Jump to content

நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு

  • ஏ.எம். சுதாகர்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மேடையில் இருந்த மைக்கையும் அவர்கள் பிடுங்கி வீசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பிபிசி தமிழ் தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் மற்றும் சில திமுகவினர் மேடை மீது திடீரென்று ஏறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் பேசினர்.

இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மேடையில் இருந்த மைக் செட் கீழே தள்ளப்பட்டது. இது தொடர்பான காணொளி சமுக வலைதளங்களில் வைரலானதால் இந்த சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் காவல் துறையினர் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

என்ன நடந்தது?

நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு முன்னிலை வகித்த அக்கட்சியின் அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திலிப்பிடம் பேசினோம்.

"பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். எங்கள் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மொரப்பூர் திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், அண்ணல் நகர் அண்ணாதுரை, கேபிள் ராஜா உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் மேடையில் ஏறி பேச்சாளரை தாக்க முற்பட்டனர். நாங்கள் பேச்சாளரை பாதுகாப்பு வளையமாக இருந்து காத்துக் கொண்டிருக்கும் போதே, தகாத வார்த்தைகளை பயன்படுத்தியவாறு மேடையில் இருந்த மைக், மேஜை ஆகியவற்றை தள்ளிவிட்டனர்," என்று கூறினார்.

"கருத்துக்களை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் நாற்காலி, மைக்கை தூக்கி உடைத்து போட்டனர். பிரச்னை ஏற்படாமல் காவல்துறையினர் தடுத்து அவர்களை மேடையிலிருந்து இறக்கி அழைத்துச் சென்றனர்," என்றார் திலீப்.

நாம் தமிழர் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் கூறும்போது, எங்களுடைய கருத்துகள் அவர்களுக்கு ஏற்புடையவை இல்லை என்றால் எங்கள் மீது வழக்கு போட வேண்டும். அதை விடுத்து இப்படி அநாகரிகமாக அராஜகமாக வன்முறையை கையில் எடுத்து எங்களை தாக்க முற்படுவது நாகரிகமான செயல் கிடையாது என்று தெரிவித்தார்.

 

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

 

படக்குறிப்பு,

ஹிம்லர், நாம் தமிழர் கட்சி பேச்சாளர்

"இது குறித்து இதுவரை நாங்கள் காவல் நிலையத்தில் எந்த புகாரும் கொடுக்க வில்லை. கட்சித் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறோம் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி எங்களுடைய எதிர்கால நடவடிக்கை இருக்கும்," என்றார்

இந்த விவகாரத்தில் மேடை ஏறி பிரச்னை செய்ததாக கூறப்படும் திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன்னிடம் பேசினோம்.

"நாம் தமிழர் கட்சியினர் கூட்டம் தொடங்கிய நேரத்திலிருந்து எங்கள் தலைவரையும் தலைவர் குடும்பத்தாரையும் தரக்குறைவாக திட்டிக் கொண்டே இருந்தனர். நான் இது பற்றி காவல்துறையினரிடம் முறையிட்டேன். இதுபோல பேசாமல் இருக்க அவர்களை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறினேன். ஆனால் தொடர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் நானே மேடைக்குச் சென்று ஏன் இப்படி தரக்குறைவாக பேசுகிறீர்கள்? தலைவர் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் தானே ஆகிறது. அதற்குள் என்ன செய்துவிட முடியும் ? சற்று பொறுத்திருந்து பார்த்தால்தான் அவருடைய முழு செயல்படும் தெரியவரும் என்று சொன்னேன்," என்றார்.

 

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

"இந்த வாக்குவாதம் நடந்தபோதே ஒரு குட்டி கலாட்டா நடந்து விட்டது. ஒரு மணி நேரம் நடந்த காட்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே எடிட் செய்த காணொளியை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் கூறுவது போல நாங்கள் நாற்பது, ஐம்பது பேரெல்லாம் செல்லவில்லை. மூன்று பைக்கில் நாங்கள் ஆறு பேர் தான் வந்திருந்தோம். முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியது குறித்து எங்களுடைய மொரப்பூர் இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார்," என்றார் செங்கண்ணன்.

மொரப்பூர் காவல்துறை ஆய்வாளர் வசந்தாவிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டபோது, "நாம் தமிழர் கட்சியினர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். நான் பொறுப்பேற்று இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. இதற்கு முன்பு இருந்த ஆய்வாளர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என அந்த ஆய்வாளர் கூறி விட்டார். இந்த நிலையில் அனுமதி பெறாமல் அவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தனர். திமுக இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் என்பவர் நாம் தமிழர் கட்சி மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் மேடை போட்டு தகாத வார்த்தைகளை பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் மீது மாவட்ட எஸ்பி அறிவுரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். செங்கண்ணன் மட்டுமே மேடைக்கு சென்றது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து இது குறித்து எந்தவித புகார் மனுவும் வரவில்லை," என்றார்.

https://www.bbc.com/tamil/india-59755331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக மேடைப்பேச்சாளர்கள் ஆதரவாளர்கள் எழுத்தாளர்கள் நாம்தமிழர நாகரீகமில்லாதவர்கள் முட்டாப்பயலுகன்னு திட்டுரப்போ பாக்கனும்.. ஆனா முழு முட்டாளுங்க ரவுடிங்க திருடனுங்க இவனுங்க.. நாம்தமிழரும் இவனுங்க பன்னுற முட்டாள்தனத்த பண்ணாமல் இப்படியான சம்பவங்களை திறமையாக கையாண்டு அனுதாப ஆதரவு ஓட்டுக்களா மாத்தனும்.. நாம்தமிழருக்கு இந்திய அரசியலில் நான் ஆதரவளிப்பதற்கு காரணம் இருக்குற ரெண்டு பேய்களவிட புதுசா ஒருத்தங்க அங்க வரட்டும் பாப்பம் எண்டுதான்.. மற்றும்படி ஈழத்தை எல்லாம் வெண்டுதருவினம் எண்டதுக்கு இல்ல..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரௌடியிசம் ஒண்ணும் திமுகவுக்குப் புதிதல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நாம் தமிழர் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் கூறும்போது, எங்களுடைய கருத்துகள் அவர்களுக்கு ஏற்புடையவை இல்லை என்றால் எங்கள் மீது வழக்கு போட வேண்டும். அதை விடுத்து இப்படி அநாகரிகமாக அராஜகமாக வன்முறையை கையில் எடுத்து எங்களை தாக்க முற்படுவது நாகரிகமான செயல் கிடையாது என்று தெரிவித்தார்.

 

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

 

படக்குறிப்பு,

ஹிம்லர், நாம் தமிழர் கட்சி பேச்சாளர்

"இது குறித்து இதுவரை நாங்கள் காவல் நிலையத்தில் எந்த புகாரும் கொடுக்க வில்லை. கட்சித் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறோம் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி எங்களுடைய எதிர்கால நடவடிக்கை இருக்கும்," என்றார்

 

Bild

திருப்பி அடிச்சிருந்தால் செத்திருப்பான்.🤣

பலசாலி எப்போதும் எதிராளியை மன்னிக்கிறான். 
எனவே அவன் தான் பலசாலி! 😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

Quote

நாம்தமிழருக்கு இந்திய அரசியலில் நான் ஆதரவளிப்பதற்கு காரணம் இருக்குற ரெண்டு பேய்களவிட புதுசா ஒருத்தங்க அங்க வரட்டும் பாப்பம் எண்டுதான்.. மற்றும்படி ஈழத்தை எல்லாம் வெண்டுதருவினம் எண்டதுக்கு இல்ல..

நம்ம பாலிசி தான்... தமிழ்நாட்டிலே வெளியிலிருந்து வருற தலைவரை ஏத்துக்குவான்.... உள்ளூர் என்றால் சாதி பார்ப்பான்...

அதால, வெளிநாடு என்றாலும், தமிழன் என்று பிரபாகரனை கொண்டு போயி சேர்ந்திருக்கிறாங்க...

புரிந்து.... ஆதரவு கொடுத்து விலகி இருக்கணும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நம்ம பாலிசி தான்... தமிழ்நாட்டிலே வெளியிலிருந்து வருற தலைவரை ஏத்துக்குவான்.... உள்ளூர் என்றால் சாதி பார்ப்பான்...

அதால, வெளிநாடு என்றாலும், தமிழன் என்று பிரபாகரனை கொண்டு போயி சேர்ந்திருக்கிறாங்க...

புரிந்து.... ஆதரவு கொடுத்து விலகி இருக்கணும்....

இது கருணாநிதி பாலிசி....

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆட்சி
நம்ம பொலிசு
ஏலுமென்றா பண்ணிப் பார்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

 

Bild

திருப்பி அடிச்சிருந்தால் செத்திருப்பான்.🤣

பலசாலி எப்போதும் எதிராளியை மன்னிக்கிறான். 
எனவே அவன் தான் பலசாலி! 😎

 

 

 

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி.😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவதா?.. திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! 

 

By Rayar A

Updated: Thu, Dec 23, 2021, 19:48 [IST]

சென்னை: தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

 

கடும் மோதல் 
 

இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் சிலர் திடீரென மேடையேறி பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு போடப்பட்டு இருந்த நாற்காளிகளும், மேஜைகளும் வீசப்பட்டு அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

 
edappadi67-1617170706.jpg
எடப்பாடி பழனிசாமி கண்டனம் 
 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் தற்போது ஒரு நாதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு (21.12.2021), தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

 

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும்... 
 

ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலையாகும். அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நரகல் நடையில், நாராச நடையில் அம்மாவின் அரசையும், எங்களையும் விமர்சித்தவர்கள் திமுக-வினர்.

ஜனநாயகப் படுகொலை 
 

எப்போதும் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் குத்தகைதாரர்கள் தாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்த திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன். அவரது கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி, எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் குரல் வளையை நெறிக்கிறார்கள். தனக்குக் கீழுள்ள காவல் துறையை, திமுக-வினரின் ரவல் துறையாக மாற்றி, எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலையும், ஜனநாயகப் படுகொலையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
edapadi89772-1616137635-1616352590-1616479153.jpg
விடியா அரசு 
 

தற்போதுள்ள விடியா அரசில், தமிழகத்தில் உள்ள உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளளர். தருமபுரி சம்பவத்தில் ஈடுபட்ட திமுசு-வினர் மீரும், இந்த அராஜகத்தைத் தடுக்கத் தவறிய அங்கிருந்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல் துறை தலைவர் அவர்களை வற்புறுத்துகிறேன்.
21.12.2021 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோதவாடி குளம் நிரம்பி வழிந்ததை அடுத்து, அக்கிராம மகளிர் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அவர்களை கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.

pollachi-jayaraman33434-1552317583-1552472054-1553054662.jpg
பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் 
 

அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பல அரசு மற்றும் கட்சிப் பதவிகளை வகித்த, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மீதும், வழிபட்ட மகளிர் மீதும் திமுசு-வினர் தாக்குதல் நடத்தினர். இதை அன்றே நான் கண்டித்தேன்.இருப்பினும், தாக்குதலுக்குள்ளான சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் மீதே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது விந்தையாக உள்ளது. பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினர் முன்னிலையிலேயே, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினரை விட்டுவிட்டு, தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதலிடம் வகித்த தமிழசு காவல்துறை, இந்த விடியா அரசில் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது

தருமபுரி: பேச்சை நிறுத்துடா.. கொந்தளித்த திமுகவினர்… நாம் தமிழர் கட்சி மேடையில் பறந்த சேர்கள்!
eps-cm1-1610905645-1640259898.jpg
பொதுமக்களே போராடும் நிலை 
 

இனியாவது விடியா அரசின் முதலமைச்சர், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றில்லாமல், தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவை ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துக்கள் வெளிப்படுத்துவதையும் காவல் துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைக்கும் போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் இந்த அராஜகப் போக்கை எதிர்த்து பொதுமக்களே வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

https://www.google.com/amp/s/tamil.oneindia.com/amphtml/news/chennai/tamil-nadu-opposition-leader-edappadi-palanisamy-condemns-dmk-443074.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.