Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 

தவிபு இன் வலிதாக்குதல் தொடர் நடவடிக்கையான 

ஓயாத அலைகள் Unceasing waves 3 ltte.jpg

'படிமப்புரவு: எரிமலை மாத இதழ்'

 

முன்னுரை

 

ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ''ஓயாத அலைகள் மூன்று'' படை நடவடிக்கை ஆகும். இது தமிழீழ விடுதலைப்புலிகளால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்குத் தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. இந் நடவடிக்கை மூலம், சிங்களவரின் பல்வேறு காலகட்டப் படையெடுப்புகளால் வல்வளைக்கப்பட்டு இழக்கப்பட்ட தமிழரின் ஆட்புலங்களின் பல நிலப்பரப்புகள் மீட்டெடுக்கப்பட்டன.

இவ் அலையானது தொடர்ந்து ஒரே திசையில் வீசவில்லை. அது பல்வேறு சமயங்களில் தேவை கருதி இடைநிறுத்தபட்டு தமிழர் நிலங்கள் மீட்டெடுக்கப்படுவதற்காக வேறு திசைகள் நோக்கி திருப்பப்பட்டது. முதலில் வன்னியின் தென் திசையில் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையானது பின்னர் வடதிசை நோக்கி திருப்பப்பட்டு மூன்று கட்டங்களாக வடிவாகப் போனது வரலாறு. இதன்போதுதான் 2 ஆண்டுகளாக சிங்களப்படைகள் வல்வளைத்த தமிழர் நிலங்களை 2 கிழமைகளில் மீண்டும் அடித்துப் பிடித்த ஒரு பெரும் சாதனை நடவடிக்கையும் அரங்கேறியது. பேந்து, குடாரப்பு தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவு அதிர்ந்து வீழ்ந்து சாவகச்சேரி மீட்டெடுக்கப்பட்டது வரை மற்றொரு சிறு பரணி ஆகும்!

இத்தொடர் நடவடிக்கை மூலம் ஆறாயிரத்திற்கும் அதிகமான(துல்லியமான எண்ணைக்கையினை இருதரப்பும் வெளியிடவில்லை) சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டோ காணாமலோ போயுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு பற்றியம் தெரிவித்ததாக புலிகள் செய்தி வெளியிட்டிருந்ததும் பல்லாயிரம் பேர் காயமடைந்தும் பல கோடி உரூபாய் பெறுமதியான போர்த் தளபாடங்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டமையும் பெரும் வரலாறாகும். இங்குதான் முதன்முதலாக புலிகளால் 152 மிமீ தெறோச்சிகள்(3) கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னைய பல படை நடவடிக்கைகள் மூலம் சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்டிருந்த 2500 ச.கிமீ இற்கும் அதிகமான நிலப்பரப்பு தமிழரால் மீட்கப்பட்டது.

இதன் வலிதாக்குதல் நடவடிக்கைகள் சூன் 19ஓடு நிறுத்தப்பட்டாலும் இந்நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டிருந்த யாழப்பாணத்தின் வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகள் யாவும் முற்றுமுழுதாக செப்டம்பர் 17 வரை புலிகளால் தக்கவைக்கப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற சமர்களின் பின்னரே அந்நிலப்பரப்பிலிருந்து புலிகள் பின்வாங்கத் தொடங்கினர். இப்பின்வாங்கல் செயல்பாடானது அடுத்த ஆண்டு, 2001, சனவரி வரை தொடர்ந்து அம்மாதம் 7ம் திகதியோடு புலிகள் கைப்பற்றிய நிலங்களைக் கைவிட்டு வடமராட்சியில் நாகர்கோவிலிலும் தென்மராட்சியில் முகமாலை வரையிலும் பின்வாங்கி இவ்விடங்களில் நிலைபெற்றனர்.

ஓயாத அலைகள் மூன்றினை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 'நில மீட்புச் சமர்' என அடையாளமிட்டர் (எரிமலை நவம்-டிசம் 99). இந்நடவடிக்கையின் தொடக்க கட்ட வேகத்தால் சிங்கள படைத்தரப்பிற்கு ஏற்பட்ட படுமோசமான தோல்விகள் குறித்து பரவலறி சிறீலங்கா படைய பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் 'சன்டே ரைம்ஸ்' வாரயேட்டில் 07-11-1999 அன்று எழுதுகையில், 'ஆண்டுகளில் எடுத்தவற்றை நாட்களில் இழந்தனர்' எனக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவ்வாறாக வன்னியில் தமிழர் ஆதி நிலங்களை மீட்டெடுத்த இந்நடவடிக்கையினைப் பற்றியே முற்றுமுழுதாக இவ்வாவணக்கட்டில் வழங்கப்போகிறேன்; வாசிக்கப்போகின்றீர்கள்.

மேலும், இத்தாக்குதலில் பங்குபெற்றி பின்னாளில் வஞ்சர்களாகிய 'கருணா' முதலிய வஞ்சகர்களது வீரங்களும்(புலியாக இருந்தபோது என்பதால் 'வீரம்' என்று குறிப்பிடுகிறேன்) ஒரு வரி பிசகாமல் முற்றாக விரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புவதோடு மற்றொன்றையும் விதப்பாக முரசறைய விரும்புகிறேன். அதாவது, இத்தாக்குதலில் பங்குபெற்றி பின்னாளில் தமிழீழ தேச வஞ்சகர்களாகியோரும்(கருணா உட்பட) அவ்வாறாகி சாவொறுப்பு பெற்றோருமான ராபேட், இனிதன் எ தாத்தா மற்றும் ஏனையோரின் தரநிலைகள் ஏதும் குறிப்பிடப்படாது என்பதே அதுவாகும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன். 

 

  • குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக காக்கும் பொருட்டு இதனுள் என்னால் எழுதப்பட்ட தகவல் யாவும் - படைத்துறையின்  படைக்கலன்கள் - எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.
  1. Artillery - சேணேவி
  2. Howitzer - தெறோச்சி
  3. Mortar - கணையெக்கி
  4. Tank - தகரி
  5. Battalion - சமரணி
  6. Brigade - படைத்தொகுதி

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • நன்னிச் சோழன்

    199

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்     இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தம

நன்னிச் சோழன்

இறுவெட்டுகள்   இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போரிலக்கியப்பாடல் இறுவெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.   ஆனையிறவு: பாட

நன்னிச் சோழன்

காலக்கோடு     01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத

  • கருத்துக்கள உறவுகள்+

திட்டவரை:
இங்கு எழுதப்- பட்ட,படப்போகும் தகவல்கள் யாவும் தமிழர் தரப்பினது மட்டுமே. வேண்டிய தலைப்பின் மேல் சொடுக்கினால் உங்களை அந்தந்தப் பெட்டிக்கு எடுத்துச் செல்லும்.

 

முன்னுரை 

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள் 

வலு & சமர் ஒழுங்கு 

இழப்புகள் 

நிகழ்படம் 

படிமங்கள் 

இறுவெட்டுகள் 

காலக்கோடு 

சமர்க்கள விரிப்புகள் { முழு விரிப்பு [கட்டம்-1 --> கட்டம்-2 --> கட்டம்-3 --> கட்டம்-4 (--> குடாரப்பு தரையிறக்கம்) --> கட்டம்-5--> புத்தகங்கள் & மாதயிதழ்கள் --> விடுபட்ட முக்கிய களமுனைத் தகவல்கள் --> மீட்கப்பட்ட நிலங்களின் வரைபடம் --> யாழில் மீட்கப்பட்ட நிலங்கள் பின்னாளில் இழக்கப்பட்டமை --> கட்டுரைகள் [ஆனையிறவு வெற்றி குறித்த மக்களின் கருத்துக்கள்] 

கருத்தோவியங்கள்

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள் 

கரும்புலிப் பாய்ச்சல்கள் தனியாள் செயற்பாடு விரிப்புகள் --> கரும்புலிகளின் படிமங்கள் (கட்டம் ஒன்றில் வீரச்சாவடைந்தோர் --> கட்டம் இரண்டில் வீரச்சாவடைந்தோர் --> கட்டம் மூன்றில் வீரச்சாவடைந்தோர் --> கட்டம் நான்கில் வீரச்சாவடைந்தோர் --> கட்டம் ஐந்தில் வீரச்சாவடைந்தோர்) --> அலை மூன்றிலாடி பின்னாளில் கரைந்தோர் (--> அன்னவரின் படிமங்கள்) --> குழுப் படிமங்கள் ] 

விடுதலைப்புலிகளின் ஊடக வெளியீடு 

அடிபாட்டுச் செய்திகள் {செய்திகள்

முடிவுரை 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்

 

 

இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தமிழர் தரப்பு இழந்த நிலங்கள் தொடர்பாகவும் சுருக்கமாக பார்ப்போம்.

1997 ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியானது வன்னி பெருநிலப்பரப்பின் தென்பகுதி யாவும் அதிரத்தொடங்கிய காலகட்டமாகும். சிங்கள சிறீலங்கா அரசின் பூதப்படைகளானவை தமிழ் மண்ணை விழுங்கவென பெரும் ஆரவாரத்தோடு 'ஜெயசிக்குறுய்'(தமிழ்: வெற்றிநிச்சயம்) என்று பெயர் சூட்டிய பாரிய படையெடுப்பினை 13 திகதியன்று தொடங்கியிருந்தன. சந்திரிக்கா அம்மையாரின் மாமனாரும் அப்போதைய சிங்கள படைய நாயகமுமான ரத்வத்தையின் கண்டி வீதி பிடித்து யாழிற்கு பாதை திறப்பு என்ற நோக்கத்தோடு வந்த சிங்களப்படைகள் புலிகளின் 18 மாத நெடிய எதிர் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க ஏலாமல் பெருத்த ஆய்த-ஆளணி இழப்புகளோடு 18 மாதங்கள் கழித்து (1999 நவம்பர்) மாங்குளத்தோடு தம்முடைய நகர்வினை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இக்காலகட்ட வன்வளைப்பு நடவடிக்கையின் போது 1000 சதுர கிமீ தமிழர் நிலங்கள் சிங்களவரால் வல்வளைக்கப்பட்டன. 

jeyasikkury lost areas.jpg

'வெற்றிநிச்சயம் நடவடிக்கையின் பின்னர் வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 1000'

இந்நடவடிக்கை அலுவல்சாராக முடிந்ததாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, 1998 டிசம்பர் 2ம் திகதி 'ரிவி பல'(தமிழ்: சூரிய வலிமை) என்ற மற்றொரு படை நடவடிக்கை சிறீலங்கா அரசால் தொடங்கப்பட்டது. கண்டி வீதிக்கு கிழக்காக நெடுங்கேணி-கரிப்பட்டமுறிப்பு பரப்புயில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படைகள் இரவோடிரவாக முன்னேறி ஒட்டுசுட்டான் மற்றும் அதனை அண்டிய பரப்புகளை - புதுக்குடியிருப்பிலிருந்து 10 - 15 கிலோ மீற்றர் தொலைவுவரை வரை- வல்வளைத்தன. இந்நடவடிக்கையால் வன்னி பெருநிலப்பரப்பின் பெருங்குளங்களில் ஒன்றான முத்தையன்கட்டுக் குளத்தின் பாசன வசதி பெற்றுவந்த நிலப்பரப்பு பேயிடமாகியது. இவ்வன்வளைப்பு நடவடிக்கையின் போது 134 சதுர கிமீ தமிழர் நிலங்கள் சிங்களவரால் வல்வளைக்கப்பட்டன.

rivibala lost area.jpg

'சூரிய வலிமை நடவடிக்கையின் பின்னர் வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 134'

பின்னர், 1999 மார்ச் 6 அம் திகதியன்று பூவரசன்குளத்தில் இருந்தும் பம்பைமடுவில் இருந்தும் மற்றொரு படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 'ரணகோச-1' (தமிழ்: போர்முழக்கம்) என்று பெயர் சூட்டப்பட்ட இந்நடவடிக்கையால் இரணையிலுப்பைக்குளம் வரையில் உள்ள நௌவி, பனங்காமம், பாலமோட்டை, மூன்றுமுறிப்பு மற்றும் வன்னியின் பெருங்குளங்களில் ஒன்றுள்ள முத்தையன்கட்டு ஆகிய ஊர்கள் வல்வளைக்கப்பட்டன. இதனால் 535 சதுர கிமீ தமிழர் நிலங்கள் சிங்களவரால் விழுங்கப்பட்டன.

ranakosa 1 lost areas.jpg

'போர்முழக்கம்-1 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 535'

அடுத்து, 1999 மார்ச் 19 ஆம் திகதியன்று வவுனியா-மன்னார் வீதியில் உள்ள மடு வீதிச் சந்தியிலிருந்தும் மூன்றுமுறிப்பில் இருந்தும் தொடங்கப்பட்ட 'போர்முழக்கம்-2' நடவடிக்கை மூலம் தமிழர் நிலங்களில் 325 சதுர கிமீ பரப்பளவு சிங்களப்படைகளின் ஆதிக்கத்தினுள் சென்றது.

ranakosa 2 lost areas.jpg

'போர்முழக்கம்-2 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 325'

அடுத்து ,1999 மே 8 அம் திகதியன்று மன்னார்-வவுனியா வீதியில் உயிலங்குளம் பரப்புயில் நிலை கொண்டிருந்த சிங்கள தரைப்படையினர் 'போர்முழக்கம்-3' நடவடிக்கையினை தொடங்கினர். இந்நடவடிக்கை மூலம் சிங்களப் படையினர் கறுக்காய்குளம்-ஆண்டான்குளம் வழியாக நகர்ந்து அடம்பன், ஆட்காட்டிவெளி மற்றும் பரப்புக்கடந்தான் ஆகிய ஊர்களைக் கைப்பற்றி தமிழரின் 102 சதுர கிமீ நிலப்பரப்பினை வல்வளைத்தனர்.

ranakosa 3 lost areas.jpg

'போர்முழக்கம்-3 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 102'

அடுத்து, 1999 ஜூன் 10ம் மற்றும் 25ம் திகதிகளில் பாலம்பிட்டியில் இருந்தும் பாப்பாமோட்டையில் இருந்தும் தொடங்கப்பட்டது 'போர்முழக்கம்-4' நடவடிக்கை. இதன் மூலம் இவ்விடங்களில் இருந்து பள்ளமடு வரையிலான 425 சதுர கிமீ பரப்பளவு தமிழர் நிலம் சிங்களப்படைகளால் வல்வளைக்கப்பட்டது.

'போர்முழக்கம்-1' நடவடிக்கையில் இருந்து 'போர்முழக்கம்-4' நடவடிக்கைவரை புலிகளின் பாரிய எதிர்ப்பினை சந்திக்காதலால் பெரும் ஊக்கமகிழ்வான சிங்கள அரசு, யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையினை பூநகரி ஊடாக திறந்துவிடலாம் என்று நப்பாசை கொண்டது.

இதன் காரணமாக 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் முற்பகுதியில் பூநகரியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு 'சுழல்காற்று-1' என்ற நடவடிக்கையினை சிங்கள அரசு தொடங்கியது. இதற்காக சிறீலங்காவின் முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மண்டைதீவில் இருந்து கௌதாரிமுனையிற்கு கடல் மற்றும் வான் வழியாக பாரிய தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தரையிறக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் கடும் எதிர் தாக்குதலால் முற்றாக முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது.

அடுத்து, 1999ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி 'போர்முழக்கம்-5' நடவடிக்கை சிங்களப்படைகளால் தொடங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் சிராட்டிக்குளம், பெரியமடு மற்றும் பள்ளமடு பரப்புகளை வல்வளைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் கடும் எதிர்தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டது.

கடைசிக்கு முதலாக, 1999ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 17 ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 'வோட்டர்செட்-1' (தமிழ்: நீர்சிந்து) நடவடிக்கை மூலம் முத்தையன்கட்டு குளத்தை சூழவுள்ள சில பரப்புகள் கைப்பற்றப்பட்டன.  இதன் மூலம் மேலும் 12 சதுர கிமீ நிலப்பரபபினை வல்வளைத்தது, சிங்களம்.

watershed lost ares - 12 km - that purple color marked areas.jpg

'நீர்சிந்து-1 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 12'

கடைசியாக, ஓயாத அலைகள் மூன்று தொடங்கப்படுவதற்கு முன்னர், அம்பகாமம் பரப்பில் இருந்து 'நீர்சிந்து-2என்ற படை நடவடிக்கையினை 1999 ஒக்டோபர் 28ம் திகதி சிங்கள அரசு தொடங்கியது.  இதன்மூலம் முத்தையன்கட்டுக் குளத்தை முற்றாக சுற்றிவளைத்து அம்பகாமத்திற்கு வடகிழக்காக உள்ள படையினருடன் தரைவழி தொடர்பேற்படுத்துவதே நோக்கமாகும். 

இவ்வாறாக மொத்தம் 2,533 சதுர கிமீ வரையிலான தமிழர் நிலங்கள் சிங்கள சிறீலங்கா அரசபடைகளால் வல்வளைக்கப்பட்டன.

 

 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு: 

நன்னிச் சோழன், 26|12|2021

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வலு & சமர் ஒழுங்கு

 

இந்நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து சண்டை உருவாக்கங்களும் - கடற்படை உள்ளடங்கலாக - பங்கெடுத்தன. இதில் ஆடிய தமிழர் தரப்பு போராளிகளின் மொத்த ஆளணி எண்ணிக்கை அறியில்லை.

 

🎖️கட்டம் - 1:

  • சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர்: கருணா
  • சேணேவிக் கட்டளையாளர்: கேணல் பானு
  • சிறப்புப்படை கட்டளையாளர்: லெப். கேணல் சசிக்குமார்

 

🎖️கட்டம் - 2:

  • சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர்: கருணா
  • சேணேவிக் கட்டளையாளர்: கேணல் பானு

 

🎖️கட்டம் - 3:

  • சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர்: அறியில்லை
  • சேணேவிக் கட்டளையாளர்: கேணல் பானு
  • கடற் கட்டளையாளர்: கேணல் சூசை
  • சிறப்புப்படை கட்டளையாளர்: லெப். கேணல் சசிக்குமார்

 

🎖️கட்டம் - 4:

  • சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர்: கேணல் பானு
  • கடற் கட்டளையாளர்: கேணல் சூசை
  • சிறப்புப்படை கட்டளையாளர்: லெப். கேணல் சசிக்குமார்

 

🎖️கட்டம் - 5:

  • சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர்: கேணல் பானு
  • சிறப்புப்படை கட்டளையாளர்: லெப். கேணல் சசிக்குமார்

 

 

இந்நடவடிக்கையில் மட்டும் வன்னியின் பல பாகங்களிலிருந்தும் திரட்டப்பட்ட 10,000 எல்லைப்படையினர் (அப்படியே) ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். | ஆதாரம்: புதினம் 5 யூன் 2006

  • இதில் குறிப்பிடப்பட்டுள்ள 'எல்லைப்படையினர்' என்ற பதமானது "மக்கள்படை"யின் அனைத்துப் பிரிவுகளையும் குறிக்கின்றது என்பதைக் கொள்க!

 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இழப்புகள்

 

  • இந்நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலோ அல்லது சிறீலங்கா படைத்துறை தரப்பிலோ விழுப்புண் அடைந்தோரின் துல்லிய எண்ணிக்கை அறியில்லை. 
  • இந்நடவடிக்கையின் போது சிறீலங்காப் படைத் தரப்பில் கொல்லப்பட்டோரின் மொத்த துல்லிய எண்ணிக்கையும் அறியில்லை.  . 
    • கட்டம் ஒன்றின் முதல் மூன்று நாள் சமரின் போது மட்டும் கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினரின் தொகை 1500 என்று ஐ.தே. கட்சியின் செயலாளர் 'காமினி அத்துக்கொறல' 4/11/1999 அன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

 

 

  • ஒட்டுமொத்த நடவடிக்கையிலுமாக காணாமலோ கொல்லப்பட்டோ போன சிங்களப் படையினர்: 6000+
    • தவிபுவின் மாதயிதழான 'எரிமலை' இன், நவம்பர் 2000 ஆம் ஆண்டின் பதிப்போடு வெளிவந்த 'ஓயாத அலைகள் மூன்று நிழற்படத்தொகுப்பு' என்ற பகுதி இதழின் முதலாம் பக்கத்தில் "இந்நடவடிக்கையில் 6000ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டோ காணாமல்போயோ உள்ளனர் என சிறிலங்காப் பாதுகாப்புத் தரப்பால் தகவல் தெரிவிக்கப்பட்டது" என எழுதப்பட்டுள்ளது.
    • மேலும், ஒவ்வொரு சமர்களின் முடிவிலும் தவிபுவினர் தோராயமான எண்ணிக்கையினையும் வெளியிட்டு வந்தனர்.
  • மொத்த நடவடிக்கையிலுமாக வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகள்: 1336
    • இவர்களுள் துணைப்படை, சிறப்பு எல்லைப்படை, மக்கள்படை வீரர்கள்: 281 
    • இவர்களுள் ஆனையிறவு மீட்பும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும்: 973 போராளிகள் | ஆதாரம்: 'மணலாறு விஜயன்' ஐபிசி நேர்காணல் வாக்குமூலம்

 

  • கட்டம்-1, கட்டம்-2 மற்றும் கட்டம்-3 இன் போது புலிகளிடம் சரணடைந்தவர்களில் பின்னர் விடுதலை செய்யப்பட்ட சிங்களப் போர்க் கைதிகள்: 15

 

 

🎯கட்டம்-1:

  • சுட்டு வீழ்த்தப்பட்ட சிங்கள வான்படையின் உலங்கு வானூர்திகள் - 1 (எம்.ஐ. 17)
  • கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினர்: 1000-1500  
    • கட்டம்-1 இன் முதல் 3 நாட்களில் கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினரின் எண்ணிக்கையாக விடுதலைப்புலிகள் வெளியிட்டது: 1000+ 
    • கட்டம்-1 இன் முதல் 3 நாட்களில் காயமடைந்த மொத்த சிங்களப் படையினரின் எண்ணிக்கையாக விடுதலைப்புலிகள் வெளியிட்டது: 'கொல்லப்பட்டதின் இரண்டு மடங்கு'
    • கட்டம்-1 இன் முதல் 3 நாட்களில் கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினரின் எண்ணிக்கையாக "ஐதேக கட்சி" வெளியிட்டது: 1500 
  • வீரச்சாவடைந்த மொத்த போராளிகள்: 148  
    • நாளாந்தமான எண்ணிக்கை: 40-->60-->82-->119->120-->148
    • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 'சிறப்புக் கட்டளையாளர்' லெப். கேணல் ராகவன் முதல் நாள் சமரிலேயே தலையில் ஏவுண்ணி வீரச்சாவடைந்தார்.
    • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 'கட்டளையாளர்' லெப். கேணல் நியூட்டன் எ இளையவன் முதல் நாள் சமரிலேயே வீரச்சாவடைந்தார்.

 

🎯கட்டம்-2:

  • கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினர்: 100கள்
  • வீரச்சாவடைந்த மொத்த போராளிகள்: அறியில்லை  

 

🎯கட்டம்-3:

  • மூழ்கடிக்கப்பட்ட சிங்களக் கடற்படையின் கடற்கலங்கள்: 1 (வோட்டர் ஜெட்)
  • சுட்டு வீழ்த்தப்பட்ட சிங்கள வான்படையின் உலங்கு வானூர்திகள் - 1 (எம்.ஐ. 24)
  • கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினர்: 100கள்
  • வீரச்சாவடைந்த மொத்த போராளிகள்: அறியில்லை   

 

  • சுட்டு வீழ்த்தப்பட்ட சிங்கள வான்படையின் உலங்கு வானூர்திகள் - 1 (பெல்)

 

🎯கட்டம்-4:

  • மூழ்கடிக்கப்பட்ட சிங்களக் கடற்படையின் கடற்கலங்கள்: 2 (சுப்பர் டோறா)
  • சுட்டு சேதமாக்கப்பட்ட சிங்கள வான்படையின் உலங்கு வானூர்திகள் - 1 (எம்.ஐ. 24)
  • கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினர்: 1800+  
    • 26 இரவு முதல் 29 பின்னேரம் வரை வடமராட்சி தெற்கில் நடைபெற்ற சமர்களில் கொல்லப்பட்ட படையினர்: 100+
    • 17 ஏப்ரல் வரை இத்தாவில் பெட்டியினுள் மட்டும் கொல்லப்பட்ட சிங்களப் படையினர்: ~700  | ஆதாரம்: கட்டளையாளர் கேணல் தீபன் வாக்குமூலம் 
      • இங்கு கைப்பற்றப்பட்ட சிங்களப் படையினரின் சடலங்கள்: ~100 | ஆதாரம்: கட்டளையாளர் கேணல் தீபன் வாக்குமூலம் 
    • 17 ஏப்ரல் வரை இத்தாவில் பெட்டியினுள் அழிக்கப்பட்ட தகரிகள்: 5
    • 17 ஏப்ரல் வரை இத்தாவில் பெட்டியினுள் சேதமாக்கப்பட்ட தகரிகள்: 8
    • 17 ஏப்ரல் வரை இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட கவச ஆளணி காவிகள்: 2 (இயுனிக்கோன்)
    • 17 ஏப்ரல் வரை கைப்பற்றப்பட்டிருக்கலாம் என ஐயப்படும் கவச ஆளணி காவிகள்: 1 (வகை-63)
    • ஆனையிறவு-இயக்கச்சி கூட்டுத் தளத்தினுள் நடந்த கடைசி 48 மணிநேரச் சமரில் கொல்லப்பட்ட சிங்களப் படையினர்: 1000+ 
    • ஆனையிறவு-இயக்கச்சி கூட்டுத் தளத்தினுள் நடந்த கடைசி 48 மணிநேரச் சமரில் காயமடைந்த சிங்களப் படையினர்: 2300+
    • சிங்களக் கட்டளையாளர்களான 54வது படைப்பிரிவின் துணை பொதுக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பெர்சி பெர்னாண்டோ, 54-1 படைத்தொகுதியின் கட்டளையாளர் பிரிகேடியர் பாத்தியா ஜயதிலக, 54-2 படைத்தொகுதியின் கட்டளையாளர் பிரிகேடியர் நீல் அக்மீமன, கேணல் கரிஸ் கேவாராச்சி மற்றும் லெப். கேணல் கேவகே கேவாவசம் ஆகியோர் கொல்லப்பட்டனர்
  • வீரச்சாவடைந்த மொத்த போராளிகள்: அறியில்லை  
    • 26 இரவு முதல் 29 பின்னேரம் வரை வடமராட்சி தெற்கில் நடைபெற்ற சமர்களில் வீரச்சாவுகள்: 48
    • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 'கட்டளையாளர்' லெப். கேணல் மதன் எ அரசன் வீரச்சாவடைந்தார் (11-04-2000)

 

🎯கட்டம்-5:

  • சுட்டு வீழ்த்தப்பட்ட சிங்கள வான்படையின் உலங்கு வானூர்திகள் -(எம்.ஐ. 24)
  • கொல்லப்பட்ட மொத்த சிங்களப் படையினர்: 1000+
  • வீரச்சாவடைந்த மொத்த போராளிகள்: அறியில்லை

 

 

 

சாத்துணை

 

ஆக்கம் & வெளியீடு: 

நன்னிச் சோழன், 27|12|2021

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

இதனுள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழீழத்திலும் நடந்த ஆனையிறவு வெற்றிக் கொண்டாட்டப் படிமங்கள் உள்ளன.

 

 

das.jpg

 

asc.jpg

 

adsa.jpg

 

ada.jpg

 

213e.jpg

 

ad.jpg

 

Untitled.jpg

 

adsaf.jpg

 

acw.jpg

 

iththaali - kalaththil 30-06-2000.png

 

canda.png

 

 

 

 

Unceasing waves 3 adv.jpg

 

 

 

 

 

 

 

ஆனையிறவில் நினைவுச்சின்னங்கள் திறப்பு விழாவின்போது, 2003

 

 

 

 

 

 ஆனையிறவு வெற்றி மூன்றாம் ஆண்டு & தீச்சுவாலை முறியடிப்பு சமர் வெற்றி இரண்டாம் ஆண்டு நினைவாக, 2003

 

 

 

 

 

2005ம் ஆண்டு 11ம் மாதத்தில் நடைபெற்ற ஆனையிறவு வெற்றிவிழாவில்...

இவ்விழாவானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று இறுதி நாளில் மிகப்பெரிய எடுப்பில் ஆடல் பாடல்களோடு கொலுவிருத்தினவங்கள். இதைக் கண்டுகளிக்க மக்கள் நல்ல கலாதியாக வெளிக்கிட்டு வந்தவர்கள். நீங்காத நினைவாக மனதில் பதிந்திருக்கும் ஒரு வெற்றிவிழா!

 

 

 

 

kjhk.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

 

ஓயாத அலைகள் - 3 பாரிய படை நடவடிக்கையின் சமர்க்களக் காட்சிகள் (22) - http://www.aruchuna.com/categories.php?cat_id=66

 

 

 

===============================

 

 

 

ஓயாத அலைகள் மூன்று - நிழற்படத் தொகுப்பு: https://www.scribd.com/document/141290851/ltte-unceasing-waves-3#fullscreen&from_embed

 

 

 

===============================

 

 

 

Screen shot taken based on the video, dated to april 2000.png

'கைப்பற்றப்பட்ட அன்று ஆனையிறவு நுழைவுவாயில் பெயர்ப் பலகை. '

 

 

 

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் தொடக்கத்தின் போது போராளிகளோடு கலந்துரையாடுகிறார், தலைவர்:

 

50951944_732477413812604_5954802770983780352_o.jpg

92061014_225809022073261_1839091617324072960_n.jpg

12299344_969635776452860_3046967653842084283_n.jpg

Unceasing Waves 3 -ltte military operation

15056289_1150396505082947_3105446924239120542_n.jpg

Unceaing Waves 3.jpg

Unceasing Waves 3.jpg

'இலகு இயந்திரச் சுடுகலனை கீழ்நோக்கி பிடித்தபடி நிற்பவர் அவருடைய மெய்க்காவலர் ஆவார்'

 

With Brig. Gadafi.jpg

'கேணல் கடாபியோடு கதைக்கிறார் தலைவர்'

 

Prabakaran explainig the unceasing waves operation plan.jpg

Unceasing waves 3 ..jpg

'கட்டம் நான்கு திட்டமிடலின் போது. அருகில் லெப். கேணல் மகேந்தி  ஏனைய கட்டளையாளர்களோடு நிற்கின்றார்'

 

97426605_256498975759172_6067259780890624000_o.jpg

'வடபோர்முனை தாக்குதலை விளங்கப்படுத்தும் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு.'

 

10313583_801773866502104_1910225545457087001_n.jpg

Balraj explaining the plan for counter operation in Jaffna in 2001.jpg

Iththaavil Box.jpg

'ஓயாத அலைகள் - 3 இல் இத்தாவில் பெட்டிச் சமர் தொடர்பாக விளக்குகிறார் பால்ராஜ் அவர்கள்'

 

4b.jpg

'ஆனையிறவு இறுதித் தாக்குதலிற்கு திட்டமிடும் கட்டளையாளர்கள்'

 

 

 

கட்டம்-4இன் போது சோரன்பற்று - மாசார் பரப்பினூடாக தப்பியோடும் சிங்களப் படையினர்

 

fleeing srilankan army soldiers from Elephantpass3.jpg

 

 

 கட்டம்-4 இன் முடிவில் ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தை விட்டு தப்பி ஓடும் சிங்களப் படையினர்

 

fleeing srilankan army soldiers from Elephantpass.jpg

large.SLmilitaryrunningaway.jpg.98e30e03

 

unceasing waves 3 ltte  .png

fleeing srilankan army soldiers from Elephantpass2.jpg

'மாலதி படையணியினர்'

 

 

 

 

 

 

 

ஆனையிறவினை மீட்டபின்னர்(22/04), சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு அவர்கள் (2000 ஆம் ஆண்டில் கேணல் தரநிலையுடையவர்) தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை 23/04/2000 அன்று காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் . 

Elephant-Pass-LTTE-flag.jpg

'அன்னார் அருகில் நிற்பவர் கட்டளையாளர் பாப்பா அவர்கள் ஆவார். அந்தக் கட்டில் இருக்கும் இகுப்பங்களிற்கு அருகில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் குறிக்கும் சொற்கள்: மட்டு-அம்பாறை'

 

 

 

 

 

after anaiyiravu victory- people with cadres.png

 

ஆனையிறவு பாத யாத்திரை:

ஆனையிறவு மக்கள் யாத்திரை.jpg

''வெற்றிகொள்ளப்பட்ட அற்றை நாளே ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் அதைக் காணச் செல்லும் தமிழீழ நடைமுறையரசின் குடிமக்கள்''

 

 

 

Unceasing waves 3 jdka.jpg

"வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் இருந்து புகை எழும்புகிறது"

 

after overun of elephantpass.png

'வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு படைத்தளமும் மீட்கப்பட்ட  ஆனையிறவு மண்ணும். அந்தக் கட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் குறிக்கும் சொற்கள்: ஜெயந்தன் படையணி. அடுத்த நாள் இந்தக் கட்டிற்கு அருகில்தான் புலிக்கொடி எற்றப்பட்டது.'

 

XYTArenohWpqhvy9qXjf_18_a39f00043087e03936a7c4a5808b643d_video_720p_converted_Moment.jpg

'கைப்பற்றப்பட்ட அன்று ஆனையிறவு ஊர்ப்பெயர் பலகை. அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் குறிக்கும் சொற்கள்: ஜெயந்தன் படையணி (கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய படையணியின் பெயர்)'

 

117173988_325686958840373_208998409047780036_o.jpg

'ஆனையிறவை மீட்ட  பின்னர் ஒரு பாட்டியோடு கட்டொன்றில் அமர்ந்திருந்து உரையாடும் ''பொது நோக்கு இயந்திரத் துப்பாக்கி'' சூட்டணி ஒன்று'

 

இக்கவசவூர்தியில் எழுதப்பட்டுள்ளவை:


"மேஜர் தயாளினி
மேஜர் ஐயள்
கப்டன் ??ய்
கப்டன் மணியிழை"

இவர்கள் நால்வரும் சோதியா படையணிப் போராளிகள் ஆவர். இந்தப் போராளிகளே இக்கவச ஆளணி காவியினை அழித்தவர்கள் ஆவர்!

during 2001 battle.png26 March 2005.jpgWar memorial declared open in Ithathavil, Pallai.jpg2000.png

'இத்தாவில் பெட்டிச் சமரில் அழிக்கப்பட்ட இந்த வகை-63 கவச ஆளணி காவியானது வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு காப்பகம் அமைக்கப்பட்டு 26 மார்ச் 2005 அன்று பளையில் கேணல் தீபன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைக்க சோ.தங்கன் அவர்களால் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது'

 

 

elephant-pass-landing-heros--1024x768.jpg0d2.png

'பின்னால் தெரியும் அந்த நினைவுக்கல்லானது பளை சேணேவித்தளத்தை அழித்த போது வீரச்சாவடைந்த கரும்புலிகள் நினைவாக கட்டப்பட்டது ஆகும்.'

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்

 

 

 

கட்டம் ஒன்றின் போது

 

main-qimg-0b055e8ea1621246b3c7d15614b6282c.jpg271497833_1275074926324665_1706964476523479284_n.jpg

'இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குளம் படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்ட சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்கள் ஆகும்'

 

271496644_962155924677821_8270493640225022012_n.jpg

'கனகராயன்குளம் படைத்தளத்தில் கைப்பற்றப்பட்ட அல்விசு சலாதீன் கவச சகடமும் (Armoured Car) சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்களும்'

 

Unceasing waves 3r.png

'ஒட்டுசுட்டான் சிறுமுகாமில் கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்-6இன் மேல் கைப்பற்றியோர்'

 

 

 

 

கட்டம் மூன்றின் போது

LTTE cannon captured in Un. Wa -3 phase 4.jpg

'ஓயாத அலைகள்-3 கட்டம்-3இல் புலிகளால் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியக் கால 25மிமீ 2எம்-3 கடற்சுடுகலன் (25mm 2M-3 Naval Gun). இப்படைக்கலன் பின்னாளில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டது. பின்னால் நடைபேசியோடு நிற்பவர் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் கட்டளையாளர் லெப். கேணல் இளங்கீரன் ஆவார்'

 

 

 

கட்டம் நான்கின் போது

 

Women Tigers operating a captured Buffel during Ithavil box.jpg

'02-04-2000 அன்று இத்தாவில் பெட்டியை உடைக்க பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்- 2/3 இல் ஏறிநின்று சமராடும் பெண் போராளிகள். இக் களமுனையில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த இக்கவசவூர்தியுடன் தட்டந்தனியாக பொருதி இதிலிருந்த சிங்களப் படையினரைக் கொன்றுவிட்டு இதற்குள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு ஏறி இதில் பூட்டப்பட்டிருந்த .50 கலிபர் இயந்திரச் சுடுகலனைக் கொண்டு பிற சிங்களப் படையினரோடு சமராடி இக்கவச ஊர்தியைக் கைப்பற்றியவர் தரைக்கரும்புலி லெப். கேணல் இளங்கோ (வீ.சா.: 21/10/2007) ஆவார். '

 

Unceasig waves 3 Inside Ithavil box.jpgCommander Balraj with his fighters on an Armoured Personnel Carrier seized by the Tigers in Iththaavil.jpg'2-04-2000 அன்று பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட மற்றொரு இயுனிகோன் விதம்-2/3 மேல் நிற்கின்றார், பால்ராயர் அவர்கள்'

 

'SamarkkaLa Nayakan' Brigadier Balraj - Deputy Commander of Tamileelam Military standing next to a captured T-63 APC of SLA during the operation Unceasing Waves-3 phase 4 (inside the Iththavil Box)

'இத்தாவிலில் கைப்பற்றப்பட்ட வகை-63 கவச ஆளணி காவியுடன் கேணல் பால்ராஜ் நிற்கின்றார்'

 

ltte-artlery.jpg

'ஆனையிறவில் கைப்பற்றப்பட்ட 152 மிமீ தெறோச்சி மீது ஏறி நிற்கும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினர். நடுவில் கொடியுடன் நிற்பவர் அதன் கட்டளையாளர் லெப். கேணல் சேட்டன்'

 

ltte howitzer.png

'ஆனையிறவில் கைப்பற்றப்பட்ட 152 மிமீ தெறோச்சி. கேணல் மணிவண்ணன், லெப். கேணல் சேட்டன் ஆகியோர் தெறோச்சியின் இடது பக்கத்தில் நிற்கின்றனர்.'

 

பரம்பப்பட்ட ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 152மிமீ சேணேவி

'பரம்பப்பட்ட ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 152மிமீ இழுவைச் சேணேவியின் மேல் போராளிகள் அமர்ந்திருக்க கட்டியிழுத்துச் செல்லப்படுகிறது.'

 

captured Sinhala 122 mm Howitzer.jpg

'நெருப்பெழுந்து புகை சூழ எரியும் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் கைப்பற்றப்பட்ட 122மிமீ தெறோச்சி'

 

 

 

 

 

 

 

 

வகை-66  152மிமீ தெறோச்சி

 

ஓயாத அலைகள் மூன்றின்போது ஆனையிறவில் கைப்பற்றிய தெறோச்சிகளை பார்வையிடும் தலைவர் & கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னாள் கட்டளையாளர் கேணல் ராஜு 

 

raju2.jpg

 

40006400_328794771192147_3999184937117810688_n.jpg

 

Tamileelam National Leader Mr. Veluppillai Pirabhakaran, inspecting the artillery captured from the fled SLA forces in Elephantpass.jpg

 

FB_IMG_1604985581294.jpg

 

102840128_3019488878166559_7931627388125839360_n.jpg

 

11949547_1460767490917844_7778780914382994214_n.jpg

 

Tamil Tiger leader with a freshly captured 152 mm artillery gun.jpg

 

 

 

 

 

கட்டம் ஐந்தின் போது

 

152 மிமீ தெறோச்சி கொண்டு பகை மீது எறிகணை வீசும் கிட்டு பீரங்கிப் படையணியினர் :

 

afwq32.png

 

main-qimg-9ecc143c8944261799f5fe2e8e98ae5c-c.jpg

 

e-pass_152mm.jpg

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினர் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஐந்தின் போது 152 மிமீ தெறோச்சி மூலம் எறிகணை ஏவுகின்றனர். - Col. Kittu Artillery Brigade is firing 152mm Howitzer during the Tamil Tigers' offensive operation code-named the 'Unceasing Waves 3'

 

ltte artillery 152mm - Kittu Artillery Brigade.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

During the Unceasing waves 3 LTTE artillery attack with 122mm howitzer.jpg

During the Unceasing waves 3 LTTE artillery attack with 122mm howitzer (2).jpg

'கட்டம் நான்கின் போது ஆனையிறவு நோக்கி 122 மிமீ தெறோச்சியால் குத்தப்படுகிறது'

 

1934983_1056314010361_2140416_n.jpg

'முன்னிரண்டு சேணேவியும்(மு-85மிமீ; இ-122மிமீ) ஆண்கள், பிற்கடைசி(122மிமீ)பெண்கள்'

254318_122512887832394_1828126_n.jpg

image0013811.jpg

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி.jpg

''ஓயாத அலைகள் மூன்றின் போது பகைநிலைகள் நோக்கி எறிகணைகளால் குத்தும் கிட்டு பீரங்கிப் படையணி ஆண் பெண் போராளிகள்''

 

117978269_325686825507053_5910327616307261734_o.jpg

'ஆனையிறவில் கட்டம் - 4இன் போது வகை-85 கன இயந்திரச் சுடுகலனுடன் பெண் போராளி'

 

vyfu.png

'செம்மணி சந்திக்கு அருகில் நடந்த சமரின் போது அழிந்துபோன கவச சண்டை ஊர்தி-1 ல் காப்பெடுத்துச் சுடும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ''பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி''யொன்று. இலகு இயந்திரச் சுடுகலனோடு நிற்பவர் இயல்வாணன் ஆவார். அருகில் அவரது உதவியாளர் தொடர்சன்னத்தை ஏந்தியபடி நிற்கிறார். | மூலம்: 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்'  '

 

verrilaikkeeni-kattaikkaadu.jpg

'வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு சமரின் போது பெருங்கடலில் தமது வோட்டர் ஜெட் வகுப்புப் படகில் இருந்து சிபியு-1 முதன்மைச் சுடுகலன்மூலம் பகைவரை நோக்கிச் சுடுகின்றனர், மகளிர் கடற்புலிகள்'

 

130841225_882398049243884_5789406965515936052_n.jpg

charles antony regiment.png

'சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர்'

 

adaqweq.png

'அலை மூன்றில் நாவற்குழி பாலமேறிச்செல்லும் மாலதி படையணியினர் | ஆதாரம்: வேருமாகி விழுதுமாகி'

 

foaw.png

'ஆனையிறவில் பகை மேல் எறிகணையினைச் செலுத்தும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் பின்னுதைப்பற்ற சுடுகல அணியினர். அருகில் உள்ள போராளி அடுத்த தாணிப்பிற்கு(load) எறிகணையுடன் ஆயத்தமாக இருக்கிறார்'

 

fq32.png

'ஓயாத அலைகள் மூன்றின் போது தெருவால் நடந்து செல்லும் போராளிகள்'

 

Unceasing wasves 3.jpg

'கட்டம் ஒன்றின் களமுனை ஒன்றில் பீகே இயந்திரச் சுடுகலனை இயக்கும் பெண் போராளிகள்'

 

unceaing waves 3 tamil tigers.jpg

'கட்டம் ஒன்றின் போது கைப்பற்றிய படையத் தளவாடங்களை இழுபொறியின் பெட்டியினுள் ஏற்றும் பெண் போராளிகள்'

 

fret.png

'புலிகளின் "ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள்" பயிற்சியின் போது'

 

IMG_0043.jpg

 

unceasingr wavses.png

'கட்டம் இரண்டின் போது மடுவில் இருந்த கல்பனா உணவகத்தின் முன்னால் நடந்து செல்லும் போராளிகள்'

 

unceasing waves 3.jpg

271455363_613358393224631_8955107705851774934_n.jpg

unceasing waves 3 (3).jpg

'ஒட்டுசுட்டான் படைத்தளத்தைப் பரம்பி கரிப்பட்டமுறிப்பு தளத்தை நோக்கி முன்னேறும் பெண் போராளிகள்'

 

271526403_314579590595099_7924162892944096557_n.jpg

'கனகாரயன்குள படைத்தளத்தினுள் பெண்போராளிகள்'

 

UW-3.jpg

'லெப். கேணல் ராஜசிங்கனுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் யாழ் நகர் வாசலில் நிற்கின்றனர்'

 

Unceasing waves 3l.jpg

'குறிசூட்டுநரும் பொட்டுநரும்'

 

Unceasing waves 3g.png

'ஒரு குறிசூட்டுநரின் உதவியாளர்: இசையழகன்'

 

Unceasing waves 3.jpg

'கைப்பற்றிய கணைப்பெட்டிகள் மேல் போராளிகள் ஓய்வெடுக்கின்றனர்'

 

Balraj commanding his troops in Iththaavil sd.jpg

'இத்தாவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காப்பரணிற்குள் கட்டளைப்பீடம் அமைத்து அமர்ந்திருந்தவாறு தனது போராளிகளுக்கு கட்டளை வழங்குகிறார், கட்டளையாளர் கேணல் பால்ராஜ். அருகில் தொலைத்தொடர்பாளர் உட்பட்ட அவரது உதவியாளர்கள்'

 

Balraj commanding his troops in Iththaavil.jpg

'இத்தாவிலில் தனது போராளிகளுக்கு கட்டளை வழங்குகிறார் கேணல் பால்ராயர்'

 

166259_154438471274318_4528897_n.jpg

'இடிந்த வீட்டிற்கு அருகில் பதுங்குகுழி தோண்டி அதற்குள் நிலையெடுத்து சமராடும் பெண் போராளிகள்'

 

1377267_157881601089123_757964733_n.jpgiththaavil box tank.png

Balraj with fellow fighters on a Main Battle Tank seized by the Tigers in Iththaavil.jpg

'இத்தாவிலில் தவிபுவினரால் அழிக்கப்பட்ட முதன்மைச் சமர் தகரியின் மேல் கேணல் பால்ராச் & விக்டர் க.எ. படையணியின் கட்டளையாளர் லெப். கேணல் சேட்டன் எ இளங்கீரன் முதலானோரும் ஏனைய போராளிகளும் எமது நாட்டின் தேசியக்கொடியான புலிக்கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காண்க'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

 

large.Aanaiyiravubattleresult.jpg.69ffbd

'பரம்பப்பட்ட (overrun) ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு உள்ளிட்ட போராளிகள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்துவருகின்றனர்.'

 

image (8).png

'ஓயாத அலைகள் மூன்றில் கள மருத்துவப்பிரிவு'

 

medicines.png

'ஓயாத அலைகள் மூன்றில் கள மருத்துவப்பிரிவு'

 

 

unceasing waves 3.jpg

'காயப்பட்ட பெண் போராளியை சுமந்து செல்லும் பெண் போராளி'

 

Thanankilappu wounded to Poonery | UW-3 phase 3

'தங்கிளப்புப் பரப்பில் தரையிறங்கி வலிதாக்குதல் நடத்திய போது விழுப்புண்ணடைந்த பெண் போராளியை பூநகரிக்குக் கொண்டு செல்வதற்காக ''புளூ ஸ்ரார்'' வகுப்புப் படகினுள் கூடப் போராளிகள் தூக்கியேற்றும் காட்சி. இவரை தூக்கிச் செல்லும் படிமமாமனது நான் மேலே கொடுத்துள்ள 'ஓயாத அலைகள் - 3 நிழற்படத் தொகுப்பு' என்ற கொழுவிக்குள் உள்ளது.'

 

unceasing waves 3 ltte.jpg

'சமரின்போது காயமடைந்த போராளிக்கு முதலுதவி பண்டுவம் நடைபெறுகிறது'

 

afqw2.png

'கட்டம் நான்கின் போது ஆனையிறவு சமர்க்களம் ஒன்றில் தொடுக்கப்பட்ட சன்னத்தைக் கழுத்தில் போடும் பெண் போராளியொருவரும் அருகில் பிகே இலகு இயந்திரச் சுடுகலனை ஏந்தியபடி மற்றொரு பெண் போராளியும் நிற்கின்றனர்' 

 

kudaarappu landing 3.png

'யாழ் களப்பைக் கடக்கும் படகுவழி நகர்விற்கு போராளிகள் அணியமாகும் போது | வலது பக்கத்தில் உள்ள கட்டைப்படகில் பின்னிருந்து முதலாவதாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அப்போதைய சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் இராஜசிங்கமும் அவருக்கு முன்னால் வரிப்புலியில் மேஜர் அமுதாப்பும் (பின்னாளில் ஆனந்தபுர முற்றுகைச் சமரில் லெப். கேணல் அமுதாப்பாக) நிற்கின்றனர்.  '

 

Col. Balraj discussing with Col. Thurka, commander of the Soathiyaa Regiment and Col. Vithusha [right], the commander of Maalathi Regiment.jpg

'ஓ.அ-3இல்  இத்தாவில் பெட்டியினுள் மகளீர் படையணிகளின் கட்டளையாளர்கள் மற்றும் தாக்குதல் கட்டளையாளர்களுடனான கலந்துரையாடலின்போது. பால்ராயர் தவிர்த்து ஏனைய இரு சிறப்புக் கட்டளையாளர்களும் தத்தமது படையணிகளின் சமருடையை அணிந்துள்ளனர். அந்த இரு தாக்குதல் கட்டளையாளர்களும் வரிப்புலி சீருடையினை அணிந்துள்ளனர்.

 

Balraj with fellow Tiger fighters inside Iththaavil Box during Tiger offensive on EPS.jpg

'இத்தாவில் பெட்டியினுள் திட்டமிடலின்போது'

 

124614938_107494121172423_8981074901332116063_n.jpg

'சமர்க்களத்தில் அகப்பட்டிருந்த தமிழ்ச் சிறுவனை மீட்டுக்கொண்டுவரும் புலிவீரன்'

 

13432198_1237662892924470_1271103940014974098_n.jpg

'ஓயாத அலைகள் - 3 காலத்தில் களத்தில் போராளிகளை சந்தித்து உரையாடும் மாணவர் குழாம்'

 

 

 

thirikkaa class boat.png

'இலங்கேஸ்வரன் என்ற கலப்பெயர் கொண்ட கடற்புலிகளின் மிராஜ் வகுப்புக் கடற்கலம்'

 

 

 

கிட்டு பீரங்கிப் படையணியின் மோட்டார் பிரிவு. (இக்காலத்தில் 'குட்டிசிறி மோட்டார் படையணி' என்று இவர்கள் பெயரிடப்படவில்லை. பீரங்கிப் படையணியின் ஒரு பிரிவாகவே இவர்கள் செயற்பட்டனர்.)

unceasing waves 3 (2).jpg

'120 மிமீ கணையெக்கிக்கான எறிகணைகள்'

 

271449847_136809022122814_7588138465089362550_n.jpg

'120 மிமீ கணையெக்கியை தாணிக்கிறார்(load) ஒரு சேணேவிக்காரி' 

 

mortar.png

'ஓ. அ. - 3 பயிற்சியின் போது 120 மிமீ கணையெக்கிகள் இழுத்துச் செல்லப்படுகின்றன'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

aanaiyiravu.jpg

'இந்த மாதிரியான வலுவெதிர்ப்புகள் சிறீலங்காப் படைத்துறையால் விடுதலைப்புலிகள் நீந்தி உள்நுழைந்துவிடாமல் இருப்பதற்காக ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் வலுவெதிர்ப்பிற்கென அமைக்கப்பட்டிருந்தன.'

 

Special Border Force during unceasing waves 3 ltte battle.jpg

'அலைகள் மூன்றில் பாயும்முன் அணிவகுத்து நிற்கும் ''சிறப்பு எல்லைப்படை'' ஆண் போராளிகள்'

 

Border Force during unceasing waves 3 ltte battle.jpg

'அலைகள் மூன்றில் பாயும்முன் அணிவகுத்து நிற்கும் ''எல்லைப்படை'' பெண் போராளிகள்'

 

155846_102724689799880_1679873_n.jpg150528_102724363133246_3917189_n.jpg

பின்னுதைப்பற்ற சுடுகலன் மூலம் சுடப்படுகிறது

 

Tiger commander Brigadier Theepan with a captured vehicle from Kanakarayan Kulam military base of SLA.jpg

'கனகராயன்குளம் படைத்தளத்தினுள் கைப்பறப்பட்ட அல்விசு சலாதீனுடன் கேணல் தீபன்'

 

Tigers soldiers - UW3.jpg

'நெடுங்கேணி-மாங்குளம் பரப்பைக் குறிக்கும் கட்டுடன் அவ்விடத்தைப் பரம்பிய பின் போராளிகள் நின்று பொதிக்கின்றனர்'

 

Tamil Tigers Mayuran Sniper Unit - LTTE Snipers.jpg

' ''சிறிலங்கா சேணேவி''யின் 5வது படையணியின் தளத்தின் முன் தமிழ்ப் புலிகளின் மயூரன் குறிசூட்டுப் பிரிவினர்'

 

mayooran sniper unit.jpgmayooran sniper unit 2.jpg

'ஓயாத அலைகள்-3இன் நான்காங் கட்டமான ஆனையிறவுச் சமரின் இறுதிக் கணத்தில் புறமுதுகிட்டு தப்பியோடிக்கொண்டிருக்கும் சிங்களப் படையினர் மீது குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ள மயூரன் குறிசூட்டு அணியொன்று.'

 

 

 

 

 

===================================================

 

 

 

 

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மேலும் சில படிமங்கள்...

 

92995910_232815558039274_3733373268049002496_n.jpg

'சாள்ஸ் அன்ரனி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராகவன் கட்டம் ஒன்றிற்கான திட்டத்தை விளங்கப்படுத்துகிறார்'

 

Tiger Commanders Balraj [right] Jeyam [center] and Ragavan [left].jpg

'இடமிருந்து: லெப். கேணல் ராகவன் மற்றும் கேணல் ஜெயம் அவர்கள் ஆகியோருடன் கேணல் பால்ராஜ் கட்டம் ஒன்றின் திட்டம் குறித்துக் கலந்தாலோசிக்கிறார். இதில் லெப். கேணல் ராகவன் படையணி சமருடை அணிந்துள்ளார்.'

 

Balraj with fellow commanders preparing fighters for Op. Unceasing Waves - III.jpg

'ஒட்டுசுட்டானில் ஓயாத அலைகள் மூன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு களமுனைத் திட்டத்தை எடுத்துரைக்கும் பால்ராயர். அந்த வெள்ளை மேற்சட்டை அணிந்திருப்பவர் மேஜர் ஜெரி ஆவார்; அந்த நீல மேற்சட்டை அணிந்திருப்பவர் லெப். கேணல் ராஜன் ஆவார்'  

 

92891513_232816024705894_64759194766540800_n.jpg

'ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ்'

 

Balraj shaking hands with fighters before commencing Op. Unceasing Waves -III on the SLA in Oddisuddaan.jpg

'ஒட்டுசுட்டானில் ஓயாத அலைகள் மூன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு விடைகொடுத்து அனுப்புகிறார் கேணல் பால்ராயர்'

 

93142568_232815594705937_1277202254536900608_n.jpg

'சமர்க்களத்தில் மேஜர் வீரமணி (2006இல் லெப். கேணல் வீரமணியாக வடபோர்முனையில்)'

 

30713287_236151650277492_8600299305862955008_n.jpg

'அரியாலை சமர்க்களத்தின் முன்னணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அணித்தலைவன் ஒருவன் வழிநடத்துகிறார்'

 

Untitled.jpg

'தென்மராட்சியிக் களமுனை ஒன்றில்'

 

tamil eelam's ltte marksman during operation unceasing waves three.png

' தென்மராட்சியிக் களமுனை ஒன்றில் புலிகளின் குறிசாடுநரொருவர் ஜி3 குறிசாடு துமுக்கியால் பகைவரைக் குறிவைக்க அருகிலிருக்கும் மற்றொரு புலிவீரர் பீகே இயந்திரச் சுடுகலனால் அவருக்குக் காப்புச்சூடு வழங்குகிறார்'

 

CASR team leader during unceasing waves three ltte2.png

 

CASR team leader during unceasing waves three ltte.png

 

 

 

 

===================================================

 

 

 

 

மாலதி படையணியின் கட்டம் 5இன் போதான மேலும் சில படிமங்கள்

 

 

unceasing waves-3 ltte  .png

 

unceasing waves 3 ltte.png

 

unceasing waves 3 ltte..png

 

unceasing waves 3 ltte .png

 

unceasing waves- 3 ltte  .png

 

unceasing waves - 3 ltte  .png

 

unceasing  waves- 3 ltte.png

 

unceasing  waves- 3 ltte  .png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவெட்டுகள்

 

இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போரிலக்கியப்பாடல் இறுவெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

 

  • ஆனையிறவு:
    • பாடலாசிரியர்: கவிஞர் புதுவை இரத்தினதுரை
    • இசையமைப்பாளர்: 'இசைவாணர்' கண்ணன்
    • பின்னணி இசை: முரளி
    • பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், செங்கதிர்
    • வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்

இவ் இறுவெட்டினுள் உள்ள பாடல்களில் ஒன்றான 'ஆனையிறவின் மேனி தடவி' என்ற புகழ்பெற்ற பாடலின் மூல நிகழ்படம் இதுதான். இதைப் புலிகளே வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html)

R-8198992-1456999773-2145.jpeg.jpg

 

 

  • நெருப்பலைகள்:
    • பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசிஆனந்தன், புஷ்பவனம் குப்புசாமி
    • இசையமைப்பாளர்: புஷ்பவனம் குப்புசாமி
    • பாடியவர்கள்: புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி
    • வெளியீடு: அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்

01-Ulakath-Tamiliname-mp3-image.jpg

 

 

  • புதுவேட்டு புலிப்பாட்டு:
    • பாடலாசிரியர்: மறத்தமிழ் வேந்தன்
    • இசையமைப்பாளர்: 'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா
    • பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா
    • பாடியவர்கள்: 'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், கல்யாணி உமாகாந்தன்
    • வெளியீடு: உலகத் தமிழர் வன்கூவர் கிளை (பிரிட்டிசு கொலம்பியா), கனடா

01-Mugavurai-8-mp3-image.jpg

 

 

  • அலையின் வரிகள்:
    • பாடலாசிரியர்: ???
    • இசையமைப்பு: தமிழீழ இசைக்குழு
    • பின்னணி இசை: ???
    • பாடியவர்கள்: எஸ்.ஜி. சாந்தன், ஜெயா சுகுமார், திருமலை சந்திரன், செஙகதிர், மணிமொழி, தவமலர், குட்டிக்கண்ணன்
    • வெளியீடு: ???

01-Mugavurai-1-mp3-image.jpg

 

 

  • அலையின் கரங்கள்:
    • பாடலாசிரியர்கள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை, சுபா வீரபாண்டியன், மைகேல், வசந்தன், சுபாஷ், பரா
    • இசையமைப்பாளர்: நிர்மலன்
    • பாடியவர்கள்: கஜன், ஜீவன், வதனன், ஜீவன், செல்வலிங்கம், ஆஷா, கண்ணன், நிர்மலன்
    • வெளியீடு: தமிழர் கலைபண்பாட்டுக் கழகம், பிரான்சு

alaiyin karangkal.jpgalaiyin karangkal back side.jpg

 

 

  • தேசக் காதல்

இவ்விறுவெட்டில் உள்ள 'ஆனையிறவிலே வீரப்புலிகளின் வெற்றி' என்ற பாடல் மட்டும் ஆனையிறவு மீட்புவெற்றி நினைவாய் வெளியிடப்பட்டது ஆகும்.

THESAKKATHAL.jpg

 

 

  • கடற்கரும்புலிகள் பாகம் - 4
    • பாடலாசிரியர்கள்: மாமனிதர்’ நாவண்ணன், புதுவை இரத்தினதுரை, பொன். கணேசமூர்த்தி, ச.வே.பஞ்சாட்சரம், செம்பருத்தி, பண்டிதர் வீ.பரந்தாமன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி.
    • இசையமைப்பாளர்: 'இசைவாணர்’ கண்ணன், முரளி (உதவி)
    • பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், எஸ்.நிரோஜன், மணிமொழி, கப்டன் சிலம்பரசன் (குட்டிக்கண்ணன்).
    • உருவாக்கம்: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.
    • வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், தமிழீழம்.

இவ்விறுவெட்டில் உள்ள 'அன்புக்கு அர்த்தமாய் அண்ணா'  என்ற பாடலானது ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி நினைவாய் வெளியிடப்பட்டது ஆகும்.

01-Arimugam-8-mp3-image.jpg

 

 

  • கடற்கரும்புலிகள் பாகம் - 5
    • பாடலாசிரியர்கள்: பொன் கணேசமூர்த்தி, ''மாமனிதர்'' நாவண்ணன் , செம்பருத்தி, பஞ்சாட்சரம், திவாகர்
    • இசையமைப்பாளர்: ஜேர்மனி கண்ணன்
    • பாடியவர்கள்: ஜேர்மனி கண்ணன், குமார் சந்திரன், செல்வலிங்கம், கஜன், அனுரா, கண்ணன் சிவநாதன், கண்ணன் சோபா
    • வெளியீடு: கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்

இவ்விறுவெட்டில் உள்ள 'ஆனையிறவுத் தளம், பார்த்திருப்பாய் அலையே, இந்த மகன், பிறப்பென்ற முகவுரைக்கும்'  ஆகிய பாடல்கள் ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் மற்றும் பரம்பப்பட்ட தளங்களின் நினைவாய் வெளியிடப்பட்டவை ஆகும். 'பாவடியால் பாட்டெழுதி' என்ற பாடலானது ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கைக்குத் தேவையான எரிபொருள்களை கடலிலிருந்து எடுத்துவரும் வேளை நடைபெற்ற கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் தொடர்பாய் பாடப்பெற்றவை.  

Kadarkarumpulikal - 5.jpg

 

 

  • தேசத்தின் புயல்கள் பாகம் - 3
    • பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, பண்டிதர்.பரந்தாமன், உதயலட்சுமி, செம்பருதி, கஜேந்திரன், துளசிச்செல்வன், இளநிலா, வேலணையூர் சுரேஸ்.
    • இசையமைப்பாளர்: எஸ்.பி. ஈஸ்வரநாதன், செயல்வீரன், இசைப்பிரியன்.
    • பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், இளந்தீரன், யுவராஜ், சந்திரமோகன், தனேந்திரன், தவமலர், பிறின்சி.
    • வெளியீடு: இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.
    • மீள்வெளியீடு: அனைத்துலகச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

இவ்விறுவெட்டில் உள்ள 'வைரவரிகள் கொண்டு, ஈழநாதம் பேப்பரிலை, உயிரைத் தீயினில், ஆதித்தன் கரும்புலி, இன்னுமின்னும் கரும்புலி'  ஆகிய பாடல்கள்  ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் மற்றும் பரம்பப்பட்ட தளங்களின் நினைவாய் வெளியிடப்பட்டவை ஆகும். 

01-Thesaththin-Puyalkal-03.jpg

 

 

  • தேசத்தின் புயல்கள் பாகம் - 4
    • பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, இசையருவி, ஆதிலட்சுமி சிவகுமார், துளசிச்செல்வன், கு. வீரா, கானகன், மாதங்கன், சிறீதரன், கலைச்செல்வன்.
    • இசையமைப்பாளர்: யாழ்ரமணன்
    • பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், வசீகரன், ஜெயபாரதி, திவாகர், யாழ்ரமணன், மேரி, நிரோஜன், இசையரசன், ஜெகனி, றொபேட், வரதன்.
    • உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.
    • வெளியீடு: லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்.

இவ்விறுவெட்டில் உள்ள 'கருவேங்கை புயலென'  என்ற பாடலானது ஓயாத அலைகள் மூன்றில் சேணேவித் தளம் அழித்து வீரச்சாவடைந்த தரைக்கரும்புலிகளின் நினைவாய் வெளியிடப்பட்டது ஆகும். 

01-Karumpuli-Ezhuthidum-mp3-image-2.jpg

 

 

ஆக்கம் & வெளியீடு: 

நன்னிச் சோழன், 28|12|2021

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலக்கோடு

 

 

  • 01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத்திலே நின்றுதான் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஓயாத அலைகள் மூன்றின் செயற்பாட்டுத் திட்ட வடிவத்தினை முழுமைப்படுத்தி, முடிவு செய்தார். | புரொண்டு இலைன்- 10.12.1999

  • 01-11-1999 இரவு: ஒட்டுசுட்டான் நோக்கி ஓயாத அலைகள் படைத்தொகுதி நகர்ந்துகொண்டிருக்கிறது.

  • 02-11-1999: ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் 'கட்டம்-1' விடுதலைப்புலிகளால் அதிகாரநிறைவாக தொடங்கப்பட்டது. அதிகாலை 1:10 மணிக்கு ஒட்டுசுட்டான் மீதான தாக்குதல் கட்டளையாளர் கேணல் ஜெயம் தலைமையிலான படைத்தொகுதியால் தொடங்கப்பட்டது. அதிகாலை 2:10 மணியளவில் நெடுங்கேணி மீதான தாக்குதல் கட்டளையாளர் ராபேட் தலைமையிலான படைத்தொகுதியால் தொடங்கப்பட்டது. 

  • 02-11-1999: அதிகாலை 3 மணியளவில் ஒட்டுசுட்டான் படைத்தளம் புலிகளின் வியூகத்தினுள் வந்தது. காலையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டதோடு அந்நகரமும் மீட்கப்பட்டது. பின் மணவாளன்பட்டமுறிப்பு வரையான எதிரியின்‌ தொடர்‌ காவலரண்களையும்‌, பகைவனின் சிறுமுகாங்களையும்‌ தகர்த்தழித்தவாறு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி முன்னேறிக்கொண்டிருந்தது. 2ம் திகதி இருட்பொழுதுக்குள் நெடுங்கேணி கோட்டத்திலிருந்த படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்டதோடு நெடுங்கேணி நகரமும் மீட்கப்பட்டது.

  • 03-11-1999: தொடரும் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சண்டை உருவாக்கங்களால் அம்பகாமம், ஒதியமலை,குளவிசுட்டான், குளவிசுட்டகுளம், மற்றும் மணவாளன்பட்டமுறிப்பு ஆகியன கைப்பற்றப்பட்டு கரிப்பட்டமுறிப்பு நோக்கி முன்னேறினர். கனகாரயன்குளம் கூட்டுப் படைத்தளம் மீதான கடும் எறிகணைத் தாக்குதலில் சிங்களப் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்தப்பட்டது. எம்.ஐ. 17 உலங்கு வானூர்தி விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

  • 04-11-1999: நெடுங்கேணி-புளியங்குளம் காட்டுப்பரப்பில் கடும் சமர் நடந்துகொண்டிருந்தது. மீட்கப்பட்ட பகுதிகளில் வலுவெதிர்ப்பு வேலைகள்‌ உறுதிப்படுத்தப்பட்டு சேமயிருப்பு அணிகள்‌ நிலையெடுத்துக்கொண்டன.

  • 05-11-1999: மாங்குளம்-முல்லைத்தீவு வீதியில் அமைந்திருந்த கருப்பட்டமுறிப்பு படைத்தளம் மற்றும் ஒலுமடு படைமுகாம்கள் தாக்கியழிக்கப்பட்டன; மாங்குளம்‌ நகர் பிற்பகல்‌ 3.05 ற்கு மீட்கப்பட்டது. பின்னர் கொல்லர்புளியங்குளமும் மீட்கப்பட்டது.

  • 06-11-1999: அதிகாலை ஒரு மணியளவில் கனகராயன்குளம் மீட்கப்பட்டிருந்தது. மூன்றுமுறிப்பு, மன்னங்குளம், நைனாமடு, மதியாமடு ஆகிய பரப்பில் தரைப்படை நிலைகொண்டிருந்த முகாம்கள், சிறுமுகாம்கள், தொடர் காவலரண்கள், மற்றும் காவலரண்கள் அழிக்கப்பட்டனவோடு இப்பரப்புகள் முழுதாக விடுவிக்கப்பட்டன. ஏ9 நெடுஞ்சாலையில் 55வது, 56வது படைப்பிரிவுகள் நிலைகொண்டிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புளியங்குளம் மற்றும் கனகராயன்குளம் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டன.

  • 07-11-1999: விடிகாலையில் சன்னாசிப்பரந்தன் தளம் கைப்பற்றப்பட்டு காலை 8:40 மணி தாண்டிய வேளையில் புளியங்குளம் தமிழர் வசமானது. மேலும் முன்னேறி பன்றிக்கெய்தகுளம் வரை புலிகள் கைப்பற்றினர். சிங்களத் தரைப்படையானது புலிகளால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீளக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையினை மூன்று முனைகளில் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. ஆனால் அச்செய்தி புலிகளால் மறுக்கப்பட்டதோடு, சிற்றோய்விற்குப் பிறகு பள்ளமடு மற்றும் பாலம்பிட்டியில் இருந்த படைத்தளங்கள் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. மணலாறு கோட்டத்தில் சிலோன்‌ தியேட்டர்‌, தனிக்கல்‌, அளவெட்டிக்குளம்‌, வசாவிளான்குளம்‌, பப்பாளிக்குளம்‌ மற்றும் கென்பாம் முதலான பாரிய முகாம்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றுள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பனிக்கநீராவி சந்தி முக்கியமானது. இன்று இரவோடு ஓயாத அலைகள் மூன்றின் கட்டம்-01 முடிவுற்றது.

  • 18-11-1999: ஓயாத அலைகள் மூன்றின் 'கட்டம்-2' தொடங்கப்பட்டதாக அதிகாரநிறைவாக அறிவிக்கப்பட்டது. அதிகாலை ஒருமணியிற்கு கட்டளையாளர்களான ராபேட் மற்றும் லெப். கேணல் லக்ஸ்மன் ஆகியோர் தலைமையில் பெரியமடு மற்றும் பள்ளமடு ஆகியவற்றிலிருந்து நகர்ந்து காத்திருந்த படைத்தொகுதிகளால் பாலம்பிட்டி-தட்சணாமருதமடு மற்றும் பாப்பாமோட்டை ஆகிய தளங்கள் மீது முறையே முதலாவது தாக்குதல் தொடங்கப்பட்டது. 12 மணிநேர கடுஞ்சமரின் பின்னர், மன்னார் மாவட்டத்தில் பள்ளமடு, பாலம்பிட்டி, பெரியமடு, மடு, தட்சணாமருதமடு மற்றும் இரணையிலுப்பைக்குளம் ஆகிய இடங்கள் மீட்கப்பட்டன. மடுறோட் வரை புலிகளின் சண்டை உருவாக்கங்கள் முன்னேறின. ஓமந்தை மீதான பாரிய தாக்குதல் தொடங்கப்பட்டது.

  • 19-11-1999: பாப்பாமோட்டை முதன்மை படைத்தளம்‌ மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. மாலைக்குள் ஆண்டான்குளம் மீட்டெடுக்கப்பட்டது.

  • 20-11-1999: புலிகளின் கவச மற்றும் சேணேவி சண்டை உருவாக்கங்கள் தாக்குதலை முன்னெடுத்துச் சென்றன. பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான், முள்ளிக்குளம், காக்கையன் குளம் மற்றும் கீரிசுட்டான் ஆகிய இடங்கள் மீட்கப்பட்டன. பகல்‌ 12:00 மணிக்கு பாப்பாமோட்டை கைப்பற்றப்பட்டு திருக்கேதீச்சுரம் மீதான நகர்வு தொடங்கப்பட்டது. தள்ளாடி படைத்தளம் மீதான சேணேவித் தாக்குதல் மதியம் 1:45 மணிக்கு தொடங்கப்பட்டது. அன்றைய மாலைப்‌ பொழுதிற்குள் மாந்தையும்‌, வட்டக்கண்டலும் கைப்பற்றப்பட்டது.

  • 21-11-1999: மதியம் 12:10 மணிக்கு மன்னார் கரையோரமாக கடற்புலிகளுக்கும் சிங்கள தரைப்படைக்கும் இடையில் கடுஞ்சமர் மூண்டது. பள்ளிமுனையில் புலிகளை தரையிறக்கவிடாமல் சிங்களக் காவற்றுறையும் தரைப்படையும் கடலை நோக்கிச் சுட்டனர். பரப்புகடந்தான், ஆண்டங்குளம், தேனடையான், அடம்பன் மற்றும் வட்டக்கண்டல் ஆகிய இடங்கள் மீட்கப்பட்டன.

  • 22-11-1999: மடு தேவாலையம் மீதான சிறீலங்காப் படையினரின் எறிகணைவீச்சில் 40+ அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இன்று இரவோடு ஓயாத அலைகள் மூன்றின் கட்டம்-02 முடிவுற்றது.

  • 23-11-1999: தள்ளாடி படைத்தளம் மீதான நேரடி தாக்குதல் தொடங்கப்பட்டது. 

  • 24-11-1999: தள்ளாடி படைத்தளத்தின் முன்னரங்க நிலைகள் பரம்பப்பட்டது (overrun). 

 

(அலை மூன்று தெற்கில் ஓய்ந்து வடக்கு நோக்கித் திரும்புகிறது)

  • 11-12-1999: வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்படை தளம் அதிகாலை தொடங்கிய தாக்குதலில் அழிக்கப்பட்டதோடு யாழ். நோக்கிய ஓயாத அலைகள் மூன்றின் 'கட்டம்-3' ஆரம்பமானது. 

  • 12-12-1999: இரு சமர் முனைகள் திறக்கப்பட்டன. ஒரு சமர் முனையில் நடந்த சமரில் முள்ளியான் படைத்தளம் அழிக்கப்பட்டு அவ்விடம் மீட்கப்பட்டது. இரண்டாவது சமர்முனைக்காக காலை 10 மணியளவில்‌ சாவகச்சேரியிற்குத்‌ தெற்கே லெப். கேணல் வீமனின்‌ தலைமையில்‌ அறுகுவெளியிலும்‌ கிழக்கரியாலையிலும்‌ இருவேறு பிரிவுகளாக தரையிறக்கப்பட்டது, ஒரு படைத்தொகுதி. கிட்டு பீரங்கிப் படையணியின் சூட்டாதரவோடு, கடற்சிறுத்தைகள் கட்டளையாளர் லெப். கேணல் சேரமான்‌ தலைமையில்‌ கடற்புலிகள்‌ முன்னகரும் படையணிகளைத்‌ தரையிறக்கினர்‌. அறுகுவெளி படைமுகாமும் கேரதீவு கடற்றளமும் பரம்பப்பட்டு சுற்றாடலும் கைப்பற்றப்பட்டது. புல்லாவெளி தரைப்படைத் தளமும் அழிக்கப்பட்டு அவ்விடமும் மீட்கப்பட்டது.

  • 13-12-1999: ஆழியவளை, கொடுக்கிளாய் மற்றும் மருதங்கேணி ஆகியன மீட்கப்பட்டன. புல்லாவெளியிலிருந்து முன்னேறிய படைத்தொகுதியும்‌ மண்டலாயூடாக முன்னேறிய படைத்தொகுதியும்‌ வாடியடிச்‌ சந்திவரை பகைவரை விரட்டின. உடுத்துறை மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. புலிகளின் அதிரடிப்படையினர் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் இயக்கச்சியில் மின்னலடித் தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருந்தனர். 

  • 14 & 15 -12-1999: இவ்விரு நாட்களில்‌ சண்டையிட்ட அணிகளுக்கு ஓய்வு வழங்கப்பட்டு மீளொங்குபடுத்தப்பட்டது. தமிழீழ தேசிய துணைப்படையினர் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

  • 16-12-1999: பரந்தன் மீட்பிற்காக முன்னேறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நண்பகல்‌ 1 மணியிற்குத் தாக்குதல் தொடங்குகிறது. உடுத்துறை, கொடுக்கிளாய், வேம்படி மற்றும் மண்டலாய் ஆகியன மீட்கப்பட்டுவிட்டன.

  • 17-12-1999: நண்பகல் 11மணியிற்குள் பரந்தனில் அமைந்திருந்த சிங்களவரின் எட்டாவது கஜபாகு சமரணியினதும் ஆறாவது 'கெமுனு காவல்' சமரணியினதும் முதன்மை படைத்தளங்கள் அடுத்தடுத்து தமிழரிடம் வீழ்ந்தன. தென்மராட்சி புலத்தில் கேரதீவு மற்றும் சங்குப்பிட்டி கடற்படை முகாமும் அறுகுவெளி படைத்தளமும் கைப்பற்றப்பட்டன. காலை 10 மணியளவில் சிங்கள வான்படையின் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்தி வெற்றிலைக்கேணியில் சுட்டுவீழ்த்தப்பட்டது.

  • 18-12-1999: உடுத்துறை பாடசாலைக்‌ கட்டடத் தொகுதிகளை தளமாக மாற்றியிருந்த பகைவர் அழிதொழிக்கப்பட்டு வத்திராயன் வரை முன்னேறியது, கட்டளையாளர் கருணா தலைமையிலான புலிகளின் படைத்தொகுதி.

  • 20-12-1999: பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை படைமுகாம் மற்றும் 54-6வது படைத்தொகுதியின் தலைமையகம் அமைந்திருந்த கோரக்கன்கட்டுக்குளம் படைமுகாம் ஆகியன தக்கியழிக்கப்பட்டன. 

  • 22-12-1999: ஆனையிறவின் தென்பரப்பு வலுவெதிர்ப்பில் கடும் சமர் மூண்டது. 

  • 23-12-1999: காலை 6.30 மணிக்கு இழந்துபோன வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு பரப்புகளை மீளக்கைப்பற்றுவதற்காக முன்னேறிய படையினர் அவர்களது தளத்தினருகேயே வெற்றிகொள்ளப்பட்டனர்.

  • 24-12-1999: வெற்றிலைக்கேணியை மீண்டும் வல்வளைக்க சிங்களம் இருமுனையில் படையெடுப்பைத் தொடங்கியது. சங்கத்தார் வயல் மற்றும் கோவில் வயல் பரப்புகளில் கடுஞ்சமர்.

  • 25-12-1999: ஆனையிறவினுள் உள்ள சிங்கள வீரர்களை சரணடையும்படி 'புலிகளின் குரல்' சிங்கள மொழி சேவையில் கோரிக்கை விடப்பட்டது. 

  • 26-12-1999: தனங்கிளப்பு மற்றும் கேரதீவு பரப்பை மீளக்கைப்பற்றுவதற்காக அறுகுவெளியில்‌ சிங்களவரால்  மேற்கொள்ளப்படயிருந்த வான்வழித்‌ தரையிறக்கம்‌ முறியடிக்கப்பட்டது. புளியடி முதன்மை தளம் கைப்பற்றப்பட்டது.

  • 27-12-1999: உமையாள்புரம் விடுவிக்கப்பட்டது.

  • 30-12-1999: காலை 9:30 மணியளவில் கிளாலி நீரேரியில் கதுவீயோ எந்தவித ஏந்தனங்களின்(equipments) துணையுமோயின்றி கடற்புலிகளின் கட்டளையாளர் கைகாட்டிய திசையில் தானாக இடியன் வகுப்புக் கலத்தை தள்ளியிறக்கி ஓட்டிச்சென்று சிங்களக் கடற்படையின் 'வோட்டர் ஜெட்' படகு ஒன்றை மூழ்கடித்தார், கடற்கரும்புலி கப்டன் அறிவரசன். தொடர்‌ந்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் மூன்று 'புளுஸ்ரார்‌' படகுகள்‌ சேதமடைந்தன. அதேநேரம் கேரதீவு-சங்குப்பிட்டிச்‌ சமர்முனையில்‌ தரையில்‌ முன்னேறிய எதிரியை முற்றுகையிட்டுத்‌ தாக்கி வெற்றிகொண்டனர் புலிகள்.

  • 01-01-2000: காலை 6:30 மணியளவில் புளியடிச் சந்தியிலிருந்து முன்னேறி முருகந்தநகர் வரை முன்னேறிய பகைவர்கள் பெண்புலிகளால்  வெற்றிகொள்ளப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இன்று இரவோடு ஓயாத அலைகள் மூன்றின் கட்டம்-03 முடிவுற்றது.

  • 16-02-2000: ஆனையிறவுக் கோட்டத்தில் சிங்களவரின் முன்னரங்க நிலைகள் மீது புலிகள் கடும் தாக்குதல். 8 நிலைகள் அழிக்கப்பட்டன.

  • 18-02-2000: யாழ். உசனில் வைத்து பெல் வித உலங்குவானூர்தி ஒன்று விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது. 

  • 20-02-2000: தாழையடி தளம் மீது கலை 5:30 மணியளவில் கடற்புலிகள் எறிகணை வீச்சு நடாத்தினர். கடலில் இரு தரப்பினருக்குமிடையில் கடற்சமர் மூண்டது.  

  • 15-03-2000: ஒரு கிழைமையாக வடமராட்சியின் தென்பரப்பில் உடுத்துறை மற்றும் அதன் நெருங்கிய பரப்புகளில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் தாவடிகள் நடந்துவருகிறன.  

  • 17-03-2000: மட்டுவிலில் பின்னேரம் 4:30 மணியளவிலிருந்து புலிகளுக்கும் சிங்களப்படைகளுக்கும் இடையில் மோதல் நடைபெற்றது.  

 

  • 24-03-2000 <--> 29-03-2000: 

குடாரப்பு தரையிறக்கம்மும் அதனோடான வடமராட்சி களமுனை தொடர்பான தகவல்கள் மட்டும்கொண்ட முழுநீள காலக்கோடு கீழுள்ள பெட்டியினுள் உள்ளது.

  • இதே காலத்தில் 28ம் திகதி இத்தாவில் பெட்டி நோக்கி மூன்று பக்கத்திலும் இருந்து பகைவன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி புலிகளால் வெகு எளிதாக முறியடிக்கப்பட்டது.

  • 30-03-2000: காலை 6:30 மணியளவில் பகைவன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியோடான உக்கிரமான சமர் இரவு 7:00 மணிவரை நடைபெற்றது. இறுதியில் இந்நகர்வு புலிகளால் முறியடிக்கப்பட்டது. 
    • இச்சமர் தொடர்பாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இதுவொரு பதிவுசெய்யப்பட்ட உண்மைச் சம்பவம் ஆகும். இச்சமரின் ஒரு கட்டத்தில், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஒரு இலகு இயந்திரச் சுடுகலப் போராளியின் காவலரண் இழக்கப்பட்டிருந்தது. அதை மீட்டிட புலிகளின் அணிகள் கடுமையாக மோதின. நெடிய மோதலின் பின்‌ அப்போராளியோடு அவ்வரண்‌ மீட்கப்பட்டபோது அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த 2000 சன்னங்களும் வேட்டாக்கியிருந்தது. அவரது காவலரணுக்கு முன்னால்‌ பகைவரின் 60 சடலங்கள் பரவிக்கிடந்தன. இதன்மூலம் நூற்றுக்கணக்கான பகைவர் காயமடைந்திருப்பர் என்பதனை ஊகிக்கக் கூடியதாக இருந்தது. | ஆதாரம்: 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' நூல்.

  • 31-03-2000: யாழ்ப்பாணத்திலிருந்து தகரிகளோடு கண்டிவீதியில்‌ தாக்குதலில்‌ ஈடுபட்ட பகைவர்கள் சோதியா படையணிப்‌ போராளிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். நான்கு தெறோச்சிகள் கொண்ட இயக்கச்சி-தாமரைக்குளத்திலிருந்த சேணேவித்தளத்தை அழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் 3 பெண் தரைக்கரும்புலிகள் வீரகாவியமாகின்றனர். 

  • 01-04-2000: ஆனையிறவையும்‌ இயக்கச்சியையும்‌ பிளந்து தாக்குதலில்‌ ஈடுபடுதற்கான சண்டை அதிகாலை 1:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

  • 02-04-2000: சிங்களப் படைகளால் பகல் 12:00 மணி தொடக்கம்‌ இரவுவரை மேற்கொள்ளப்பட்ட வலிசக்கர நடவடிக்கை புலிகளால் முறியடிக்கப்பட்டது. 

  • 03-04-2000: முகமாலையில் இருந்து முன்னேறிய ஓயாத அலைகள் சண்டை உருவாக்கங்கள் எழுதுமட்டுவாள் வரைக்கும் முன்னேறின. பளையில் இருந்து எழுதுமட்டுவாள் வரையிலான பரப்புகள் முழுமையாக மீட்க்கப்பட்டன.

  • 05-04-2000: சிங்களப் படைகளால் காலை 7:00 மணி முதல் இரவு 8:30 வரை மேற்கொள்ளப்பட்ட வெலிகதற(தமிழ்: பாலைவனம்) நடவடிக்கை புலிகளால் முறியடிக்கப்பட்டது.

  • 07-04-2000 மாலை 6:30 : நாகர்கோவில் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் 130 மி.மீ தெறோச்சிச் சூட்டில் சிங்களக் கடற்படையின் டோறா விரைவுத் தாக்குதல் கடற்கலமொன்று தாக்கப்பட்டது. அதிலிருந்து பிழைத்தவர்களை மீட்க வந்த மற்றொரு டோறாவிற்கும் அதே கதி. ஒன்று மூழ்கியது. மற்றொன்று தரைதட்டியது. அதிலிருந்த படைக்கலன்கள் களையப்பட்டன.

  • 08-04-2000 உலங்குவானூர்தி ஒன்று சுட்டு சேதமாக்கப்பட்டது. 

  • 10-04-2000: காலை 6:30 மணிக்கு சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மும்முனைத் தாக்குதல் நடவடிக்கை நள்ளிரவு 12:30 வரை தொடர்ந்தது. 18 மணிநேரம் நீடித்த இக்கொடுஞ்சமர் புலிகளால் முற்றாக முறியடிக்கப்பட்டது.

  • 11-04-2000: மீண்டும் முன்னேறிய பகைவரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

  • 18-04-2000: இயக்கச்சி தளத்தின் வடபகுதி அரண்களான 541வது சிங்கப் படைத்தொகுதி நிலைகொண்டிருந்த மாசார் மற்றும் சோரன்பற்று மீட்கப்பட்டன. மதியம் ஒரு மணியிற்குத் தொடங்கப்பட்ட சமரில் ஏ9 நெடுஞ்சாலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புதுக்காட்டுச்சந்தி கைப்பற்றப்பட்டது. பிற்பகல் 1:30 மணியிற்கு முகாவில் தளமினுள் புகுந்த புலியணிகளிடம் சிறிதுநேரத்தில் அத்தளம் வீழ்ந்தது.

  • 19-04-2000: பளை மற்றும் இயக்கச்சிக்கு இடைப்பட்ட 6 கிமீ நீளமான ஏ9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.  மாலையில் மாசார் மற்றும் சோரன்பற்றுப் பரப்புகள் கைப்பற்றப்பட்டன.

  • 20-04-2000: பிற்பகல்‌, எதிரியின்‌ தளத்தை பிளக்கும்‌ அணிகள் கண்டி வீதியைக் குறுக்கறுத்து நிலையெடுத்துக்கொண்டன.

  • 21-04-2000: மதியம்‌, இயக்கச்சி நோக்கி முன்னேறிய படைத்தொகுதி தளத்தை நெருங்கித்‌ தாக்க, தளத்தைப் பிளந்து, ஊடறுத்து முன்னேறிய படைத்தொகுதி கடற்கரையை அண்மித்து நிலையெடுத்தது. கடற்புலிகளின்‌ படகுகள்‌ நீரேரிப்‌ பரப்பில் கரையோரம்‌ இருந்த எதிரிக்‌ காவலரண்களைத்‌ தாக்கத்‌ தொடங்கின. பிற்பகல்‌ 2:00 மணிக்‌கு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த எதிரியின்‌ ஊர்திகள் ஆனையிறவை நோக்கிச் சென்றன. சற்று நேரத்தின்‌ பின்னால்‌ 'பாரவூர்தி'களில் படையினர் யாழ்ப்பாணம்‌ நோக்கி பின்வாங்கிக்கொண்டிருந்தனர்‌. அதன்‌ பின்னால்‌ தெறோச்சிகளை கட்டியிழுத்தவாறு படையினர் சென்றுகொண்டிருந்தனர்.

  • 22-04-2000: சிறீலங்காப் படையினர் தங்கியிருந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயக்கச்சி-ஆனையிறவுப் பெருந்தளமும் 20 சதுர கிமீ நிலப்பரப்பு நிறைந்த ஆனையிறவுக் கோட்டமும் முழுமையாக மீட்கப்பட்டது. எதிரி காலையிலிருந்து அல்லிப்பளை - கிளாலி நீரேரியூடாக தப்பியோடத் தொடங்கினர். நண்பகலோடு தப்பியோட்டம் நிறைவடைந்தது.

  • 23-04-2000: காலை 9:52ற்கு நடவடிக்கை ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை ஆனையிறவில் ஏற்றிவைத்தார்.

  • 26-04-2000: பளை நகர் மீட்க தமிழரின் சண்டை உருவாக்கங்கள் நகர்ந்தன.

  • 27-04-2000: ஓயாத அலைகள் மூன்றில் தமிழர் தரப்பின் பல வெற்றிகரத் தாக்குதல்களுக்கு (குறிப்பாக 'தங்கிளப்பு-அறுகுவெளி தரையிறக்கம்') துணை நின்ற தமிழ் அடியைக்கொண்ட 'பிரிகேடியர்' தரநிலையிலான சிங்கள அதிகாரி - 'ஆமி அங்கிள்' என அழைக்கப்படுபவர் - சிங்களப் புலனாய்வுத்துறையால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். காலை 7. 00. மணிக்கு எமது சிறப்பணிகள்‌ பளை நகரை மீட்டுக்கொள்வதற்கான தாக்குதலைத்‌ தொடங்கின.

  • 28-04-2000: புதுக்காடு சந்தியில் இருந்து பளை நோக்கி ஒன்றரை கிமீ தொலைவுவரை புலிகள் முன்னேறினர்.

  • 30-04-2000: ஏ9 நெடுசாலையில் முதன்மை நகர்களில் ஒன்றான பளை நகரப் பரப்பு மீட்கப்பட்டது.

  • 01-05-2000: கிளாலி தானைவைப்பு மீதான தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.

  • 02-05-2000: ஆனையிறவுக்கும் கிளாலிக்கும் இடைப்பட்ட யாழ்ப்பாணக் கடனீரேரிக் கரையோரமான 12 கிலோமீற்றர் வீதியை புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  • 08-05-2000: நல்லெண்ணத்தின் சைகையாக யாழில் உள்ள சிங்களப்படைகள் வெளியேற தாம் போர்நிறுத்தத்தை ஒருதலைப் பக்கமாக கடைப்பிடிப்பதாக புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களம் அதை புறக்கணித்தது.

  • 09-05-2000: ஓயாத அலைகள் மூன்றின் 'கட்டம்-5' அதிகாரநிறைவாக தொடங்கப்பட்டது. அதிகாலை 5:30 மணியளவில் கிளாலி மீதான தாக்குதல் தொடங்கியது. இராவிருளில் அரியாலைக்கும்‌ நாவற்குழிக்கும்‌ இடைப்பட்ட பரப்புநோக்கி புலிகளின் படைத்தொகுதி ஒன்று நகர்கிறது.

  • 10-05-2000: குறித்த நேரத்திலிருந்து ஒருமணிநேரம் முன்பாகவே, அதிகாலை 1:30 மணியளவில், அரியாலைக்கும்‌ நாவற்குழிக்கும்‌ இடைப்பட்ட பகுதியில்‌ சமர் தொடங்கியது. தனங்கிளப்பு, அரியாலை மற்றும் நாவற்குழி பரப்புகளில் நிலைகொண்ட படையினர் மீது கடுந்தாக்குதல் தொடுக்கப்பட்டது. பின்னர் இடைநிறுத்தப்பட்டது. நாவற்குழி முகாமில்‌ இருந்து முன்னேறிய படையினரோடு சமர் நடந்தது.

  • 11-05-2000: நண்‌பகல்‌ 12.45 மணியளவில்‌ அரியாலை படைத்தளம் கைப்பற்றப்பட்டது. அரியாலையூடாக நகர்ந்த புலிகளின் படைத்தொகுதிகள் பகல்‌ 1.45 மணியளவில்‌ மணியந்தோட்டம் பரப்பை மீட்டன. மாலை 4.00 மணி கடந்த பின் கொழும்புத்துறை இறங்குதுறைமுகமும் சூழவுள்ள பரப்புகளும் புலிகளால் முற்றாக மீட்கப்பட்டது. தச்சன்தோப்பு ஊரை கைப்பற்றுவதற்‌காக சோதியா படையணி தச்சன்தோப்புக்‌கான பாதையால்‌ மாலை 4.00 மணியளவில்‌ முன்னேறியது. நாவற்குழிப் பாலத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது; தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி தளங்கள்‌ மீதான தாக்குதல்‌ மாலை 4:30ற்கு புதிய முனையில்‌, புதிய தாக்குதல்‌ உத்தியோடு தொடங்கப்பட்டது. மாலை 5.30 மணியளவில்‌ கோயிலாக்கண்டித் படைத்தளமும் மாலை 6.30 மணியளவில்‌ தனங்கிளப்பு படைத்தளமும்‌ வீழ்ந்தன.

  • 15-05-2000: மாலை 4:30 மணிக்கு தச்சன்தோப்பு ஊரை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த எதிரியின்‌ காவலரண்கள்‌ மீதான தாக்குதல் தொடங்கியது. மறுநாள் அதிகாலையின்முன்‌ இவ்வூர் மீட்டெடுக்கப்பட்டது.

  • 16-05-2000: யாழ் மாநகரசபை எல்லைப் பரப்புகளான பாசையூர் மற்றும் குருநகர் ஊர்களில் இருந்த சிறு முகாம்கள் மற்றும் தொடர் காவலரண்கள் என்பன அழிக்கப்பட்டன. தச்சன்தோப்பு மற்றும் நாவற்குழிப் பரப்பு படை முகாம்கள் அழிக்கப்பட்டன. கைதடி-நுணாவில்‌ பாலத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான சமர் தொடங்கப்பட்டது; சாதகமற்றதால் பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டது. புலிகள் நாகர்கோவில் தளம் மீது எறிகணைகளால் குத்தினர். 

  • 17-05-2000: அதிகாலை 6:00 மணிக்கு நாவற்குழி வீதியில் பாலத்தை நோக்கியும், நாவற்குழி தொடர்வண்டிப்பாதை நோக்கியும்‌ புலிகளின் சண்டை உருவாக்கங்கள் முன்னேறின. காலை 10:00 மணியளவில்‌ பாலமும்‌ அதன்‌ பின்னாலான படைத்தளமும் புலிகள் வசமானது. தொடர்ந்து அன்றூஸ்‌ கொம்‌பனி படைத்தளமும்‌ நாவற்குழிச்சந்தி படைத்தளமும்‌ புலிகள் வசமாயின. கைதடிச் சந்தியில் அமைத்திருந்த படைத்தளம் வசமாகவதற்கான சமர் 11:00 மணிக்குத்‌ தொடங்கி 4:00 மணிவரை உக்கிரமாக நடந்தது. இறுதியில் அத்தளம் புலிகள் வசமானது. கைதடி வடக்கு பகுதியையும்‌ அன்றைய நாளே மீட்டெடுத்தன புலி அணிகள்.

  • 18-05-2000: பலாலி தொலைத்தொடர்புக் கோபுரம் மற்றும் வான்பொல்லம் மீது புலிகள் எறிகணை வீச்சு நடத்தினர். நள்ளிரவு 12:30ற்கு கைதடி வடக்குப் பரப்புலிருந்த எதிரி முன்னணிக்‌ காவலரண்கள்‌ மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. வண்ணாத்திப்‌ பாலத்தையும்‌ அப்பரப்பு வீதியும் இற்றைநாளிரவே மீட்க்கப்பட்டது.

  • 19-05-2000: குருதி வெள்ளத்தை தடுப்பதற்காக யாழ் குடாநாட்டில் உள்ள சிங்களப்படை வீரர்களை சரணடையுமாறு புலிகள் கோரிக்கை விடுத்தனர். சரணடைபவர்கள் மரியாதையுடனும் தகவுடனும் நடத்தப்பட்டு 24 மணிநேரத்திற்குள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. தென்மராட்சிப் புலத்தில் மட்டுவில் மற்றும் சரசாலை பரப்புகள் மீட்கப்பட்டன. மாலை 5:00 மணிபோல் புலிகள் சாவகச்சேரியை அண்மித்தனர். சாவகச்சேரி நகர் இரவு 7மணிபோல் தமிழரால் பரம்பப்பட்டது.

  • 20-05-2000: மாலையில் சாவகச்சேரிப் படைத்தளம் தமிழரிடம் வீழ்ந்தது. தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி முற்று முழுமையாக மீட்கப்பட்டது.

  • 23-05-2000: பெருங்குளம் சந்தி கைப்பற்றப்பட்டது. ஓயாத அலைகள் மூன்றின் கட்டம்- 5 நிறைவடைந்தது.

  • 24-05-2000: சரசாலை மந்துவிலில் சிங்கள வான்படையின் எம்.ஐ.24 உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. மீசாலைக்கான மீட்புச் சமர் தொடங்கப்பட்டது. 

  • 25-05-2000: மண்டைதீவில் கரும்புலித் தாக்குதல் நடந்தது. 

  • 27-05-2000: களத்தில் சிறீலங்காப் படையினர் மக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்துவதால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் புலத்தின் சமர்க்களப் பரப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான பரப்புகளுக்கு வெளியேற்றுவதற்கு வசதியாக சனிக்கிழமை மே 27ம் திகதி காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை தற்காலிக போர்நிறுத்தம் கடைப்பிடிப்பதாக புலிகள் ஒருதலைப்பக்கமாக அறிவித்தனர். ஆனால் சிறீலங்கா அரசு இதைப் புறக்கணித்தது.

  • 30-05-2000: அதிகாலை 5:30ற்கு கொழும்புத்துறை பரப்பூடாக படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டது.

  • 09-06-2000: காலை 5.50 மணியளவில் சரசாலை கனகம்புளியடிச் சந்தியிலிருந்து சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற நகர்வு விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது.

 

 

 

சூன் மாதம் 19ம் திகதியோடு ஓயாத அலைகள் மூன்று தொடர் நடவடிக்கை முற்றுப்பெற்றது.

 

 

 


 

உசாத்துணை:

 

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன், 29|12|2021

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-1 | நவம் 2-7

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', ஐப்பசி-கார்த்திகை, 1999, பக்கம்: 3-6
மூல எழுத்தாளர்: பிரபுத்திரன்‌
தட்டச்சு & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30&31|12|2021

 

 

விடுவிப்புச் சமரின் விடிவெள்ளி

 

unceasing waves 3 south side wind... hiphip hurray, victory! ஓயாத அலைகள் மூன்று.jpg

'நடவடிக்கை வரைபடம்: ஓயாத அலைகள்-3 கட்டம் - 1 & 2'

 

 

“பிரபாகரன்‌ நினைத்தது நடக்கும்‌-அவன்‌
புலிப்படை நெருப்பாற்றை நீந்திக்‌ கடக்கும்‌”

தாடிக்‌ கவிஞனின் உண்மை வரிகளுக்குச்‌ சான்றாய்‌ ஓயாத அலைகள்-03 சமர்‌ ஒப்பற்ற உலக சாதனையைப்‌ படைத்து வரலாற்றில்‌ தனக்கான ஒரு இடத்தைப்‌ பிடித்திருக்கிறது.

'வென்று வாழ்வதே தமிழன்‌ தனக்கெழுதிய விதி' என்பதை நெருப்பாற்றைக்‌ கடக்கும்‌ பிரபாகரனின்‌ புலிப்படை இந்தப்‌ பூகோளத்திற்கு புரியவைத்துள்ளது. புலிகள்‌ பற்றித்‌ தப்புக்கணக்குப்‌ போட்டவர்களுக்கு தலையில்‌ குட்டுப்போட்டு புலியின்‌ வலுவை சொல்லியிருக்கின்றது ஓயாத அலைகள்-03. 'தமிழரின்‌ தாயகத்தை அவர்களிடம்‌ ஒப்படைக்காதவரை உனது அழிவுகளையே அறுவடையாய்‌ பெற்றுக்‌கொள்ள முடியும்‌' என்பதை சிங்கள இனத்திற்கு கன்னத்திலறைத்து உணர்த்தியிருக்கிறது ஓயாத அலைகள்‌-03. இன அழிப்புப்‌ போருக்கான அரசின் ஆதரவாளர்களுக்கு, 'எங்கள்‌ நிலமேறிவரும்‌ படைகள்‌ தங்கள்‌ உடல்கொண்டு மட்டுமே மீண்டும்‌ தம்‌ நிலம்‌ ஏகும்‌!' என்பதை சொல்லி வைத்‌திருக்கிறது ஓயாத அலைகள்-03. 'புலிகள்‌ தீர்ந்துபோகும் வலிமையல்ல. அது ஒடுக்கப்பட்ட தமிழரின்‌ விடுதலைப்படை, தமிழரின்‌ தாயகத்தை மீட்கும் புரட்சிப்‌ போரில்‌ நிச்சயிக்கப்பட்ட வெற்றியைப்‌ பெறப்போகும்‌ மக்கள் படை அது' என்பதை அனைத்துலகிற்கும் மீண்டும்‌ ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. ஓயாத அலைகள்-03. 'எங்களுக்கென்று ஒரு நாடு இதோ உருவாகிறது' என்று உலகத்தமிழரை உணர்ச்சிபொங்க வைத்‌திருக்கிறது ஓயாது அலைகள்-03. 'விடுதலை என்பது விலை கொடுத்துப்‌ பெற்றுக்கொள்ள வேண்டியது.' தாம்‌ கொடுத்த விலைகளுக்கு பெற்‌றுக்கொள்ள வேண்டிய காலம்‌ வந்துவிட்டது என்று எம்மக்களை மகிழ்ச்சிகொள்ள வைத்திருக்கிறது ஓயாத அலைகள்-03. போரின்‌ பங்கேற்பிற்கு ஏற்ப பெற்றுக்கொள்ளும் வெற்றியைப்‌ பெரிதாக்கவும்‌, விரைவாக்கவும்‌ முடியும்‌ என்று போராட வலுவுள்ள ஒவ்‌வொரு தமிழனுக்கும் அறிவுரை தந்‌துள்ளது ஓயாத அலைகள்-03. புலிகள் நடாத்திய இந்த ஓயாத அலைகள்-03 நடவடிக்கையின்‌ தாக்கவீச்சம்‌ இப்படி நீண்டு செல்லும்‌.

ஓயாத அலைகள்-03, தமிழீழத்தின் எல்லைக்கோடுகளை நோக்கி எமது முன்னரங்க காவலரண்களை முன்னகர்த்தும்‌ தாக்குதல்‌ முன்னேற்ற நடவடிக்கை. மீட்புப்‌ போரின்‌ ஒரு உயரிய கட்டம்‌. 27 ஆண்டுப்‌ போராட்டத்தின்‌ சுழற்சிச் சக்கரத்தின் மையமாய், இயக்கு வலிமையாய் நின்ற தலைவர், விடுதலைப்‌ போராட்டத்தின்‌ வளர்ச்சிப்‌ போக்கை அதன்‌ இறுதித் தளத்திற்கு இட்டுவந்துள்ள பரிமாணமே ஓயாத அலைகள்-03.

சிங்கள படைத்துறை 3 ஆண்டுகளாய் தமிழர்நிலம்‌ மீது செய்த படை நடவடிக்கையால்‌ வல்வளைக்கப்பட்ட கோட்டங்களையும் 15 ஆண்டுகளின் முன்‌ தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம்‌ ஒப்படைக்கப்பட்ட தமிழர்‌ நிலங்களையும் ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மீட்டெடுத்துள்ளது. தாக்குதல்‌ கோட்டத்திற்குட்பட்டிருந்த பரப்புகளில்‌ ஏறத்தாழ 20,000 சிறீலங்காப் படையினரும் அவற்றின ஆயுத தளபாடங்களும்‌ நிலைகொண்டிருந்த நிலையில்‌, அவை புலிகளிடம் எப்படித்‌ தோற்றுப்போனது? பெரும்‌ பரந்தகன்ற நிலப்பரப்பில் முன்னணிப்‌ படைகளையும்‌, நவீன சமர் ஏந்தனங்களையும், பின்‌தள உதவிகளையும்‌ கொண்டிருந்த படைய வலயத்தை தாக்கியழித்து மீட்கக்கூடிய வலுவை புலிகள்‌ எப்படி அடைந்தார்கள்‌?! ஒரு கரந்தடிப்படையின்‌ கட்டுப்பாட்டுக் கோட்டத்தை வேற்று அரசுகளின்‌ உதவிகளுடன்‌ அரச படையினர்‌ பிடிப்பதற்கு 2 ஆண்டு சென்ற நிலையில்‌, அதே படையை வெற்றிகொண்டு அந்நிலப்பரப்புக்களை மீட்க எப்படி, புலிகளுக்கு ஏலுமாயிற்று, இத்தனை வலுகொண்ட ஒரு அரச படைத்துறையை தாக்கி நிர்மூலமாக்கி புலிகளால்‌ முன்னேற முடிந்தது எப்படி?! இது எவருக்கும்‌ இலகுவில் புரியக்கூடியதல்ல. இதுவே புலிகளின்‌ மறுத்தொதுக்கப்பட முடியாத வலு. இனிச்‌ சமருக்கு வருவோம்‌. 

மாவீரர்‌ நினைவு மாதம்‌. சிறிலங்கா படைத்துறை புலிகளுடனான தனது வரலாற்று அனுபவத்தில்‌, இம்மாதத்தில்‌ புலிகள் மிக முக்கியத்துவம்‌ வாய்ந்த சமர்களைச்‌ செய்வார்கள்‌ என்பது தெரிந்து, அதற்கான முறியடிப்புத் தந்திரவழிவகைகளையும், வலுவையும்‌ முன்னேற்பாடாக உறுதிப்படுக்‌கொண்டு காத்திருக்கும்‌ காலமிது. 99 நவம்பர்‌ மாதத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்‌ மிக அதிகமாக அரசபடைகளால்‌ ஆயத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். புலிகளின்‌ ஓராண்டு மெளனம்‌, புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்காக காத்திருக்கிறார்கள்‌ என்கிற பல படைத்துறை ஆய்வாளர்களை ஆரூடம்கூற வைத்திருந்தது. இதை சாதாரண சிங்கள வீரர்களாலும் உணர்ந்திருக்க முடியும். தேர்தலுக்கான நாளும்‌ குறிக்கப்பட்டு விட்டதால்‌ இத்‌தாக்குதல்‌ படைத்‌தலைமையால்‌ உறுதியாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான முன் நடவடிக்கையில்‌ சிங்களப்‌ படைத்தலைமை முன்கூட்டியே இறங்கி விட்டிருந்தது. அதுவே, புலிகளை வலுவெதிர்ப்பு(Defence) சமர்முறைக்குள்‌ தள்ளி வைத்திருப்பதற்கான நோக்கம்‌ கொண்ட தொடர்‌ படைத்துறை நடவடிக்கைத்‌ திட்டமாகும்‌. அதற்கு எமது தலைவர்‌ பலியாகாமல்‌ செயலில்‌ இறங்கியதை சிங்களப்படைகள்‌ உணர்ந்திருக்க நியாயமில்லைத்தான்‌?

முதல்‌ இலக்கான தாக்குதலுக்குட்பட்ட கோட்டத்தை பொறுத்தவரையில்‌, இக்கோட்டம் ஒரு படைய வலயமாக அமைத்திருந்தது. முல்லை மாவட்டத்‌தின் ஒரு பகுதியும்‌, வவுனியா மாவட்டத்தின்‌ ஒரு பகுதியும்‌, அனுராதபுர மாவட்டத்துடன்‌ இணைக்கப்பட்ட மணலாற்றின்‌ ஒரு பகுதியுமாக இப்படைய வலயத்தின் பரந்தகலம் இருந்தது. இப்படைய வலயத்தின்‌ வலுவெதிர்ப்பு ஏற்பாடுகள்‌ மிக வலு வாய்ந்தவையாகவும்‌, அத்துடன்‌ வன்வளைப்பு படை நடவடிக்கைக்காக படைவலு மேலும்‌ குவிக்கப்பட்ட நிலைமையிலுமே அது அமைந்திருந்தது. ஏறத்தாழ 20,000 படையினர் இக்கோட்டத்தில்‌ நிலைகொண்டிருந்தனர்.

பொதுவாக இவ்வலயத்தின்‌ வலுவெதிர்ப்பு ஏற்பாடுகள்‌ இப்படி அமைந்‌திருந்தன. மிதிவெடிகள், அடுத்து முட்கம்பி வேலியென மூன்று தொடக்கம்‌ ஏழு நிரைகளைக்‌ கொண்ட தடைப்பகுதி. இதன்‌ பின்னால்‌ சராசரியாக 30 மீற்றருக்கு ஒரு காவலரண்‌ என்ற விதத்தில் மண்ணணைகளின்‌ இடையே அமைக்கப்பட்டிருந்த முன்னரங்க காவலரண் பகுதி. பல இடங்களில் இதற்கு 100 மீற்றரின்‌ பின்னால்‌ தடைப்‌பகுதி, காவலரண்‌ தொடர்‌ என இதே போன்றே அமைக்கப்பட்டுள்ள இரண்டாம்‌ நிலை வலுவெதிர்ப்பு ஏற்பாடு. காவலரண்களிடையே வலுப்படுத்தப்பட்ட நிலைகள்‌, கண்காணிப்பு நிலைகள்‌ என்பனவும்‌ அமைந்திருந்தன. இவற்றுக்குப்‌ பிற்பகுதியில்‌ ஒவ்வொரு பரப்பிலும் அமைந்திருந்த சிறுமுகாங்கள்‌ தனக்கான தனிப்பட்ட வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளையும்‌ கொண்டிருத்தது. நூற்றுக்கு மேற்பட்ட சிறுமுகாங்கள் இவ்வாறு அமைந்திருந்தன. இதைவிட ஒவ்வொரு பரப்பிற்குமான 'உயர் வலுவெதிர்ப்பு வலயம்‌(HDZ)' என்று சொல்லப்படுகிற முதன்மைத் தளம்‌ அமைந்திருந்தது. இம் முதன்மைத் தளங்களைச்‌ சுற்றி தடைப்பகுதியுடனான மண்ணணை கொண்ட தொடர்‌ காவலரண்கள்‌ அமைக்கப்பட்டிருந்தன. இவை வலுவான வலுவெதிர்ப்புக் கொண்டவையாகவும்‌, பின்னிருப்புப் படைகளைக் கொண்டவையாகவும, கணையெக்கி, தெறோச்சி ஏவுதளங்களையும்‌ கொண்டவையாக கட்டளைப் பீடங்களை உள்ளடக்கி அமைந்திருந்தது.

நடுவில் கனகராயன்‌குளத்தில்‌, தாக்குதலுக்குட்பட்ட கோட்டத்தின் முக்கால்வாசிப்‌ பகுதியை காவல்‌செய்து நின்ற 56வது படைப்பிரிவின் தலைமையகமும்‌, நடவடிக்கையில்‌ ஈடுபடும்‌ 55வது படைப்பிரிவின் தலைமையகமும்‌ அமைந்திருந்ததுடன்‌, சிறப்பு அதிரடிப்படை பிரிவின் இரண்டாவது சமரணியும் நிலைகொண்டிருந்தது. இவற்றுடன்‌ சேணேவித்தளம்‌, உணவு, வெடிபொருட் களஞ்சியங்களும்‌ அமைந்திருந்த உயர்‌மட்ட கட்டளைப்பீட மையமாக இத்தளம்‌ அதற்குரிய வலுவெதிர்ப்போடு விளங்கியது. இவற்றைவிட, இப்பரத்‌த நிலப்பரப்பில்‌ ஆங்காங்கே சேணேவி ஏவு தளங்கள்‌, கவச பிரிவுத்‌தளங்கள், பொறியியல்‌ பிரிவுத்தளங்கள், நடவடிக்கைப் படையினருக்கான தளங்கள் உணவு, வெடிபொருட்‌ களஞ்சியங்கள் என்பனவும்‌ இவற்றிற்கான உரிய வலுவெதிர்ப்பு ஏற்பாட்டுடன் அமைத்திருத்தன.

இத்தகைய பாரிய படைவலுவைக் கொண்ட பரந்தகன்ற படைய வலயத்தையே எமது தாக்குதல்‌ இலக்காக்கினார், தலைவர்‌. நீண்டகால இடைவெளியில்‌, மீட்புச்‌ சமருக்கான தந்திரவழிவகையும் சமருக்கான படைக்கருவிகளும்‌, அதற்கான படைகளும்‌, சிறப்புப் பிரிவுகளும், பயிற்சிகளும்‌ என்ற வகையில்‌ எமது படைவலுவை கட்டிவளர்த்த தலைவர்‌, காலம்‌, இடம்‌, சூழல்‌ அறிந்து தாக்குவதற்கான இடத்தை கட்டளையாளர்களுக்கு விளக்கினார்‌. தன்‌ உயிரிலும்‌ மேலாய்‌ 'தெய்வீக புருஷர்கள்‌' எனக்‌ கருதும்‌ மாவீரர்களின்‌ நினைவு மாதத்தின்‌ முதல்‌ நாளான நவம்பர்‌ முதலாம்‌ திகதியை தாக்குதல்‌ நாளாக குறித்தார்‌ தலைவர்‌. குறித்த நாளும்‌ வந்தது.

நவம்பர்‌ முதலாம் திகதி முதற்கட்ட எமது தாக்குதலணிகள்‌ நகரத்தொடங்கின. இதுவரை எம்‌ வரலாற்றில்‌ நிகழாத பெரும்‌ சமருக்கான ஆர்ப்பரிப்போடு அணிகள்‌ நகர்ந்தன. இரவுப்பொழுது முதலாவது ஒன்றுகூடுமிடத்தில் போருக்கு போகும்‌ முன்‌ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்‌ போராளிகள்‌. "புலிகளின்‌ தாகம்‌ தமிழீழத் தாயகம்" என்று முழக்கமிட்டு நெஞ்சில்‌ உந்தவா எழ விடுவிப்புச்‌ சமருக்கான தத்தமது நகர்வுத் திசைகளில்‌ விரைந்து நகர்ந்தன புலி அணிகள்‌. இருளோடு இருளாக எதிரியின் கண்களை குருடாக்கி நகர்ந்து முடித்த அணிகள்‌ தாக்குதலின்‌ இறுதிக்‌ கட்டளைக்காக காத்‌திருந்தண. அணித்‌தலைவர்களால்‌ இச்செய்தி கட்டளையாளர்களுக்கு அறிவிக்கப்பட தலைவருக்கு அதை உறுதிப்படுத்திக்கொண்டனர்‌ கட்டளையாளர்கள்‌. சமரை நேரடியாக வழிநடத்தும்‌ தலைவரிடமிருந்து தாக்குவதற்கான உத்தரவு கட்டளையாளர்களுககு பிறப்பிக்கப்பட்டது. கட்டளையாளர்கள்‌ அணித்தலைவர்களுக்கு கட்டளை பிறப்பிக்க படைத்துறை வரலாற்றில் சாதனை படைக்கப்போகும் இப்பெருஞ்சமர் போராளிகளின் கடுஞ்சினமான தாக்குதலின்‌ வெடியதிர்வுடன்‌ தொடங்கியது.

கட்டளையாளர் கேணல் ஜெயத்தின்‌ வழிநடத்தலில்‌ ஒட்டுசுட்டானிலிருந்து திறக்கப்பட்ட முதற் களமுனையில் சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியும்‌, மாலதி படையணியும்‌ எதிரியின்‌ முன்னரங்கக் காவலரண்களைத்‌ தகர்த்தழித்து காவலரண்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. முன்னேறிய எமது அணிகள் சூழவுள்ள சிறுமுகாங்களைக் கைப்பற்றி முதன்மை தளத்தை முன்னேறித் தாக்க உக்கிரமான மிகவேகமான எமது தாக்குதல்‌ உத்தியும்‌, அதன்‌ வியூகமும்‌ எதிரியைத்‌ திணறடித்தன. முதன்மை படைத்தளத்தின்‌ கட்டளை மைய இயங்குநிலை சீர்குலைந்தது. நிலைமையைச்‌ சரிவர உணர்ந்து, முறியடிப்புத் தாக்குதலை வகுத்து உத்தரவைக் கட்டளைப்பீடம்‌ பிறப்பிக்க முன்னேறிய எமது அணிகள்‌ எதிரித்தளத்தை தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்தன. இதே நேரம்‌ முன்னரங்க காவலரண்கள்‌ தாக்கியழிக்கப்பட்டு ஒட்டுசுட்டானை அண்டியிருந்த சிறுமுகாம்கள்‌ தாக்கப்பட்டன. முதன்மை தளத்தின் வீழ்ச்சியைத்‌ தொடர்ந்து, ஒட்டுசுட்டானை அண்டிய பரப்புகளில் உள்ள சிறுமுகாம்கள் எமது கைகளில்‌ விழுந்தன. ஒட்டுசுட்டான்‌ நகர்‌ முழுமையாக எம்மால்‌ மீட்கப்பட்டது. விடியற்காலை மீட்கப்பட்ட பரப்பிற்க்கான வலுவெதிர்ப்பு அணிகள்‌ நிலையெடுக்க நெடுங்‌கேணியை நோக்கியும்‌, கரிப்பட்டமுறிப்பை நோக்கியும்‌ இரு படைத்தொகுதிகள்‌ முன்னேறத்தொடங்கின.

இதே நேரம் கட்டளையாளர் ராபேட்டின் வழிகாட்டலில் நெடுங்‌கேணிப் பரப்பில் அமைந்திருந்த முன்னரங்க காவலரண்களைத்‌ தகர்த்தழித்துக்கொண்டு முன்னேறிய ஜெயந்தன்‌ படையணியும்‌ சோதியா படையணியும்‌ எதிரியின்‌ வலுவெதிர்ப்பு வியூகத்தைப்பிளந்து முதன்மைத் தளத்தை நெருங்கித்‌ தாக்கின. அப்பரப்பிற்கான சண்டை வலுவடைந்தது. எதிரி திணறடிக்கப்பட்டான்‌. சண்டையின்‌ முடிவில்‌ நெடுங்கேணி முதன்மைத் தளம்‌ எமது கையில் வீழ்ந்தது. ஒட்டுசுட்டானிலிருந்து முன்னேறிய படைத்தொகுதிகள் ஒட்டுசுட்டானிற்கும் நெடுங்‌கேணிக்கு இடையே உள்ள சிறுமுகாம்களைத்‌ தகர்த்தழித்து, அதன்‌ முன்னரங்க காவலரண்களையும் துடைத்தழித்துக்கொண்டு முன்னேறியது. பகற்பொழுதுச்‌ சண்டைகளில்‌ வீதியில் இருந்த அனைத்து சிறுமுகாங்களும் தாக்கியழிக்‌கப்பட்டு நெடுங்கேணியில்‌ அணிகள்‌ ஒன்றிணைந்தன. அங்கிருந்து, நெடுங்கேணியை அண்டிய பரப்புகளில் இருந்த எதிரிப்படைகளைக்‌ தாக்கி விரட்டியடித்து எமதணிகள்‌ 2ம் திகதி இருட்பொழுதுக்குள் நெடுங்கேணி நகரை முழுமையாக மீட்டெடுத்துக்கொண்டன. இவ்விரு பரப்பின்‌ சமர்முனைகளை கட்டளையாளர் கேணல் சொர்ணம்‌ வழிநடத்தினார்‌.

ஒட்டுசுட்டானிலிருத்து கரிப்பட்டமுறிப்பை நோக்கி முன்னேறிய சான்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி அங்கிருந்து 13 கிலோமீற்றர்‌ தொலைவில்‌ உள்ள மணவாளன்பட்டமுறிப்பு வரையான எதிரியின்‌ தொடர்‌ காவலரண்களையும்‌, எதிரியின் சிறுமுகாங்களையும்‌ தகர்த்தழித்தவாறு முன்னேறியது. பகற்பொழுதுச்‌ சண்டைகளில்‌ 13 கிலோ மீற்றர் தொலைவு எதிரியின்‌ பாதுகாப்பு ஏற்பாடுகளைத்‌ தகர்த்தழித்து மிக வேகமான முன்னேற்றத்தைச்‌ செய்திருந்தது இப்படையணி. முதல்நாள்‌ சமர்‌ இரு நகரங்களை மீட்டு, மேலும்‌ முன்னேறிய இந்நிலையுடன்‌ முடிவடைந்தது.

இரண்டாம்‌ நாள்(3ம்‌ திகதி), அம்பகாமத்திலிருந்து முன்னேறிய இம்ரான்-பாண்டியன்‌ படையணி, மாலதி படையணி மற்றும் ஜெயந்தன்‌ படையணிகளைக்‌ கொண்ட படைத்தொகுதியொன்று லெப். கேணல் சேகரின் தலைமையில்‌ முன்னரங்க காவலரண்களைத்‌ தகர்த்து அம்பகாமத்தின்‌ முதன்மைத் தளத்தை முற்றுகைக்குட்படுத்தி தாக்கியழித்தது. இத்தாக்குதல்‌ வெற்றியோடு அம்பகாமத்தை முழுமையாக எமது கைகளில்‌ வீழ்த்திய எமதணிகள்‌, அங்கிருந்து மணவாளன்பட்டமுறிப்பை நோக்கி முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்தும்‌, அம்பகாமத்திலிருந்தும்‌ முன்னேறிய அணிகள்‌ மணவாளன்பட்டமுறிப்பில்‌ ஒன்றிணைந்து மணவாளன்பட்டமுறிப்பு முதன்மை தளத்தை தாக்‌கியழிப்பதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கின.

சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியும்‌, ஜெயந்தன்‌ படையணியின் அணிகளும்‌ லெப். கேணல் சேகரின்‌ தலைமையில்‌ மணவாளன்பட்டமுறிப்புத் தளம்‌ மீது தாக்குதலைத்‌ தொடங்கின. இச்சமர்முனையை கட்டளையாளர் கேணல் தீபன் வழிநடத்தினார்‌. உயர் வலுவெதிர்ப்பு வலயமாக இருந்த அப்படைத்தளத்தின் வலுவெதிர்ப்பு அரண்கள்‌ ஒரு கடுமையான சண்டையின்‌ பின்‌ எமது கைகளில்‌ வீழ்ந்தது. அதை ஊடறுத்து முன்னேறிய அணிகள்‌ தளத்தை தகர்‌த்தழித்தனர்‌. மாண்டவர்போக எஞ்சிய எதிரிகள் கரிப்பட்டமுறிப்புத் தளத்திற்குப் பின்வாங்கிச் சென்றனர்‌. மணவாளன்பட்டமுறிப்பு காவலரண்களையும்‌, சூழுவுள்ள பரப்புகளையும் கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவந்த எமது அணிகள்‌ அங்‌கிருந்து 4 இலோமீற்றார்‌ தொலைவில்‌ உள்ள கரிப்பட்டமுறிப்பு நோக்கி எதிரியின்‌ வலுவெதிர்ப்பு நிலைகளைத்‌ துடைத்தழித்தவாறு முன்னேறிச்‌ சென்றன.

கட்டளையாளர் கேணல் சொர்ணத்தின் தலைமையின் கீழ்‌ இயங்கிய மற்றைய களமுனையில்‌, நெடுங்கேணிப் பரப்பில் வலுவெதிர்ப்பு அணிகளை நிலைப்படுத்திவிட்டு மேற்காக நைனாமடு நோக்கி முன்னேறிய 'சிறுத்தைப்படை' அந்த நீளமான வீதியின் அண்டையில்‌ இருந்த சிறுமுகாங்களை தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவத்தவாறு வேகமான முன்னேற்றத்தின்‌ மூலம்‌ குளவிசுட்டான் முதன்மை தளப்பகுதியை அடைந்தது. சேணேவி ஏவுதளம்‌ உள்ளிட்ட அப்படைத்தளம்‌ கடுமையான சண்டையை எதிர்கொண்டது. சண்டை தொடங்கி இருநாள்‌ அமையத்தில் எமது தாக்குதலை எதிர்பார்த்திருந்து எதிர்கொண்ட எதிரிகளுடன்‌ எமது அணிகள்‌ கடுமையாகச் சண்டையிட்டன. எமக்கும்‌ எதிரிக்கும்‌ இடையில்‌ அப்படைத்தளத்‌தின்‌ இறுதி முடிவிற்காக மிக உக்கிரமான சண்டை வெடித்தது. எதிரியின்‌ இழப்பு அதிகரிக்க தொடர்ச்சியான எமது தாக்குதலில்‌ சிதைவடைந்த அப்படைத்தளம்‌ இறுதியில்‌ எமது கைகளில்‌ வீழ்ந்தது. எதிரி பின்வாங்கி ஓடத்தொடங்கினான். அப்படைத்தளத்தை வீழ்த்திய புலிகள்‌, அதேநாள் குறிசுட்டகுளத்திற்கு முன்னேறி அப்பரப்பையும்‌ மீட்டெடுத்தனர்‌.

இதேநேரம்‌ இச்சமர்முனையின்‌ மறுதிசையில்‌ இம்ரான்‌-பாண்டியன்‌ படையணியும்‌, உதவியணிகளும்‌ உள்ளடங்கிய படைத்தொகுதி நெடுங்கேணியிலிருத்து ஒதியமலை நோக்கி முன்னேறியது. எதிரியின்‌ வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளைத்‌ துடைத்தழித்து முன்னேறிய இப்படைத்தொகுதி, மணலாறு வன்வளைப்புக் குடியேற்றத்தின்‌ பாதுகாப்புத் தளமான ஒதியமலை மீது கடுமையான சண்டையைத்‌ தொடங்கியது. எமது தாயகப்பூமியைப் பிளந்த 'வெலிஓயா' வல்வளைப்பின் பாதுகாப்பு இத்தளத்தில் தங்கியிருத்ததால்‌ எதிரி கடுமையான சண்டையைத்‌ தொடுத்தான்‌. எதிரியின்‌ படைத்‌ தலைமை இதனை இழந்துவிடக்கூடாதென்பதில்‌ உறுதிப்பாட்டான முடிவோடு இருக்க, தலைவரால்‌ வகுக்கப்பட்ட இத்தாக்குதல்‌ திட்டத்தை நிறைவேற்றி  முடிப்பதற்காக எமது படைத்தொகுதி உறுதிப்பாட்டான சண்டையில்‌ இறங்கியது. புலிவீரத்திற்கு அப்படைத்தளம்‌ இறுதியில் அடிபணிந்தது. தளம்‌ பிற்பகல்‌ எமது கைகளுக்கு மாறியது. அன்றைய 2ம்‌ நாள் சமர் அத்துடன்‌ முடிந்தது.

கட்டளையாளர் கேணல் பானுவின்‌ தலைமையில்‌ இயங்கிய கிட்டு பீரங்கிப் படையணியின்‌ அணிகள்‌ இச்சமர்‌ நடவடிக்கையில்‌ முக்கிய பங்காற்றின. இவ்வணிகளுடைய தீரமிக்க நேர்த்தியான செயற்பாடு திரியைத்‌ திணறடித்தது. முறியடிப்புத் தாக்குதலுக்கான எதிரியின்‌ மாற்று வழிகளை இது முறியடித்தது. முன்னேறும்‌ எமது படையணிகளின்‌ நகர்விற்கேற்ப மிக வேகமாகவும்‌, எதிரியின்‌ முறியடிப்புத்‌ தாக்குதலை எதிர்கொள்ளக்கூடியவாறு புத்திக்கூர்மையாகவும் செயற்பட்ட கிட்டு பீரங்கிப் படையணியின்‌ தாக்குதல்கள்‌, சமரின்‌ வெற்றிக்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தன.

4ம் திகதி நடவடிக்கையில்‌ மீட்கப்பட்ட பரப்புகளில் வலுவெதிர்ப்பு வேலைகள்‌ திடமாக்கப்பட்டு சேமயிருப்பு அணிகள்‌ நிலையெடுத்துக்கொண்டன. புதிய அணிகள்‌ வரவழைக்கப்பட்டு அணிகள்‌ மீளொழுங்கு அமைக்கப்பட்டு அடுத்த தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில்‌ ஈடுபட்டன, இரு சமர்முனைகளும்‌. சமர்க்களத்தில்‌ கூடுதலாக அடுத்தகட்ட இலக்கிற்கான தயாரிப்பு வேலைகளே பொதுவாக இன்றைய நாள் நடந்தது. இதற்கான உத்தரவே தலைவரிடமிருந்து சமரின்‌ ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கருணாவிற்கு வழங்கப்பட்டிருந்தது. 

5ம் திகதி கட்டளையாளர் கேணல் தீபனின் தலைமையின் கீழ்‌ இயங்கிய சமர்முனையில்‌ கரிப்பட்டமுறிப்பு முதன்மை தளம்‌ மீதான தாக்குதலில்‌ சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி மற்றும் இம்ரான்‌ -பாண்டியன்‌ படையணி, ஆகியவற்றைக்கொண்ட படைத்தொகுதி எதிரியின்‌ முன்னரங்க காவலரண்களைப் பிளந்து உள்ளிருந்த வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளை ஊடறுத்து முற்றுகையிட்டனர்‌. முற்றுகையிடப்பட்ட கரிப்பட்டமுறிப்பு முதன்மை தளம் எமது கடுமையான தாக்குதலுக்குள்ளானது. மூன்று நாள் எதிரிக்கிருந்த அமையம் எதிரி தன்னைப்‌ வலுப்படுத்த இடமளித்தது. இத்தளத்தின்‌ வீழ்ச்சி மாங்குளம்‌, கனகராயன்குளம்‌ ஆகிய நகர்கள் கைகளில்‌ வீழ வழிகோலிவிடும்‌ என்பதால்‌ படைத்‌தலைமை இதைக் காக்க கடும்‌ பாடுபட்டது. இதனால்‌ மிக உக்கிரமான சண்டைகளில்‌ நாம்‌ ஈடுபடவேண்டியிருந்தது. எமது போராளிகளின்‌ வீரத்திற்கு இறுதியில்‌ தளத்தின்‌ ஒருபகுதி வீழ்ச்சியடைந்தது. இத்தளத்தின்‌ முக்கியத்துவம்‌ கருதி மன்னாரிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஒலுமடுவிலிருந்து முன்னேறியது. இதை தடுத்துச்‌ சமராடிய எமதணிகளின்‌ வீரம்மிக்க தாக்குதலின்‌ முடிவில்‌ சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு பின்வாங்‌கிக்கொண்டது. இதன்பின்‌ முற்றுகையை மேலும் இறுக்கிய புலிகள்‌, தமது தாக்குதலின்‌ மூலம்‌ கரிப்பட்டமுறிப்பைக்‌ கைப்பற்றினர்‌. இயலாமையின்‌ முடிவில்‌ எஞ்சிய எதிரிகள்‌ கனகராயன்குளத்‌திற்கு பின்வாங்கியோடினர்.

Untitled.jpg

'கட்டம் ஒன்று நடைபெற்ற முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆட்புலங்களைக் காட்டும் வரைபடம் | படிமப்புரவு: எரிமலை' 

அங்கிருந்து கனகராயன்குளம்‌ நோக்கி ஒரு படைத்தொகுதி முன்னேறியது. மறு படைத்தொகுதி ஒலுமடு நோக்கி முன்னேறி, ஒலுமடு உயர்‌ வலுவெதிர்ப்பு வலயம்‌ மீது தாக்குதலைத்‌ தொடுத்தது. செறிவான சேணேவிச் சூட்டாதரவுடனான உறுதிப்பாட்டான சண்டையின்‌ பின்‌, இழப்புக்களோடு சிங்களப் படையினர் பின்வாங்கியது. அதனைச்‌ சூழவுள்ள பரப்பில் உள்ள வலுவெதிர்ப்பு அரண்களையும்‌ சிறுமுகாங்களையும் தகர்த்தழித்துக்கொண்டு முன்னேறியது இப்படைத்‌ தொகுதி. இதேநேரம்‌ தென்திசை நோக்கி கேணல் ஜெயத்தின் தலைமையில்‌ கண்டிவீதியால்‌ மாங்குளத்‌திற்கு முன்னேறிய ஜெயந்தன்‌ படையணியின்‌ அணியும்‌, அன்பரசி படையணியும்‌ மாங்குளத்தின்‌ முன்னரங்க காவலரண்களை ஊடறுத்து, முதன்மை தளத்தைப்‌ பிளந்து, சண்டையில்‌ ஈடுபட்டது. இது மாங்குளம்‌ சந்தியை மீட்டெடுத்தவேளை மல்லாவி வீதியில்‌ மூன்றுமுறிப்புச்‌ சந்தியில் இருந்து முன்னேறிய எல்லைப்படை வீரர்கள் உள்ளிட்ட தாக்குதலணி, அப்பரப்பு காவலரண்களைத்‌ தகர்த்தழித்துக்கொண்டு மாங்குளம்‌ சந்தியை வந்தடைந்தது. மாங்குளம்‌ சந்தியில்‌ மூன்று திசைகளிலும்‌ இருந்து முன்னேறிய படைத்தொகுதிகளும் ஒன்றிணைந்து மாங்குளம்‌ நகரை பிற்பகல்‌ 3.05 ற்கு மீட்டெடுத்துக்கொண்டன. புலிகளின்‌ தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத எதிரிப்படையினரும், அவனது சிறப்பு அதிரடிப்படைகளும், கவசப்படை பிரிவும்‌ கனகராயன்‌ குளத்திற்குப்‌ பின்வாங்கி ஓடின.

இத்‌தளங்களின்‌ வீழ்ச்சியோடு கற்கிடங்கிற்கு அருகாமையிலும்‌ புற்குளத்திற்கு அருகாமையிலும்‌ இருந்த எதிரியின்‌ சேணேவிப் படைப்பிரிவுகள்‌ பின்வாங்‌கிக்‌ கொண்டன. இதற்கு முந்தைய இரண்டாம்‌ நாள் சமரின்போது கனகராயன்குளம்‌ தளப்பகுதியில்‌ இருந்த எதிரியின்‌ வெடிபொருட்‌ களஞ்சியமும்‌ அத்தளமும்‌ எமது தாக்குதலுக்குள்ளானது. இத்தாக்குதலில்‌ வெடிபொருட்‌ களஞ்சியம் வெடித்துச்‌ சிதறியதுடன்‌ 100 படையினர் கொல்லப்பட்டும்‌, 300 படையினர் காயமடைந்தும்‌ போயினர்‌. இந்நிலையில்‌ 5ம் திகதி பிற்பகல்‌ வேளையில்‌ புலிகளின்‌ படைத்தொகுதிகள்‌ கனகராயன்குளம்‌ நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன.

மாங்குளத்‌திலிருந்து முன்னேறிய படைத்தொகுதி கொல்லர்புளியங்குளத்தில்‌ அமைந்திருந்த உயர் வலுவெதிர்ப்பு வலயத்தைத்‌ தாக்கியழித்து- அங்கிருந்து தொடர்ந்து முன்னேறியவாறு புற்குளம்‌, மன்னகுளம்‌ சிறுமுகாங்களைத்‌ தாக்கியழித்துக்கொண்டு கனகராயன்குளத்தை அடைந்தபோது கரிப்பட்டமுறிப்பில்‌ இருந்து முன்னேறிய சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி ஆகியவற்றைக்கொண்ட படைத்தொகுதி கனகராயன்குளம்‌ உயர்‌ வலுவெதிர்ப்பு வலயத்தை தாக்கி பாழாக்கியிருந்தது. இரண்டு படைப்பிரிவு தலைமையகங்களையும்‌, சிறப்பு அதிரடிப்படை சமரணியையும்‌, சேணேவி ஏவுதளங்களையும்‌ கொண்டமைந்த அதியுயர் வலுவெதிர்ப்பு தளப்பகுதி எமது கைகளில் வீழ்ந்தது. கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம்‌, கொல்லர்புளியங்குளம்‌ ஆகிய முதன்மை தளங்கள்‌ எதிரியின்‌ கைகளிலிருந்து எமது  கைகளுக்கு மாறிய பின்பு வன்னி நடவடிக்கையில்‌ அதிமுக்கியத்துவம் வாய்ந்த கனகராயன்குளம்‌ தளத்தைப் பாதுகாக்க எதிரியால்‌ இயலவில்லை. இரு திசைகளிலிருந்து நகர்ந்த எமது படைத்தொகுதிகள் கனகராயன்குளத்தை மீட்டெடுத்தபோது அன்றைய நள்ளிரவு தாண்டி நேரம்‌ ஒருமணியாகியிருந்தது.

மறுநாள்‌ 6ம்‌ திகதி பனங்காமத்திலிருந்து லெப். கேணல் முகுந்தனின்‌ தலைமையில் முன்னேறிய எமது படைத்தொகுதியொன்று அத்திசையிலிருத்த முன்னரங்க காவலரண்களைத்‌ தகர்த்தழித்து மூன்றுமுறிப்பு முதன்மை தளத்தை முற்றுகைக்குட்படுத்தின. அத்தளம்‌ மீதான சண்டையின் முடிவின்‌ மூன்றுமுறிப்பு முதன்மை தளம்‌ எமது கைகளுக்கு மாறியது.

மூன்றுமுறிப்பில்‌ இருந்து சிராட்டிக்குளம்‌ வரை எதிரியின்‌ தொடர்‌ காவலரண்களை 4.1, 2.3 ஆகிய படையணிகள்‌ முன்னேறி கைப்பற்றிச்‌ சென்றன. அதேநேரம்‌ குஞ்சுக்குளம்‌ நோக்கி ஒரு படையணியும்‌, பாலமோட்டை நோக்‌கி மறு படையணியும்‌ முன்னேறி சிறுமுகாங்களையும்‌ காவலரண்களையும்‌ தாக்கயழித்தவாறு அப்பரப்புகளை மீட்டெடுத்தபோது அப்பரப்பு மக்கள்‌ போராளிகளைக் கண்டு ஊக்கமகிழ்வடைந்தனர். அன்றைய நாள் கட்டளையாளர் கேணல் தீபனின்‌ தலைமையில்‌ இயங்கிய இச்சமர்முனையின்‌ நடவடிக்கைகள்‌ இத்துடன்‌ ஓய்வுக்கு வந்தன.

அதேநேரம்‌ நைனாமடு நோக்கி முன்னேறியிருந்த எமது படைத்தொகுதி குளவிசுட்டானை மீட்டுக்கொண்டு புதிதாக இணைந்த படையணியுடன்‌ சேர்ந்து நைனாமடு முதன்மை தளம்‌ மீதான தாக்குதலில்‌ இறங்கியது. குளவிசுட்டானை இழந்துவிட்ட நிலையில்‌ நைனாமடுவை இழப்பது புளியங்குளத்தைப்‌ புலிகளிடம்‌ ஒப்படைப்பதற்குச்‌ சமம்‌ எனக்‌ கருதியதால்‌ கடுமையான வலுவெதிர்ப்பை நாம்‌ எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால்‌, எமது நிலையில்‌ நைனாமடுவை வெற்றிகொள்வது புளியங்குளத்தை வெற்றிகொள்வதற்கான ஆதாரவலுவை ஈட்டித்தரும்‌ என்பதால்‌ எதிரியைவிட உறுதியான சண்டையில்‌ ஈடுபட நேர்ந்தது. செறிவான சேணேவித் தாக்குதலுடன்‌ நெருங்கித்‌ தாக்கிய புலிகள்‌ நைனாமடு தளத்தை மதியம்‌ தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவத்தனர்‌. அன்றைய தினமே மதியாமடு உள்ளிட்ட பரப்புகளும் எம்மால்‌ மீட்க்கப்பட்டிருந்தது. இரு சமர்முனைகளினதும்‌ அடுத்த இலக்கு புளியங்குளம்‌.

நள்ளிரவு தாண்டிய அதிகாலை வேளை புளியங்குளம்‌ நோக்கி எமது படைநகர்வு ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும்‌ புளியங்குளத்தை தக்கவைப்பதற்காக அவசரவசரமாக சன்னாசிப்பரந்தனில்‌ எதிரி வலுகொண்ட தளப்பகுதியை அமைத்திருந்தான்‌. புளியங்குளத்தை தக்கவைக்க விரும்பிய எதிரிக்கு இதுவே இறுதி நம்பிக்கையாக இருந்தது. அதை எமது அணிகள்‌ அறிந்திருத்தன. புளியங்குளத்தை அடைவதற்கான எமது இறுதித்தடையை உடைக்கும்‌ உளவுறுதியோடு எமதணிகள்‌ முன்னேறின. தடுப்பு நிலைகளை அமைத்து சண்டைசெய்த எதிரியை தாக்‌கியழித்து சன்னாசிப்பரந்தனை அடைந்த எமது அணிகள்‌ எதிரியின் நிலைகள்‌ மீது தாக்குதலைத்‌ தொடுத்தன. இத்தளத்தில்‌ மிகக்கடுமையான சண்டை நடந்தது. எதிரியின்‌ சேணேவிச் சூட்டாதரவும் கடுமையாக இருந்தது. புளியங்குளத்தை தக்கவைப்பதற்காக எதிரியும், அதை மீட்டெடுப்பதற்காக நாமும் செய்த சண்டையில் களம் அதிர்ந்தது. இறுதியில்‌ தளம்‌ எமது கைகளில்‌ விடிகாலையில்‌ வீழ்ந்தது.

அங்கிருத்து முன்னேறிய எமதணிகள்‌ புளியங்குள தளப்பகுதியை ஊடறுத்து தாக்குதலில்‌ ஈடுபட, ஏற்கெனவே சன்னாசிப்பரந்தனை இழந்துவிட்டதாலும்‌ கனகராயன்குளத்தை அடுத்து தளப்பகுதியை எதுவும் எதிரியின்‌ கைகளில் இல்லாதபோதும்‌ எதிரி பின்வாங்கி ஓடத்தொடங்கினான். இதேநேரத்தில்‌ கனகராயன்குளத்திலிருந்து புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி, மாலதி படையணி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்‌ படையணி ஆகியவற்றின்‌ படைத்தொகுதி இடையில்‌ இருந்த சிறுமுகாங்களை வெற்றி கொண்டு புளியங்குளத்தை வந்தடைந்தது. அப்போது காலை 8:40 ஆகியிருந்தது. இரு படைத்தொகுதிகளும் இணைந்து புளியங்குளத்தை அண்டிய நிலைகளைத்‌ துடைத்தழித்து புளியங்குளத்தை மீட்டெடுத்தன.

கனகராயன்‌குளத்திலிருந்து முன்னேறிய படைத்தொகுதி தொடர்ந்து பனிக்கநீராவிவரை முன்னேறி இத்தளத்தை கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவந்து, மேலும்‌ தெற்கு நோக்கி முன்னேறி பன்றிக்கெய்தகுளம் வரை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தமது நிலைகளை வலுப்படுத்தி வலுவெதிர்ப்பில்‌ ஈடுபட்டன.

இதேநாள்‌ நெடுங்கேணிச்‌ சமரின்‌ மறுபகுதியின்‌ ஒதியமலையைக்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ வைத்திருந்த படைத்தொகுதி வலுவெதிர்ப்பில்‌ ஈடுபட ஜெயந்தன் படையணி அதன்‌ உதவியணிகளுடன்‌ முன்னேறி சிலோன்‌ தியேட்டர்‌, கென்பாம்‌, தனிக்கல்‌, அளவெட்டிக்குளம்‌, வசாவிளான்குளம்‌, பப்பாளிக்குளம்‌ ஆகிய படைநிலைகளை வெற்றிகொண்டன. தமிழீழத்‌ தாயகத்தின்‌ இதயப்பகுதியான மணலாற்றின்‌ இப்பரப்புகள் 15 ஆண்டுகளின் பின்‌ எம்மால்‌ மீட்டெடுக்கப்பட்டன. அன்றைய சமர் அத்துடன்‌ முடிவடைய அணிகள்‌ வலுவெதிர்ப்பு வேலைகளில்‌ ஈடுபட்டன.

ஓயாத அலைகள்‌-03 இன்‌ முதற்கட்ட இலக்குகளை ஒவ்வொன்றாக வெற்றி கொண்டு புலிக்கொடி, நாட்டிச்சென்ற தமிழர் சேனையின்‌ படைத்தொகுதிகள்‌ முதற்கட்ட இலக்கை நிறைவுசெய்து, அதன்‌ பாதுகாப்பிற்காக மேலும்‌ சில பரப்புகளில் முன்னேறி தமது வலுவெதிர்ப்பை வலுப்படுத்தின. பொதுவாக இதைத்‌ தொடர்ந்த நாட்களில்‌ பிடிக்கப்பட்ட பரப்புகளில் வலுவெதிர்ப்பை வலுப்படுத்துவதிலும்‌, தாக்குதல்‌ அணிகள்‌ ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்‌தகட்ட தாக்குதலுக்கான தயார்ப்படுத்‌தலில்‌ ஈடுபடுவதிலும்‌ எமது படை இயங்கிவந்தது. தனித்துவமான படையணிகள்‌ மீட்கப்பட்ட பரப்புகளில் சிதறியிருந்த எதிரிப்படைகளைத்‌ தேடியழிக்கும்‌ நடவடிக்‌கையிலும்‌ ஈடுபட்டுவந்தன.

சமர்‌ நிலைமை இப்படியிருக்க சிறீலங்காப் படைத்தரப்பு நடவடிக்கையில்‌ ஈடுபடும்‌ கட்டளையாளர்களை மாற்றம்‌ செய்தும்‌ புதிய படைவீரர்களை வரவழைத்தும்‌ ஓயாத அலைகள்‌-03 நடவடிக்கையின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கையில்‌ ஈடுபட்டது. அதேநேரம்‌ இழந்த நிலப்பரப்பை மீண்டும்‌ பிடிப்பதற்கும்‌. எதிரியின்‌ படைத்தலைமை கூடி ஆராய்ந்தது. ஆனால்‌ தமிழரின் படைத்தலைமையான எமது தலைவர்‌ கட்டளையாளர்களுக்கு அடுத்தகட்ட தாக்குதல்‌ நடவடிக்‌கைகளை விளக்கி தாக்குதலுக்கான தயாரிப்புகளில்‌ ஈடுபடுமாறு உத்தரவிட்டார்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-2 | நவம் 18-22

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', ஐப்பசி-கார்த்திகை, 1999, பக்கம்: 6-8
மூல எழுத்தாளர்: பிரபுத்திரன்‌
தட்டச்சு & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30&31|12|2021

 

 

விடுவிப்புச் சமரின் விடிவெள்ளி

 

unceasing waves 3 south side wind... hiphip hurray, victory! ஓயாத அலைகள் மூன்று.jpg

'நடவடிக்கை வரைபடம்: ஓயாத அலைகள்-3 கட்டம் - 1 & 2'

 

 

ஓயாத அலைகள்-03 இன்‌ இரண்டாவது இலக்கு, போர்முழக்கம்‌ (ரணகோச) என்று வந்த படைகளுக்கு புலிகளின்‌ போர்க்குணத்‌தை புரியவைப்பதற்கான நடவடிக்கையின்‌ தொடக்க நாளாக 18ம் திகதி அமைந்தது. 'ரணகோச'வினால்‌ வல்வளைக்கப்பட்ட பரப்புகளில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டபோதிலும், 'ரணகோச'வின்‌ முதன்மை இலக்காக இருந்த மன்னார்‌-பூநகரி பாதையைக்‌ கைப்பற்றுவதற்கான முயற்சியில்‌ முன்னேறியிருந்த படைகளுக்கு, உயிரை விடுவதா? ஓடித்தப்புவதா? என்ற இரண்டிலொரு முடிவை எடுக்க வற்‌புறுத்தும்‌ சண்டையை சமரின்‌ தொடர்ச்சியாக புலிகள் மன்னாரில்‌ தொடங்கினர்‌.

கட்டளையாளர் கேணல் ஜெயத்தின் கீழ்‌ இயங்கப்போகும் இச்சமர்முனை, 17ம் திகதி இருட்பொழுதில் நகர்வை ஆரம்பித்து நள்ளிரவு தாண்டி 18ம் திகதி தொடக்கப் பொழுதினில்‌ தொடங்கப்பட வேண்டும்‌ என்று தலைவர்‌, சமரின்‌ ஒருங்கிணைப்புத்‌ கட்டளையாளர் கருணாவிற்கு உத்தரவிட்டிருத்தார்‌. புலிகளின்‌ ஓயாத அலைகள்‌-03 இன்‌ தொடர்ச்சியை எதிர்பார்த்து 'ரணகோச' படைகள்‌ காத்‌திருந்தன. புலிகளின்‌ ஓயாத அலைகள்-03 நடவடிக்கைக்கு இன்னமும்‌ முகங்‌கொடுக்காத அல்லது அதிகம்‌ சேதத்திற்குள்ளாகாத 21வது படைப்பிரிவு இப்பரப்புகளில்‌ நிலைகொண்டிருத்தது. எனவே, சண்டை பற்றிய முன்னறிவிப்போடும்‌, அதை எதிர்கொள்வதற்கான படைவலுவோடும்‌, அதற்கான தயார்ப்படுத்தல்களோடும்‌ சிங்களப்‌ படைகள்‌ காத்திருந்தன என்றே சொல்ல வேண்டும்‌. இருந்தும், தலைவர்‌ வழிநடத்திய ஓயாத அலைகள்‌-03, அவர்களின் முன்னேற்பாடுகளை முட்டிமோதி முன்னேறியபோது சிங்களப்‌ படைகள்‌ தமது உறுதிக்கு சிதை மூட்டிக்கொண்டன. 

தலைவரிடமிருந்து விளங்கப்பட்ட திட்டத்திற்கேற்ப படைத்தொகுதிகள்‌ தாக்குதலில்‌ இறங்கின. தந்திர வழிவகை செயற்பாட்டிற்கான தாக்குதலணிகளும் களம் குதித்தன. 17ம் திகதி இருட்பொழுதில்‌ கட்டளையாளர் ராபேட்டின் தலைமையில்‌ ஜெயந்தன்‌ படையணியும்‌, எல்லைப்படை சிறப்பு தாக்குதல்‌ அணியும்‌ இணைந்த ஒரு படைத்தொகுதி பெரியமடுவிலிருந்து நகரத்‌ தொடங்கியது. இதேநேரம்‌ பள்ளமடுலிருந்து கட்டளையாளர் லெப். கேணல் லக்ஸ்மனின்‌ தலைமையில்‌ மாலதி படையணி, மன்னார்‌ படையணி, சிறப்பு எல்லைப்படை ஆகியவை அடங்கிய ஒரு படைத்தொகுதி நகர்ந்தது.

முன்னேறிய படைத்தொகுதியினருக்கு நள்ளிரவு கடந்து ஒருமணிக்கு தாக்குதலைத்‌ தொடங்குவதற்கான கட்டளை கிடைத்தது. பெரியமடுவிலிருந்து நகர்ந்து காத்திருந்த படைத்தொகுதி எதிரியின்‌ முன்னரங்க காவலரண்களைத்‌ தகர்த்தழித்து அதன்‌ தொடர்புகளைப்‌ பிளந்து முன்னேறியது. வலம்‌, இடமாக இருந்த தொடர்‌ காவலரண்களை இரு அணிகள்‌ தகர்த்தழித்துச்‌ செல்ல, பாலம்பிட்டி நோக்‌கி முன்னேறியது முதன்மை படைத்தொகுதி. எதிரியின்‌ சிறுமுகாங்களைத்‌ தகர்த்தழித்தனர்‌ புலிகள்‌. தொடர்த்து முன்னேறிய படைத்தொகுதி பாலம்பிட்டி-தட்சனாமருதமடு முதன்மை படைத்தளத்தை வந்தடைந்தது. பாலம்பிட்டி, தட்சனாமருதமடுவை உள்ளடக்கியதாக அமைத்திருக்க இம்முதன்மை படைத்தளம்‌ 214 படைத்தொகுதி தலைமையகத்தை உள்ளடக்கியதாகவும்‌ மேலதிக முறியடிப்புத்‌ தாக்குதலணிகளைக் கொண்டதாகவும்‌, கணையெக்கி & தெறோச்சி தளங்களைக்‌ கொண்டதாகவும்‌, அளவில்‌ சற்றுப்‌ பெரிதான வலுவுள்ள படைத்தளமாக இருந்தது.

விடிகாலையில்‌ வலுவான இப்படைத்தளத்தின்‌ மீது கிட்டு பீரங்கிப் படையணியின்‌ சூட்டாதரவுடன்‌ ஒரு கடுமையான சண்டையைத்‌ தொடங்கியது எமது படைத்தொகுதி. நெருங்கிய சண்டைகளில்‌ தரைப்படையை எதிர்கொண்டு சிங்களப்‌படைகளைத் தோற்கடிக்கத்‌ தொடங்கினர் புலிகள். படைத்தளம்‌ மெல்ல மெல்ல எமது கைகளில்‌ விழத்தொடங்கியது. திக்குக்கொன்றாய்‌ பிரிந்த எமது தாக்குதலணிகள் படைத்தளத்தில்‌ எதிரியைத்‌ துடைத்தழிக்கத்‌ தொடங்கியது. தளத்தின்‌ ஒரு பகுதியை எமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்த எமதணிகள்‌ புதிய வலுவெதிர்ப்பு தாக்குதலணிகளை வரவழைத்து பிடித்த பரப்பில் வலுவெதிர்ப்பில்‌ ஈடுபட, புதிதாக வரவழைக்கப்பட்ட அன்பரசி படையணியையும்‌ இணைத்துக்கொண்டு கீரிசுட்டான்‌ நோக்கியும்‌, எஞ்சியிருந்த தட்சனாமருதமடு தளத்தைத்‌ துடைத்தழித்துக்கொண்டு மடுவை நோக்கியும்‌ இரு பிரிவுகளாக முன்னேறத்‌ தொடங்கியது அப்படைத்தொகுதி. அன்றைய பொழுதிற்கிடையில்‌ கீரிசுட்டான்‌வரையும்‌, மறுதிசையில்‌ தட்சனாமருதமடு கடந்தும்‌ எதிரி நிலைகளைத்‌ தோற்கடித்து நிலைகொண்டன. பிடிக்கப்பட்ட கீரிசுட்டானிலிருந்து கேணல் ஜெயத்தின் தலைமையில்‌ ஜெயந்தன்‌ படையணி, இம்ரான்‌-பாண்டியன் படையணிகளைக்கொண்ட மூன்றாவது படைத்தொகுதி முள்ளிக்குளம்‌ நோக்கி முன்னேறத்தொடங்கியது. எதிரியின்‌ சிறுமுகாங்களை ஒவ்வொன்றாக வெற்றிகொண்டு முள்ளிக்குளம்‌ வான்‌படையினரின்‌ முதன்மை படைத்தளத்தை நெருங்கியது அப்படைத்தொகுதி. வெவ்வேறு திசைகளில் பாதையமைத்து, படைத்தளத்தினுள்‌ புகுந்த புலிகள்‌ தமது தாக்குதலால்‌ எதிரியைத்‌ திணறடித்‌தனர்‌. சண்டைக்காகக்‌ காத்திருந்த படையினரை செயலில்‌ இறங்கவிடாது அப்படையணியின்‌ தாக்குதல்‌ வேகம்‌ இருந்தது. அன்றைய மாலைப்பொழுது இருளும்‌ வேளையில்‌ படைத்தளம்‌ முற்றாக எமது கைகளில்‌ வீழ்ந்தது. அதனைத்‌ தொடர்ந்து அப்படைத்தொகுதி இரணையிலுப்பங்குளம்‌ நோக்கி சில கிலோமீற்றர்‌ தூரம்‌ முன்னேறி நிலையெடுத்துக்கொண்டது.

மறுபகுதியில்‌ நள்ளிரவு கடந்த ஒருமணிக்கு பள்ளமடுவிலிருந்து தாக்குதலைத்‌ தொடங்கிய மற்றைய படைத்தொகுதி எதிரியரண்களைத்‌ தகர்த்தழித்து முன்னேறியிருத்தது. வலம்‌, இடமாகப் பிரிந்த இரு அணிகளால்‌ எதிரிக்‌ காவலரண்கள் தகர்த்தழிக்கப்பட்ட பாப்பாமோட்டை முதன்மை தளம்‌ நோக்கி அப்படைத்தொகுதி முன்னேற வேண்டியிருந்தது. இந்த முன்னேற்றத்தின்போதும்‌, பள்ளமடுவிலிருந்து பெரியமடு நோக்கிய காவலரண்‌ தொடரிலும்‌, அதன்‌ பிற்பகுதியிலமைந்த சிறுமுகாங்களிலும்‌ இப்படைத்தொகுதி கடுமையான சண்டைகளில்‌ ஈடுபட நேர்ந்தது. இவ்விடங்களை எதிரி பிடிப்பதற்கு கடுமையான உயிர்ப்பலிகளை முன்னர்‌ கொடுத்திருத்தான்‌. அதனை இலகுவில்‌ இழந்துவிட எதிரி விரும்பவில்லை. எனவே எதிரியின்‌ மனவுறுதியை உடைக்கக்கூடியளவிற்கு எமது தாக்குதலின்‌ வேகமும்‌, புத்திக்கூர்மையும், உக்கிரமும்‌ அங்கு தேவைப்பட்டது. வெற்றிக்கு வேண்டிய அப்பண்புகளுடன்‌ போரிட்டது முன்னேறிய எமது படைத்தொகுதி. புலிவீரத்தின்முன்‌ வீழ்ந்தது அப்படைத்தளம்‌. இறுதியில்‌ அப்பரப்பு முழுவதும்‌ எமது கட்டுப்பாட்டின்‌ கீழ் கொண்டுவரப்பட்டது. பெரியமடுவிலிருந்து முன்னேறிய அணிகளுடன்‌ இணைப்பை ஏற்படுத்திக்கொண்ட அதேநேரம்‌ பாப்பாமோட்டை முதன்மை தளத்தை நெருங்கியிருந்தன அப்படைத்தொகுதியின்‌ மற்றைய தாக்குதலணிகள்‌. இதன்‌ பிறிதொரு தாக்குதலணி ஆண்டான்குளம்‌ நோக்கி தனது முன்னேற்றத்தைத்‌ தொடங்கியது.

மறுநாள் இப்படைத்தொகுதி பாப்பாமோட்டை முதன்மை படைத்தளம்‌ மீதான தாக்குதலில் ஈடுபட்டது. தளத்தை முற்றுகையிட்டு, அன்றைய நாளில் முற்றுகையை மேலும்‌ இறுக்கியது அப்படைத்தொகுதி. தட்சனாமருதமடு, கீரிசுட்டான்‌ பரப்புகள் மீட்டெடுக்கப்பட்டதால்‌ இதேநாளான 19ம்‌ திகதி மடு புனிததேவாலயம்‌ உள்ளடங்கிய பரப்புகள்‌ அனைத்தும்‌ விடுவிக்கப்பட்டிருந்தன. தட்சனாமருதமடுப்‌ பரப்பை மீட்ட அப்படைத்தொகுதி அங்கிருந்து ஆண்டான்குளம்‌ நோக்கி தமது முன்னேற்றத்தைத்‌ தொடங்கியது. மிக வேகமான முன்னேற்றத்தை அப்படைத்தொகுதி சாதித்ததன்‌ மூலம்‌ எதிரிகளைத்‌ திகைப்புக்குள்ளாக்கிட தன்‌ முன்னேற்றத்தின்‌ வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டது. அன்றைய மாலைப்பொழுது இருண்ட வேளையில்‌ பள்ளமடுவிலிருந்து ஆண்டான்குளத்திற்கு முன்னேறிவந்த மற்றைய படைத்‌தொகுதியின் அணிகளுடன்‌ இவ்வணி இணைந்தபோது ஆண்டான்குளப்‌ பரப்பு முழுமையாக எம்மால்‌ மீட்கப்பட்டிருந்தது.

பாப்பாமோட்டை முதன்மை தளத்தை தொடர்‌ தாக்குதலுக்குட்படுத்திய லெப். கேணல் லக்ஸ்மனின்‌ படைத்தொகுதி 20ம்‌ திகதி அதிகாலையில்‌ உறுதியான சண்டைகளில்‌ இறங்கியது. பாப்பாமோட்டையின்‌ இழப்பு தள்ளாடி படைத்தளத்தின்‌ பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைத்‌ தரும்‌ என்பதை எதிரிப்படைத்‌ தலைமை உணர்ந்திருத்தது. இரு களத்திற்குமிடையில்‌ எமது அதிவேக முன்னேற்றத்தை தடுக்கக்கூடியவாறான முதன்மை தளங்கள்‌ எதுவும்‌ அமைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, பாப்பாமோட்டைத்‌ தளப்பகுதி தக்கவைக்க வேண்டிய தேவை சிங்களம்‌ படைகள் தேவையற்றதாயிற்று. இது எம்மால்‌ விளங்கப்பட்டேயிருந்தது. எனவே உதவியணிகளை இணைத்துக்கொண்டு வலுவான சண்டையைத்‌ தொடங்கிய அப்படைத்‌தொகுதி முற்றுகைக்குட்பட்டிருந்த எதிரியின்‌ உயர்‌ வலுவெதிர்ப்பு வலயமான அத்தளத்தை ஊடறுத்து தொடங்கியது. அன்றைய நாளின்‌ தொடர்‌ சண்டையால்‌ பகல்‌ 12:00 மணிக்கு அப்படைத்தளம்‌ எமது கைகளில்‌ வீழ்ந்தது. அதன்‌ வீழ்ச்சியோடு பாப்பாமோட்டை பரப்பை மீட்டெடுத்துக்கொண்டனர்‌ புலிகள்.

இதேநாள் ஆண்டான்குளத்தில் இணைந்திருந்த இரு படைத்தொகுதிகளின் அணிகளும்‌ அப்பரப்பில் வலுவெதிர்ப்பு அணிகளை நிலைப்படுத்திவிட்டு இருவேறு திசைகளில்‌ முன்னேறத்‌ தொடங்கின. தட்சனாமருதமடுவிலிருந்து முன்னேறிய படைத்தொகுதி மாந்தையை நோக்கியும்‌, பள்ளமடுவிலிருந்து முன்னேறிய படைத்தொகுதியின்‌- பிரிவு வட்டக்கண்டல்‌, உயிலங்குளம்‌ நோக்கியும்‌ முன்னேறின. இரு படைத்தொகுதிகளும்‌ அன்றைய மாலைப்‌ பொழுதிற்குள் மாந்தையையும்‌, வட்டக்கண்டலையும்‌ மீட்டெடுத்து எதிரிகளைத்‌ தோற்கடித்திருத்தன. அதேநேரம்‌ உயிலங்குளம்‌ நோக்கியும்‌ சில கிலோமீற்றர் தொலைவு முன்னேறி நிலையெடுத்துக்கொண்டது அவ்வணி. அன்றைய முன்னேற்றத்தின் முடிவோடு தமிழீழ தேசிய நாளான மாவீரர்‌ நாளை சிறப்பிப்பதற்காக இச்சமர்‌ நடவடிக்கை தற்காலிக ஓய்வுக்கு வந்தது.

மறுநாள் மீட்டெடுக்கப்பட்ட பரப்புகளில் வலுவெதிர்ப்பு நிலைகளை அமைப்பதிலும்‌, வலுப்படுத்துவதிலும்‌ தமிழீழ விடுதலைப்‌புலிகளின்‌ கிராமப்படை உள்ளிட்ட புலியணிகள்‌ ஈடுபட, தொடர்ந்த நாட்களில்‌ வலுவெதிர்ப்புப்‌ சமர்முறையில்‌ தேர்ச்சிபெற்ற அணிகள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட பரப்புகளில் வலுவெதிர்ப்பை வலுப்படுத்தி அதனை உறுதிப்படுத்திக்கொண்டன.

மாவீரர் நினைவு மாதத்தின்‌ முதல்‌ நாள் தொடங்கப்பட்ட ஓயாத அலைகள்‌-03 நடவடிக்கை மாவீரர்‌ வீரத்தின் தொடக்கத்தில்‌ தற்காலிக ஓய்வுக்கு வந்தபோது சமர்க்களத்தின்‌ மேற்கு முனையில்‌ தள்ளாடியை அண்டியும்‌, கிழக்குச்‌ சமர்முனையில்‌ மண்கிடிமலையை நெருங்கியும்‌ தெற்கு முனையில்‌ ஓமந்தையை அண்மித்தும்‌ புலிகளின்‌ படைத்தொகுகள்‌ நிலையெடுத்துக்கொண்டன. சிங்கள தேசத்தின்‌ படைகள்‌ செருக்கோடு வல்வளைத்திருந்த எமது நிலங்களில்‌ வைத்தே தோற்கடிக்கப்பட்டு தொடர்‌ தோல்விக்காக காத்திருக்கவேண்டிய கட்டாயத்‌தையும்‌ ஏற்படுத்‌தியிருந்தது ஓயாத அலைகள்‌-03. தமிழர்களை ஒழிப்பதற்காக வளர்க்கப்பட்ட சிங்கள படைத்துறை வெற்றிப்பூரிப்போடு தன் பொன்‌விழாவைக்‌ கொண்டாடியிருந்தபோது தமிழர்‌களின் போர்வலு என்ன என்பதை சிங்கள தேசத்திற்கு புரிவவைத்துள்ளது தமிழர்சேனை. தமிழர்களை  இழிநிலைப்படுத்தி திமிர்த்தனமான அறிக்கைகளை விடுத்த இனவெறியாளர்‌கள்‌ இப்போது மெளனத்தின்‌ ஆழத்தில்‌ தம்மைத்‌ தாமே அறைந்துகொண்டுள்ளார்கள்‌.

"அமைதியான அடிமை வாழ்வை விடவும்‌ ஆபத்தான சுதந்திர வாழ்வு மேலானது" என்ற தலைவரின்‌ அறைகூவலுக்கு அணிதிரண்ட மக்‌கள்சேனையின்‌ புரட்சி வெள்ளம் இது. ஆர்ப்‌பரித்தெழும்‌ விடுதலை வேட்கையின இப்புரட்சி வெள்ளம் தன்‌ எதிர்‌ நிற்கும்‌ எந்தத்‌ தடையையும் வீரத்தின்‌ எரிதணலால்‌ சுட்டெரித்து சுதந்‌திர தேசத்தை சொந்தமாக்கும்வரை ஓய்ந்து போகாது, இதை சிங்களதேசம்‌ புரிந்துகொள்‌ளாதவரை தன்‌ சாவுகளையே தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-3 | டிசம் 11 - சன 1

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', தை-மாசி, 2000, பக்கம்: 4-5 & 8-10
மூல எழுத்தாளர்: பிரபுத்திரன்‌
தட்டச்சு & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01|1|2022

 

 

ஓயாத அலைகள் மூன்று
வடபோர்முனை

 

Unceasing waves-03 Phase 3 offence.jpg

'நடவடிக்கை வரைபடம்: ஓயாத அலைகள்-3 கட்டம்-3 | அறுகுவெளி-கிழக்கு அரியாலை தரையிறக்கமும் மேற்கொண்டு நடைபெற்ற முன்னேற்றங்களும் தொடர்பான வரைபடம் என்னிடம் இல்லை. அது புலிகளால் வெளியிடப்படவில்லை!'

 

 

அனைத்தும்‌ அந்தரத்தில்‌ சுழல, அடித்துப்‌போனது புயல்மழையொன்று. ஆண்டாண்டுகளாக உயிரை உருக்கி சேர்த்துவைத்த எல்லாமே அள்ளுண்டு போனது. நாளைய இருப்புங்கூட அப்படியாயிற்று. வெட்டிமுழங்கிய புயல்மழை வேகம்‌ தணிய, இன்னுமிருப்பவர்கள்‌ எழுந்துநின்று எஞ்சியிருப்பவற்றை ஏக்கத்துடன்‌ பார்க்கிறார்கள்‌. நாளை பற்றிய அவர்களின்‌ கேள்வி இருளாகத்‌ தெரியும்‌ கணப்பொழுது. அப்பொழுதும்‌ அறிவிப்பு வருகிறது. தாழமுக்கம்‌ தணிந்துபோகவில்‌லையாம்‌, புயல்‌ தொடரும்‌ என்று. தங்கள் இருப்புப்‌ பற்றிய அவர்களின்‌ எண்ணமோதல்கள் எப்படியிருக்கும்? அப்படித்தானிருந்தது, எம்‌ அழிவில்‌ ஆனந்தங்கொண்டாடிவந்த பகைவர்களுக்கு, ஓயாத அலைகள்-03 கட்டம்‌-2 முடிந்தும்‌ அலைகள்‌ ஓயாத செய்தி கேட்டபொழுது.

எங்கள்‌ தேசத்‌திற்கும்‌ ஒருகாலம் இப்படித்தானிருந்ததது. முன்னேறிப்பாச்சல்‌, பின் சூரியகதிர்கள், கிழக்கில் பொங்கும் கடலைகள், உண்மைவெற்றிகள்(சத்ஜெய), எடிபல, வெற்றிஉறுதி, சூரிய வலிமை, போர்முழக்கங்கள், வோட்டர்செட் என்று நாலாதிசைகளிலும்‌ புயல்கள்‌ வீசின. எங்கள் நிலையும்‌ அதுவாயானது. நாங்களொன்றும்‌ 'பீனிக்ஸ்' பறவையல்லை, இழந்த வாழ்வை மீளப்பெறுவதற்கு. இருப்பதை இழக்கத்‌ தயாராகாமல்‌ புயலுக்குள் வாழப்பழகிக்கொண்டதெம் தேசம்‌. உண்மைதான்‌, போர்ப்புயல்‌ வாழ்வில்‌ பழக்கப்படுத்தப்பட்டது. புயல்கள் பற்றிய அச்சம்‌ எமக்‌கினியில்லை. இழந்ததைப்‌ பெறுவதற்காய்‌ இடியென எழுகிறது புயல்களைக்‌ தாங்கிய தேசம்‌. இதன்‌ வெள்ளத்தில் அனைத்துமே பிய்த்தெறியப்படும். அதன்‌ பெயர் 'ஓயாத அலைகள்‌ 3'.

ஓயாத அலைகள்‌- 3 கட்டம்‌ 1,2 இல்‌ ஆண்டுகளாக பகைவர்‌ வல்வளைத்ததையெல்லாம்‌, நாட்கணக்கில்‌ படைத்தளங்களை நசுக்கி நம்‌ தேசத்தை மீட்டெடுத்துக்கொண்டனர்‌, தாய்நாட்டின்‌ புதல்வர்கள்‌. ஆயிரக்கணக்கில்‌ உயிர்களைவிட்டு எம்நிலம்‌ பிடித்தவர்களின்‌ உயிர்களையெடுத்து அவர்தம்‌ நிலம்‌ விரட்டினர்‌ புலிகள்‌. வன்னியின்‌ தென்கள முனையில்‌ மூன்று திக்குகளிலும்‌ மூண்ட போரில் கோட்டையென எழுந்துநின்ற படைத்தளங்கள்‌ குட்டிச்சுவரென கருகிப்போகின. ஓயாத அலைகளின்‌ முடிவுத் தேதிக்காக ஏங்கியிருந்தார்கள், முன்னர்‌ ஒரு தேசத்தின்‌ முடிவுத்தேதிக்காக காத்திருந்த அதே மனிதர்கள்.

ஒருகாலம்‌ எங்கள்‌ மரணங்களால்‌ மகிழ்ந்துகழித்தவர்கள்‌ இவர்கள்தான்‌. ஒரு வெடியோசையால்‌ எம்‌ உயிர்களைச்‌ சிதைத்து, உடல்களைச் சிதைத்து, எஞ்சியவர்களின்‌ மனங்களைச் சிதைத்து, தமிழரின்‌ வாழ்வைச்‌ சிதைத்தவர்‌களும்‌ இவர்கள்தான்‌. ஒற்றை வெடியோசையில்‌ எத்தனை குழந்தைகள்‌ அநாதைகளளாயின! எத்தனை குடும்பங்கள்‌ அநாதரவாயின! அவற்றின்‌ குமுறல்களில் ஆனந்தம் கொண்டவரிகளும் இவர்கள்தான்‌. எழுகின்ற சூரியனை எங்கள் தேசத்திற்கு மட்டும்‌ மறைத்துவிட முடியாவிட்டாலும்‌, எம்மை இருளிலிருத்த ஏற்பாடு செய்தவர்‌களுமிவர்கள்தான்‌. இவர்கள்தான்‌ இப்போழுது தங்கள்‌ மரணங்‌களுக்காக காத்திருந்தார்கள்; இம்முறை எம்மரணங்கள்‌ உறுதியென்றுசொன்ன மேலதிகாரிகளின்‌ சொற்களில் நம்பிக்கையற்றவர்களாக.

"எங்கள்‌ வருகைக்காக எதிரி காத்தருக்கிறானென்பது எமக்குத்‌ தெரியும்‌. எமது உடல்களை எண்ணிவிட அவனுக்குக்‌ கட்டளை வந்திருப்பதும்‌ தெரியும்‌. இருந்தாலும்‌ இந்த வெற்றிலைக்கேணி தளத்தை இன்று இரவு தொடங்கும்‌ சமரில்‌ வெற்றிகொள்வோம்‌. இதை வெற்றிகொண்டேயாக வேண்டும்"

என்று பகைத்தளத்தில்‌ பாயப்போகும்‌ புலிகளுக்கு போதித்தார்‌ இச்சமர்முனைக் கட்டளையாளர் கருணா. தலைவர்‌ வழிநடத்தும் ஓயாத அலைகள்‌-03 இன்‌ கட்டம்‌-3இன் தொடக்கம்‌ இதுதான்‌.

  • 11ம் திகதி

10ஆம்‌ திகதி இருட்பொழுதில்‌ எம்‌ வருகைக்காக காத்‌திருக்கும்‌ பகைவர்களுக்கு மரணத்தைப்‌ பரிசளிப்பதற்காக புலிகள்சேனை நகர்ந்தது. லெப். கேணல் கெங்கா தலைமையில்‌ அன்பரசி படையணி உட்பட, ஜெயந்தன்‌ படையணி, சிறப்பு எல்லைப்படை வீரர்கள்‌ ஆகியவை கொண்ட படைத்தொகுதி, கட்டளையாளர் ராபேட் தலைமையில் களமிறங்கியது. இதே நேரம்‌ கட்டளையாளர் கேணல் சூசையின்‌ கட்டளையின்‌ கீழ் பெருங்கடலிலும்‌, நீரேரியிலும்‌ களம்‌ தொடங்க தாக்குதற்‌ படகுகளோடு தயாராகிக்கொண்டனர்‌ கடற்புலிகள்‌.

மாரிகாலம்‌ வன்னியில்‌ முடிந்துபோகவில்லை. வானம்‌ இருள்மண்டிக்‌ கிடந்தது. வழமையைவிட கடல் அலையின்‌ வீச்சம்‌ அதிகமாகவிருந்தது. நீரேரியில்‌ நீர்மட்டம்‌ உயர்ந்திருந்தது. இவைவயெல்லாம்கூட எதிரி தனக்கான காப்பரண்களென்றே எண்ணியிருந்தான்‌. இழந்ததைப்‌ பெற்றுக்கொள்வதற்கான ஆத்மாவின்‌ ஆவல்‌, சுதந்திரத்தின்‌ தேடல்‌ எந்தத்‌ தடையையும்‌ உடைக்காதா என்ன? பகைவர்கள்‌ இதைப் புரிந்துக்கொள்ளச் ஏலாதுதான். ஏனெனில்‌, இழந்தது அவர்களில்லை; நாங்கள்தான்‌. அதனால்‌ தான்‌ கழுத்தில்‌ சாவைக்‌ கட்டிப்‌ போராடுகின்றோம்‌. விடுதலை உணர்வைவிட வன்வளைப்பு வெறிக்கு வலிமை அதிகமாயிருப்பின் எங்கள் தேசம்‌ அழிந்து நீண்டகாலமாயிருக்கும்‌. விடுதலையை வென்றெடுக்கும்வரை ஓயமாட்டோமென்பதை அவலத்தை எம்‌ தேசத்திற்கும்‌ பரிசளித்த அவர்களுக்கு மீண்டுமொருமுறை உணர்த்த ஓயாத சமர்‌ தொடங்கியது, கட்டம்‌-3 என்று.

கட்டைக்காடு, புல்லாவெளி படைத்தளங்களைக்‌ காவலிட்டிருந்த முன்னரங்க காவலரண்‌ தொடரின் நடுப்பகுதியில்‌ முதலுடைப்பு நடந்தது. எதிரி அமைத்த தடைகளை வீரத்தைக்கொண்டு வெட்டியெறிந்தார்கள் புலிவீரர்கள்‌. முடியாதபோது தம்முயிரைக்கொண்டு உடைத்தெறித்தார்கள். லெப். கேணல் வண்ணக்கிளியின்‌ ஒருங்‌கிணைப்பில்‌ பீரங்கிப் படையணி 'சேணேவித் தொகுதி'(Battery)களின்‌ சூட்டாதரவுடன்‌ எதிரியின்‌ காவலரண்களைத்‌ தகர்த்து முன்னேறியது புலிகள்சேனை. திட்டத்தின்படி அப்படைத்தொகுதி இரண்டாகப் பிரிந்து செயற்படத் தொடங்கியது. கட்டைக்காடு முதன்மை படைத்தளத்தை நோக்கி ஒரு படைத்‌தொகுதியும்‌, புல்லாவெளி முதன்மை படைத்தளத்தை நோக்கி மறு படைத்தொகுதியுமாக எதிரிக்‌ காவலரண்களைத்‌ தகர்த்தெறிந்து சிறுமுகாங்களை வெற்றிகொண்டு முன்னேறினர்‌ புலிகள்‌. நீரேரியில்‌ எதிரி அமைத்திருந்த காவலரண்‌ தொடரை தகர்த்தழிக்க கடற்புலி லெப். கேணல் மங்களேஸின்‌ தலைமையில்‌ ஒரு கலத்தொகுதி ஈடுபட்டது. கட்டைக்காடு படைத்தளம்வரை முன்னேறிய புலிகள்‌ தளத்தில்‌ எதிரியை நெருங்கித்‌ தாக்கினர்‌. கடற்கரையில்‌ நிமிர்ந்து நின்ற தேவாலயத்தில்‌, கப்பலேந்தி நின்ற மாதாவை காணாமற்‌ செய்த அந்த பகைவர்கள் வெற்றிகொள்ளப்பட்டனர்‌. கோவிலில்‌ முகப்பு மட்டும்‌ சுவர்களற்று ஒடிந்துபோய் இன்னுமிருந்தது; அந்த ஊர்மக்களின் சிதைக்கப்பட்ட வாழ்வைப்போலவே. 

வெற்றிகொள்ளப்பட்ட படைத்தளத்தில்‌ எதிரியுடல்களைக்‌ கடந்து வெற்றிலைக்கேணி முதன்மை படைத்தளத்தை நோக்கி முன்னேறியது அப்படைத்தொகுதி. இதனுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட கடற்புலிகளின்‌ தாக்குதணியும்‌ இணைந்து நகர பெருங்கடலிலும்‌ கடற்புலிகள்‌ தாக்குதற்‌ படகுகளோடு களமிறங்கினர்‌. கடற்புலிகளின்‌ கலத்தொகுதிகள் இருவேறு இலக்குக்காக நியமிக்கப்பட்டன. லெப். கேணல் அமுதசுரபியின்‌ தலைமையிலிருந்த கடற்புலி மகளிர்‌ தாக்குதல்‌ படகு உட்பட ஒரு கலத்தொகுதி லெப். கேணல் ரஞ்சனின்‌ வழிநடத்தலில்‌ இக்கடற்தளத்தின்‌ கரையோரத்திலிருந்த நீண்ட காவலரண்‌ தொடரைத்‌ தாக்குவதற்காகக்‌ களமிறக்கப்பட்டது. அதேநேரம்‌ பெருங்கடலிலிருந்து சிறிலங்கா கடற்படைத் தளத்தைத்‌ தக்கவைப்பதற்காக எடுக்கப்போகும்‌ முயற்சியை முறியடிப்பதற்கு லெப். கேணல் ராவணனின்‌ தலைமையிலான கலத்தொகுதியொன்று காவலிட்டு நின்றது. நீரேரியிலும்‌, பெருங்கடலிலும்‌ நடைபெறும்‌ சமர்‌ நடவடிக்கைகளுக்கு கட்டளையாளர் கேணல் சூசை கட்டளை வழங்கினார்‌.

வெற்றிலைக்கேணிப்‌ படைத்தளம்‌ அப்பரப்பிற்கான வெறும்‌ வன்வளைப்பு மட்டுமல்ல. இதன்‌ முக்கியத்துவம்‌ பல்வேறு பரிமாணம்கொண்டது. ஒன்று  வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைத்தொடர்பைக்‌ கொண்டிருக்கும்‌ இரண்டு பாதைகளில்‌ ஒன்றைத் தடுத்து நிற்பது இது. இரண்டாவது யாழ்ப்பாணத்தின்‌ மறு தரைத்தொடர்பான ஆனையிறவை அடைத்‌திருக்கும்‌ கூட்டுப் படைத்தளத்தின்‌ காப்பும்‌ வலுவும் வெற்றிலைக்கேணித்‌ தளத்தின்‌ இருப்பில்‌ தங்கியிருந்தது. ஏனெனில்‌ இதன்மூலம்‌ இப்படைத்‌தளத்திற்கான கடற்தொடர்பை பேணமுடிவதுடன்‌ பக்கவாட்டாக புலிகளின்‌ தாக்குதலச்சுறுத்‌தலைத்‌ தவிர்த்து ஆனையிறவு தனிமைப்படுதலையும்‌ தவிர்த்துக்கொள்ள முடியும். மூன்றாவது, கடற்புலிகளின்‌ இயக்கத்தை வெற்றிலைக்கேணி கடற்தளத்தை பேணினால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும். யாழ்ப்பாண படைத்துறைக்கான ஒரேயோரு வழங்கல் பாதையான கடற்பாதையின்‌ காப்பு இப்படைத்தளத்திலேயே தங்கியிருந்தது.

முடிவாக, யாழ்ப்பாணத்தில்‌ நிலைகொண்டுள்ள படைத்துறையின் பாதுகாப்பென்பது, இப்படைத்தளத்திலேயே பெரும்பங்கு தங்‌கியிருந்தது. எனவே, எம்மண்‌ சுமக்கும்‌ அவலத்திற்கு இப்படைத்தளத்தின்‌ கேந்திர நிலையம்‌ முக்கியமானது. இதனைக்‌ காவலிட்டு நின்ற சிங்களத்தின்‌ வீரர்களும்‌ முக்கியமானவர்கள்‌ தான்‌; அவர்களது அழிப்பில்தான்‌ எமது உயிர்ப்பு இருக்க முடியுமென்பதால்‌.

தரையால் ஒரு படைத்தொகுதி எதிரியைத் தாக்கி முன்னேற, கடலால் ஒரு கலத்தொகுதி தொடர் தாக்குதலில் ஈடுபட ஒரு கத்தரிக்கோலைப் போல செயற்பட்ட புலிகளின் தரை, கடல் படையணிகளின் தாக்குதலால் எதிரிகள் வீழ்த்தப்பட்டார்கள். உயரக்கடலில் நின்ற தாய்க்கப்பல் கட்டளையிட முன்னேறின கடற்படையின் எட்டு டோறாப் படகுகள். இதை எதிர்பார்த்து காவலிட்டு நின்ற கடற்புலிகள் கடற்படையினரை எதிர்கொண்டனர்‌. கொந்தளிக்கும்‌ கடலில்‌ இரண்டு படைகளின்‌ வெற்றி தோல்விக்கான கடுஞ்சமர்‌ நடந்தது. எதிரியின்‌ சமர் ஏந்தனங்கள், கடற்கலங்கள்‌ வலுவுள்ளவையாக இருக்கலாம்‌. ஆனால்‌, ஏந்தனங்களால் மட்டுமே சமர் வெற்றிகொள்ளப்படுவதில்லை. அதற்கும்‌ மேலால்‌, அதைத் தாங்கிநிற்கும் மனிதர்களின்‌ மனவலிமையிருக்கிறது. அதுவே ஒருவகையில்‌ கருவியின்‌ பயன்‌திறனைக்கூட தீர்மானிக்கிறது. அங்கு, நடந்த கடற்சமரில்‌ எம்‌ வீரர்கள்‌ வென்றார்கள். பகைவர்கள்‌ பின்வாங்கினர். தனிமைப்படுத்தப்‌பட்ட வெற்றிலைக்‌கேணித்தளம் பிற்பகற்பொழுதில்‌ எம்மால் வெற்றிகொள்ளப்பட்டது. இவ்வெற்றிலைக்கேணி கடற்தளம்‌ அமைந்‌திருந்த புவிநிலைகருதி (முனைப்பகுதி) தெற்காக முல்லைத்தீவை கடந்தும்‌, வடக்காக பருத்தித்துறை வரையும்‌ கடற்புலிகளின்‌ நடமாட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் (கதுவீ மூலம்‌) முடியுமாக இருந்‌தது, சிங்களக் கடற்படைக்கு. ஆனால்‌ இப்போது, வெற்றிலைக்கேணியின்‌ இழப்பு முல்லைத்தீவு, வெற்றிலைக்கேணி உட்பட ஒரு பெரும்‌ கடற்பரப்பை பாதுகாப்பாக, கடற்புலிகளிடம்‌ மீட்டுக்‌ கொடுத்துள்ளது. இத்தளம் மூலம்‌ கடற்படைக்கிருந்த கண்காணிப்பு கைகூடலும், தாக்குதல் கைகூடலும் புலிகளின்‌ கைகளிற்கு மாறியிருக்கிறது. இதனால் கடற்படையும்‌, யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரும் தமது புரவின் வலுவை கூட இழந்துவிட்டிருப்பதுடன்‌ கடற்புலிகளின வலு உறுதியான நிலையை அடைந்துள்ளது.

  • 12ம் திகதி:

மேலும்‌ இரு சமர்முனை.

இச்சமரை நேரடியாக வழிநடத்தும் தலைவர்‌ திட்டத்தின்படி மேலும்‌ இரு சமர்முனைகளைத்‌ தொடங்குவதற்குக்‌ கட்டளையிட்டார்‌. ஒன்று, கேணல் பால்ராஜின்‌ கட்டளையின்‌ ஒரு படைத்தொகுதி வெற்றிலைக்கேணிக்கும்‌, இயக்கச்சிக்குமிடையிலான படைய வலையத்தில்‌ எதிரிகளைத்‌ தாக்கியழித்து முன்னேறி இயக்கச்சிப்‌ பரப்பில் தடுப்பரண்களை அமைக்க வேண்டும்‌. இழந்த பரப்பை மீளக்கைப்பற்ற எதிரி தயாராகுமுன்‌, எதிரியைத் தாக்கி இயக்கச்சி-ஆனையிறவு கூட்டுத்தளத்திற்கும்‌ பின்வாங்க வைப்பது இதன் அடிப்படைத்‌ தேவையாக இருந்தது.

எனவே மாலதி படையணி முள்ளியான்‌ படைத்தளம்‌ நோக்கி முன்னேற, யாழ் படையணியுடனான மாலதி படையணியின்‌ ஒரு அணிகொண்ட படைத்தொகுதி மண்டலாயூடாக இயக்கச்சி நோக்‌கி முன்னேறியது. முள்ளியான்‌ நோக்கி முன்னேறிய மாலதி படையணி, எறிகணைத்தளமும்‌, இரண்டாவது 'கெமுனு காவல்' சமரணித் தலைமையகமும் அமைந்திருந்த அப்படைத்தளத்தைத்‌ தாக்கி எதிரிகளை வெற்றிகொண்டது. வெற்றிலைக்கேணியிலிருந்து பின்வாங்கிய எதிரிகள்‌ மீள்‌ ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த இத்தளம்‌ எமது கைகளில்‌ வீழ்ந்தது.

அதே நேரம்‌, லெப். கேணல் மகேந்தியின்‌ தலைமையில்‌ முன்னேறிய படைத்தொகுதியை மண்டலாயில்‌ தடுத்து நிறுத்தி சண்டையிட்டது எதிரிகள் படை. உள்நோக்கிய எமது முன்னேற்றம்‌ தமது இருப்புக்கு அச்சுறுத்தலாக விடுமென்று உணர்ந்த எதிரிப்படைத்தலைமை, அதைத்தடுத்துநிறுத்த சமராடுமாறு தன்‌ படைக்கு கடுமையான கட்டளையை வழங்கயிருந்தது. மண்டலாயில்‌ மூண்ட கடுமையான சண்டையால்‌ 50க்கு மேற்பட்ட எதிரிகள்‌ தமது உயிர்களை இழக்க நேரிட்டதைத்‌ தவிர வெறெதையும்‌ அவர்களால்‌ சாதித்துக்கொள்ள முடியவில்லை. எதிரியின்‌ உடல்களைக்‌ கடந்து இப்படைத்தொகுதி மேலும்‌ முன்னேறியது. முள்ளியானிலிருந்து மற்றைய படைத்தொகுதியும்‌ முன்னேறியது.

இன்று தொடங்கிய இரண்டாவது சமர்முனை சாவகச்சேரிக்குத்‌ தெற்கே உள்ள கேரதீவு, அறுகுவெளி நோக்கியது. வன்னி-யாழ்ப்பாணத்‌ தொடர்பை துண்டித்திருந்த சங்குப்பிட்டி-கேரதீவு கடல்நீரேரியைக்‌ கடந்து கேரதீவு கடற்தளத்தை கைப்பற்றிப்‌ பாதுகாப்பது இதன்‌ இலக்காக இருந்தது. சாவகச்சேரியிலிருந்து சில கிலோமீற்றர்‌ அண்மையிலிருக்கும்‌ இப்பரப்பை மீட்பதன்‌ மூலம்‌ சங்குப்பிட்டி - கேரதீவு தொடர்பைப்‌ பேணுவது நோக்கமாகயிருந்தது. இச்சமர்முனையில்‌ மாலதி படையணி, ஜெயந்தன்‌ படையணி, இம்ரான்‌-பாண்டியன்‌ படையணி ஆகியவற்றின்‌ அணிகளைக்கொண்ட படைத்தொகுதி களமிறங்கியது. 

காலை 10 மணியளவில்‌ லெப். கேணல் வீமனின்‌ தலைமையில்‌ கிழக்கரியாலையிலும்‌ அறுகுவெளியிலும்‌ இருவேறு பிரிவுகளாக தரையிறக்கப்பட்டது இப்படைத்தொகுதி. எதிரியைப்‌ பொறுத்தவரை நீரேரிகடந்த எமது முன்னேற்றம்‌, ஏலாதுயென்றே நம்பியிருத்தான்‌. ஏனெனில்‌ அதை, தடுப்பதற்காக அவன்‌ ஏற்படுத்தியிருந்த வலு வலிமையானது. கிளாலி, கேரதீவு, கோயிலாக்கண்டி, குருநகர்‌ ஆகிய இடங்களிலமைந்திருந்த கடற்தள கதுவீ ஏந்தனங்களை மீறி எம்மால்‌ நகர்ந்துகொள்ள முடியாது. அப்படியான எமது நகர்வை முறியடிப்பதற்காக, சிறப்புப்‌ பயிற்சிபெற்ற சிறப்பு படகுச் சதளம்(squadron) நிலைநிறுத்தப்பட்டிந்தது. இவற்றை மீறி எமது நகர்வு நடந்துவிட்டால்‌ அவற்றை முறியடிப்பதற்கான படைத்‌தளங்களும்‌ மீண்டும்‌ பின்வாங்க முடியாதபடி கடற்படையின்‌ தடுப்பும்‌ இருக்குமாறு எதிரி ஒரு ஏற்பாட்டைச்‌ செய்திருந்தான்‌. இத்தகைய எதிரியின்‌ எதிர்பார்ப்பை முட்டாள்‌தனமாக்கி எமது அணிகள்‌ முன்னேறியிருந்தன.

மேஜர் பாலனின்‌ கிட்டு பீரங்கிப் படையணி 'சேணேவித் தொகுதி' சூட்டாதரவை வழங்க, லெப். கேணல் சேரமான்‌ தலைமையில்‌ கடற்புலிகள்‌ முன்னேறும்‌ படையணிகளைத்‌ தரையிறக்கினர்‌. முறியடிப்பதற்காக வரப்போகும்‌ சிறப்பு படகுச் சதளத்தை எதிர்கொள்ள கடற்புலிகள்‌ காத்திருந்தனர்‌. தரையிறங்கிய அணிகள்‌ முன்னேற்றத்‌ தாக்குகளில் ஈடுபட்டன. ஒரு அணி அறுகுவெளியில் அமைந்திருந்த படைமுகாமை வெற்றிகொள்ள, மறு அணி கேரதீவு கடற்தளத்தை நோக்கி முன்னேறி அதைத்‌ தாக்கியழித்து வெற்றிகொண்டது. 'கதுவீ' ஏந்தனம் உட்பட ஆயுதங்களும்‌ கைப்பற்றப்பட்டன. அன்று மாலைக்குள் கேரதீவு, அறுகுவெளி உள்ளிட்ட ஒரு நிலப்பரப்பைத்‌ தக்கவைத்து சங்குப்பிட்டியூடாக ஒரு தொடர்பை ஏற்படுத்திக்‌ கொண்டதை, உறுதிப்படுத்துககொண்டது அப்படைத்தொகுதி.

இன்று மாலை கருணாவின்‌ கட்டளையில்‌ இயங்கிய சமர்முனையில்‌ புல்லாவெளி நோக்கி முன்னேறியிருந்த படைத்தொகுதி சண்டையைத்‌ தொடங்கியது. உதவிக்குவந்த, படையினரை தாக்கியழிக்க நீரேரியிலமைந்திருந்த காவலரண்களை கடற்புலிகள் தகர்த்தழிக்க அப்படைத்தளத்தை வெற்றிகொண்டனர்‌ புலிகள்‌.

தனது படையின்‌ வலுவாலும்‌, இயற்கையாக அமைந்த புவியியல்‌ சாதகத்தாலும்‌, வல்வளைப்பின் உறுதிப்பாட்டில்‌ இறுமாந்திருந்த பகைவரின்‌ படைத்தலைமை ஒரே சமயத்தில்‌ மூன்று, முனைகளில்‌ இயங்கும்‌ இச்சமருக்கு முகங்கொடுக்க முடியாது திணறியது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு சமர்முனை நோக்கங்களும் அறியப்படாமல்‌ எதிரி திக்குமுக்காடினான்‌. தனது படைவலுவை எந்த முனையில் நிறுத்தச்‌ சண்டையிடுவதென்பதில்‌ எதிரி குழப்பமடைந்தான்‌. பன்னிரெண்டாம் திகதி இருண்டது. பகைவர்களது மனங்களுங்கூட அப்படித்தான்‌.

  • 13ம் திகதி

வெற்றிலைக்கேணியை வெற்றிகொண்ட படைத்தொகுதி இத்தளத்தின்‌ பாதுகாப்பிற்காகத்‌ தொடர்ந்து முன்னேறியது. எதிரியை நிலையெடுக்கவிடாது வேகப்பின்தொடர்வைச்‌ செய்த இப்படைத்தொகுதி ஆழியவளை சிறுமுகாமையும்‌ தாக்கி அப்பரப்பையும் மீட்டெடுத்துக்கொண்டது. 

இன்றைய நாளில்‌ புல்லாவெளியிலிருந்து முன்னேறிய படைத்தொகுதியும்‌ மண்டலாயூடாக முன்னேறிய படைத்தொகுதியும்‌ வாடியடிச்‌ சந்திவரை எதிரிகளை விரட்டின. எதிரி வலுவான வலுவெதிர்ப்பு அரண்களை நெருங்கவிடாது அமைத்திருந்தபோதும்‌ அலைகளின்‌ வீச்சில்‌ அது அள்ளுண்டு போனது.

  • 14ம், 15ம் திகளில்‌

தொடர்ந்த இவ்விரு நாட்களில்‌ சண்டையிட்ட அணிகளுக்கு ஓய்வு வழங்கப்பட்டு மீளொங்குபடுத்தப்பட்டது. சண்டையின்‌ தீவிரத்தில்‌ சரியாக சாப்பிட்டிராத போராளிகளுக்கு பெற்றவர்‌களைப்‌ போல தங்கள் வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டிக்கூட மக்கள்‌ செய்தனுப்பிய உலருணவுகள் கைகளில்‌ கிடைத்தது. தனங்களப்பு, இயக்கச்சிப்‌ பரப்புகளில்‌ சாப்பாடு சரியாகக்‌, கிடைப்பதுகூட ஏலாதுயிருந்தது. இந்த உலருணவுதான்‌ வயிற்றுப்‌ பசிக்கு தீர்வு கண்டது. களத்திற்கு தன்‌ பிள்ளையிடம்‌ உலருணவு கொடுத்தனுப்பிய தாய்‌ தன்‌ பிள்ளையைக்கூட இழந்திருந்தாள்‌. அந்த உலருணவின்‌ பெறுமானம்‌ எத்தனை பெரியது.

தளத்தில்‌ வெற்றியின்‌ மகிழ்ச்சி ஒருபுறம்‌, வீரச்சாவு நிகழ்வுகளின்‌ துயரம் மறுபுறம்‌, இதற்குள்ளும்‌ அரத்தம்‌ வழங்குவது உலருணவு திரட்டுவது, வீதி திருத்துவது என்ற அவசர வேலைகள் ஒருபுறமாக மக்கள்‌ திரிந்தார்கள். எல்லைக்குப்‌ போவதற்குத்‌ தயாராகும்‌ எல்லைப்படை வீரர்களும்‌ காயமடைந்துவந்த எல்லைப்படை வீரர்களும்‌ மக்களின்‌ கவனத்திற்குரியவர்களாயினர்‌. தளத்தில் ஒரே ஆரவாரம்‌. தம்புதல்வர்களின் வீரம்செறிந்தசமர் இத்தனை மாட்சிமையான வெற்றிகளையீட்டுவது அவர்களுக்குப்‌ பெருவியப்பைக் கொடுத்தது. ஓயாத அலைகள்‌-03 ஐ தலைவர்‌ நேரடியாக
வழிநடத்துகிறாரென்பதில் அதிக ஊக்கமகிழ்வுவேறு அவர்களுக்கு. 

  • 16ம்‌ திகதி

நான்காவது சமர்முனை

இரண்டு படைத்தொகுதிகள் நிலைகொண்டிருந்த முக்கியத்துவம்‌ வாய்ந்ததும்‌, மிக வலுப்படுத்தப்பட்டதுமான பரந்தன்‌ முதல்‌ உமையாள்புரம்‌ வரையிலான பரப்புயில்‌ சமரை வழிநடத்த கட்டளையாளர் கேணல் தீபன்‌ தலைவரால்‌ நியமிக்கப்பட்டார்‌.

பரந்தன்‌ வயற்பூமியால்‌ சூழப்பட்ட சிறுநகரம்‌. வேளாண் மக்களுக்கேயுரிய அமைதியும்‌, எளிமையுமான வாழ்வைக்‌ கொண்ட பூமியிது, இங்கு இரசாயன தொழிற்சாலை நிறுவப்பட்டதன்பின்‌ பரந்தன்‌ மேலும்‌ களைகட்டியிருந்தது. அந்த அழகிய அமைதியான பூமியின்‌ ஆடை அவிழ்க்கப்பட்டு ஆண்‌டுகளாகிவிட்டன. அந்த நீசர்கள்தான்‌ அந்நிலத்‌தின்‌ உறுப்பாய் நின்றார்கள். அவர்களின்‌ கொலைக்‌கரங்கள்‌ இரண்டடி கொண்டவையல்ல. சேணேவியின் தொலைவீச்சு எவ்வளவோ அதுவே அவர்களின்‌ கொலைக்கரத்தின்‌ நீளமும்‌. எனவே கிளிநொச்சி, உருத்திரபுரம்‌, முரசுமோட்டையென மூன்று திக்கிலும்‌ மக்கள் தம்‌ வாழ்வை இழந்தனர்‌. இப்பொழுது அப்படைத்தளத்திற்கான சண்டைகள்‌ தொடங்கப்பட்டாயிற்று. அம்மக்களின்‌ வாழ்வின்‌ சீவயூற்றுத் தெரியும்‌ நேரமிது. 

தகரி அணியின் தாக்குதலுதவியோடு மேஜர் தர்சனின்‌ ஒருங்கிணைப்பினாலான பீரங்கிப்‌ படையணி 'சேணேவி தொகுதி'களின்‌ சூட்டாதரவோடு சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியும்‌ லெப். கேணல் மைதிலியின்‌ மாலதி படையணியுமிணைந்த ஒரு படைத்தொகுதி லெப். கேணல் இராஜசிங்கனின்‌ தலைமையில்‌ முல்லை-பரந்தன்‌ வீதியால்‌ முன்னேறியது. கண்டிவீதியால் லெப். கேணல் விமலின்‌ தலைமையில்‌ இதே படையணிகளைக்கொண்ட மற்றுமொரு படைத்தொகுதி முன்னேறியது. புலனாய்வுத்‌துறை தாக்குதற்‌ படையணி லெப். கேணல் அறிவின்‌ தலைமையில்‌ இவ்விரண்டு வீதிகளுக்குமிடையிலான பரப்பில் முன்னேறியது. இத்திட்டத்தின்படி நண்பகல்‌ 1 மணிக்கு சண்டையைத்‌ தொடங்க எதிரிக்காவலரண்கள்‌ வெற்றி கொள்ளப்பட்டு தமக்குள்‌ இணைப்பையேற்படுத்திக்கொண்டன படைத்தொகுதிகள்.

அன்று இரவுக்குள்‌ திட்டத்தின்‌ முதலிலக்கு நிறைவுசெய்யப்பட்டு, அடுத்த நகர்வுக்‌கான ஒழுங்குகள்‌ நடந்து கொண்டிருந்தன. எதிரி பின்னால்‌ உள்ள வீதியில்‌ புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான்‌. நாம்‌ முன்னேறாதது எமது இயலாமையென எதிரிப்படை அதிகாரி எண்ணியிருக்கவேண்டும்‌ அல்லது தன்‌ வலுவில்‌ அதிக நம்பிக்கைகொண்டிருக்க வேண்டும்‌. ஏனெனில்‌ கேணல் தீபனின்‌ தொலைத்தொடர்பு அலைவரிசையில்‌, குறுக்கிட்ட எதிரியின்‌ உயர்‌ அதிகாரி இப்படிச் சொன்னான்‌.

"உன்ர கட்டளையாளர் 5.2 ஐ (கட்டளையாளர் ராகவனின்‌ குழுஉக்குறி ) ஒட்டுசுட்டான்ல நாங்கள்‌ போட்டிட்டம்‌, எப்படி? இனி என்ன செய்யப்‌ போகிறாய்‌'',

"அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம்"

என்றார்‌ கட்டளையாளர் தீபன்‌.

"எங்களையென்ன ஒட்டுசுட்டான்‌ ஆமியெண்டு நினச்சியே"

என்றான்‌ எதிரி.

"நடக்கப்போறதை பொறுத்திருந்து பார்‌"

என்று பொறுமையாகவும்‌ அறைகூவலாகவும் சொன்னார்‌ கட்டளையாளர் தீபன்.

மறுநாட்‌ காலை தொடங்கிய சண்டையில்‌ முன்னேறிய எமது படைத்தொகுதிகளின்‌ கைகளில்‌ பரந்தன்‌ முதன்மை படைத்தளம்‌ விழுந்தது. இது எட்டாவது கஜபாகு சமரணியுடையது. அடுத்திருந்த முதன்மை படைத்தளமும்‌ முரட்டுடன் முன்னேறிய புலிகளிடம்‌ வீழ்ந்தது. இது ஆறாவது 'கெமுனு காவல்' சமரணியுடையது. நண்பகல்‌ 11 மணிக்கு இவை முழுமையாக வெற்றிகொள்ளப்பட்டிருந்தன.

வெறுமைநகரில்‌ வேட்டொலிகளைத்‌ தவிர வேறு ஒலிகளில்லை. ஒரு நகரத்தின்‌ வாழ்வையே கொன்றொழித்து, கொல்லாமையைப்‌ போதித்த புத்தனின்‌ சிலையை போதிமரத்தடியில்‌ இருத்தியிருந்தார்கள்‌, அந்தக்‌ கயவர்கள்‌. பொறுக்கமுடியாத புத்தபெருமான்‌ தன்‌ கண்களை இறுகமூடி தியானத்தில் இருந்து விட்டதைப்போலிருந்தது.

மற்றும்‌ இன்றுதான்‌ நீரேரியில்‌ எமது வழங்கல் நடவடிக்கைகளையும்‌, ஏனைய செயற்பாட்டையும்‌ தொல்லைப்படுத்திவந்த எம்.ஐ.-24 உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. அதன்பின்‌ வான்படை முடமாகிப்போனது.

  • 18ம்‌ திகதி

கட்டளையாளர் கருணா வழிநடத்திய சமர்முனையின்‌ கட்டம்‌-3இற்கான இலக்கு நிறைவடைய வத்திராயன்வரை அணிகள்‌ நகரவேண்டியிருந்தது. ஆனால்‌ பின்வாங்கியோடிய படையினரை இணைத்து உடுத்துறை பாடசாலைக்‌ கட்டிடத்தொகுதிகளை வாய்ப்பாக பயன்படுத்தி எதிரி அதையொரு தளமாக மாற்றியிருந்தான்‌. சென்ற நாட்களில்‌ வலுப்படுத்தப்பட்டிருந்த இத்தளத்தைத் தாக்குவதற்கான தயாரிப்பு வேலைகளில்‌ ஈடுபட்ட அணிகள்‌ இன்று சண்டையைத்‌ தொடங்கின. முடிவில்‌ இதை வெற்றிகொண்டு வத்திராயன்‌ நோக்கி நகர்ந்த அணிகள் அங்குள்ள சிறுமுகாமையும்‌ தாக்கி அப்பரப்பையும் மீட்டுக்கொண்டன.

  • 20ம் திகதி

54-6 படைத்தொகுதி வீழ்ச்சி

கடந்த மூன்று நாட்கள்‌ இப்படைத்தளத்தை சுற்றியிருந்த முன்னணி காவலரண்களைக்‌ கைப்பற்றுவதுற்காக வீதியின்‌ வலம்‌ இடமாக கடும்‌ சண்டைகள்‌ நடந்தன. வெற்றிகொள்ளப்பட்ட சமரணிகளிலிருந்து தப்பியோடியவர்களும்‌ இங்குதான்‌ நிலைகொண்டிருந்தனர்‌. புதிதாக சிறப்புப்படையினரும்‌ வரவழைக்கப்பட்டிருந்தனர்‌. இதை இழப்பதில்லையென்பதில்‌ எதிரி உறுதியாக இருந்தான். நிறைந்த கட்டிடத்‌ தொகுதிகளும்‌ காப்பான பதுங்‌ககழிகளும்‌ எதிரிக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதைவிட படையினரின் எண்ணிக்கை வலு அவனுக்கு ஊக்கமகிழ்வைக் கொடுத்தது. எனவே மூன்றுநாள்‌ சண்டைகளிலும் ஒவ்வொரு காவலரணுக்காகவும்‌ எதிரியும்‌ நாங்களும்‌ கடுமையாகச்‌ சண்டையிட்டோம்‌. சில சம்பவங்களில்‌ ஒரே காவலரண்‌ மாறிமாறி இருவரிடமும்‌ வீழ்ந்தது. ஆனால்‌, இன்று விடிந்திருந்தபோது ஒவ்வொருநாளும்‌ மீற்றர்கணக்கில் முன்னேறிய நாங்கள்‌ அத்தளத்தின் இருபக்க காவலரண்களையும்‌ பிடித்துவிட்டிருந்தோம்‌.

ஆயினும்‌, எதிரி உள்சுற்றில்‌ காப்பரண்களை ஏற்படுத்திக்கொண்டான்‌. கட்டடத்தொகுதிகள்‌ மேலும்‌ வாய்ப்பாக இருந்தது அவனுக்கு, எனவே தளத்தின்‌ மையத்தில்‌ தாக்க புலியணிகள்‌ எதிரியரண்களைப்‌ பிளந்து உள்நுழைந்தன. வீழ்ந்தது அப்படைத்தளம்‌. மாடிக்‌ கட்டிடத்தைக்கொண்ட இரசாயனத்‌ தொழிற்சாலை தூண்களாக மட்டுமே உயர்ந்துநின்றது.

  • 23ம்‌ திகதி

மீளக்கைப்பற்ற எதிரி முயற்சி

இன்று காலை 6.30 மணிக்கு இழந்துபோன வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப்‌ பரப்புகளை, மீளக்கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில்‌ ஈடுபட்டனர்‌ படையினர்‌. இயக்கச்சிப்‌ பரப்பில் அமைந்த வை.எம்‌.சி.ஏ. வீதி வழியாக முன்னேறி எமது வலுவெதிர்ப்பு அரண்களைப்‌ பிளந்து, மண்டலாயை அடைந்து, அங்கிருந்து வெற்றிலைக்கேணியூடாக கட்டைக்காட்டையும்‌ மீளக்கைப்பற்றுவது என்றிருந்தது. இதன்‌ திட்டம்‌ காலை 6.30 மணிக்கு பெரும்‌ தாக்குதல்‌ வலத்தோடு நடவடிக்கைக்காக வரவழைக்கப்பட்ட அதிரடிப்படைப் பிரிவுடன்‌ எமது காவலரண்களை ஊடறுத்து எதிரி முன்னேறினான்‌. மாலதி, யாழ், இம்ரான்-பாண்டியன்‌ படையணிகளும்‌ உதவிக்கு ஜெயந்தன்‌, புலனாய்வுத்துறை மகளிர் தாக்குதலணிகளும்‌ எதிரியை முற்றுகையிட்டு தாக்குதலில்‌ ஈடுபட்டன. முன்னேறிவந்த படையினர்‌ இப்போது தங்கள்‌ வாழ்வின்‌ முடிவுகளைச்‌ சந்‌தித்துக்கொண்டிருந்தனர்‌. இறுதியில்‌ தமது திட்டத்‌தைக்‌ கைவிட நேரிட்டதைப்‌ போலவே தோழர்களின் உடல்களையும்‌ கைவிட நேர்ந்தது. எம்மால்‌ மட்டும்‌ 50 வரையிலான உடல்கள்‌ கைப்பற்றப்‌பட்டன. திட்டத்தின்படி எதிரியின்‌ மீளக்கைப்பற்றல்‌ நடவடிக்கையை அவனது புறப்படும்‌ தளத்தினருகேயே முறியடிக்க வேண்டுமென்பதற்காக இயக்கச்சிவரை முன்னேறித்‌ வலுவெதிர்ப்பில் ஈடுபட்ட படைத்‌தொகுதி வெற்றிகரமாகச்‌ செயற்பட்டு இதைச்சாதித்தது. கேணல் பால்ராஜின்‌ கட்டளையின்‌ கீழ்‌ லெப். கேணல் பகீரதன்‌ இத்தாக்குதலை வழிநடத்தினார்‌.

  • 26ம் திகதி

தரையிறக்க முயற்சி

தனங்கிளப்பு, கேரதீவு பரப்பை மீளக்கைப்பற்றுவதற்காக எமது தடுப்பரண்களை உடைத்து முன்னேற முடியாத எதிரி அறுகுவெளியில்‌ வான்வழித்‌ தரையிறக்கம்‌ ஒன்‌றின்மூலம்‌ இதை இயலுமைப்படுத்த முயற்சித்தான்‌. எமது தொடர்புகளைத்‌ துண்டாடி தாக்கவந்த வான்கலங்கள்‌ எமது தாக்குதலால்‌ பின்வாங்கிக்கொண்டன. இத்தரையிறக்க முயற்சியும்‌ முறியடிக்கப்பட்டது.

மற்றும் பரந்தன்‌ நோக்கிய சமர்முனையில்‌ புதிதாக சோதியா, இம்ரான்‌-பாண்டியன்‌ படைத்தொகுதிகள் இணைந்து முன்னேறிய படைத்தொகுதிகள் புளியடி முதன்மை தளத்தை கைப்பற்றிக்கொண்டன. தோல்விகண்ட எதிரிப்படை வரிசையில் விஜபாகு படையணியும் இப்போது இணைந்துகொண்டது.

  • 27ம்‌ திகதி

54-5 படைத்தொகுதி வீழ்ச்சி

புளியடியை வெற்றிகொண்ட படைத்தொகுதிகள்‌ உமையாள்‌புரத்திலிருந்த படைத்தொகுதி தலைமையகம் உள்ளிட்ட அப்படைத்தளத்தில் இன்று அதிகாலையில்‌ சண்டையைத் தொடக்கின. 'உண்மை வெற்றி'க்கு முன்னேறிய படைவரிசையில்‌ புலிகளால்‌ வெற்றிகொள்ளப்படப்போகும்‌ மூன்றாவது படைத்தொகுதி இதுவாகும்‌. கிளிநொச்சியில்‌ 54-3, பரந்தனில்‌ 54-6, இப்போது உமையாள்புரத்தில்‌ 54-5.

இங்கிருந்து எதிரி பின்வாங்கினால் வெட்டையும்‌, நீர்நிலையுமான நிலப்பரப்பைக் கடந்து உப்பளத்திற்குச் செல்லவேண்டும்‌. அப்படி நடந்துவிட்டால்‌, உப்பளத்திலிருந்து இனிமேல்‌ அந்த வெட்டைப்‌ பரப்பைக் கடந்து முன்னேறுவது ஏலாதுபோய்விடும். ஏனெனில்‌, கிட்டு பீரங்கிப் படையணியுட்பட விடுதலைப்புலிகளின்‌ படைத்துறை வளர்ச்சியால்‌ இந்த வெளிப்பகுதியை கடப்பது இலகுவாக இருக்காது. எனவே உமையாள்புரம்‌ அவனுக்கு முக்கியத்துவம்‌ மிக்கது. ஆயினும்‌, மும்முனைகளில்‌ இன்று நடந்த சண்டையில்‌ எதிரிக்கு அதைத் தக்கவைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல்‌ போயிற்று. அந்த அழகிய உமையாள்புர ஊர் தன்னை அலங்கோலப்படுத்தியவர்களிடமிருந்து மீண்டுகொண்டது.

  • 30ம் திகதி

மீண்டும்‌ முன்னேறும்‌ முயற்சி

கேரதீவு-சங்குப்பிட்டிச்‌ சமர்முனையில்‌ வான்வழித்‌ தரையிறக்கம்‌ தோல்விகண்ட நிலையில், தரையாலும்‌ நீரேரியாலும்‌ முன்னேறும்‌ நடவடிக்கையில்‌ எதிரி முயன்றான்‌. சாவகச்சேரியிலிருந்து சில கிலோமீற்றர்களில்‌ தாம்‌ நிலைகொண்டிருப்பதும்‌, தரைவழியாக ஒருதளத்தை குடாநாட்டில்‌ பேணுவதும்‌ யாழ்‌ படையினருக்கு எப்பொழும்‌ அச்சுறுத்தலாக இருக்குமென எதிரி எண்ணினான்‌. எனவே, தனங்கிளப்பிற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டிருத்த சிறப்புப்‌படையினரைக்‌ கொண்டு எமது வலுவெதிர்ப்பை உடைத்து முன்னேறும்‌ அதேவேளை, கிளாலி நீரேரியூடாக சிறப்பு படகுச் சதளத்தைக்கொண்டு பின்புறமாகவும்‌ எம்மை தாக்குவதோடு, சங்குப்பிட்டியூனான எமது தொடர்பைத்‌ துண்டித்து, அத்தளத்தில்‌ எம்மை முற்றுகைக்குட்படுத்‌தி தாக்யெழிப்பதற்காக இருமுனைகளில்‌ எதிரி சண்டையைத்‌ தொடக்கினான்‌.

சிறப்பு படகுச் சதளத்தை லெப். கேணல் பகலவனின்‌ தலைமையில்‌ எதிர்கொண்ட கடற்புலிகள்‌ கடுஞ்சண்டையில்‌ எதிரியின்‌ முயற்சியை முறியடித்‌தனர்‌. முன்னேறி வந்த 'வோட்டஜெட்'ஐ கரும்புலித்‌ தாக்குதல்‌ மூலம்‌ கரும்புலி கப்டன் அறிவரசன்‌ மூழ்கடித்தான்‌. தொடர்‌ சண்டையில்‌ எதிரியின்‌ மூன்று 'புளு ஸ்ரார்‌' படகுகள்‌ சேதமடைந்தன.

நீரேரியில் சிறப்பு படகுச் சதளத்திற்கு இப்படியான கதியேற்பட, தரையில்‌ முன்னேறிய எதிரியை முற்றுகையிட்டுத்‌ தாக்கினர்‌ புலிகள். முற்றுகையிட வந்த படையினர்‌ இப்பொழுது தம்‌ தோழர்களின் உடல்களையும்விட்டு 50ற்கும்‌ மேற்பட்ட படையினரைப்‌ பலிகொடுத்து பின்வாங்கியோடினர்‌.

  • 1ம்‌ திகதி

இந்த புத்தாயிரமாம்‌ ஆண்டின்‌ முதற்சண்டை.

இந்த ஆயிரமாம்‌ ஆண்டில்‌ உலகில் அமைதி வேண்டுமென்று எவர்தான்‌ கூவினாலும்‌, இனவாதிகளின்‌ காதுகள்‌ அதை செவிமடுத்துக்கொள்ளப் போவதில்லை. இந்த ஆயிரத்தின்‌ முதற்சண்டை இங்குதான்‌ நடந்திருக்கவேண்டும்‌. நள்ளிரவு தாண்டிய வேளை இயக்கச்சி புளியடிச் சந்தியிலிருந்து முன்னேறிய எதிரி எம் வலுவெதிர்ப்பை ஊடறுத்து முகாவில் வீதியைக்‌ கைப்பற்றி கண்டி வீதிக்கான அச்சுறுத்தலை தவிர்த்துவிட விரும்பினான்‌. இதுவே இந்தடவடிக்கையின்‌ உடனடி இலக்காக இருந்தது. கண்டிவீதியை அண்மித்து நாம்‌ நிலையெடுத்திருத்ததால்‌ எதிரிக்கு இந்நடவடிக்கை கட்டாயமாயிருந்தது.

'ஜயசிக்குறு'யில்‌ இறுதிவரை முன்னேறிய 53வது படைப்பிரிவை வரவழைத்து சிறப்புப்படைப் பிரிவைவயும்‌ உள்ளடக்கி நடவடிக்கையில்‌ ஈடுபடுத்தினான்‌ எதிரி. இதன்‌ படைப்பிரிவு கட்டளையாளர் மேஜர் ஜெனரல் கெட்டியாராச்சி நடவடிக்கையைப்‌ பொறுப்பெடுத்து நேரடியாக வழிநடத்தினான்‌.

முன்னேறிய எதிரிகளோடு காலை 6.30க்கு பெரும் சண்டை மூண்டது. எமது நிலைகளைப்‌ பிளந்து முருகந்தநகர்‌ வரை முன்னேறினான்‌ எதிரி. முறியடிப்புத்‌ தாக்குதலில்‌ இறங்கின புலியணிகள்‌. மேஜர் சாந்தகுமாரியின் தலைமையிலான மாலதி படையணியும்‌, யாழ் படையணியும்‌, புலனாய்வுத்துறை மகளிர்‌ தாக்குதல்‌ படையணியும்‌ இத்தாக்குதலுக்கு களமிறங்கின. ஒரு கடுமையான சண்டையில்‌ வீரத்தோடு போராடிய புலிகள்‌ தொகைக்கணக்கான எதிரிகளை வீழ்த்தினர்‌. மொத்த அழிவிலிருந்து தம்மைப்‌ பாதுகாக்க 53வது படைப்பிரிவு பின்வாங்கியோடியது.

  • விடுதலையின்‌ வெற்றியாண்டு

'ஓயாத அலைகள்‌-03' என, எமது தலைவர்‌ வழிநடத்தும்‌ இச்சமர்‌ ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வில்‌ ஒளியைப்‌ பிறப்பித்து கட்டம்‌-3ன்‌ இலக்குகளை வெற்றிகொண்டது.

புதிய ஆயிரமாம்‌ ஆண்டின்‌ அமைதியைக்‌ கிழித்து முதற்சண்டையைத்‌ தொடக்கிய வன்வளைப்புத் திமிர்கொண்ட வெறியாளர்கள்‌ தங்கள்‌ தோழர்களது உடல்களையே களத்தில்‌ விட்டோடி இந்த புத்தாயிரமாண்டின் முதல்‌ அவமானத்தைத் தமதாக்கிக்கொண்டனர்‌. வல்வளைப்பாளர்களை வெற்றிகொண்ட இந்த முதற்சண்டையில்‌ புலிகளின்‌ பெண்கள்‌ அணியினரே அதிக பங்கேற்றனர்‌ என்பது குறித்துச்சொல்லப்பட வேண்டியது!

"உண்மையும்‌, தர்மமமுமே எமது பலம்‌" எனக்கொண்ட தமிழீழ தேசியத்‌ தலைவர்‌ அவர்கள்  ஒடுக்குமுறைக்கெதிராக எழுந்த தமிழ்மக்களின்‌ வெற்றியாக புத்தாயிரமாண்டின்‌ முதல்வெற்றியை ஆக்கியதன் மூலம்‌, இந்த ஆயிரமாம்‌ ஆண்டை, வன்வளைப்புகள் அழித்த விடுதலையின்‌ வெற்றியாண்டாகத்‌ தொடக்கவைத்தார்‌.

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-4 | மார் 26 - ஏப் 30

 

 

இம் மறுமொழிப்பெட்டியினுள் இக்கட்டத்தின் போது நடைபெற்ற குடாரப்பு தரையிறக்கம் தொடர்பான தகவல் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளன. முழுச் சமர் விரிப்பையும் வாசிக்க அடுத்த பெட்டிக்குச் செல்லவும்.

 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-4 | மார்ச் 26 - ஏப்ரல் 30

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி - ஆனி 2000, பக்கம்: 4-10 & 15
மூல எழுத்தாளர்: பிரபுத்திரன்‌
தட்டச்சு & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன்,  03&04|1|2022

 

 

ஆனையிறவு தளவீழ்ச்சி
சிதைக்கப்பட்ட பேரினவாதத் திமிர்

 

elephantpass battle ... Unceasing waves - 3 phase 3.png

'நடவடிக்கை வரைபடம்: ஓயாத அலைகள்-3 கட்டம்- 3&4 | இதில் பளைத்தளம் மீதான நடவடிக்கை குறிக்கப்படவில்லை. பளை நகர் மீட்க புலி அணிகள் புதுக்காட்டுச் சந்தியில் இருந்து கண்டி வீதியாலும் கண்டி வீதிக்கும்‌ நீரேரிக்கும்‌ இடைப்பட்ட பரப்பாலும் முன்னேறின.'

 


ஓங்கியெழுந்த புலிகள்‌ ஓயாத அலைக - 03 என ஆர்ப்பரித்தபோது அள்ளுண்டுபோன வன்வளைப்புத் தளங்களின்‌ அவலத்தின்‌ பின்னால்‌, புலிகளின்‌ அடுத்த வரவுக்காக ஆனையிறவு தளத்தில்‌ காத்‌திருக்க எம்‌ எதிரிகளுக்கு முன்னறிவிப்பு விடுக்கப்பட்டாயிற்று.
 
அறைகூவல்களை ஏற்று சமர்புரியக்‌ கூடாதென்பது கரந்தடி போராளிகளுக்கான போரியலில்‌ ஒரு பொதுவிதி. வரலாற்றில் வெற்றிகள்‌ தான் விதிகளைத்‌ தீர்மானித்ததேயன்றி விதிகளே வெற்றிகளைத்‌ தீர்மானித்ததல்ல. வீரமும்‌, புத்திக்கூர்மையும் வித்துக்கள். வித்துக்களிலிருந்துதான்‌ விதிகள்‌ பிறக்கின்றன. தலைவர்‌ பிரபாகரன்‌ வழிநடத்தும் அறைகூவலுக்கான சமரில்‌ வீரத்தையும், புத்திக்கூர்மையையும் முதலிட்டு புலிப்படை ஓர் புதிய விதிசெய்யப் புறப்பட்டது. அது ஆனையிறவை வீழ்த்தி உயர்த்தும் புலிக்கொடியில், எம் நிலமேறி வந்த பகைவர் தந்த அவலத்தின் பரிசாய் தம் உயிர்கொண்டு மீளாது அந்தரிக்கவென அறைகூவிவிடும்‌ சமராய்‌ ஓயாத அலைகள்‌ - 03 கட்டம்‌-4 என எழுந்தது.

யாழ்ப்பாணத்தின்‌ தரைவழிப்பாதையை அடைத்துநிற்கும்‌ தளங்களான தாழையடியும்‌, ஆனையிறவும்‌ எழுந்துநின்று எம்வரவை மட்டும்‌ எதிர்பார்‌த்திருக்கவில்லை. எம்‌ பாய்ச்சலுக்கான புறப்படு தளங்களையே (வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு) மீளப்பிடித்துவிடுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தன. நாங்களோ ஏவப்போகும்‌ எதிரிப்படைகளை எப்படித்‌ தடுப்பதென்று தயாராகிக்கொண்டிருக்கவில்லை. ஆர்ப்பரித்தெழும்‌ ஓயாத அலைகளில்‌ எதிரி தடுத்துத்‌ தாக்குப்பிடிக்க முடியாதபடி எப்படிப்‌ பேரலையென புரள்வது என்பதற்கே எம்மை நாம்‌ ஆயத்தம்‌ செய்துகொண்டிருந்தோம்‌. அறைகூவலை சந்திப்பதே இருதரப்பிற்கும்‌ சமயத்தின் வலுக்கட்டாயமாகியது.

நடக்கவிருக்கும்‌ பெரும்‌ சமரில்‌ எவர்‌ தளங்கள்‌ எவரிடம்‌ வீழ்ந்துவிடப்‌ போகிறது என்பதில்‌ யாழ்‌ நகரத்தின்‌ அடுத்தகட்டத்‌ தீர்மானம் இருந்தது. இது எமக்குமட்டுமல்ல எம்‌ எதிரிகளுக்கும்‌ தெரியும்‌. யாழ்‌ வல்வளைப்பால் அரசியல்‌ ஆதாயம்‌ பெற்றிருக்கும்‌ அரசு, தீர்வு எனும்‌ போர்வையில் போரையும், போர்‌ எனும்‌ போர்வையில்‌ தமிழ்த்தேசிய இனப்‌படுகொலையையும்‌ பன்னாட்டிற்கான நியாயப்படுத்தல்களோடு படைத்துறை வலுவால்‌ சாதித்துவிட எடுத்த முனைப்பை சாதாரணமாக இழந்துவிடத்‌ துணியுமா? அல்லது மூன்று பத்தாண்டுகளாக போராட்டத்தை எதிர்த்தெழுந்த புயல்களைக் கடந்து, முன்னேறிய இத்தேசத்தின் புதல்வர்கள், வல்வளைப்பின் வலுவை ஏற்று அவர்களை எம்‌ தேசத்தை விலைபேச விட்டுவிடத்தான்‌ தயாரா? அறைகூவலுக்கான சமராயிற்று ஓயாத அலைகள்‌ - 03 கட்டம்‌-4.

மார்ச்‌ - 26ம்‌ திகதி பிற்பகற்பொழுது. ஓயாக அலைகள்‌ கட்டம்‌ மூன்றில்‌ மீட்டெடுத்த கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை கடற்கரையெங்கும்‌ போராளிகள்‌ தங்கள்‌ தங்கள்‌ ஒன்றுகூடும் இடங்களில்‌ ஒன்றுகூடியிருந்தனர்‌. வெவ்வேறு சமர்முனைக்காகவும்‌, சமர்முனையில்‌ வெவ்வேறு கடமைகளிற்காகவும்‌ பிரிந்து செல்லப்போகும்‌ போராளிகள்‌ விடைகொடுப்பதும்‌ விடைபெறுவதுமாக ஆரவாரித்திருந்தனர்‌. பெருங்கடலில்‌ அடித்துக்‌கொண்டிருந்த, அலைகளின்‌ இரைச்சல்‌ காதில்‌ விழுந்துகொண்டிருந்தது. அணிகள் தத்தமது கடமைகளிற்காக தமது கட்டளையாளர்களுடன்‌ பிரிந்தன.

பிற்பகற்‌ பொழுதில்‌ வரலாற்றுப் பதிவாகப்போகும்‌ தரையிறக்‌கத்திற்கான படைத்தொகுதிகள்  கடற்கரையில்‌ அணி திரண்டன. தரையிறக்கும்‌ மாட்சிமையான பணியை முடிக்கப்போகும் கடற்புலிகள் படகுகளோடு கடலிறங்கினர்‌. "தமிழ்‌ வீரம்‌ கடற்புலிகளின்‌ கையிருப்பாகும்‌" என்ற மெய்யுண்மை வரிகளுக்கு இந்த வீரச்சமர்‌ சாட்சி பகரும். தரையிறக்கும்‌ கலத்தொகுதிகள்‌, கடற்படையைத்‌ தடுத்து நிறுத்தும்‌ தாக்குதல் கலத்தொகுதிகளென தத்தமது அணித்தலைவர்‌களுடன்‌ கடற்புலிகள்‌ தமது கட்டளையாளர் கேணல் சூசையிடம்‌ விடைபெற்றுக்கொண்டு கடலிறங்‌கினர்‌.

தரையிறங்கும்‌ அணிகள்‌ உறுதிமொழி எடுத்து புறப்படத்‌ தயாரானபோது, செயற்கரிய சாதனை புரியப்போகும் அப்போராளிகளுடன் அச்சமர்முனைக் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் கூறிய இறுதிச் சொற்கள்,

"எதிரி ஆக்‌கிரமித்திருக்கிற எங்களுடைய யாழ்‌. மண்ணில்‌ மீண்டும்‌ நாங்கள காலடி வைக்கப்போகிறோம்‌. நாங்கள்‌ வெல்லப்பட முடியாதவர்கள்‌ என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப்‌ போகிறோம். புலிகள் யார் என்பதை எதிர்க்கு காட்டப்போகிறோம். இனி யாழ்‌ மண்ணை மீட்டெடுப்போம். புறப்படுங்கள்‌."

இந்த துலக்கமான சொற்களின் முடிவோடு நெஞ்சில்‌ புலிகளின்‌ தாகம்‌ நிறைய போராளிகள்‌ படகேறினர்‌.

நேரம்‌ பிற்பகல்‌ 6:40 வானம்‌ இருண்டு கொண்டிருந்தது. விரிந்த கடலின்‌ மேலே வானத்தில்‌ முகில்களின்‌ களங்கலின்றி பூத்துக்கிடந்த வெள்ளிகள் மிடுக்குடன் ஒளிர்ந்தன. மூத்த கட்டளையாளர் கேணல் பால்ராச்சும்‌, சோதியா, மாலதி படையணிகளின்‌ சிறப்புக் கட்டளையாளர்களான லெப். கேணல் துர்க்கா, லெப். கேணல் விதுசா ஆகியோரும்‌ சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராஜனும்‌ படகேறிய போராளிகளுடன்‌ கரையிலிருந்த போராளிகள்‌, கட்டளையாளர்களுக்கு கையசைத்து விடைபெற்றனர்‌. கடலலைகளைக்‌ கிழித்துக்கொண்டு கடற்படைக்கு அறைகூவிடும் கடற்‌புலிகளின்‌ தாக்குதல் கலத்தொகுதி உயரக் கடலேறின. மீண்டும்‌ யாழ்மண்‌ ஏகும்‌ புலியணிகளைச்‌ சுமந்த முதற்‌ படகுக்‌ கலத்தொகுதி அதன்‌ பின்னால்‌ நகரத்தொடங்கிற்று.

சமரின்‌ முதற்‌ சண்டையை எதிர்கொள்ளப்போகும்‌ சண்டைப்‌படகுகள்‌ சென்றுவிட்டன. தரையிறங்கும்‌ படகுகள்‌ நகர்கின்றன. தாழையடித்‌ தளத்தை தமதாக்கப்‌போகும்‌ புலிகள் சேனை தளத்தின்‌ அருகே ஒன்று கூடிவிட்டது. சேணேவிப் படையணிகள் தயார்‌ நிலையில்‌. வானூர்தி எதிர்ப்பு அணிகள்‌ தயார்நிலையில்‌. மருத்துவப்‌ பிரிவு ஆயத்தமாயிற்று. வாகனப்பிரிவு ஆயத்தம்‌. தொலைத்தொடர்பு கருவிகள்‌ பிசகின்றி இருந்தன. அனைத்தும்‌ சமரைச்‌ சந்திக்க எந்த நிமிடத்திலும்‌ தயார்‌ என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட நடவடிக்கை ஒருங்கிணைப்புக்‌ கட்டளையாளர் கேணல் பானு, நேரடியாக சமரை வழிநடத்த தன்‌ தளம்‌ வந்துவிட்ட தலைவருக்கு செய்தி அனுப்பினார்‌.

தாழையடித்‌ தளத்தில்‌ எதிரியின்‌ 'கதுவீ' ஏந்தனங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. கடலில்‌ 7 கிமீ நேரடிச்‌ சூட்டை வழங்‌கவல்ல தகரிகள் அங்கு நிறுத்திவைக்கப்பட்‌டிருந்தன. எதிரியின்‌ வழங்கல் கப்பல் தொடரணி இன்று செல்லவேண்டியிருந்ததால் வழமையைவிட கூடுதலான 'டோறா' படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. அவையும் 'கதுவீ' ஏந்தனங்களைத் தாங்கியிருந்தன. இத்தகைய வலுக்கொண்ட இருபக்க எதிர்ப்பை முறியடித்து ஆயிரக்கணக்கிலான எமது போராளிகளை தரையிறக்கும் மாபொறுப்பு கடற்புலிகளின் கையில் இருந்தது. 

எதிரியின் உயர் கட்டளைப்பீடத்தைப் பொறுத்தவரை இவ்வாறான ஒரு தரையிறக்கம் புலிகளின் வலுவிற்கு ஏலாது என்றே திடமாக நம்பியிருந்தான். அவ்வாறு புலிகள் முயற்சித்தலும், புலிகளின் அணிகள் தமது தாக்குதல் முற்றுகைக்குள் அகப்பட்டுக்கொள்ளும் என்பதே அவர்களின் பொதுவான கணிப்பாக இருந்தது. ஏனெனில்‌ ஒரு படையவலயத்திற்குள் தாக்குதல்‌ அணிகளுக்கான வழங்கல் வழிகளுக்கு வாய்ப்பில்லை என்பதே அதன்‌ அடிப்படைப வலுவீனமாகும்‌. ஆனால் எதிரி நினைப்பதைச்‌ செய்வது சமரின் உத்தியல்லவே. தலைவர்‌ சொல்வதுபோல்‌, "எந்தவொரு பலத்திலும்‌ ஏதாவதொரு பலவீனம்‌ இருக்கவே செய்யும்‌. அதைச் சரியாகக் கண்டறிந்து திட்டமிட்டுத் தாகுவதில்தான்‌ வெற்றியின்‌ ரகசியம்‌ தங்கியிருக்கிறது." கடலில்‌ முன்னேறிய தரையிறங்கும்‌ படகுகளுக்கு இரு மணிநேரம் அமைதியான நகர்வில்‌ கழிந்தது. இரவு 8:30ற்கு எமது நகர்வைக்‌ கண்டுவிட்ட எதிரி கடலில்‌ சண்டையைத்‌ தொடக்கினான்‌. இம்முறை ஓயாத அலைச்சமர் அலைகளின்‌ நடுவே தொடங்கிற்று.

கடலைக் கிழித்து படகுகள்‌ சுழன்றன. வானத்தில்‌ நெருப்புக்கோளங்கள்‌ பறந்தன. கடற்புலிகளின்‌ ஆண்‌,பெண்‌ போராளிகள் உள்ளடங்கிய தாக்குதல்‌ கலத்தொகுதிகள்‌ எதிரி டோறாக்களை முன்னேறவிடாது வியூகம் வகுத்து வீரச்சமர் புரிந்தன. 16 டோறா விரைவுத் தாக்குதல் படகுகள் சூழ்ந்துகொண்டு தாக்குதலில்‌ ஈடுபட்டன. உயரக் கடலில் எதிரியின்‌ கட்டளைக்‌ கப்பல்‌ இயங்‌கிக்கொண்டிருந்தது. கடல்‌, வேட்டொலிகளால்‌ அதிர்ந்துகொண்டிருந்தது. பரந்துவிரிந்த கடற்பரப்பில்‌ எம் வலுவெதிர்ப்பு வியூகத்தை உடைத்து முன்னேற எதிரிப்‌ படகுகளின் வியூகமும்‌, எதிரியின்‌ வியூகத்தைப்‌ புரிந்துகொண்டு தாக்குதல்‌ முறியடிப்பில்‌ ஈடுபடும்‌ எமது வியூகமும் என மாறிமாறி இரு தேசத்தின் கடற்படைகள்‌ ஒரு பெரும்‌ சமரில்‌ மோதிக்கொண்டன. கட்டளையாளர் கேணல் சூசை கடற்சமரை வழிநடத்தினார்‌. தரையிறங்கு படகுகள்‌ தாழையடித்‌ தளத்தை சமாளித்தவாறு எமது தாக்குதல்‌ படகுகள்‌ வகுத்த வலுவெதிர்ப்பு வியூகத்தின்‌ உள்ளே முன்னேறிக்கொண்டிருந்தன. இரவு 8:45இற்கு முதற் கலத்தொகுதி தரையிறங்‌கியது, கட்டளையாளர் கேணல் பால்ராச்சுடன்‌. 

இப்பெரும்‌ சமரின் மூலவழிவகை நகர்வு இத்தரையிறக்கல்‌ நடவடிக்கைதான்‌. தரையிறங்கும்‌ படைத்தொகுதிகள்‌ கண்டிவீதி வரை முன்னேறி நிலையெடுத்துக்கொள்ளும்‌. தேவையேற்படின்‌ கிளாலிவரை அது மேலும்‌ முன்னேறும். இதன் வெற்றிகரமான செயற்பாட்டின்‌ மூலம்‌ எதிரிக்கு நாம்‌ தம்மைச்‌ சூழ்ந்துகொள்வதைப்‌ புரிய வைப்பதுடன்‌, எதிரியின்‌ வழங்கலிற்கு உறுதியான ஒரு நெருக்கடியை உருவாக்குவதே இச்சமர்முனையின்‌ நோக்கமாகும்‌.

எமது இச்சமர்‌ முனையின்‌ பணி வெற்றிகரமாக முடியும்போது, எதிரி ஆனையிறவில்‌ நிலைகொள்வது ஏலாதுயென்பதைப்‌ புரிந்துகொள்வான். எனவே, தனது வலு முழுவதையும்‌ திரட்டி தரையிறங்கிய இப்படைத்தொகுதியை தகர்த்‌தழிப்பதிலேயே ஆனையிறவின்‌ தக்கவைப்பை அவனால்‌ ஏலுமாக்க முடிவும்‌, யாழ்ப்பாண வல்வளைப்பை தக்கவைக்க முடியும்‌. இதை நிறைவேற்றாமல் எதிரியால் ஆனையிறவையோ, யாழ்ப்பாணத்தையோ, அதன்மீது கட்டப்பட்ட அரசியலையோ தக்கவைக்க முடியாது. இதேபோல, எதிரி ஏவல்செய்யப்போகும் மிகப்‌ பயங்கரமான வலுவை தரையிறங்கிய எமது படைத்தொகுதிகள் முறியடிக்காமல்‌ ஆனையிறவின்‌ வெற்றியையோ யாழ்ப்பாணத்தின்‌ மீட்பையோ எம்மால் ஏலுமாக்க முடியாது. வல்வளைப்பின் வெற்றியையோ, மீட்பின்‌ வெற்றியையோ தீர்மானிக்கும்‌ சமர்க்களமாக தரையிறங்கிய அணிகள்‌ நிலைகொண்ட இத்தாவில்‌ நிலம் மாறவேண்டியதாயிற்று. இதனால்‌ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ வரலாறு கண்டிராத சமர் பின்னர் அங்கு நடந்தேறியது.

அடிவானில்‌ குரியன்‌ எழுந்தபோது தரையிறங்கும் கலத்தொகுதிகள் ஓரளவிற்கு தமது பணியை முடித்தன. காலை 10 மணிக்குள் முழுவதுமாக தரையிறக்கம் முடிந்தது. கடற்புலிகள்‌ தமது போராற்றலைப்‌ புரியவைத்து மாட்சிமையான அந்த தரையிறக்கத்தை வெற்றிகரமாக செய்துமுடித்தனர். எதிரியின்‌ கட்டளைப்‌பீடம்‌ நிகழ்வதை அறியாது நிலைதடுமாறியது. குடாரப்புவில்‌ தரையிறங்கிய அணிகள்‌ எதிரியின்‌ சிறுமுகாமைத்‌ தாக்கியழித்தன. இருபது படைச்சடலங்களைக் கைப்பற்றி சிறுமுகாமைத் தகர்த்தழித்ததோடு, புலியணிகள் யாழ்‌ மண்ணில்‌ ஏறி நடந்தவாறு கண்டி வீதிக்கு முன்னேறின. தரையிறக்கத்தின்‌ முதல்‌ வித்தாகிய மாவீரர்கள்‌ வரலாற்றில்‌ பெருமைமிக்க சாட்சியமாய் அவ்விடத்தில்‌ விதைக்கப்பட்டனர்‌. 

Map showing Ithavil Box. Around 700 SLA were killed inside the box and the ltte captured around 100 SLA corpses. 5 tanks were destroyed inside and another 8 were damaged

'இத்தாவில் பெட்டியைக் காட்டும் வரைபடம் | அந்த வாய் மாதிரி விரிந்திருக்கும் பக்கம்தான் வடமராட்சி இருக்கிறது. அந்த நாக்கின் நுனி போன்ற நுனி இருக்கும் இடம்தான் இத்தாவில் மற்றும் இந்திரபுரம். நடுவால் போகும் கோடுதான் கண்டி வீதி. | படிமப்புரவு: "சிறப்புப் பார்வை: ஆனையிறவு முடிவில் ஒரு விடியல்", நிதர்சனம் '

விடிந்தபோது குடாடாரப்பிலிருந்‌து கண்டிவீதி வரையான ஒரு நீள் பரப்பு எம்மால்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவரப்பட்டது. அன்றைய விடியற்‌பொழுதில்‌ எமது வரவை எதிர்பாராமல்‌ திடீரென கண்டு ஐயப்பட்ட மக்கன்‌ பின்‌ பெண் போராளிகளைக் கண்டு புலிகளென உறுதி செய்த பூரிப்பில்‌ கட்டியணைத்‌ முத்தமிட்ட அந்த அலாதியான உணர்வு அந்தப் போராளிகளால்‌ மட்டுமே புரிந்துகொள்ளக்‌ கூடியது. போராளிகள் மக்களிடம்‌ சண்டை நடக்கப்போவதாகக்‌ கூறி இங்கிருந்து வெளியேறுமாறு வேண்டிக்கொண்டபோது தம்மிடமிருந்து உணவுகளைக்‌ கொண்டுவந்தும்‌, கெதியாக உணவு தயாரித்து கொண்டோடிவந்து பரிமாறியபோது ஐந்து ஆண்டுகளின்பின்‌ மெய்சிலிர்த்துப்‌ போவது போராளிகள்‌ மட்டுமல்ல எங்கள்‌ நிலமும் தான்‌. அந்த உணவுகள் எம்‌ போராளிகளுக்குப்‌ போதுமானதா என்பதல்ல முக்கியம்; எம்‌ உணர்வுகளுக்கு உயிர்‌ உள்ளவரை போதுமானது. பெற்றுக்கொண்டதும்‌ கொடுத்துக்கொண்டதுமான அந்த உணர்வுகள்‌ மறக்கமுடியாத ஆழ்பதிவுகள்‌ எமக்கு.

இந்த மூலவழிவகை நகர்வின்‌ வெற்றி என்பது அதற்கேற்படுத்தப்போகும்‌ வழங்கல் பாதையில்‌ தங்கியிருந்தது. தரையிறங்கிய படைத்தொகுதிகளின்‌ உறுதியான நிலையெடுப்பிற்கு அவற்றுக்கான தரைவழி வழங்கலை ஏற்படுத்துவதே தேவையாகும். தாழையடி, செம்பியன்‌பற்று படைத்தளத்தை ஒருசில நாட்களில்‌ தகர்த்தழித்து, வெற்றிகொண்டு தரையிறக்கிய படைத்‌தொகுதிகளுக்கு, தரைவழி வழங்கல் பாதையை ஏற்படுத்‌தாதுவிடின்‌, எதிரி, எப்படி புலிகளுக்கு இப்படியான ஒரு தரையிறங்கல்‌ நகர்வு ஏலாதுயென எண்ணினானோ, புலிகள்‌ அப்படி முயற்சித்தால்‌ எப்படி அது முடியுமென நம்பினானோ அது நடந்து விடும்‌ பேரிடர் இருந்தது. கேள்விக்கிடமற்ற உறுதியான, உடனடியான வெற்றியை ஈட்ட வேண்டிய சமர்முனையாக கட்டளையாளர் கேணல் தீபன்‌ வழிநடத்தும்‌ தாழையடி செம்பியபன்பற்று முனை இருந்தது.

இவ்விரு சமர்முனைகளின்‌ வெற்றிகரமான இயக்கம்‌, யாழ்‌ குடாநாட்டிற்கு எதிரி அமைத்த புவியியல்‌ அடிப்படையிலான வியூகத்தைப்‌ பொடிப்பொடியாக சிதறடிக்கும்‌. ஆனையிறவுத்தளம்‌ ஆணிவேரை இழக்கும்‌. எதிரியின்‌ வியூகத்தின்‌ முதலுடைப்பே முடிவிற்கான ஆரம்பமாக அமைவதாக ஓயாத அலைகள்‌-03 வடபோர்முனை கட்டம்‌- 4 இன்‌ திட்டம்‌ தலைவரால்‌ தீட்டப்பட்டிருந்தது. இத்தகைய மிக நுட்பமான திட்டமிடலின்‌ நிறைவேற்றல்‌ பேரிடரின் மையத்தில்‌ நின்று அறைகூவல்களை எதிர்கொண்டு சாதிக்கவேண்டியிருந்ததால்‌ இத்தாக்குதலுக்கான பயிற்சி நடவடிக்கைகளைக்கூட தலைவர்‌ நேரடியாக போராளிகளுடன்‌ நின்று கண்காணித்து வந்தார்‌.

தரையிறங்கிய அணிகள் திட்டத்தின்படி கண்டி வீதிவரை முன்னேறி நிலையெடுத்துக் கொண்டதும்‌, தாழையடி தளம்‌ மீதான தாக்குதல்‌ 27ம்‌ திகதி காலை தொடங்கிற்று, லெப். கேணல் விநோத்தின்‌ தலைமையில்‌. ஆண்‌,பெண்‌ அணிகளைக்கொண்ட கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி காலை 6:00மணிக்கு எதிரித் தளம்மீது பாய்ந்தது. இத்தளத்தின்‌ முக்கியத்துவம் கருதியும், எமது தாக்குதலை எதிர்பார்த்தும்‌ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எதிரியின்‌ முன்னணிப்‌ படைப்‌பிரிவான 53வது படைப்‌பிரின்‌ அதிரடிப்படையினர், பாய்ந்த புலியணிகளை எதிர்கொண்டனர்‌.

சண்டை மிகவும்‌ உக்கிரமானதாக இருந்தது. சிறப்புப்‌ பயிற்சிபெற்ற இரு தேசங்களின்‌ அணிகளுக்கிடையேயான சமர் அது. மிக வலுப்படுத்தப்பட்ட அரண்களையும்‌, பின்னணியில்‌ வலுவான கட்டிடத்‌ தொகுதிகளையும்‌ கொண்டிருந்த எதிரியால்‌ எமது தாக்குதலை ஓரளவு தாக்குப்பிடிக்கக்‌ கூடியதாக இருந்தது. ஆனால்‌, எதிரிக்‌ குகையில்‌ ஊடறுத்து நிலையெடுத்திருக்கும்‌ எமது அணிகளுக்கான தரைவழித்‌ தொடர்பை அடைத்துநிற்கும்‌ இத்தளத்தை அழிக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்த போராளிகள்‌, அந்த கடுமையான போரரங்கில்‌ சண்டையிட்டார்கள்‌. அன்றைய சண்டையில்‌ 1200 மீ. தொலைவை மீட்டெடுத்த எமதணிகள்‌ அன்றைய நாளில்‌ 400 மீ. ஐ மீண்டும்‌ இழக்கவேணடியளவிற்கு சண்‌டை உக்கிரம்‌ பெற்றது. எதிரியின்‌ முறியடிப்பு முயற்‌சி தீவிரம்பெற்றிருந்ததால்‌ மீட்ட பரப்பை தக்கவைத்தபடி சண்டையை நிறுத்திய கடளையாளர் கேணல் தீபன்‌ அடுத்தகட்ட சண்டைக்கான மீளொழுங்குபடுத்தவில்‌ மறுநாள்‌ தாக்குதலணிகளை ஈடுபடுத்தினார்‌. அன்று நிலையையை அறிவதற்காக தொடர்பு கொண்ட கட்டளையாளர் கேணல் பால்ராஜ்‌ அவர்களிடம்‌,

"நாளைக்கு விடிய பாதை திறப்பை முடிச்சு உங்களுக்கு வழங்கல் அனுப்பி வைப்போம்‌"

என்று உறுதியுடன்‌ கூறிய கட்டளையாளர் தீபன்‌ மறுநாள்‌ 29ம்‌ திகதி அதிகாலை 2:30 மணிக்கு எதிரியின்‌ சமர்வலுவை உணர்ந்து கொண்டு புதிய தாக்குதல்‌ உத்திகளோடும்‌ துலக்கமான முடிவோடும்‌ இரு முனைகளூடாக படைத்தொகுதிகளை முன்னேறக்‌ கட்டளையிட்டார்‌.

ஒவ்வொரு காவலரணின்‌ வெற்றிக்கும்‌, தோல்விக்கும்‌ சமராடுபவரின் வீரமே விடையளிப்பதாய்‌ இருந்தது. கடற்புலிகளின்‌ படைத்தொகுதி அந்த கடற்தளத்தை மீட்பதற்காக பொறுமையாக முன்னேறி எதிரிகளைப்‌ பிந்தள்ளிச் சென்றது. இதேவேளை மேலதிக அணியாக தளத்தின் மறுபுறமாக லெப். கேணல் சேகரின்‌ தலைமையில்‌ லெப். கேணல் அறிவின்‌ புலனாய்வுத்துறை தாக்குதலணி உள்ளிட்ட ஒரு படைத்தொகுதி மருதங்கேணியை நோக்கி முன்னேற எதிரி தனது முழுமையான தோள்வியை அத்தளத்தில் அடைந்தான்‌. எஞ்‌சிய எதிரிகளை மருதங்கேணி பாலங்கடத்து ஓடச்செய்த அவமானத்தை புலிவீரம்‌ பகைக்குப்‌ பரிசளித்தது. 

எதிரி வீரர்கள்‌ தமது இயலாமையின்‌ முடிவை நெருங்கியபோது மக்களையே கேடயமாக்கத்‌ துணிந்தார்கள்‌. தளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்களுள்‌ குடும்பத்தவர் ஒருவர்‌ கூறினார்,

 "சண்டை தொடங்கியதுமே நாங்கள்‌ வெளியேறக்‌ கேட்டோம்‌. அவர்கள்‌ தடுத்தார்கள்‌. நாங்கள்‌ மன்றாடியபோதும்‌ அவர்கள்‌ மனமிரங்கவில்லை, இறுதியில்‌ எம்மை வைத்தியசாலைக்கு முன்பாக போயிருக்குமாறு பணித்தார்கள்‌. குழந்தைகளுடன்‌ நாம்‌ அங்குபோயிருந்தோம்‌. சற்றுநேரத்தில்‌ அப்பரப்பால் தப்பியோடிய படையினர் மருதங்கேணிப்‌ பாலத்தைக்‌ கடந்திருக்கக்கூடிய நேரத்தின்‌ பின்னர்‌ எங்களை இருத்திய இடத்திற்கு குறிதவறாது செல்களை ஏவினார்கள்‌. குழந்தைகளும்‌ நாங்களும்‌ கதறக்‌ கதற செல்கள்‌ எமக்குள்‌ வீழ்ந்தன, பலர்‌ காயமடையச்‌ சிலர் செத்துப்‌ போனார்கள்‌”

என்று கூறிய அவர்‌ ஆத்திரம்‌ மேலிட,

"நீங்கள்‌ அந்த மருதங்கேணிம்‌ பாலத்தை உடைச்சு அவங்கள்‌ முழுப்பேரையும்‌ உள்ளுக்கவைச்சே முடிச்சிருக்க வேணும்‌"

என்று உணர்ச்சிவசப்பட்டார்‌.

கட்டைக்காடு தொடக்கம்‌ தாழையடி வரையிலான ஒரு நீண்ட நிலப்பரப்பில்‌, கடல்‌ சார்ந்துவாழ்ந்த மக்களினது வாழ்வில்‌ துயரத்தை சுமத்தியிருந்த எதிரிகளின்‌ வாழ்வு செழிப்பானதாக இருந்திருக்கலாம்‌, கடலின்‌ வளத்தை கடினமான உழைப்பால் பெற்று, உயர்ந்த பண்பாட்டு வளத்தை கட்டிவளர்த்த மக்கள்‌ இடம்பெயர்ந்து ஏதிலிகளாக தொண்டர்‌ நிறுவனங்கள் கொடுக்கும்‌ கூரை விரிப்பில்‌ வாழ்ந்த வரலாற்றுத்‌ துயரம்‌ பயங்கரமானது. நிலத்தில்‌ தனது குடும்பத்தின்‌ செழிப்பான வாழ்வைத்‌ தெரியாது வெள்ளை கொட்டகைகளின்‌ கீழ் பிறந்த குழந்தைகளின்‌ துயரம்‌ பட்டுணர்ந்தவர்‌ மட்டுமே புரிந்துகொள்ளக்‌ கூடியது. துயரங்களை எமக்குப்‌ பரிசளித்த அந்தப்‌ பகைவர்களை வென்று எம்‌ நிலம்‌ மீட்டதில்‌ போராளிகளின்‌ பெருமிதம்‌ பெரியது; எல்லையற்றது. அந்த மக்களின்‌ வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்ததன்‌ மகிழ்வு இழப்பின்‌ துயரத்தைவிட வலிமைமிக்கது.

யாழ்‌ நகரின்‌ நுழைவாயிற்‌ கோட்டை ஒன்றை தகர்த்தழித்து, தரையிறங்கிய எமது படைத்தொகுதிகளுக்கான வழங்கல் பாதையில்‌ லெப். கேணல் விதுசாவின்‌ படையணியுடன்‌ இணைந்துகொண்டன முன்னேறிய கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணிகள்‌. அப்போது நேரம்‌ காலை 8.30.

இத்தளத்தின்‌ வீழ்ச்சியோடு ஆனையிறவு இயக்கச்சித்தளப் படையினர் மூன்று திசைகளால்‌ தான்‌ சூழப்பட்டுவிட்டதை உணர்ந்தது. மறுதிசை கிளாலி கடல்‌ நீரேரியைக்கொண்டது. இப்போது கிளாலியை அண்டிய சிக்கலானதும்‌, உறுதியற்றதும்‌, எமது அச்சுறுத்தலுக்குள்ளானதுமான ஒரு வீதியையே நம்பிக்கையற்ற நிலையில்‌ படையினர் பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.

28-3-2000. Srilanka's operation to recapture.jpg

'ஏ9 இல் புலிகள் ஊடறுத்து நிலைகொண்டுள்ள இடத்தை மீண்டும் கைப்பற்ற மார்ச் 28 அன்று சிங்களவன் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையின் நகர்வு திசைகளைக் காட்டும் வரைபடம். | படிமப்புரவு: "சிறப்புப் பார்வை: ஆனையிறவு முடிவில் ஒரு விடியல்", நிதர்சனம் '

28ம் திகதி பகல்‌, தரையிறங்கிய எமது படைத்தொகுதியின்‌ மீது எதிரி தொடுத்த தாக்குதலை மிகயெளிதாக எமது அணிகள்‌ முறியடித்தபோது எதிரி கண்டிவீதியில் நிலை கொண்டிருக்கும்‌ எமது படைத்தொகுதிகளின்‌ வலுவை ஓரளவு உணர்ந்துகொண்டிருக்க வேண்டும்‌. சமர்‌ தொடங்கிய அன்றைய இரவே பளைப்‌ பரப்பில் நிலைகொள்ள வைக்கப்பட்டிருத்த எதிரியின்‌ சேணேவித்தளங்கள்‌ எமது கரும்புலிகள்‌ அணியால்‌ தகர்த்தழிக்கப்பட்டது.

இத்தகைய எமது தாக்குதலை எதிரி பலமுறை சந்தித்ததால் மிக வலுவாகவும், விழிப்பாகவும் தெறோச்சிகளுக்கான காப்பை ஏற்படுத்தியிருந்தான். ஆனால் தம்‌ உயிரைக்‌ கொண்டு எதையும்‌ உடைக்கத்துணிந்த கரும்புலிகளின் முன்னால்‌ எதிரியின்‌ காப்பு ஏற்பாடுகள்‌ ஒரு பொருட்டாக இருக்கமுடியாதே!

மக்கள்‌ வாழ்ந்த பரப்பில் நிலைகொள்ள வைக்கப்பட்ட சேணேவித்தளத்தை அகற்றுமாறு கோரி யாழ்‌. மக்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் செய்தனர்‌. அதற்கெல்லாம்‌ அசைந்துகொடுப்பதா வன்வளைப்புத்தனத்தின் பண்பு. அதை இப்போது துடைத்தழித்து அகற்றினர்‌ இத்தேசத்தின் புதல்வர்கள்- கரும்புலிகள்‌. இதற்காய்‌ மேஜர் சுதாஜினி, மேஜர் தனுசன் எ மாருதியன்‌ ஆகிய இரு கரும்புலி வீரர்கள்‌ தமது உயிர்களை காணிக்கையாக்கினர்.

இந்த சேணேவித்தளத்தின் தகர்ப்பால்‌ எமது தாக்குதலை முறியடிப்பதற்கான எதிரியின்‌ முயற்‌சி வலுவீனமடைந்தது. அதன்மீதான முறியடிப்புத்‌ தாக்குதலுக்குப்‌ போதுமான சூட்டாதரவை அவர்கள்‌ பெறமுடியாது சிக்கலுக்குள்ளாக்கினர்‌.

எதிரியின்‌ கட்டளைப்பீடம்‌ நிலைமையின்‌ இறுக்கத்தையும்‌, எமது தாக்குதலின்‌ நோக்கத்தையும், தரையிறங்கிய படைத்தொகுதியின்‌ வலுவையும்‌ மதிப்பீடு செய்துகொண்டது. உடனடியாக தரையிறங்கிய எமது படைத்தொகுதிகள் மீது தாக்குதலை நடாத்தி, கண்டிவீதியை கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ கொண்டுவந்து தரையிறங்‌கிய எமது படைத்தொகுதிகளை முறியடிப்பதே தனக்கு இருக்கும்‌ ஒரே வழியென்பதை எதிரி புரிந்துகொண்டான்‌. இதன்‌ பின்தான்‌ எமது வரலாறு காணாத சமர்க்களம் இத்தாவில்‌ கண்டிவீதியில்‌ நிகழ்ந்தது.

30ம் திகதி காலை 6.30 மணிக்கு எதிரி தகரிகள் ஒருங்கே பெருமெடுப்பில்‌ முன்னேறினான்‌. 15,000 படையினரின் உயிரிற்கு மட்டுமல்ல யாழ்ப்பாண வல்வளைப்பிற்கே தேவையாயிருந்த கண்டிவீதியின்‌ ஒரு குறித்த பரப்பினுள் மிகக்‌ கடுமையான சமர் நிகழ்ந்தது. எமது வியூகத்தை உடைப்பதற்கு எதிரி பெருமெடுப்பிலான வலுவை எம்மீது செலுத்தினான்‌. இரு நாட்களில் மட்டுமே ஆயத்தப்படுத்தப்‌பட்ட நிலைகளிலிருந்து எமது போராளிகள் போரிட வேண்டியிருந்தது. சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணி எதிர்கொண்ட சண்டைக்கு அதன்‌ சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராஜன்‌ தலைமை தாங்க மூத்த கட்டளையாளரான கேணல் பால்ராஜ் இதனை வழிநடாத்தினார். எமது வியூகத்தை எதிரி உடைப்பதும்‌ மீள அதை முறியடிப்பதுமாக அத்தக்‌ கடுஞ்சமர்‌ தொடர்ந்தது. இரவு 7:00 மணிவரை உக்கிரமாக நீண்ட சமரில்‌ ஒரே காவலரண்கள் பலதடவை மாறிமாறி இருவர்‌ கைகளிலும்‌ வீழ்ந்தன. இழக்கத்‌ தயாரில்லாத புலிகளும்‌, விடத்‌ தயாரில்லாத படையினரும் மோதிக்கொண்ட சமரின் இறுதியில்‌ புலிவீரத்தின் சான்றாய் அன்றைய களத்தில் படையினர் புறமுதுகிட்டனர். ஆனால்‌, அதற்கான காணிக்கையும், உறுதியும்‌ நிறைந்த போராளிகளின்‌ செயல்வீரம்‌ மாட்சிமையானது.

அன்று நடந்த சண்டையில்‌ ஒவ்வொரு போராளியினதும் உணர்வும்‌ சொல்லிப்‌புரியவைக்கக்‌  கூடியதல்ல, அங்கு நடந்த சம்பவங்கள்‌ ஒவ்வொன்றுமே, மெய்சிலிர்க்கவைக்கும்‌ வரலாற்றுப் பதிவுகள்‌. அவற்றைப்‌ பட்டியலிடுவது நோக்கமல்ல. ஆயினும்‌ புரிந்து கொள்வதற்காக ஒரு சம்பவம்‌. அன்றைய நாளில், ஒருதடவை இழந்துவிட்ட இலகு இயந்திரச் சுடுகல வீரனின்‌ காவலரணை நாம்‌ திருப்பி மீட்க அணிகள் கடுமையாகச்‌ சண்டையிட்டன. நீண்ட முயற்சியின்‌ பின்‌ அவ்வரண்‌ மீட்கப்பட்டபோது அவனுக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்த 2000 சன்னங்களும் சுட்டுத்‌ தீர்ந்துபோயிருந்தது. தன்‌ உயிரின்‌ இறுதி மணித்துளிவரை அவன்‌ போராடினான்‌, இறுதியில் வென்றான்‌. அவனது நிலைக்கு முன்னால்‌ 60 எதிரியுடல்கள்‌ வீழ்ந்து பரவிக்கிடந்தன. நூற்றுக்கணக்கானவர்கள்‌ காயமடைந்திருக்கக்கூடும்‌. அந்த ஆற்றல்‌மிக்க போராளி மீண்டுவந்தபோது எதிரியின்‌ தோல்விக்கான காரணம்‌ விளங்கிற்று. ஒரு காவலரணுக்காக எதிரி எடுத்த முயற்சியும்‌ கொடுத்த இழப்பும்‌ சண்டையின்‌ உக்கிரத்தை விளங்கவைக்கும்‌. இதை எப்படியான வீரத்தால் வெட்டிச் சாய்க்க வேண்டியிருந்தது என்பதற்கு சான்றாய்‌ இப்படியான சாதனைச்‌ சம்பவங்கள்‌ சண்டையில்‌ நடந்துகொண்டிருந்தன. சண்டையின்‌ முடிவில்‌ 250 படையினர் கொல்லப்பட 700 வரையான படையினர் காயமடைய ஏறத்தாழ ஆயிரம்பேரை இழந்த எதிரி அன்றைய நீண்ட சண்டையில்‌ தோல்வியைச்‌ சந்தித்தான்‌.

இச்சமரின்‌ முதற்கட்ட திட்டங்கள்‌ வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிரி சந்தித்த பேரிழப்பும்‌ மீளொழுங்குபடுத்தலில்‌ அவனுக்கு இருக்கக்கூடிய இடையூறுகளையும்‌ கருத்திற்கொண்டதுடன், கண்டி வீதியில்‌ அவன்‌ தன் வலுவை ஏவல்செய்யமுன் ஆனையிறவின்‌ பக்கவாட்டாக முகாவில் பரப்பு முன்னணிக் காவலரண்களைத்‌ தகர்த்து, ஆனையிறவையும்‌ இயக்கச்சியையும்‌ பிளந்து தாக்குதலில்‌ ஈடுபடுதற்கான சண்டை 1ம்‌ திகதி அதிகாலை 1:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

சண்டையில்‌ எதிர்பார்த்ததை விடவும்‌ எதிரியின்‌ எதிர்ப்பு செறிவானதாகவும்‌ உறுதிமிக்கதாகவும்‌ இருந்தது. தாழையடி தளத்திலிருந்து பின்வாங்கிய படையினரும் இதில் சேர்ந்துகொண்டதால்‌, செறிவாக்கப்பட்டு எமது தாக்குதலை எதிர்பார்த்திருந்த எதிரி கடுமையான எதிர்ப்பைக்‌ காட்டினான்‌. காவலரண்களைத்‌ தகர்த்தழித்தபோதும்‌ மேற்கொண்டு எம்மால்‌ முன்னேற முடியாமல்‌ போனது. அன்றைய சண்டையில்‌ லெப். கேணல் பரிபாலினி உட்பட 60 போராளிகள்‌ தமது உயிரை ஈகம் செய்தனர்‌. எதிரிக்கு இழப்பைக் கொடுக்க முடிந்தாலும்‌ எமது இலக்கை இதில்‌ அடையமுடியவில்லை. ஆனால், இந்நடவடிக்கையே பின்னர்‌ ஆனையிறவுத் தளத்தை குறைந்த ஆளணி இழப்போடு வெற்றி கொள்வதற்கு வழிவகுத்தது எனலாம்‌.

இத்தாக்குதல்‌ முயற்சியின்‌ பின்‌ படைகளை மீளொழுங்குபடுத்‌தி மாற்றுத்‌ திட்டத்தோடு மீண்டும்‌ ஒரு தந்திரவழிவகை நகர்வைச்‌ செய்வதற்கு, களத்தில்‌ எமக்கு குறுகிய கால அமையம் தேவைப்பட்டது. ஆனால்‌ இந்தக்‌ கால தேவையே எதிரிக்கு கண்டிவீதியில்‌ நிலைகொண்டிருக்கும்‌ எமது படைகளை முறியடிப்பதற்கான சமயமாக எதிரி பயன்படுத்திக்கொண்டான்‌. எதிரியின் பார்வையும்‌ கண்டிவீதியில்‌ நிலைகொண்டிருக்கும்‌ எமது அணிகள்‌ மீது திரும்பியது.

02ம்‌ திகதி 'வலிசக்கர' என்ற பெரும்‌ படை நடவடிக்கையை எதிரி கண்டி வீதியில்‌ நிலைகொண்ட எமது படைத்தொகுதிகள்‌ மீது தொடுத்தான்‌. இருநாட்களின் முன்‌ 31ம்‌ திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தகரிகளோடு கண்டிவீதியில்‌ தாக்குதலில்‌ ஈடுபட்ட எதிரிகளை எதிர்கொண்ட சோதியா படையணிப்‌ போராளிகள்‌ வெற்றிகரமாக அதை முறியடித்திருந்தனர்‌. அதன்‌ தோல்வி, மிகப்‌ பெருமளவிலான கவசப்படையின் வலுவுடன்‌ நான்காம்‌ முறையான முயற்சியை முழுமைப்படுத்தப்பட்டதும்‌, உறுதிப்பாட்டான வெற்றியை அடையக்ககூடியதுமான ஒரு தந்திரவழிவகை முயற்சியாக அமைக்க எதிரியைத்‌ தாண்டியது.

நீரேரியை அண்டியுள்ள பரப்பியின் குடாநாட்டுத்‌ திசையிலிருந்து தகரிகளைப் பயன்படுத்தியும்‌, அதேநேரம்‌ ஆனையிறவுப்‌ பரப்பிலிருந்து கவசவூர்திகள் ஒருங்கே முன்னேறிவந்த எதிரி ஊடறுத்திருந்த எமதணிகளையே ஊடறுத்து, தனிமைப்படுத்தி முற்றுகைத்‌ தாக்குதலுக்கு உட்படுத்த விரும்பியிருக்க வேண்டும்‌. அப்படியே எமது வலுவை மதிப்பிட்டு பலமடங்கு மேலான வலு ஏவலைச்செய்து எமது நிலைகளை ஊடறுத்து எதிரி உள்நுழைந்தான்‌. இத்தகைய தாக்குதலை ஏற்கவே எதிர்பார்த்திருத்த எமதணிகள்‌ உள்நுழைந்த எதிரியை தமது வியூகத்திற்குள்‌ சிக்கவைத்து சண்டையைத்‌ தொடக்கினர்‌. கேணல் பால்ராஜ்சின்‌ வழிநடத்தலில்‌ பகல் 12:00 மணி தொடக்கம்‌ இரவுவரை நீடித்த, இந்தச்‌ சமரில்‌ ஒரு படைக்காவியும்‌ ஒரு தகரியும் அழிக்கப்பட்டது. ஆறு தகரிகள் சேதமடைத்தன. இரு பவள்‌ கவசவூர்திகள்‌ கைப்பற்றப்பட்டன. எதிரி கால்வைத்த இடமெல்லாம்‌ பல திசைகளாலும்‌ தாக்கப்பட்டான்‌. மிகநெருக்கமாக, எதிரியை எதிர்கொண்டு தமது துணிச்சலால்‌ எதிரியைத்‌ திணறடித்தனர்‌ போராளிகள்‌. புலிகளின்‌ தாக்குதல்‌ பரப்பிற்குள் நுழைந்துவிட்ட எதிரியும்‌ அவனது கவசவூர்திகளும் செய்வதறியாது திணறிய காட்சிகள்‌ களத்தில்‌ நிகழ்ந்தேறின. சண்டையின்‌ உக்கிரத்தில் சன்னம் முடிந்துபோயிருந்த பெண்‌ போராளியின்‌ நிலைக்குள் பாய்ந்துகொண்டான்‌ ஒரு சிங்கள வீரன். அவனது துவக்கையே பறித்து அவனையே சுட்டுவீழ்த்தி விட்டு அடுத்த எதிரிக்காக காத்திருந்தாள் அந்த பெண்புலி. மற்றொரு இடத்தில்‌ எறிகணையால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினாள் இன்னொரு பெண்புலி. இப்படி எவரும் எதிர்பாராத மிக நெருகிய சண்டையில்‌ எதிரி தோற்கடிக்கப்பட்டான்‌.

அன்றைய நாள் மட்டும் 60 படையினர் உடல்கள் எம்மால்‌ கைப்பற்றுப்பட்டன. நூற்றுக்கணக்கான படையினரை எதிரி இழந்திருந்தான். எமது போராளிகளை நிலைகுலையச் செய்யும்‌ எதிரியின் தந்திரவழிவகை பலிக்காமல்போக, எதிரியையே அந்நிலைக்கு உள்ளாக்கினர் எமது போராளிகள்‌. அந்தச்‌ சண்டைபற்றி சமரின்‌ ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு கூறினார்‌,

"அன்றைய இரவை மூன்று மணித்தியாலம் பிற்போட்டிருக்க முடிந்திருந்தால்‌ முன்னேறிய எதிரியில்‌ எவரையேனுங்கூட மீண்டிருக்க விட்டிருக்கமாட்டார்கள்‌ எங்களது போராளிகள்‌. அவர்களது டாங்கிகளும்கூட மீண்டிருக்க முடியாது"

என்று - எப்படியோ எஞ்சிய எதிரிகள் அன்னறய இருளில்‌ தப்பித்துக்கொண்டார்கள்‌.

5ம் திகதி அதே பரப்பில் அதே தாக்குதல்‌ திட்டத்தோடு எதிரி மீண்டும்‌ முன்னேறினான். இது எதிரியின்‌ ஆறாவது முயற்சியாக இருந்தது. எதிரிக்கும் 2ம்‌ திகதியின்‌ தோல்வி எமது வலுவின்‌ வெளிப்பாடு என்பதை ஏற்றுக்கொள்ள மனம்‌ ஒப்பவில்லைப்போலும்‌, அன்றும்‌ இருமுனைத்‌ தாக்குதல்‌ மூலம்‌ எம்மை ஊடறுத்துவிட எதிரி முயன்றான்‌. இம்முறை முதன்மை நகர்வு ஆனையிறவுப்‌ பரப்பிலிருந்து தொடுக்கப்பட்டது. கட்டளையாளர் லெப். கேணல் விதுசாவின் தலைமையில்‌ மாலதி படையணி முதலில்‌ இதை எதிர்கொண்டது. இருமுனைகளில்‌ இருந்தும்‌ மிகக்‌ கடுமையான சூட்டுவலிமையோடு எமது நிலைகளை ஊடறுத்து முன்னேறிவிட்ட எதிரியை தமது தாக்குதற்‌ பொறிக்குள்‌ சிக்கவைத்து திணறடித்தனர்‌ புலிகள். காலை 7:00 மணி முதல் இரவு இரவு 8:30 வரை நிகழ்ந்த இந்த நீண்ட சண்டையில்‌ எதிரி தனது முழுவலுவையும்‌ காட்டினான்‌ என்று சொல்லவேண்டும்‌. ஆனால், எமது முறியடிப்பு அணிகளின்‌ உறுதியான சமராடும் திறனின் முன்னால் நன்கு எதிரி தன்னைப்‌ பலியாக்கிக்‌ கொண்டதைத்‌ தவிர வேறு எதனையும்‌ பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண் போராளி சொன்னாள்,

"எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் விடக்கூடாது. வந்த எதிரிகளுக்கு நாங்கள்‌ யார்‌ எண்டதைக்‌ காட்டிப்போட்டு விடவேணும்‌!" என்று கிடைத்த பால்ராஜ்‌ அண்ணாவின்‌ உறுதிமிக்க கட்டளை அவரது அருகாமையிலான் வழிநடத்தலில்‌ அன்று செய்துமுடித்தோம்‌"

என்று அன்றைய முடிவின்‌ பேரிழப்போடு எதிரி தனது திட்டத்தைக்‌ கைவிட்டு பின்வாங்கி ஓடினான்‌. 

எதிரியின்‌ ஆறாவது முயற்சியும்‌ முறியடிக்கப்‌பட்டது. எதிரியின்‌ பெருமை மிக்க கட்டளையாளராக இருந்த பிரிகேடியர் கெட்டியாராச்சி பதவிவிலகவோ, விலக்கப்‌படவோ நேர்ந்தது. 

ஐந்துநாள் அமையத்தின் பின்‌ புதிதாக 53வது படைப்பிரிவிற்கு பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் சிறிலால் விஜயசூரியா இதுவரை ஏவல்செய்யாத வலுத்திரட்‌சியோடு கண்டி வீதியில்‌ மும்முனைத் தாக்குதலைத்‌ தொடுத்தான்‌. அனைத்து படைக்கலன்களின் வலுவையும்‌ ஏவல்செய்து இம்முயற்‌சிக்குப் பின்‌ எதிரியிடம்‌ ஏவல்செய்ய இதற்குமேல்‌ எதுவும்‌ இல்லாதவாறு அவனது வளங்கள்‌ திரட்டப்‌பட்டிருந்தன. எனவே இதுவே அவனது இறுதி முயற்சியும்‌ ஆயிற்று.

காலை 6:30ற்கு வரலாற்றில்‌ மிகக்கடுமையான போரரங்கு குறித்த பரப்பில் தொடங்கிற்று. கொடிகாமத்திலிருந்து முன்னேதிய எதிரியை கட்டளையாளர் லெப். கேணல் துர்க்கா தலைமையில்‌ சோதியா படையணி எதிர்கொண்டது. ஏனைய இருமுனைகளை சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்ப டையணி எதிர்கொண்டது. மும்முனைகளிலிருந்தும்‌ தகரிகளையும், படைக்காவிகளையும்‌, சேணேவிகளையும் பெருமளவில்‌ பயன்படுத்‌தி மனிதவலுவையும்‌, சூட்டுவலிமையையும், முடிந்தளவு திரட்டி ஒருமுகப்படுத்தி நடந்த இச்சமர், அப்பரப்பை வடுக்களமாக்கியது. முற்பகற்‌ பொழுதில் எதிரியிடம்‌ குறித்தளவு எமது காவலரண்கள்‌ வீழ்ச்சி கண்டன். ஒவ்வொரு காவலணும் யாழ்‌ குடாநாட்டில்‌ எதிரியின்‌ இருப்பை தீர்மானிக்க வல்லதென்றே எதிரி உணர்ந்து போரிட்டான்‌. 

சோதியா படையணி எதிர்‌கொண்ட முனையில்‌ குறித்த ஒரு இடத்தில் தகரி ஒன்று எமது நிலைகளைத் தாக்கயழித்‌தவாறு முன்னேறிக்‌ கொண்டிருந்தது. எதிரி தாக்குதலால்‌ அவ்விடத்தில்‌ எமது கணிசமான போராளிகள் காயமடைத்தும்‌ வீரச்சாவடைந்தும்‌ விட்டிருந்தனர்‌. முன்னேறிக்கொண்டிருந்து தகரியை தடுத்துநிறுத்த 'தகரி' எதிர்ப்பு ஆயுதமும்‌ இல்லாத நிலை. பதுங்ககழியில்‌ இருந்து சமர்க்களத்திற்கு புதிதான ஒரு பெண்‌ போராளி மேலெழுந்து பாய்ந்து சென்று தனது கைக்குண்டை தகரி வந்த திசைநோக்கி வீசினாள்‌. தகரி பாதையை மாற்றி தொடர்ந்து முன்னேறிக்‌ கொண்டிருந்தது. எஞ்சியிருந்த அவ்வணிகளின்‌ தலைவி செல்வி, தனது அரணிலிருந்து இறுதிவரை தாக்கினாள். முடிவில்‌, முன்னேறிய தகரி அருகே - மிக அருகே வந்தபோது தனது கைக்குண்டை வீசி தனது இறுதி முயற்சியை அவள் எடுத்தபோது அது  வெற்றியளித்தது. தகரி நின்றது. ஆயுதத்தை வைத்து சண்டை செய்வது என்பதைவிட உயிரைவைத்து சண்டை செய்வதே அவ்விடத்தில்‌ ஏலுமாக இருந்தது எனலாம்‌. அதையே எம்‌ போராளிகள்‌ செய்தார்கள்‌.

நீண்டுகொண்டிருந்த அன்றைய இழந்த காவலரண்களை மீளப்பிடிப்பதும், முன்னேறி வீதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனையும் எதிரியை முறியடிப்பதும் எம்முன்னால் உள்ள பெரும் சடுத்தமாகும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நேசனும்‌, மேஜர் கோவிந்தும் இரு அணிகளுக்கும்‌ தலைமை தாங்க துணிச்சல் மிக்க அவ்விரு சமரணிகளுக்கும் அதன் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராஜன் கட்டளை வழங்க, மூத்த கட்டளையாளர் கேணல் பால்ராஜ்‌ சமரை வழிநடத்தினார். நள்ளிரவு 12:30 வரை 18 மணிநேரம்‌ ஓயாது தொடர்ந்த தொடர்சமரில்‌, வீதியைக் கைப்பற்றும் முரட்டுத்தனமான எதிரியின் முன்னேற்ற முயற்சி எமது ஆண்‌,பெண்‌ போராளிகளின்‌ செயற்கரிய ஆற்றலாலும்‌, காணிக்கையாலும் முறியடிக்கப்பட்டது. இதில்‌ 120 படையினர் கொல்லப்பட்டனர்‌. 450 படையினர் காயமடைந்தனர்‌.

பெருமளவு கவசவூர்திகளைப் பயன்படுத்திய எதிரியின் சமர்வியூகத்தை உடைத்தெறிய எமது கவச எதிர்ப்பு அணி வீரர்கள் வெளிப்படுத்திய துணிவும், காணிக்கையும் களத்தில் ஒவ்வொரு முனையிலும் நிறைத்திருந்தது. தகரிகளை பெருமளவில் பயன்படுத்தி எமது நிலைகளை உடைத்துவிட முனைந்த இக்களத்தில் விக்டர் கவச எதிர்ப்பு அணிப் போராளிகளின் செயற்கரிய ஆற்றலால் எதிரி தகரிகள் அழிக்கப்பட்டன. செயலிழக்க வைக்கப்பட்டன. இலட்சிய பற்றுறுதி கொண்ட ஒரு விடுதலைப் போராளி முன்னால் எந்தக் கருவியும் தன் பொருளை இழக்கும் என்பதை தம் உயிரைப் பணயம் வைத்தும்; தம் உயிரை ஈய்ந்தும் மெய்ப்பித்தார்கள் அவர்கள்.

மறுநாள் எமது வலு சிதைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நினைத்த எதிரி மீண்டும் முன்னேறினான். அன்றைய சமரிலும் வென்றது 'வெலிகதற' அல்ல, தமிழர் தலைவன் வழிநடத்தும் ஓயாத அலைகளே. ஆனையிறவு மீது நாம் மீண்டும் தாக்குதல் தொடுக்கும் வரை எதிரி தன்னாலான முழுமுயற்சியையும் முழுவலுவையும் திரட்டி முயன்றும் முடியாது முடங்கினான். ஒரு கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்ட எமது அணிகளின் நிலைகளுக்கு இடையில் இக்களத்தில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளை எண்ணிக் கணக்கிட முடியாது எவராலும். ஒவ்வொரு காலடி இடைவெளிக்குள்ளும் எறிகணை வீழ்ந்து வெடித்த அடையாளம் பரவிக் கிடந்தது. மழைபோல தூவப்பட்டன எறிகணைகளும், சன்னங்களும். இவற்றிற்குள்தான் போராளிகள் சண்டையிட்டார்கள். இந்தச் சமர்க்களத்தில்தான் ஊர்தியில் வழங்கலில் ஈடுபட்டார்கள் எமது 'வாகனப்பிரிவு' போராளிகள். இக்களத்தில் நின்றுதான் எமது மருத்துவப்பிரிவு செயலாற்றிக்கொண்டிருந்தது. 

தமிழர் வரலாறு கண்டிராத இந்த மோசமான களத்தில் இந்த மண்ணின் புதல்வர்கள் புரிந்த சமரை தமிழர் வரலாறு மறந்து போகாது; போகவும் கூடாது.

ஆனையிறவு மீதான தாக்குதலைத்‌ தொடங்குவதற்கு அதன்‌ மூலவழிவகை நகர்வுகள் முழுமைபெற்று முற்றுப்பெற்றிருத்தன. ஆனையிறவுத் தளம்‌ எமது விடுதலைப்‌ போராட்டத்தின்‌ வரலாற்றில்‌ அதிக முக்கியத்துவம்‌ வாய்ந்த தளம்‌. பல சமர்களைக் கண்ட தளம்‌. குடாநாடாக அமைந்த யாழ்ப்பாணத்தின்‌ பாதுகாப்பு இதன்‌ கழுத்துப்‌ பகுதியில்‌ அமைந்திருந்த நுழைவாயிலான ஆனையிறவை தக்கவைப்பதில்‌ தங்கியிருந்தது. வெள்ளையர்களின்‌ ஆட்சிக்காலம்‌ தொட்டு இன்றுவரை இதன்‌ நிலைமை இவ்வாறுதான் இருந்தது. ஆனால்‌, ஆனையிறவு களப்பகுதி வலுவெதிர்ப்புச் சமருக்கு முற்றுமுழுதான சாதகத்‌ தன்மைகொண்ட புவியியல்‌ சூழலைக்கொண்டிருந்தது. எனவே ஆனையிறவை எவர்‌ தம்கைகளில்‌ வைத்திருக்கிறார்களோ அவர்களின்‌ கையில்‌ யாழ்ப்பாணத்தை வைத்திருக்கக்கூடிய இயலுமையே புவியியல்‌ சார்ந்த படைத்துறை எதார்த்தமாக இருந்தது.

1991ஆம் ஆண்டு ஆ.கா.வெ. என்ற நடவடிக்கை ஆனையிறவை வீழ்த்துவதற்காக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெருஞ்சமர். ஆனால், எதிரியின் கடற்படைவலு, ஒரு தரையிறக்கத்தின் மூலம் எமது இலக்கை வெற்றியடையவிடாமல் தடுத்துவிடக்கூடிய வாய்ப்பை எதிரிக்கு கொடுத்தது. அதன்பின் நாம் எமது படைவலு வளர்ச்சியை உயர்நிலைக்கு இட்டுச் சென்றபோது எமது வலத்தின் மதிப்பீட்டிற்கேற்ப எதிரி காலத்திற்குக் காலம் ஆனையிறவுத் தளத்தை பெருப்பித்தும் வலப்படுத்தியும் வந்தான்.

புலிகள் ஓயாத அலைகள்-03 என எழுந்தபோது வீழ்ந்த படைத்தளங்களால் எமது வலத்தைக் கண்டு சிறீலங்கா படைத்துறை திகைப்புக்குள்ளானது. எனவே புலிகள் யாழ்ப்பாணத்தை மீட்க ஆனையிறவு மீது பாய்வார்கள் என்று எதிரி முழுமையாக நம்பியதால் முடிந்தளவு வலத்தை ஒருமுகப்படுத்தி வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டான். ஆனால், ஓயாத அலைகள்-03 கட்டம்- 3இல் எதிரி அமைத்த வலுவெதிர்ப்பு வியூகங்களில் புலிகள் முதலுடைப்பை ஏற்படுத்தினர். பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, உமையாள்புரம் ஆகிய தளங்கள் ஆனையிறவின் தெற்குப் பரப்பில் புலிகளிடம் வீழ்ந்தன. அதேநேரம் பக்காவாட்டாக கடலுடன் தொடர்பை ஏற்படுத்தியதன் மூலம் ஆனையிறவின் வலுவெதிர்ப்பிற்கு உயர்வலுச் சேர்த்திருந்த கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி தளங்களையும் புலிகள் அந்நடவடிக்கையில் வெற்றிகொண்டனர்.

புலிகளின் இந்நடவடிக்கையோடு ஆனையிறவு எமது இலக்கு என்பது தெட்டத்தெளிவாயிற்று. எமது வலத்தை மதிப்பீடு செய்து வலுவெதிர்ப்பிற்காக பெருமெடுப்பு முயற்சியை சிங்களப் படைத்துறை எடுத்தது. முன்னணிப் படைப்பிரிவான 52 இங்கு நிலைகொள்ள வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னணியில்‌ 52வது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. இயக்கச்சி, ஆனையிறவுத்தளம்‌ ஏறத்தாழ பன்னீராயிரம்‌ படையினரை உள்ளடக்கியிருந்தது. இந்த வலமான கோட்டையே புலிகளின் தாக்குதல்‌ இலக்காயிற்று.

ஓயாத அலைகள்‌ - 03 என்ற ஒரு பெருஞ்சமரில்‌ நாம் ஈடுபடும்போது மிகக் குறைந்தளவிலான போராளிகளின் உயிரீகத்தோடு சாதிக்க வேண்டும் என்பதே தலைவரின் கரிசனமாக இருந்தது. திட்டத்தின்‌ ஒவ்வொரு கட்டத்திலும் இதுவே கருத்திலெடுக்கப்பட்டது. இச்சமரிலும்‌ இதுவே தலைவரின்‌ கண்டிப்பான கட்டளையாகவும் இருந்தது. இதற்கேற்பவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன.

காயப்படும் போராளிகளைக்கூட உயிரிழப்பில், இருந்து காத்துக்‌ கொள்வதற்கு பெருமளவிலான முயற்‌சிகள் எடுக்கப்பட்டன. ஐந்து மாதம்‌ தொடர்ந்த ஓயாது அலைகள்‌ - 03ற்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு எமது மருத்துவப்பிரிவு தன்னைத் தயாயர்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. இச்சமரிலும களத்தின்‌ முன்னணிக் களமருத்துவப் போராளிகளினது தீரம்மிக்க செயற்பாடுகளும்‌, எமது மருத்துவர்கள், அறுவை மருத்துவர்களின் களமுனைப் பணியும் போரிடும்‌ ஒவ்வொரு வீரனினதும் உயிரைக்காக்கும் உறுதிமிக்க செயற்பாட்டை வழங்கியிருந்தது.

இந்த மரபு அடிப்படையிலான ஆற்றல்மிக்க ஓயாத அலைகள்‌-03 சமரிற்கு கிட்டு பீரங்கிப்‌ படையணி அதற்கான அடிப்படை வலுவாக அமைந்தது. இதன் அளவின்மையான வளர்சியிலே வலுமிக்க எதிரியின்‌ கூட்டு வலுவிற்கு இணையான அல்லது அதற்கு மேலாக ஈடுகொடுக்க முடிந்தது. அரச படையின்‌ ஏந்தனவலு என்பது எம்மைவிட பலமடங்குகள் அதிகம். ஆனால ஏந்தனத்தின் பயந்திறன் என்பது ஏந்தனத்தோடு மட்டும்‌ தொடர்புபட்டதல்ல, அது இயக்கப்படும்‌ மனிதருடனும் தொடர்புடையது. எனவேதான், சேணேவிகளின் சூட்டுவலிமை வலுமிக்கதாக களத்திலிருந்தது. உறுதிமிக்க தாக்கத்தை அது எதிரிக்கு ஏற்படுத்தியது.

18ம் திகதி பிற்பகல் 1:30 மணிக்கு கொதிக்கும் வெய்யிலில் தமது நகர்வுகளை முடித்திருந்த அணிகள், கிட்டுப் பீரங்கிப் படையணியின் சூட்டுவலிமையால் முகாவில் பரப்பில் எதிரியின் முன்னணிக் காவலரண்கள் தாக்கப்பட, பாய்ந்து உட்புகுந்தன, பகைத்தளம் வீழ்ந்தது. இச்சமரில் முதன்மையாக இரு படைத்தொகுதிகள் இயங்கின. தாத்தாவின் தலைமையில் மட்டக்களப்பு படையணிகளும், லெப். கேணல் சேகரின் தலைமையில் புலனாய்வுத்துறை தாக்குதலணி, மேஜர் மகாவின் தலைமையிலான சோதியா படையணி, சிறுத்தைப்படை மகளிர் அணி, 4.1 படையணி, நிதித்துறை தாக்குதலணி, ஆகியனவும் பங்கெடுத்தன. இச்சமர்முனைக்‌ கட்டளையாளராக ஆனையிறவு தெற்குப்‌ பரப்பை வீழ்த்தி தாழையடித் தளத்தை வெற்றிகொண்ட சமரின்‌ கட்டளையாளராக இருந்த கேணல் தீபன்‌ தலைவரால்‌ பணியமர்த்தப்பட்டார்.  

after 18 april, ltte offence from vaadiyadi and iyakkachchi, the ASR was on the edge of cut off.jpg

'ஏப்ரல் 18இற்குப் பிறகு இயக்கச்சி மற்றும் வாடியடி வழியாக ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளம் நோக்கிய முன்னேற்ற நகர்வுகளைக் காட்டும் வரைபடம் | அந்த இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிவதுதான் மாற்று வழங்கல் பாதை | பச்சை - ஏற்கனவே புலிகளால் விடுவிக்கப்பட்டுவிட்ட இடங்கள். | படிமப்புரவு: "சிறப்புப் பார்வை: ஆனையிறவு முடிவில் ஒரு விடியல்"'

கட்டளையாளர் தாத்தாவின்‌ படைத்தொகுதிகள்‌ எதிரிக் காவலரண் தொடரில் இருமுனையில் உடைப்பை ஏற்படுத்தி முன்னேறின. எதிரிக்‌ காவலரண்களை கைப்பற்றிச் சென்ற அப்படைத்தொகுதி மறுநாள் எதிரியின்‌ தளப்பகுதியினுள்‌ முன்னேறத்‌ தொடங்கியது. எதிரியின்‌ சிறுமுகாம்களையும்‌, தளங்களையும்‌ வெற்றிகொண்டு மாசார்‌, சோரன்பற்று ஆகிய பரப்புகளை மீட்டு. இயக்கச்சி முதன்மை தளம்நோக்கி மேலும்‌ முன்னேறிக்கொண்டிருந்தது. அதேநேரம்‌ கட்டளையாளர் சேகரின் தலைமையிலான படைத்தொகுதியின்‌ அணிகள்‌ இயக்கச்சிக்கும்‌, புதுக்காட்டுச்‌ சந்திக்கும் இடையிலான பரப்பினூடாக எதிரித்‌ தளத்தை இருகூறாகப்‌ பிளந்து மறுகரையின்‌ நீரேரி நோக்கி முன்னேறவேண்டியிருந்தது. எதிரி முதல்‌நாள்‌ தனது முன்னணிக்‌ காவலரண்களை இழந்துவிட்டபோதும்‌, மீண்டும்‌ தடுப்பு நிலைகளை அமைத்து மேலதிக படைகளை அனுப்பி மறுப்புச்‌ சண்டையில்‌ தீவிரமாக ஈடுபட்டான்‌.

எதிரியின்‌ ஒவ்வொரு தடுப்பையும்‌ உடைப்பதற்கு எமதணிகள்‌ கடுமையாகப்‌ பாடுபட்டன. ஒரு தடுப்பை உடைத்து முன்னேறும்போது எதிரி மீண்டுமொரு தடுப்பை உள்ளே ஏற்படுத்திக்‌ கொண்டான்‌. இவ்வாறு தளத்தினுள்ளே மூன்று கட்டங்களில்‌ எதிரியின்‌ முழுமூச்சான தடுப்புச்சமரை எமதணிகள்‌ சந்திகக வேண்டியிருந்தது.

20ம் திகதி பிற்பகல்‌ எதிரியின்‌ தளத்தை பிளக்கும்‌ அணிகள் கண்டி வீதியைக் குறுக்கறுத்து நிலையெடுத்துக்கொண்டன. எதிரியின்‌ கட்டளைப்பீடம்‌ மிக நெருக்கடிய நிலைக்கு அப்போதுதான்‌ தள்ளப்பட்டது. ஆனையிறவு தளத்தைப்‌ பொறுத்தவரை எதிரி பெரும்ம முயற்சி எடுத்தும்‌ அதன்‌ தோல்வியை அவனால்‌ தடுக்க முடியாது போயிற்று. எதிரி முறியடிப்பிற்குத் தேவையான படைகளையும், படைக்கலன்களையும்‌ கண்டிவீதியிலும்‌ தாழையடியிலும்‌ நடந்த சமரில் இழந்துபோனதால்‌ இப்போது பெருமளவில்‌ அதைப் பெறமுடியாது போயிற்று.

முறியடிப்புத்‌ தாக்குதலுக்கு எதிரிக்கு வலு கொடுப்பது அவனது கவசப்படையணியின்‌ தகரிகளே, அடுத்து சேணேவிகளைக் கூறலாம்‌. தகரிகளே முன்னணியில் சண்டையில்‌ ஈடுபடுத்தக்கூடியவாறான காலாட்‌படையின்‌ நம்பிக்கைக்குரிய சமர் ஏந்தனங்கள். ஆனால்‌, கண்டி வீதியில்‌ நிலைகொண்ட (இத்தாவில்‌) எமது அணிகளைத்‌ தோற்கடிப்பதில்‌ எதிரி எடுத்த மிகக்கடுமையான முயற்சி எதிரியின்‌ கவசப்படையை செயலிழந்துபோகச்‌ செய்தது. எட்டு தகரிகள், படைக்காவிகள் அதில் அழிக்கப்பட்டதோடு, பத்திற்குமேற்பட்டவை சேதமாக்கப்பட்டன. ஏறக்குறைய எதிரியின்‌ கவசப்படை முடங்கிப்போயிருந்தது. இப்போது அவற்றின்‌ உதவிகளைப்‌ பெருமளவில்‌ பெறமுடியாது எதிரி திணறினான்‌.

21ம்‌ திகதி மதியம்‌ இயக்கச்சி நோக்கி முன்னேறிய படைத்தொகுதி தளத்தை நெருங்கித்‌ தாக்க, தளத்தை பிளந்து, ஊடறுத்து முன்னேறிய படைத்தொகுதி கடற்கரையை அண்மித்து நிலையெடுத்தது. கடற்புலிகளின்‌ படகுகள்‌ நீரேரிப்‌ பரப்பில் கரையோரம்‌ இருந்த எதிரிக்‌ காவலரண்களைத்‌ தாக்கத்‌ தொடங்கின. எதிரிக்குப்‌ பின்வாங்‌குவதையோ, தற்கொலை செய்துகொள்வதையோ, சண்டையிட்டு அழிவதையோவிட வேறு தெரிவிருக்கவில்லை. எதிரி தப்பியோடும்‌ முடிவை எடுத்தான்‌. இதை அவனுக்கு தவிர்க்கமுடியாத கட்டாயமாக்கினர் புலிகள்‌.

தாழையடியின்‌ வீழ்ச்சி, கண்டி வீதியில்‌ புலிகளின்‌ நிலையமைப்பு என்பவற்றுக்குப்‌ பின்‌ புதிதாக யாழ்‌ குடாநாட்டின்‌ பொறுப்பதிகாரியாக அமர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் காமினி பொன்சேகாவும்‌, யாழ்ப்பாண கூட்டுப்படைக் கட்டளையாளர் என்ற புதிய பதவியோடு அமர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவும்‌ ஆனையிறவுத் களத்தின்‌ வீழ்ச்சியைத்‌ தவிர வேறு எதனையும்‌ கண்டுகொள்ள முடியவில்லை.

21ம்‌ திகதி பிற்பகல்‌ 2:00 மணிக்‌கு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த எதிரியின்‌ ஊர்திகள் ஆனையிறவை நோக்கிச் சென்றன. சற்று நேரத்தின்‌ பின்னால்‌ 'பாரவூர்தி'களில் படையினர் யாழ்ப்பாணம்‌ நோக்கி பின்வாங்கிக்கொண்டிருந்தனர்‌.

அதன்‌ பின்னால்‌ தெறோச்சிகளை கட்டியிழுத்தவாறு படையினர் சென்றுகொண்டிருந்தனர். 'சாகாடு'(Pickup) ஊர்தியில் படை அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்‌. வீதியை அண்மித்து நிலையெடுத்‌திருந்த எமதணிகள்‌ பாய்ந்து முன்னேறின. கடற்கரையை அண்டியிருந்த பரப்பு வெட்டைவெளியாக இருந்ததால்‌ முன்னேற்றுத்திற்கு ஏலாது இருந்தது. ஆனால்‌, இப்போது தெறோச்சிகளையும் எதிரியின்‌ தப்பித்தலையும் கண்டுவிட்ட போராளிகள்‌ அதை அனுமதிக்காது வெறியுடன் பாய்ந்தனர்‌.

கனவகை ஆயுதங்கள்‌, ஊர்திகள் ஒருங்கே சென்றுகொண்டிருந்த எதிரியை தடுத்து நிறுத்தும்‌ வலு, உடனடியாக அவ்விடத்தில்‌ எம்மிடமில்லை. புவியியல்‌ அமைப்பும்‌ சாதகமாயில்லை. வீதியின் பின்புறத்தில்‌ கரையோரமாக எதிரியின்‌ தொடர் காவலரண்‌ அமைந்திருந்தது. இத்தகைய சூழலில்‌ இதனை வழிமறிப்பது சாதரணமாக ஏலுமாகக்கூடிய விடயமல்ல. ஆனால்‌, துணிச்‌சல்மிக்க அவ்‌வணிப்‌ போராளிகள்‌ அதைச்‌ ஏலுமாக்கினார்கள்.

கிட்டு பீரங்கிப்‌ படையணியின் சூட்டாதரவைப்பெற்று மிக வேகமாகவும்‌, புத்திக்கூர்மையாகவும் செயற்பட்ட அப்போராளிகன்‌ எதிரியின்‌ பின்வாங்கலை தடுத்துநிறுத்தி தாக்குதலில்‌ ஈடுபட வீழ்ந்தவர்களை விட்டுவிட்டு பகைவர்‌ நாலாப்புறமும்‌ சிதறியோடினர்‌. கடற்கரையிலிருந்துவந்த கடுமையான எதிர்ப்பு எம்மை முறியடித்துவிட முனைந்தபோது, தெறோச்சியைக் காப்புக்குள் உள்ளடக்கி, அவ்வணி கடற்கறையில்‌ நிலைகொண்ட எதிரிமீது உறுதியான தாக்குதலை தொடுத்து எதிரி நிலைகளைக்‌ கைப்பற்றி  நிலையெடுத்துக்கொண்டது. தெறோச்சிகள் எமது வசமாயிற்று. எதிரியின்‌ தரைத்‌ தொடர்பு முற்றாக மூடப்பட்டாயிற்று.

எதிரி எதிர்பாராத இந்த நிகழ்வின்பின்‌ எதிரிக்கு தப்பியோடுவதற்கான வாய்ப்பு அற்றுப்போனதுடன்‌ உயர்வலுக்கொண்ட சேணேவியான (152 மி. மீ தெறோச்சி) எமது கைகளிற்குள்ளிருப்பது எதிரிக்கு அனுமதிக்க முடியாததாகியது. எதிரி தனது அதிரடிப்படைப் பிரிவை கடற்கரைத்‌ தொடர்‌ காவலரணூடாக முன்னேறி எம்மைத்‌ தாக்கப்‌ பணித்தான்‌. அதே நேரம்‌ யாழ்ப்பாணத்தில்‌ இருந்தும்‌ அவனது அணி முன்னேறியது. எதிரியின்‌ அந்த முரட்டுத்தனமான முயற்சியை முறியடித்து அன்றைய இரவில்‌ தெறோச்சியை எம்‌ தளம்‌ கொண்டுவந்தனர்‌ போராளிகள்‌.

22ம்‌ திகதி ஆனையிறவிற்கான அனைத்து வழிகளும்‌ மூடப்பட்ட நிலையில்‌, இயக்கச்சித்‌ தளம் மீது புலிகள்‌ தாக்கியவாறு உள்நோக்கி முன்னேற, எதிரி அன்றைய விடியலோடு, அல்லிப்பளை - கிளாலி நீரேரியூடாக தப்பியோடத் தொடங்கினான். நீரினூடாகவும்‌, நீரேரிக்‌ கரையூடாக எதிரிள் பெருவாரியாக தப்பியோடத் தொடங்கியபோது புலிகள்‌ தரையிலிருந்தும்‌, நீரேரியில்‌ படகுகள்‌ மூலமும்‌ தாக்கத்‌ தொடங்கினர்‌. எதிரி தன்‌ உயிரைக்‌ கொண்டுபோய்ச்‌ சேர்ப்பதே வாழ்வின்‌ இலட்சியம்‌ என்பதுபோல ஓடினான்‌.

ஒருகாலம்‌ எம்மக்கள்‌ யாழ்‌ குடாநாட்டின்‌ பாதைகள்‌ அடைக்கப்பட்டு வன்வளைப்பு நடவடிக்கையாக எதிரி சூரியக்கதிர் என்று வெறிகொண்டு ஆடியபோது எம்மக்கள்‌ இலக்கக்கணக்கில்‌ இம்‌ உயிரைத்‌ தக்கவைப்பதற்காக ஒன்றுகூடியகரை இக்கரைதான்‌. உயிர்‌ கொண்டோடிய மக்களை சுட்டுத்தீர்க்க தொலைவு எட்டாதயோது வானூர்தியாலும், சேணேவியாலும் தாக்கி சின்னாபின்னமாக்கிய இழிந்தோர் இவர்கள்தான்‌. எம்மக்கள் உயிருக்காகப்‌ போராடிய கரை இக்கரைதான்‌. அந்தப்‌ பகைவர்கள்‌ மனமிரங்காது எம்‌ மக்களின்‌ உயிர்களைக்‌ குடித்த கரை இதுதான்‌. நினைக்க நெஞ்சு குமுறும்‌ அன்றைய நாட்களின்‌ நினைவுகள்‌. இன்றல்ல என்றும்‌ அதை நாம்‌ மறந்துபோக மாட்டோம்‌.

படகுகளின்றி எம்மக்கள்‌ குழத்தைகளுடன்‌ தண்ணீரில்‌ நடந்து தப்பிவிடும் நப்பாசையோடு போராடியபோது அவர்களை பிணமாக்கியவர்களை மறந்துவிடுவது மனிதத்தின்‌ இயல்பல்ல. நாம்‌ மனிதர்களாகவே வாழ விரும்பினோம்‌. அதற்கான மறுமொழியைப் பெற்றுக்கொண்டது சிங்களப்படை.

நான்கு ஆண்டிற்குமுன் அந்த நீரேரி ஒருமுறை சிவந்தது. அடையாளமற்றுப்‌ பிணங்கள்‌ கிடந்தன. அந்த அவலத்திற்கு காரணமானவர்களின்‌ அரத்தத்தால்‌ இன்று மீண்டும்‌ அந்த நீரேரி சிவக்‌கிறது. அவர்களின்‌ உடல்களால்‌ கரைகள்‌ நிறைகின்றன. 'அவலத்தைத் தந்தவா்களுக்கே அதைத்‌ திருப்பிக்கொடு' தமிழரின்‌ வரலாற்று அனுபவத்திலிருத்து கற்றுக்கொண்ட தலைவரின்‌ மெய்யுண்மை வரிகளிவை.

ஆனையிறவில்‌ எதிரிகள்‌ எதையும்‌ இழந்து உயிரைக்‌ கொண்டோடினர்‌. நீரேரியில்‌ பிணம்‌ பிணமாய்‌ச் சாய்ந்தனர்‌. கையை இழந்தும்‌ ஓடினர். காயமடைந்தும்‌ ஓடினர்‌. விழவிழ ஓடினர்‌. பிணங்கள்‌ மிதந்தன. நீரேரி சிவந்து பரந்தது. தன்‌ மடியில்‌ தன்‌ மக்களைப்‌ பலிகொண்ட பகைவர்களின்‌ அரத்தத்தால்‌ பகரம் தீர்த்துக்கொண்ட, அல்லிப்‌பளை-கிளாலி நீரேரி தப்பிப்‌ போனவர்கள்‌ அன்று எம்மக்கள்பட்ட அவலத்தை இப்போது உணர்ந்து, பார்த்திருப்பர்‌. தவறி உயிரைவிட்டவர்கள்‌ இறுதிக்‌ கணத்தில்‌ எம்மக்கள்‌ அன்று எப்படி மரணித்தார்கள்‌ என்பதை உணர்ந்துவிட்டு மடிந்திருப்பா்‌. எதிரி படிக்க விரும்பாத பாடத்தை புலிவீரரிடம்‌ இப்போது படித்துத்‌ தெளிந்திருப்பர்‌. 

நண்பகலோடு எதிரியின்‌ தப்பியோட்டம்‌ நிறைவுபெற்றது. ஓடியவா்கள்‌ இனி எம்‌ தேசம்தேடி கால்மிதிக்கத்‌ துணியமாட்டார்கள்‌. துணிந்தால்‌ அவர்கள்‌ மீளமாட்டார்கள்‌ . புலிவீரம்‌ இச்சமரில்‌ பகைக்களித்த போதனை இதுதான்‌. வரலாற்றின்‌ முக்கியத்துவம்‌ மிக்க ஆனையிறவுத்தளம்‌ புலிகளின்‌ வசமாயிற்று. 

23ம் திகதி காலை 9:52ற்கு 'வென்று வாழ்வதே தமிழன் தனக்கெழுதிய விதி' என்பதன் சாட்சியமாக ஆனையிறவிலும்‌ புலிக்கொடி ஏறியது. இந்தப்‌ பெரும்‌ சமரின்‌ ஒருங்‌கிணைப்புக்‌ கட்டளையாளர் கேணல் பானு சமர்முனைக் கட்டளையாளர்கள்‌, போராளிகள்‌ புடைசூழ தமிழீழ தேசியக்‌ கொடியை ஏற்றிவைத்தார்‌. அந்த உப்புவெளியில்‌ உயர்ந்து நின்ற புலிக்கொடி தமிழரின்‌ தனித்துவ அடையாளத்தின்‌ மிடுக்காய் காற்றில்‌ பறந்துகொண்டிருந்தது. 

வன்னியில்‌ மக்களின்‌ வெற்றிக்களிப்பு உணர்வுகளின்‌ உச்சத்தைத்‌ தொட்டது. யாழ்மக்கள் உச்சிகுளிர்ந்து மெளனத்தில்‌ மகிழ்ந்தனர்‌. உலகத்‌ தமிழர்‌ பெருவிழா எடுத்தனர்‌. அண்டைத்‌ தமிழகமும்‌ வெற்றிக்கு விழா எடுத்தது. களம்வந்து எம்மக்கள்‌ உணவு தந்தனர்‌. அந்தக்‌ களிப்பின்‌ உச்சம்‌ பெரியது. 

தொடர்ந்த நாட்களில்‌ புலிகள் வடதிசை நோக்கி முன்னேறினர்‌. இத்தாவில்‌ கண்டி வீதியில்‌ நிலைகொண்டுள்ள எமது படைத்தொகுதிசளுடன்‌ கைகுலுக்குவதே இச்சமரின்‌ முற்றுப்புள்ளி. வடதிசை நோக்கிய முன்னேற்றத்தில முகமாலையில்‌, எதிரித்‌ தளத்தை வெற்றிகொண்டு பளைக் கோட்டத்தை அண்மித்தபோது எதிரி பளை நகரை வலுவெதிர்ப்பதற்காக அடுத்தகட்ட வலுவெதிர்ப்பு வியூகத்தை ஏற்படுத்தியிருந்தான்‌. 

பளை நகரை வெற்றிகொள்வதற்கான தயார்ப்படுத்தலின்‌ பின்‌ 25ம்‌ திகதி மேற்கொண்ட ஒருமுயற்சி எமக்கு குறித்த வெற்றியை அளிக்கவில்லை. எதிரி அதனைத்‌ தக்கவைப்பதில்‌ உறுதியாக இருந்தான்‌. எதிரியின்‌ உயர்‌ கட்டளைப்பீடம்‌ அதனைத்‌ தக்க வைப்பதற்கான கண்டிப்பான கட்டளையை வழங்கியிருந்தது. மீண்டும்‌ 27ம்‌ திகதி காலை 7. 00. மணிக்கு எமது சிறப்பணிகள்‌ பளை நகரை மீட்டுக்கொள்வதற்கான தாக்குலைத்‌ தொடங்கின. எதிரிக்‌ காவலரண்களைத்‌ தகர்த்து உள்நுழைந்தது அவ்வணி. மேஜர் வீரமணியின்‌ தலைமையில்‌ 4.1 படையணி, சோதியா படையணி, நிதித்துறைத்‌ தாக்குதலணி, சிறப்பு எல்லைப்படை ஆகியவற்றைக்கொண்ட  படைத்தொகுதி கண்டி வீதியால்‌ முன்னேறியது. இதன்‌ உதவி நகர்வாக லெப். கேணல் சேகரின்‌ தலைமையில்‌ ஒரு படைத்தொகுதி கண்டி வீதிக்கும்‌ நீரேரிக்கும்‌ இடைப்பட்ட பரப்பில் முன்னேறியது.

வீதியின்‌ குறுக்காக அமைத்திருந்த எதிரியின்‌ முதன்மைத் தளம்‌ எம்மால்‌ வெற்றிகொள்ளப்பட்டபோது எதிரி பின்வாங்கத்‌ தொடங்கினான்‌. பரந்திருந்த படைத்தளங்கள்‌ தாக்கப்பட்டபோது நிலைதடுமாறி பின்வாங்கத்‌ தொடங்கிய எதிரியை விரைந்த தாக்குதலுக்குட்படுத்‌தினர்‌ புலிகள்‌. வேகப்‌பின்தொடர்வு நடவடிக்கை மூலம்‌ எதிரிக்கு மீளொழுங்குபடுத்துவதற்கான அமையத்தை வழங்காது புலிகள்‌ முன்னேறிச்‌ சென்றனர்‌. எரியின்‌ மிகக்‌ கடுமையான முறியடிப்பு முயற்சி நீண்ட சண்டையின்‌ பின்‌ தோற்கடிக்கப்பட்டதும்‌, தகரிகளை வரவழைத்து அதுவும்‌ பயனற்றுப்‌போனதும்‌ எதிரி வீரர்களுக்கு ஏமாற்றத்தைத்‌ தந்தது. 78 மணிநேரம்‌ விடாது தொடர்ந்த அன்றைய சண்டையின்‌ இறுதியில்‌ இத்தாவிலை அடைந்த எமதணிகள்‌ அங்கிருந்த எமதணிகளோடு ஒன்றிணைந்துகொண்டன. புலியணிகள் முன்னேறிய கண்டிவீதிப்‌ பாதையெங்கும்‌ பரந்துகிடந்தன எதிரியின்‌ உடல்கள்‌. நூற்றுக்கு மேற்பட்ட படையினர் இதில் கொல்லப்பட்டதுடன்‌ பெரும்‌ தொகையான படையினர் காயமடைந்தனர்‌. இரு சமர்முனைகளின்‌ இணைவும் இச்சமரின்‌ முற்றுப்பு புள்ளியை முரசொலித்தது, அன்றைய இருட்பொழுதில்‌.

தரையிறங்கிய படைத்தொகுதிகளுக்கு தலைமைதாங்கிய கட்டளையாளர் கேணல் பால்ராச்சும்‌, ஆனையிறவு சமர்முனைக்குத்‌ தலைமை தாங்கிய கட்டளையாளர் கேணல் தீபனும்‌ சமர்முனைகளை ஒருங்கிணைத்து கட்டளை வழங்கிய கட்டளையாளர் கேணல் பானுவும்‌ இத்தாவில்‌ கண்டி வீதியில்‌ ஒன்றிணைந்து கைகுலுக்கிக்கொண்டனர்‌. அன்றைய நாள் ஏப்ரல்‌ 30 காலைப்பொழுது.

யாழ்‌ வன்வளைப்பு வெற்றியை பட்டுத்துணியில் எழுதி எழுதி தங்கத்‌ தாம்பாளத்தில்‌ வைத்து நாடாளுமன்றத்தில்‌ சமர்ப்பித்த ஆட்சியாளர்கள்‌, வெற்றிக்கு வீர விருதுகொடுத்து விழா நடத்திய சிங்கள தேசம்‌, ஓயாத அலைகள்‌-03 என ஓங்கியெழுந்த புலிகள்சேனை கண்டு உலக நாடெங்கும்‌ உதவிகேட்டுப்‌ பறந்தது. எம்‌ தேச புதல்வர்களின்‌ துயிலுமில்லங்களின்‌ கல்லறைகளைக்‌ கிளறி அவர்களின்‌ ஆன்ம அமைதியைச்‌ சிதைத்த நாகரிகமற்றவாதிகளின் சேனை, ஆசியாவில்‌ சென்ற நூற்றாண்டில்‌ அதிபெரிய புதைகுழியை செம்மணியில்‌ உருவாக்கிய பெருமைமிகு சிங்களத்தின்‌ சேனை, மனிதநேய உதவியேனும்‌ கேட்டு அண்டை நாடுகளை நாடியது. ஆயினும்‌ இது முடிவல்ல. எம்‌ எல்லைகளை முட்டி புலிக்கொடி பறக்கும்வரை புலிகள்சேனை நகரும்‌. புலிக்கொடி தொடரும்‌ தன்‌ பறப்பிற்காக. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-5 | மே 9 - மே 25

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி - ஆடி 2000, பக்கம்: 6-10 
மூல எழுத்தாளர்: பிரபுத்திரன்‌
தட்டச்சு & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன்,  05,06|1|2022

 

 

 இறங்கப்போகும் சிங்கக்கொடிக்கு இசைக்கப்பட்ட முகாரி
 

 

unceasing waves-03 phase 5 ltte tamileelam.png

'நடவடிக்கை வரைபடம்: ஓயாத அலைகள்-3 கட்டம்-5'

 

இன்று மே 08ம்‌ திகதி மாலை நேரம்‌. வரிப்புலிகள் சீருடையோடு ஒரு பெரும்‌ படையெனத்‌ திரண்டிருந்தனர்‌. இது சமருக்கு புறப்படும் முன்னான ஒன்றுகூடல்‌. சமருக்கான திட்டம்‌ தலைவரால் கட்டளையாளர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டு கட்டளையாளர்கள் அணித்‌ தலைவர்களுக்கு செல்லும்வழி வெல்லும்வழி போதித்து முடித்து இப்போது புறப்படும்‌ முன் போராளிகளுக்கான இறுதி விளக்கவுரை நடந்துகொண்டிருந்தது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில்‌ ஒரு படைவிலகலுக்காக விடுதலைப்‌புலிகள்‌ அரசுக்கு பகிரங்கமான அறிவித்தல்‌ விடுத்திருந்தனர்‌. அரசு அதற்கு உடன்படாதபக்கத்தில் யாழ்ப்பாணத்தில்‌ படைகளை நாமே விலக்க வேண்டிவரும்‌ என்றும்‌ அறிவுறுத்தியிருந்தனர்‌. ஆனால்‌ அரசோ,

"வலுவீனப்பட்டுப்போயுள்ள புலிகள் நடாத்தும் உளவியல்‌ போரே இந்த அறிவுறுத்தல்‌ எனவும்‌, சில காலநிலைக் கோளாறுகளால்‌ இழக்கப்பட்ட பகுதிகளைக்கூட பிடித்தே தருவோம்‌. போரை முடித்தே தீருவோம்‌!”

என்று தன்‌ வன்வளைப்பு திமிர்‌த்தனத்தையே கக்கியது. அவர்களைப்‌ பொறுத்தவரையில்‌ யாழ்‌ குடாநாட்டின்‌ புவியியல் அமைவும்‌, அதன்‌ வலுவெதிர்ப்பு ஏற்பாடுளும்‌, அங்கு நிலைகொள்ள வைக்‌கப்பட்டிருந்த படைவலுவும்‌ புலிகளால்‌ என்றும்‌ வெல்லப்பட முடியாத வலிமைகளாக தெரிந்தன. ஆனால்‌, செய்ய முடியாததைச்‌ சொல்வதோ, சொல்வதைச்‌ செய்யாமல்‌ விடுவதோ புலிகளின்‌ மரபல்லவே. பிரபாகரன்‌ தலைமையேற்ற தமிழர்படை நிலம்மீட்கத்‌ தயாரானது.

இதுதான்‌ போராளிகள்‌ உறுதிமொழி எடுத்து, பிரியாத விடைகொடுத்து பிரிந்துசெல்‌கின்ற நேரம்‌. இனி அவர்களின்‌ சந்திப்பு எங்கும்‌ நடக்கலாம். களத்தில்‌, தளத்தில்‌, அல்லது மருத்துவவிடுதியில்‌ அதுவுமல்லாவிடில்‌ துயிலுமில்லத்தில்‌. ஆனால், வெற்றியின்‌ பின்பே இதில்‌ எதுவும்‌ நடக்கும்‌. காற்று அதிர உறுதியெடுத்தனர்‌ புலிகள். "எமது மேன்மைமிகு குறிக்கோளாம்.... என உறுதி கூறிப் போருக்குப் புறப்படுவோம்." கையசைப்புகள், கட்டியணைப்புகளோடு போராளிகள் தத்தமது பகுதிக் கட்டளையாளர்களோடு பிரிந்து செல்லத் தொடங்கினர்.

கிழக்கரியாலையிலிருந்து ஒரு கமுக்க நகர்வின்‌ மூலம்‌ எதிரியின் முதலாவது முன்னணிக்‌ காவலரண்‌ தொடரை எம்‌ அணிகள்‌ கடக்கவேண்டும்‌. அங்கிருந்து நகர்ந்து, நாவற்குழியையண்டி கண்டி வீதிக்குச்‌ சமாந்தரமாகவிருக்கும்‌ தொடர்‌ காவலரண்களில்‌ சண்டையைத்‌ தொடக்‌கி, நாவற்குழியில்‌ கண்டிவீதியை ஊடறுப்பது அவ்வணிகளுக்கு இடப்பட்டபணி. அதேநேரம்‌ தனங்களப்பிலிருந்து எதிரியின்‌ முன்னணிக்‌ காவலரணை கமுக்கமான நகர்வின்‌ மூலம்‌ கடந்து சாவகச்சேரி - தனங்களப்பு வீதியை ஊடறுப்பதும்‌ தனங்கிளப்ப்பு - மறவன்புலவு வீதியை ஊடறுப்பதுமே மற்றைய இரு அணிகளுக்கு வழங்‌கப்பட்ட பணி. கட்டளையாளர் கேணல் சொர்ணத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ இச்சமர்முனையின் தாக்குதலுக்கான முதல்‌ நகர்வுகள் இவைதான்‌. கிழக்கரியாலையும்‌ தனங்கிளப்புமே இந்த நகர்வுகளுக்கான புலிகளின்‌ புறப்படு தளங்களாக இருந்தன.

ஓயாத அலைகள்‌ - 02 கட்டம்‌ - 03இன் போது புலிகளால்‌ மீட்கப்பட்ட தனங்கிளப்பு, கிழக்கரியாலை ஆகிய பரப்புகளை புலிகள்‌ இன்றுவரை தக்‌கக வைத்துக்‌ கொண்டது ஒரு சாதனையே. நீரேரி கடந்து, தரைவழி வழங்கலற்று மிகச்‌ சிறியளவான நிலப்பரப்பினுள்‌ நிலைகொள்ளும்‌ முயற்சி புலிகளின்‌ ஒரு செயற்கரிய துணிச்சலே, ஆனால்‌ புலிகள் இதை நிலைநாட்டினர். எதிரியின்‌ எந்த முறியடிப்பையும் எதிர்கொள்ளத்‌ தயாராகவே புலிகள்‌ காத்திருந்தனர்‌. ஆயினும்‌, எதிரி எமது இந்த நிலைகொள்ளலை முறியடிக்கமுடியாத கையாலாகாத்தனத்துடனேயே இருந்தான்‌. பின்விளைவைப்‌ புரிந்துகொள்ளத் தெரியாத எதிரி இப்போது விளைவுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிருந்தது. குடாநாட்டில்‌ ஒரு புறப்படுதளத்தைப்‌ பேணியதே எமது இந்த நகர்வுக்கான அடிப்படை வலுவைத்‌ தந்தது.

09ம்‌ திகதி இருளில்‌ நாவற்குழி வீதியை ஊடறுப்பதற்காக அணிகள்‌ நகர்ந்து கொண்டிருந்தன. போராளிகளின்‌ நெஞ்சில் ஆவலும்‌, படபடப்பும்‌ கலந்து நிறைத்திருந்தது. யாழ். மண்ணை விட்டகன்றபோதான நினைவுகள்‌ மனதில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ எழுந்தன. 95ம்‌ ஆண்டு எங்கள் தாய்மண்‌ யாழ் மண்ணை சிங்களத்துப்‌ படைகள்‌ வல்வளைத்தபோது சிங்கள தேசத்தில்‌ அதை எப்படியெல்லாம்‌ கொண்டாடினார்‌கள்‌! வவுனியா தடைமுகாமில்‌ எங்கள்‌ தமிழர்‌களுக்கே இனிப்புக்கொடுத்து தமிழரின்‌ தன்மானத்தில்‌ அறைந்தார்கள்‌. யாழ்ப்பாணத்தில்‌ அந்த சிங்களப் படையினர் எங்கள்‌ தோழர்களின்‌ புதைகுழிகளைக்‌ கிளறி வெற்றிவெறியாடியது. நெஞ்சு விம்மித்தணிய இந்த தேசத்தின் வீரர்கள்‌ நகர்ந்துகொண்டிருந்தார்கள். வீழ்த்துவதைத் தவிர வேறெந்த இலக்கும்‌ அவர்‌களிடமில்லை.

சமரின்‌ ஒருங்‌கிணைப்புக்‌ கட்டளையாளர் கேணல் பானுவின்‌ கட்டளை மையத்தினுள் அமைதி குடிகொண்டிருந்தது. முதலாவது கமுக்க நகர்வு வெற்றிகரமாக நிகழ்ந்த செய்தி கிட்டினால்தான்‌ தாக்குதலுக்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்‌. வேறெந்தச்‌ செய்தியும்‌ விரும்பத்தக்கதல்ல. மனதில் பதட்டமும்‌, வெளியில்‌ ஓசையின்மையுமாய் அந்தச்‌ சூழல்‌ இருந்தது.

கிழக்கரியாலையிலிருந்த எதிரியின்‌ முன்னரங்க காவலரண்களில்‌ விழித்திருக்கும்‌ எதிரியின்‌ பார்வைகளைக்‌ கடந்து ஒரு அணி கமுக்க நகர்வின்‌ மூலம்‌ தொடரரணைக்‌ கடந்துவிட்டது. மற்றைய அணி கடந்துகொண்டிருந்தது. மூன்றாவது அணி கடப்பதற்குக்‌ காத்துக்கொண்டிருந்தது. திடீரென எதிரிச் சுடுகலன்கள் முழங்கத்தொடங்கின. அப்போது நேரம் 1:30 மணி. குறித்த நேரத்திலிருந்து ஒருமணி நேரம்‌ முன்பாகவே சண்டை தொடங்கிய ஓசை கேட்டு எமது கட்டளை நிலையங்கள்‌ பரபரப்படைந்தன. அணித்தலைவர்களிடமிருந்து தொலைத்தொடர்புக்கருவிகளில்‌ வந்தசெய்தி நிகழ்ந்த கெடுவேளையைத் துப்பியது.

உடனடியாகத்‌ தாக்குதலைத்‌ தொடங்க கட்டளையிட்டார் சமரின் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு. இரவு நகர்வு மூலம்‌ கடக்கவேண்டிய காவலரண்தொடர்‌, ஒரு சண்டையின்‌ மூலம்‌ கடக்கவேண்‌டியதாயிற்று. அதனால்‌ முதலாவது தடையரணைக்‌ கடப்பதற்கு சமரிட வேண்டியிருப்பது ஒருபுறமிருக்க, எதிரி, இரண்டாவது காவலரண்‌ தொடரில்‌ தயாராகிவிடுவான் என்பதும், அதனைக்‌ கடப்பதற்கு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பதும் புதிய சிக்கலாயிற்று. 

அதைவிடச்‌ சிக்கலானது தனங்கிளப்பு மறவன்புலவு வீதிகளை ஊடறுக்கவேண்டிய அணி இன்னும்‌ இறுதி நகர்விடத்திலேயே இருப்பதுதான்‌. இவ்‌வணிகள்‌ இனிமேல்‌தான் நகர்ந்து விழிப்புற்றுவிட்ட எதிரியோடு சாதகமற்ற நிலையில்‌ சண்டையிடவேண்டிய தீயபேற்று நிலையிருந்தது. எமது கெடுவேளை எம்மை இப்படியொரு நெருக்கடிக்குள்‌ தள்ளியது.

கிழக்கரியாலையிலிருந்து முன்னேறிய மாலதி, சாள்ஸ்‌ அன்ரனி, இம்ரான்‌ - பாண்டியன்‌ படையணிகளைக்‌ கொண்ட படைத்தொகுதியில்‌ மாலதி படையணியின்‌ அணியொன்று எதிரியின்‌ அரண்களை வலம்‌ இடமாகத்‌ தாக்கி முன்னேற, இடையில்‌, உருவாகிய பாதையூடாக மற்றைய படையணிகள்‌ உட்புகுந்து முன்னேறின. முன்னேறிய படையணிகளில் சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி நாவற்குழிப் பரப்பிலிருந்த இரண்டாவது தொடரரணை விரைந்து தாக்கியது. எதிரியின்‌ நிலைகளுக்குள்‌ புகுந்து, தொடர்பைப் பிளந்து அவ்வணி வழிசமைக்க வீதியில்‌ ஏறிக்கொண்டன ஏனைய படையணிகள்‌. நாவற்குழிப்‌ பாலத்‌திற்கும்‌ செம்மணிக்குமிடையிலான அவ்வீதியை ஊடறுத்து, வீதியின்‌ இருபக்கமும்‌ எதிரியின்‌ தாக்குதலை முறியடிக்கக்கூடியவாறு நிலைகொண்டது மேஜர்(மேஜர்‌) ஜமுனா தலைமையிலான மாலதி படையணி. சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி கண்டிவீதியால்‌ அரியாலை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. அதன்‌ சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராஜனின் தலைமையில். 

கண்டி வீதியில்‌ 'யாழ்ப்பாணம்‌ வரவேற்கிறது!' வளைவுக்‌ கோபுரம்‌ தெரிசனம்‌ தந்து வரவேற்கிறது இந்த மண்ணின்‌ புதல்வர்களை, ஆனால்‌, வலம்‌ இடமாக பரந்து கடந்த அந்த செம்மணி வெளிப்பரப்பு ஏதோ இனம்புரியாத உணர்வுகளை மனதில்‌ கிளறியது. எதிரியைத்தேடி முன்னேறும்‌ பரபரப்பிற்குள்ளும்‌ அந்த வெளிப்பரப்பை கண்கள்‌ குடைந்து எதையோ அறிந்துவிடத்துடித்தன. அந்தத்‌ துடிப்பு எம்‌ இனத்தின்‌ ஆழப்பதிந்த வடுக்களிலிருந்து எழுவது.

வல்வளைப்பில் நாம்பட்ட அவலங்களின்‌ சாட்சியமாய்‌ அந்த நிலம் வரலாறு முழுவதும்‌ சிங்களதேசம்‌ எமக்கிழைத்தவற்றைப்பற்றிச்‌ சொலிக்கொண்டேயிருக்கும்‌. சிங்களதேசம்‌ தன்‌ வக்கிரத்தை, கொலைவெறியுணர்வை மூடி ஒரு ராஜபக்ஷாவுக்குள்‌ அடக்கிவிட முயன்றபோது அவன்‌ வாய்‌ திறந்தருந்தான்‌,

"எப்பொழுதும் உடல்கள்‌, புதைப்பதற்காக, அதிகாரிகளால்‌ அனுப்பிவைக்கப்படும்‌. சிலைவேளைகளில்‌ உயிருடனும்‌ அனுப்பிவைக்கப்படும்‌. கொன்றுவிட்டுத்‌ தாக்‌கவும்‌ என்ற உத்தரவுடன்‌ பெண்களை வல்லுறவு கொண்டுவிட்டு அலங்கோல நிலையில்‌ அனுப்பிவைப்பார்கள்‌. .....  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த இளங்குடும்பத்தில்‌ பிள்ளைகளை விட்டுவிட்டு தாயையும்‌, தந்தையையும்‌ கூட்டிவந்து கணவனைக்‌ கட்டிவைத்தூவிட்டு மனைவியுடனுன்‌ மாறிமாறி வல்லுறவு கொண்டோம்‌, பின்‌ தலையில்‌ அடித்துக்கொன்றோம்‌. பின்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த கணவனையும்‌ கொன்று புதைத்தோம்‌. கிருஷாந்தியை நாங்களெல்லோரும்‌ வல்‌லுறவுகொண்டோம்‌. இறந்தபின்‌ அவளை அங்கே புதைத்தோம்‌. கேட்க வந்த பெற்றொரையும் உற்றாரையும்‌ சாட்சியமற்று அடித்துக்கொன்று புதைத்தோம்‌. ...."

இப்படி அவன்‌ சொன்ன பட்டியல்‌ நீளமானது. அவன்போன்ற வீரர்களுக்கு தூக்குத்தண்டனை பெறநேர்ந்தால்‌ அவர்கள்‌ சொல்லப்போகும்‌ செய்‌தி இன்னும்‌ புதைந்தபோயுள்ள செம்மணிகளையே எமக்குத்தரும்‌. 'யாழ்ப்பாணம்‌ வரவேற்கிறது' வளைவுகடந்து எம்‌ கால்கள்‌ நடந்தபோது சிங்களதேசம்‌ எம்‌ தேசத்துக்களித்த அவலங்களையும்‌, அதன்‌ நினைவுகளையும்‌ சுமந்தே செல்லவேண்டியிருந்தது..

தனங்கிளப்பு - சாவகச்சேரி வீதியை ஊடறுக்கவேண்டிய அணி பரந்தவெட்டை கடந்து எதிரியின்‌ முன்னணிக்‌ காவலரண்களை தாக்கியழிக்கவேண்டியிருந்தது. எதிர்பாராமல் சண்டை தொடங்கிவிட்ட நிலையில்‌ விழிப்படைந்து தாக்கும்‌ எதிரியை அண்மித்து, தாக்குவது அவ்வணியால்‌ இயலாமற்போனது. சாவகச்சேரி - மறவன்புலவு வீதியை ஊடறுக்கவேண்டிய தலைநகர்‌ படையணி விழிப்படைந்துவிட்ட எதிரியோடு ஒரு உக்கிர சண்டையைத்‌ தொடக்கி வீதியை ஊடறுத்துக்கொண்டது. அதேநேரம்‌ கோயிலாக்கண்டி முன்னரங்க காவலரண்களை உடைத்து முன்னேறவேண்டிய அணியும்‌ உள்நுழைவது இயலாமற்போனது. மேற்கொண்டு இங்கு தாக்குதலிலீடுபடக்கூடிய வாய்ப்புகளற்ற சூழலில்‌ இப்பகுதிச் சண்டை இடைநிறுத்தப்பட்டது.

அரியாலை முதன்மை படைத்தளத்தை சென்றடைந்த சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி அங்‌கிருந்த படையினரை முன்னேறவிடாது தடுத்துநிறுத்துவதுடன் ஒரு தாக்குதலையும்‌ அத்தளம்‌ மீது தொடுத்திருந்தது. மறுபுறத்தில்‌ சாள்ஸ் அன்ரனி, இம்ரான்‌-பாண்டியன்‌, மாலதி படையணிகளின்‌ அணிகளைக்‌ கொண்ட ஒரு படைத்தொகுதி கிழக்கரியாலையிலிருந்து செல்லும்‌ எதிரியின்‌ முன்னரங்‌க காவலரண்களூடாக மணியந்தோட்டம்‌ நோக்கி முன்னேறியது. மணியந்தோட்டப் பரப்பில் எதிரிக்கும்‌ எமக்குமான சண்டை வலுப்பெற அங்கு நடந்த ஒரு நீண்ட சண்டையின்பின்‌ மணியந்தோட்டத்தில்‌ எதிரி தோற்கடிக்கப்பட்டான்‌. அங்கிருந்து கொழும்புத்துறை இறங்குதுறை நோக்கி இப்படைத்தொகுதி முன்னேறிக்கொண்டிருந்தது.

இத்தகைய நகர்வின்‌ மூலம்‌ அரியாலை முதன்மை தளத்தை நாம்‌ பக்கவாட்டாக சுற்றிவளைத்துக்கொண்டிருந்தோம்‌. அதே நேரம்‌ அரியாலை முதன்மைத் தள படையினரை நாவற்குழி நோக்கி முன்னேறவிடாததுடன்‌ அதன்‌ கவனத்தையீர்‌த்தும் தளம்மீது தொடர்ந்து தாக்குதலிலீடுபட்ட சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப் படையணி அன்று (11ம் திகதி) மாலை 4.00 மணியளவில்‌ கொழும்புத்துறை இறங்குதுறையைச்‌ சென்றடைந்த படைத்தொகுதி கடுமையான சண்டையிலீடுபட, அரியாலை முதன்மை தளத்தில்‌ எதிரி தான்‌ பக்கவாட்டாக சுற்றி வளைக்கப்படுவதையுணர்ந்து நிலைதடுமாறினான்‌. கொழும்புத்துறை இறங்குதுறையை கைப்பற்றுவதற்காக எதிரியும்‌, நாங்களும்‌ கடுமையாக மோதிக்கொண்டோம்‌. இறுதியில்‌ தளம்‌ எம்‌ கையில்‌ வீழ்ந்தது .

இப்பொழுது கிட்டு பீரங்கிப்‌ படையணியின் வலுவான சூட்டாதரவுடன் அரியாலை முதன்மை தளத்தை தாக்கியழிப்பதற்கான சண்டையைத்‌ தொடக்கிய புலிகள்‌, தளத்தில் உட்புகுந்தனர்‌. எதிரி தளத்தைக்‌ கைவிட்டு பின்வாங்கி ஓடத்தொடங்கினான்‌. அதே நேரம்‌ கொழும்புத்துறை இறங்குதுறைமுகமும்‌ அதன்‌ சூழவுள்ள பரப்பும் எம்மால் வெற்றிகொள்ளப்பட்டது. அன்றைய இருள்‌ பொழுதுக்கிடையில்‌ கொழும்புத்துறையிலிருந்து கண்டிச்சந்திவரையும்‌, அரியாலையலிருந்து கண்டிச்சந்திவரையும்‌ முன்னேறிய படைடையணிகள்‌ தமக்குள் இணைப்பையேற்படுத்‌தி ஒரு பலமான தடுப்பு நிலைகளை அமைத்துக்கொண்டன. கட்டளையாளர் லெப். கேணல் லக்ஸ்மனின்‌ தலைமையிலியங்‌கிக்‌ கொண்டிருந்த நடவடிக்கைகள்‌ அன்றுடன்‌ இலக்கை நிறைவுசெய்து கொண்டது. ஆனால்‌ இச்சண்டையில்‌ நாம்‌ ஒரு சிறந்த போர்வீரனை, இளங்கட்டளையாளரை இழக்கநேர்ந்தது. 

'லெப். கேணல் வசந்‌' யாழ்ப்பாணம்‌ மீதான எமது நகர்வுத்‌ திட்டமிடலுக்கு ஆதாரமாக அமைந்தவன்‌. ஒரு இளங்கட்டளையாளராக இவன்‌, நேரடியாக வேவுப்பணியில்‌ ஈடுபட்ட, எளிமையும்‌, ஆற்றலும்‌ கொண்ட் ஒரு போர்வீரன்‌ அவனது. வேவுத்‌ தரவுகளும்‌, அவனது தனிப்பட்ட நம்பிக்கை மீதான ஆலோசனைகளும்‌ இந்த சமருக்கான திட்டமிடலில்‌ முக்கியகவனத்தில் எடுக்கப்‌பட்டது. நடவடிக்கையின்‌ போது ஒவ்வொரு அணிளையும்‌ வெற்றிகரமாக எதிரிப் பரப்புகளில் நகர்த்திச்சென்றதும்‌, நெருக்‌கடி வந்தபோதெல்லாம் மாற்றுநகர்வுகளுக்கு வழிகோலியதும்‌ இவன்தான்‌. ஆனால் இதைவிட அவனிற்கு பெருமை சேர்த்தது, ஓயாத அலைகள்‌ மூன்றின்‌ முதலுடைப்பின்‌ வெற்றியான ஒட்டுசுட்டான்‌ படைத்தளத்தை வேவுபார்த்து திட்டமிடலுக்கு அடிகோலியது இவன்தான். இந்த ஆற்றல்மிக்க போர்வீரனை கொழும்புத்‌துறையில்‌ நடந்த சண்டையில்‌ நாங்கள்‌ இழந்துபோனோம்.

நேற்றைய நாள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கட்டளையாளர் கேணல் சொர்ணத்தின்‌ மற்றைய பகுதிச் சமர்க்களமான தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி தளங்கள்‌ மீதான தாக்குதல்‌ 11ம்‌ திகதி மாலை 4:30ற்கு புதிய முனையில்‌, புதிய தாக்குதல்‌ உத்தியோடு தொடங்கப்பட்டது. தனங்கிளப்புத்‌ தளத்தைப்‌ பொறுத்தவரையில்‌ மிகவலுவான நிலைகளில்‌ விழிப்படைந்துவிட்ட எதிரியை தாக்குவது மிகக் கடினமாகிவிட்டது. எதிரி எமது நகர்வை அதிகம்‌ எதிர்பார்‌திருந்த தென்திசையால்‌ முன்னேறாது, அதன்‌ மேற்குத்திசையால்‌ வெட்டைவெளிப் பரப்பியினூடாக முன்னேற வேண்டுமென சமரின்‌ ஒருங்கிணப்புக் கட்டளையாளர் கேணல் பானு பணித்தருந்தார்‌. பரந்த வெளிப்பகுதியென்பதால் இதனூடாக நாம்‌ முன்னேறுவதற்கான வாய்ப்பு இல்லையென்றே எதிரி கருதினான்‌.

மாலை 4:30க்கு கனவகை ஆயுதங்களின்‌ சூட்டுவலிமையின்‌ மூலம்‌ முன்னணிக்‌ காவலரண்கள்‌ தகர்க்கப்பட, தளத்தின்‌ உட்பகுதியில்‌ கிட்டு பீரங்கிப் படையணி கணையெக்கித் தாக்குதலை மேற்கொள்ள, எதிரியின்‌ தளம்பாய்ந்தது லெப். கேணல் குட்டி தலைமையிலான இம்ரான்‌ - பாண்டியன்‌ படையணி. எதிரி எதிர்பாராத பகற்பொழுதில்‌, எதிர்பாராத திசையில்‌, கனவகை ஆயுதங்களின்‌ சூட்டுவலிமையுடன்‌ நாம்‌ தளம்‌ புகுந்துவிட்டது. எதிரியை திகைப்புக்குள்ளாக்கியது. எதிரி தாக்குப்பிடிக்க எண்ணவில்லை. தனங்கிளப்பிலிருந்து சாவகச்சேரி நோக்கி பின்வாங்‌கி ஓடத்தொடங்கினான்‌. தளத்‌தில்‌ படையினரின்  உடல்கள்‌ அங்குமிங்குமாகக்‌ கிடந்தன. அவன்‌ ஓடிய திசையில்‌ பின்தொடர்ந்து தாக்‌க எமதணிகள்‌ அந்க வீதிநெடுகிலும்‌ எதிரியின்‌ பல உடல்கள்‌ வீழ்ந்தன.

தனங்கிளப்பு தளம்மீதான தாக்குதல்‌ நடாத்தும்‌ அதேவேளை கோகிலாக்கண்டி தளம்‌ மீதும்‌ தாக்குதலை தொடங்கியது லெப். கேணல் சுசீலனின்‌ தலைமையிலான தலைநகர்‌ படையணி. எதிரியின்‌ முன்னரங்க காவலரண்களில்‌ சண்டையைத்‌ தொடங்கிய அதேநேரம்‌, நீரேரிப்பரப்பிலமைந்‌த காவலரண்கள்‌ மீது கடற்புலிகளின்‌ படகுகள்‌ நெருங்கித்‌ தாக்க மறவன்புலவுக்கும்‌ தனங்கிளப்பிற்குமான வீதியில்‌, ஊடறுத்து எமதணிகள் நிற்பதும்கூட எதிரிக்குத்‌ தெரிந்திருந்தது. மொத்தத்தில் எதிரி சூழப்பட்டு தாக்கப்பட்டுக்கொண்டிருந்தான்‌. அவனுக்கான உதவிகள்‌ கிடைப்பதும்‌ வாய்ப்பற்றிருந்தது. தளத்தின்‌ உட்பகுதியில்‌ எமது சேணேவித் தாக்குதல்‌ எதிரியை திணறடித்தது. எதிரி நிலைதளம்பி பின்வாங்கவேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டான்‌. காவலரண்களைக்‌ கைப்பற்றி, எமது அணிகள்‌ உள்நுழைய, அதேநேரம்‌ கடற்புலிகளின்‌ அணியொன்றும்‌ தரையிறங்கியது. எதிரி முழுமையாக தன்‌ தளத்தை கைவிட்டு ஓடத்தொடங்கினான்‌.

அடுத்து நகர்ந்த மூன்று நாட்கள்‌ எந்த நடவடிக்கையிலும்‌ எம்மால்‌ ஈடுபட முடியவில்லை. ஏனெனில்‌ எமது நடவடிக்கைப்‌ பகுதி மக்கள்‌ செறிந்துவாழும்‌ பரப்புகளாக இருந்தன. எனவே அதற்கான மாற்றொழுங்குகள் செய்யப்படும்வரை நாம்‌ காத்திருக்கருக்கவேண்டியிருந்தது. அணிகளை மீளொழுங்குபடுத்துவதிலும்‌, வேவு நடவடிக்கையில்‌ ஈடுபட்டு அடுத்த தாக்குதலுக்கான முனைகளை உறுதிப்படுத்தக்கொள்வதிலுமாக அந்த நாட்கள்‌ கழிந்தன. கைதடி, நுணாவில்‌, மட்டுவில்‌, சாவகச்சேரி மக்களை தற்காலிகமாக தம்‌ வசிப்பிடங்களை மாற்றியிருக்குமாறு புலிகளின்‌ குரலில்‌ தொடர்ச்சியாக அறிவித்தல்‌ விடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. மக்களின்‌ உயிரிழப்புக்களை தவிர்‌க்க வேண்டுமென்பது தலைவரின்‌ கண்டிப்பான கட்டளையாக இருந்தது. ஆனால்‌, எதிரியோ, மக்களை நகரவிடாது மக்களை கேடயமாக்கினான்‌. நகரும்‌ மக்களைத்‌ தாக்கினான்‌. ஊரடங்குச்சட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும்‌ ஒவ்வொருநாளும்‌ கிடைக்கும்‌ ஓரிருமணிநேர ஊரடங்குச்சட்ட தளர்த்தலில்‌ மக்கள்‌ படையினரின்  கட்டுமீறி வெளியேறத்‌ தொடங்கினர்‌. மூன்றுநாட்கள்வரை இதற்காக புலிகள்‌ தாக்குதல்‌ எதுவுமின்றி காத்திருந்தனர். 

15ம்‌ திகதி மாலை 4:30ற்கு கேணல் தீபன்‌ புதிய பரப்பில் மற்றுமொரு சமர்முனையைப்‌ பொறுப்பேற்றார்‌. தலைநகர்‌ படையணி, சோதியா படையணி, 4.1 படையணிகளைக்கொண்ட கட்டளையாளர் லெப். கேணல் சேகரின்‌ தலைமையில்‌ தச்சன்தோப்பு ஊரை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த எதிரியின்‌ காவலரண்கள்‌ மீதான தாக்குதலுடன்‌ தொடங்கியது அப்புதிய சமர்முனை. வலம்‌ இடமாக இரு அணிகளாகப்‌ பிரிந்து, எதிரியின்‌ காவலரண்களைத்‌ தகர்த்து முன்னேறிக்கொண்டிருந்த அணிகள்‌, நாவற்குழி வீதியை அண்மித்தும்‌ மற்றைய பகுதியில்‌ கைதடி வீதியை அண்மித்தும்‌ காவலரண்களை வெற்றிகொண்டு முன்னேறிய பின்‌ ஊரினுள்ளிறங்கிய அணிகள் மறுநாள் அதிகாலையின்முன்‌ அவ்வூரை மீட்டெடுத்துக்கொண்டன.

தச்சன்தோப்பை மீட்டெடுத்து அன்றுமாலை, கைதடி - நுணாவில்‌ பாலத்தை அண்மித்த எமது படையணிகள்‌, பாலத்தை கட்டுப்பாட்டிற்குன கொண்டுவருவதற்காக மீண்டும்‌ சண்டையைத்‌ தொடங்கின. எதிரியோ, வலுப்படுத்தப்பட்ட நிலைகளிலிருந்து தாக்கத்தொடங்கினான். அதைவிட, அப்பரப்பில் நில அமைவு, எமக்கு எவ்விதத்திலும் சாதகமாக அமையவில்லை. பாலம்‌ அமைந்திருந்த வீதி உயரத்திலிருந்தது.

நாமோ பள்ளமான பரப்பில் நிற்கவேண்டியிருந்தது. முன்னேறும்போது எதிரிக்கு எம்மைச்‌ சுட்டுவீழ்த்துவது இலகுவாக இருந்தது. தாம்‌ கடுமையாகச் சண்டையிட்டும்‌ எதிரியொரு பின்வாங்கலைச்‌ செய்யவில்லை. இழப்பை தவிர்ப்பதற்காக அன்று அம்முயற்சியை கைவிடுமாறு கட்டளையிட்டார்‌ கட்டளையாளர் தீபன்‌.

17ம் திகதி அதிகாலை 6:00 மணிக்கு நாவற்குழி வீதியில் பாலத்தை நோக்கியும், நாவற்குழி தொடர்வண்டிப் பாதை நோக்கியும்‌ இம்ரான்‌ - பாண்டியன்‌ படையணியும், மாலதி படையணியும் இணைந்து முன்னேறின. கட்டளையாளர் லெப். கேணல் குட்டி தலைமையில் முன்னேறிய இவ்வணிகள், பாலத்திற்காக கடுமையாகச்‌ சண்டையிட்டன. பாலத்தின் பின்னால்‌ அன்றூஸ்‌ கொம்பனி கட்டிடத்தினுள்ளும்‌ எதிரி வலுவாக நிலைகொண்டிருந்தான். நகரச்‌ சண்டைகளைப் பொறுத்தவரை முக்கியத்துவம்மிக்க வீதிகளையும்‌, பாலங்களையும்‌ கட்டுப்படுத்துவதே சமரின்‌ வெற்றியைத்‌ தீர்மானிக்கும் திறவுகோலாக அமையும்‌. எனவே எதிரி இப்பாலத்தின்‌ மீதான தாக்குதலை எதிர்பார்த்தே அதற்கான வலுவெதிர்ப்பு தாக்குதலுக்கான தளம்‌ ஒன்றை அதனருகே அமைத்திருந்தான்‌. இதைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக நாமும்‌ எதிரியும் மிக கடுமையான தாக்குதலில்‌ ஈடுபட்டோம்‌. எதிரி, தகரியையும், படைக்காவியையும்‌ பயன்படுத்தித்‌ தாக்கினான். எதிரியின்‌ நிலையில்‌ பின்னுதைப்பற்ற சுடுகலன் கூட இருந்திருந்தது. அந்த வெளிப்பகுதியில் எதிரியின்‌ கடுமையான சூட்டுவலிமையூடாகவே நாம்‌ முன்னேறவேண்டியிருந்தது. உண்மையில்‌, நாம் எமது முன்னேற்றத்திற்காக கடுமையான சமருக்கு முகம்கொடுக்கவேண்டியிருந்தது. ஆனால்‌, இன்றைய பொழுதிற்கு கைதடி-கோப்பாய்‌ பாலம்வரை எதிரியின்‌ படைத்தளங்களை வெற்றிகொண்டு கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது இன்றியமையாத தேவையாக இருந்தது. அடுத்த சமர்முனை தொடங்கப்படுவது இதன்‌ வெற்றியிலேயே தங்கியிருந்தது. 

ஒரு நீண்ட சண்டையின்‌ பின்‌ காலை 10:00 மணியளவில்‌ பாலமும்‌ அதன்‌ பின்னாலான படைத்தளமும் எம்‌ கைகளில்‌ விழுந்தது. பலமான கட்டிடத்‌தொகுதியுள்ளிருந்த எதிரிகளைக்கூட எம்‌ போராளிகள் தம் சமர்த்திறனால் வெற்றிகொண்டனர்‌. தொடர்ந்து நாவற்குழி சந்தி எம்‌ கைகளில் வீழ்ந்தபோது தச்சந்தோப்பிலிருந்து கேணல் தீபனின்‌ அணியொன்று தங்கிளப்பு வீதியால்‌ நாவற்குழிக்கு முன்னேறி எதிரி அப்பகுதியில் இல்லாததை உறுதிப்படுத்தி கேணல் சொர்ணத்தின் அணியுடன்‌ இணைப்பை ஏற்படுத்திக்கொண்டது. 

அங்கிருந்து கட்டளையாளர் குட்டி தலைமையிலான இவ்வணிகள் கைதடி தளத்தை பக்‌கவாட்டாக சுற்றிவளைப்பதற்காக நாவற்குழிக்குப்‌ பின்னால் உள்ள வெளிப்பகுதியூடாக முன்னேறி, கோப்பாய்ப்‌பாலத்தையும்‌ பிடித்து அவ்வீதியையும் கட்டுப்பாட்டில்‌ கொண்டுவந்தன. அதேநேரம்‌, கட்டளையாளர் சேகர்‌ தலைமையிலான மாலதி படையணி, 4.1 படையணி ஆகியவை தச்சந்தோப்பு ஊரிலிருந்த தொடர் காவலரணூடாக முன்னேறி நிலையெடுத்து நாவற்குழி-கைதடி வீதியில் ஏறுவதற்கான ஒரு சண்டையைத் தொடங்கியது. அப்படைத்தொகுதி ஏறவேண்டிய இடமாக தெங்குபனம்பொருள் கூட்டுத்தாபன கட்டிடத்‌ தொகுதியும்‌, நவீல்ட்‌ பாடசாலை கட்டிட தொகுதியும் கொண்ட ஒரு கட்டடப் பகுதி இருந்தது. ஒரு கட்டடப்பகுதியில் எதிரி நிலைகளை வெற்‌றிகொள்வது சாதாரணமானதல்ல. ஆனால்‌, அதை வெற்றிகொண்டே ஆகவேண்டிய கட்டளை அவர்களுக்கு வழங்கப்படடிருந்தது.

11:00 மணிக்குத்‌ தொடங்கிய இதற்கான சண்டை 4:00 மணிவரை உக்கிரமாக நடந்தது. மாலை 4:00 மணிக்கு அப்பரப்பை வெற்றிகொண்ட அப்படைத்‌தொகுதி கைதடி நோக்கி முன்னேறியது. கைதடி தளத்தில்‌ நிலைகொண்டிருந்த எதிரி தாம்‌ தாக்குதலுக்குள்ளாவதோடு கோப்பாய்ப்‌ பாலத்தில நாம்‌ நிலையெடுத்திருந்ததையும்‌ தெரிந்துவிட்டான்‌. எதிரியால்‌ அங்கு நிலைகொள்வது முடியாததாயிற்று. நிலைகொண்டால்‌ அவனது தலைவிதி எங்கள் கையில்‌, எதிரி தளத்தை, கைவிட்டு பின்வாங்கி ஓடினான்‌. தளம் எம்கைகளில்‌ வீழ்ந்தது. நேற்று கைதடி - நுணாவில்‌ பாலத்திற்காக முயன்று நிறுத்‌திவைக்கப்பட்ட சண்டை கைதடி வீதியிலிருந்து தொடங்கியது. கைதடி வீதியிலிருந்து முன்னேறும் சேகரின்‌ அணி இப்பாலத்தைக்‌ கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது. ஆயினும்‌ அங்கிருந்து சாவகச்சேரி நோக்கி முன்னேறுவது அன்று தடைப்பட்டது. பாலத்தை அடுத்திருந்த எதிரியின்‌ சிறுமுகாம்‌ எமது முன்னேற்றத்தை உறுதியாக தடுத்து நின்றது. அச்சிறுமுகாமை வெற்றிகொள்வதுற்கு வீதியால்மட்டும்‌ நகரக்கூடிய சூழல் அங்கு அமைந்திருந்தது. அதை வெற்றி கொள்வதாயின் எதிரியின்‌ கடுமையான எதிர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டியதுடன்‌ அதன் வெற்றிக்கு குறித்த இழப்புகளையும் கொடுக்க நேரிடுவது தவிர்க்க முடியாததே. இதைத்‌ தவிர்க்க விரும்பிய சமரின்‌ ஒருங்கணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு அடுத்த உத்தரவுவரை அன்றைய படைநகர்‌வை நிறுத்துமாறு கட்டளையிட்டார்‌.

18ம் திகதி கட்டளையாளர் கருணாவுடன்‌ புதிய அணிகளை, புதிய தாக்குதல்‌ நகர்வுத்‌ திட்டத்தோடு சமர்முனைக்கு அனுப்பிவைத்தார்‌, சமரை நேரடியாக வழிநடத்தும் தலைவர்‌. கட்டளையாளர் கருணாவின் கட்டளையில் இனிதன்‌(தாத்தா) தலைமையிலான ஜெயந்தன்‌, அன்பரசி படையணிகள்‌ 18ம் திகதி நள்ளிரவு 12:00 மணிகழித்து 12:30ற்கு கைதடி வடக்குப் பரப்பிலிருந்த எதிரி முன்னணிக்‌ காவலரண்கள்‌ மீது சண்டையைத்‌ தொடக்கின. ஒரே சமரிலேயே பகலிலும்‌, இரவிலும்‌ சண்டையைத்‌ தொடக்கி வெற்றிகொள்ளக்கூடிய போராற்றலையும்‌, தந்திரவழிவகையையும் நாம்‌ கொண்டிருப்பது எதிரிக்குத்‌ திகைப்பையும்‌, சலிப்பையும் மூட்டியது. தாக்குதல்‌ நேரமென்றில்லாது ஒவ்வொரு கணப்பொழுதும எதிரி எம்‌ வரவை எதிர்பார்க்கவேண்டியிருந்தது.

அன்றைய இருளில்‌ தொடங்கிய சண்டையில்‌ எதிரியின்‌ காவலரண்களைத்‌ துடைத்தழித்து உட்புகுந்தனர்‌ புலிகள்‌. ஓரணி தொடர்‌ காவலரண்களை வெற்றிகொள்ள, மற்றைய அணிகள்‌ அங்கிருந்து தொடர்ந்து முன்னேறி மட்டுவில்சந்தி பாடசாலைவரை சென்றடைந்தது. இப்பரப்புகளில் நிலைகொண்டிருந்த எதிரிகள்‌ புலிகளின்‌ வரவறிந்து தம்‌ தளங்களுக்குத்‌ தப்பியோடினர். முன்னேறிய ஜெயந்தன்‌, அன்பரசி படையணிகள்‌ மட்டுவில் பாடசாலையடியில்‌ மேலும்‌ இரு அணிகளாகப்‌ பிரிந்து கனகம்புளியடிச்சந்தியை நோக்கியும்‌, மட்டுவிலிலிருந்து நூணாவில்‌ சந்தியை நேக்கியும் முன்னேறின. நுணாவில் சந்தியை வந்தடைந்த அவ்வணி நாவற்குழி நோக்கி கண்டிவீதியால்‌ முன்னேறத்தொடங்கியது. எதிரி நிலைகளைத்‌ தாக்கியழித்தவாறு முன்னேறிவந்த அவ்வணி நேற்றைய நாள் வெல்லப்படாமலிருந்து பாலத்திற்கருகாமையிலான அந்த சிறுமுகாமைத்‌ தாக்கக்தொடங்கியது. எதிரி சற்றும்‌ இதனை எதிர்பார்க்கவில்லை. நேற்றைய எம்‌ முயற்சி கைவிடப்பட்டது எதிரிப்‌ படைத்தலைமைக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தது. ஒருநாள் பொழுதிற்குள் எம்மால்‌ இத்தகைய ஒரு பாரிய முன்னேற்ற செய்யமுடியுமென்று அவன்‌ நம்பியிருக்கவில்லை. ஆனால் இப்போது பெரும்‌ பரப்பை மீட்டு பின்புறமாக எதிரியைத்‌ தாக்கத்தொடங்கினோம்‌. எதிரி திகைத்து அத்தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது பின்வாங்கத் தொடங்கினான். கைதடி வடக்கு ஊர்களினூடாக உயிரிருந்த எதிரிகளெல்லாம் ஓடித்தப்பினர்‌. பாலத்தை அடுத்துநின்ற சேகரின்‌ படைத்‌தொகுதியும், முன்னேறிச்சென்ற இனிதனின்‌ படைத்‌தொகுதியும் கைகுலுக்கிக்கொண்டன.

நுணாவில்‌ சந்தியிலிருந்து இனிதனின்‌ படைத்தொகுதி மீண்டும்‌ கனகம்புளியடிச்சந்தி நோக்கிச்செல்ல அங்கருந்து மாலதி படையணியும்‌, 4.1 படையணியும்‌ உள்ளிட்ட சேகர்‌ தலைமையிலான படைத்‌தொகுதி சாவகச்சேரி நகரை வெற்றிகொள்வதற்காக முன்னேறியது.

இதற்கிடையில்‌ கண்டிவீதி எமது கைகளில்‌ விழுவதை உணர்ந்துகொண்ட எதிரியின்‌ படைத்தலைமை உடனடியாக கனகம்புளியடியிலிருந்து புத்தூர்‌ நோக்கிச்‌ செல்லும் வீதியைப்‌ காக்க விரும்பியது. அதற்கான வலுவெதிர்ப்புநிலைகளை அமைப்பதற்காக எதிரியின்‌ ஒரு படைத்தொகுதி வீதியால்‌ முன்னேறிக்‌கொண்டிருந்தது. இதைப்‌ காப்பதனூடாகவே வலிகாமத்‌துடனான இறுதி வழங்கல் வழியை எதிரி தக்கவைக்கமுடியும்‌. ஆனால்‌, அன்றிரவே எமது தாக்குதல் அணியொன்று அவ்வீதியில்‌ உள்ள 'வண்ணாத்திப்‌பாலத்தையும்‌' அப்பரப்பு வீதியையும்‌ கட்டுப்பாட்டினுள்‌ கொண்டுவந்திருந்தது. இதை எதிரி அறிந்திருக்கவில்லை. இப்போது முன்னேறிய படையினரை தாக்கத்‌ தொடங்கியது எமது அணி. ஒரு கடுமையான சண்டையின்பின்‌ எதிரி இறந்த தனது 19 கூட்டாளிகளின் உடல்களையும்‌ கைவிட்டுவிட்டு எதிரி பின்வாங்‌கிக்கொண்டான்‌.

அந்தக்‌ கண்டிவீதியில்‌ நேற்றுவரை சோதனைச்சாவடியிலிருந்து, சிறுமுகாங்களிலிருந்து எம்மக்களின்‌ உடல்களை வருடி சோதனை செய்து, தான்‌ விரும்பிய கேள்விகள்‌ எல்லாம்கேட்டு, அடையாளப்படுத்த ஆயிரம்‌ அட்டைகள்கேட்டு திமிர்த்தனத்தோடு உலாவந்த எதிரிகள்‌ எம்வரவறிந்து ஓடிக்கொண்டிருந்தனர்‌. புலிகள்சேனை நகரைநோக்கி நகர்த்துகொண்டிருந்தது.

சாவகச்சேரி நகரை அண்மித்தபோது மாலை ஐந்து மணியிருக்கும்‌. தபாற்கந்தோர்‌ வீதிக்குக்‌ குறுக்காக, ஓடிய எதிரிகளும்‌ நகரில்‌ களமமைத்திருந்த எதிரிகளும்‌ தடுப்பரணமைத்து அந்த நிறைந்த கட்டிடத்‌தொகுதிகளை தமக்கு வாய்ப்பாக பயன்படுத்‌தி எம்மை எதிர்க்கத்தொடங்கினர்‌. எதிரி எத்தகைய எதிர்ப்பைத்தன்னும்‌ காட்டினாலும்‌ இலக்கை இழந்துவிட புலிகள்‌ தயாரா? அப்பரப்பில் கடுமையான சண்டையிலிறங்கின இருதேசத்தின்‌ படைகளும்‌. ஒன்றரை மணிநேர சண்டையின்பின்‌ எதிரியின்‌ தடுப்பை உடைத்து உள்நுழைந்த புலிகள்‌ கட்டிடங்களைக்‌ காப்பாகப்‌ பயன்படுத்‌தி வேகமாக அந்த நகர்ப்பரப்புயெங்கும் நுழைந்துகொண்டனர்‌. எதிரி எதிர்ப்புவரும்‌ இடத்தைக்கூட சரியாகக்‌  கணிக்கமுடியாது தடுமாறினான்‌. தமக்குள்‌ தொடர்பில்லாது சிதறுண்டான்‌. உயிர்தப்பிய எதிரிகள்‌ ஓடத்தொடங்கர்‌. நகர்‌ எம்கையில்‌ வீழ்ந்தது. அப்போது நேரம்‌ மாலை 7:00 மணியாயிருந்தது. அன்றைய நாள் மே 19.

மறுநாள் மீட்கப்பட்ட பரப்பினுள் மக்களிடமிருந்து உணவு வந்தது. நடவடிக்கையில்‌ ஈடுபட்ட சிலநாட்களாக நீரேரி கடந்து வங்கல் வரவேண்டியிருந்ததால்‌ காக்கப்படக்கூடிய உணவுகளையே தொடர்ந்து உண்ண வேண்டியிருந்தது. அந்த உணவுதந்த சலிப்பில்‌ எங்கள்‌ நாக்கு திணறியபோது ஆட்டுக்கறியுடன்‌ வந்த சோறு அமிர்தமாய்‌ இருந்தது. போராளிகளைக்கண்ட பூரிப்போடு தங்கள்‌ நான்கு ஆண்டுகள் ஆதங்கத்தை அன்றே கொட்டிவிடத்துடித்தார்கள்‌ எம்மக்கள்‌. தெரிந்த போராளிகளை, உறவுக்காற போராளிகளைக்‌ கண்டபோது அவர்களடைந்த மகிழ்ச்சி மட்டற்றது.

ஒரு ஐயா சொன்னார்‌,

"நுணாவில்‌ ரோட்டில வழமையாய்‌ செக்பண்ணிற ஆமி செத்துக்கிடந்தான்‌ தம்பி.  உங்கட ஆக்களிட்ட அதுக்கை துவக்கும்‌ கிடக்கெண்டு காட்டினான்‌. அவையள்‌, அதையெடுக்கப்‌ பிறகு வேறயாக்கள்‌ வருவினம்‌ எண்டு சொல்லிப்‌ போட்டு போட்டினம்‌. உங்களுக்கு இப்ப உதுகள்‌ சின்னச்‌ சாமாங்கள்போல"

என்று கூறிக்கொண்டே சிரித்தார்‌. அதில் ஆச்சரியமுமிருந்தது.

இன்னுமொரு வீட்டில்‌ நாற்பத்தைந்து, வயது மதிக்கத்தக்க குடும்பத்தர்‌ ஒருவருடன்‌ கதைத்துக்கொண்டிருந்தோம்‌. இடையில்‌ எழுந்து உள்ளே சென்றவர்‌ சில அட்டைகளை கொண்டுவந்து கிளித்துப்போட்டார்‌.

"நாசமாய்ப்போன காட்டெல்லாம்‌ இண்டையோட துலைஞ்சுபோகட்டும்‌ தம்பி. என்ர அண்ணன்ர பெட்டை எங்கட வீட்ட வாறதெண்டால்‌, இஞ்சத்தய கொமாண்டரிட்ட போய்‌ அவையள்‌ தந்த அட்டையைக்கொடுத்து பதிஞ்சுபோட்டுத்தான்‌ வரவேணும்‌. நல்ல விளையாட்டு, எளிய..."

அவர்‌ ஆத்திரத்துடன்‌ திட்டிக்கொண்டிருந்தார்‌. அந்த நிலத்தை மீட்டலும்‌, இனி மீட்கப்படவிருக்கும்‌ யாழ்‌ மண்ணிற்காகவும்‌ எங்கள்‌ உணர்வுகளூள்‌ உந்தவா பொங்கிவழிந்தது.

23ம் திகதி சாவகச்சேரியிலிருந்து முன்னேறிய சோதியா, தலைநகர்‌ படையணிகள்‌ பெரும்குளம்‌ சந்தியைக்‌ கைப்பற்றியதும் எம்மால் மீட்க்கப்பட்ட பரப்பை தக்கவைப்பதற்கான வலுவெதிர்ப்பு நிலைகளை அமைப்பதில்‌ எமது படையணிகள்‌ அவசரமாக ஈடுபட்டன.

ஓயாத அலைகள்‌ - 03 கட்டம்‌ - 5 நடவடிக்கை, யாழ்குடாநாட்டு மீட்பிற்காக புலிகள்‌ தொடங்கவிருக்கும்‌ பெரும்‌ சமரிற்கான இயங்குதளத்தைப்‌ பெற்றுக்கொள்ளும்‌ தன்‌ இலக்கை வெற்றி கொண்டது. கட்டம்‌- 3இல்‌ கிழக்கரியாலை, தனங்கிளப்பு ஆகிய குறுநிலங்களை மீட்டு தக்கவைத்ததன்‌ மூலம்‌ எம்மால்‌ இத்தகையதொரு படைநகர்த்தலை மேற்கொள்ள முடிந்தது. அடுத்து யாழ்குடாநாட்‌டு படையினரின் பெரும்‌ வலும்மீது போர்‌ தொடுப்பதற்கான இயங்குதளத்தைப்‌ பெற்றுக்கொள்வது எமது உடனடித்‌ தேவையாக இருந்தது. மருத்துவம்‌, வழங்கல், சேமயிருப்பு அணிகள்‌, ஆயுதக்‌ களஞ்சியம், கணையெக்கி, தெறோச்சி தளங்கள்‌ ஆகியவற்றை உள்ளடக்கக்கூடிய ஒரு தளப்பரப்பை கைப்பற்றி, அச்சுறுத்தலற்றவகையில்‌ தக்கவைப்பதே 40,000ம்‌ தொகைகொண்ட யாழ்குடாநாட்டு படையினர்‌ மீதான சமரிற்கு ஆதாரமாக அமையும்‌, அதில்‌ முக்கியமானது, யாழ்குடாநாட்டில்‌ நிலைகொண்டுள்ள எந்த படைத்தளம்மீதும்‌ சேணேவித் தாக்குதல்‌ நடாத்தக்கூடிய நிலப்பரப்பை மீட்பதனூடாகவே குடாநாட்டை வெற்றிகொள்ளும்‌ பெரும்‌ சமரிற்கான படைநகர்த்தலை எம்மால்‌ செய்யமுடியும்‌ என்பதே. அதற்காக தலைவரால்‌ வரையப்பட்ட திட்டமிடலின்படி தேவையான நிலவகலத்தை மீட்டெடுத்துக்கொண்டனர்‌ புலிகள்‌.

ஆனால்‌, எம்மால்‌ மீட்கப்பட்ட கோட்டங்களை மீளக்‌ கைப்பற்றிவிட இருதடவை இருமுனைகளில்‌ எதிரிப்‌ படைத்தலைமை தன்வலுவையும்‌, வளத்தையும்‌ ஏவல்செய்து பார்த்தது. 30ம்‌ திகதி அதிகாலை 5:30ற்கு கொழும்புத்துறை பகுதியூடாகவும்‌ 09ம்‌ திகதி காலை 5:50 ற்கு கனகம்புளியடிப்‌ பரப்பிலிருந்து மூன்று திசைகளிலும்‌ எதிரி முன்னேற முயன்றான்‌. ஆனால்‌, இத்தகைய முன்னேற்ற முயற்சியை எதிர்பார்த்திருந்த புலிகள்‌ அதைத்‌ துணிகரமாக எதிர்கொண்டு மீளக்‌ கைப்பற்றும்‌ எதிரிப்படைத்தலைமையின்‌ எண்ணத்திற்கு சிதைமூட்டினர்‌. புலிகள்‌ பற்றிய தப்பான கணிப்பீட்டினால்‌ பெருந்தொகையான படையினரை எதிரி இந்‌த முன்னேற்ற முயற்சிகளில்‌ பலிகொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு தங்களின்‌ உடல்களைத்‌ தவிர வேறொன்றும்‌ அங்கிருக்கவில்லை. புலிகளால்‌ இந்நடவடிக்கையில்‌ மீட்கப்பட்ட பரப்பு யாழ்குடாநாட்டுப் படையினரின்‌ மீட்சியற்ற பொறிக்கு வியூகம்வகுத்தது.

ஏற்கனவே யாழ்ப்‌பாணத்தின்‌ தெற்குப்‌ புறத்தில் வன்னியுடனான தரைத்தொடர்புடன்‌, நாகர்கோவில்‌-எழுதுமட்டுவாள்‌ இணைத்த பரப்பி எமது நிலைகள்‌ அமைந்‌திருந்த நிலையில்‌, இந்த நடவடிக்கையின்‌ முடிவில்‌ கொழும்புத்துறை, கைதடி, மட்டுவில்‌, சாவகச்சேரியென இணைத்த ஒரு தளப்பகுதியை நாம்‌ கைப்பற்றியதன்‌ மூலம்‌ பக்கவாட்டாக வலுவான ஒரு புறப்படு தளத்தை அமைத்துக்கொண்டோம்‌. அத்துடன்‌ பலாலி, காங்கேசன்துறை ஆகிய கேந்திர முக்கியத்துவம்மிக்க தளங்கள்‌ மீதும்‌, யாழில்‌ எந்தப்‌ பரப்பு மீதும்‌ எறிகணைத்‌ தாக்குதல்‌ நடாத்தக்கூடிய, எத்திசையில்‌ முன்னேறும்‌ எமது அணிகளுக்கும்‌ கணையெக்கி, தெறோச்சி சூட்டாதரவை வழங்கத்தக்க தொலைவில் எங்கள்‌ இயங்குதளத்தைப்‌ பேணிக்கொண்டோம்‌. அதேநேரம்‌ யாழ்ப்பாண படையினர் தன்‌ இருப்பிற்குத்‌ தங்கிநிற்கும்‌ கடல்வழி வழங்கலின் மீது உறுதியான அச்சுறுத்‌தலை வழங்கக்கூடியவாறு கடல்சார்‌ சமர் நடவடிக்கைகள்‌ வலுப்படுத்தப்பட்டன. சிறீலங்கா படையினரின் தாக்குதற்‌ போர்வலு யாழ்ப்பாணத்தில்‌ குவிக்கப்பட்டுள்ள நிலையில்‌, அதன்‌ மீதான புலிகளின்‌ போர்வியூகம்‌, உடைக்கப்பட முடியாத பூட்டாக இறுக்கப்பட்டு புதிய வடிவெடுத்துள்ளது இன்று. நாளைய அதன்‌ தலைவிதியைத்‌ தீர்மானித்துவிட, தலைவரிடமிருந்துவரும்‌ திட்டத்திற்தம்‌, கட்டளைக்குமாக பொறுத்திருக்கிறது சமர்க்களம்‌. பகைவன்‌ மூச்சிழந்த காற்றில்‌ தன்‌ பறப்பிற்காகக்‌ காத்திருக்கிறது புலிக்கொடி. வீரப்புலிகளின்‌ வெற்றிப்‌ பரணியையே இனித்‌ தமிழர்தேசம்‌ பாடும்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

முழு விரிப்பு

 

ஓயாத அலைகள் மூன்று

கட்டம்-5 | மே 9 - மே 25

 

 

மூலம்: 'எரிமலை', ஓகஸ்ட்‌ 2000, பக்கம்: 24 - 29 
மூல எழுத்தாளர்: பாரதி
எழுத்துணரியாக்கம் & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன்,  05|1|2022

 

 

மீளாத பொறிக்குள் மூழ்கப்போகும் இராணுவம்

 

யாழ் வன்வளைப்புப் படையின் இருப்பானது 'இரும்பு வலயம்‌' என வருணிக்கப்படும்‌ ஆனையிறவுப்‌ பெருந்தளத்தின்‌ இருப்பிலேயே தங்கியிருந்தது. ஆனையிறவுத்‌ தளமானது புலிகளால்‌ வெற்றி கொள்ளப்பட்டபின்‌ யாழ்‌ வன்வளைப்பு படை ஆட்டம்‌ காணத்‌தொடங்கியது. உலக நாடுகள்‌ பலவும்‌, பல படைய ஆய்வாளர்களும்‌ இனி யாழ்ப்பாணம்‌ புலிகளின்‌ கையில்‌ விழுவதற்கான சாத்தியக்கூறே மிகப்‌ பெருமளவில்‌ உண்டு என்பதைக்‌ கூறிக்‌கொண்டிருக்க, ஓயாத அலைகள்‌ மூன்றின்‌ கட்டம்‌ - 05 ஆக புலிகள்‌ யாழ்நகர்‌ நோக்கி அலைப்‌ பயணத்தைத்‌ தொடங்கினர்‌. எதிரியின்‌ முதன்மை வழங்கல் வீதிகளை உடறுத்துத்‌ துண்டாடிக்கொண்டு குறிப்பிட்ட தளங்‌களைத்‌ தாக்கி அழித்து அப்பரப்புகளைக் கைப்பற்றுவதென்பதுதான்‌ ஓயாத அலைகள்‌ மூன்று கட்டம்‌-05இன்‌ இலக்காக தேசியத்‌ தலைவர்‌ அவர்களால்‌ திட்டமிடப்பட்டிருந்தது. அதன்‌ அடிப்‌படையில்‌ இலக்கை அடைவதற்கு நான்கு கட்ட நகர்வுகளை புலிகள்‌ வெற்றிகரமாக மேற்கொண்டனர்‌.

large.250449258_unceasingwaves3jaffnamovement.jpg.1057cde5158e702d5c5024a4d805282d (1).jpg

'தென்மராட்சி நிலவரைபடம் | பச்சையால் குறிப்பிட்ட பரப்பில் அன்றூஸ் நிறுவனம்;
சிவப்பால் குறிப்பிட்ட பரப்பில் பம் மோட்டார் நிறுவனம்'

 

  • முதலாங்கட்ட நகர்வு:

வலிகாமத்திற்கும்‌ தென்மராட்சிக்குமான முதன்மை வழங்கல் பாதையாக இருந்த யாழ்‌. கண்டி வீதியை அரியாலைக்கும்‌ நாவற்குழிக்கும்‌ இடைப்பட்ட பரப்பில் புலிகள்‌ அணிகள்‌ ஊடறுத்து நிலைகொள்வதன்‌ மூலம்‌ வீதியை துண்டாடுவதே இந்‌நகர்வின்‌ இலக்காக இருந்தது. அதன்‌ அடிப்‌படையில்‌ நீரேரி கடந்து கிழக்கரியாலையில்‌ இருந்த எமது நிலைகளைச்‌ சென்றடைந்த மாலதி படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் விதுஷா தலைமையிலான யமுனாவின்‌ அணியும்‌, சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியும்‌ 10ஆம்‌ திகதி அதிகாலை 1.30 மணியளவில்‌ எதிரியின்‌ முன்னரங்க நிலைகளை நோக்கி முன்னேறின.

சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்படையணி முதலில்‌ முன்னேற எதிரியின்‌ இடதுபக்க முன்‌னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை மாலதி படையணியின்‌ ஒரு அணியும்‌, வலது பக்க முன்‌னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை மாலதி படையணியின்‌ இன்னொரு அணியும்‌ தாக்கியழித்‌தபடி முன்னேற மாலதிபடையணியின்‌ மற்‌றொரு அணி கண்டிவீதியை நோக்கி முன்னேறியது. செம்மணிப்‌ பரப்பை அண்டிய முதன்மை வீதியில்‌ ஏறிவிட்டிருந்த இவ்‌ அணியின்‌ பணியாக தென்மராட்சியில்‌ இருந்து யாழ்‌ நகருக்கான படையினரின் நகர்வையும்‌ நல்லூர்‌-செம்மணி வீதியால்‌ மேற்கொள்‌ளப்படும்‌ படையினரின் நகர்வையும்‌ தடுத்து நிறுத்துவதாக இருந்தது. அதற்கமைய விடிவதற்குள்‌ வேகவேகமாக நிலைகளை அமைத்து எதிரியின்‌ முன்னேற்றத்தை முறியடிக்க நிலையெடுத்து எதிர்பார்த்திருந்தனர்‌ பெண்புலிகள்‌. அடுத்த நாள்‌ நாவற்குழி முகாமில்‌ இருந்து எதிரிப்படை தெறோச்சிகள், கணையெக்கிகளின்‌ சூட்டாதரவுடன்‌ கனவகை ஊர்திகள் சகிதம்‌ எமதணிகள்‌ நின்ற பரப்பை நோக்கி முன்னேறியது. முன்‌னேறிய படையினரைத்‌ தடுத்து நிறுத்த கடும்‌சமர்‌ புரியவேண்டியிருந்தது அங்கு நின்றுகொண்டிருந்த மாலதி படையணிக்கு.

இச்சமரை எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு நடுவில் முகம்கொடுக்க வேண்டியிருந்தது என்பது பற்றி ஒரு பெண்‌ போராளி கூறினாள்‌.

“நாங்கள்‌ நிலை அமைத்து நின்ற பகுதியோ பெரும்‌ உப்புவெளிப்‌ பகுதி. வெட்டிய எமது அகழிகளுக்குள்‌ அரைவாசிக்கு உப்‌புத்‌ தண்ணி நின்றது. அதற்குள்‌ நின்றுதான்‌. சண்டை பிடிக்க வேண்டியிருந்தது. உடம்‌பெல்லாம்‌ உப்புத்‌ தண்ணிபட்ட அரிப்பு ஒரு புறம்‌, சுட்டெரிக்கும்‌ வெய்யில்‌ ஒரு புறம்‌ அதைவிட வெட்டை கடந்த மரக்கூடல்களில்‌ இருந்து எதிரியின்‌ 'குறிசூட்டு' தாக்குதல்‌ மறுபுறம்‌, தலைநிமிர்த்த முடியாத எறிகணை அடி, எறிகணை அடியில்‌ தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த பற்றைகளில்‌ இருந்து வந்த அனல்க்காற்று இன்னொரு புறம்‌. எல்லா வெக்கையும்‌ சேர்ந்து தாகம்‌ ஒரு புறம்‌. தண்ணி அற்ற நிலை. நாக்கெல்லாம்‌ வறண்டு போயிருந்தது. இவற்றையெல்லாம்‌ சகித்துக்கொண்டு வெட்டையில்‌ நின்று நாம்‌ எதிரியுடன்‌ கடுமையாகச்‌ சண்டை பிடிக்க வேண்டியிருந்தது.”

அவள்‌ கூறியபோது அந்‌தக்‌ கடுமையான களச்சூழலே அவர்களை எதிர்த்துப்‌ போரிட்டதுபோல்‌ இருந்தது. கடினமான அச்‌ சூழலிலும்‌ நாவற்குழியாலும்‌ செம்மணி வீதியாலும்‌ பல தடவை முன்னேற முயன்ற எதிரிகளை அவர்கள்‌ முறியடித்தார்கள்‌.

முன்னரங்க காவலரண்களை தாக்கும்‌ பணியில்‌ எதிரியின்‌ வலதுபக்க முன்னரங்க நிலைகளைத்‌ தாக்கி அழித்தபடி முன்‌னேறிய மாலதி படையணி தென்னந்தோப்‌பில்‌ இருந்த சிறுமுகாமில்‌ எதிரியின்‌ கடுமையான எதிர்ப்பைச்‌ சந்தித்தது. இங்கு இவ்வணி எதிரிப்படையுடன்‌ உக்கிர சமர்‌புரியநேரிட்டது. முடிவில்‌ துருப்புக்களின்‌ இழப்புக்களுடன்‌ அம்முகாம்‌ எமதணிகளின்‌ கையில்‌ வீழ்ந்தது.

அரியாலைச்‌ சந்திக்கண்மையில்‌ தென்‌னந்தோப்புக்குள்‌ மண்‌ அணைகளின்‌ வலுவெதிர்ப்புடன்‌ வலுப் பொருந்தியதாய்‌ இருந்த அரியாலை படைத்தளத்தை தாக்கியழிப்பதற்காக பரந்த வெளிப்பகுதியால்‌ எதிரியின்‌ கடும்‌ எதிர்ப்புக்கு முகம்‌ கொடுத்‌தபடி உக்கிரச்‌ சமர்‌ புரிந்தது சாள்ஸ்‌ அன்‌ரனி சிறப்புப்‌ படையணி. அவர்களுக்கு உதவி அணியாக மாலதி படையணியின்‌ ஒரு அணியும்‌ சென்றிருந்தது. நீண்ட கடும்‌ சண்டையின்‌ பின்னர்‌ எதிரிக்கு முற்றுமுழுதாகச்‌ சாதகமான சூழலுக்குள்‌ இருந்த அத்தளமும்‌ புலிகள்‌ அணிகளின்‌ முரட்டுத்‌தனமான தாக்குதலால்‌ 11ஆம்‌ திகதி நண்‌பகல்‌ 12.45 மணியளவில்‌ கைப்பற்றப்பட்டது. அதே நேரம்‌ இடதுபக்க முன்னரங்க நிலைகளை தாக்கியழித்தபடி முன்னேறிய மாலதி படையணி கிழக்கு அரியாலை வீதியில்‌ வலுவுடன்‌ நின்ற எதிரிப்‌ படையின்‌ தாக்‌குதலுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்‌தது. இதில்‌ எதிரியின்‌ கடுமையான எதிர்ப்‌பைச்‌ சந்தித்த இவ்‌ அணி எதிரிக்கு இழப்பை எற்படுத்தி வீதியைக்‌ கைப்பற்றியபடி மணியந்தோட்ட படைத்‌தளத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறியது. அங்கும்‌ எதிரியுடன்‌ கடும்‌ சமர்‌ புரியவேண்டியிருந்தது. அங்கு நடந்த பெரும்‌ மோதலின்‌ பின்‌ பகல்‌ 1.45 மணியளவில்‌ மணியந்தோட்ட படைத்‌தளமும்‌ எமதணிகளின்‌ கையில்‌ வீழ்ந்தது.

பின்னர்‌ அங்கிருந்து இவ்வணிகள்‌ கொழும்புத்துறை இறங்குதுறை நோக்கி முன்னேறின. கொழும்புத்துறைப்‌ பரப்பு கட்டடங்கள்‌ நிறைந்த பரப்பு, அங்கு முன்‌னேறிய எமதணிகள்‌ முன்னேறும்‌ ஒவ்வொரு சதுர அடிக்கும்‌ கடுமையாகச் சமரிடவேண்டியிருந்தது. ஏனெனில்‌ ஒவ்வொரு கட்டிடத்தின்‌ மதிலுக்கும்‌ ஒரு பக்கத்தில்‌ எமதணிகள்‌ நின்றால்‌ மறுபக்கத்தில்‌ எதிரி அணிகள்‌ நின்றன. எமதணிகள்‌ கட்டிடச்‌ சண்டைக்கு புதியவையாக இருந்தபோதிலும்‌ புயல்வேகம்‌ மிக்கவர்களாக போராளிகள்‌ மன ஓர்மத்துடன்‌, முன்னேறும்‌ வழியில்‌ எதிர்த்து நின்ற எதிரிகளையெல்லாம்‌ முறிபடித்தபடி கொழும்புத்துறை படைத்‌தளம் மீது உக்கிரச்சமர்‌ புரிந்தனர்‌. 

தொடர்ச்சியாக எதிரியின்‌ நிலைகளையும், தளங்களையும்‌ தாக்கியழித்தபடி முன்‌னறியதால்‌ உணவு உண்ணவோ, ஓய்‌வெடுக்கவோ நேரம்‌ அற்று இருந்த இவர்‌கள்‌ தங்கள்‌ உடற்களைப்பையும்‌ பொருட்‌படுத்தாது சமரிட்டதில்‌ கொழும்புத்துறை படைத்தளமும்‌ அன்றைய நாளின்‌ காலைப்‌ பொழுதிலேயே எமதணிகளின்‌ கையில்‌ வீழ்ந்தது. கொழும்புத்துறை இறங்குதுறையும்‌ இவ்‌ அணிகளால்‌ மீட்டெடுக்கப்‌பட்டது. அதன்‌ பின்‌ இவ்‌ அணிகளுடன்‌ அரியாலைப்‌ பரப்பில் நின்ற சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணி இணைப்பை ஏற்படுத்தி ஒரு வலுவெதிர்ப்பு தடுப்புவேலியாக நிலைகளை அமைத்து மீட்டெடுக்கப்பட்ட பரப்புகளை காத்து நின்றதுடன்‌ முதற்‌ கட்ட நகர்வின்‌ இலக்கு நிறைவு செய்யப்‌பட்டது.

  • இரண்டாங்கட்ட நகர்வு:

யாழ்‌-கண்டி வீதியை ஊடறுத்து நிற்கும்‌ புலிகள்‌ அடுத்த கட்டமாக தங்கள்‌ பரப்பை நோக்கி முன்னேறுவார்கள்‌ என்பதை புரிந்து வைத்திருந்த தனங்கிளப்பு, கோயிலாக்கண்டி படைத்தளங்களில்‌ இருந்த எதிரிப்‌ படையினர்‌ வேகமாக மேலும்‌ வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளைச்‌ செய்து தம்‌ தளங்களை வலுப்படுத்தினர்‌. ஏனெனில்‌ இத்‌ தளங்களின்‌ இருப்பில்தான்‌ சாவகச்சேரி நகரின்‌ இருப்‌பானது தங்கியிருந்தது. நன்கு அரண்‌ செய்யப்பட்டும்‌, வலுவெதிர்ப்பு உறுதிசெய்யப்பட்டதுமான இவ்விரு படைத்தளங்கள்‌ மீதான தாக்குதலை 11ஆம்‌ திகதி காலை தலைநகர்‌ படையணியும்‌, கடற்புலிகளின்‌ தாக்குதல்‌ கலத்தொகுதிகளும்‌ மேற்கொண்டன. கடற்‌கரையை அண்டிய படைத்தளமாக கோயிலாக்கண்டி படைத்தளம்‌ இருந்‌தமையால்‌ இத்தளம்‌ மீது கடற்புலி தாக்குதல்‌ கலத்தொகுதிகள்‌ இத்தள முன்‌னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை வேகமாகத்‌தாக்கி பிய்த்தெறிந்ததுடன்‌ தரைப்படையணியின்‌ நகர்வுக்கான செறிவான சூட்டையும்‌ வழங்‌கின. கடற்கரை வீதியால்‌ முன்னேறிய தலைநகர்‌ படையணி தளத்தின்‌ முன்னரங்க நிலைகளை உடைத்தழித்தவாறு உட்‌புகுந்து உக்கிரச்சமர்‌ புரிந்து எதிரித்‌தளத்தை மாலை 5.30 மணியளவில்‌ கைப்‌பற்றியது. அதே நேரத்தில்‌ தனங்கிளப்பு படைத்தள முன்னரங்க நிலைகளை உடைத்தெறிந்தவாறு உட்புகுந்து கடும்‌சமர்‌ புரிந்து கொண்டிருந்த இம்ரான்‌-பாண்‌டியன்‌ படையணியின்‌ கையில்‌ மாலை 6.30 மணியளவில்‌ தனங்கிளப்பு படைத்தளமும்‌ வீழ்ந்தது. இரு படைத் தளங்‌களின்‌ வீழ்ச்சியின்‌ பின்‌, பின்வாங்கிய படையினர்‌ புலிகளின்‌ அடுத்த கட்ட நகர்வைத்‌ தடுத்து நிறுத்தும்‌ நோக்குடன்‌ தனங்கிளப்பு - சாவகச்சேரி வீதியின்‌ இடையில்‌ இருந்த சிறுமுகாமையும்‌ தொடர்வண்டிப் பாதையையும்‌ நாவற்குழிவரை இணைத்து பெரும்‌ தடுப்பு வேலியைப்‌போட்டனர்‌.

அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக புதிய அணிகள்‌ வரவழைக்கப்பட்டன. மாலதி படையணியின்‌ துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நிஸ்மியா தலைமையிலான அணியும்‌ சோதியா படையணியின்‌ துணைக் கட்டளையாளர் மேஜர் செல்வி தலைமையிலான அணியுமே அப்புதிய அணிகள்‌ ஆகும்‌. நாவற்‌குழி - கைதடி வீதிக்கு ஏறி முதலாம்‌ கட்ட நகர்வு அணிகளுடன்‌ இணைப்பை ஏற்படுத்துவதற்காக தலைநகர்‌ படையணியும்‌, மாலதி படையணியும்‌ கடற்கரை வீதியால்‌ எதிரியால்‌ புதிதாக உருவாக்கப்பட்டிருந்த முன்‌னரங்க நிலைகளை தாக்கியழித்தவாறு நாவற்‌குழி-கைதடி வீதியை நோக்கி முன்னேற தச்சன்தோப்பு ஊரை கைப்பற்றுவதற்‌காக சோதியா படையணி தச்சன்தோப்புக்‌கான பாதையால்‌ மாலை 4.00 மணியளவில்‌ முன்னேறியது.

தச்சன்தோப்பு ஊரை வலுவெதிர்த்து தொடர்வண்டிப்பாதையில்‌ அமைத்திருந்த எதிரியின்‌ முன்னரங்க நிலைகளின்‌ வலதுபக்க நிலைகளை சோதியா படையணியின்‌ ஒரு அணி உடைத்தழித்து கைப்பற்றியவாறு முன்னேற, இன்னொரு அணி அதன்‌ இடதுபக்க நிலைகளை உடைத்தழித்து கைப்‌பற்றியவாறு முன்னேற, மற்றைய அணி தச்‌சன்தோப்பு ஊரை நோக்கி முன்னேறியது. பெரும்‌ வெட்டவெளிப் பகுதியால்‌ எதிரியின்‌ கடும்‌ வலுவெதிர்ப்புக்களையெல்லாம்‌ முறியடித்து எதிரியின்‌ வலம்‌, இடம்‌ என 1500 மீற்றர்‌ நீளம்‌ உள்ள முன்னரங்க நிலைகளை கைப்பற்றி அன்றைய இரவுப்‌ பொழுதுக்‌குள்ளாகவே தச்சன்தோப்பு ஊரையும் வெற்றிகரமாக மீட்டெடுத்தார்கள்‌ அப்‌போராளிகள்‌.

இப்பொழுது முதலாம்‌ கட்ட நகர்வு அணிகளான மாலதி படையணியாலும்‌, சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியாலும்‌ நாவற்குழிப்பாலம்‌ வெற்றிகொள்ளப்பட்டிருந்தது. இவ்‌ அணிகள்‌ அங்கிருந்து 15ஆம்‌ திகதி காலை நாவற்குழிப்பாலத்திற்கும்‌ நாவற்குழிச்சந்திக்கும்‌ இடையில்‌ அமைந்‌திருந்த அன்றூஸ்‌ கொம்பனி படைத்தளத்தையும்‌, நாவற்குழிச்சந்தி படைத்தளத்தையும்‌ தாக்கியழிப்பதற்காக முன்‌னேறின. இவ்விரு தளங்களைப்‌ பொறுத்தவரையில்‌ வலிகாமத்திற்கும்‌ தென்மராட்‌சிக்குமான முதன்மை வழங்கல் பாதையாக யாழ்‌-கண்டிவீதி இருந்தமையால்‌ இவ்‌ வீதியின்‌ வலுவெதிர்ப்பிற்காக எதிரிக்கு சாதகமான சூழலைக்கொண்ட இடத்திலேயே இத்தளங்‌களை நிறுவியிருந்தது சிங்களப் படைத்துறை.

ஓயாத அலைகள்‌ - 03 இன்‌ கட்டம்‌ 03 மூலம்‌ கிழக்கரியாலையில்‌ நிலைகொண்டிருந்த எமதணிகள்‌ முதன்மை வீதிக்கு ஏறும்‌ பேரிடர் ஏற்கனவே இருந்த போதிலும்‌ இவ்விரு படைத்தளங்களில்‌ இருந்த எதிரிப்படையினர்‌ புலிகளை முறியடித்துவிடலாம்‌ என்பதையே நம்பினர்‌. ஏனெனில்‌ அதியுயர் வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளுடனும்‌ பாரிய வலுவுடனுமே இவ்விரு படைத்தளங்‌களும்‌ இருந்தன. அப்படிப்பட்ட இத்தளங்‌கள்‌ மீதே முரட்டுத்தனமான தாக்குதலை மேற்கொண்டன எமதணிகள்‌.

அவ்விரு தளங்களையும்‌ தக்கவைக்கவென எதிரியணிகளும்‌, அத்தளங்களைக்‌ கைப்பற்றவென புலிகள்‌ அணிகளும்‌ இருநாட்களாக இடைவிடாது உக்கிர மோதலில்‌ ஈடுபட்டன. இறுதியில்‌ 17ஆம்‌ திகதி கிட்டு பீரங்கிப்‌ படையணியினர்‌ செறிவான சூட்டை வழங்க, எமதணிகள்‌ மேற்கொண்ட ஆவேசமான உக்கிர தாக்குதலில்‌ அன்றூஸ்‌ கொம்‌பனி படைத்தளமும்‌ நாவற்குழிச்சந்தி படைத்தளமும்‌ காலை 10.00 மணியளவில்‌ எமதணிகளின்‌ கையில்‌ வீழ்ந்தன.

அதேநேரம்‌ நாவற்குழி-கைதடி வீதிக்கு ஏறிய தாக்குதலணிகள்‌ இவ்வணிகளுடன்‌ இணைப்பை ஏற்படுத்தின. இணைந்துகொண்ட அன்றே இவ்வணிகள்‌ எல்லாம்‌ கைதடி நோக்கிய முன்னேற்றத்தை மேற்‌கொண்டன. வலிகாமத்திற்கும்‌ தென்மராட்‌சிக்குமான இரண்டாவது வழங்கல் பாதையாக கைதடி-கோப்பாய்‌ வீதி இருந்தது. இவ்‌வீதியைப்‌ காக்க கைதடி படைத்தளத்தை எதிரி அமைத்திருந்தான்‌. அன்‌றூஸ் கொம்பனி, நாவற்குழிச்சந்தி படைத்தளங்கள்‌ புலிகளால்‌ மீட்கப்பட்டவுடன்‌ கைதடி-கோப்பாய்‌ வழங்கல் வீதியின்‌ இருப்பும்‌ கேள்விக்குறியாக மாறிவரும்‌ பேரிடரை உணர்ந்து கொண்ட எதிரிப்‌படை அவசரவசரமாக மேலதிக படையினரையும்‌ வரவழைத்து கைதடி படைத்தளத்தை உச்ச வலுவெதிர்ப்பில் வைத்‌திருக்க முயன்றது. ஆனால்‌ புலிகள்‌ அணிகள்‌ அதற்கான சண்டையையும்‌ தொடங்கின.

எதிரியின்‌ எறிகணை மழைக்குள்ளும்‌, வான்‌ தாக்குதல்களுக்கும்‌ நடுவில் கைதடிச்சந்‌தியை நோக்கி முன்னேறிய தாக்குதல்‌ அணிகளில்‌ சாள்ஸ்‌ அன்ரனி சிறப்புப்‌ படையணியும்‌, யமுனாவின்‌ தலைமையில்‌ மாலதி படையணியும்‌ கைதடி-கோப்பாய்‌ வீதியை அடைந்து கோப்பாய்‌ பாலத்தைக்‌ கைப்‌பற்றி எதிரியின்‌ வழங்கல் பாதையைத்‌ துண்டாடவேண்டும்‌. தலைநகர் படையணியும்‌, நிஸ்மியாவின்‌ தலைமையிலான மாலதி படையணியும்‌ 17ஆம்‌ திகதி மேற்கொண்ட உக்கிர தாக்குதலில்‌ பலத்த இழப்புக்களை எதிரிப்படைக்கு ஏற்படுத்தி கைதடி படைத்தளத்தை அன்றைய நாளே மாலை 4.00 மணியளவில்‌ மீட்டெடுத்தன. அதே நேரம்‌ கைதடி-கோப்பாய்‌ வீதியில்‌ ஏறிய எமதணிகள்‌ எதிரியின்‌ தாக்குதல்களையெல்லாம்‌ முறியடித்தபடி முன்னேறி கோப்பாய்ப்‌பாலத்தை கைப்பற்றியவுடன்‌ வலிகாமத்தில்‌ இருந்து தென்மராட்சிக்கு உதவிக்கு வரும்‌ எதிரிப்‌ படைகளை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புநிலைகளை உடனடியாக அமைத்து, வலுவெதிர்த்து நின்றன. கைதடி படைத்தளத்தை மீட்டெடுத்த தாக்குதலணிகள்‌ கைதடி வடக்கு பரப்பை அன்றைய நாளே மீட்டெடுத்தன. இவ்வாறு தென்மராட்‌சியில்‌ நிலை கொண்டிருந்த எதிரிக்கான இரண்டாவது வழங்கல் பாதையையும்‌ துண்டாடியதன்‌ மூலம்‌ இந்நடவடிக்கையின்‌ இரண்டாம்‌ கட்ட நகர்வும்‌ அதன்‌ இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

  • மூன்றாங்கட்ட நகர்வு:

வலிகாமத்திற்கும்‌ தென்மராட்சிக்குமான இரு வழங்கல் பாதைகள்‌ புலிகளினால்‌ துண்டிக்கப்பட்ட நிலையில்‌ எதிரிக்கு எஞ்சியிருந்த ஒரேஒரு வலிகாமத்திற்கான பாதை மட்டுவில்‌-புத்தூர்‌ வீதிதான்‌. இப்பாதையும்‌ புலிகளால்‌ துண்டிக்கப்படுமாயின்‌ பலாலியில்‌ இருந்து தென்மராட்சிக்கான வழங்கலை வடமராட்சிக்கான வழங்கலை வடமராட்சிக்‌கூடாகவே மேற்கொள்ளவேண்டியிருக்கும்‌. இது நீண்ட தொலைவைக் கடக்க வேண்டியிருப்பதும்‌ நேர தாமதத்‌தையும்‌ ஏற்படுத்துவது மட்டுமல்ல இடரானதுங்கூட. எனவே நிலமை மேலும்‌ இறுகி வருவதைப்‌ புரிந்து கொண்ட எதிரிப்படை இப்பாதையை காக்கும்‌ பாரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வலுவுடன்‌ இருந்தது.

இம்ரான்‌-பாண்டியன்‌ படையணியின்‌ அணியொன்று ஊடறுத்து உள்நுழைந்து, மட்டுவில்‌-புத்தூர்‌ வீதியில்‌ இருந்த வண்‌ணாத்திப்‌ பாலத்தை நோக்கி முன்னேறி எதிரியுடனான பதுங்கித்‌ தாக்குதலை மேற்‌கொண்டு, வண்ணாத்திப்பாலத்தைக்‌ கைப்‌பற்றி, புத்தூரிலிருந்து மட்டுவில் பரப்பிற்கான எதிரியின்‌ வழங்கலை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புநிலைகளை அமைத்து நிலைகொண்டது. அதே நேரம்‌ ஜெயந்தன்‌ படையணியும்‌, சாந்தா தலைமையிலான அன்பரசி படையணியும்‌ 19ஆம்‌ திகதி இரவு கைதடி வடக்கிலிருந்து மட்டுவில்‌ தெற்குப்‌ பரப்பைநோக்கி முன்னேறின. முன்னேறிய இவ்வணிகள்‌ அப்பரப்பிலிருந்த எதிரியின்‌ வலுவெதிர்ப்பு முன்னரங்க நிலைகளை வலம்‌, இடமென உக்கிர தாக்குதலை மேற்கொண்டு துடைத்தழித்‌தன. தொடர்ந்து முன்னேறிய இவ்வணிகள்‌ நுணாவில்‌-கனகம்புளியடி வீதியை அடைந்‌தன. பின்னர்‌ அங்கிருந்து இத்தாக்குதலணிகள்‌ இரு படைத்தொகுதிகளாகப்‌ பிரிந்து ஒரு படைத்தொகுதி நுணாவில்சந்தியை நோக்கி முன்‌னேற மற்றைய தொகுதி கனகம்புளியடி நோக்கி முன்னேறியது. எதிரியின்‌ எதிர்ப்‌புக்களையெல்லாம்‌ முறியடித்து முன்னேறி நுணாவில்சந்தியைக்‌ கைப்பற்றினர்‌ அவ்‌வணிகள்‌. அதிலிருந்து ஜெயந்தன்‌ படையணியின்‌ அணியொன்று கைதடி-நுணாவில்‌ வீதியால்‌ எதிரியைத்‌ தாக்கியவாறு முன்னேறி கைதடி படைத்தளத்தை வீழ்த்தி கைதடிப்‌ பாலத்தையும்‌ கைப்பற்றி நின்ற தாக்குதலணிகளுடன்‌ இணைப்பை ஏற்படுத்திக்‌கொண்டது.

இச்‌ சண்டையில்‌ ஈடுபட்ட அன்பரசி படையணி பெண்‌ போராளிகள்‌ பற்றி அணித்தலைவி மதுமிதா கூறினார்‌,

“எங்‌களைப்‌ பொறுத்தவரையில்‌ இப்பகுதியென்பது முழுக்க முழுக்க புதிது. நாங்கள்‌ கட்டிடச்‌ சண்டைக்கும்‌ புதிதானவர்கள்‌. எமக்குத்‌ தரப்பட்ட பணியை வெற்றிகரமாகச்‌ செய்து முடிக்க வேண்டும்‌ என்றதற்காக அணியொன்றின்‌ தலைவியான கியூரி என்ற போராளி தனக்குத்‌ தரப்பட்ட சண்டைக்‌களப்‌ பகுதியைப்பற்றி பூரணமாகத்‌ தெரிந்துகொண்டு களமிறங்குவதால்‌ இழப்பைக்‌ குறைத்து வெற்றிகரமாகத்‌ தரப்பட்ட பகுதியை மீட்கலாம்‌ என்ற நோக்குடன்‌ சண்‌டைக்கு முன்‌ பகலே வேவு எடுக்க தன்னை உருமாற்றியபடி எதிரி இருந்த பகுதிக்குள்‌ சென்று தரவு எடுத்து வந்தாள்‌. அத்தரவின்‌ அடிப்படையிலேயே அவள்‌ தனக்குரிய அணியைக்‌ கொண்டு சிக்கலின்றி முன்னேறி படையினரை தாக்கியழித்தாள்‌. அவளுடைய அணி அவர்களுக்கு கொடுக்கப்பட்டடணியை வெற்றிகரமாக முடித்திருந்தது. ஆனால்‌ அவ்‌வெற்றிக்கு காரணமாயிருந்த கியூரியை நாம்‌ இச்சண்டையிலேயே இழந்தோம்‌."

“மரியாள்‌ என்ற எல்‌.எம்‌.ஜி போராளிக்கு இச்சண்டையில்‌ படையினரின் பி.கே அடியில்‌ வயிற்றிலேயும்‌, காலிலேயும்‌ காயம்‌. அவளை எமது பின்களமருத்துவ நிலைக்கு போகும்‌படி கூறினோம்‌. ஆனால்‌ உறுதியாக போக மறுத்துவிட்ட அவள்‌ தனது காயத்தின்‌ வலியையும்‌ பொருட்படுத்தாது சண்டையிட்டாள்‌. படையினருடனான அந்தக்‌ கட்டிடச்‌ சண்‌டையில்‌ வேகமாக மதில்கள்‌ கடந்து ஓடிச்‌ சண்டையிட வேண்டியிருந்தது. அந்த நேரங்‌களில்கூட அப்போராளி காயங்களுடனேயே எல்‌.எம்‌.ஜியையும்‌ கொண்டு உயர்‌ மதில்‌களையும்‌ கடந்து ஓடிச்‌ சண்டையிட்டாள்‌”

என்று அந்தச்சண்டையில்‌ வெற்றிக்குப்‌ பின்‌னால்‌ இருந்த போராளிகளின்‌ கடினங்களையும்‌, அவர்களின்‌ மாண்பையும்‌ பற்றிக்‌ குறிப்‌பிட்டார்‌.

தலைநகர்‌ படையணியும்‌, மாலதி படையணியும்‌ தச்சன்‌தோப்பிலிருந்து கைதடிப்‌பாலத்திற்கு ஏறிவிட்டிருந்த சோதியா படையணியும்‌ புதிதாக வரவழைக்கப்பட்டிருந்த 4.1 படையணியும்‌ கைதடிப்‌ பாலத்தில்‌ இருந்து சாவகச்சேரி படைத்தளம்‌ நோக்கி முன்‌னேறின. மூன்று முக்கிய நகர்களைக்‌ கொண்‌டதுதான்‌ தென்மராட்சிப் புலம். பளைநகர்‌, கொடிகாமம்‌ நகர்‌, சாவகச்சேரி நகர்‌. ஓயாத அலைகள்‌ - 03 கட்டம்‌ 04இன்‌ மூலம்‌ பளைநகர்‌ புலிகளால்‌ மீட்கப்பட்டிருந்தது. எஞ்சியிருந்தது இவ்விரு நகர்களும்தான்‌. சாவகச்சேரி நகரின்‌ வீழ்ச்சி கொடிகாமம்‌ நகரின்‌ இருப்பையும்‌ கேள்விக்குள்ளாக்குமாகையால்‌ பெரும்‌ வலுவெதிர்ப்பு ஏற்பாடுகளுடனும்‌ வலுப் பொருந்தியதாகவும்‌ இருந்த சாவகச்சேரி படைத்தளம்‌ மீது உச்சக்‌கட்ட தாக்குதலை மேற்கொண்ட எமதணிகளின்‌ கையில்‌ இத்தளம்‌ 20ஆம்‌ திகதி மாலை வீழ்ந்தது. பின்னர்‌ மீட்டெடுத்த சாவகச்சேரி நகரை காக்கும்‌ நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டன இத்தாக்குதலணிகள்‌. நான்கு ஆண்டுகள் வல்வளைப்பின்‌ பின்‌ அந்த நகர்‌ எங்‌களால்‌ மீட்கப்பட்டபோது மனதில்‌ எழுந்த பூரிப்பு மட்டற்றது. எத்தனை காலம்‌ இதற்காக காத்திருந்தோம்‌ இனி ஒவ்வொன்றாக வெல்‌லப்படும்‌ பகைத்தளங்களின்‌ பின்‌ எம்‌ நிலம்‌ மீட்கப்படும்‌. 

  • மீட்டபரப்பில் தற்காப்புத்தயார்‌ நிலையில்‌ அணிகள்‌:

முன்னேறிய தாக்குதல்‌ அணிகள்‌ தமக்‌குள்‌ இணைப்பை ஏற்படுத்தி கைப்பற்றிய பரப்புகளைத்‌ தக்க வைக்கவும்‌ எதிரியின்‌ முன்‌னேற்றங்களை முறியடிக்கவுமாக வலுவெதிர்ப்பு நிலைகளை அமைத்து தடுப்பு வேலியை போடுவதே இந்நகர்வின்‌ இலக்காக இருந்தது.

அதற்கேற்றவாறு தலைநகர்‌ படையணியும்‌, சோதியா படையணியும்‌ சாவகச்சேரி தபாற்‌கந்தோர்‌ வீதியால்‌ இறங்கி பெருங்குளச்சந்‌தியை வலுவெதிர்த்து நின்ற எதிரியின்‌ நிலைகளை தாக்கியழித்தவாறு முன்னேறி பெருங்‌குளச்சந்தியை அடைய ஜெயந்தன்‌ படையணியும்‌, அன்பரசி படையணியும்‌ நுணாவில்‌-கனகம்புளியடி வீதியில்‌ இருந்து இறங்கி பெருங்குளச்சந்தியை நோக்கி எதிரியின்‌ முன்‌னரங்க நிலைகளை உடைத்தழித்தவாறு முன்‌னேறி பெருங்குளச்சந்தியை அடைய இவ்விரு தாக்குதலணிகளும்‌ இணைப்பை ஏற்‌படுத்திக்கொண்டன. இவ்வாறே கொழும்புத்‌துறை தொடக்கம்‌ கனகம்புளியடி, சாவகச்சேரி, கச்சாய்‌ கடற்கரை வரை எமது அணிகள்‌ இணைந்து வலுவெதிர்ப்பு நிலைகளை அமைத்துக்‌கொண்டன.

  • எதிரியின்‌ முன்னேற்றமும்‌ புலிகளின்‌ முறியடிப்பும்‌:

எதிரியின்‌ முதல்‌ முன்னேற்ற முயற்சி கொழும்புத்துறையை புலிகளிடம்‌ இருந்து மீளக்‌ கைப்பற்றுவதாகவே இருந்தது. 30ஆம்‌ திகதி எமது அணிகளின்‌ வலுவெதிர்ப்பு முன்னரங்க நிலைகள்‌ மீது எதிரி கணையெக்கிகள்‌, தெறோச்சிகள்‌, பல்குழல் உந்துகணை செலுத்திகள்‌ போன்றவற்றால்‌ செறிவான சூட்டை வழங்கித்‌ தாக்கியபடி தொடர்வண்டிப்பாதையின்‌ வலம்‌, இடம்‌ என எமது நிலைகளை உடைத்துக்‌கொண்டு முன்னேறி உள்‌ நுழைந்துவிட்டான்‌. பாதையின்‌ வலதுபக்க முன்னரங்க நிலைகளில்‌ நின்ற அன்பரசி படையணி எதிரியுடனான வலுவெதிர்ப்புச் சண்டையை மேற்கொண்டது. ஆயினும்‌ இடப்புறம்‌ உள்நுழைந்த எதிரியால்‌ பக்கவாட்டாலும்‌, முன்புறம்‌ இருந்தும்‌ கிடைக்‌கும்‌ எதிர்ப்பை முறியடிக்கவேண்டிய இடரானதும், நெருக்கடியானதுமான சூழல்‌ இவர்‌களுக்கு. ஏனெனில்‌ பக்கவாட்டாக முன்னேறிய எதிரிகளால்‌ பின்வளைக்கப்படக்கூடிய இடரான நிலையும்‌, இவர்களுக்கான எமது உதவி அணிகள்‌ வரும்வரை வழங்கல் அற்ற நிலையில்‌ போராடவேண்டிய நெருக்‌கடியான சூழலும்‌ இவர்களுக்கு இருந்தது. இத்தகைய நெருக்கடிக்குள்‌ நின்று அவர்கள்‌ தம்‌ நிலைகளை தக்கவைத்தனர்‌. எமது கிட்டு பீரங்கிப்‌ படையினர்‌ செறிவான சூட்டை முன்னேறிவந்த எதிரி நின்ற பரப்பிற்குள்‌ வழங்க திணறும்‌ எதிரி மீது எமது உதவி அணிகள்‌ வேகமாக முன்னேறித்தாக்கின. எதிரியால்‌ தாக்குப்பிடிப்பது முடியாததால்‌ நடந்த சண்டையில்‌ எதிரிக்கு பலத்த இழப்‌புக்கள்‌ ஏற்படுத்தி எதிரியின்‌ முன்னேற்றத்தை வெற்றிகரமாக முறியடித்தனர்‌ புலிகள்‌.

அதே நேரத்தில்‌ கனகம்புளியடி-நுணாவில்‌ வீதியை மீளக்கைப்பற்றுவதற்காக எதிரிப்‌ படையினரால்‌ மேற்கொள்ளப்பட்ட முன்‌னேற்ற முயற்சியானது அப்பரப்பை வலுவெதிர்த்து நிலையமைத்து நின்ற இம்ரான்‌-பாண்டியன்‌ படையணியாலும்‌, சோதியா படையணியாலும்‌ எதிரியுடனான கடுமையான வலுவெதிர்ப்புச் சமர்‌ புரியப்பட்டு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இச்சமரில்‌ பெரும்‌ இழப்‌புக்களைச்‌ சந்தித்த எதிரிப்‌ படையினரின்‌ உடல்களையும்‌, ஆயுதங்களையும்கூட கைப்‌பற்றின எமதணிகள்‌. அன்றைய தனது முயற்சி அனைத்தையும்‌ எதிரி நிறுத்தினான்‌. ஆனால்‌ அதுவே முடிவாக இருக்கவில்லை. மீண்டும்‌ தன்னைப்‌ வலுப்படுத்திக்கொண்டு வான்படையின்‌ உதவியுடன்‌ பாரிய படை முன்னெடுப்பை கனகம்புளியடி - புத்தூர்‌ வீதியை மீளக்கைப்பற்றும்‌ நோக்குடன்‌ 09ஆம்‌ திகதி காலை 7.00 மணியளவில்‌ இரு முனையிலான முன்னேற்றத்தை மேற்கொண்டது எதிரிப்படை.

எதிரியின்‌ ஒரு முனை உடைப்பாக கனகம்புளியடி-புத்தூர்‌ வீதியை அண்டியதாகவும்‌, அடுத்த முனை உடைப்பாக வீதிக்கு பக்‌கவாட்டாகவும்‌ இருந்தது. எதிரி மீண்டும்‌ வருவான்‌ என்பதை எதிர்பார்த்து தங்களை தயார்‌படுத்திக்‌ காத்திருந்த எமது அணிகள்‌ கிட்டு பீரங்கிப்படையின்‌ செறிவானதும்‌, துல்லியமானதுமான சூட்டாதரவுடன்‌ எதிரியுடன் உக்கிரமாக மோதின. அன்று நடந்த அந்தக்‌ கடுஞ்சமரில்‌ எதிரிக்கு பெரும்‌ இழப்புக்களுடனான தோல்வியை வழங்கி இருமுனை முன்னேற்றத்தையும்‌ முறியடித்து வெற்றியை தமதாக்கினர்‌ புலிகள்‌ அணிகள்‌. ஓயாத அலைகள்‌-03 கட்டம்‌ 05இல்‌ மீட்கப்பட்ட நிலத்தை எதிரி மீண்டும்‌ கைப்பற்றும்‌ அவனது உடனடி முயற்‌சிகள்‌ அனைத்தும்‌ முறியடிக்கப்பட்டு நடவடிக்‌கையின்‌ இலக்கு நிறைவு செய்யப்பட்டது. 

ஓயாது அதிரும்‌ அலைச்சமர்‌ எதிரிக்கு ஆழத்தோண்டப்பட்ட புதைகுழி. தமிழருக்கு வெளித்தெரியும்‌ விடிவெள்ளி. இதை எதிரித்‌தரப்பு உணர்ந்து கொள்ளாதவரை அவர்‌களின்‌ எண்ணில்‌ அடங்கா உடல்களை இந்‌தப்புதைகுழி உள்வாங்கிச்‌ செரிக்கும்‌. சிங்‌கள இனவாத மமதை கொண்டவர்கள்‌ எங்‌கெல்லாம்‌ எம்‌ தேசத்தில்‌ கால்பதித்து வைத்திருக்கிறார்களோ, எங்கெல்லாம்‌ கால்‌ பதிக்கிறார்களோ அங்கெல்லாம்‌ அதிரும்‌ அலைச்சமர்‌. இனி வீழ்வதன்றி வேறுவழியெதையும்‌ வீரத்தலைவன்‌ பிரபாகரன்‌ படை எதிரிக்கு விட்டுவைக்கப்போவதில்லை. வெற்றியன்றி வேறெதனையும்‌ பிரபாகரன்‌ படை இனித்‌ தொட்டு நிற்கப்போவதில்லை.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

புத்தகங்கள் & மாதயிதழ்கள்

 

 

தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07|01|2022

 

இதனுள் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் விரிப்புகள் உள்ளது.

 

  • இந்நடவடிக்கையில் பங்குகொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி எதிர்கொண்ட முக்கியச் சமர்க்களங்கள் தொடர்பான சுருக்கமான வரலாற்றுத் தகவல் யாவும் 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற இப் படையணியின் முதற் பத்தாண்டு வரலாற்றைக் கூறும் நூலின் பக்கங்கள் 79-95 இல் விரிக்கப்பட்டுள்ளது.

 

  • இந்நடவடிக்கையில் பங்குகொண்ட மாலதி படையணி எதிர்கொண்ட சமர்க்களங்கள் யாவும் 'விழுதாகி வேருமாகி' என்ற மாலதி படையணியின் 2003ம் ஆண்டு வரையிலான வரலாற்றைக் கூறும் நூலின் பக்கங்கள் 292-428 இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

  • இந்நடவடிக்கையின் கட்டம் நான்கின் வத்திராயன் பெட்டிச்சமருக்குப் பின்னான சமரில் இருந்து கட்டம் ஐந்து முடியும் வரையான சமர்க்கள நேரடிப் பட்டறிவுகள் யாவும் போராளி காக்கா (சங்கர்) என்பவரால் எழுதப்பட்டு கட்டளையாளர் கேணல் ஜெயம் அவர்களால் வெளியிடப்பட்ட 'மீண்டும் யாழ். மண்ணில் பதிந்த எம் தடங்கள்' என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. 

 

  • தமிழீழத்தின் புகழ்பூத்த வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவரான திரு. மணலாறு விஜயன் அவர்களால் ஓயாத அலைகள் மூன்றின் முழு வரலாறும் 'வன்னிச் சமர்க்களம்' என்ற போர்க்கள நூலில் ஒன்றுவிடாமல் முற்று முழுதாக நேரடியாக சமர்க்களத்தில் இருந்தபடியே எழுதப்பட்டது. ஆனால் கெடுவேளையாக நடந்தேறிய கருணாவின் வரலாற்று வஞ்சகத்தால் அந்நூல் வெளியிடப்படாமல் போனது. இதனால் தமிழின் ஒரு பெரும் பரணிக்குச் சமனான நூல் இழக்கப்பட்டது. 

 

  • இந்நடவடிக்கையின் கட்டம் 1 & 2 தொடர்பான பல கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட 'வெளிச்சம்' என்ற மாதயிதழின் 1999 மார்கழி - தை பதிப்பாக வெளிவந்த ஓயாத அலைகள் - 03 சிறப்பிதழில் பெருமளவில் உள்ளன!

 

  • இந்நடவடிக்கையின் கட்டம் நான்கு மற்றும் ஐந்து தொடர்பான பல கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட 'வெளிச்சம்' என்ற மாதயிதழின் 2000 சித்திரை - வைகாசி பதிப்பாக வெளிவந்த ஆனையிறவு வெற்றிச் சிறப்பிதழில் பெருமளவில் உள்ளன!

 

  • இந்நடவடிக்கையின் கட்டம்-4 இல் கிட்டிய ஆனையிறவு வெற்றியினை சிறப்பிக்கும் விதமாக 'களத்தில்' என்ற இதழின் 208வது பதிப்பு (15-05- 2000) சிறப்பிதழாக 'ஓயாத அலைகள் 3 ஆனையிறவுப் பெருவெற்றி' என்ற தலைப்புடன் பல சிறப்புத் தகவல்களை தாங்கியபடி வெளிவந்தது.

 

 

********

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

விடுபட்ட முக்கிய களமுனைத் தகவல்கள்

 

இதனுள் மேலுள்ள கட்டுரைகளினுள் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் இல்லாமல் விடுபட்ட முக்கிய களமுனைத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

 

 

ஆதாரம்: 'சன்டே ரைம்சு', 22 ஏப்ரல் 2001
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27|1|2022

  • படையினர் தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்ட அதே நாளில் தான் புலிகளும் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர் என்பது வெளிப்பட்டது. மார்ச் 26 ஆம் திகதி தாக்குதலை திட்டமிட்ட பிரிகேடியர் காமினி கெட்டியாராச்சி (இப்போது மேஜர் ஜெனரல்), சில தளவாடங்கள் வரவில்லை என்ற அடிப்படையில் 48 மணிநேரத்திற்கு ஒத்திவைக்க முயன்றார். இது தொடர்பான முன்னறிவோடோ அல்லது வேறுவிதமாகவோ ஆனையிறவைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். 

 

  • நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட சிறீலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, மூன்று சேவை கட்டளையாளர்களுக்கு - லெப். ஜெனரல் சிறிலால் வீரசூரிய (தரைப்படை), துணை அட்மிரல் சிசில் திசேரா (கடற்படை) மற்றும் வான் மார்சல் ஜயலத் வீரக்கொடி (வான்படை) - உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு பறக்க உத்தரவிட்டார். ஆனையிறவு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துப் பரப்புகளிலிருந்தும் புலிகள் வெளியேற்றப்படும் வரை அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றார். உத்தரவை பிறப்பித்து, சேவைக் கட்டளையாளர்கள் அதை நிறைவேற்றுவதை உறுதிசெய்த பின்னர், அதிபர் குமாரதுங்க இலண்டன் சென்றார். படைத்துறைக் கட்டளையாளர்களுடன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றவர் அப்போதைய தரைப்படையின் பணியாளர் தலைமை (தற்போது கட்டளையாளர்) மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல. பலாலியில் இருந்தபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள முப்படைக் கட்டளையாளர்களும், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளும், வெற்றிலைக்கேணி, பரந்தன் மற்றும் மார்ச் 26 அன்று தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட பரப்புகளில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்கான தாக்குதலைத் திட்டமிட்டனர். ஏப்ரல் 17-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையினை நிறைவேற்ற முடியவில்லை. கடற்படை ஆதரவு கிடைக்கவில்லை. கடற்படைக் கட்டளையாளர், துணை அட்மிரல் சிசில் திசேரா, அந்தக் கிழமையில் அனைத்து நடவடிக்கைகளையும் குறைக்குமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.  மூன்றாம் ஈழப்போரின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான விடுதலைப் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு அஞ்சியே இவ்வாறு செய்தார். 

 

  • இயன்றளவு படைத்துறை ஏந்தனங்களை அழித்த பிறகு, நண்பகலுக்கு முன்பாக ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று படையினர் ஆனையிறவுத் தளத்திலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். 

 

  • ஆனையிறவிலிருந்து வடக்கு நோக்கி பின்வாங்கும் படையினர் ஒரு குறுகிய முகப்பு வழியாக செல்ல வேண்டியிருந்தது. ஊர்தியின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பிரிகேடியர் பெர்சி பெர்னாண்டோ மீது குறிசூட்டு நடத்தப்பட்டது. இதனால் அவரும் அவருடைய ஆட்களும் இறங்கி மறைந்து கொள்ள வேண்டியிருந்தது. விரைவில் அவர் கொல்லப்பட்டார். அதிரடிப்படை படையணியின் 2வது சமரணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜனக ரிதிககபொல துணிச்சலுடன் தனது நிலத்தோரணத்தைத் (Land Rover) திருப்பி (பின்வாங்கிக்கொண்டிருந்த தொடரணியில் முன்னால் இருந்தது) பிரிகேடியர் பெர்னாண்டோவின் உடலை மீட்டெடுக்க நகர்ந்தார். அவருடன் இருந்த எட்டு அதிரடிப்படையினரில் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்தார். 

 

  • முந்தின இரவுப் பணிகளால் களைத்து, கனத்த உடல் கவசத்துடன் வெயிலில் நடந்து சென்றவர்கள் வழியோரம் இறந்து விழுந்தனர். வழங்கலுக்கான ஒரே ஆதாரமான இயக்கச்சியில் உள்ள கிணறுகள் புலிகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் தண்ணீர் பற்றாக்குறையாகிவிட்டது. 

 

==================================

 

  • கொல்லப்பட்ட சிங்களக் கட்டளையாளர்களில் பிரிகேடியர் பாத்தியா ஜயதிலக, பிரிகேடியர் நீல் அக்மீமன ஆகியோர் நீரழப்பால் பலாலி படைய மருத்துவமனையில் உயிரிழந்தனர். பிரிகேடியர் பெர்சி பெர்னாண்டோ 'மயூரன் குறிசூட்டுப் பிரிவின்' குறிசூட்டில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

==================================

 

ஆதாரம்: 'புதினம்'  5 யூன் 2006

  • குடராப்பில் புலிகள் தரையிறக்கப்பட்டனர். அப்போது புலிகளின் வடக்கு போர்முனை எல்லைகளில் 800 போர்வீரர்கள் லெப். கேணல் வீரன் எ கோபிதன் தலைமையில் நிறுத்தப்பட்டனர்.
    • இக் கட்டளையாளர் 2000 ஆம் ஆண்டு வகித்த தரநிலை தெரியவில்லை. இவர் 2006 ஆம் ஆண்டு புலிகளின் யாழ் மீதான மீட்புப் படையெடுப்பின் போது முகமாலையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். அப்போது அன்னாருக்கு "லெப். கேணல்" தரநிலை வழங்கப்பட்டது. அதைத்தான் நானும் இங்கு கையாண்டுள்ளேன்.

 

==================================

 

ஆதாரம்: 'களத்தில்' 15.05.2000

  • ஆனையிறவு கூட்டுத்தளத்தின் மொத்தப் பரப்பளவு : 259 சது. கிமீ

 

==================================

 

ஆதாரம்: 'ஓயாத அலைகள் 3 பாகம்-3, பாகம்-4' நிகழ்படம் 

  • கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் ஓட்டிச்சென்ற இடியன் வகுப்புக் குண்டுப்படகின் மீகாமன் இருப்பிடத்தின் இரு பக்கத்திலும் அக்கடற்கலத்தின் கலப்பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்படம் சிதைந்துவிட்டதால் அவ்வரலாற்றுத் தகவல் அழிந்துபோனதாக துணியப்படுகிறது.

 

==================================

 

ஆதாரம்புலிகளின் செய்திக்குறிப்பு, 22 ஏப்பிரல் 2000

  • ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை; மூன்று 152 மிமீ இழுவை தெறோச்சிகள் மற்றும் இரண்டு 122 மிமீ இழுவை தெறோச்சிகள் என்பனவாகும்.

 

==================================

 

ஆதாரம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4218, தமிழ்நெற், 18.11.1999

  • கட்டம் இரண்டின் போது பெரியமடுப் பரப்பில் தம்மால் கவச சகடங்கள் மற்றும் கவச ஆளணி காவிகள் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புக் காரணங்களால் அது தொடர்பான படிமங்கள் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை எதுவும் விடுதலைப்புலிகளால் வெளியிடப்படவில்லை, கனகராயன்குளம் போலல்லாமல்.

 

==================================

 

ஆதாரம்https://vayavan.com/?p=12094, 26/11/2021

  • 20/05/2000 அன்று, கட்டம் ஐந்தின் போது, பளைப் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் களமுனை வைத்தியசாலை மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் மருத்துவ ஆளுகைப் பொறுப்பாளர் மேஜர் மித்திரன், நாகர்கோவில் களமுனை மருத்துவ ஆளுகைப் பொறுப்பாளர் கப்டன் சுடர்மதி ஆகிய இருவரும் வீரச்சாவடைந்தனர். களமுனை மருத்துவர் ரொசான் எ அருள் படுகாயம் அடைந்தார்.

 

==================================

 

ஆதாரம்கடற்புலிகளின் கட்டளையாளர் புலவரின் வாக்குமூலம், 25/02/2023

  • ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஐந்தின் போது தான் முதன் முறையாக கடற்புலிகளின் கடற்றாக்குதல் படையணியைச் சேர்ந்த போராளிகள் தரைத்தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டனர் (அதுவரை காலமும் கடற்புலிகளின் தரைத் தாக்குதல் அணிகளே களமிறக்கப்பட்டிருந்தனர்). முதன் முதலில் தென்மராட்சி சாவகச்சேரி களமுனையில் ஒரு கனவகை இயந்திரச் சுடுகலன் பூட்டப்பட்ட பஃவல் கவசவூர்தியுடன் பெண் போராளிகள் களம்கண்டனர். அந்தச் சண்டையில் இரு பெண் போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். இதனால் கடற்புலிப் போராளிகள் பலர் வெறுப்படைந்ததோடு தாம் கடலில் சமராடவே வந்ததாகவும் தரையில் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

மீட்கப்பட்ட நிலங்களின் வரைபடம்

 

 

ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன், 29|05|2022

 

 

இந்நிலவரைபடமானது ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட தமிழர் நிலங்களைக் காட்டுகிறது

 

unceasing waves.jpg

'படிமப்புரவு: 'களத்தில்-208', 15-05-2000'

 

 

 

=======================================

 

 

 

 

இவ்வரைபடமானது ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியின்  வடபுலத்திலும் கைப்பற்றப்பட்ட ஆட்புலங்களைக் காட்டுகிறது

 

During Unceasing waves 3 operation. LTTE Controlled Areas. Pic credit. LTTE official website.jpg

'மூலம்: eelamweb.com, 2000 மே நடுப்பகுதி'

2000 ஆம் ஆண்டு மே நடுப்பகுதி வரை மட்டுமே சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட இடங்கள் மேலுள்ள வரைபடத்திலுள்ளன. அதன் பின் அப்பிரதேசச் சபையில் பல மேம்பாடுகள் நடந்தன.

தென்மராட்சி, சாவகச்சேரி பிரதேச சபையில் கைதடி பாலம் பரம்பப்பட்டு மட்டுவில் முற்றாக புலிகளால் மீட்கப்பட்டது. கோப்பாய் பாலமும் பரம்பப்பட்டு தந்திரசார் வழிவகை காரணமாக புலிகளால் தகர்க்கப்பட்டது. நாவற்குழி சந்தி மீட்க்கப்பட்டதோடு நாவற்குழி பாலமும் புலிகளால் தகர்க்கப்பட்டு அங்கு ஒரு முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலை அமைக்கப்பட்டதுவே அவையாகும்.

அதே சமயம் வலிகாமத்தில், யாழ்நகரில் குருநகர், பாசையூர் கிழக்கு, மற்றும் பாசையூர் தெற்கு ஆகியவற்றின் தென்பரப்பிலுள்ள (கடற்கரை அண்டிய பரப்புகள்) படைத்தளங்கள் முற்றாகப் பரம்பப்பட்டும் பாசையூர் மற்றும் புங்கன்குளம் ஆகியவற்றின் தென்பரப்பியில் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டு படகுகளில் சென்று தாக்குதல் நடத்தி தரையிறங்கி கொழும்புத்துறை முற்றாக கைப்பற்றப்பட்டபோதிலும் தந்திரசார் வழிவகை காரணமாக பின்வாங்கப்பட்டு நெடுங்குளத்தில் (மேலுள்ள வரைபடத்தில் மெல்லிய கபில நிறம் பூசப்பட்டுள்ள நெடுங்குளப் பகுதிகள்) முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலை அமைக்கப்பட்டது. அதே நேரம் நல்லூர் பிரதேச சபையில் மணியந்தோட்டம் முற்றாக கைப்பற்றப்பட்டு அரியாலை வடக்கு நடுவண் பரப்புவரை (செம்மணிச் சந்தி தாண்டிய நிலப்பரப்பு) புலிகளால் பரம்பப்பட்டாலும் தந்திரசார் வழிவகை காரணமாக பின்வாங்கப்பட்டு அரியாலை நடுவண் வடக்கின் செம்மணிச் சந்தியில் நிலைகொண்டு யாழ்மீதான அழுத்தத்தை மேற்கொண்டு தொடர்ந்தது தமிழர் சேனை.

இவற்றைக் குறிக்கும் வரைபடங்கள் யாவும் மேலே உள்ள ஓயாத அலைகள் மூன்று கட்டம் ஐந்து முழு விரிப்பில் பதிவிட்டுள்ளேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்புகள் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரைகூட புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

யாழில் மீட்கப்பட்ட நிலங்கள் பின்னாளில் இழக்கப்பட்டமை

 

 

தவிபுவினர் வலிகாமத்தின் நல்லூர் பிரதேசச்சபை மற்றும் தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேசச்சபை ஆகிய ஆட்புலங்களிலிருந்து எப்பொழுது முழுமையாகப் பின்வாங்கினர் என்ற பற்றியம் எனக்குத் தெரியவில்லை.

அதே நேரம் இவ்வாட்புலங்கள் யாவும் புலிகளால் ஒரே நாளில் ஒரேயடியாக இழக்கப்படவில்லை என்பதையும் அறிக. இவை யாவும் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்குப் பிறகு புலிகளால் இழக்கப்படத் தொடங்கி சனவரி மாதம் வரை புலிகள் மெள்ள மெள்ளமாக பின்வாங்கிக்கொண்டிருந்தனர் என்பதும் சனவரி 7ல் முற்றாக சாவகச்சேரி & நல்லூரிலிருந்து பின்வாங்கிவிட்டனர் என்பதையும் 'அடைகல்-1' (கினிகிர) முதல் 'அடைகல்-8' வரையான சிறிலங்காப் படைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட 5 வலிதாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிரான மெல்லிய எதிர்ச்சமர்கள் நடைபெற்ற இடங்களை வைத்து அறியமுடிகிறது. 

Tamil Tigers controlled areas in Jaffna(Thenmaratchi) - as of Sept 2000, source-Sunday Times.jpg

'செப்டெம்பர் 17 அன்று சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட அடைகல்-1 நடவடிக்கை மூலம் மீளவும் வல்வளைக்கப்பட்ட அரியாலை நடுவண் பரப்புகளும் (மேலே இடமிருந்து முதலாவது படிமப் பெட்டி), செப்டெம்பர் 24 அன்று சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட அடைகல்-2 நடவடிக்கை மூலம் மீளவும் வல்வளைக்கப்பட்ட சரசாலையின் சில பகுதிகள் மற்றும் சாவகச்சேரியின் சில பகுதிகளைக் (மேலே இடமிருந்து இரண்டாவது படிமப் பெட்டி) காட்டும் வரைபடங்கள். | படிமப்புரவு: சன்டே ரைம்சு, ஒக்டோபர் 4, 2000'

 

Sinhala Army's occupying Operation Kiniheera upon T. Chavakachcheri.jpg

'அடைகல்-2 நடவடிக்கை மூலம் மீளவும் வல்வளைக்கப்பட்ட சரசாலையின் சில பரப்புகள் மற்றும்ச் சாவகச்சேரியின் சில பரப்புகளைக் காட்டும் வரைபடம். | படிமப்புரவு: சன்டே ரைம்சு, செப்டெம்பெர் 24, 2000'

 

10th december 2000 showing the defensive lines of SLA - according to sept 17th reprots.jpg

'நவம்பர் 19 அன்று சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட அடைகல்-4 நடவடிக்கை மூலம் மீளவும் வல்வளைக்கப்பட்ட மட்டுவில் கிழக்கு மற்றும் மட்டுவில் வடக்கின் வடக்குப் பரப்புகள் சிலவற்றைக் காட்டும் வரைபடம் | படிமப்புரவு: சன்டே ரைம்சு, திசம்பர் 10, 2000'

விடுதலைப்புலிகள் இங்கிருந்து பின்வாங்கியதன் காரணம் சிறிலங்கா தரைப்படையிற்கு இந்தியா, சீனா மற்றும் பாக்கிசுத்தான் ஆகிய நாடுகள் கொண்டுவந்து கொடுத்த நவீன 'பல்குழல் உந்துகணை செலுத்திகள்' தான் என்றும் அவற்றின் தாக்குதலை தாக்குப்பிடிக்க இயலாததாலே அங்கிருந்து புலிகள் பின்வாங்கி வெளியேற்றினர் என்றும் தமிழீழத்தின் புகழ்பூத்த வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவரான "திரு. மணலாறு விஜயன்" அவர்கள் (இவர் நேரடியாக தலைமைக் கட்டளை மையத்தில் அமர்ந்தபடி ஓயாத அலைகள் மூன்றின் முழு வரலாற்றையும் எழுதி 'வன்னிச் சமர்க்களம்' என்ற நூலில் ஜெயசிக்குறுவோடு ஆவணப்படுத்தியவர் ஆவார். இந்நூல் அச்சேற்றப்பட்டு வெளியிடப்படுவதற்காக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்தபோது தமிழீழத் தேசியப் பேரழிவான 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நடந்தேறியது!) ஐ.பி.சி தமிழ் என்ற தமிழ்மொழி தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தேசியத் தலைவர் எவருடைய பேச்சையும் கேட்காது தானே முடிவெடுத்து தானே விடுதலைப் போரை நெறிப்படுத்தியவர் என்றதோடு அங்கிருந்து பின்வாங்கியதற்குக் காரணமாக அரசியல்துறையினர் கூறிய இரு காரணங்களான 'ஆட்பற்றாக்குறை' மற்றும் 'இந்தியா கோரியதால் பின்வாங்கினோம்' ஆகியவற்றைச் சாடி இவ்விரண்டையும் "படு மோசமான பொய்கள்" என்றும் விரித்துரைத்தார்.  

 

உசாத்துணை: 

  • 'சன்டே ரைம்சு', ஒக்டோபர் 4, 2000
  • 'சன்டே ரைம்சு', செப்டெம்பெர் 24, 2000
  • 'எரிமலை', செப்டெம்பர் 2000, பக். 7
  • 'சன்டே ரைம்சு', திசம்பர் 10, 2000
  • 'சன்டே ரைம்சு', திசம்பர் 31, 200
  • 'சன்டே ரைம்சு', சனவரி 7, 2001
  • 'உதயன்', 07/01/2001
  • வீரவேங்கை ஆழிவண்ணன்
  • வீரவேங்கை மாவரசி

 

ஆக்கம் & வெளியீடு: 

நன்னிச் சோழன், 29|05|2022

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.