Jump to content

தொங்குடா.. தொங்கு..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதான.. ஜடியா இல்லாத மோட்டு பொடியனா இருக்கு… ஒரு வேளை எல்லாரும் கைய விட்டுட்டானுவள் பட்டத்த நான்தான் காப்பாத்த போறன் எண்டு நினைச்சிருப்பார் போல…😂

சிங்களவர் கொமென்ட் போட்டிருக்கிறார்....

திருப்பி இந்த நாட்டிலயே குதிச்சிராமல்,

அப்படியே பறந்து போய்..... ஜரோப்பாவில.... லாண்ட் ஆகி... தப்பி பிழைத்திருக்கலாமே...

அவங்களே ஓட நிற்கிறார்கள் ...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

சிங்களவர் கொமென்ட் போட்டிருக்கிறார்....

திருப்பி இந்த நாட்டிலயே குதிச்சிராமல்,

அப்படியே பறந்து போய்..... ஜரோப்பாவில.... லாண்ட் ஆகி... தப்பி பிழைத்திருக்கலாமே...

அவங்களே ஓட நிற்கிறார்கள் ...

இன்னும் ஒருத்தர் 

 
 
Iverkkum 20 perchlle kollupittile land kudukelame😁
இவருக்கும் 20 பெர்சேஸ் காணி கொல்பிட்டியில்  கொடுக்கணுமாம்  🤣
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த இளைஞர்: கீழே விழுந்து முதுகுத் தண்டு பாதிப்பு

 • யூ.எல்.மப்றூக்
 • பிபிசி தமிழுக்காக
8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராட்சத காத்தாடி

 

படக்குறிப்பு,

ராட்சத காத்தாடி

ராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் சுமார் 120 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து, அதிருஷ்டவசமாக தப்பிய சம்பவமொன்று இலங்கையின் பருத்தித்துறை - குரும்பசிட்டி பகுதியல் நடந்துள்ளது.

மனோகரன் என்ற அந்த இளைஞருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் இளைஞர்கள் சிலர் இணைந்து, ராட்சத காற்றாடி ஒன்றைப் பறக்க விட்டனர். காற்றாடி விடுவதில் எந்தவித முன் அனுபவங்களும் அற்ற மனோகரன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

பட்டம் மேலெழும் போது அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சிறிது சிறிதாக கயிற்றை விட வேண்டும் என்பது தெரியாத மனோகரன், காற்றாடியின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவர் பட்டத்துடன் மேலெழத் தொடங்கினார்.

இப்படி ஆகாயத்தில் கயிற்றைப் பிடித்தவாறு உயரத் தொடங்கிய மனோகரன், சுமார் 120 அடி வரை தான் கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை (18) பிற்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆகாயத்தில் மனோகரன் உயர்ந்த நிலையில், அவரை சத்தமிட்டு தைரியப்படுத்திய நண்பர்கள், மிகச் சிரமத்துடன் கயிற்றை கீழே இழுத்து மனோகரனை தரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்த நிலையில் - தான் பிடித்திருந்த கயிற்றை கைவிட்டு கீழே குதித்துள்ளார் மனோகரன்.

 

மனோகரன்

 

படக்குறிப்பு,

மனோகரன்

இதன்போது தனது உடலில் அடிபட்டதாகவும் முள்ளந்தண்டில் (முதுகுத் தண்டில்) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்தார்.

சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன், மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனாலும் முள்ளந்தண்டில் தற்போதும் வலி உள்ளதாக மனோகரன் கூறினார்.

திருமணமான மனோகரன் வெற்றிலைக் கடையொன்றை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மனோகரன் காற்றாடியின் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த காட்சியை அப்போது அவரது நண்பர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் படமெடுத்துள்ளனர்.

அந்தப் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

https://www.bbc.com/tamil/sri-lanka-59752860

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில், பருத்தித்துறை பகுதிகளில் எப்படி பட்டம் வடிமைத்துக் கட்டுகிறார்களென காண்பித்துள்ளார்கள்..!

வில்லு மாதிரி அமைப்பில் இருபுறமும் ஏதோ 'டப்பா' போல கட்டி அதில் பட்டையான நூலை இழுத்துப் பிடித்து முறுக்கேறியிருகிறார்கள், அதிலிருந்து வரும் விநோதமான ஒலியைக் கேளுங்கள். 🤔

இறுதியில் பொடியன்கள் கயிறைப் பிடித்து தொங்கி விளையாடுவது நல்ல த்ரிலிங்கான மற்ற்ம் வேடிக்கையான அனுபவம்.

Edited by ராசவன்னியன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

வில்லு மாதிரி அமைப்பில் இருபுறமும் ஏதோ 'டப்பா' போல கட்டி அதில் பட்டையான நூலை இழுத்துப் பிடித்து முறுக்கேறியிருகிறார்கள், அதிலிருந்து வரும் விநோதமான ஒலியைக் கேளுங்கள். 🤔

இதை நாங்கள் “விண்” என்று சொல்லுவோம்.  வில்லு மாதிரி முறியாமல் வளையக்கூடிய தடி என்றால் மூங்கில் தடி அல்லது கமுகம் சிலாகை (தடி) பாவிப்போம். படலம் அல்லது தட்டி (காணொளியில் இருக்கும் செவ்வக வடிவ பட்டம்) க்கும், கொக்கு, பிராந்து போன்ற பட்டங்களுக்கும் விண்பூட்டித்தான் ஏத்துவோம்.

விண் செய்ய தேவையானவை:

விசை - வில்லு மாதிரி வளையக்கூடிய மூங்கில் அல்லது கமுகம் தடி.  விசையை வழுவழுப்பாக இணக்கி, நடுவில் வைத்து பலன்ஸ் பார்த்து, முறியாமல் வளையக்கூடிய மாதிரிச் செய்யவேண்டும்.

நார் - பார்சல் ரேப் அல்லது பனம் நார், அல்லது உரப்பையில் இருந்து கிடைக்கும் பொலித்தீன் நார் (1 1/2 முழ விசைக்கு மேல் பாவிக்கமுடியாது!)

வெடிப்பு இல்லாத பார்சல் ரேப்பாக எடுத்து, பிசிங்கானால் “வாட்ட”வேண்டும். பிசிங்கான் உடைந்த போத்தல் துண்டு. சிலவேளை உடைந்த பல்ப் துண்டும் பாவிக்கலாம். வாட்டுவது என்றால் நாரை சீராக செம்மைப் படுத்துவது. அப்போதுதான் பிசிறில்லாமல் கூவும்! காணொளியில்  உள்ள விண் “அழறுகின்றது” (நாரில் வெடிப்பு இருக்கலாம் அல்லது ரென்சன் போதாது!).

பனம் நார் செய்வது மிகவும் கடினம். முதலில் வடலிப்பனையில் நீண்ட ஓலையைக் கண்டுபிடிக்கவேண்டும். மூன்று நாலு முழ நீளமான பச்சை ஓலையின் தடியில் நீளப்பாட்டுக்கு பிசிங்கானால் நாரை வெட்டியெடுக்கவேண்டும். இது சரியாகக் கிடைக்க மிகவும் பொறுமை தேவை. அதை வெடிக்காமல் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் “வாட்ட”வேண்டும்.  நார் அறாமல் இருந்தால் அதிஸ்டம்!  கொக்கு, பிராந்துப் பட்டங்களுக்கு பனம்நார் கலாதியாக இருக்கும்! அவை ஜா(சா)டும்போது விண் நன்றாகக் கூவும்! 

கூவைகள்- நாரை இழுத்துப் பிடித்துக்கொள்ள. இவற்றை கிளுவைத் தடியில் வெட்டி துளை போட்டுச் செய்வது.

காணொளியில் வரும் முதலாவது படலம் அளவு நானும் எனக்கு கூட்டுக்களும் கட்டி ஏத்தினோம். 😀 அதை ஒரு “மிஷனாக” இரண்டு மூன்று நாட்களில் செய்தோம். ஊரில் பலரது வேலிகளை வெட்டி தடிகளைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் விண்ணை பட்டத்தின் மேல் விளிம்பில் இருந்து 2-3 இஞ்சுகள் கீழேதான் கட்டுவோம். அப்போதுதான் முழுநார் மீதும் காற்றுப் படாமல் வெளிநீட்டிய நாரின் பகுதிகளில் மட்டும் காற்றுப் படும். இது அதிர்வின் frequency ஐக் கூட்டும் என நினைக்கின்றேன்!

 

 

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுகளை பார்த்தபின் இன்னும் எத்தனைபேர் கிறுக்கு பிடிச்சு அலைய போறாங்களோ ?

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.