞ்சி கூத்தாடி ஒரு நிமிடம் வரையில் “கொன்ரோல்” பண்ணியதுண்டு. ஓனர் அண்ணா பக்கத்திலயே பார்த்து கொண்டு நிப்பார் . அப்போதெல்லாம் இப்படி ஒரு வளர்ந்த மனிதனை 40 அடி தூக்கும் என தெரியாது. தெரிந்திருந்தால் வயல் பக்கமே தலைவைத்தும் படுத்திருக்க மாட்டேன். ஊரை விட்டு வந்த பின் பட்டம் விடுவதை மறந்து பட்டம் எடுக்கும் முயற்சியில் காலம் வீணாகியதுதான் மிச்சம். கொழும்பில் கோல்பேசில் வகை வகையாக நாகரீக பட்டங்கள் காற்றில் அலையும். பார்த்ததோடு சரி. கொவிட்டுக்கு முதல் சுப்பர் மார்கெட்டில் கண்டு ஒன்றை வாங்கி வந்தேன். பழைய கதை எல்லாம் சொல்லி அடுத்த காற்று காலம் ஏத்துவோம் எண்டு மகனுக்கும் சொல்ல அவருக்கும் ஒரே குதூகலம். இப்ப எங்க கிடக்கோ தெரியாது. தேட வேணும். தேடவைத்த @ராசவன்னியன் சாருக்கு நன்றி. #ஒரு பட்டதாரியின் சுயசரிதை உங்க ஹரோவிலே ஒருவர், நண்பரின் அண்ணர்... அவருக்கு நாம் வைத்துள்ள செல்லப் பெயரே, பட்டம். சவுத் ஹரோ பார்க்கிளை சமருக்கு ஆளை காணலாம்... வீகென்ட் எண்டால் பட்டம் விட்டுக் கொண்டு நிற்பார். விதம், விதமா அவரே செய்து, ஏத்துவார்... அவரது பட்டத்தினை பார்க்க, ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கு.. கொரோனரோ காலத்திலை... டெய்லி, பட்டம் விடுறது தான் வேலையே.... உங்களுக்கு விசர் முத்திப் போட்டுது எண்டு மனிசியிடம் பேச்சும் வாங்கிக் கொண்டு பட்டம் ஏத்த போடுவார். அவரது மகள் ஒரு வெள்ளையை கட்டி... இப்ப, மாமனும், மருமகனுமாய், பட்டம் ஏத்தும் கதை நடக்குது... அவர்.. ஊரிலை இதுதான் வேலையா திரிஞ்சவராம்... பட்டம் ஏத்த அளவுக்கு காத்திருக்கோ எண்டு என்னை கேட்கப்படாது. ஒருநாள் மொக்குத்தனமா, பார்ட்டில ஒருத்தர் கேட்க... அந்தாள்... பின்ன என்னத்துக்கு மின்சாரம் தயாரிக்க எண்டு காத்தாடி செய்யுது அரசாங்கம் எண்டு முறைச்சார்... பிறகு சொன்னார்... ஹரோ பக்கம், கொஞ்சம் உயரமான இடம்... ஒரு உயரத்துக்கு கொண்டு போய் விட்டால், அதுக்கு மேல... காத்து இழுக்குமாம்... Edited December 21, 2021 by Nathamuni Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 10 minutes ago, Nathamuni said: உங்க ஹரோவிலே ஒருவர், நண்பரின் அண்ணர்... அவருக்கு நாம் வைத்துள்ள செல்லப் பெயரே, பட்டம். சவுத் ஹரோ பார்க்கிளை சமருக்கு ஆளை காணலாம்... வீகென்ட் எண்டால் பட்டம் விட்டுக் கொண்டு நிற்பார். விதம், விதமா அவரே செய்து, ஏத்துவார்... அவரது பட்டத்தினை பார்க்க, ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கு.. கொரோனரோ காலத்திலை... டெய்லி, பட்டம் விடுறது தான் வேலையே.... உங்களுக்கு விசர் முத்திப் போட்டுது எண்டு மனிசியிடம் பேச்சும் வாங்கிக் கொண்டு பட்டம் ஏத்த போடுவார். அவரது மகள் ஒரு வெள்ளையை கட்டி... இப்ப, மாமனும், மருமகனுமாய், பட்டம் ஏத்தும் கதை நடக்குது... அவர்.. ஊரிலை இதுதான் வேலையா திரிஞ்சவராம்... பட்டம் ஏத்த அளவுக்கு காத்திருக்கோ எண்டு என்னை கேட்கப்படாது. ஒருநாள் மொக்குத்தனமா, பார்ட்டில ஒருத்தர் கேட்க... அந்தாள்... பின்ன என்னத்துக்கு மின்சாரம் தயாரிக்க எண்டு காத்தாடி செய்யுது அரசாங்கம் எண்டு முறைச்சார்... பிறகு சொன்னார்... ஹரோ பக்கம், கொஞ்சம் உயரமான இடம்... ஒரு உயரத்துக்கு கொண்டு போய் விட்டால், அதுக்கு மேல... காத்து இழுக்குமாம்... பிறகென்ன…. வண்டிய ஹரோ ஹில் பக்கமா விடத்தான் இருக்கு. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 1 hour ago, goshan_che said: முன்னம் ஊரில் இருக்கும் போது எமது கோவில் வயலில் பட்டம் விடப்போவோம். ஊருக்கு ஊர் உங்க லொகேசன் மாறுதே தல. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 34 minutes ago, goshan_che said: பிறகென்ன…. வண்டிய ஹரோ ஹில் பக்கமா விடத்தான் இருக்கு. அதுக்குள்ள போனால் ஒரு போன் நெட்வேர்க்கும் வேலை செய்யாது சிலவேளை செய்தாலும் 100அடிக்கிணத்துக்குள் இருந்து கதைப்பது போல் வேலை செய்யும் . Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 2 hours ago, ராசவன்னியன் said: யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது வன்னியர் பட்டத்தைப் பார்த்தால் 13 ஆயிரம் அடி உயரமானதாகத் தெரியவில்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 1 hour ago, யாயினி said: சரி இதையும் பாருங்கள் நான் ஏதோ பெடியன் எண்டு நினைச்சன்... பிள்ளையும் இருக்குது... வாங்கிக் கட்டியிருப்பார் மனிசீட்ட... இனி பட்டம் விடுறன் எண்டு வெளிக்கிட்டால்.... வீட்டில இருந்து நேரா ஆசுபத்திரி போவார்... 1 Link to comment Share on other sites More sharing options...
zuma Posted December 21, 2021 Share Posted December 21, 2021 நல்ல நேரம் பட்டம் விடும்போது டவ்சர் போட்டிருந்தார், சாரம் உடுத்திருந்தால் பட்டத்தோடு சேர்ந்து தம்பி மானமும் காற்றில் பறந்திருக்கும். 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 1 hour ago, ஈழப்பிரியன் said: ஊருக்கு ஊர் உங்க லொகேசன் மாறுதே தல. சர்க்கஸ் கம்பெனில இருந்தேன் ஐயா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 2 hours ago, யாயினி said: சரி இதையும் பாருங்கள் இவரு பரம்பரபட்டக்காரன் இல்ல போல.. பஞ்சத்துக்கு பட்டம் ஏத்த போய் ஆப்புல அவரே ஏறி உக்காந்து இருக்கார்… பாவத்த.. 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 (edited) 39 minutes ago, zuma said: சாரம் உடுத்திருந்தால் பட்டத்தோடு சேர்ந்து தம்பி மானமும் காற்றில் பறந்திருக்கும். நீங்கள் பிறக்கும் போது எந்த உடையுடன் என்ன மானத்துடன் பிறந்தீர்கள்? சாரம் உங்களுக்கு நக்கலாக தெரிகின்றது. Edited December 21, 2021 by குமாரசாமி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said: இவரு பரம்பரபட்டக்காரன் இல்ல போல.. பஞ்சத்துக்கு பட்டம் ஏத்த போய் ஆப்புல அவரே ஏறி உக்காந்து இருக்கார்… பாவத்த.. எல்லாரும் கைய விட்டா பிறகு ஏன் பிசின்போட்டு ஒட்டின மாரி பிடிச்சு கொண்டு நிண்டவர் எண்டு தான் விளங்கேல்ல. ஒரு 3 அடி கிளம்பினோனயைவது விட்டிருக்கலாம். எல்லாரும் கைய விடுறா எண்டு வேற கத்திறாங்கள். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 1 hour ago, Nathamuni said: நான் ஏதோ பெடியன் எண்டு நினைச்சன்... பிள்ளையும் இருக்குது... வாங்கிக் கட்டியிருப்பார் மனிசீட்ட... இனி பட்டம் விடுறன் எண்டு வெளிக்கிட்டால்.... வீட்டில இருந்து நேரா ஆசுபத்திரி போவார்... நானா இருந்தா அடம்புடிச்சு இன்னும் கொஞ்ச நாள் ஆஸ்பிட்டல்லயே படுத்திரிந்திருப்பன்.. குடும்பம் குழந்தைக பொண்டாட்டி இருக்கிறத மறந்து இப்படி திரிஞ்சா நம்பள சுளுக்கு நிமித்தி படுக்கவுட்டுறுவாங்கய்யா… Link to comment Share on other sites More sharing options...
zuma Posted December 21, 2021 Share Posted December 21, 2021 36 minutes ago, குமாரசாமி said: நீங்கள் பிறக்கும் போது எந்த உடையுடன் என்ன மானத்துடன் பிறந்தீர்கள்? சாரம் உங்களுக்கு நக்கலாக தெரிகின்றது. குசா அண்ணை, நான் சாரத்தை குறை சொல்லவுமில்லை, நினைக்கவுமில்லை. இப்பவும், கடும் சமருக்கு அங்கமெல்லாம் காற்றுப்பட சாரம் உடுத்து, வீட்டின் பின்னால் இருக்கும் மேப்பில் மரத்தின் கீழ் படுத்து இருப்பது தான் எனக்கு விருப்பமான செயல், அது ஒரு தனி சுகமானது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted December 21, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 21, 2021 37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said: நானா இருந்தா அடம்புடிச்சு இன்னும் கொஞ்ச நாள் ஆஸ்பிட்டல்லயே படுத்திரிந்திருப்பன்.. குடும்பம் குழந்தைக பொண்டாட்டி இருக்கிறத மறந்து இப்படி திரிஞ்சா நம்பள சுளுக்கு நிமித்தி படுக்கவுட்டுறுவாங்கய்யா… யோவ் ஓணாண்டி நீவீர் வேறு ரகம்யா 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted December 22, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 22, 2021 4 hours ago, goshan_che said: #ஒரு பட்டதாரியின் சுயசரிதை வடமராட்சி என்றாலே பட்டம் ஏற்றுவதுதான் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் எமது முக்கிய தொழில்.. நாமளும் என்னைவிட பெரிய படலம் கட்டி ஏற்றி இருக்கின்றேன். ஆனால் இந்த துணிஞ்ச கட்டை மாதிரி மேலே போகவில்லை! யாழில் எழுதியதை தொகுத்தது. https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted December 22, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 22, 2021 (edited) எனக்கும் நல்ல அனுபவமுண்டு. சிவலிங்கப் புளியடியில் இருந்து எட்டு மூலைப் பட்டம் ஏத்துவார்கள். நூல் கட்டையும், மூங்கில் நாரும் கொண்டு தான் விண் கட்டுறது. பட்டம் இரவு பகலாக பறக்கும். விண் போயிங் சத்தத்தில கூவும். Edited December 22, 2021 by புங்கையூரன் கூகிள் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted December 22, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 22, 2021 2 hours ago, ஈழப்பிரியன் said: வன்னியர் பட்டத்தைப் பார்த்தால் 13 ஆயிரம் அடி உயரமானதாகத் தெரியவில்லை. 13 அடி உயர பட்டம் அது வடமராட்சி பகுதிகளில் படலம் என்பார்கள் நெருப்பில் இதமாய் வாட்டிய வின் அதை செய்வது ஒரு கலை போல் வயதானவர்கள் குறிப்பிட்ட சிலர் தான் செய்வார்கள் படத்தில் காணப்படும் படலத்துக்கு வாலா நீளமாய் இருந்தால் நல்ல பிள்ளை போல் கூவிக்கொண்டு இரவிலும் சத்தம் போட வைப்பார்கள் அந்த அதிர்வு சத்ததில் மழை வெள்ளத்துக்கு வரும் பாம்புகள் நச்சு பூச்சிகள் பழைய இடத்துக்கு போகவைத்துவிடும் என்பார்கள் பேய்க்காட்டால் தான் . சிலநேரம் வேணுமெண்டே வாலாவை பாதியை அறுத்துவிடுவார்கள் அதன்பின் காத்தவராயர் கூத்துபோல் வெறிகாரன் போல் அந்த மூலைக்கு ம் அடுத்த மூலைக்கும் பாய்ந்து கொண்டு இருக்கும் விடிய விடிய வின் அதிர்வு வேறு . பகிடி இனிமேல்தான் குட்டி படலம்கள் வாலா முழுக்க பழைய பிளேடு களை கட்டி தொங்க விட்டவாறு உபயம் பாபர் சொப் சண்டை படலங்கள் வானில் திடிரென தோன்றும் அப்படி கூவும் படலம்களை அட்டாக் பண்ணி அறுந்து போக பண்ணும் இப்படி குளிர்கால பட்ட காலம் முழுக்க பருத்திதுறை தொடக்கம் தொண்டமானறு வரை கலகலப்பாய் போகும். அதிலும் ஐந்துமைல் நீளமும் அரைமைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறையில் வீட்டுக்கு வீடு ஏதாவது பட்டம் ஏற்றி வைத்து இருப்பார்கள் பருத்தி முனையில் இருந்து சந்நிதியான் கோவில் வரை வாடைக்காத்து வந்தாலே காணும் ஒரே களேபரம்தான் பருத்திதுறை ஓடைக்கரையில் கொக்கு பட்டமும் பாராத்தை எனும் பட்டமும் கட்டுபவர்கள் வயதானவர்கள்தான் முன்பு பட்டப்போட்டி பருத்தித்துறையில்தான் நடப்பது உண்டு . 6 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted December 22, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 22, 2021 4 minutes ago, பெருமாள் said: 13 அடி உயர பட்டம் அது வடமராட்சி பகுதிகளில் படலம் என்பார்கள் நெருப்பில் இதமாய் வாட்டிய வின் அதை செய்வது ஒரு கலை போல் வயதானவர்கள் குறிப்பிட்ட சிலர் தான் செய்வார்கள் படத்தில் காணப்படும் படலத்துக்கு வாலா நீளமாய் இருந்தால் நல்ல பிள்ளை போல் கூவிக்கொண்டு இரவிலும் சத்தம் போட வைப்பார்கள் அந்த அதிர்வு சத்ததில் மழை வெள்ளத்துக்கு வரும் பாம்புகள் நச்சு பூச்சிகள் பழைய இடத்துக்கு போகவைத்துவிடும் என்பார்கள் பேய்க்காட்டால் தான் . சிலநேரம் வேணுமெண்டே வாலாவை பாதியை அறுத்துவிடுவார்கள் அதன்பின் காத்தவராயர் கூத்துபோல் வெறிகாரன் போல் அந்த மூலைக்கு ம் அடுத்த மூலைக்கும் பாய்ந்து கொண்டு இருக்கும் விடிய விடிய வின் அதிர்வு வேறு . பகிடி இனிமேல்தான் குட்டி படலம்கள் வாலா முழுக்க பழைய பிளேடு களை கட்டி தொங்க விட்டவாறு உபயம் பாபர் சொப் சண்டை படலங்கள் வானில் திடிரென தோன்றும் அப்படி கூவும் படலம்களை அட்டாக் பண்ணி அறுந்து போக பண்ணும் இப்படி குளிர்கால பட்ட காலம் முழுக்க பருத்திதுறை தொடக்கம் தொண்டமானறு வரை கலகலப்பாய் போகும். அதிலும் ஐந்துமைல் நீளமும் அரைமைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறையில் வீட்டுக்கு வீடு ஏதாவது பட்டம் ஏற்றி வைத்து இருப்பார்கள் பருத்தி முனையில் இருந்து சந்நிதியான் கோவில் வரை வாடைக்காத்து வந்தாலே காணும் ஒரே களேபரம்தான் பருத்திதுறை ஓடைக்கரையில் கொக்கு பட்டமும் பாராத்தை எனும் பட்டமும் கட்டுபவர்கள் வயதானவர்கள்தான் முன்பு பட்டப்போட்டி பருத்தித்துறையில்தான் நடப்பது உண்டு . பெரிய பட்டங்களுக்கு மொச்சை கட்டுவதற்கு நல்ல அனுபவம் வேணும்! வாலின் நீளமும் சரியான அளவில் இருக்க வேண்டும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 22, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 22, 2021 இந்த விசயத்தோடே, daily mirror பேப்பர் காரருக்கு வந்த காட்டூன் ஐடியா... 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி Posted December 22, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 22, 2021 (edited) 13 hours ago, goshan_che said: எல்லாரும் கைய விட்டா பிறகு ஏன் பிசின்போட்டு ஒட்டின மாரி பிடிச்சு கொண்டு நிண்டவர் எண்டு தான் விளங்கேல்ல. ஒரு 3 அடி கிளம்பினோனயைவது விட்டிருக்கலாம். எல்லாரும் கைய விடுறா எண்டு வேற கத்திறாங்கள். அதான.. ஜடியா இல்லாத மோட்டு பொடியனா இருக்கு… ஒரு வேளை எல்லாரும் கைய விட்டுட்டானுவள் பட்டத்த நான்தான் காப்பாத்த போறன் எண்டு நினைச்சிருப்பார் போல… Edited December 22, 2021 by பாலபத்ர ஓணாண்டி 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts