Jump to content

பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா!

December 23, 2021
spacer.png

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை கைவிட்டு வெளிநாடுக்கு சென்றவரே அன்டன் பாலசிங்கம். அவர் இங்கிலாந்தில் ஒரு தாதியரையே திருமணம் செய்திருந்தார். பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது தனக்கு சந்தேகமே.

பாலசிங்கம் போன்று வெளிநாடுகளில் இருந்தவர்களுக்கு நாட்டில் இனப் பிரச்சினை ஒன்று இருந்தது பயனாக இருந்தது. இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டங்களை தூண்டினர் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை முன்னாள் னைாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காலத்தில், யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா இருந்தபோது, ” மண்டைக்குள் ஒன்றுமில்லாதவர் ” இராணுவம் தனது வேலையை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் வேலையை ராணுவம் செய்யக் கூடாது என சரத் பொன்செகா மீது கடுமையான விமர்சனத்தை சந்திரிக்கா முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2021/170864

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தான் இந்தியாவும்

சாறம் கட்டிய பெடியள் என்று இறங்கி வைத்த காலை எடுக்க இயலாமல் இழப்புக்களுடன் போனார்கள்.

கடைசியாக ஊரைக் குட்டி முதுகில் குத்தி தான் 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

Link to comment
Share on other sites

Just now, ஈழப்பிரியன் said:

 

கடைசியாக ஊரைக் குட்டி முதுகில் குத்தி தான் 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

முக்கியமாக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பெரும் இனப்படுகொலை மூலம் போரை அவலத்தினூடாக (தற்காலிகமாக) நிறுத்தினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

முக்கியமாக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பெரும் இனப்படுகொலை மூலம் போரை அவலத்தினூடாக (தற்காலிகமாக) நிறுத்தினார்கள்.

அதுதானே முழுக்க தடை செய்யப்பட்ட ஆயதங்களை பயன்படுத்தியல்லவா வென்றார்கள்.

படித்தவர்கள் அத்துடன் விட்டார்களா.

உலக சட்டத்திற்கு முரணாக சரணடைந்தர்களையும் அல்லவா கொன்று குவித்தார்கள்.

படித்தவர்களால் எப்படிப்பா பாலகன் பாலச்சந்திரனையும் போட்டுத் தள்ள மனம் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப்பற்றி பொன்சேகா சொல்வது எனக்கு வலிக்கவில்லை

எம்மவரே  சொல்லும்போது எமக்கு வலிக்காதபோது?????

இன்றும்  ஒரு கூட்டம் இங்கும்  சுத்துதே....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கழைக்கழகம் எண்டால் என்ன என்று தெரியாத ராஜபக்சேக்கள், எண்டு எழிதினதுக்கு வெடி விழுந்தது லசந்தாவுக்கு....

அவயின்ற ஆட்சிலஇருந்து கதைக்கிறார்.....

நெளியப் போகினம்....

இவரின்ற வாயால தான் வெலிகட உள்ள இரண்டு வருசம்....இருந்தவர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொன்னருக்கு வாக்குப் போடச் சொன்ன கூட்டமைப்புக்கும் வாக்குப் போட்ட மக்களுக்கும் சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

3 minutes ago, புலவர் said:

இந்தப் பொன்னருக்கு வாக்குப் போடச் சொன்ன கூட்டமைப்புக்கும் வாக்குப் போட்ட மக்களுக்கும் சமர்ப்பணம்.

இதை மட்டும் கூறுவீர்களா?  மகிந்த கொடுத்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையும் மகிந்தவை  வெற்றி பெற வைக்கும் நோக்குடன் மக்களை 2005 ல் வாக்கு போட விடாது தடுத்து, அதன் மூலம்  அவரை வெற்றி பெறவைத்தவர்களுக்கு சமர்பணம் என்று கூறுவீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

@tulpen எதிரி என்றால் என்ன என்று உங்களுக்கு விளங்கவில்லை

கோசான் எழுதியுள்ளார் பொன்னரின் படிப்பு எவ்வளவு என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை படிப்பறிவு இல்லாதவர் என்கிறார்கள், அப்புறம் எதுக்கு படிப்பறிவில்லாத பிரபாகரன் தலைமை தாங்கும் புலிகள் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடந்த போதெல்லாம் அரச மட்டத்தில் சட்ட வல்லுனர்கள், பேராசிரியர்கள் அரசியல் நிபுணர்கள் உதவியை இலங்கை அரசினர் நாடினார்கள்?

புலிகள் தரப்பில் பேசியவர்கள் படிப்பறிவானவர்கள் என்று சொல்லி தப்பிக்க முடியாது, அவர்கள் பிரபாகரன் பேச சொன்னதை பேசியவர்களேயன்றி அவர்கள் புலிகளின் தலைமை அல்ல.

படிப்பறிவேயில்லாத அன்ரன்பாலசிங்கம் தலைமை தாங்கும் பேச்சு வார்த்தை குழுவை எதிர்கொள்ள இலங்கை அரச குழுவுக்கு எதற்கு பயிற்சி பட்டறை எல்லாம் கொடுத்து ஜெனிவா அனுப்பினார்கள்? காலம் வேகமானது எல்லாவற்றையும் மறந்து பேச சொல்லும்.

அது ஒரு பக்கம் நிற்க, அவன் எதிரி அப்படித்தான் எம்மையும் எமது போராட்ட சக்தியையும் தலைமையையும் ஏளனம் செய்வான்.அது சிங்களவன் மட்டுமல்ல உலகில் எந்த எதிரியும் தனது எதிரியை அப்படித்தான் கிண்டலும் கேலியும் செய்வான்.

புலிகள் உட்பட்ட இயக்கங்கள் படிப்பறிவில்லாதவர்கள் ஆயுதம் ஏந்த மட்டுமே தெரியும் அரசியல் செய்ய நாங்கள்தான் வேண்டுமென்று முதன் முதலில் சொன்னவர்கள் சாட்சாத் தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் பெரிசுகளும்தான்,.

அதுவும் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலேயே தலைவரை சாதி சொல்லி திட்டிய பெரிசுகளும் உண்டு, படிப்பறிவில்லாதவர் என்று விமர்சனம் செய்து பச்சை மிளகாய் ஒருகிலோ தின்ன வைக்கப்பட்டவர்களும், பச்சை மட்டை அடி வாங்கியவர்களும் உண்டு.

சொந்த இனத்திலிருந்தபடியே இனமான போராளிகளை அதன் தலைமையை  தரக்குறைவாக விமர்சனம் செய்யும் வித்தையை ஆரம்பித்து வைத்தவர்கள் நாங்கள், இன்று எதிரி கேலி செய்கிறான் என்று சினம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 

Link to comment
Share on other sites

சரத் பொன்சேகா புலிகள் இருந்த நேரம் இக்கருத்தை சொல்லவில்லை என்பதில் இருந்து எவ்வளவு பயம் புலிகள் மேல் இருந்து இருக்கிறது என்று. 
அமெரிக்காவில் இருந்து இராணுவ (மேற்கத்தையவர்கள்) விற்பன்னர்கள் அழைக்கப்பட்டு ஆனையிறவு முகாமை புலிகளால் அடிக்க முடியாது என அறிக்கை கொடுத்து விட்டு போனார்கள். தங்களில் நம்பிக்கை இல்லாமல் வேற்று நாட்டவனை நம்பிய கோழைகள் சறத்தோடு நின்ற போராளிகள் தான் ஓட ஓட ஆனையிறவில் இருந்து விரட்டி அடித்தார்கள் என்பதும் சரத்தின் இராணுவ கல்லூரி படிப்பால் (சரத் போன்றவர்களதும்) எதுவும் புலிகளை நிறுத்த முடியவில்லை என்பதையும் அறிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெலயீனமானவனை அடித்து, அடக்கி ஆட்சி செய்த அநியாயத்தை தட்டிக்கேட்க படிப்பும், பட்டமும் தேவையில்லை என்பதற்கு தலைவர் உதாரணம்.  படித்தவர்கள், புத்தியீவிகளின் பேராசையே அவரை கொதித்தெழ வைத்தது. நம்ம படித்த, சட்ட வல்லுநர்கள் கேட்க நாதியற்று தலையாட்டிக்கொண்டு இருந்தபோது  அவர் தேவைப்பட்டார். படித்தவர்கள் ஒரு இனத்தை திட்டமிட்டு அழித்தார்கள், வெக்கமில்லாமல், மனச்சாட்சியில்லாமல் இன்றும் பொய் சொல்லி அழிப்பை நிஞாயப்படுத்துகிறார்கள். படித்தவர்கள் போர் தர்மம் மீறி,  ஊழியாட்டம் போட்டபோதும் நீதிவழி நின்று போரிட்டவர். மனிதாபிமான போர் என்று சொல்லிக்கொண்டு படித்த இரத்த காட்டேரிகள் மனிதர்களை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சரணடைந்தவர்களை  கொன்று குவித்தவர்கள் மத்தியில், போர்தர்மத்தை காத்தவர்களை புகழ முடியாவிடில், ஒழுக்கத்தில் குறை காண முடியாவிடில்  படிப்பை தூக்குவது கோழைகளின், ஆத்தாதவன் செயல். படித்தவர்கள் இறந்த வீரர்களின் உடலை முக்கியமாக பெண் போராளிகளின் உடலை என்ன செய்தார்கள்? அதே நேரம் இறந்த இராணுவ வீரர்களின் உடலையும் படித்த  சிங்களம்  தட்டிக்கழித்தபோது இறந்தாலும், அவர்களின்  உடலுக்கும்,  உறவுகளின் உணர்வுகளுக்கும் உரிய  மரியாதையை செலுத்த தவறாதவர் இந்த படிக்காத என்று சொல்லப்படுகிற என் தலைவர் தான்! பாவம் அவரும் அரசியல் ஏறி ராஜபக்ச குடும்பத்தை பழிதீர்க்க வழமைபோல்  தவறான நேரத்தில்  புலிகளை ஆயுதமாக்கி ஆதாயம் தேட முனைகிறார். ஆனால் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். இனிமேல் புலியை சொல்லி அரசியல் செய்பவனை சிங்கள மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். புலிகளை உருவாக்கியதும், அவர்களை வைத்து வயிறு கழுவுபவர்களும், தம்மை ஏமாற்றுபவர்களும் அரசியல்வாதிகளும், பிக்குகளும் என்று அவர்கள் பட்டுத் தெளிந்துளார்கள் என்பது அண்மைய செயற்பாடுகள் தெரிவிகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 07:06, கிருபன் said:

பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது தனக்கு சந்தேகமே.

Balasingham’s MA dissertation at the South Bank London Polytechnic was on the psychology of Marxism. Later he began reading for his PhD on alienation under John Taylor. He never completed his PhD. But the media generally referred to him as Dr. Balasingham. Why did he not complete his PhD? Adele Balasingham says in her book The Will to Freedom, “But the demands of the revolutionary politics of the national liberation struggle of his (Balasingham’s) people constantly intervened in his research and teaching. A time came when he was compelled to choose between an academic life and revolutionary politics. He chose the latter for he viewed the cause of his people as just and to serve that cause was meaningful.”  
 

https://www.dailymirror.lk/article/LTTE-Political-Adviser-Balasingham-knew-the-world-was-going-to-clobber-the-tigers-120497.html

மார்க்சிசத்தில் ஆய்வு எம் ஏ முடித்து பி எச்டி படிப்பின் இடையில் தாயக அரசியல் சுமையால் படிப்பை கைவிட்டார் பாலா அண்ணை.

அவரை பார்த்து பொன்னர் படிப்பறிவில்லாதவர் என்பது, பழைய கவுண்டர் கொமெடி.

நான் எட்டாம் கிளாஸ் பாஸ், நீ எஸ் எஸ் எல் சி பெயில் 🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லாத பிரபாகரன் தான்... இவர் பிரதிநிதிப்படுத்தும் சிங்கள பெளத்த பேரினவாத..ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடி.. தமிழருக்கான.. ஒரு நிழல் அரசை கட்டியமைத்தார்.

சிங்கள சனாதிபதிகளில்.. 6 சனாதிபதிகளை கடந்தும்.. ஹிந்தியாவில் 6-7 பிரதமர்களை கடந்தும்.. 25 நாடுகள் (அனைத்து உலக வல்லரசுகளும் உள்ளடங்க) எதிர்த்து சமர் செய்தார் தமிழர்களுக்காக.

இறுதி யுத்தத்தில் கூட இந்தப் பொன்சேகா களத்தில் இருக்கவில்லை. சீனாவில் பதுங்கிக் கிடந்தவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் ஏன்? இலங்கை அரசியலில் இவர்களால் சேர்த்துக்கொள்ளபட்ட வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கல்வித்தகமையையும் வெளியிட்டு இவர் கருத்து பரிமாறலாமே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.