Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிப் பாய்ச்சல்கள் 

கரும்புலிகளின் படிமங்கள்

கட்டம் ஐந்தில் வீரச்சாவடைந்தோர்

 

 

 

மேஜர் மறைச்செல்வன் 

 

BT maj. Maraichchelvan

 

Land Black Tiger Major Maraichchelvan 37.jpg

Land Black Tiger Major Maraichchelvan 89.jpg

Land Black Tiger Major Maraichchelvan 3.jpg

 

Land Black Tiger Major Maraichchelvan 7.jpg

Land Black Tiger Major Maraichchelvan 4.jpg

Land Black Tiger Major Maraichchelvan(1).jpg

 

 

Land Black Tiger Major Maraichchelvan 2.jpg

Land Black Tiger Major Maraichchelvan.jpg

Land Black Tiger Major Maraichchelvan 5.jpg

 

Land Black Tiger Major Maraichchelvan 8.jpg

Land Black Tiger Major Maraichchelvan 33.jpg

 

Land Black Tiger Major Maraichchelvan during a 85mm artillery training 2.jpg

'அன்னார் 85 மிமீ தெறோச்சி (தகரி எதிர்ப்பு) பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்' 

 

Land Black Tiger Major Maraichchelvan 2(1).jpg

'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'

 

 

 

 

============X============

 

 

 

மேஜர்  றீகஜீவன் 

 

Land Black Tiger Major Reekajeevan (17).jpg

Land Black Tiger Major Reekajeevan (16).jpg

Land Black Tiger Major Reekajeevan (15).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (1).jpg

Land Black Tiger Major Reekajeevan (6).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (14).jpg

Land Black Tiger Major Reekajeevan (13).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (12).jpg'Land Black Tiger Major Reekajeevan (10).jpg

Land Black Tiger Major Reekajeevan (7).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (9).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (2).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (8).jpg

Unceasing Waves 3 Land Black Tiger Major Reekajeevan.jpg

Land Black Tiger Major Reekajeevan (5).jpg

'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன் நடந்து வருகிறார்'

 

Land Black Tiger Major Reekajeevan (3).jpg

'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன். பின்னால் நின்று பார்ப்பவர் மேஜர் செழியன் ஆவார்'

 

 

 

 

============X============

 

 

 

மேஜர்  குமலவன் 

 

maj_kumalavan1.jpg

Verkal / Land Black Tiger Major Kumalavan

 

Land Black Tiger Major Kumalavan.jpg

Land Black Tiger Major Kumalavan 2.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • நன்னிச் சோழன்

    199

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்     இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தம

நன்னிச் சோழன்

இறுவெட்டுகள்   இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போரிலக்கியப்பாடல் இறுவெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.   ஆனையிறவு: பாட

நன்னிச் சோழன்

காலக்கோடு     01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிப் பாய்ச்சல்கள் 

அலை மூன்றிலாடி பின்னாளில் கரைந்தோர்

 

 

"வேகத்துடன் பெருங்கோபத்துடன்
ஆனையிறவைப் பிடித்திட்ட கொற்றப்படை"

-> விடுதலை நெருப்புகள் என்ற இறுவெட்டிலுள்ள வீரப்படை என்ற பாடலிலிருந்து

 

ஓயாத அலைகள் மூன்று தொடர் நடவடிக்கையில் பங்காற்றி பின்னாளில் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைந்த தரைக்கரும்புலிகளையும் இவ்விடத்தில் நினைவுகூறுகிறோம்.

 

 

''வண்டு'' என்ற பட்டப்பெயரினைக் கொண்ட அன்னார், ஓயாத அலைகள் மூன்று தொடர் சமரில் பங்கெடுத்த கரும்புலிகளில் ஒருவர் ஆவார். இவர் ஆனையிறவுத் தளத்தினுள் இலக்கிற்காக வெற்றிலைக்கேணி முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை ஊடுருவிச் சென்று அந்தாறு நாட்கள் தங்கியிருந்து வேவெடுத்து தன்னோடு வந்து காயமடைந்த போராளியையும் தூக்கிக்கொண்டு வெற்றியுடன் திரும்பியவர் ஆவார். அத்துடன் பளையிலிருந்த 'ஆட்டிவத்த' என்ற சேணேவித் தளத்தை அழித்த 11 கரும்புலிகளுள் இவரும் ஒருவராவார். இவ்வதிரடித் தாக்குதலில் வெடியதிர்வால் இவரின் காதில் இருந்து அரத்தம் வடிந்த போதும் பொருட்படுத்தாது நடவடிக்கையை வெற்றியுடன் செய்து முடித்தார். இவர் தொடர்பான பற்றியங்கள் கீழுள்ள திரியினுள் உண்டு:

photo197.jpg

 

 

 

===============================

 

 

 

இவர் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் கட்டம் நான்கின் போது இயக்கச்சி தாமரைக்குளம் சேணேத்தளத்தினுள் புகுந்து அங்கிருந்த தெறோச்சிகளை அழித்து மீண்ட கரும்புலிகளில் ஒருவர் ஆவார். இவர் ஓயாத அலைகள் மூன்றில் ஆற்றிய பணிகளில் ஒன்றையே நான் இங்கு விரித்துள்ளேன். மேலும் வாசிக்க பின்வரும் மறுமொழிப்பெட்டியினுள் உள்ள நெடுந்தொடரை வாசிக்கவும்.

photo204.jpg

 

 

 

===============================

 

 

 

இவர் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் கட்டம் ஒன்றின் போது கனகாரயன்குளம் படைத்தளத்தினுள் புகுந்து ஆடி மீண்ட கரும்புலிகளில் ஒருவர் ஆவார். அது தொடர்பான விரிப்பு பின்வரும் மறுமொழிப்பெட்டியினுள் உள்ளது:

தளந்திரும்பிய மயூரன் மிகவும் சோர்வாக காணப்பட்டான். அது தொடர்பான விரிப்பு பின்வரும் மறுமொழிப்பெட்டியினுள் உள்ளது:

photo205.jpg

 

 

 

===============================

 

 

 

photo208.jpg

 

 

 

===============================

 

 

 

ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஒன்றில் கனகராயன்குளம் தளமருகில் நிலைகொண்டு ஏற்றுக்கோண திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருந்த செழியனின் அணியில் இடம்பெற்றிருந்த சோபிதன் அவர்களுக்கு இலக்குக்குக் கிட்டவாக இருந்த காரணத்தால் தவிபு தெறோச்சி எறிகணையொன்றின் சிதறுதுண்டொன்று கையில் கீறியது. அது தொடர்பான விரிப்பு பின்வரும் மறுமொழிப்பெட்டியினுள் உள்ளது: 

photo206.jpg

 

 

 

===============================

 

 

 

பளை சேணேவித் தளத்தை அழிக்கச்சென்ற 13 பேர் கொண்ட அணியிற்கு (11 தரைக்கரும்புலிகள் + 2 வேவுப்புலிகள்) இவர்தான் அணித்தலைவனாக சென்றார். அவ்வதிரடித் தாக்குதலில் கையில் காயமடைந்தார். அது தொடர்பான விரிப்பு பின்வரும் மறுமொழிப்பெட்டியினுள் உள்ளது:

photo207.jpg

 

 

===============================

 

 

 

இயக்கச்சி-முகாவில் பகுதிகளில் நடைபெற்ற ஊடுருவித் தாக்குதல்களின் போது மிண்டிய கரும்புலி அணிகளில் இடம்பெற்றிருந்த சிறுத்தைப்படை போராளி "ஈழம் எ வாணி " அவர்கள் 10/12/2008 அன்று புலிக்குளம் பகுதியில் சிங்களப் படையினருடனான நேரடி மோதலின் போது 'களப்படப்பிடிப்பாளர்' மேஜர் ஈழம் எ வாணி ஆக தாய்மண்ணை முத்தமிட்டார். 

Major vaani - former Leapord Force commando of Tamileelam.jpg

 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிப் பாய்ச்சல்கள் 

அலை மூன்றிலாடி பின்னாளில் கரைந்தோர்

அன்னவரின் படிமங்கள்

 

 

 

மேஜர் நித்தி எ சோழவேங்கை

 

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  324.jpg

 

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  1.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  345.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  35.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  34.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  4.jpg

'பி.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் நித்தி நடந்து வருகிறார்'

 

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  3465.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  6.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  45.jpg

Sea Black Tiger Major Cholaveengkai alias Niththi  89.jpg

'இலகு தகரி எதிர்ப்பு ஆய்தமான "லோ" வை முதுகில் சுமந்தபடி வகை-56 - 2 துமுக்கியை கையில் ஏந்தியபடி அன்னார்'

Land Black Tiger Major Niththi alias Cholaveengkai.jpg

'அன்னார் துமுக்கியால் குறிவைப்பது போன்று பொதிக்கிறார்(posing)'

 

அன்னார் கடற்கரும்புலியாய் மாறிய போதைய படிமங்கள்:

 

 

 

============X============

 

 

 

ஓயாத அலைகள் மூன்றில் பங்கெடுத்து பின்னர் கடற்கரும்புலியாச் சென்ற மேஜர் மயூரனின் படிமங்கள்:

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிப் பாய்ச்சல்கள் 

குழுப் படிமங்கள்

 

 

இதனுள் ஓயாத அலைகள் மூன்றில் ஆடிய கரும்புலிகளினது சேகரப்படுத்தப்பட்ட குழுப் படிமங்கள் பதிவிடப்பட்டுள்ளன. 

 

 

created spy tiger.png

'பெயர் அறியில்லா கரும்புலி வீரனொருவன் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்'

 

During the phase one of the ltte operation Unceasing Waves 3.jpg

A look of the Female Land Black Tiger through the flames during the LTTE operation the Unceasing Waves 3.jpg

'நெருப்பெழுந்து புகை சூழ எரியும் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் சேணேவித் தளத்தினுள் நின்று சிரிக்கும் பெண் கரும்புலி'

 

 

 

Land Black Tigers (Female-Major Meena_ Male - Major Arulan master) during UW-3.jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (12).jpg

Major Malarvizhi is with Major Arulan.jpg

with Land Black Tiger Major Arulan master.jpg

'மேஜர் அருளன் பயிற்சியாசிரியராய் மேஜர் மலர்விழிக்கு பிகே பயிற்சி அளிக்கிறார்' 

 

LBT Major Reekajeevan and Major Chezhiyan.jpg

'இ: மேஜர் றீகஜீவன், வ: மேஜர் செழியன் '

 

Iyakkachchi Black Tigers.jpg

'இ-வ: மேஜர் மலர்விழி, மேஜர் நாயகம் எ ஆந்திரா, பெயர் அறியில்லா பெண் கரும்புலி. இவர்கள் இயக்கச்சி தாமரைக்குளத்திலிருந்த சேணேவிகளை கருக்கிய மறவர்களுள் சிலர் ஆவர்'

 

 

 

 

 

 

 

Land Black Tigers - Special Forces of Tamileelam.jpg

Land Black Tigers - Special Forces of Tamileelam .jpg

'குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தரைக்கரும்புலிகள். முன்னால் நிற்பவர் மேஜர் அருளன் ஆவார்.'

During the unceasing waves 3.jpg

Unceasing Waves 3 Land Black Tigers.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | ஈற்றில் வருபவர் மேஜர் ஆதித்தன், அவர் முன்னால் வருபவர் மேஜர் மலர்விழி ஆவார்.'

 

LTTE Land Black Tigers during the operation Unceasing Waves - 3.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முதலாமவர் மேஜர் ஆதித்தன், இரண்டாமவர் மேஜர் மலர்விழி, மூன்றாமவர் மேஜர் செங்கதிர்வாணன், மேற்கொண்டு வருவோர் பெயர் அறியில்லை''

 

Unceaing Waves 3 . ..jpg

'பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள்'

 

Land Black Tigers during the operation Unceasing Waves - 3 of ltte.jpg

A ltte land Black Tiger.jpg

Land Black Tigers 4.jpg

'பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள்'

 

Land Black Tigers 3(1).jpg

'பெயர் அறியில்லா கரும்புலியின் வரைகவியை (beret) சரி செய்கிறார் மேஜர் ஆந்திரா. அங்கால் நின்று சிரிப்பவர் மேஜர் நித்தி ஆவார்'

 

Unceasing waves 3(1) Cadres training.jpg

Tamil commandos training.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

Tamil commandos training  .jpg

Tamil commandos training   .jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முன்னுக்கு வருபவர் மேஜர் றீகஜீவன் ஆவார்'

 

Black Tigers in action during the operation Unceasing Waves 3.jpg

Land Black Tigers during the operation Unceasing Waves 3 (1).jpg

During the operation Unceasing Waves 3(1).jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

Tamil Special Forces.jpg

Tamil Special Forces 2.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | இடதுபக்கத்தில் நடந்து வருபவர்கள்: முன்னிருந்து முதலாவது கப்டன் சந்திரபாபு, இரண்டாவது மேஜர் செழியன், மூன்றாவது மேஜர் ஆதித்தன் ஆவர்; வலது பக்கத்தில் நடந்து வருபவர்கள்: முன்னிருந்து முதலாவது மேஜர் றீகஜீவன், இரண்டாவது மேஜர் சுதாஜினி, மூன்றாவது மேஜர் மீனா ஆவர்'

 

During the operation Unceasing Waves 3.jpg

majors Reekajeevan and Suthajini.jpg

majors Reekajeevan and Suthajini ..jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

Heroes of the operation Unceasing Waves - 3.jpg

'நடுவில் வருபவர்களில் கையில் பீகே ஏந்தியபடி தாக்குதல் கஞ்சுகத்தை (Assualt vest) சரி செய்பவர் மேஜர் ஆதித்தன் ஆவார்'

Heroes of the operation Unceasing Waves -3.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

Leopard commondos in U. W - 3.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது. இடமிருந்து முதலாவது தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன் '

 

Heroes of the operation Unceasing Waves - 3 (2).jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

Unceasing Waves 3 black tigers 2.jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

Land Black Tigers during the operation Unceasing Waves 3(1).jpg

'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் ஊடக வெளியீடு

 

 

இதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்நடவடிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக வெளியீடுகளின் (ஆங்கிலம்) உரைகள் உள்ளன. இத்திரியைச் சொடுக்கி அவற்றை வாசிக்கவும்.

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஒட்டுசுட்டான் பரம்பப்பட்டது - விடுதலைப் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4152
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 5:40 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26/04/2022

விடுதலைப் புலிகள் இன்று காலை சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புகளை பரம்பி ஒட்டுசுட்டான் நகரைக் கைப்பற்றியதாக விடுதலைப் புலிகள் இன்று தமது இலண்டன் பணிமனையில் இருந்து கூற்றுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் இன்று காலை ஒட்டுசுட்டானிலுள்ள சிறிலங்கா படைத்துறையின் கூட்டுப்படைத்தளத்தை பரம்பி மாங்குளம்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

"நன்கு ஆய்தம்பூண்ட புலிகளின் சண்டை உருவாக்கங்கள், கனவகை சேணேவிகள் மற்றும் கணையெக்கிகளின் சூட்டாதரவுடன், ஒட்டுசுட்டானிலுள்ள நன்கு திண்ணிறுப்பப்பட்ட சிறிலங்கா படைத்துறையின் கூட்டுப்படைத்தளத்திற்கு எதிராக இன்று அதிகாலையில் ஒரு பாரிய வலிதாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தன. பல மணிநேர கடுமையான சண்டைக்குப் பிறகு, விடுதலைப்புலிப் போராளிகள் படைமுகாம்களைப் பரம்பி நகரைக் கைப்பற்றினர்.

"ஒன்பது மணிநேரம் நீடித்த கடும் சண்டையில், புலிகளின் சண்டை உருவாக்கங்கள் பகைப்படைகளுக்கு வலுத்த சேதங்களை ஏற்படுத்தியதுடன், ஏராளமான படைக்கலன்களையும் பல படைய ஊர்திகளையும் கைப்பற்றியுள்ளன. நூற்றுக்கணக்கான படைஞர்களின் சடலங்கள் அடவி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. புலிப் போராளிகள் அடவிக்குள் ஓடிய நூற்றுக்கணக்கான படையினரை பிடித்தாத்துடர்கின்றனர். ஒட்டுசுட்டானின் சுற்றுவட்டாரப் பரப்புகளை துடைக்கும் மிண்டுதலில் தமிழ்ப் புலிகள் ஈடுபட்டுள்ளனர். எமது தரப்பின் இழப்பின் விரிப்பு நாளை அறிவிக்கப்படும்.

"சிறிலங்கா படைவீரர்களின் சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஒட்டுசுட்டானில் புலிகள் கொடி உயர்த்தினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4153
செய்தி வெளியீட்டு நேரம்: அதிகாலை 3:25 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

நகரத்தின் ஒரு பரப்பாக இருந்த சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தை பரம்பிய விடுதலைப்புலிகள் புதிதாகக் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் நகரில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றியதாக இன்று மாலை புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இலண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் நகரை அண்டிய அடவிப் பரப்புகளில் சண்டை தொடர்ந்ததாக தமிழ்நெற்றிடம் கூறின.

புலிகளின் குரலின்படி, கவசவூர்திகள் உட்பட ஏராளமான படைக்கலன்கள் மற்றும் கணைகளை புலிகள் கைப்பற்றியுள்ளனர். எனினும், அது மேலதிக விரிப்புகளை வழங்கவில்லை.

புலிகளால் மீட்கப்பட்ட சிறிலங்கா அரச படையினரின் நூற்றுக்கணக்கான சடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாளை கையளிக்கப்படவுள்ளதாக அந்த வானொலி மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது படையினர் அதிகளவிலான உயிரிழப்புகளை சந்தித்துள்ளதாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் இன்று இரவு தெரிவித்துள்ளன. தோராயமாக 800 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுசுட்டானுக்கு தெற்கே உள்ள நெடுங்கேணியில் முன்னரங்க வலுவெதிர்பு நிலைகளை அழித்த பின்னர், ஒட்டுசுட்டானில் உள்ள சிறிலங்கா தரைப்படையினரின் நிலைகள் மீது விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதலை நடத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விரிப்புகள் எதுவும் கைவசமில்லை, என்றனர்.

முல்லைத்தீவின் புலிகளின் மையப்பரப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள கேந்திர நகரமாக விரித்துரைக்கப்படும் ஒட்டுசுட்டான், கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி ரிவிபல நடவடிக்கையின் மூலம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டது.

சிறிலங்கா தரைப்படையினர் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தபோது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர்.

முன்னாள் குடியிருப்பாளர்களில் பலர் ஊருக்குத் திரும்பிச் சென்று சிதறிய படைய ஏந்தனங்கள் மற்றும் ஆய்தங்களை சேகரிப்பதில் உதவுவதாக இலண்டனில் உள்ள புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக நடந்த உக்கிரமான சண்டையின் போது நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினர் பின்வாங்கிய நகரத்தை அண்டிய பரப்புகளில் சண்டை தொடர்ந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"எங்கள் போராளிகள் தொடர்ந்து முடித்துவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்," என்று விரிப்புகள் வழங்காமல் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

நெடுங்கேணியை புலிகள் பரம்பினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4154
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 8:27 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

நெடுங்கேணி நகரை விடுதலைப் புலிகள் இன்று கடும் சண்டையின் பின்னர் பரம்பியதாக சிறிலங்கா படை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் கடுமையான எறிகணை தாக்குதலுக்கு நடுவணிலும் சிறிலங்கா தரைப்படையின் பிரிவுகள் அப்பரப்புகளிலிருந்து வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நெடுங்கேணிக்கு வடக்கே ஆறு மைல் தொலைவில் உள்ள ஒட்டுசுட்டானிலுள்ள சிறிலங்கா படைத்தளத்தைப் புலிகள் பரம்பிய ஒரு நாளுக்குப் பிறகு கூட்டுப்படைத்தளத்தின் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று வன்னியின் நடுப்பரப்புகளிலும் சண்டை பரவி வருவதால், சிறிலங்கா தரைப்படை தனது பிரிவுகளை வலுவூட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒட்டுசுட்டானின் மேற்கு மற்றும் வடக்கே மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய இடங்களில் சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் முப்படைகளும் பங்கேற்கின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா கடற்படை மற்றும் வான்படையின் உலங்குவானூர்திகள் வவுனியாவிலிருந்து ஒட்டுசுட்டான் திசையில் நேற்றிரவு 11 மணி வரை மீண்டும் மீண்டும் பறந்ததாக உள்ளூர்வாசி தெரிவிக்கின்றனர்.

சேத விரிப்புகள் கிடைக்காத போதிலும் வானூர்தி விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிறிலங்கா படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

வன்னிச் சமரில் வலுத்த இழப்புகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4155
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:28
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

விடுதலைப் புலிகள் நெடுங்கேணி மற்றும் ஒட்டுசுட்டான் நகரங்களைப் பரம்பியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் இன்று இலண்டன் பணிமனையிலிருந்து கூற்றுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுவரை 40 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தாக்குதல் தொடர்ந்து வருவதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"ஓயாத அலைகள் 3" எனக் குறியீட்டுப் பெயரிடப்பட்ட பாரிய படைய மடுத்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (தவிபு) சண்டை உருவாக்கங்கள் நேற்று கேந்திர நகரமான ஒட்டுசுட்டானின் கட்டுப்பாட்டை எடுத்த பின்னர், இன்று நெடுங்கேணியிலுள்ள மற்றொரு கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பினர்.

"புளியங்குளம் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெடுங்கேணி நகரமும் அதனைச் சூழவுள்ள பரப்புகளுக்கு நேற்றிரவு பல மணித்தியாலங்கள் நீடித்த உக்கிரமான சண்டையின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

"தமிழ்ப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் அடவிக்குள் தப்பியோடிய சிறிலங்காப் படையினரை பிடித்தாத்துடர்ந்ததால் கடும் சண்டை தொடர்ந்தது. ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணியில் நடந்த சண்டைகளில் சிறிலங்கா தரைப்படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்ச்சேதங்களால் - உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் - வருந்தினர்.

"ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணி படைத்தளங்களைக் கைப்பற்றிய பின்னர் புலிகளின் சண்டை பிரிவுகள் தற்போது புளியங்குளம் கிழக்கு பரப்பை நோக்கி நகர்ந்து வருவதால் அப்பரப்பில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் பல வலுவெதிர்ப்பு நிலைகள் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

"சண்டைகள் பரந்த பரப்புகளுக்கு விரிவடைவதால், சிறிலங்கா படையினர் முற்றிலும் சீர்குலைந்து, தங்கள் நிலைகளை விட்டு தப்பியோடி புறமாறுகின்றனர்.

"நெடுங்கேணி மற்றும் ஒட்டுசுட்டான் வட்டக்கூறுகளில் உள்ள பல ஆயுதக் கிடங்குகளிலிருந்து புலிப் போராளிகள் பாரிய படைக்கலன்கள் மற்றும் கணைகளை கைப்பற்றியுள்ளனர்.

"கவச ஆளணி காவிகள் உட்பட பாரிய நெடுவரிசையான படைய ஊர்திகள் புலிப் போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

"இதுவரை 40 புலிப் போராளிகள் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் பாரிய பரப்புயை பிடிக்கின்றனர் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4156
செய்தி வெளியீட்டு நேரம்: அதிகாலை 12:13 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

 

'ஓயாத அலைகள்-3' என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட தொடர்ச்சியான வலிதாக்குதலின் ஒரு பகுதியாக இருபது சிற்றூர்களைக் கொண்ட 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று இன்றிரவு புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுசுட்டானில் உள்ள சிறிலங்கா படைத்தளத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

நெடுங்கேணி ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வானொலி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தரைப்படையினரின் சடலங்கள் அப்பரப்பில் சிதறிக் கிடப்பதாகவும், அவை மீட்கப்பட்டு வருவதாகவும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா தரைப்படையினரின் சேணேவித் தாக்குதலில் காயமடைந்த 7 பொதுமக்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பொதுமக்களின் பெயர் விரிப்புகள் வருமாறு, தர்மராசா கிருஷ்ணபிள்ளை (65), ராமையா நல்லநாதன் (23), குமாரவேலு புண்ணியலிங்கம் (41), வைத்தியலிங்கம் கண்ணன் (41), ராமநாதன் நவரத்தினராசா (37), கிருஷ்ணபிள்ளை கமலநாதன் (40).

 

 


 

 

சிறிலங்கா தரைப்படையின் கட்டளையாளர் வன்னியில்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4157
செய்தி வெளியீட்டு நேரம்: அதிகாலை 12:57 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

இரண்டு நாட்களாக இடம்பெற்ற உக்கிரமான சண்டை மற்றும் விடுதலைப் புலிகளின் பாரிய முன்னகர்வுகளால் வலுத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறிலங்கா தரைப்படையின் கட்டளையாளர் இன்று வன்னியில் உள்ள கனகராயன்குளத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 1,800 ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர் அல்லது காணாமல்போயுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

1997 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையின் ஆரம்பப் புள்ளியாக இருந்த மணலாறு அல்லது வெலி ஓயா புலத்தின் ஜனகபுரவிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் பழைய முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் வரை விடுதலைப் புலிகள் முன்னகர்ந்துள்ளதாக வன்னி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாங்குளத்திற்கு கிழக்கே உள்ள கேந்திரப் பரப்புகளான அம்பகாமம் மற்றும் கரிப்பட்டமுறிப்பு ஆகிய பரப்புகளையும் புலிகள் கைப்பற்றியுள்ளதாக இன்று மாலை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் உள்ள செய்தி வட்டாரங்களின்படி, சிறிலங்கா தரைப்படையின் கனகராயன்குளம் தளத்தின் மீதான சேணேவித் தாக்குதலில் ஆறு படைஞர்கள் கொல்லப்பட்டும் 284 பேர் காயமடைந்ததோடு ஆயுதக் களஞ்சியம் மற்றும் அதியரையரின் குடியிருப்புகள் உட்பட 8 கட்டிடங்கள் சேதப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வன்னியில் கடுமையான சண்டைகள் பற்றிய செய்தி தீவின் தெற்குப் பரப்புகளிலுள்ள ஊர்களை எட்டியதும் நூற்றுக்கணக்கான படைவீரர்களின் பெற்றோர்கள் அனுராதபுரம் மருத்துவமனைகளிலும், சிறிலங்கா படைமுகாம்களிலும் தங்களின் குழந்தைகளின் கதியை அறியத் திரண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியா-அநுராதபுரம் முதன்மை வீதியில் வவுனியா நகருக்கு தெற்கே 15 மைல் தொலைவில் உள்ள மதவாச்சிக்கு வடக்கே 7 மைல் தொலைவில் உள்ள பூனேவாவில் உள்ள சிறிலங்கா கடற்படையின் முகாமில் இன்று இரவு நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கூடியுள்ளனர். ஒட்டுசுட்டான் கைப்பற்றப்பட்டதிலிருந்து கடற்படையினரின் இரண்டு படையணிகளை காணவில்லை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

தாக்குதலுக்கு உள்ளான சிறிலங்கா படைத்தளம் - விடுதலைப்புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4159
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:18 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

வன்னியில் கருப்பட்டமுறிப்பு பரப்பில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலண்டன் பணிமனையில் இன்று விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"கருப்பட்டமுறிப்பு படைமுகாம் தாக்குதலுக்குள்ளானது. சிறிலங்கா படையினர் மேலும் வலுத்த இழப்புகளைச் சந்திக்கின்றனர்.

மாங்குளத்திலிருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேந்திர நகரமான கருப்பட்டமுறிப்பு என்ற இடத்தில் உள்ள படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் (தவிபு) சண்டைப் பிரிவுகள் நேற்றிரவு ஒரு புதிய தாக்குதலைத் தொடுத்தபோது சிறிலங்கா படையினர் மேலும் வலுத்த இழப்புகளைச் சந்தித்தனர்.

அப்பரப்பில் இன்னும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாள் சண்டையின் போது ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணியிலுள்ள கூட்டுப்படைத்தளங்களை விரைவாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த புலிகளின் சண்டை உருவாக்கங்கள் தற்போது கருப்பட்டமுறிப்புவைச் சுற்றி வளைத்து, கேந்திரப் படைத்தளத்தை கனவகை சேணேவி மற்றும் கணையெக்கிச் சூடுகளால் குத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட சிறிலங்கா தரைப்படையினர் மாங்குளத்திலிருந்து அப்பரப்பிற்கு வலுவூட்டல்களை பாய்ந்தனுப்பியுள்ளனர். கருப்பட்டமுறிப்பு படைத்தளமானது சிறிலங்கா தரைப்படையினரின் 55 ஆவது படைப்பிரிவின் கேந்திர தலைமையகத்தைக் கொண்டுள்ளதோடு முதன்மையாக கடற்படையினரால் ஆளுவப்படுகிறது.

மற்றுமொரு முன்னகர்வில், வவுனியா நகரத்திலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கனகராயன்குளம் கூட்டுப்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நேற்று பாரிய சேணேவித் தாக்குதலை நடத்தினர்.

சேணேவி எறிகணைவீச்சு வெடிமருந்துக் கிடங்குகளைத் தாக்கியது, இதனால் ஏற்பட்ட பாரிய வெடிப்புகள் படைத்தொகுதி தலைமையகம் மற்றும் கள மருத்துவமனை உட்பட பல படையக் கட்டிடங்களை அழித்தன. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதோடு 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மற்றுமொரு சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளத்திலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு மீது நேற்று மாலை 5.45 மணியளவில் இசுரேல் நாட்டில் உருவாக்கப்பட்ட கிபீர் குண்டுதாரிகள் திடீர் தாக்குதலை தொடுத்தன.

தரையில் நடந்த மானக்கேடான படைத்துறை தோல்விகளுக்கு வான்படையின் திட்டமிட்ட பகரத் தாக்குதலாக பரவலாகக் கருதப்படும் இந்தக் குண்டுவீச்சில் ஆறு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்தனர்."

 

 


 

 

வவுனியாவில் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4160
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:59 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

வன்னிப் போர்முனையின் நிலைமைகள் குறித்து சேவைக் கட்டளையாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறிலங்காவின் துணை பாதுகாப்பு அமைச்சர் நாயகம் அனுருத்த ரத்வத்தை இன்று வவுனியாவிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் தானைவைப்பு நகருக்கு வருகைபுரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணியில் இருந்து சிறிலங்கா தரைப்படையினர்  "தந்திரசாராக பின்வாங்கியதாக" சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம்  கூறியது.

விக்டோரியா படைய மருத்துவமனை மற்றும் அனுராதபுர பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த படைவீரர்களையும் துணை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்.

புதன்கிழமை அவர்கள் கைப்பற்றிய ஒட்டுசுட்டான் நகருக்கு அருகிலுள்ள பரப்புகளில் அவர்களின் பிரிவுகள் தொடர்ந்து முன்னகர்ந்து வருகின்றன என்று இலண்டனிலுள்ள விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தமிழ்நெற்றிற்குத் தெரிவித்தன.

புளியங்குளம்-முல்லைத்தீவு வீதியிலுள்ள நெடுங்கேணியைக் கைப்பற்றிய புலிகள், ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள கேந்திர ஊரான புளியங்குளத்துக்கு அருகில் கடும் சண்டையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான சண்டை நடந்து வருவதாக ஒப்புக்கொண்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம், தமது படைகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் கூறியது. கிழக்கு வன்னியில் பல பரப்புகளைவிட்டு சிறிலங்கா தரைப்படை பிரிவுகள் வெளியேற்றியதாக சிறிலங்கா தரைப்படை அதிகாரிகள் தமிழ்நெற்றிற்கு முன்னர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடக வெளியீட்டின் உரை பின்வருமாறு:

"ஒட்டுசுட்டான், நெடுங்கேணி மற்றும் ஒதியமலைக்கு தெற்கேயுள்ள பரப்புகளில் புலிகளின் ஊடுருவல் முயற்சிகளை பெருமளவிலான பாதுகாப்புப்படை ஆளணியினர் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு தடுத்துள்ளனர்."

"வலுத்த முட்டுப்படல்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் தந்திரசாராக ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணிக்கு தெற்கேயுள்ள பரப்புகளுக்குப் பின்வாங்கியுள்ளனர். இதற்கிடையில் 03 நவம்பர் 1999 அன்று அம்பகாமம் பரப்பில் கடுஞ்சண்டை மூண்டது. பாதுகாப்புப் படையினர் வலுவெதிர்ப்பை மீறும் புலிகளின் முக்கிய முயற்சிகளைத் தடுத்தனர். நெடுங்கேணி மற்றும் ஒட்டுசுட்டானுக்கு தெற்கேயுள்ள பொதுப்பரப்புகளில் இயங்கி, பல மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடுதலைப்புலிகளுக்கு கனமான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்."

"இதுவரை கிடைத்த தகவலின்படி, கடந்த 48 மணி நேரத்தில் நடந்த மோதலில் 107 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மொத்தம் 202 பேர் காயமடைந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பகாமம் மற்றும் மாங்குளத்தின் தெற்கே பொதுப்பரப்புகளில் பாதுகாப்புப்படையின் நிலைகளை நோக்கி பயங்கரவாதிகள் தொடர்ந்து செறிவான சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகளை வீசி வருகின்றனர். இதுவரை நடந்த மோதலின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 115 ஆகும். சண்டை தொடர்கிறது."

"நடைபெற்றுக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடுவதற்கு வசதியாக பின்வரும் இடங்களில் தகவல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன:

  • தரைப்படை தலைமையகம் - ஆளணி ஆளுவக நெறியகம், தொலைபேசி. 422635
  • தரைப்படை தலைமையகம் - ஆட்சேர்ப்பு நெறியகம், தொலைபேசி. 440299
  • தரைப்படை தலைமையகம் - படைக்காவலர் மானவர் நெறியகம், தொலைபேசி. 424818
  • தரைப்படை வைத்தியசாலை, கொழும்பு, தொலைபேசி. 431301 மற்றும் 327638
  • படைப்பிரிவு தலைமையகம், பனாகொடை, தொலைபேசி. 855017 
  • படைப்பிரிவு தலைமையகம், அனுராதபுரம், தொலைபேசி. 025-22701 
  • படைப்பிரிவு தலைமையகம், திருகோணமலை, தொலைபேசி. 026-22428 மற்றும் 026-22340."

 

(Administration - ஆளுவகம்)

 

 


 

 

1000 சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டனர் - விடுதலைப் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4161
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:38
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/04/2022

அம்பகாமத்தின் பரந்த பரப்புகளை சிறிலங்கா தரைப்படையிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் தமது இலண்டன் பணிமனையிலிருந்து வெளியிட்ட கூற்றுரையில், ஏ9 நெடுஞ்சாலையின் திசையில் இன்று தமது போராளிகள் மேற்கு நோக்கிச் சென்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிபு கூறியதாவது, 1000 க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு இதுவரை நடந்த சண்டையில் 60 போராளிகளும் இறந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஊடக வெளியீட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவை பின்வருமாறு:

"மாங்குளத்திற்கு கிழக்கே கருப்பட்டமுறிப்பு - அம்பாகாமம் வட்டக்கூறில்  முரட்டுத்தனமாக நடந்து வரும் சண்டையில், விடுதலைப் புலிகளின் படைகள் சிறிலங்காவின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளைப் பரம்பி, கரிப்பட்டமுறிப்புக்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பகாமம் பரப்பின் பரந்த பரப்புகளை பரம்பியுள்ளன.

"பல மணித்தியாலங்கள் நீடித்த சமரின் பின்னர் இன்று அம்பாகாமத்திலிருந்த பல சிறுமுகாம்களை புலிகள் அழித்ததுடன் பகைவருக்கு பாரிய இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

"புளியங்குளத்திலுள்ள தளங்களிலிருந்து நெடுங்கேணி பரப்பை நோக்கி சிறிலங்காப் படையினர் முன்னகர முற்பட்டபோது, நெடுங்கேணிக்கும் புளியங்குளத்துக்கும் இடைப்பட்ட அடவிப் பரப்புகளிலும் புலிப் போராளிகள் கடும் சமரில் மிண்டினர். அப்பரப்பில் கடுமையான சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன."

"வவுனியா-கிளிநொச்சி வழித்தடத்தில் உள்ள சிறிலங்கா தளங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக ஏ9 நெடுஞ்சாலையின் திசையில் முல்லைத்தீவின் மேற்குப் பரப்பு நோக்கி விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் வீசுவதால், 'ஓயாத அலைகள் 3' என பெயரிடப்பட்ட புலிகளின் வலிதாக்குதல் படையெழுகை மூன்றாவது நாளாக இன்றும் முரட்டாகத் தொடர்கிறது."

"மூன்று நாட்களாக நடந்த உக்கிரமான சண்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை 60 புலிகள் சமரில் உயிரிழந்துள்ளனர்."

"இறந்த படைஞர்களை ஒப்படைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா படைத்துறை தாவனத்திடம் இருந்து பெறமுடியாமல் போனதால், புலிப் போராளிகள், அடவிகளில் சிதறிக்கிடந்த நூற்றுக்கணக்கான சிறிலங்கா படைஞர்களின் சிதைந்த சடலங்களை, புனிதப் படைய மரியாதையுடன் தகனம் செய்தனர்."

"வன்னிப் பரப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விடுதலைப் புலிகளின் வலிதாக்குதல் படையெழுகைக்கு செயலுறுவாக ஆதரவளித்து வருகின்றனர். பொதுமக்கள் போராளிகளுக்கு உணவு வழங்குவதுடன், விடுவிக்கப்பட்ட பரப்புகளிலுள்ள பல்வேறு சிறிலங்காவின் ஆய்தக் களஞ்சியங்களிலிருந்து ஏராளமான படைக்கலன்கள் மற்றும் கணைகளை அகற்ற உதவுகின்றனர். "

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

கருப்பட்டமுறிப்பு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4162
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:14
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

கடந்த 24 மணித்தியாலங்களாக கடும் தாக்குதலுக்குள்ளான கேந்திர நகரான கரிப்பட்டமுறிப்பு நகரை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக இலண்டனிலுள்ள விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

இதேவேளை, கரிப்பட்டமுறிப்புக்கு மேற்கே சில மைல்கள் தொலைவிலுள்ள மாங்குளத்தில் உள்ள தமது நிலைகள் மீது புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தி வட்டாரங்களின்படி, வவுனியா மற்றும் கிளிநொச்சியை இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் உள்ள கேந்திர சந்தி நகரில் கிட்டத்தட்ட 15,000 சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ளனர்.

புலிகள் மாங்குளத்தை முற்றுகையிட்டுள்ளதாகவும், அதன் மீது கடுமையான சேணேவித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் புலி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

இழப்புகளை மறைக்கும் அரசாங்கம் - ஐ.தே.க

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4163
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:33
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

சிறிலங்கா அரசாங்கம் இழப்புகளை மறைப்பதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், 36 சிறிலங்கா தரைப்படையினரினதும் 5 விடுதலைப் புலிகளினதும் சடலங்களை அந்தந்தக் கட்டளையாளர்களிடம் ஒப்படைக்க தம் நிகராளிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் தமிழ்நெற்றிற்கு இன்று தெரிவித்துள்ளது. 

பெரும்பாலும் நாளை சடலங்கள் ஒப்படைக்கப்படும் என செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனையிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரமான இலுப்பைக்கடவைக்கு புலிகளின் சடலங்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா தரைப்படையுடனும் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து சிறிலங்கா தரைப்படையினரின் சடலங்களைப் பெறுவதற்கு உதவிப் பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பதாக அரச சார்பற்ற நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியா - மாங்குளம் ஏ9 நெடுஞ்சாலைக்கு கிழக்கே உள்ள பரப்புகளில் கடந்த சில நாட்களில் நடந்த கடும் சண்டையில் 1000க்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் கூறுகின்றனர். புலிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தரைப்படை கூறுகிறது.

இதேவேளை, ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணியில் உயிரிழந்த படையினரின் சடலங்களை ஏற்றுக்கொள்ளாமல், உயிரிழந்தவர்களை "செயலில் காணாமல்போனோர்" என பட்டியலிடுவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் "அரசியல் இலாபம்" ஈட்ட திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று சார்பில்லா ஊடகமொன்றில் செய்தி வெளியிட்டுள்ளது."

"இதுவொரு தேசிய பேரழிவு. தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய சில தகவல்களைப் பெற ஆவலுடன் காத்திருக்கும் இந்தப் படைவீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும்." என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி கருணசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 

 

 


 

 

மாங்குளம் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது எனப்படுகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4164
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 5:34
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

கேந்திர நகரமான மாங்குளம் விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டுள்ளதாக வவுனியாவில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

ஏ9 நெடுஞ்சாலையில் வடக்கே சிறிலங்கா தரைப்படை நிலைகொண்டிருந்த நகரம் புலிகளால் மூன்று திசைகளிலிருந்து தாக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

தெற்கே நகர்கிறோம் என்கின்றனர் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4165
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:13
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

விடுதலைப் புலிகள் மாங்குளம் நகரைக் கைப்பற்றி, ஏ9 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, விடுதலைப் புலிகள் இன்று இலண்டன் பணிமனையிலிருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றனர். கரிப்பட்டமுறிப்பு படைத்தளத்தையும், ஒலுமடு சிறிலங்கா தரைப்படை முகாமையும் இன்று அதிகாலை தாம் கைப்பற்றியதாக புலிகள் தெரிவிக்கின்றனர்.

ஊடக வெளியீட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவை பின்வருமாறு:

"வவுனியாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஏ9 நெடுஞ்சாலையில் வலுவாக அரணப்படுத்தப்பட்ட மற்றும் கேந்திர வகையில் அமைந்திருந்த மாங்குளம் நகரம், இன்று அதிகாலையில் தொடங்கிய பல மணிநேர உக்கிரமான சண்டையின் பின்னர் புலிகளிடம் வீழ்ந்தது."

"விடுதலைப் புலிகளின் கடுமையான அழிவுத்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மாங்குளத்திலுள்ள கூட்டுப்படைத்தளத்தில் ஆளிட்டிருந்த சிறிலங்கா தரைப்படையினர் மொத்தமாக சீர்குலைந்து தப்பியோடினர்."

"இன்று அதிகாலை கரிப்பட்டமுறிப்பு படைத்தளமும், ஒலுமடு படைமுகாமும் இருபத்திநான்கு மணிநேர உக்கிரமான சண்டையின் பின்னர் புலிகளிடம் வீழ்ந்தன. இந்த கேந்திர நகரங்களின் வீழ்ச்சியானது கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கிலிருந்து புலிகளின் தாக்குதலுக்காளான மாங்குளம் தானைவைப்பு நகரின் தலைவிதியை மூடியது."

"மாங்குளம் வீழ்ச்சியுடன், விடுதலைப்புலிகளின் சண்டை உருவாக்கங்கள் ஏ9 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி வீசிச்சென்று கனகராயன்குளம் மற்றும் புளியங்குளத்திலுள்ள சிறிலங்கா வலுவெதிர்ப்பு நிலைகள் மீது கனவகை சேணேவி மற்றும் கணையெக்கி சூடுகளால் குத்துகின்றனர்."

"விடுதலைப் புலிகளின் இடவிய மற்றும் முரட்டுத்தனமான வலிதாக்குதல் மடுத்தலால் வியப்படைந்தும் மனவுறுதியிழந்ததும், இதில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்தும் வருகின்றன, சிறிலங்கா படையினர் முற்றிலும் சீர்குலைந்து, தங்கள் நிலைகளைவிட்டு வவுனியாவை நோக்கி தப்பியோடி புறமாறுகின்றனர்."

"கடந்த நான்கு நாட்களில் நடந்த கடும் சண்டையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு அதன் இரண்டு மடங்கானோர் காயமடைந்துள்ளனர்."

"இதுவரை 82 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்."

"மாங்குளம், ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம் சமர்க்களங்களில் நூற்றுக்கணக்கான படையினரின் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன."

"அரசியல் காரணங்களுக்காக, சிறிலங்கா படைத்துறை தாவனமும் அரசும், கொல்லப்பட்ட வீரர்களின் சடலங்களை ஏற்க செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுமதி மறுத்ததால், புலிப் போராளிகள் படைய மரியாதையுடன் இறந்த படைவீரர்களை தகனம் செய்து வருகின்றனர்."

 

map_ottisuddan_1.gif

 

 


 


 

 

1500 படையினர் பலி என்கிறது ஐ.தே.க

 

மூலம்https://noolaham.net/project/484/48338/48338.pdf | உதயன்
நாளேடு வெளியீட்டு திகதி: 05-11-1999
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 14/05/2022

வன்னியில் விடுதலைப்புலிகள் ஆரம்பித்துள்ள தாக்குதலில் இதுவரை ஆயிரத்து 1500 படையினர் உயிரிழந்துள்ளனர் எனத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஐதேக செயலாளர் காமினி அத்துக்கொறல தெரிவித்தார்.

நேற்று அவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இத்தகவலை வெளியிட்டார்.

இந்தத் தாக்குதலில் 700இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் 15 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் - அவர் மேலும் தெரிவித்தார். 

'வெற்றிநிச்சயம்' இராணுவ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் நான்கில் மூன்று பரப்பு பிரதேசம் கடந்த நான்கு நாட்களில் இழக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் பல நகரங்களை கைப்பற்றுகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4167
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 10:30 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

நேற்று மாங்குளத்தை பரம்பிய விடுதலைப் புலிகள் மற்றொரு கேந்திர நகரமான ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள கனகராயன்குளத்தை கடந்தயிரவு கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனகராயன்குளத்திற்கு கிழக்கேயுள்ள மற்றுமொரு முக்கிய நகரமான நைனாமடுவையும் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாங்குளத்திலிருந்து தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் கனகராயன்குளம் உள்ளது.

 

 


 

 

புலிகள் புளியங்குளத்தை கைப்பற்றினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4168
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:22 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

வவுனியாவிலிருந்து வடக்கே சுமார் 27 கிலோமீற்றர் தொலைவில் ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள கேந்திர நகரமான புளியங்குளத்தை விடுதலைப் புலிகள் இன்று பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை புலிகள் புளியங்குளத்திலிருந்து வடக்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனகராயன்குளத்தை கைப்பற்றினர்.

 

 


 

 

"வவுனியா புலப்பட்டது" என்கின்றனர் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4169
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:42 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

வன்னிப் புலத்தில் சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்பு முறைமை "திடீரென்று இடிந்துவீழ்ந்ததால்" வன்னிப் புலத்திற்கு தெற்கேயுள்ள வவுனியாவின் கேந்திர சிறிலங்கா தரைப்படையின் தானைவைப்பு நகரம் "புலிகளின் வலிதாக்குதல் மடுத்தலுக்காளானது" என்று விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்தனர்.

மூன்றுமுறிப்பு, மன்னகுளம் (மாங்குளத்திற்கு மேற்கே), நைனாமடு மற்றும் மதியாமடு (புளியங்குளத்திற்கு கிழக்கே) ஆகிய நகரங்கள் உட்பட ஏ9 நெடுஞ்சாலையின் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள பரந்த நிலப்பரப்புகளை புலிகள் கைப்பற்றியுள்ளதாக இன்று இலண்டனில் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"தெற்கு வன்னிப் புலத்தில் ஏ9 நெடுஞ்சாலையில் மேலும் இரண்டு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்தபோது சிறிலங்கா தரைப்படைத் தாவனம் மேலும் மானக்கேடான தோல்விகளைச் சந்தித்தது."

"வவுனியா நகரிலிருந்து முறையே 15 மற்றும் 20 மைல் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் அமைந்திருந்த புளியங்குளம் மற்றும் கனகராயன்குளத்தின் மிகவும் வலிமையான மற்றும் நன்கு அரணப்படுத்தப்பட்ட காவலரண்கள் புலிகளின் படைகளால் பரம்பப்பட்டன."

"புலிகளின் அதிரடிப்படைப் பிரிவுகள் கனகராயன்குளம் தானைவைப்பு நகருக்குள் நுழைந்து, கடுமையான சண்டையின் பின்னர் படைத்தளத்தை நேற்றிரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. படையினரின் 55, 56 ஆவது படைப் பிரிவுகளின் தலைமையகத்தை உள்ளடக்கிய பாரிய கூட்டுப்படைத்தளமாக அமைக்கப்பட்ட கனகராயன்குளம் கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகளின் கடும் சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைவீச்சுக்கு உள்ளாகி பெரும் சேதங்களைச் சந்தித்தது.

"கனகராயன்குளத்தை பரம்பிய பின்னர், புலிகளின் அதிரடிப்படை பிரிவுகள் புளியங்குளம் மீது கடுந்தாக்குதலை நடத்தி இன்று நகரத்தை கைப்பற்றினர்."

"நன்கு திண்ணிறுப்பான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரங்களின் வீழ்ச்சியுடன், வடக்கு வன்னிப் புலத்தில் கனத்த மனித உயிர்களை இழந்ததன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறிலங்கா படைத்துறையால் வலியுடன் கட்டமைக்கப்பட்ட அஞ்சத்தக்க வலுவெதிர்ப்பு முறைமை திடீரென இடிந்துவீழ்ந்தது."

"விடுதலைப் புலிகளின் கடுந்தாக்குதல்கள் மற்றும் பாரிய ஆட்புலங்களை திடீரென இழந்தமை வன்னியில் படைத்துறை தாவனத்தை குழப்பியதுடன் படையினரிடையே மனவுறுதியிழப்பையும் ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான படையினர் அச்சத்தில் தங்கள் நிலைகளை புறமாறிட்டு அடவிக்குள் தப்பியோடிவிட்டனர்."

"வன்னியின் பல்வேறு புலங்களில் முடித்துவைக்கும் நடவடிக்கைகளில் புலிப் போராளிகள் சிங்களப் படையினரைப் பிடித்தாத்துடர்கின்றனர்."

"பல கூட்டுப்படைத்தளங்கள், தளங்கள் மற்றும் முகாம்களை குறுகிய காலத்திற்குள் திடீர் மற்றும் மின்னல்வேகத் தாக்குதல்களால் பரம்பியதன் மூலம், விடுதலைப் புலிகள் பல பில்லியன் உரூபாய் மதிப்பிலான போர்த் தளவாடங்களையும் படைய ஊர்திகளையும் குவித்துள்ளனர்."

"வன்னியின் தெற்கு வட்டக்கூறிலுள்ள கடைசி தானைவைப்பு நகரமான புளியங்குளத்தின் வீழ்ச்சியுடன், வவுனியா நகரம் இப்போது விடுதலைப் புலிகளின் வலிதாக்குதல் மடுத்தலுக்கு புலப்பட்டுள்ளது. 50,000 தமிழர்கள் வாழ்கின்ற வவுனியா நகரின் வலுவெதிர்ப்பு முறைமையை வலுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான படையினர் ஏற்கனவே வவுனியாவில் உள்ள தளங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

 


 

 

உணவுப் பற்றாக்குறை பற்றி படைவீரர்கள் சொல்கிறார்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4170
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:11 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

புளியங்குளம் பரப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பெருமளவிலான சிறிலங்கா தரைப்படையினர் வவுனியா அரசாங்க தானைவைப்பு நகருக்குப் பின்வாங்கியுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போர்முனையிலிருந்து அதிகமான படைகள் தொடர்ந்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள மக்கள், தமிழ்நெற் செய்தியாளர்களிடம் கூறுகையில், படையினர் அடிபாட்டு மனவழுத்த எதிர்விளைவுகளை அடைந்திருப்பதாகவும், வவுனியாவிலுள்ள கடைகளில் உணவு மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ள முயன்றதாகவும் தெரிவித்தனர்.

மற்றப் படையினர் ஈரப்பெரியகுளத்திற்குத் தப்பிச் சென்று, அந்த நகரத்திலுள்ள சிங்கள ஊர்மக்களிடம் உணவு மற்றும் மாற்று உடைகளைப் பெற்றுக்கொள்ள முயன்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரங்களில் பொதுமக்களிடம் பேசும் போது, புலிகள் சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைவீச்சு மேற்கொண்டு கடுமையாகத் தாக்கியதாக படையினர் கூறியதாக கூறப்படுகிறது.

"எறிகணைவீச்சின் தொடர்ச்சியான தன்மை காரணமாக எங்களால் நின்று சண்டையிட இயலவில்லை" என்று படைஞர் ஒருவர் ஒரு கடையில் உள்ளவர்களிடம் கூறினார்.

மற்ற வீரர்கள் எல்லா திசைகளிலிருந்தும் எறிகணை வீசப்பட்டதாகவும், திருப்பியடிக்க இயலாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

"நாங்கள் சுட்டவுடன், எந்தப் புள்ளியில் இருந்து சுட்டோமோ அந்த புள்ளியை அவர்கள் குறிவைப்பார்கள். இது அவர்களின் தாக்குதலை எதிர்ப்பதை கடினமாக்குகிறது," என்று படைஞர் கூறினார். "எங்களைப் போன்ற பலர் பின்வாங்கிவிட்டனர்."

அப்பரப்பில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்திகள் உணவுகளை இறக்கி வைக்கும் போது கூட, வழங்கப்படும் தொகை அதிக எண்ணிக்கையிலான வீரர்களுக்கு போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த படையினரில் சிலர் தாங்கள் தப்பிச் சென்ற பரப்புகளிலுள்ள கடைகளில் கொள்ளையடித்துள்ளதாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பரப்பு தமிழ்நெற் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாக தமிழ் வணிக சங்கம் ஒன்று முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சிறிலங்கா தரைப்படை வீரர்களின் 402 சடலங்களை தகனம் செய்ததாக புலிகள் தமக்கு அறிவித்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் தமிழ்நெற்றிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரசியல் காரணங்களுக்காக, சிறிலங்கா தரைப்படை தாவனமும், அரசும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு உயிரிழந்த படைவீரர்களின் சடலங்களை ஏற்க அனுமதி மறுத்ததால், புலிப் போராளிகள் படைய மரியாதையுடன் இறந்த வீரர்களை தகனம் செய்து வருகின்றனர்."

"கடந்த நான்கு நாட்களாக நடந்த கடும் சண்டையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருமடங்காக காயமடைந்துள்ளனர்" என விடுதலைப் புலிகளின் கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாங்குளம், ஒலுமடு, கருப்பட்டமுறிப்பு, அம்பகாமம், கனகராயன்குளம் மற்றும் நைனாமடு ஆகிய கேந்திர நகரங்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் ஏ9 நெடுஞ்சாலையின் கிழக்கில் உள்ள ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை புலிகள் கைப்பற்றினர்.

மே 1997 முதல் ஒக்டோபர் 1998 வரை நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் மிகப் பெரிய மற்றும் நீண்ட நடவடிக்கையான ஜெயசிக்குறு நடவடிக்கையில் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட மாங்குளத்துக்கும் புளியங்குளத்துக்கும் இடைப்பட்ட பரந்த பரப்பை இப்போது தாங்கள் கைப்பற்றியுள்ளதாக புலிகள் கூறுகின்றனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகளை நிப்பாட்ட சிறிலங்கா தரைப்படை வலிதாக்குதலைத் தொடங்குகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4171
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:39 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

வன்னிப் பரப்பில் கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பரப்புகளை நோக்கி சிறிலங்கா தரைப்படை இன்று காலை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய படையினர் களமுனைகளுக்கு விரைந்துள்ளதாகவும், சிறிலங்கா தரைப்படைப் பிரிவுகள் கனகராயன்குளத்திற்கு மேற்குப் பரப்புகளிலிருந்து (ரணகோச நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பரப்புகள்), மாமடு, வவுனியாவிற்கு கிழக்கே மற்றும் புளியங்குளம் நோக்கி நகர்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையில் தரைப்படையினர் 60 சடலங்களையும், காயமடைந்த 84 வீரர்களையும் மீட்டுள்ளனர், மேலும் இன்று காலை நடந்த புதிய சண்டையில் 32 வான்படை வீரர்களும் காயமடைந்துள்ளனர் என்றனர்.

வவுனியா படைத் தலைமையகத்தில் நிலைகொண்டிருந்த படையினர் தரைப்படை பிரிவுகளுக்கு ஆதரவாக சேணேவிச் சூடுகளை மேற்கொண்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளால் வீசப்பட்ட சில எறிகணைகள் ஓமந்தை பரப்பை தாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தரைப்படையை விட்டு புறமாறிய 9 பேர் நேற்று மாலை மடு வீதியில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

 


 

 

சிறிலங்கா தணிக்கையை விதிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4172
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:21 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/04/2022

நவம்பர் 6 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொதுப் பாதுகாப்பு ஆணைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ் சிறிலங்கா அதிபர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாளேடுகள் மீது தணிக்கையை விதித்துள்ளார். விடுதலைப் புலிகள் பல கேந்திர நகரங்களைக் கைப்பற்றிய வடக்கு வன்னிப் பரப்பில் கடுமையான சண்டையை அடுத்து நாளேடுகள் மீதான கட்டுப்பாடு வந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தகுதிவாய்ந்த அதிகாரசபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் அல்லது மேற்கொள்ளப்படுகிறது அல்லது மேற்கொள்ளப்படுவதற்கு முன்மொழியப்பட்ட படை நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு பொருண்மம் தொடர்பான எந்தவொரு விடையத்தையும் வெளியிடுதல், அலைபரப்புதல் அல்லது பரிமாறல் ஆகியவற்றை புதிய ஒழுங்குமுறைகள் தடுக்கின்றன.

தணிக்கை அறிவிப்பின் முழு உரை பின்வருமாறு:

1998 இன் அவசரநிலை (உணர்வுமிக்க படைத் தகவல்களை வெளியிடுதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கான தடை) ஒழுங்குமுறை எண்.1

சூன் 5, 1998 இன் வர்த்தமானி எண்.1030/28 இல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆணையின் பிரிவு 2ஏ இன் அடிப்படையில் நடைமுறையில் இருப்பதாகக் கருதப்பட்டது ஆகியன, பின்வரும் புதிய ஒழுங்குமுறையின் ஒழுங்குமுறைக்கு மாற்றாக இதன் மூலம் திருத்தப்பட்டது:

"2. ஒரு அலைபரப்புப் பிரிவு அல்லது தொலைக்காட்சி நிலையத் தடங்களை நிறுவி இயக்க அதிகாரமளிக்கப்பட்ட அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செய்தியாசிரியர் அல்லது வெளியீட்டாளர் அல்லது எந்தவொரு ஆளும் மின்னணு கரணம் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ ஆயுதப்படைகள் அல்லது காவல்படைகளால் (சிறப்பு பணிக்கடப்படை (STF) உட்பட) மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்படும் அல்லது மேற்கொள்ள முன்மொழியப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் படை நடவடிக்கை தொடர்பான எந்தவொரு விடயமும் அல்லது படையினர் அல்லது ஆளணிகளின் மேம்பாடு அல்லது அப்படிப்பட்ட படைகளின் வானூர்தி அல்லது கடற்கலன் உள்ளிட்ட ஏந்தனங்களின் மேம்பாடு அல்லது பயன்பாடு அல்லது தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் ஆற்றும் நோக்கத்திற்காக ஆயுதப்படைகளின் தலைமைக் கட்டளையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப்படைகள் அல்லது காவல்படையின் எந்தவொரு உறுப்பினரினது அல்லது முன்னெடுப்புகளினது மனவுறுதி அல்லது செயல்திறனின் அதிகாரநிறைவு நடத்தை தொடர்பான எந்தவொரு கூற்றுரையைக் கொண்ட ஏதேனும் பொருண்மத்தை (ஆவணங்கள், சித்திர நிகர்த்துவங்கள், நிழற்படங்கள் அல்லது ஒளிப்பதிவு படங்கள் உட்பட) தகுதிவாய்ந்த அதிகாரத்தின் அனுமதியின்றி, அச்சிட, வெளியிட, வழங்கிட அல்லது பரிமாறிட அல்லது அச்சிடப்படுவதற்கு, வெளியிடப்பட்டவை வழங்கப்படுவதற்கு அல்லது பரிமாறுவதற்கு காரணமாக முடியாது."

 

 


 

 

முன்னகர்வு மீளப்பட்டது என்கின்றனர் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4173
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:01 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/04/2022

சிற்றோய்விற்குப் பிறகு, மன்னார் மாவட்டத்தின் கிழக்குப் பரப்பிலுள்ள பள்ளமடு மற்றும் பாலம்பிட்டியில் உள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது விடுதலைப் புலிகள் பாரியளவிலான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. வவுனியாவிற்கு வடக்கே 13 கிமீ தொலைவில் உள்ள ஓமந்தை பரப்பை கடுமையான சேணேவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

புலிகளின் முன்னகர்வை தடுத்து நிறுத்துவதற்காக தங்களின் படையினர் மூன்று பக்கங்களிலும் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்தன. எனினும், இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளன.

இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலர் ஒருவர், "ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு, நேற்று, விடுதலைப் புலிகள் அண்மையில் கைப்பற்றப்பட்ட பரப்புகளிலிருந்து தெற்கு நோக்கி நகர்கின்றனர்" என்றார்.

கேந்திர நகரமான புளியங்குளத்தை கைப்பற்றியதன் பின்னர் வடக்கு தானைவைப்பு நகரான வவுனியா புலப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் நேற்று விடுத்துள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வசிக்கும் மக்கள் தமிழ்நெற் தொடர்பு கொண்ட போது, நகரத்திலுள்ள அரச படையினர் ஓமந்தை நோக்கி எறிகணைகளை வீசி வருவதாக தெரிவித்தனர்.

ஊடகவியலாளர்கள் போர் வலயங்களுக்குள் அனுமதிக்கப்படாததால், அறிக்கைகளை தனிப்பட சரிபார்க்க முடியவில்லை. படைத்துறை தொடர்பான செய்திகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று காலை கடுமையான செய்தித் தணிக்கையை விதித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்தவர்கள், கைதிகள் பற்றி கவலை கொண்டுள்ளது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4175
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:33 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/04/2022

ஜெனிவாவில் உள்ள அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் இன்று சிறிலங்கா தரைப்படை மற்றும் விடுதலைப் புலிகளுக்கு அனைத்துலக மனிதநேய சட்டங்களுக்கு இணங்க வேண்டிய கடப்பாடுகளை நினைவூட்டியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் இவ்ஊடக வெளியீடானது தீவின் வடக்கில் ஒரு கிழமையாக கடுமையான சண்டையை அடுத்து வந்துள்ளது.

அந்த ஊடக வெளியீட்டின் உரை பின்வருமாறு:

"அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமானது காயமடைந்த அடிபாட்டாளர்கள் மற்றும் வட இலங்கையில் அண்மைய மிண்டுதலின் போது பிடிபட்டவர்களின் ஓம்புதல் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது."

"நாட்டில் நடந்த கடந்த கால சண்டைகள் போக்கூழாக பல இறந்தவர்களுக்கும் சில கைதிகளுக்கும் வழிவகுத்தது"

"அனைத்துலக மனிதநேயச் சட்டங்களுக்கு இணங்க வேண்டிய கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் நினைவூட்டுகிறது."

"ஆயுதங்களை கீழே இறக்கிய அடிபாட்டாளர்கள் விட்டுவைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு சண்டையில் ஈடுபட்டவர்களை இது அவசரமாக அழைக்கிறது."

"பிடிபட்டவர்கள் மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும் மற்றும் காயமடைந்தவர்கள் பாகுபாடின்றி சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்."

 

 


 

 

எல்லைகளற்ற மருத்துவர்கள் மனிதநேய சூழ்நிலையால் "ஆழ்ந்த அக்கறை" கொண்டுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4176
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 10:91 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/04/2022

அவசரகால மருத்துவ உதவி அமைப்பான 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' வெள்ளிக்கிழமை வட இலங்கையில் கடுமையான சண்டை நடந்து வரும் மனிதநேய நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

இன்று வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டில், எல்லைகளற்ற மருத்துவர்கள், அனைத்துலக மனிதநேய சட்டத்தை மதித்து, பொதுமக்களைக் காயப்படுத்தும் மற்றும் கொல்லும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துமாறு போரிடும் கன்னைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

"இடருதவிப் பொருட்கள் மற்றும் பிற மனிதநேய முகவரகங்களுக்கான அணுகலுக்கான முன்னரங்கப் பாதைக்கு கன்னைகள் பொறுப்புறுதி அளிக்க வேண்டும்" என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் கூறியது.

"அடிபாட்டு வலயத்திற்கு அருகிலுள்ள எல்லைகளற்ற மருத்துவர்களின் களப்பணியாளர்கள் படைகளை கண்மூடித்தனமான பயன்படுத்தியதற்கான சோகமான ஆதாரங்களை ஏற்கனவே கண்டுள்ளனர்" என்று இயக்குநரக நெறியாளர் மார்செல் வான் சூசுற்று கூறினார். "சிறிலங்கா தரைப்படை மற்றும் தமிழ் புலிகள் இருவரும் தாக்குதலுக்கு இலக்காகாத வகையில் பொதுமக்களின் உரிமையை மதிக்க வேண்டும்."

"நவம்பர் 3 ஆம் தேதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் பள்ளியடி ஊரில் எறிகணைகள் வீசப்பட்டன. மல்லாவி மருத்துவமனையின் எல்லைகளற்ற மருத்துவர்களின் சுகாதாரப் பணியாளர்கள், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் காயமடைந்த மூன்று குழந்தைகளுக்கு சிறு சிதறுதுண்ட காயங்களுக்குப் பண்டுவம் அளித்தனர், மேலும் 63 வயதான ஒருவருக்கு வலுத்த காயம் ஏற்பட்டதால் இரண்டு கால்களும், ஒரு உடனடி விளைவாக துண்டிக்கப்பட்டது.

"அன்று மாலை அதே பரப்பு சிறிலங்கா வான்படையின் தாரை வானூர்திக் குண்டுவீச்சுக்கு உள்ளானது. படுகாயமடைந்த 11 பேர் மல்லாவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் - இவர்களில் 6 பேர் வரும்போதே இறந்தனர், ஏழாவது ஆள் பல மணிநேர அறுவைப் பண்டுவத்திற்குப் பின் இறந்தார். ஏனைய நான்கு உயிர்ச்சேதங்களும் மல்லாவி மருத்துவமனையில் ஒரு நிலையான நிலையில் உள்ளனர். 

அதன் ஊழியர்களுக்கு வழங்கல்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அமைப்பு எழுதருகையிட்டது.

"மல்லாவியிலும் புதுக்குடியிருப்பிலும் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்களின் அணிகள் நாட்டின் தெற்கில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களால் இன்னும் சில பணிகளை நிறைவேற்ற முடியும்.

"அணிகள் தங்களுக்கு இருக்கும் வழங்கல்களுடன் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று வான் சூசுற்று கூறினார், "நீண்ட காலத்திற்கு சண்டை தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட பரப்புகளில் உள்ள பொதுமக்கள் கடுமையான உணவு மற்றும் இன்றியமையாதவைக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். மருத்துவப் பொருட்கள் மற்றும் குடிமக்களுக்கு மனிதநேய உதவிகள் வெளிப்படையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய இரு தரப்பினரும் நடவடிக்கை எடுப்பது கட்டாயத்தேவை."

 

 


 

 

மூன்று முனைகளில் முன்னகர்கிறோம் என்கின்றனர் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4177
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 11:00 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/04/2022

வன்னியின் கிழக்கு, நடுவண் மற்றும் மேற்கு வன்னியில் முறையே மணலாறு (வெலி ஓயா), ஓமந்தை மற்றும் பள்ளமடு ஆகிய பரப்புகளில் மூன்று முனைகளிலும் சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆட்புலத்திற்குள் தாங்கள் முன்னகர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்தனர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினரும் 119 புலிப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தமது இலண்டன் பணிமனையொன்றிலிருந்து வெளியிட்ட கூற்றுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஊடக வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பரப்புகள் பின்வருமாறு:

"வன்னியின் எல்லைப் பரப்புகளில் கடுமையான சண்டைகள் தொடர்ந்தன. புலிகளின் படைகள் இன்று மணலாறு (வெலி ஓயா) வடகிழக்கு பரப்புக்குள் மேலும் மடுத்து, வல்வளைக்கப்பட்ட சிறிலங்கா தரைப்படையிடம் இருந்து தமிழர் ஆட்புலத்தின் பரந்த பரப்புகளை மீட்டெடுத்தன."

"விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை பிரிவுகள் மணலாற்றுப் பரப்பில் நன்கு அரணப்படுத்தப்பட்ட படைமுகாமுள் புயலெனப் புகுந்து அவ்வாட்புலத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால், சிறிலங்கா படையினர் சீர்குலைந்து தப்பியோடினர்."

" 'தனிக்கல்லு' மற்றும் 'சிலோன் தியேட்டர்' படை முகாம்கள் - இவை அப்பரப்பிலுள்ள தமிழ் ஊர்களுக்கான சிங்களக் குடியேற்றத்தின் பாதுகாப்புக் கவசமாக தொழிற்பட்டது - தமிழ்ப் புலிகளுக்கும் சிங்களப் படையினருக்கும் இடையில் பல மணிநேரமாக நடந்த கனவகை சேணேவி மற்றும் கணையெக்கி சண்டைக்குப் பின்னர் புலிகளிடம் வீழ்ந்தது."

"நடுவண் வட்டக்கூறில், ஏ9 நெடுஞ்சாலையில், புலிகளின் சண்டைப் பிரிவுகள் புளியங்குளத்திலிருந்து மேலும் முன்னகர்ந்து, புளியங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான கேந்திரச் சந்தியான பனிக்கநீராவியை கைப்பற்றினர்."

"கடந்த 24 மணிநேரமாக அப்பரப்பில் விடுதலைப் புலிகளும், சிறிலங்கா தரைப்படையும் கடுமையான சேணேவி எறிகணைவீச்சு துவந்துவ மிண்டுதலில் ஈடுபட்டுவருகின்றனர்."

"மன்னாரின் மேற்குப் பரப்பில் உள்ள பள்ளமடு மற்றும் பாலம்பிட்டி பரப்புகளில் வல்வளைப்பு தரைப்படையிடமிருந்து நிலங்களை மீட்பதற்காக விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் அங்கும் கடும் சண்டை வெடித்துள்ளது."

"ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு அதன் இரு மடங்கானோர் காயமடைந்துள்ளனர். 43 பெண் போராளிகள் உட்பட 119 விடுதலைப் புலிகள், நடந்து வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் இதுவரை உயிரிழந்துள்ளனர்."

"இதற்கிடையில், வன்னியின் எல்லைப் பரப்புகளில், புலிகளின் துரித முன்னகர்வைத் தடுக்க, படையினரை வலுப்படுத்தும் தீவிர முயற்சியில், சிறிலங்கா படைத்துறை தாவனமானது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல படைமுகாம்களை அகற்றி வருகிறது."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

உயிரிழப்பு புள்ளிவிரிப்புகள் மீது புயல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4178
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:24 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

சிறிலங்கா தரைப்படை அண்மைய சமர்களில் அதிக உயிர்ச்சேதங்களைச் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் "ஏற்கத்தகா மிகைப்படுத்தப்பட்டவை" என்றும் கடந்த வாரத்தில் 101 படையினர் மாத்திரமே கொல்லப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் இன்று தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறிலங்காவின் முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலர்கள், 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதில் சிறிலங்கா தரைப்படையானது "அஞ்சத்தகும் இழப்புக்களை" சந்தித்துள்ளதாகக் கூறியதுடன், அரசாங்கம் ஒரு "தேசியப் பேரழிவை" மறைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிபர் சந்திரிக்கா இன்று வெளியிட்ட ஊடக வெளியீட்டில், கடந்த வாரத்தில் பல முக்கிய நகரங்கள் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்ததில் 101 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாகவும் 743 பேர் காயமடைந்துள்ளதாகவும் 122 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அதிபரின் தேர்தல் பரப்புரைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், சிறிலங்கா தரைப்படையால் ஏற்பட்ட பாரிய இழப்புக்களை அரசாங்கம் மறைத்து வருவதாக எதிர்க்கட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

"இது ஒரு தேசிய பேரழிவு. தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய சில தகவல்களைப் பெற ஆவலுடன் காத்திருக்கும் இந்தப் படைவீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும்" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கலாநிதி கருணசேன கொடித்துவக்கு கடந்த வாரம் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். 

"அரசாங்கத்தின் போர்க் கேந்திரம் தெளிவாகத் தோல்வியடைந்துள்ளது" என்று ஐக்கிய தேசியக் கட்சி அலுவலர் ஒருவர் இன்று தமிழ்நெற்றிடம் தெரிவித்தார். "இழப்புகள் பயங்கரமானவை, ஆனால் தணிக்கை மற்றும் தவறுத்தகவலுக்குப் பின்னால் அரசாங்கம் உண்மையை மறைக்கிறது."

போர் மற்றும் படைத்துறை தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் சிறிலங்கா நேற்று வியத்தகு நாளேட்டு தணிக்கையை அறிமுகப்படுத்தியது.

புலிகளின் தாக்குதலின் மூன்றாம் நாளில் 1000 பேர் கொல்லப்பட்டதாகவும் 1500 பேர் காயமடைந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வாரம் கூறியது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு அரசியல் இலாபம் பெறுவதற்காகவே இந்தப் போர் நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் திடமாகி தாக்குதலை அழுத்துகின்றனர்

 

மூலம்:https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4179
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:02 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

விடுதலைப் புலிகள் அண்மையில் சிறிலங்கா தரைப்படையிடமிருந்து கைப்பற்றிய பரப்புகளை திடமாக்கி வருவதாகவும், அதே சமயம் ஏனைய பரப்புகளில் தமது வலிதாக்குதலை முன்னெடுத்து வருவதாகவும் இன்று ஐரோப்பாவிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா தரைப்படையின் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை புலிகள் துடைத்தெறிந்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் இருந்து புளியங்குளம் பரப்பு வரையான பெரும்பரப்பு கடந்த வாரத்தில் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, புலிகளின் படைகள் இன்று பனிக்கநீராவி, 3 கி.மீ. புளியங்குளத்திற்கு தெற்கே, மீது முன்னகர்வதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மற்ற இடங்களில், மணலாறு (வெலி ஓயா) பரப்பில், தனிக்கல், கெனட் பார்ம் மற்றும் சிலோன் தியேட்டர் உட்பட ஆறு சிறிலங்கா தரைப்படை முகாம்களை விடுதலைப் புலிகள் பரம்பியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த செவ்வாய் கிழமை புலிகள் இயக்கம் 'ஓயாத அலைகள் 3' என்ற நடவடிக்கையை ஆரம்பித்ததில் இருந்து 44 மகளிர் உட்பட 120 புலிப் போராளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிதாக்குதல் தொடர்கிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

அச்சத்தில் வவுனியா வணிகர்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4180
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:07
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

நேற்றிரவு ஒரு சிற்றோய்விற்குப் பிறகு, இன்று காலை வவுனியாவிற்கு வடக்கே கடுமையான சண்டை மீண்டும் தொடங்கி நாள் முழுவதும் தொடர்ந்ததாக வடக்கு நகர வட்டாரங்கள் இன்று தமிழ்நெற்றிற்கு தொலைபேசியில் தெரிவித்தன. சிறிலங்கா தரைப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சேணேவி சூட்டுப் பரிமாற்றம் நடந்தபோது தொடர்ச்சியான வெடியோசைகள் நகரத்தை உலுக்கியது.

தம்புள்ளை, கெக்கிராவ, கண்டி போன்ற தென்னிலங்கை பரப்புகளில் இருந்து மரக்கறி, தேங்காய் மற்றும் இன்றியமையாத உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்திகள் வவுனியா நகருக்கு வழமை போன்று வரவில்லை என வவுனியா நகர வணிகர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களில் ஒன்றிரண்டு பாரவூர்திகள் மட்டுமே வந்ததாகவும், இதனால் காய்கறிகள் மற்றும் இதர பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தென் நகரங்களில் இருந்து வவுனியாவிற்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தி ஓட்டுநர்கள், நகரின் வடக்கே நடக்கும் கடும் சண்டையினால் அச்சமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

 


 

 

சிறிலங்கா தரைப்படையினர் ஊர்வாசிகளின் ஆதரவைக் கோருகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4181
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:13
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

கிழக்குப் புலத்தில் விடுதலைப் புலிகளின் முன்னகர்வுகளை தடுப்பதற்கு சிறிலங்கா தரைப்படையிற்கு ஆதரவு வழங்குமாறு மணலாறு (வெலி ஓயா) புலத்திலுள்ள சிங்கள ஊர்மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

வவுனியாவின் தானைவைப்பு நகரம் கூடுதல் படையினரால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயப்பட வேண்டாம் எனவும் சிறிலங்கா அதிகாரிகள் ஊர்மக்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மேலும் சண்டை மூளும் என்ற அச்சத்தில் ஊர்மக்கள் அப்பரப்பை விட்டு வெளியேறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மணலாறு புலத்திலுள்ள ஆறு சிறிலங்கா படைமுகாம்களை விடுதலைப் புலிகள் பரம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை புலத்திலுள்ள சிறிலங்கா தரைப்படையின் காவலரண்கள் மற்றும் முகாம்கள் மூடப்பட்டு படையினர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஆனால் படையினர் வவுனியாவிற்கு அனுப்பப்பட்டனரா என்பதைக் கூற முடியாது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மணலாற்றுப் புலமானது தீவின் தமிழ் பரப்புகளின் வடக்கு மற்றும் கிழக்கு பரப்புகளை இணைக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த பரப்பை குடியேற்றப்படுத்தும் முறைவழியை ஆரம்பித்து அதற்கு வெலி ஓயா (தமிழ் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பு) என மறுபெயரிட்டது.

1984 ஆம் ஆண்டு சிங்களக் குடியேற்றத்தின் முன்னோடியாக சிறிலங்கா தரைப்படையால் மணலாறிலுள்ள பதினெட்டு பாரம்பரிய ஊர்களிலிருந்தும் தென்னமரவாடி என்ற பெரிய பழைய ஊரிலிருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வல்லந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தப் புலத்தில் சிங்களக் குடியேற்றங்களை பாதுகாப்பதற்கான சிறிலங்கா தரைப்படையின் உத்தியின் ஒரு பகுதியாக பின்னரும் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஊர்களும் அழிக்கப்பட்டன.

 

 


 

 

வெளியேறுவதாக வவுனியா மக்கள் தெரிவித்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4183
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

புலிகளின் குரல் வானொலி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விடுதலைப் புலிகளின் வலிதாக்குதலுக்கு முன்னதாக பொதுமக்களை ஓம்பலான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்திய பல ஒலிபரப்புகளை தொடர்ந்து வவுனியாவில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் தானைவைப்பு நகரத்தில் உள்ள பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக உதவிப் பணியாளர்கள் இன்று தெரிவித்தனர். புலிகளின் குரல் வானொலியானது பொதுமக்கள் செல்லவேண்டிய பரப்புகளை விதப்பாக குறியிடுகிறது.

அறிவிப்பு பின்வருமாறு அமைந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்:

"ஓம்பல் காரணங்களுக்காக, வவுனியாவில் வசிக்கும் பொதுமக்களை அப்பரப்பை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவசரமாக கேட்டுக்கொள்கிறோம்."

“விடுதலைப் புலிகளின் படைகள் நகரை நெருங்கி வருவதால் பொதுமக்கள் நகரை விட்டு ஆசிகுளம், இராசேந்திரன்குளம், மடு பரப்புகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"கோவில்குளம், மூன்றுமுறிப்பு, சமளங்குளம், மருதங்குளம், ஈரப்பெரியகுளம், சின்னப்புதுக்குளம் ஆகிய பரப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆசிகுளத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

"வவுனியா நகர மையப்பரப்பு, பண்டாரிக்குளம், கற்குளி, தேக்கங்காடு, தோணிக்கல், வைரவர் புளியங்குளம், பட்டாணிச்சி புளியங்குளம், வேப்பங்குளம், நெளுக்குளம், தாண்டிக்குளம் ஆகிய பரப்புகளைச் சேர்ந்த மக்கள் இராசேந்திரன்குளம் நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

“பொதுமக்களாகிய நீங்கள் இதன் விளைவாக கடினங்களைச் சந்திக்க நேரிடும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

“[படை] முகாம்கள் குடியிருப்புப் பரப்புகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், எங்கள் தாக்குதல் எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சுகிறோம்.

"நீங்கள் சிரமத்தைப் பொறுத்துக்கொண்டு ஓம்பலான பரப்புகளுக்கு வெளியேறுமாறு நாங்கள் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்."

வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு தெற்கே அமைந்துள்ள நகரை அச்சுறுத்தும் நிலையில் தமது படைகள் இருப்பதாக புலிகள் வார இறுதியில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர். அதில் பெரும் பரப்பு கடந்த வாரம் புலிகளிடம் வீழ்ந்தது.

'ஓயாத அலைகள் 3' நடவடிக்கையில், விடுதலைப் புலிகள் சில நாட்களில், சிறிலங்காப் படைகளை வவுனியா பரப்பிற்குள் விரட்டியடித்து, சிறிலங்கா தரைப்படை வசமுள்ள பல முக்கிய நகரங்களைப் பரம்பினர்.

வவுனியாவின் வடக்கே உள்ள பரப்புகளில் இருந்து கடுமையான சேணேவி வேட்டுப் பரிமாற்றங்கள் பதிவாகியுள்ளன.

வவுனியா நகரின் பாதுகாப்பை வலுப்படுத்த சிறிலங்கா தரைப்படை மேலதிக படைகளை அனுப்பி வருகிறது. கிழக்கு மாகாணத்தில் இருந்து படையினர் வெளியேற்றப்பட்டு வருவதாக கிழக்கு துறைமுக நகரமான திருகோணமலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வவுனியாவின் கிழக்கிலும் மேற்கிலும் அமைந்துள்ள மணலாறு (வெலி ஓயா) மற்றும் மன்னார் புலங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகளை புலிகள் இன்று தாக்கி வருவதாக ஐரோப்பாவில் உள்ள புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

வவுனியா வெறிச்சோடியுள்ளது எனப்படுகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4185
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:50 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியா கிட்டத்தட்ட முற்றிலும் வெறிச்சோடி காணப்படுவதாக, வட நகரை விட்டு வெளியேறிய கடைசி சில வணிகர்கள் இன்று தமிழ்நெற்றிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தெரிவித்தனர். விடுதலைப் புலிகளால் குறியிடப்பட்ட ஓம்பலான பரப்புகளுக்கு விரைவில் செல்லவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிறிலங்கா தரைப்படை நகரத்திலுள்ள அவர்களின் தளங்களிலிருந்து சேணேவிகளால் சுட்டதாகவும், சிறிலங்கா வான்படை வானூர்திகள் நோக்கப்பட்டதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுவின் அலுவலர் ஒருவர் தமிழ்நெற்றிடம் "நாங்கள் இன்னும் வவுனியாவில் உள்ளோம், நிலைமையை கண்காணித்து வருகிறோம்." என்று கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து இரு தரப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

இதேபோல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணைய ஊழியர்களும் நகரத்தில் உள்ளனர், மேலும், மேம்பாடுகளை கண்காணித்து வருகின்றனர், என்றனர்.

சிறிலங்கா தரைப்படையின் தானைவைப்பு நகரத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் உள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் குறியிடப்பட்ட ஓம்பலான பரப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியாவை விட்டு வெளியேறினர்.

வவுனியா நகரம், பண்டாரிக்குளம், கற்குளி, தேக்கங்காடு, தோணிக்கல், வைரவபுளியங்குளம், பட்டாணிச்சி, புளியங்குளம், வேப்பங்குளம், நெல்லுக்குளம், தாண்டிக்குளம் ஆகிய பரப்புகளிலுள்ள பொதுமக்களை இராசேந்திரன்குளம் பரப்புக்கும் கோவில்குளம், மூன்றுமுறிப்பு, சாமளக்குளம், மருதங்குளம், ஈரப்பெரியகுளம் மற்றும் சின்னப்புதுக்குளம் ஆகியவற்றின் பொதுமக்களை ஆசிகுளத்திற்கும் செல்லுமாறு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒலிபரப்புகின்ற புலிகளின் குரல் வானொலி தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றது.

இந்த ஊர்களிலுள்ள படைமுகாம்களுக்கு அருகாமையில் வசிப்பதால், அவர்களை ஓம்பிக்காவல் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் அங்கிருந்து புறப்படும் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான வானூர்திகளில் பயணிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அறிக்கையை அடுத்து, யாழ்ப்பாண குடியிருப்பாளர்கள் தங்களது முன்பதிவுகளை நீக்கறல் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

உதவிப் பணியாளர்கள் சிறிலங்கா தரைப்படையின் அழுத்தத்தை எதிர்த்துப் போராட்டம்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4190
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 1:28 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியாவிலுள்ள சிறிலங்கா தரைப்படையானது வடக்கு தானைவைப்பு நகரத்திற்கு திரும்புமாறு பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கொழும்பிலுள்ள உதவிப் பணியாளர்கள் இன்று தெரிவித்தனர். புதிய சிறிலங்கா தரைப்படை நகரக் கட்டளையாளர், சிறிலங்கா தரைப்படையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உதவி நிறுவனங்களுக்கு கடுமையான அழுத்தங்களை ஏவல்செய்து வருவதாக உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியா நகரம் எந்த நேரத்திலும் தாக்குதலுக்குள்ளாகலாம் என்பதால், பொதுமக்கள் குறியிடப்பட்ட ஓம்பலான பரப்புகளுக்கு இடம்பெயருமாறு, விடுதலைப் புலிகளின் வானொலி ஒலிபரப்பியதைத் தொடர்ந்து, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில் வவுனியாவின் முழு மக்களும் வெளியேறினர்.

குடியிருப்பாளர்கள் புதன்கிழமை வெளியேறத் தொடங்கினர், வியாழன் வாக்கில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மற்றும் படையப்பயிற்சி பெற்ற காவல்துறையினரைத் தவிர நகரம் வெறிச்சோடியது.

காலநிலைக்கு புலப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மனிதநேய வழங்கல்கள் மற்றும் உணவை வழங்குவதிலிருந்து சிறிலங்கா தரைப்படை இப்போது தடுக்கிறது என்று உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

அதிக எண்ணிக்கையில் ஓம்பலான பரப்புகளுக்குச் சென்ற பொதுமக்களுக்கு உதவுவதற்கான அவர்களின் முயற்சிகள் சிறிலங்கா தரைப்படை கட்டளையாளர்களால் சாடப்படுவதாகவும் இடருதவிப் பணியாளர்கள் ஏதிலிகளை திரும்பி வர வற்புறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவதாகவும் கூறுகிறார்கள்.

சிறிலங்கா தரைப்படையானது வவுனியா நகருக்கு எதிரான புலிகளின் எதிர்பார்க்கப்படும் வலிதாக்குதலுக்கு முன்னதாக படையினர் மற்றும் ஏந்தனங்களை வவுனியாவில் குவித்து வருகிறது.

கிழக்கு மற்றும் வடக்கு வன்னியில் ஒரு பெரிய வலிதாக்குதலின் மூலம் தொடர்ச்சியான நகரங்களை பரம்பிய சிறிது நேரத்திலேயே வவுனியாவும் "புலப்படுத்தப்பட்டது" என்று புலிகள் ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்தனர்.

எவ்வளவிற்கெவ்வளவு மக்கள் தங்கள் வீடுகளில் மீள்குடியேறுவதை பார்க்க விரும்பப்பமாக உள்ளதோ அவ்வளவிற்கவ்வளவு நகரத்தில் கடுமையான சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அவர்கள் அறிந்திருப்பதாக உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மீதமுள்ள வவுனியா வாசிகள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4195
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:42
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியா பரப்பில் தொடர்ந்தும் தங்கியுள்ள மக்களை உடனடியாக குறியிடப்பட்ட இடங்களுக்குச் செல்லுமாறு புலிகளின் குரல் இன்று காலை மற்றும் நேற்று இரவு தனது செய்தி ஒலிபரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தமது வானொலி ஒலிபரப்பு மூலம் கோரியபோதிலும் சிலர் வவுனியா நகரத்திலும் அதன் புறநகர்ப் பரப்புகளிலும் இன்னும் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் எஞ்சியுள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு புலிகளின் குரல் தனது செய்தி ஒலிபரப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, இன்று மாலை 4.30 மணியளவில் சிறிலங்கா தரைப்படை மீதான கைக்குண்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். வவுனியா வேப்பங்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இளைஞன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும், கைக்குண்டு மற்றும் 9 மிமீ கைச்சுடுகலனுக்கான சன்னங்களையும் மீட்டதாக சிறிலங்கா தரைப்படை கூறியது.

 

 


 

 

இடருதவிக்காக ஆயர் கெஞ்சுகிறார்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4196
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:51
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

மன்னார் ஆயர் வண. ராயப்பு யோசேப்பு, இன்று பிற்பகல் வன்னி சிறிலங்கா படைக் கட்டளையாளர் நீல் டயசைச் சந்தித்து, இடம்பெயர்ந்து வவுனியாவில் தற்போது பாடசாலைகள் மற்றும் ஆசிகுளம், இராசேந்திரகுளம் மற்றும் பிற ஊர்களிலுள்ள கட்டிடங்களில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு இடருதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்க அலுவலர்களை அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாக தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச உதவி வழங்கப்படாவிட்டால், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான இடருதவி மற்றும் உதவிகளை வழங்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுமதிக்குமாறு கட்டளையாளரிடம் ஆயர் கோரிக்கை விடுத்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியாவில் இயல்புநிலை திரும்பியுள்ளதால், இடம்பெயர்ந்த மக்களுக்கு அரச உதவிகளை வழங்க சிறிலங்கா தரைப்படை அனுமதிப்பதில்லை என உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயர் வணபிதா ராயப்பு யோசேப்பு இன்று பிற்பகல் வன்னி புல துணை காவல் மா அதிபர் திரு. வ. ரட்நாயக்கவைச் சந்தித்து இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவையான இடருதவிப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), திருமதி. ராஜமனோஹரி புலேந்திரன் (ஐ.தே.க.) மற்றும் மாவை சேனாதிராஜா (த.ஐ.வி.மு.) ஆகியோர் இன்று ஆசிகுளம், இராசேந்திரகுளம், சூடுவெந்தபுலவு மற்றும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த வவுனியா மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பரப்புகளுக்கு வருகைபுரிந்தனர்.

அவர்களின் இருப்புக்குத் தேவையான அரச உதவிகள் வழங்கப்படாததால் சொல்லொணா இன்னல்களுக்குள்ளாகும் இந்த ஏதிலிகளின் அவலநிலை குறித்த நேரடித் தகவல்களை அவர்களால் சேகரிக்க முடிந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் மன்னார் ஆயர் அருட்தந்தை ராயப்பு யோசேப்பு அவர்களை இரம்பைக்குளம் தேவாலயத்தில் சந்தித்தனர். இடம்பெயர்ந்த வவுனியா மக்களுக்கு அரச உதவிகளை வழங்குவது தொடர்பான கேள்வியை கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுமாறு ஆயர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்போது இந்த விடயம் தொடர்பில் அதிபரிடம் எடுத்துக்கூறப்போவதாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

பதவியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஏதிலிகளுக்கே அரச உதவி வழங்கப்படுவதாகவும் ஆனால் வவுனியாவைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இடம்பெயர்ந்த வவுனியா மக்களுக்கும் அரச உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா படையினர் பொதுமக்களின் உலர் உணவுகளை தடுக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4201
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:54
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 14/05/2022


வவுனியாவிலிருந்து கடந்த வாரம் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வேண்டாம் என சிறிலங்கா தரைப்படை அதிகாரிகள் வவுனியாவிலுள்ள அரசாங்க அலுவலர்களிடம் கூறியுள்ளதாக கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்கள் பாதிக்கப்படாமல் ஊரை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாகவும், எனவே அவர்களுக்கு உலர் உணவுகளை வழங்க அனுமதிக்கமாட்டோம் எனவும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சிறிலங்கா தரைப்படை அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

"உலர் உணவுப் பொருட்களை வழங்குவது அனுமதிக்கப்படாது, ஏனெனில் அது அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை ஊக்கப்படுத்தாது." என்று படையினர் கூறினர். உதவி நிறுவனங்களை மக்களுக்கு உதவுவதிலிருந்து சிறிலங்கா தரைப்படை தடுத்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தற்போது ஆசிக்குளம் மற்றும் இராசேந்திரகுளத்தில் வசிக்கும் வவுனியா பொதுமக்களுக்கு இடருதவி வழங்குவதற்கு அனுமதி கோரி அரசாங்க அதிபர் இன்றியமையா சேவை ஆணையாளரிடம் முறையிட்டிருந்தார்.

மாத வருமானம் 1500 உரூபாயிற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் வீடு திரும்பிய பின்னரே உலர் உணவுகளை வழங்க ஆணையாளர் என்.ஏ.ஒப்டேஜ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நகரம் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால், பொதுமக்கள் ஓம்பலான பரப்புகளுக்கு இடம்பெயருமாறு, விடுதலைப் புலிகள் வானொலியில் ஒலிபரப்பியதைத் தொடர்ந்து, வவுனியாவில் வசிக்கும் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் நகரை விட்டு வெளியேறினர்.

சிறிலங்கா தரைப்படை வவுனியா நகருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முன்னதாக படையினர் மற்றும் ஏந்தனங்களை வவுனியாவில் குவித்து வருவதோடு நகரத்திற்குத் திரும்புமாறு பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியா நகரத்தில் இன்று காலை முதல் வைப்பகங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் இயங்கி வருவதால் அதிகளவான நடவடிக்கைகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குடியிருப்பாளர்கள் திரும்பி வரவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழ்நெட்டை தொடர்பு கொண்ட ஒரு முசிலீம் வணிகர், இன்று வணிகர்களும் அரசாங்க அலுவலர்களும் வந்திருப்பதால் நகரத்தில் அதிக செயல்பாடு உள்ளது என்றார். "ஆனால் நான் ஊரில் தங்க வரவில்லை." என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, வவுனியாவிலுள்ள தமது நிலைகளிலிருந்து இன்று காலையும் நேற்று இரவும் புலிகளின் கட்டுப்பாட்டு பரப்புகளை நோக்கி சிறிலங்கா தரைப்படை எறிகணைகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் எறிகணைவீச்சுக்கு சிறிலங்கா தரைப்படை பழிவாங்கியதாக நம்பப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 


 

 

சிறிலங்கா தரைப்படையின் சேவையில் கோதுமை பாரவூர்திகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4205
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:32
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

நவம்பர் 12இல் இருந்து முன்னறிவிப்பின்றி சிறிலங்கா தரைப்படை தனியாருக்குச் சொந்தமான பாரவூர்திகளை இயக்கியதன் விளைவாக திருகோணமலை சீனன்குடா பிரிமா மில்லிங் வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை மாவை நாட்டின் ஏனைய பரப்புகளுக்கு ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வழங்கல் முற்றாக இடைநிறுத்தமடைந்துள்ளது. 

எதிர்காலத்தில் கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் பாரவூர்திகளுக்கு சிறிலங்கா தரைப்படை கட்டளையிடக் கூடாது என ஐக்கிய போக்குவரத்து ஊழியர் நலன்புரிச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா தரைப்படையால் இதுவரை கட்டளையிடப்பட்ட அனைத்து பாரவூர்திகளையும் உடனடியாக திருப்பி அனுப்புமாறு சங்கம் மேலும் கோரியுள்ளது. எதிர்காலத்தில் சிறிலங்கா தரைப்படை பாரவூர்திகளைப் பயன்படுத்த விரும்பினால், வல்லந்தமாக அல்லாமல் அவை சட்டப்பூர்வமாக கையகப்படுத்தப்பட வேண்டும், என்று சங்கம் மேலும் கூறியது.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், பல பாரவூர்திகள் கடந்த காலங்களில் சிறிலங்கா தரைப்படையால் கட்டளையிடப்பட்டதாக சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

சங்கத்தின் கூற்றுப்படி, சிறிலங்கா தரைப்படையால் கையகப்படுத்தப்பட்ட சில பாரவூர்திகளின் இருப்பிடம் தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில், ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர், வசைபாடப்பட்டனர் மற்றும் மோசமாக நடத்தப்பட்டனர், சங்கம் கூறியது.

வேலை நிறுத்தம் மற்றும் பாரவூர்தி தட்டுப்பாடு காரணமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பரப்புகளில் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உணவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 


 

 

வவுனியாவை விட்டு ஏதிலிகள் வெளியேறுவது தடுக்கப்பட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4206
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:34
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியாவிலுள்ள சிறிலங்கா தரைப்படை படைமுகாம்களுக்கு அருகாமையிலுள்ள ஏதிலி முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்களை வடக்கு நகரைவிட்டு வெளியேறவிடாமல் தடுத்து வருவதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிடம் இன்று சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் அகன்றது தொடக்கம் உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை, அல்லது நவம்பர் 1 ஆம் திகதி முதல் வன்னிக்குள் அனுமதிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள ஏதிலி முகாம்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களின் துன்பங்களைச் சுட்டிக்காட்டும் அறிக்கையானது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் திரு. மாவை சேனாதிராஜா தலைமையிலான அரசியல் நிகராளிகள் குழுவொன்று நேற்று அப்புலத்திற்கு வருகை புரிந்ததைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

படைமுகாம்களுக்கு அருகாமையில் வாழும் ஏதிலிகள் ஓம்பலான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை, கடுமையான சண்டைகள் ஏற்பட்டால், இந்த மக்கள் கடுமையான ஊறில் சிக்கி பலியாகலாம் என்று அறிக்கை கூறுகிறது.

இடம்பெயர்வு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிய போதிலும், இன்றியமையா சேவைகள் ஆணையாளர் நாயகம், இடம்பெயர்ந்த மக்களுக்கு எந்தவிதமான இடருதவிகளையும் வழங்கக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

ஏறக்குறைய வவுனியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் கடந்த வாரம், தானைவைப்பு நகருக்கு எதிரான சாத்தியமான வலிதாக்குதலுக்கு முன்னதாக, விடுதலைப் புலிகளால் குறியிடப்பட்ட ஓம்பலான பரப்புகளுக்குச் சென்றனர்.

இன்றியமையா சேவைகள் ஆணையாளர் நாயகமானவர் அரசாங்க அதிபர் மற்றும் முப்படைகளின் கட்டளை அதிகாரி ஆகிய இருவரையும் கூட்டாக இணைத்து அத்தகைய இடருதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பச் செய்ய சிறிலங்கா பாதுகாப்புத் தாவனம் முயற்சிப்பதால் ஆயுதப்படைகளின் கட்டளை அதிகாரி அத்தகைய கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பில்லையாதலால் தற்போதைய சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அறிக்கை கூறுகிறது.

புலிகளின் குரல் ஒலிபரப்பானது ஓம்பலான இடங்களுக்குச் செல்லாத மக்களை மேலும் தாமதமின்றி அவ்வாறு செய்யுமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்கிறது, இந்தச் சூழ்நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக அல்லது எதிர்காலத்தில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பது மெய்மையானதாக அல்லது நியாயமானதாக இருக்காது என்று அறிக்கை கூறுகிறது.

ஏதிலி முகாம்கள் மற்றும் நலன்புரி நிலையங்களிலுள்ள பொதுமக்கள் ஊறிற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், ஓம்பலான பரப்புகளுக்கு செல்ல விரும்பும் அனைத்து ஆட்களுக்கும் அனுமதி வழங்குவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆயுதப்படைகளை நெறிப்படுத்துமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மேலும் அதிபரிடம் கோரியுள்ளது.

வவுனியாவிலுள்ள அதிகாரநிறைவு பொறிமுறையானது நடைமுறையில் இல்லாத வகையில் சிதைவடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அரசாங்க முகவர் மிகக் குறைந்த பணியாளர்களுடன் செயற்படுவதாகவும், ஏனைய அனைத்து அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன, வைப்பகங்கள் மற்றும் அனைத்து வணிக நிலையங்களும் இயங்கவில்லை எனவும், வவுனியா வைத்தியசாலையில் 30க்கு 6 வைத்தியர்களே கடமையாற்றுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) மட்டுமே சில இடருதவிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், இந்தப் பரப்புகளுக்கான கடைசி உணவுத் தொடரணி நவம்பர் 1ம் தேதி அனுப்பப்பட்டது என்று வன்னிப் புலத்திற்கான உணவு நிலைமையைப் பற்றி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பரப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசிப்பதால், அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போதிய உணவு, மருந்து மற்றும் எரிபொருளை நல்ல அலுவலர்களோடு அங்கு அனுப்ப வேண்டியது கட்டாயத்தேவை என்றும் அறிக்கை கூறுகிறது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் பொதுமக்களை திரும்பி வருமாறு வலியுறுத்துகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4207
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 1:35
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியாவில் வசிப்பவர்களை தமது வீடுகளுக்குத் திரும்புமாறு விடுதலைப் புலிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு நகர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் குரல் வானொலியில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புலிகள் நகரத்தை விட்டு வெளியேறுவதற்கான மூலக் கோரிக்கையை மீளப்பெற்றதாகக் கூறியது.

எவ்வாறாயினும், தானைவைப்பு நகரத்திலுள்ள சிறிலங்கா படைமுகாம்களில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு அவர்கள் எழுதருகை விட்டனர்.

வவுனியா மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை தாங்கள் பாராட்டுவதாக புலிகள் தெரிவித்தனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தாங்க வேண்டிய கடுமையான நிலைமைகள் மற்றும் மனிதநேய அமைப்புகளின் முறையீடுகள் வெளியேற்றத்தை மாற்றியமைக்க தூண்டியது என்று புலிகளின் குரல் கூறியது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

வன்னியில் மீண்டும் தொடங்கப்பட்ட சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4212
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:35
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியா நகருக்கு வடமேற்கே சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இரணையிலுப்பைக்குளத்தில் இன்று காலை விடுதலைப் புலிகள் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை அழித்ததில் குறைந்தது 42 சிறிலங்கா வான்படை வீரர்கள் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

காயமடைந்த வான்படை வீரர்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வவுனியாவிற்கு வடக்கே ஓமந்தை மீது புலிகள் பாரிய சேணேவித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

பாலம்பிட்டியை புலிகள் பிடித்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4213
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:35
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள் ஊரான பாலம்பிட்டியை விடுதலைப் புலிகள் பிடித்துள்ளனர். வவுனியாவின் வடமேற்கு பரப்பில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டதாக இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

பல சிறிலங்கா தரைப்படை வலுவெதிர்ப்புக் கோடுகளை அழித்த பின்னர் புலிகள் பாலம்பிட்டியில் உள்ள சிறிலங்கா படைமுகாமை பரம்பியுள்ளனர்.

ஏ9 மற்றும் மன்னாரிலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் நெடுஞ்சாலையை இணைக்கும் உட்புற வீதியில், இரணையிலுப்பங்குளத்திற்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் பாலம்பிட்டி அமைந்துள்ளது.

 

 


 

 

பெரியமடுவை புலிகள் பிடித்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4214
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:15
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரியமடுவை விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் கடும் வலிதாக்குதலின் மூலம் இன்று பிடித்துள்ளதாக இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘ரணகோச’ நடவடிக்கையின் போது பெரியமடு சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டது.

 

 


 

 

புலிகள் வலிதாக்குதலை மீண்டும் தொடங்குகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4218
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:06
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

மன்னார் மாவட்டத்தில் புலிகள் மீண்டும் வலிதாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், பாலம்பிட்டி மற்றும் பெரியமடுவில் உள்ள சிறிலங்கா படைத்தளத்தை தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று விடுத்துள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கின்றனர்.

புலிகளின் கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"பாலம்பிட்டி மற்றும் பெரியமடுவை புலிகள் பரம்பியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மீண்டும் பாரிய வலிதாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

"இன்று காலை தவிபுவின் சண்டைப் பிரிவுகள் கடும் வலிதாக்குதலின் மூலம் பாலம்பிட்டியிலுள்ள சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தை பரம்பின, பின்னர் மன்னார் மாவட்டத்தின் மேற்கு வட்டக்கூறிலுள்ள பெரியமடுவின் கட்டுப்பாட்டை எடுத்து பகைவருக்கு பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தினர்.

"வன்னிப் பரப்பில் தனது படைத்துறை ஆதாயங்களை திடமாக்குவதற்கான ஒரு சிறிய ஓய்வுக்குப் பின்னர் இன்று அதிகாலையில் புலிகள் 'ஓயாத அலைகள் 3' என குறியீட்டுப் பெயரிடப்பட்ட அதன் வலிதாக்குதல் படையெழுகையை மீண்டும் ஆரம்பித்தனர்.

"சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டாதரவுடன், புலிகளின் சண்டைப் பிரிவுகள் பாலம்பிட்டியில் உள்ள சிறிலங்கா படைத்தளத்தின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளினுள் புயலெனப் புகுந்து, பல மணிநேர கடுமையான சண்டைக்குப் பிறகு முழு கூட்டுப்படைத்தளத்தையும் பரம்பினர். பாலம்பிட்டி - வவுனியா நகருக்கு மேற்கே 30 மைல் தொலைவில் மன்னார் மாவட்டத்தின் நடுவண் புலத்தில் உள்ள ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் - மற்றும் அதைச் சுற்றியுள்ள பரப்புகள் இப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

"பெரியமடுவிலுள்ள தரைப்படையின் வலுவெதிர்ப்புக் கோடுகள் மீதும் தமிழ்ப் புலிகள் மின்னல்வேகத் தாக்குதல் நடத்தி அந்தப் பரப்பிலுள்ள படைத்தளத்தைக் கைப்பற்றினர். கத்தோலிக்க புனித ஆலயம் அமைந்துள்ள பரப்பும் புலிகளால் சூழப்பட்டுள்ளது.

"கூட்டுப்படைத்தளம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, புலிப் போராளிகள் கவச சகடங்கள், கவச ஆளணி காவிகள் உட்பட ஏராளமான படைக்கலன்கள் மற்றும் கணைகளை மீட்டனர்.

"இதற்கிடையில், வவுனியா நகருக்கு மேற்கே 15 மைல் தொலைவிலுள்ள இரணையிலுப்பங்குளத்தில் உள்ள சிறிலங்கா படைத்தளமும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. புலிகளின் அதிரடிப்படை பிரிவுகள் இந்தப் பரப்பிலுள்ள தரைப்படையின் வலுவெதிர்ப்புக் கோடுகளை சேணேவி மற்றும் கணையெக்கி சூடுகளால் குத்துகின்றனர்."

 

 


 

 

மடு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4219
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 7:36
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

இன்று பிற்பகல் மன்னார் மாவட்டத்திலுள்ள மடு நகரை விடுதலைப் புலிகள் பிடித்ததாக வவுனியா நகர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இன்று முன்னதாக வெளியிடப்பட்ட கூற்றுரையில் மடுவின் கட்டுப்பாட்டை தாம் எடுத்ததாக விடுதலைப் புலிகள் கூறவில்லை, ஆனால் கத்தோலிக்க யாத்திரை நகரம் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறினர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முன்னதாக, மடு பரப்பிலிருந்து சிறிலங்கா தரைப்படையின் பிரிவுகள் வெளியேற்றப்பட்டதாக வவுனியா வட்டாரங்கள் தமிழ்நெட்டிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தன.

புலிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

'ஓயாத அலைகள் 3' என குறியீட்டுப் பெயரிடப்பட்ட வலிதாக்குதல் மூலம் கடந்த சில வாரங்களில் வன்னியில் உள்ள பல நகரங்களை புலிகள் சிறிலங்கா தரைப்படையிடமிருந்து பிடித்துள்ளனர். 

சிறிலங்கா தரைப்படை உடன் சென்றாலொழிய ஊடகவியலாளர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லையாதலால் தீவின் போர் வலயங்களில் நிகழ்வுகளை தனிப்பட்ட வகையில் சரிபார்ப்பது சாத்தியமில்லை.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மன்னாரில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4220
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:53
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 04/05/2022

வவுனியா நகருக்கும் விடத்தல்தீவுக்கும் இடையிலான கேந்திர நிலப்பாதையில் உள்ள பல சிறிலங்கா படைமுகாம்களை விடுதலைப் புலிகள் பிடித்ததில் சிறிலங்கா தரைப்படையினருக்கு நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்ட ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் 10 போராளிகளை இழந்துள்ளனர் என்றும் அந்த கூற்றுரையில் கூறப்பட்டுள்ளது.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவுகள் இன்று மன்னார் மாவட்டத்தில் விடியலுக்கு முன்னர் மேற்கொண்ட மின்னல்வேகத் தாக்குதல்களில் பல கேந்திர நகரங்களை பரம்பியதால், சிறிலங்கா ஆயுதப்படைகள் மேலும் மானக்கேடான பின்னடைவுகளைச் சந்தித்தன."

"மிக உன்னிப்பாகத் திட்டமிடப்பட்ட கடும் வலிதாக்குதலில் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி மற்றும் தட்சனா மருதமடு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தி இந்தப் பரப்புகளிலுள்ள படைத்தளங்களைப் பரம்பின."

"மன்னாரின் மேற்குக் கரையோரத்தில் வவுனியா நகருக்கும் விடத்தல்தீவுக்கும் இடையிலான கேந்திர நிலப்பாதையில் அமைந்துள்ள இந்த நகரங்கள் 'ரணகோச' என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட படையெடுப்பு நடவடிக்கையின் போது போது சிறிலங்கா தரைப்படையால் கைப்பற்றப்பட்டன."

"பரவலறியான உரோமன் கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ள மடு நகரமும் எதிர்ப்பின்றி தமிழ்ப் புலிகளிடம் வீழ்ந்தது."

"12 மணி நேரச் சமரின் போது புலிகளின் கணையெக்கி மற்றும் சேணேவித் தாக்குதல்களின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் சிறிலங்கா படையினர் தங்கள் நிலைகளை கைவிட்டுப் புறமாறி தப்பியோடியதால் மன்னாரின் மையப் பரப்பில் உள்ள பரந்த நிலப்பரப்பு புலிகளிடம் வீழ்ந்தது."

"வீழ்ந்த படைத்தளங்கள் மற்றும் படைமுகாம்களில் இருந்து புலிப் போராளிகள் கவச சகடங்கள், கவச ஆளணி காவிகள்  மற்றும் படைய பாரவூர்திகள் உட்பட ஏராளமான படைக்கலங்ன்கள் மற்றும் கணைகளை மீட்டுள்ளனர்."

"சிறிலங்கா ஆயுதப்படைகள் நூற்றுக்கணக்கான உயிர்சேதங்களைச் சந்தித்தன, அதேசமயம் இன்று நடந்த சண்டையில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்."

 

 


 

 

எறிகணை மூவரைக் கொன்றது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4221
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:18
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

வவுனியாவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பூவரசங்குளத்திற்கு வடக்கே 4 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோவில்புளியங்குளத்தில் ஒரு எறிகணை தாக்கியதலில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூவரசங்குளம் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியில் சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

கந்தசாமி வசந்தா வயது 20, அவரது சகோதரி கந்தசாமி பேரானந்தசெல்வி வயது 22 மற்றும் வசந்தராசா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வரதலோஜினி,18, (வசந்தராசாவின் சகோதரி), சின்னத்தம்பி கந்தசாமி, 50, (கொல்லப்பட்ட சகோதரிகளின் தந்தை), அவரது மகன், கந்தசாமி கனகலிங்கம், 30, முருகையா, 55, ஜெயசீலன், 10 ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை வவுனியா நகரின் புறநகர் பரப்பான தோணிக்கல் பரப்பில் எறிகணை தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வட்டாரங்கள் அவர்களை இவ்வாறு பெயரிட்டுள்ளனர்: விஜயராணி (30), அவரது மகள், கஜேந்தினி (1 1/2) மற்றும் கேமலதா.

தோணிக்கல், வைரவப்புளியங்குளம் பரப்புகளில் வசிப்பவர்கள் வவுனியா நகரை அண்டிய சிற்றூர்களான கோமரசங்குளம், இராசேந்திரகுளம், முருகனூர், சாமளன்குளம் மற்றும் இரம்பைக்குளம் ஆகிய பரப்புகளுக்குச் சென்றுள்ளதாக வவுனியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிலர் இரம்பைக்குளத்திலுள்ள அந்தோணி தேவாலயத்திலும் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

சிறிலங்கா தரைப்படை முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை பின்னுக்கு இழுக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4222
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:21
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

மன்னாரின் வடமேற்கு மாவட்டத்தின் பெரும் பரப்புகளின் கட்டுப்பாடுகளை விடுதலைப் புலிகள் நேற்று எடுத்துக்கொண்டதை அடுத்து, வவுனியா மன்னார் வீதியில் மடு வீதிச் சந்தியில் சிறிலங்கா தரைப்படை புதிய முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகளை நிறுவுகிறது.

தொடர்வண்டி நிலையம் மற்றும் அஞ்சலகம் அமைந்துள்ள சந்திப்பில் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகள் போடப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், மடு தேவாலயத்தின் எல்லைக்குள் கிட்டத்தட்ட 3000 பொதுமக்கள் குடிபெயர்ந்துள்ளதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியா நகருக்கும் விடத்தல்தீவுக்கும் இடையிலான கேந்திர நிலப்பாதையில் உள்ள பல படைமுகாம்களை விடுதலைப் புலிகள் பிடித்ததில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்ட ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 போராளிகளை இழந்ததாக புலிகள் தெரிவித்தனர்.

பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி, தட்சனா மருதமடு ஆகிய இடங்களில் புலிகள் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தி, இந்தப் பரப்புகளில் உள்ள படைத்தளங்களை நேற்று பரம்பினர்.

 

 


 

 

நோயாளிகள் முன்னரங்க நிலைகளை கடந்து நகர்த்தப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4223
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:52
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் புலத்திலிருந்து அந்தோணியார்புரம் ஊடாக சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் வரை கடற்றொழில் படகு மூலம் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நான்கு நோயாளிகளை அழைத்துச் சென்றதாக செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

இன்று முற்பரப்பில், செஞ்சிலுவைச் சங்கமானது எதிர்வரும் G.C.A.O/L பரீட்சை தொடர்பில் அனுமதி அட்டைகள் மற்றும் ஏனைய ஆவணங்களை எடுத்துச் சென்ற பரீட்சை திணைக்கள அதிகாரிகளை மன்னாரில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பரப்புகளுக்கு அழைத்துச் சென்றதாக திரு.குணவர்தன கூறினார்.

அவர்கள் திரும்பும் பயணத்தின் போது, நான்கு மோசமான நோயாளர்களை மன்னாருக்கு அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் மேலும் கூறினார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

முன்னகர்வை கவசப் பிரிவுகள் முன்னெடுக்கின்றன - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4226
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 9:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 04/05/2022

மன்னார் மற்றும் வவுனியா நோக்கி விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையினர் தொடர்ந்தும் முன்னகர்ந்துவருவதாக புலிகளின் குரல் இன்று காலை தனது செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சிறப்புப்படையின் கவச மற்றும் சேணேவிப் பிரிவுகள் முன்னகர்வுகளை முன்னெடுத்து வருவதாக வானொலி தெரிவித்துள்ளது.

புலிகள் முப்பத்தைந்து கிலோமீற்றர் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளையும் பத்து கிலோமீற்றர் நீளமான சிறுமுகாம்களையும் பரம்பியதாக புலிகளின் குரல் கூறியது. வானொலியின்படி பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான், முள்ளிக்குளம், காக்கையன்குளம், கீரிசுட்டான் ஆகியவற்றை புலிகள் கைப்பற்றினர்.

வவுனியாவின் வடமேற்கே இரணையிலுப்பைக்குளம் பரப்பில் நேற்றிரவு கடும் சண்டை தொடர்ந்ததாக புலிகளின் குரல் ஏ9 நெடுஞ்சாலைக்கும் மன்னார்-யாழ்ப்பாணம் நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட உள்வீதியில் உள்ள முக்கிய சந்தியாக இரணையிலுப்பைக்குளம் உள்ளது.

நேற்றைய தினம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பரப்புகள் வவுனியாவின் வடமேற்கே பெரும்பாலும் மன்னார் மாவட்டத்தின் கிழக்குப் பரப்பில் அமைந்துள்ளன. ரணகோச 1,2,3 மற்றும் 4 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட நடவடிக்கைகளில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறிலங்கா தரைப்படை வன்னியின் இந்தப் பரப்பிற்குள் எதிர்ப்பின்றி நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

 


 

 

தள்ளாடி சிறிலங்கா தரைப்படை முகாம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4223
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:19
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

1.45 மணி முதல் தள்ளாடி சிறிலங்கா படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் பாரிய சேணேவி மற்றும் கணையெக்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்று இன்று பிற்பகல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சேத விரிப்புகள் உடனடியாக தெரியவில்லை. மன்னார் பரப்பில் புகை மூட்டமாக காணப்படுவதாக மன்னார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தால் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் நிறுவப்பட்ட ஆரம்பகால மற்றும் மிகப்பெரிய படைமுகாம்களில் ஒன்று தள்ளாடி முகாம் ஆகும்.

1990 ஆம் ஆண்டு முதல் இது ஒரு பெரிய கூட்டுப்படைத்தளமாக விரிவடைந்து, கேந்திர வகையாக மன்னார் பெருநிலக் கடற்கரையின் சந்தியில் அமைந்துள்ளது.

மன்னார் தீவை முதன்மை நிலப்பரப்புடன் இணைக்கும் தரைப்பாலம் இந்த சிறிலங்கா தரைப்படை முகாமால் காவல்படுகிறது.

 

 


 

 

மன்னாரில் புலிகள் தெற்கு நோக்கித் தள்ளுகிறார்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4228
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:36
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 01/05/2022

மன்னாருக்கு வடக்கே பாப்பாமோட்டையை பிடித்த விடுதலைப் புலிகள், தெற்கே திருக்கேதீஸ்வரம் நோக்கி முன்னகர்ந்துவருவதாக இன்று பிற்பகல் புலிகளின் குரல் சிறப்பு ஒலிபரப்பு ஒன்று தெரிவித்துள்ளது. வலிதாக்குதலின் போது புலத்திலுள்ள சுமார் நூறு ஊர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன என்று வானொலி தெரிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார் நகருக்கு மேற்கே திருக்கேதீஸ்வரம் மற்றும் மாந்தை ஆகிய பொதுப் பரப்புகளிலிருந்து புலிகளின் கணையெக்கிப் பிரிவினர் தள்ளாடி தளத்தின் மீது எறிகணைவீச்சு நடத்தி வருவதாக மன்னாரில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் கோட்டையில் உள்ள சிறிலங்கா தரைப்படை முகாமில் இருந்தும், தள்ளாடியில் இருந்தும் புலிகளின் கணையெக்கி நிலைகள் என்ற ஐயத்திற்கிடமான இடங்கள் மீதும் படையினர் தாக்குதலை தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் நகரின் உப்புக்குளம் புறநகர்ப் பரப்பில் உள்ள காவல்துறை நிலைகுலைவு எதிர்ப்புப் பிரிவு (Police Counter Subversive Unit) அலுவலகத்திற்கு அருகில் புலிகளின் சில எறிகணைகள் வீழ்ந்தன.

மன்னார் நகருக்கு வடக்கே எருக்கலம்பிட்டியில் உள்ள முந்தலில் இருந்து தள்ளாடி தளத்தை நோக்கி புலிகள் கணையெக்கி எறிகணைகளை வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மடு தேவாலயத்தில் 37 பேர் கொல்லப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4230
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:44
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 05/05/2022

மடு நிலைத்தானத்தின் சுற்றுப்புறங்களில் நிலையெடுத்திருந்த சிறிலங்கா தரைப்படை பிரிவுகளுக்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான சண்டையின் நடுவணில் மடு தேவாலயத்தின் மீது எறிகணைகள் தாக்கியதில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு அறுபத்து நான்கு பேர் காயமடைந்தனர்.

தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த 33 ஏதிலிகள் எறிகணைகளால் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக மடுவிலுள்ள அனைத்துலக உதவி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா-மன்னார் வீதியில் உள்ள தள்ளாடி மற்றும் மடுவிற்கு தெற்கேயுள்ள நிலைகளிலிருந்து நேற்று தீவிர சேணேவி மற்றும் கணையெக்கிகளின் பல்லச் சூட்டாதரவோடு சிறிலங்கா தரைப்படை நேற்று மடுவிற்கு முன்னகர்ந்தது.

மடுவிலிருந்து பாலம்பிட்டி வரையிலான பாதையில் கனவகை சேணேவிகள் மற்றும் கணையெக்கிகளின் சூட்டாதரவோடு மேற்செல்ல முயன்ற சிறிலங்கா தரைப்படை பிரிவுகளை வழிமறித்து புலிகள் மறிப்பு தாக்குதல் நடத்தியபோது கடும் சண்டை மூண்டது. எதிர்த்தாக்குதல் காரணமாக சிறிலங்கா தரைப்படை பின்வாங்கியதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் மடுவிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

தேவாலயமொன்று எறிகணைகளால் தாக்கப்பட்டதில் ஏதிலிகள் கொல்லப்பட்டும் காயமும் அடைந்தனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

புலிகள் தேவாலயத்தின் மீது எறிகணை தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா தரைப்படை கூறியது.

பின்வாங்கிய சிறிலங்கா தரைப்படையினர் தகரியொன்று சுடுகலனை திருப்பி மூன்று எறிகணைகளை தேவாலயத்திற்குள் வீசியதாக ஏதிலிகள் கூறியதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

படைய நிலைமை காரணமாக நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக அந்த இடத்தை அணுக முடியாததால் காயமடைந்தவர்களில் பலர் குருதி வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாக உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மடு தேவாலய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பரப்புகளிலும் சிறிலங்கா தரைப்படை தனது நிலைகளை வலுவெதிர்க்க முயற்சிப்பதாக அப்பரப்பில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா தரைப்படையின் முன்னகர்வு தொடங்கிய போது 3000 க்கும் மேற்பட்ட ஏதிலிகள் மடு நிலைத்தானத்தின் வளாகத்தில் ஓம்பலை நாடியதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

மடுத் தேவாலயம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அனைத்து அடிபாட்டாளர்களும் உடனடியாக வெளியேறுமாறு மன்னார் ஆயர் இராயப்பு இயோசேப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், வவுனியாவில் உள்ள உதவிப் பணியாளர்கள், அங்குள்ள முதன்மை வைத்தியசாலை மிகக்குறைந்த ஊழியர்களுடன் இயங்கி வருவதாகவும், குருதி மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

 


 

 

மன்னார் நகருக்கு அருகில் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4231
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 05/05/2022

மன்னார் நகர கடற்கரையில் இன்று நண்பகல் 12.10 மணியளவில் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. பள்ளிமுனை கடலில் கரும்புகை காணப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரின் கரையோரப் புறநகர்ப் பரப்பான பள்ளிமுனையில் புலிகளின் சண்டைப் பிரிவுகள் தரையிறங்குவதைத் தடுக்க சிறிலங்கா தரைப்படை மற்றும் காவல்துறை சுடுகலச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், மன்னார் நகருக்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள முந்தலிலிருந்து விடுதலைப் புலிகள் தள்ளாடி தளத்தின் மீது கணையெக்கிகளால் சுடத் தொடங்கினர்.

இன்று நண்பகல் தள்ளாடியில் இருந்து முந்தலிலுள்ள புலிகளின் நிலைகள் மீது படையினர் தாக்கதலை தொடங்கியது.

எறிகணைவீச்சுகள் மற்றும் சுடுகலச் சூட்டுக்கு நடுவணில் நகரம் பதற்றமாக உள்ளது என்று அப்பரப்பிலுள்ள கடற்கரை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

சிறிலங்கா தரைப்படை சூடு நடத்தியதாக காயமடைந்த மடு ஏதிலிகள் குற்றம் சாட்டுகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4232
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:14
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 05/05/2022

வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட காயமுற்ற ஏதிலிகள், இன்று காலை, விடுதலைப் புலிகளின் கடுமையான இகல் தாக்குதலிலிருந்து பின்வாங்கிய சிறிலங்கா தரைப்படையின் கவசப் பத்தியொன்று, தாம் ஒன்றிணைந்திருந்த மடு நிலைத்தானத்தின் மீது நேற்றிரவு 10 மணியளவில் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டும் காயமும் அடைந்ததாக பெயரிலி கட்டுவரம்பில் தெரிவித்தனர். 

வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட காயமடைந்த ஏதிலி ஒருவர், சிறிலங்கா தரைப்படையின் கவசப் பத்தியிலிருந்த தகரி ஒன்று திரும்பி தேவாலயத்தின் மீது சுடுகலனால் சுட்டதில் தானும் தனது குடும்பத்தினரும் காயமடைந்ததாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திலெல்லாம் இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் குழந்தைகளும் சிதறிக் கிடப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, மன்னார் ஆயரும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர் செயலாளரும் மடு நிலைத்தானம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் ஆயர் வண. ராயப்பு யோசேப்பு கையொப்பமிட்ட கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"சுமார் 300 சிறிலங்கா தரைபடை படைஞர்கள் நிலைத்தானத்தின் வளாகத்தில் இருந்ததால் மடு மாதாவின் புனித ஆலயம் 20.11.1999 அன்று இரவு சுமார் 10 மணியளவில் சேணேவித் தாக்குதலுக்கு உள்ளானது.

"தஞ்சம் அடைய அங்கு வந்திருந்த 3500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் முதன்மை நிலைத்தானத்திலும் அதை ஒட்டிய புனித இதய தேவாலயத்திலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

புனித இதய தேவாலயத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்களில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அவர்களில் 13 பேர் சிறுவர்கள். 64 பேர் வலுத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

"புனித இதய தேவாலயம் அழிக்கப்பட்டதைத் தவிர, முதன்மை நிலைத்தானத்தின் ஒரு பரப்பும் பாரிய சேதத்தை சந்தித்துள்ளது. கத்தோலிக்கர்களுக்கும் இந்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மிகவும் பிரியமான இந்த புனித இடம் அதன் 450 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பங்கதிற்கு ஆளாகிவிட்டதால் முழு மன்னார் மற்றும் இலங்கை தேவாலயமும் மிகவும் சோகமாக உள்ளது.

“இலங்கையின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலாளர் நாயகம் அதிவணக்கத்திற்குரிய மால்கம் ரஞ்சித்துடன், அரச ஆயுதப்படைகளும் விடுதலைப் புலிகளும் மடுத் தேவாலய இடஒதுக்கீடு என அழைக்கப்படும் நிலைத்தானத்தின் நான்கு பக்கங்களிலும் அடையாள பலகைகளால் வரையறுக்கப்பட்ட மடுப் புனிதப் பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் மடுவை எந்தவொரு கேந்திர அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

"ஆன்மீக நோக்கங்களுக்காக யாத்திரையர்கள் எவ்வித தடையுமின்றி மடுவை தரிசிக்க மடுவை முழுமையாக விடுவிக்குமாறு சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்" என மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு இயோசேப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 


 

 

மடுவில் "மனிதக் கேடயங்கள்"

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4233
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:44
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 05/05/2022

மடுவிலுள்ள கத்தோலிக்க நிலைத்தானத்தின் மீது எறிகணை வீசி தாக்குதல் நடத்தி ஏராளமான தமிழ் பொதுமக்களைக் கொன்றதாக சிறிலங்கா தரைப்படை விடுத்த குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் ஞாயிற்றுக்கிழமை மறுத்துள்ளனர். சிறிலங்கா படையினர் தேவாலயத்தின் மீது எறிகணை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அங்கு தங்கியிருந்த ஏதிலிகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் புலிகள் கூறியுள்ளனர். புலிகள் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை சிறிலங்கா தரைப்படையின் மீது மேலோங்கி இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மடுத் தேவாலயத்தின் சுற்றுப்புறத்தில் தாம் சிறிலங்கா தரைப்படையோடு பொருதவில்லை என்று புலிகள் மறுத்ததோடு, நிலைத்தானத்தையும் அதன் குடியிருப்பாளர்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு புலிகள் நகரத்திலிருந்து பேணிவரும் தொலைவை சிறிலங்கா தரைப்படை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறினர்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த உயிர்பிழைத்தவர்களானோர் ஏதிலிகள் நிரம்பியிருந்த தேவாலயத்திற்குள் சிறிலங்கா தரைப்படை சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

“மடுத் தேவாலயத்தில் தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எமது அமைப்பே காரணம் என சிறிலங்கா தரைப்படை முன்வைத்த குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுக்க விரும்புகின்றனர்.

“மடுத் தேவாலயத்தின் சுற்றுப்புறத்தின் மீது திடீர் சேணேவித் தாக்குதலை நடத்திய சிறிலங்கா தரைப்படையானது அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது.”

"நேற்றிரவு 9.30 மணியளவில் தேவாலய வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஏதிலிகள் நடுவணில் சிறிலங்கா தரைப்படை வீசிய சேணேவி எறிகணைகள் சரமாரியாக வீழ்ந்ததில் 34 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்."

"அதே நேரத்தில் சிறிலங்கா தரைப்படையின் அதிரடிப்படைப் பிரிவு ஒன்று நேற்று இரவு ஆயிரக்கணக்கான ஏதிலிகளை மனிதக் கேடயமாக தாங்கியபடி பாதுகாப்பற்ற தேவாலய வளாகத்திற்குள் புயலெனப் புகுந்தது."

"பொதுமக்களின் உயிர்ச்சேதங்களில் ஏலுமான ஊறுகளைக் கருத்தில் கொண்டு புலிப் போராளிகள் புனித சரணாலயத்தில் படையினருடனான மோதலை தவிர்த்ததோடு தமிழ் குடிமக்களை படையினருக்கு மறைப்பாகவும் கேடயமாகவும் பயன்படுத்த வேண்டாம் என சிங்கள படைத்துறை மீது மேலோங்க வேண்டுமென்று தேவாலய அதிகாரிகளிடமும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் (அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்) வேண்டுகோள் விடுத்துள்ளனர்." 

"இந்த முறையை ஒரு மனிதநேயமற்ற கோழைத்தனமான செயலாக நாங்கள் கண்டிக்க விரும்புகிறோம்."

"வல்வளைப்புப் படையினர் எதிர்ப்பின்றி வெளியேறியதால், மடுத் தேவாலயமும் அதைச் சுற்றியுள்ள பரப்பும் கடந்த வியாழன் அன்று விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்டது."

"தேவாலய அதிகாரிகளுடனான உடன்பாட்டின் பேரில், புலிகள் சரணாலயத்தின் புனிதத்தன்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் அப்பரப்பை படையற்ற நிலையில் வைத்திருந்தனர்."

"புனித யாத்திரை நகரத்தின் வலுவெதிர்ப்பற்ற தன்மையைப் பயன்படுத்தி, சிறிலங்கா தரைப்படை தேவாலய வளாகத்தை வல்வளைத்துள்ளதோடு அப்பரப்பில் கண்மூடித்தனமாக சேணேவிகளால் சுடுகிறது."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மடுவில் பாதிப்படைந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4235
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 5:58
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

சனிக்கிழமை இரவு மடு தேவாலயத்தில் கொல்லப்பட்ட 37 பொதுமக்களின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் நீதவான் இளஞ்செழியன் வைத்தியசாலையில் சடலங்களை பார்வையிட்டார்.

உசாவல்களின் பின்னர் சடலங்கள் திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நீதவான் தெரிவித்தார். மேலும் அவர்களை மடுவிற்கு கொண்டு செல்வதற்கு ஏமம் வழங்குமாறு காவல்துறையினருக்கும் உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நீதவான் மற்றும் அலுவலர் குழு குறித்த இடத்தைப் பார்வையிடச் சென்று கொண்டிருந்தனர், ஆனால் பிரமனாலங்குளத்திலுள்ள சிறிலங்கா தரைப்படைப் பிரிவானது அவர்கள் மடுப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் அலுவலர்கள் விடாப்பிடியாக நின்று நீதவானுடன் சென்ற மன்னார் ஆயர் வண. இராயப்பு இயோசேப்பு மற்றும் மாவட்ட வைத்திய அதிகாரி மரு. கதிர்காமநாதன் ஆகியோர் மடுவுக்குச் சென்று சடலங்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நீதவானுடன் மன்னார் காவல்துறை பொறுப்பதிகாரியும் சென்றார்.

ஆயரின் கூற்றுப்படி, சிறிலங்கா தரைப்படை இப்போது மடுவின் புனித சுற்றாடலில் இல்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மடுவில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தின் மீது எறிகணைகள் வீழ்ந்ததில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிறிலங்கா தரைப்படை விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுகிறது. காயமடைந்த உயிர்பிழைத்தவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் பின்வாங்கிய சிறிலங்கா தரைப்படையின் தகரிகள் மீது குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையில், ஜெனிவாவிலுள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூற்றுரையை வெளியிட்டது, மடுத் தேவாலயத்தில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை விட்டுவைக்குமாறு போராடும் கன்னைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கூற்றுரையின் உரை கூறுகிறது:

"நவம்பர் 20 அன்று சிறிலங்கா தரைப்படையிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 56 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 13 குழந்தைகளும் அடங்குவர்."

"பாதிக்கப்பட்டவர்கள் தீவின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியாவிற்கு இடையில் மடுவிலுள்ள உரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்."

"இந்த நிகழ்வால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்த அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், பொதுமக்களையும் வழிபாட்டுத் தலங்களையும் விட்டுவைக்குமாறு போராடும் கன்னைகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது."

"நவம்பர் மாத தொடக்கத்தில் சண்டையில் பொங்கெழுச்சி ஏற்பட்டதிலிருந்து, அனைத்துலக மனிதநேய சட்டத்திற்கு இணங்க வேண்டிய கடப்பாட்டினை போராடும் கன்னைகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் பலமுறை நினைவூட்டியுள்ளது."

"படை நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் நடுவணில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கன்னைகளுக்கு இது அவசரமான வேண்டுகோள் விடுக்கிறது."

 

 


 

 

மன்னாரில் புலிகள் மேலும் தள்ளுகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4236
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 10:54
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

மன்னார் மாவட்டத்தில் மடுவுக்கு மேற்கே வவுனியா மன்னார் நெடுஞ்சாலைக்கு வடக்கே பாரிய வட்டக்கூறில் விடுதலைப்புலிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் மேலும் பல சிற்றூர்களை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வவுனியா வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. மன்னாரில் அண்மைய தாக்குதலின் போது பிடிபட்ட பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் தள்ளாடி சிறிலங்கா தரைப்படை தளத்திற்கு அருகில் நகர்ந்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளால் மீட்கப்பட்ட சிற்றூர்களில் பரப்புகடந்தான், ஆண்டான்குளம், தேனடையான், அடம்பன் மற்றும் வட்டக்கண்டல் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், இன்று காலை ஒலிபரப்பில், புலிகளின் குரல் வான்கலை, பலகுளி, உயிலங்குளம், முருங்கன் மற்றும் கட்டுக்கரைக்குளம் கரையில் உள்ள குடியேற்றங்களில் உள்ள பொதுமக்களை ஓம்பலுக்காக நானாட்டானுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. நானாட்டான் என்பது மன்னாரின் தென்கிழக்கில் உள்ள ஒரு பெரிய ஊர் ஆகும்.

முருங்கன் மற்றும் உயிலங்குளம் ஆகியவை வவுனியா மன்னார் வீதியில் உள்ள முக்கிய நகரங்களாகும், இவை 1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 'எடிபல' என்ற பெரும் நடவடிக்கையின் மூலம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டன. உயிலங்குளம் சந்தி மன்னார் மாவட்டத்தின் தெற்கு உட்பகுதியை வன்னியின் தென்மேற்கு உட்பகுதியுடன் இணைக்கிறது. அந்த நேரத்தில் கடல் வழியாக மட்டுமே அணுகக்கூடிய மன்னாருக்கு தரைவழி நில வழங்கல் பாதையை பாதுகாப்பதற்காக சிறிலங்கா தரைப்படையானது எடிபல நடவடிக்கையை தொடங்கியது.

விடுதலைப் புலிகளின் முன்னகரும் பிரிவுகள் வவுனியா-மன்னார் வீதியை மன்னார் பெருநிலப்பரப்பில் தெற்கே துண்டித்தால், மன்னார் தீவு மற்றும் தள்ளாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அதன் நிலைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்று சிறிலங்கா தரைப்படை கவலை கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் பறையனாலங்குளத்திற்கும் தள்ளாடிக்கும் இடையிலுள்ள படைநிலைகளை பரம்பினால், மன்னார் தீவு மற்றும் தள்ளாடியிலுள்ள படையினருக்கு புத்தளத்திற்கு வடக்கேயுள்ள கற்பிட்டியில் இருந்து கடல் வழியாகத்தான் வழங்கல்கள் அனுப்பப்பட வேண்டும்.

 

 


 

 

மடு நீதி உசாவல் நடைபெற்றது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4237
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:39
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

நவ.20 சனிக்கிழமை மடு தேவாலயத்தில் 13 குழந்தைகள் உட்பட 37 ஏதிலிகளின் மரணம் தொடர்பான உசாவலில், "எறிகணை வெடித்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தபோது எனது நான்கு குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டேன்" என்று சந்திரமோகன் சுகந்தினி தனது சாட்சியத்தில் கூறினார். மன்னார் மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் அவரது அலுவல்சார் இல்லத்தில் இன்று காலை உசாவல் நடைபெற்றது.

இரவு உணவிற்குப் பிறகு தானும் தன் குழந்தைகளும் இயேசுவின் புனித இதய தேவாலயத்தில் இருந்ததாக சுகந்தினி தனது ஆதாரத்தில் கூறினார்.

"இரவு 8 மணியளவில் தேவாலையத்தைச் சுற்றிலும் வலுத்த சுடுதல் நடந்தது". "சுடுதல் பல மணிநேரம் தொடர்ந்ததோடு தேவாலய வளாகத்தில் உள்ள படையினர் மாலையில் தேவாலயத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறியதால் நான் என் குழந்தைகளுடன் உறங்கச் சென்றேன்."

"அன்று இரவு 10 மணியளவில் தேவாலயத்திற்கு முன்னாலுள்ள ஆலமரத்திற்கு முன்னால் ஒரு எறிகணை வெடிப்பதைக் கண்டோம். இதைப் பார்த்து அனைவரும் எழுந்து, பயந்து அலறினர், தேவாலயத்தின் ஒரு மூலையில் பதுங்கினர். அடுத்த எறிகணை அந்த இடத்திலேயே விழுந்தது. அங்கு அனைவரும் மறைவதற்கு ஓடினர். பின்னர் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் நான் அதிர்ச்சியிலிருந்து மீண்டபோது, கொல்லப்பட்டவர்களின் சடலங்களில் எனது நான்கு குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டேன்." என்று சுகந்தினி இன்று நீதிபதி முன் தனது சாட்சியத்தில் கூறினார்.

மன்னார் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அவரது நான்கு பிள்ளைகளின் சடலங்களும் இன்று மாலை வவுனியா நகரின் புறநகர் பகுதியான கற்குளியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மன்னார் வைத்தியசாலையில் இருபத்தேழு ஏதிலிகளின் சடலங்களும், வவுனியா வைத்தியசாலையில் இருந்த ஆறு பேரின் சடலங்களும் இன்று பிற்பகல் மடுவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

சனிக்கிழமை மடு தேவாலயத்தில் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் பின்வரும் ஆட்கள் இன்று உசாவலில் சாட்சியங்களை வழங்கினர்.

1.சுப்ரமணியம் ஏகாம்பரம்
2.சந்திரசேகரம்
3.நவரத்தினம் ராசரத்தினம்
4.சாந்தலிங்கம் வேலும்மயிலும்
5.இரத்தினசிங்கம் நாகேந்திரன்
6.தம்பிப்பிள்ளை மோகன்ராஜ்
7.கருப்பையா தங்கவேலு
8.சந்திரசேகரம் வைத்தியலிங்கம்
9.மடுக்கான கிராம அலுவலர் (கிராம சேவகர்) அந்தோணி செபமாலை தல்மீரா 
10.பாலம்பிட்டி கிராம அலுவலர் ஏ.எஸ்.இம்மானுவேல்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

தள்ளாடி மீது புலிகளின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4240
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 4:47
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

சிறிலங்கா தரைப்படையின் தள்ளாடியிலுள்ள கேந்திரத் தளமானது மன்னாரிலுள்ள நடவடிக்கை அரங்கிற்கு அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் புதிய சண்டைப் பிரிவுகளின் தீவிர தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக புலிகளின் குரல் தனது இரவு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. 21-2 படைத்தொகுதி தலைமையகம் உட்பட தளத்தின் சில பரப்புகள் எரிந்து கொண்டிருப்பதாக வானொலி கூறியது.

இன்று மாலை, தள்ளாடி தளத்திற்கு மேற்கே நான்கு கிலோமீற்றருக்கும் குறைவான தொலைவிலுள்ள மாந்தையிலும் கடும் சண்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பரப்பிலுள்ள வட்டாரங்களின்படி, புலிகளின் முன்னகரும் சண்டை உருவாக்கங்களுக்கும் தளத்திற்கான அணுகுமுறைகளை வலுவெதிர்க்கும் சிறிலங்கா தரைப்படைப் பிரிவுகளுக்கும் இடையே சண்டை வெடித்தது.

தள்ளாடியானது தீவின் பழமையான படைத்தளங்களில் ஒன்றாகும். இது மன்னார் தீவின் தரைப்பாலத்தின் நுழைவாயிலிற்கு அருகில் மன்னார் பெருநிலப்பரப்பின் கரையோரத்திலுள்ள கேந்திரச் சந்திப்பிலுள்ளது.

மன்னார்-வவுனியா நெடுஞ்சாலையின் மேற்குப் பரப்பை இந்த ஆண்டு தொடக்கம் வரை வைத்திருந்த 21-2 படைத்தொகுதியின் தலைமையகமாக இந்த படைத்தளம் இருந்தது, அதன்பின் பெரும்பாலான பிரிவுகள் சிறிலங்கா தரைப்படையின் ரணகோச நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டன.

 

 


 

 

தமிழ் நாளிதழின் ஆசிரியரிடம் போலீசார் உசாவல்!

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4244
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

கொழும்பில் வெளியாகும் பரவலாக வெளியிடப்படும் தமிழ் நாளிதழின் ஆசிரியர் அ.சிவநேசசெல்வன், பிற்பகல் 2 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் உசாவலுக்காக அழைக்கப்பட்டுள்ளார் என்று இன்று பிற்பகல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சனிக்கிழமையன்று மடு தேவாலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நாளிதழில் வெளியான செய்திகள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உசாவல்கள் தொடர்பில் ஆசிரியர் உசாவலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேவாலயத்தின் மீதான எறிகணைவீச்சில் 37 ஏதிலிகள் கொல்லப்பட்டதோடு குறைந்தது 60 பேர் காயமடைந்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.