Jump to content

தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் 

அன்பின் தாத்தாவுக்கு 
உங்கள் பேரன் 
எழுதுவது 

தாத்தா சுகமா 
தாத்தா எங்கள் வீட்டல்
முன்பு போல் யாரும் 
நத்தார் கொண்டாடுவது இல்லை 
எங்கள் வீட்டு 
பூ மரம் பூக்க  
மறந்து விட்டது தாத்தா

அப்பா அம்மா யுத்தம் 
முடிவு இல்லாமல் 
தொடர்கிறது 

நானும் சமரசம் செய்து 
களைத்து விட்டேன் 
காலைச் சூரியன் 
எங்கள் கதவடியில் வந்து 
கன காலம் ஆகிவிட்டது தாத்தா 

நத்தார் இம்முறை 
உங்களோடு கொண்டாட 
முடியுமா தாத்தா 

உங்களுக்கு பிடித்தமான
காந்தி சிலையை 
நத்தார் பரிசாக கொண்டு 
வருகிறேன் 

தேவன் வருகையை 
உங்களோடு பாடி மகிழ்வதில் 
எத்தனை சந்தோசம் தாத்தா 
எல்லாக் கடவுளுமே 
சொல்லும் தத்துவம் 
ஒன்றென்றே எனக்கு 
சொல்லித்தந்தீர் தாத்தா 

தாத்தா நினைவு இருக்கிறது 
உங்கள் பாடல் 
ஓதாமல் ஒருநாளும் 
இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு 
சொல்ல வேண்டாம்

இன்னும் இசைத்தபடியே 
இருக்கிறது என் காதுகளில் 
கண் போகும் தூரம் வரை 
காத்துருக்கிறேன் தாத்தா 

தாத்தா உங்கள் கைத்தடி 
கதிர் வேட்டி பாட்டுப் பெட்டி 
பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன் 
கைத்தடி மட்டும் கன காலமாய் 
காத்திருக்கிறது காற்று வேண்ட
உங்களை கூட்டிப் போக 

தாத்தா நீங்கள் வளர்த்த 
புறாக்கள் இன்னும் 
வீடு திரும்பி வரவே இல்லை 
உங்களைப்  போலவோ
அவைகள் எங்கு போனது 
நீங்கள் எங்கு போனீர்கள் 
என்றறிய ஆவல் தாத்தா 

தாத்தா நானும் நீங்களும் புறாக்களும் 
கூடி விளையாடிய நாட்களை 
நினைத்துப் பார்க்கிறேன் 
பறவைகளோடு உங்கள் பாசம் 
பாரதியைப் போல் தாத்தா 

கூடு மட்டும் 
தனியாகக் காத்திருக்கிறது தாத்தா 
அருகில் உங்கள் கதிரையோடும் 
நீங்கள் வாசித்து விட்டுப் போனா 
புத்தகத்தின் பக்கத்தோடும்

அத்தோடு நீங்கள் எழுதி முடித்த 
மனிதம் என்ற கவிதை ஒன்று 
என்னோடு தான் இருக்கிறது 
நீங்கள் விட்டுச் சென்ற 
பக்கத்தில் இருந்து 
நான் தொடர்ந்து 
எழுதவிருக்கிறேன் தாத்தா 

வந்து விடு தாத்தா 
ஞாபகங்கள் கொல்லுதென்னை 
நினைவுகள் தூங்குவதில்லை தாத்தா 

இப்படிக்கு 
உங்கள் அன்புப் பேரன் 

முகவரி இல்லாத கடிதத்தை 
கிழித்து எறிந்து போகிறான் 
ஒரு தபால்காரன் 

நிரந்தரமாய் தூங்கிய தாத்தாவை 
எப்படி எழுப்ப முடியும் 
இவன் அப்பாவால்

ஏதோ ஆறுதல் சொல்லி 
அவன் அழுகையை நிறுத்துகிறார் 
அப்பாக்காரன்
பதிலுக்காக இன்னும் 
பார்த்திருக்கிறான் பேரன்காரன்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, uthayakumar said:

உங்களுக்கு பிடித்தமான
காந்தி சிலையை 

தாத்தாக்கள் அப்பாவிகளாக இருந்தார்கள் பாவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

உங்களுக்கு பிடித்தமான
காந்தி சிலையை 
நத்தார் பரிசாக கொண்டு 
வருகிறேன் 

காந்தியை முன்னுக்கு வைத்திட்டு பின்னால ரொம்ப அநிஞாயம் செய்யிறாங்கள்

எனவே தாத்தாவுக்கு சிலையை மாத்துங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, uthayakumar said:

தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் 

அன்பின் தாத்தாவுக்கு 
உங்கள் பேரன் 
எழுதுவது 

தாத்தா சுகமா 
தாத்தா எங்கள் வீட்டல்
முன்பு போல் யாரும் 
நத்தார் கொண்டாடுவது இல்லை 
எங்கள் வீட்டு 
பூ மரம் பூக்க  
மறந்து விட்டது தாத்தா

அப்பா அம்மா யுத்தம் 
முடிவு இல்லாமல் 
தொடர்கிறது 

நானும் சமரசம் செய்து 
களைத்து விட்டேன் 
காலைச் சூரியன் 
எங்கள் கதவடியில் வந்து 
கன காலம் ஆகிவிட்டது தாத்தா 

நத்தார் இம்முறை 
உங்களோடு கொண்டாட 
முடியுமா தாத்தா 

உங்களுக்கு பிடித்தமான
காந்தி சிலையை 
நத்தார் பரிசாக கொண்டு 
வருகிறேன் 

தேவன் வருகையை 
உங்களோடு பாடி மகிழ்வதில் 
எத்தனை சந்தோசம் தாத்தா 
எல்லாக் கடவுளுமே 
சொல்லும் தத்துவம் 
ஒன்றென்றே எனக்கு 
சொல்லித்தந்தீர் தாத்தா 

தாத்தா நினைவு இருக்கிறது 
உங்கள் பாடல் 
ஓதாமல் ஒருநாளும் 
இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு 
சொல்ல வேண்டாம்

இன்னும் இசைத்தபடியே 
இருக்கிறது என் காதுகளில் 
கண் போகும் தூரம் வரை 
காத்துருக்கிறேன் தாத்தா 

தாத்தா உங்கள் கைத்தடி 
கதிர் வேட்டி பாட்டுப் பெட்டி 
பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன் 
கைத்தடி மட்டும் கன காலமாய் 
காத்திருக்கிறது காற்று வேண்ட
உங்களை கூட்டிப் போக 

தாத்தா நீங்கள் வளர்த்த 
புறாக்கள் இன்னும் 
வீடு திரும்பி வரவே இல்லை 
உங்களைப்  போலவோ
அவைகள் எங்கு போனது 
நீங்கள் எங்கு போனீர்கள் 
என்றறிய ஆவல் தாத்தா 

தாத்தா நானும் நீங்களும் புறாக்களும் 
கூடி விளையாடிய நாட்களை 
நினைத்துப் பார்க்கிறேன் 
பறவைகளோடு உங்கள் பாசம் 
பாரதியைப் போல் தாத்தா 

கூடு மட்டும் 
தனியாகக் காத்திருக்கிறது தாத்தா 
அருகில் உங்கள் கதிரையோடும் 
நீங்கள் வாசித்து விட்டுப் போனா 
புத்தகத்தின் பக்கத்தோடும்

அத்தோடு நீங்கள் எழுதி முடித்த 
மனிதம் என்ற கவிதை ஒன்று 
என்னோடு தான் இருக்கிறது 
நீங்கள் விட்டுச் சென்ற 
பக்கத்தில் இருந்து 
நான் தொடர்ந்து 
எழுதவிருக்கிறேன் தாத்தா 

வந்து விடு தாத்தா 
ஞாபகங்கள் கொல்லுதென்னை 
நினைவுகள் தூங்குவதில்லை தாத்தா 

இப்படிக்கு 
உங்கள் அன்புப் பேரன் 

முகவரி இல்லாத கடிதத்தை 
கிழித்து எறிந்து போகிறான் 
ஒரு தபால்காரன் 

நிரந்தரமாய் தூங்கிய தாத்தாவை 
எப்படி எழுப்ப முடியும் 
இவன் அப்பாவால்

ஏதோ ஆறுதல் சொல்லி 
அவன் அழுகையை நிறுத்துகிறார் 
அப்பாக்காரன்
பதிலுக்காக இன்னும் 
பார்த்திருக்கிறான் பேரன்காரன்.

பா.உதயன் ✍️

536028.jpg

நல்லதொரு கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர் 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 00:57, பெருமாள் said:
On 22/12/2021 at 21:48, uthayakumar said:

உங்களுக்கு பிடித்தமான
காந்தி சிலையை 

தாத்தாக்கள் அப்பாவிகளாக இருந்தார்கள் பாவம் .

 

On 23/12/2021 at 02:25, ஈழப்பிரியன் said:

காந்தியை முன்னுக்கு வைத்திட்டு பின்னால ரொம்ப அநிஞாயம் செய்யிறாங்கள்

எனவே தாத்தாவுக்கு சிலையை மாத்துங்க.

 

On 23/12/2021 at 04:30, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர் 💐

பெருமாள்,ஈழப்பிரியன், புரட்சிக்கர தமிழ் தேசியன் உங்கள் அனைவரின் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதின் நுண்ணுணர்வு நினைவலைகளைக் கிளறும் நுட்பமான கவிதை......!  🌹

நன்றி உதயன்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2021 at 15:17, poet said:

நல்ல தன்னுணர்வு. lyrical  narrative கவிதை. வாழ்த்துக்க

 

3 hours ago, suvy said:

மனதின் நுண்ணுணர்வு நினைவலைகளைக் கிளறும் நுட்பமான கவிதை......!  🌹

நன்றி உதயன்.......! 

Poet, சுவ.சோமசுந்தரம் ,சுவே உங்கள் பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.