Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மன்னார் பொதுமக்கள் ஓம்பலான பரப்புகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4247
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 1:28
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

வான்கலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று முழுவதும் மன்னார் நகரம் மற்றும் பேசாலைக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னாரிலுள்ள சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் 7000 பேர் பெருநிலப்பரப்பில் உள்ள வான்கலையிலிருந்து அங்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் சுமார் 2500 பேர் தீவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வான்கலையில் நிலைகொண்டுள்ள  சிறப்பு பணிக்கடப்படையின் (STF) படையினர் நேற்று வரை குடியிருப்பாளர்களை வெளியேற அனுமதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று காலை மக்கள் வெளியேறுவதற்கு சிறப்பு பணிக்கடப்படை அனுமதி வழங்கியவுடன் வெளியேற்றம் தொடங்கியது.

இதற்கிடையில் உயிலங்குளம், முருங்கன் மற்றும் அண்டைய பரப்புகளில் இருந்து சுமார் பதினைந்தாயிரம் பேர் மன்னார்-மதவாச்சி வீதிக்கு தெற்கே உள்ள புதுக்காமம், வஞ்சிக்குளம் மற்றும் ஏனைய ஊர்களை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளால் 'ஓம்பலற்ற பரப்புகள்' என சுட்டிக்காட்டப்பட்ட பரப்புகளிலிருந்து பொதுமக்கள் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் படைகள், தள்ளாடி பரப்புகளிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் முதன்மை தளத்தை நோக்கி சீராக நகர்ந்து வருவதாகவும், பல புறப்பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாகவும் புலிகள் குரல் வானொலியின் ஒலிபரப்பு தெரிவிக்கிறது.

மன்னார் மாவட்டத்தில் சண்டை ஓசை இன்று தணிந்துள்ளதாக அப்பரப்பு மக்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மன்னார் - வவுனியா வீதியின் அனைத்து போக்குவரத்துகளும் கடந்த 3 நாட்களாக தடைப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 


 

 

மடு தொடர்பில் தமிழ் நாளேடுகளின் ஆசிரியர்கள் மீது உசாவல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4248
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 3:49
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) அதிகாரிகளால் உசாவலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட ‘தினக்குரல்’ தமிழ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் திரு.அ.சிவநேசச்செல்வன் மற்றும் துணை ஆசிரியர் திரு.த.சிவகணேசன் ஆகியோர் கிட்டத்தட்ட 5 மணி நேர உசாவலுக்குப் பிறகு இன்று மாலை 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சனிக்கிழமையன்று மடு தேவாலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது குறைந்தது 37 தமிழ் ஏதிலிகள் கொல்லப்பட்டதோடு 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த செய்தி தொடர்பாகவும் மன்னாரில் நடைபெற்றுவரும் சண்டைகள் பற்றிய செய்திகள் தொடர்பாகவும் நாளேட்டில் வெளிவந்தவை குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தலைமையாசிரியர் அ.சிவநேசச்செல்வன் இன்று மதியம் 2 மணியளவில் அவரது அலுவலகத்தில் இருந்து உசாவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 4 மணியளவில் துணை ஆசிரியர் த.சிவகணேசன் உசாவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தேவாலயத்தின் எறிகணைவீச்சுக்கு சிறிலங்கா தரைப்படையை குற்றஞ்சாட்டும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து காவல்துறையினரின் கூற்றுப்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவர்களிடம் உசாவல் நடத்தியது. அந்த அறிக்கைகள் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக இருப்பதாக காவல்துறையினர் அவர்களிடம் கூறியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களை விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபருக்குக்கு தோட்ட மற்றும் வீடமைப்பு துணையமைச்சர் பி.சந்திரசேகரன் இன்று முற்பகல் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், அடைக்கலநாதன் (செல்வம்), த.சித்தார்த்தன், மற்றும் குமார் பொன்னம்பலம் ஆகியோரும் இவர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினக்குரல் புதனன்று மடுவில் கொல்லப்பட்ட பொதுமக்களின் இறுதிச் சடங்குகள் குறித்து அறிக்கையிட்டதோடு தாக்குதலுக்கு சிறிலங்கா தரைப்படை மீது குற்றஞ்சாட்டி திரு. ஜோசப் பரராஜசிங்கம் கருத்துரைத்திருந்ததையும் வெளியிட்டது. சிறிலங்கா தரைப்படை தேவாலயத்தைத் தாக்கியதாக நேரில் கண்ட சாட்சிகளும் கூறியதாக அந்த நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • நன்னிச் சோழன்

    199

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்     இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தம

நன்னிச் சோழன்

இறுவெட்டுகள்   இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போரிலக்கியப்பாடல் இறுவெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.   ஆனையிறவு: பாட

நன்னிச் சோழன்

காலக்கோடு     01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஏழு போர்க்கைதிகளை புலிகள் விடுதலை செய்யவுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4249
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 11:24
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

வடக்கில் படைய வலிதாக்குதல்களின் போது தம்மிடம் சரணடைந்த ஏழு சிறிலங்கா தரைப்படை வீரர்களை விடுதலை செய்யவுள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று வன்னியில் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கூற்றுப்படி, சிறிலங்கா தரைப்படை போர்க்கைதிகளின் விடுதலை நல்லெண்ணத்தின் சைகையாகும். படையினர் ஓம்பலாக தாயகம் திரும்புவதற்காக மாவீரர் நாளான நாளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என புலிகள் தெரிவித்தனர்.

புலிகளின் குரல் வெளியிட்டுள்ள நாளை விடுதலை செய்யப்படவுள்ள சிறிலங்கா தரைப்படை போர்க்கைதிகளின் பெயர்கள் பின்வருமாறு:

  1. கம்பளையைச் சேர்ந்த எச்.பி.எஸ் திலகரட்ண
  2. பொலன்னறுவையைச் சேர்ந்த வி.எச்.கே.எஸ் தர்ஷன புஷ்பகுமார
  3. அநுராதபுரத்தைச் சேர்ந்த ஏ.என் ஜயரத்ன
  4. தம்பொடுவேகமவையைச் சேர்ந்த பி.வி ஹேமச்சந்திர
  5. தம்பொடுவேகமவையைச் சேர்ந்த டபிள்யு.பி.ற் உபாலி தர்மரத்ன
  6. மகாவெவவையைச் சேர்ந்த டபிள்யு.எச்.பி பந்துல 
  7. பதுளையைச் சேர்ந்த எச்.எவ். ரணசிங்க

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

படைவீரர்கள் இன்று விடுதலை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4254
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:29
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் நிகராளிகள் நேற்று மாலை வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 7 சிறிலங்கா தரைப்படை வீரர்களையும் பார்வையிட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

இம்மாதம் நடந்த ‘ஓயாத அலைகள் – 3’ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த ஏழு படையினரும் விடுதலை செய்யப்பட்டு நாளை காலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மல்லாவி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது இந்தப் படைவீரர்களை சனிக்கிழமையன்று வன்னியிலிருந்து வவுனியாவிற்கு இடமாற்றம் செய்ய சிறிலங்கா தரைப்படை மற்றும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதன் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

இந்த ஏழு படைவீரர்களும் சனிக்கிழமை பிற்பகல் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளால் தரைவழியாக அந்தோனியார்புரத்திற்கும் அங்கிருந்து படகு மூலம் மன்னாருக்கும் மன்னாரிலிருந்து மதவாச்சி வழியாக வவுனியாவிற்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இடமாற்றத்தின் போது ஒரு நேர்மறையான பாதுகாப்புச் சூழல் நிலவும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நம்புகிறது, என்றார்.

 

 


 

 

புலிகள் போர்க் கைதிகளை விடுவிக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4255
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:43
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

இந்த மாத தொடக்கத்தில் வடக்கில் படைய வலிதாக்குதல்களின் போது தம்மிடம் சரணடைந்த ஏழு சிறிலங்கா தரைப்படை வீரர்களை விடுதலைப் புலிகள் இன்று காலை விடுவித்தனர்.

அவர்கள் காலை 11 மணியளவில் புத்தூரில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மடு தாக்குதல் குறித்த உசாவல் நடத்த அழைப்பு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4259
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:14
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

மடு தேவாலயத்தின் மீதான சேணேவித் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற உசாவலுக்கு உத்தரவிடுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்கான மக்கள் பேரவை சிறிலங்கா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 42 அப்பாவி பொதுமக்களைக் கொன்ற தாக்குதல் தொடர்பான உசாவல் குழுவின் கண்டறிதல்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடுமாறு அவர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பேரவையின் இணைச் செயலாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

"மோதல் காலங்களில் சமய வழிபாட்டுத் தலங்களைக் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. கடற்படையின் தாக்குதல்கள், மானிப்பாய், மாவிட்டபுரம்- கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம், குருநகர் புனித ஜேம்ஸ் தேவாலயம் போன்றவற்றில் பாதுகாப்புப்படையினரின் தாக்குதல்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. 

"போக்கூழாக, மடு தேவாலயப் பரப்பை ஆயுதப்படைகளை பயன்படுத்தி கட்டுப்பாடெடுத்து, நலன்புரி முகாம்களை இந்தப் பரப்பிற்கு வெளியே மாற்றும் அரசாங்கத்தின் முடிவு, அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும், நூற்றுக்கணக்கானோர் காயமடைவதற்கும் வழிவகுத்துள்ளது. எனவே அரசாங்கம் கூறும் பல்வேறு சாக்குப்போக்குகள் ஏற்கத்தக்கவை அல்ல, அவை மனித உரிமை மீறல் என்று கண்டிக்கப்பட வேண்டியவை.

"மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் “அமைதி வலயப் பரப்பு” ஒன்றை பறைசாற்றுவதன் மேற்குறிப்பிட்ட இயல்புகள் மீண்டும் நிகழாதிருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்கான மக்கள் பேரவை அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மத சமூகங்களுக்கிடையில் அமைதியையும் நல்லெண்ணத்தையும் நிலைநாட்டுவதற்கு இது ஒரு படியாக இருக்கும்."

 

 


 

 

சிறிலங்கா தரைப்படையின் எறிகணை வீச்சில் இருவர் கொல்லப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4260
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:21
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

நேற்று காலை 6 மணியளவில் உயிலங்குளத்திற்கு வடக்கே உள்ள கருக்காய்க்குளத்தின் மீது தள்ளாடி தளத்தில் இருந்து சிறிலங்கா தரைப்படையினர் வீசிய எறிகணை தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.மகாலிங்கம், 49, மற்றும் என்.நாராயணசாமி, 55, ஆகியோர் ஊரில் உள்ள தங்கள் வீடுகளைப் பார்க்கச் சென்றபோது கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த குடிமக்களில் எஸ்.பாலசாமி மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மடுவில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் துக்கநாள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4264
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:23
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

அண்மையில் இடம்பெற்ற மடு தேவாலயத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 1ஆம் திகதி (புதன்கிழமை) துக்க நாளாக நினைவுகூருமாறு வடக்கு-கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

வருங்காலத்தில் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பரப்புகள் மீது வான்வழி மற்றும் சேணேவித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மாணவர்களை அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஒரு செய்திக்குறிப்பில், அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ரி.மகாசிவம், வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வழக்கம் போல் டிசம்பர் 1 ஆம் தேதி தங்கள் சட்டையில் கறுப்புப் பட்டையுடன் வருமாறு கேட்டுக்கொண்டார்.

மடு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக ஆடைகள் மற்றும் பணத்தை சேகரிப்பதற்காக அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மூன்று நாள் பரப்புரையை தொடங்கும் என்றும் திரு.மகாசிவம் அறிவித்தார்.

மாணவர்கள் அயலவர்களிடம் இருந்து ஆடைகள் மற்றும் பணத்தை சேகரித்து அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் அந்த பொருட்களை மடுவுக்கு எடுத்துச் சென்று ஏதிலிகளுக்கு வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

 

 


 

 

எறிகணை ஒருவரைக் கொன்றது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4265
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:46
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 07/05/2022

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தள்ளாடி சிறிலங்கா படைமுகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று பரப்புக்கடந்தானை தாக்கியதில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று குடியிருப்பாளர்கள் கூறினார்கள்.

மூன்று பிள்ளைகளின் தாயான லோகேஸ்வரி வேல்முருகு (30) என்பவர் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து வன்னியில் உள்ள மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இன்று நண்பகல் 12 மணியளவில் மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது இனந்தெரியாதவர்கள் சுடுகலச் சூடு நடத்தியதில் ஒரு காவலர் மற்றும் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த காவல் அதிகாரி ஜயலத் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த காவலர் மற்ற காவலர்களுடன் விடுமுறை முடிந்து கடமைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாக மன்னாரில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்த தயான அருளப்பு (18), கே.ஏ.சகாயம் (34), எஸ்.அந்தோணிப்பிள்ளை (50) ஆகிய மூவரும் மன்னார் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டினர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை / operation Unceasing Waves - 3 | ஆவணக்கட்டு
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 3 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

விடுதலைப்புலிகள் இரண்டு போர்க் கைதிகளை விடுவிக்கவுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4286
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 10:50
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/05/2022

விடுதலைப் புலிகள், தமது அண்மைய நடவடிக்கையான 'ஓயாத அலைகள் 3' நடவடிக்கையின் போது, தம்மிடம் சரணடைந்த மேலும் இரண்டு சிறீலங்கா தரைப்படை படையினரை, "நல்லெண்ண செய்கையாக" ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில் போர்க் கைதிகள் விடுவிக்கப்படுவதாக இலண்டனிலுள்ள புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

பொலன்னறுவை மெதிரிகிரியவைச் சேர்ந்த வில்லியம் விக்கிரமசிங்க (00806) மற்றும் கிங்குராங்கொட தர்மபால மாவத்தையைச் சேர்ந்த குணரத்ன பண்டார (00305) ஆகிய படையினர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், மாவீரர் நாள் விழாவுடன் ஒத்துப்போகும் வகையில், நவம்பர் 27 அன்று, ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது பிடிபட்ட ஏழு சிறிலங்கா தரைப்படை வீரர்களை புலிகள் விடுவித்தனர்.


 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 6 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

விடுதலைப்புலிகள் இரண்டு போர்க் கைதிகளை விடுவித்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4305
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/05/2022

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இன்று காலை 9 மணியளவில் தமது கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு சிறிலங்கா தரைப்படையினர் விடுவிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தமது அண்மைக்கால நடவடிக்கையான 'ஓயாத அலைகள் 3' நடவடிக்கையின் போது, தம்மிடம் சரணடைந்த இரு படையினர், "நல்லெண்ணத்தின் செய்கையாக" விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினர்.

போர்க் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் அவர்களை வவுனியாவுக்கு அழைத்துச் சென்றனர் என்று புலிகள் தெரிவித்தனர்.

போர்க் கைதிகள் இன்று மாலை. 7 மணியளவில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக கொழும்பில் உள்ள செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் கர்ச குணவர்தன தமிழ்நெட்டிற்கு தெரிவித்தார். 

அவர்கள் நகரத்தில் உள்ள 'இரம்யா கவுஸ்' அலுவலகத்தில் சிறிலங்கா தரைப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 11 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

பரந்தனில் கடும் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4332
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:31
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

இன்று அதிகாலை முதல் பரந்தனில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பரந்தன் சிறிலங்கா தரைப்படை தளத்தின் மீதும் ஆனையிறவு தளத்தின் கிழக்குப் பரப்பிலும் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளத்தின் மீதான முதல் தாக்குதல் அதிகாலை 1 மணியளவில் வந்ததாகவும், புலிகள் அதிகாலை 5 மணியளவில் மற்றொரு தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலைப் புலிகள் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

நள்ளிரவில் இருந்து பாரிய வெடிப்பும் சேணேவிச்சூட்டு ஓசையும் தொடர்ந்து கேட்டதாக வன்னியில் உள்ள உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

 

 


 

 

சிறிலங்கா தரைப்படை ஆனையிறவை வலுவூட்டுகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4334
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:30
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

ஆனையிறவு பரப்பில் இன்றும் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக பிணக்கான அறிக்கைகள் இன்றும் ஊற்றெடுத்துள்ளன. சிறிலங்கா தரைப்படை அங்குள்ள தனது வலுவெதிர்ப்பின் மீதான விடுதலைப் புலிகளின் பெரும் தாக்குதலை முறியடித்ததாகக் கூறியது, ஆனால் யாழ்ப்பாணத்தில் கண்காணிக்கப்பட்ட தமிழீழ வானொலியில் (வானொலி) புலிகளின் படைகள் புலத்தில் முன்னகர்ந்து வருவதாகத் தெரிவிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகள் குறித்து விடுதலைப் புலிகள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

40 ஆம் நாளிற்குள் நுழைந்துள்ள ஓயாத அலைகள் - 3 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக இன்று தமிழீழ வானொலி (புலிகளின் குரல் வானொலியின் வணிகச் சேவை) தெரிவித்ததாக யாழ்ப்பாண குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். 

ஆனையிறவுக்கும் வெற்றிலைக்கேணிக்கும் இடைப்பட்ட சிறிலங்கா தரைப்படை முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை நோக்கி புலிகளின் படைகள் முன்னகர்ந்து வருவதாக வானொலி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று காலை ஆனையிறவில் உள்ள சிறிலங்கா தரைப்படை தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதுடன் 200 க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனையிறவுக்கு மேலதிக படையினரை அனுப்புவதற்காக யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த வடக்கு போக்குவரத்து நிறுவனத்தின் 20 பேருந்துகளை சிறிலங்கா தரைப்படை இன்று கட்டளையிட்டதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

மானிப்பாய், ஊரேழு உள்ளிட்ட பல படைமுகாம்களிலிருந்து படையினர் ஆனையிறவுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் அச்செழுவில் முகாமிட்டுள்ள சிறிலங்கா தரைப்படையின் சேணேவிகள் இன்று அதிகாலை முதல் ஆனையிறவு மற்றும் பரந்தன் பரப்புகளை நோக்கி தீவிர பல்லங்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்திகள் இந்தப் பரப்புகளுக்கு மேல் பறப்பதைக் காண முடிந்தது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

காயமடைந்த பல சிறிலங்கா தரைப்படையினர் கட்டுநாயக்காவிற்கு வான்தூக்கிச் செல்லப்பட்டு நகரின் பல மருத்துவமனைகளுக்கு விரைந்ததாக சிறிலங்கா தலைநகரான கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், குருநகர், நாவற்குளி, தனங்கிளப்பு, பாசையூர், கோகிலாக்கண்டி, தென்மராட்சி மற்றும் வடமராட்சி ஆகிய பரப்புகளில் வசிக்கும் மக்களை, படைமுகாம்களில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும், நோட்டச்சாவடிகளில் இருந்து 500 மீற்றர் தூரத்திலும் தள்ளியிருக்குமாறு விடுதலைப்புலிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண வாசிகள் வானொலி ஒலிபரப்புகளை மேற்கோள் காட்டியுள்ளனர். 

 

 


 

 

ஆனையிறவு "முற்றுகையின் கீழ்"

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4335
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

தமது படைகள் இன்று இரவு ஆனையிறவில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் கூட்டுப்படைத்தளத்தை முற்றுகையிட்டு, புலத்தில் பல்முனை தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் இலண்டன் அலுவலகங்களிலிருந்து வெளியிடப்பட்ட கூற்றுரையில், 200 புலிகள் கொல்லப்பட்டதென்ற சிறிலங்கா தரைப்படையின் கோரலை மறுத்த புலிகள், இதுவரை 15 போராளிகளை இழந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஊடக வெளியீட்டின் உரை பின்வருமாறு:

"ஒரு துணிச்சலான படையெழுகையில், யாழ்ப்பாணக் குடாநாட்டை முதன்மை நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தரைப்பாலத்தில் அமைந்துள்ள சிறிலங்கா தரைப்படையின் ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்தை சுற்றியுள்ள பல வட்டக்கூறுகள் மீது விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் இன்று பல்முனைத் தாக்குதலை நடத்தினர்."

"புலிகளின் சண்டைப் பிரிவுகள் கட்டைக்காடு, புல்லாவெளி, வெற்றிலைக்கேணி மற்றும் கிளாலியில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்பு நிலைகளை ஊடுருவி ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தைச் சுற்றி முற்றுகையிட்டதால் அப்பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது."

"விடுதலைப்புலிகளின் படைகள் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை சேணேவி மற்றும் கணையெக்கி கொண்டு குத்துகின்றனர். இந்த வலுத்த அரணப்படுத்தப்பட்ட கூட்டுப்படைத்தளத்தில் சிறிலங்கா தரைப்படையின் 54 வது படைப்பிரிவின் தலைமையகம் உள்ளது."

"மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் காரணமாக நடந்த சண்டையில் ஒரு தொய்விற்குப் பிறகு, விடுதலைப்புலிகளின் படைய மடுத்தலான 'ஓயாத அலைகள் 3' இன்று அதிகாலையில் தொடங்கி முரட்டாகத் தொடர்கிறது."

"வெற்றிலைக்கேணியில் இருநூறுக்கும் மேற்பட்ட எங்களுடைய போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அரசாங்கத்தின் கூற்றை புலிகள் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறார்கள்."

"இது வீழ்ச்சியடைந்து வரும் சிங்களத் தரைப்படையின் மனவுறுதிக்கு முட்டுக்கொடுப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் தீங்கிழைக்கும் தவறுத்தகவல் பரப்புரையின் ஒரு பகுதியாகும்."

"எங்கள் போராளிகளில் பதினைந்து பேர் இதுவரையிலான சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்."

 

 


 

 

சிறிலங்கா தரைப்படை காயமடைந்தவர்களை கொழும்பிற்கு பறப்பிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4336
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 11:52
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

ஆனையிறவிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் கூட்டுப்படைத்தளத்தைச் சுற்றி நடைபெற்ற விடுதலைப்புலிகளுடனான கடும் சண்டையில் 150க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தமிழ்நெட்டிற்கு இன்று தெரிவித்தன. 60 சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்கள் கொழும்பிற்கு பறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த பல சிறிலங்கா தரைப்படையினர் கட்டுநாயக்கவிற்கு வான்தூக்கிச் செல்லப்பட்டு நகரின் பல மருத்துவமனைகளுக்கு விரைந்ததாக கொழும்பு வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்தன.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு சேத விரிப்புகளை வெளியிடவில்லை ஆனால் தளத்தின் மீதான தாக்குதலை முறியடித்ததில் 200க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.

எவ்வாறாயினும், விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படையின் கூற்றை புறக்கணித்ததுடன் 15 புலிகள் மாத்திரமே உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.

கட்டைக்காடு, புல்லாவெளி, வெற்றிலைகேணி மற்றும் கிளாலி ஆகிய இடங்களில் சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புகளை ஊடறுத்து ஆனையிறவுத் தளத்தை முற்றுகையிடுவதாக விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

கூட்டுப்படைத்தளத்திற்கு அருகாமையிலுள்ள இடைக்காடு பரப்பு விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் ஆனால் ஏனைய பரப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்ப்பாண நகரின் கரையோரப் பரப்புககளில் இன்று மாலை முதல் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் வீடு வீடாக நோட்டங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு சிறிலங்கா தரைப்படை வலுவூட்டல்கள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள அச்செழுவில் உள்ள சிறிலங்கா தரைப்படை சேணேவிகள் ஆனையிறவு மற்றும் பரந்தன் பரப்புகளை நோக்கி இன்று அதிகாலை முதல் தீவிர பல்லத்தை நடத்தி வருகின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 12 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் முக்கிய கடற்படை தளத்தை கைப்பற்றுகின்றனர் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4337
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 12/06/2022

ஆனையிறவிற்குக் கிழக்கே வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காட்டில் உள்ள சிறிலங்கா தரைப்படை முகாம்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக புலிகளின் குரல் வானொலி இன்று தெரிவித்துள்ளது.

நேற்று மாலை ஆனையிறவு தளத்தின் கிழக்குச் சுற்றளவிலுள்ள கட்டைக்காட்டைக் கடந்து வெற்றிலைக்கேணி என்ற பெரிய கரையோர முகாமை புலிகள் கைப்பற்றியதாக வானொலி தெரிவிக்கிறது.

வெற்றிலைக்கேணியிலுள்ள சிறிலங்கா தரைப்படை மற்றும் கடற்படை முகாம், தீவின் வடகிழக்கு கரையோரத்தை கண்காணிப்பதற்காக திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் கேந்திர வகையில் அமைந்துள்ள ஒரு முக்கிய கடற்படைத் தளமாகக் கருதப்படுகிறது என்று சிறிலங்கா பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர். இது ஒரு முக்கியமான வழங்கல் தளமாகவும் இருந்தது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கட்டைக்காடு மற்றும் வெற்றிலைக்கேணியின் வீழ்ச்சியுடன் வடமராட்சி கிழக்கிற்கான நுழைவாயில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அலுவல்சாராக எதனையும் வெளியிடவில்லை.

ஆனையிறவுத் தளத்தை முற்றுகையிடுவதாக விடுதலைப் புலிகள் நேற்றைய நாள் விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சண்டையில் 200க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா தரைப்படை நேற்று தெரிவித்தது. எவ்வாறாயினும், "சிங்களப் படையினரின் வீழ்ச்சியடைந்து வரும் மனவுறுதிக்கு முட்டுக்கொடுப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கும்" சிறிலங்கா அரசாங்கத்தின் தீங்கிழைக்கும் தவறுத்தகவல் பரப்புரையின் ஒரு பகுதியாக இந்த கூற்று இருப்பதாக புலிகள் கூறியுள்ளனர். இதுவரை 15 போராளிகளை இழந்துள்ளதாக புலிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, 150 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் 60 பேரின் சடலங்கள் கொழும்புக்கு பறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை விடுதலைப்புலிகள் சுமார் 36 நாட்கள் முற்றுகையிட்ட போது வெற்றிலைக்கேணி கரையோரப் பகுதியை சிறிலங்கா தரைப்படை கைப்பற்றி, சிக்கியிருந்த தானைவைப்பை மீட்க வலுவூட்டல்களை தரையிறக்கியது என்று சிறிலங்கா பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

"பலவேகய" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட படை நடவடிக்கையில் வெற்றிலைக்கேணியிலிருந்து ஊரியான், மண்டலாய் மற்றும் புல்லாவெளி வழியாக கூடுதல் படையினர் அனுப்பப்பட்டபோது தான் முற்றுகையை முறியடிக்க முடிந்தது," என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர். "எனவே விடுதலைப் புலிகள் இந்தப் பகுதியை முதலில் பாதுகாத்துள்ளனர்".

1991 ஆம் ஆண்டு வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு ஆகிய பகுதிகளை சிறிலங்க தரைப்படை மற்றும் சிறிலங்கா கடற்படை கைப்பற்றியதன் விளைவாக, ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன் மற்றும் மருதங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக ஏனைய பரப்புகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

 

 


 

 

புலிகள் புல்லாவெளி முகாமைப் பரம்பினர் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4339
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:25
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

வெற்றிலைக்கேணிக்கு மேற்கேயுள்ள புல்லாவெளி சிறிலங்கா தரைப்படை முகாமை புலிகள் கைப்பற்றியுள்ளதாக புலிகளின் குரல் வானொலி இன்று மாலை தெரிவித்துள்ளது.

ஆனையிறவுக்கு கிழக்கே கட்டைக்காடு மற்றும் வெற்றிலைக்கேணி முகாம்களை கைப்பற்றிய பின்னர், இந்த கேந்திர வகையாக அமைந்துள்ள சிறிலங்கா தரைப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக வானொலி தெரிவித்துள்ளது.

இந்தத் தரைப்படை முகாம்களில் இருந்து பெருமளவிலான படைக்கலன்கள் மற்றும் கணைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக வானொலி தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் 38 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக வானொலி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை குடாநாட்டின் தென்மராட்சி புலத்தில், கிளாலிக்கு வடக்கேயுள்ள கரையோர ஊரான தனங்கிளப்பில் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாகநாதன் செல்வரத்தினம், 48, செல்வரட்ணம் தயானந்தன், 20, மகாலிங்கம் சுகிர்தன், 14, மற்றும் காசிப்பிள்ளை ராணி, 57 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வட்டாரங்கள், அச்செழுவில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா தரைப்படையினர் நேற்று இரவு முழுவதும் தனங்கிளப்புவை நோக்கி பல எறிகணைகளை வீசினர். அத்தோடு பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 13 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

தென்மராட்சியில் புலிகள் தாக்குதல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4340
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:36
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26/06/2022

யாழ். மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பரப்புகளில் உள்ள சிறிலங்கா படைமுகாம்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது விடுதலைப் புலிகள் சேணேவி மற்றும் கணையெக்கி தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரியிலுள்ள 52-3 படைத்தொகுதி முகாம் மீது குறைந்தது ஆறு சேணேவி எறிகணைகள் வீழ்ந்தன, மேலும் ஒரு எறிகணை சாவகச்சேரி காவல் நிலையத்தின் மீது விழுந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா தரைப்படையின் 52-1 படைத்தொகுதி முகாம் மீதும் எறிகணை வீச்சு நடத்தப்பட்டது.

சாவகச்சேரி நகரிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) அலுவலகத்திற்குப் பின்னால் மற்றொரு எறிகணை வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரப்புகளிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், சந்தைகளும் மூடப்பட்டுள்ளன என்று கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தென்மராட்சிக் கோட்டத்தில் யாழ்ப்பாணம் கண்டி வீதிக்கு தெற்கே வசிக்கும் பொதுமக்கள் ஓம்பலான பரப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், சிறிலங்கா தரைப்படையினர், நோட்டச்சாவடிகளை போட்டு, அவர்கள் ஓம்பலான பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்து வருகின்றனர்.

அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

யாழ்ப்பாண பொதுமக்கள் பாதுகாப்பான பரப்புகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4341
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான சண்டைகள் இடம்பெற்று வருவதால், யாழ்ப்பாணத்தின் கரையோரப் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் ஓம்பலான இடங்களுக்குச் சென்றுள்ளதாக வடக்கு நகர வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

பாசையூர், குருநகர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 90 சதவீத மக்கள் சுண்டிக்குளி, நல்லூர், கல்வியங்காடு, அச்சுவேலி மற்றும் நகரின் உள்பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.

விடுதலைப்புலிகள் புலிகளின் குரல் வானொலியில் பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் குறியிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை, சிறிலங்கா தரைப்படையின் முதன்மை முகாம்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், சிறிலங்கா தரைப்படை நோட்டச்சாவடிகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும் வெளியேறியிருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 


 

 

வடமராட்சி கிழக்கு ஊர்களை புலிகள் கைப்பற்றினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4343
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:54
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பகுதியிலுள்ள ஆழியவளை மற்றும் கொடுக்கிளாய் ஆகிய ஊர்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றி, அங்குள்ள சிறிலங்கா தரைப்படையின் நிலைகளை பரம்பி வடமராட்சியை நோக்கி மேலும் முன்னகர்ந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடுத்துறையில் உள்ள சிறிலங்கா தரைப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரிப்புகள் கிடைக்கவில்லை.

வடமராட்சி கிழக்கு வட்டக்கூறானது குடாநாட்டை முதன்மை நிலப்பகுதியுடன் இணைக்கும் ஒரு குறுகிய நிலப்பரப்பாகும்.

சனிக்கிழமையன்று புலிகள் தங்கள் அண்மைய தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையின் சுமார் 25 கிலோமீட்டர் பகுதியைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடுத்துறை மற்றும் மருதங்கேணி பகுதியில் வசிக்கும் மக்கள் தாழையடி புனித பீட்டர் தேவாலயத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கின் வடக்குப் பகுதியிலுள்ள செம்பியன்பற்று, நாகர்கோவில், மாமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஓம்பலான இடங்களுக்குச் செல்ல தயாராகி வருவதாக உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதை சிறிலங்கா தரைப்படையினர் தடுத்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதற்கிடையில், வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் சனிக்கிழமை நகருக்கு கொண்டுவரப்பட்டதாக பளையில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் ஏற்றிச் செல்வதற்காக ஊர் மக்களுக்குச் சொந்தமான ஊர்திகளை வீரர்கள் கட்டளையிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் புலிகளின் தாக்குதல் விரிவடைகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4345
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் புலத்திலும் விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டதுடன், சிறிலங்கா தரைப்படையின் முக்கிய ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"தற்போதைய விடுதலைப் புலிகளின் வலிதாக்குதல் படையெழுகையானது யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சியின் பல வட்டக்கூறுகளுக்கும் பரவி தீவிரமடைந்ததால் நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டும் காயமுமடைந்துள்ளனர்."

"யாழ். நெடுஞ்சாலையிலுள்ள நாவற்குளி, சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் இயக்கச்சி ஆகிய இடங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் அதிசிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் துணிச்சலான மற்றும் மின்னல்வேகத் தாக்குதல்களை நடத்தி அரசாங்கப் படையினரிடையே பேரழிவை ஏற்படுத்தியது."

"நேற்றிரவு சாவகச்சேரி படைமுகாமுடன் இணைக்கப்பட்டிருந்த சேணேவித் தளமானது விடுதலைப் புலிகளின் கணையெக்கி எறிகணைகள் ஆய்தக்களஞ்சியத்தில் வீழ்ந்து பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தியதில் அழிக்கப்பட்டது."

"குறிப்பிட்ட சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் காயமுமடைந்தனர்."

"புலிகளின் தாக்குதலின் சீற்றம் தென்மராட்சிப் புலத்திலுள்ள பல கேந்திர நகரங்கள் மற்றும் ஊர்களுக்குப் பரவியதால், சிறிலங்காப் படையினர் பல பரப்புகளில் தங்கள் நிலைகளை விட்டு ஓடி புறமாறுகின்றனர்."

"ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளம் ஆனையிறவு நுழைவாயிலைக் காக்கும் முதன்மை வலுவெதிர்ப்புக் கட்டமைப்பான இயக்கச்சி படைத்தளத்தின் மீது தமிழ்ப் புலிகளின் சண்டை பிரிவுகள் ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடுத்துள்ளதால், ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது."

"ஆனையிறவு கூட்டுப்படைத்தின் கிழக்கு வலுவெதிர்ப்புச் சுற்றளவைக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு ஆகிய இடங்களிலுள்ள கேந்திர கடற்படைத் தளத்தையும், புல்லாவெளியில் உள்ள படைத்தளத்தையும் பரம்பிய புலிப் போராளிகள் இப்போது இயக்கச்சி படைமுகாமை சேணேவி மற்றும் கணையெக்கி மூலம் குத்துகின்றனர்."

"கடந்த 24 மணித்தியாலங்களாக இயக்கச்சியில் கடுமையான சண்டை தொடர்கிறது. சிறிலங்காப் படையினர் வலுத்த உயிர்ச்சேதங்களைச் சந்தித்துள்ளனர். ஆனையிறவு நடுவண் தளமானது நிலம் மற்றும் கடல் வழங்கல்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும் வலிமைமிக்க புலிகளின் சண்டை உருவாக்கங்களால் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாலும் இயக்கச்சி படைமுகாம் வீழ்ச்சியால் கடுமையான அச்சுறுத்தலுக்குப் புலப்படும்."

"இதற்கிடையில், கள மெய்மையின் புறநிலை உண்மையானது அதிபர் தேர்தலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நெருக்கடியான தென்மராட்சிப் புலத்தில் புலிகளின் வலிதாக்குதலின் அளவையும் பருமானத்தையும் குறைத்து மதிப்பிடுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. "

 

 


 

 

மருதங்கேணி முகாம் கைப்பற்றப்பட்டது - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4347
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:32
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பிரிவிலுள்ள மருதங்கேணி சிறிலங்கா தரைப்படை முகாமை பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று மாலை தெரிவித்தனர்.

புலிகளின் குரல் வானொலி தனது இரவு செய்தி ஒலிபரப்பில், இந்த முகாமிலிருந்து பெருந்தொகையிலான படைக்கலன்கள், கணைகள் மற்றும் படைய ஏந்தனங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறியது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 14 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

துணைப்படைப் பிரிவுகள் படைக்கலன்களை அகற்றுகின்றனர் - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4355
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 8:57
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னகர்ந்து வருவதாக புலிகளின் குரல் இன்று நண்பகல் தனது சிறப்பு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் "துணைப்படைப் பிரிவுகள்" அண்மையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து படைக்கலன்கள், கணைகள் மற்றும் ஏனைய படையத் தளவாடங்களை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளதாக வானொலி கூறியது.

குடாநாட்டின் தெற்கு முனையில் இன்று சனிக்கிழமை முதல் விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று சண்டை தணிந்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனையிறவிலுள்ள முதன்மை சிறிலங்கா தரைப்படை கூட்டுப்படைத்தளத்திற்கு கிழக்கேயுள்ள தளங்களிலிருந்து சிறிலங்கா தரைப்படையினர் தந்திரவழிவகையாக பின்வாங்கியுள்ளதாக வட்டாரங்கள் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் வடக்கில் இன்று சிறிலங்கா தரைப்படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுப் பரப்பிலுள்ள நிலைகள் சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றதாக சிறிலங்கா தரைப்படை வார இறுதியில் கூறியிருந்தது, ஆனால் விடுதலைப் புலிகள் தாம் 38 போராளிகளை மட்டுமே இழந்ததாகக் கூறியது.

ஆனையிறவு முகாமுக்கு அருகிலுள்ள மூன்று முக்கிய கரையோரத் தளங்களை கடந்த சில நாட்களில் பரம்பிய போது நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினரைக் கொன்றதாக அல்லது காயப்படுத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சோ சிறிலங்கா தரைப்படை இழப்புகளை 8 பேர் கொல்லப்பட்டனர் என்றது.

இதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சேணேவி மற்றும் கணையெக்கி வேட்டுப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தென்மராட்சி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அரச அதிகாரிகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் சாவகச்சேரி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்றும், கடைகள் திறக்கப்பட்டாலும், சிலர் இன்று தெருக்களில் பொருட்களை வாங்குவதைக் காணமுடிந்தது என்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது, என்றனர்.

தனங்கிளப்பு பகுதியில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்திகள் உந்துகணைகளை வீசி எறிவதையும் சுடுவதையும் கண்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் விரிப்புகள் தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கோட்டத்தில் தாளையடி, மருதங்கேணி பரப்புகளிலுள்ள வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் தாளையடியில் உள்ள தேவாலயத்தில் தங்கியுள்ளனர்.

செம்பியன்பற்று நோக்கி மேலும் வடக்கே செல்ல விரும்புவதாக அப்பகுதி உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சிறிலங்கா தரைப்படையினர் அவர்களை தற்போது இருக்கும் இடத்திலிருந்து நகர்த்த அனுமதிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இச்சிக்கலை பரப்பின் பிரதேச செயலாளர் திரு.எஸ்.வேலாயுதப்பிள்ளை யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாளையடியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் தங்கியிருப்பதாக தேவாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிங்கள வைத்தியர்களை ஏற்றிச் செல்லுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மறுமொழியளித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடாநாட்டில் சண்டை அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பது பாதுகாப்பற்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தெரிவித்தது.

சிறிலங்காவினால் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என கூறப்படும் 11 இளைஞர்களின் சடலங்கள் இன்று பிற்பகல் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் கர்ச குணவர்தன பின்னர் தெரிவித்தார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கள வைத்தியர்கள் இடமாற்றம்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4359
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:25
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய சிங்கள வைத்தியர்கள் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுக்களின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் அவர்கள் வானூர்தி மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.

போர் வலயத்தில் உள்ள வைத்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். "நாங்கள் மருத்துவர்களை திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் போர் வலயத்தில் கடமையாற்றும் 40 வைத்தியர்களை மீண்டும் அழைக்க சங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருமாறு பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய யாழ் வைத்தியர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்றமைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், தீவிர நோயாளர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தமது கப்பலில் ஏற்றிச் செல்வதில் மாத்திரமே அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அனைத்துலக செஞ்சிலுவை சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் எறிகணை வீச்சுகள் அதிகரிக்கின்றன

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4360
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:24
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

யாழ்ப்பாண நகரின் கரையோரப் பகுதிகளில் நேற்று மாலை 7.30 மணி முதல் விடுதலைப் புலிகள் சேணேவி மற்றும் கணையெக்கி தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக வடக்கு நகர வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. சிறிலங்கா படையினரும் திருப்பி சுடுகலச் சூடு நடத்தியதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 

இரவு முழுவதிலிருந்து இன்று காலை 6 மணி வரை வெடியோசை கேட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

குடாநாட்டின் வடமராட்சி கிழக்குக் கோட்டத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகளும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மருதங்கேணி மற்றும் வத்திராயன் பரப்புகளிலிருந்து இடம்பெயர்ந்த 1302 பொதுமக்கள் தாளையடி புனித பேதுரு தேவாலயத்தில் தங்கியுள்ளதாக உள்ளுராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வடக்கே மாமுனை மற்றும் செம்பியன்பற்று பகுதிகளுக்கு செல்ல ஊர்மக்கள் அனுமதி கேட்டுள்ளனர். எவ்வாறாயினும், அவர்களை அப்பகுதியை விட்டு வெளியேற சிறிலங்கா தரைப்படை அனுமதிக்கவில்லை என்று தேவாலய ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மருதங்கேணியைச் சேர்ந்த 229 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும், வத்திராயனைச் சேர்ந்த 229 குடும்பங்களைச் சேர்ந்த 476 பேரும் தேவாலயத்தில் தங்கியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கவசவூர்திகள் மற்றும் கனவகை சுடுகலன்கள் மூலம் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி சிறிலங்கா தரைப்படை சுடுகலச் சூடு நடத்தி வருவதால் ஊர்மக்கள் நடுவணில் பதற்றம் நிலவுவதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரி வைத்தியசாலையின் மீது இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் எறிகணை மோதியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நகரின் மற்ற இடங்களில் சிறிலங்கா தரைப்படை வீதி நோட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய குழுக்களாக மிதிவண்டிகளில் இயங்கும் சிறிலங்கா தரைப்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாண செயலகம் (கச்சேரி), முதன்மை அஞ்சல் நிலையம் மற்றும் ஏனைய அலுவலகங்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 


 

 

யாழ்ப்பாணத் தளங்கள் இழந்ததை சிறிலங்கா தரைப்படை மறுக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4362
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:40
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படை தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பேசிய சிறிலங்கா தரைப்படை தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு மற்றும் புல்லாவெளியில் உள்ள சிறிலங்கா தரைப்படை முகாம்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதாக வெளிவந்த தமிழ்நெற் செய்தியை மறுத்தார்.

கேள்விக்குரிய தமிழ்நெற் செய்தியானது விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் அலுவல்சார் வலைத்தளத்திலும் அந்த ஊடக வெளியீடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகவியலாளர்கள் அவரை குறுக்கிட்டனர்.

மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல அவர்களுடன் உடன்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் வெளியீட்டில் உள்ள மெய்யுண்மைகள் சரியானவை அல்ல என்றார்.

balagalle-thennekoon_151299.jpg

மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல (இடதுபுறம்) மற்றும் சிறிலங்கா தரைப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன், கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படைத் தலைமையகத்தில் டிசம்பர் 15 அன்று சிறப்பு செய்தியாளர் மாநாட்டின் போது செவ்வியளிக்கிறார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு மறுமொழிதந்த மேஜர் ஜெனரல் பலகல்ல, ஆனையிறவுத் தளத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை கூட்டுப்படைத்தளம் அப்படியே உள்ளதாகவும், தளத்தின் புறநகர்ப் பகுதியில் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல இடங்களில் புலிகள் தாக்குதல்களை நடத்திய போதிலும், சிறிலங்கா படையினர் அவற்றை முறியடித்துள்ளதாக அவர் கூறினார். இயக்கச்சி சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தலைமை அதிகாரி தெரிவித்தார்.

வெற்றிலைக்கேணியில் சிறிலங்கா கடற்படைக்கு தளம் இல்லை என்றும், ஆனால் அப்பகுதியில் வலுவெதிர்ப்பு நிலை மட்டுமே இருந்ததாகவும் மேஜர் ஜெனரல் பலகல்ல மேலும் தெரிவித்தார்.

குடாநாட்டில் அதிபர் தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும், குடாநாட்டில் 600,00க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும், 400,000க்கும் குறைவானவர்களே இப்போது வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல, முன்னர் படையப் புலனாய்வுப் பணிப்பாளராகவும், யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்கா பாதுகாப்புப்படை கட்டளையாளராகவும், பணியாளர்களுக்கான தரைப்படை தலைமையாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வன்னியின் பாதுகாப்புப்படை கட்டளையாளராகவும் பணியாற்றினார்.

சிறிலங்கா தரைப்படை பேச்சாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன், வடக்கு போர்முனையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, டிசம்பர் 11 மற்றும் 14 க்கு இடையில் வடக்கில் நடந்த சமர்களில் 28 சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதோடு 340 பேர் காயமடைந்தனர். தரைப்படையினரின் கூற்றுப்படி, அந்தக் காலப்பகுதியில் நடந்த சமர்களில் 480 புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா தரைப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

சண்டையில் கொல்லப்பட்ட 112 புலிகளின் பெயர்களை புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பியதாக அவர் கூறினார்.

டிசம்பர் 11 அன்று, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு மற்றும் புல்லாவெளி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் ஏழு மோதல்களும் ஆனையிறவுத் தளத்தின் மேற்குக் கையில்(flank) இரண்டு மோதல்களும் இடம்பெற்றதாக அவர் கூறினார். தரைப்படையினருக்கு சிறிலங்கா வான்படை மற்றும் கடற்படையினர் ஆதரவளித்ததாக பிரிகேடியர் தென்னகோன் தெரிவித்தார்.

ஏழு படையினர் கொல்லப்பட்டதாகவும், 142 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 65 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார்.

சிறிலங்கா தரைப்படை செய்தித் தொடர்பாளரின் நிலைமை அறிக்கையின்படி, டிசம்பர் 12 அன்று கிளாலி வட்டக்கூறின் தன்னங்கிளப்பில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையிற்கும் இடையில் 12 மோதல்கள் இடம்பெற்றன, இதில் 4 படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர்.

அதே நாளில் சாவகச்சேரியில் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகளுக்கு புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த எறிகணை தாக்குதலில் 9 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

டிசம்பர் 13 அன்று, வெற்றிலைகேணி மற்றும் கட்டைக்காடு ஆகிய இடங்களில் ஏழு மோதல்களும், சாவகச்சேரிக்கு தெற்கே உள்ள கேரதீவில் ஒன்றும் இடம்பெற்றது, இதில் எட்டு படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 104 பேர் காயமடைந்தனர்.

ஆனையிறவுத் தளத்தின் மேற்கில் 2 மற்றும் கிழக்குப் பகுதியில் நேற்று நான்கு மோதல்கள் இடம்பெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டதாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது அப்பகுதியில் ஆங்காங்கே சண்டை நடைபெற்று வருவதாக சிறிலங்கா தரைப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

 

 


 

 

யாழ்ப்பாண வலிதாக்குதல் தொடர்கிறது - விடுதலைப் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4363
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:42
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

ஆனையிறவில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் கூட்டுப்படைத்தளத்தை சுற்றி புலிகளின் அதிரடிப்படைப் பிரிவுகள் தமது பிடியை இறுக்கியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டில் இன்று தமது தாக்குதல் தொடர்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். 500 புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா தரைப்படை கூறுவது ஆதாரமற்றது என்று புலிகள் கூறியுள்ளனர். ஐந்து நாட்கள் நடந்த சண்டையில் இதுவரை 60 புலிகள் உயிரிழந்துள்ளதாக இலண்டனில் இன்று இரவு விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக வெளியீட்டின் உரை வருமாறு:

"யாழ் குடாநாட்டை விடுவிப்பதற்கான தமிழ்ப் புலிகளின் வலிதாக்குதல் படையெழுகையானது இன்று ஐந்தாவது நாளாகவும் தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண நகரின் கரையோரப் பகுதிகளில் உள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது தீவிர சேணேவித் தாக்குதல்களுடன் தொடர்ந்தது."

"ஆனையிறவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெற்றிலைகேணி, கட்டைக்காடு, புல்லாவெளி மற்றும் மருதங்கேணியில் உள்ள கேந்திர படைத்தளங்களை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள், வடமராட்சியின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குள் தங்கள் நிலைகளை உறுதிப்படுத்திக் கொண்டு மேலும் முன்னகர்ந்து வருகின்றன."

"ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தைச் சுற்றி புலிகளின் அதிரடிப்படைப் பிரிவுகள் மெள்ளமாகவும் முறைமையாகவும் தங்கள் பிடியை இறுக்கியதால், அப்பகுதியில் கடுமையான சேணேவி மற்றும் கணையெக்கி வேட்டுப் பரிமாற்றம் தொடர்ந்தது."

"ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தைச் சுற்றிவளைப்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, சிறிலங்கா கடற்படை மற்றும் வான்படையினர் தமிழ்புலிகளின் வசம் விழுந்த கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து குத்தி வருகின்றனர்."

"இதற்கிடையில், புலிகள் மீதான மிகைப்படுத்தப்பட்ட உயிரிழப்பு புள்ளிவிரிப்புகளைக் கூறி புலிகளின் வலிதாக்குதல் படையெழுகைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் ஒரு குறும்பு பரப்புரைப் போரை கட்டவிழ்த்து விட்டது."

"500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல் ஆதாரமற்றதோடு கற்பனையானது. கடுமையான தணிக்கை என்ற போர்வையின் கீழ் இயங்கும் அரசாங்கம், தனது சொந்த மக்களையும் உலகையும் ஏமாற்றுவதற்காக கள மெய்மையின் உண்மை நிலையைத் திரித்து வருகிறது."

"கடந்த ஐந்து நாட்களில் இதுவரை எங்களின் அறுபது போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மேலும் 2 போர்க்கைதிகளை விடுதலைப் புலிகள் விடுவிக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4367
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:12
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

வெற்றிலைக்கேணிப் பரப்பில் இடம்பெற்ற 'ஓயாத அலைகள் 3' நடவடிக்கையின் போது சரணடைந்த இரண்டு சிறிலங்கா தரைப்படை வீரர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக புலிகளின் குரல் வானொலி இன்று காலை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் அறிவுறுத்தலின் பேரில் போர்க் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக வானொலி தெரிவித்துள்ளது.

2வது கெமுனு காவற்படையின் 54-வது படைப்பிரிவின் கம்பளையைச் சேர்ந்த அதபத்து பிங்கிரிய ஆராச்சிலாகே சந்தனகுமார மற்றும் கெப்பிட்டிகொலாவையைச் சேர்ந்த ஏ.திசநாயக்க ஆகிய படையினரே செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

போர்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வானொலி தெரிவித்துள்ளது.

ஓயாத அலைகள் - 3இன் போது சரணடைந்த 9 போர்க் கைதிகளை விடுதலைப் புலிகள் இதுவரை விடுதலை செய்துள்ளனர்.

 

 


 

 

மேலும் நான்கு ஊர்கள் கைப்பற்றப்பட்டன - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4368
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:24
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்குக் கோட்டத்தில் மேலும் 4 ஊர்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக புலிகளின் குரல் வானொலி இன்று காலை தெரிவித்துள்ளது.

உடுத்துறை, கொடுக்கிளாய், வேம்படி, மண்டலாய் ஆகியவ்ற்றை புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வானொலி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தரைப்படையுடனான மோதலில் மேலும் ஐந்து விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக வானொலி மேலும் கூறியது.

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் சண்டை தொடர்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4370
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:09
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

நேற்றிரவு இயக்கச்சியை நோக்கி மேலும் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் வடமராட்சி கிழக்கிலுள்ள மண்டலாய் மற்றும் திரியாய் ஆகியவற்றை இன்று கைப்பற்றியுள்ளனர் என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. திரியாய் அம்மன் கோவிலைச் சுற்றிலும் சிறிலங்கா தரைப்படை நிறுத்தப்பட்டிருந்தது. புலிகளின் பிரிவுகள் புல்லாவெளியில் இருந்து முன்னகர்ந்ததாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இயக்கச்சிக்குக் கிழக்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் மண்டலாய் - திரியாய் அம்மன் கோவில் பரப்புள்ளது.

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கடற்கரையில் மருதங்கேணி ஊரின் வடக்கு எல்லையிலுள்ள விருமார் கோயிலடி பரப்பையும் புலிகள் நேற்று இரவு கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் தற்போது அங்கு தமது நிலைகளை வலுப்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பரப்பு தாளையடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, அங்கு புலிகளின் எதிர்நோக்கப்பட்ட மடுத்தலுக்கு எதிராக சிறிலங்கா தரைப்படையானது தற்போது தனது நிலைகளை வலுவெதிர்த்து வருகிறது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

நுழைவாயில் தானைவைப்பில் புலிகளின் தடூகத்தால் சிக்கல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4374
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:23
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

விடுதலைப்புலிகள் முன்னிகழ்ந்திராத வலிதாக்குதலுக்காக ஒரு பெரிய மரபுவழிப்படையை வன்னியிலிருந்து திரட்டி வருவதாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்ததிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கான முதன்மை நுழைவாயில் மீது நேருக்கு நேரான தாக்குதலை சிறிலங்கா தரைப்படை எதிர்நோக்கியது. எனவே ஆனையிறவு-பரந்தன் கூட்டுப்படைத்தளம் வலுவாக அரணப்படுத்தப்பட்டதுடன், எதிர்பார்க்கப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் நன்கு பயிற்சிபெற்ற காலாட்படைப் பிரிவுகள் அங்கு நிறுத்தப்பட்டன. ஆனால், புலிகள், அவர்களது ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் தடூக போர்முறை உத்திகளுக்கு ஏற்ப ஒரு கேந்திர பக்கவாயில் வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்துள்ளனர்.

ஆனையிறவு பாரம்பரியமாக குடாநாட்டின் முக்கிய அனைத்துக்கால நுழைவாயிலாக இருந்தது.

எவ்வாறாயினும், வன்னியின் அடவிகளூடாக கல்வீதிப்பாவு நெடுஞ்சாலை (பழைய கண்டி வீதி) திறக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடையேயான பயணமானது முக்கியமாக கடற்கரை வீதி வழியாகவே இருந்தது, கிழக்குக் கடற்கரையை ஒட்டிய ஏராளமான களப்புகளின் முகத்துவாரங்களில் ஓடும் வலசைகள் மூலம் அடிக்கடி புடைக்காலங்களில் தொடுக்கப்பட்டுள்ளன.

ஏ9 - புதிய கண்டி வீதி திறக்கப்பட்ட பல ஆண்டுகளின் பின்னர் எழுபதுகளின் இறுதிவரை இந்தக் கரையோர வீதி, குறிப்பாக முல்லைத்தீவின் கிழக்கு வட்டக்கூறிற்கான குறுக்குவழியாக அதிகம் பயன்பாட்டிலிருந்தது. (பழைய கண்டி வீதி அடிக்கடி வெள்ளப்பெருக்குக் காரணமாக கைவிடப்பட்டது. சிறிலங்கா தரைப்படையின் ஜெயசிக்குறு படை நடவடிக்கையானது அதன் இரண்டாம் கட்டத்தில் கரப்புக்குத்தி மற்றும் கரிப்பட்டமுறிப்பு ஆகியவற்றை எடுத்து இந்தப் பாதையில் நகர்ந்தது).

கடற்கரையோர வீதியானது இயக்கச்சி சந்தியில் ஏ9 லிருந்து தென்கிழக்கே கடற்கரையில் கட்டைக்காடு நோக்கிக் கிளைக்கிறது. இங்கே அது ஆனையிறவுக் களப்பின் முகத்துவாரத்திற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையில் ஒரு குறுகிய, ஒடுங்கிய நிலப்பரப்பில் தெற்கே திரும்புகிறது, இது குடாநாட்டை முதன்மை பெருநிலப்பரப்புடன் இணைக்கிறது. இதுவே சுண்டிக்குளம் ஆகும்.

வெற்றிலைகேணி, ஆழியவளை, கொடுக்கிளாய், உடுத்துறை, வேம்படி, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, குடாரப்பு, நாகர்கோவில், அம்பன், குடத்தணி, மணற்காடு, வள்ளிபுரம் ஆகிய கரையோர ஊர்கள் பருத்தித்துறைக்கும் கட்டைக்காடு-சுண்டிக்குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளன (ஊர்ப்பெயர்கள் தெற்கிலிருந்து வடக்கு வரிசையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது).

சுண்டிக்குளத்திற்கும் மருதங்கேணிக்கும் இடைப்பட்ட கரையோரப் பகுதியைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திற்குள் உள்நுழைந்துள்ளனர்.

கேந்திரப் பக்கவாயில் இப்போது அவர்களின் கைகளில் உள்ளது. (சிறிலங்கா தரைப்படை பொதுவாகக் கட்டைக்காடு மற்றும் வெற்றிலைகேணியிலிருந்து ஒரு உத்திசார் பின்வாங்கலைச் செய்ததாகக் கூறுவதன் மூலம் இதை ஒப்புக்கொள்கிறது.) இது விடுதலைப்புலிகள் தங்களுடைய மரபுவழிப் போர்முறை வளங்களை நேரடியாக யாழ்ப்பாணத்தில் கொட்ட அனுமதிக்கும் ஒரு இசைவான திறப்பு ஆகும்.

1998 செப்டம்பரில் கிளிநொச்சியை பரம்பியபோது செய்தது போல் ஆனையிறவுக்கு முன்னால் பாரிய படைகளை ஒருமுகப்படுத்தி குவிக்க முயற்சிப்பதை விட புலிகள் இந்த உத்திசார் நன்மையை கண்கூடாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அப்பகுதியில் வசிப்பவர்களின் கருத்துப்படி, புலிகளின் சண்டைப் பிரிவுகள் மருதங்கேணியிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் முக்கிய முகாமைத் தாக்கியதன் மூலம் கட்டைக்காட்டில் அவர்களின் நிலைகளிலிருந்து கரையோரத்தில் மேலும் வடக்கு நோக்கி முன்னகர்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்குக் கரையோரத்தில் புலிகள் தங்கள் ஆட்புல ஆதாயங்களை வலுவெதிர்த்து வைத்திருக்க முடிந்தால், அது ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் தடூகப் போர்முறை உத்திகளில் அவர்களுக்குத் தெளிவான நன்மையைளிக்கும்.

அவர்கள் கரையோரத்தில் மேலும் வடக்கே பருத்தித்துறை நோக்கி முன்னகரலாம் அல்லது பளை மற்றும் ஆனையிறவுக்கு இடையில் கண்டி வீதியை துண்டிக்க தற்போதைய நிலையிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பலாம்.

இது குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டம் மீதான சிறிலங்கா தரைப்படையின் பிடியை கடுமையாக அச்சுறுத்துவதோடு பரந்தன்-ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தனிமைப்படுத்தலாம்.

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் அனைத்துப் பகுதிகளும் இப்போது புலிகளின் சேணேவிப் பிரிவுகளின் வீச்செல்லைக்குள், எங்கும் பயன்படுத்தப்படும் 81மிமீ நடுத்தர கணையெக்கிக்குக் கூட, வந்துவிட்டன என்ற மெய்யுண்மையால் சிறிலங்கா தரைப்படையின் பேரிடர்கள் மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரத்திலுள்ள உவர்க்கத்தலையையும் தாளையடி மற்றும் மருதங்கேணிச் சந்தி போன்ற முக்கியமான சிறிலங்கா தரைப்படை நிலைகளையும் ஊடறுத்துச் செல்ல முயற்சிக்கும் புலிகளின் சண்டை உருவாக்கங்களை எதிர்த்தாக்குவதற்கு சிறிலங்கா தரைப்படையானது தனது யாழ்ப்பாணப் படைகளை ஒருமுகப்படுத்த மிகவும் இக்கட்டாக இருப்பதைக் காண்கிறது.

யாழ்ப்பாண நகரத்திலிருந்து தென்கிழக்கே எட்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலுள்ள களப்பிலுள்ள தனங்கிளப்புப் பரப்புக்குள் புலிகள் ஊடுருவியுள்ளதாகத் தெரிகிறது.

இங்கு நடந்த மோதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதோடு எழுபது பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா தரைப்படை செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பது நிலைமையை உறுதிப்படுத்துகிறது. நேற்றிரவும் அப்பகுதியில் கடும் எறிகணை மற்றும் சூட்டோசை கேட்டது.

தனங்கிளப்பு என்பது யாழ்ப்பாண நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு நடவடிக்கைக்கான மற்றொரு உவர்க்கத்தலையாக இருக்கப்போகிறதா? குடாநாட்டின் இந்தப் பகுதியிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் தளவாடங்களை முடக்கும் நோக்குடன், சாவகச்சேரி முதன்மை வீதியில் அழுத்தத்தைக் கட்டியெழுப்பப் புலிகள் அதிக படைகளை வரவழைப்பார்களா?

சிறிலங்கா தரைப்படை ஒரே குழப்பத்தில் உள்ளது.

ஒரே நேரத்தில் பல முனைகளில் விடுதலைப் புலிகளின் வழக்கமான வலுவை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இயக்கச்சி சந்தியும் அதன் சுற்றாடலும் இப்போது புலிகளின் ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு நேரடியாக புலப்படுத்தப்பட்டிருப்பதைக் குறித்து சிறிலங்கா தரைப்படையின் உயரதிகாரிகள் வெளிப்படையாகக் கவலைகொண்டுள்ளனர்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரச படையினர் தங்கியிருக்கும் ஆனையிறவில் நன்னீர் வழங்கலிற்கான முதன்மை மூலங்கள் இங்கும் பரந்தனிலும் அமைந்துள்ளன. தளத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள நீராதாரங்கள் உப்புத்தன்மை கொண்டவையாகும்.

சிறிலங்கா தரைப்படையின் மிகப் பெரிய படைத்தளங்களில் ஒன்றான ஆனையிறவு - பரந்தன் தானைவைப்பை முற்றுகையிடும் புலிகளின் முயற்சி இயக்கச்சியையும் பரம்பினால் முழுமையடைந்ததாகக் கூறலாம்.

இயக்கச்சிக்கு வெகுதொலைவிலுள்ள உட்பகுதியிலுள்ள புல்லாவெளி படைமுகாமை அழித்துவிட்டு மேலும் மேற்கே அந்தச் சந்தியை நோக்கி முன்னகர்ந்து வருவதாக புலிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா தரைப்படை இதனை மறுத்துள்ள போதிலும், ஆனையிறவின் வடகிழக்கிலுள்ள பொதுப்பகுதியில் பாரிய அளவிலான மிண்டுதல்கள் இடம்பெற்று வருவதாக நேற்று (டிசம்.15) சிறிலங்கா தரைப்படை பேச்சாளரால் முன்வைக்கப்பட்ட நிலைமை அறிக்கையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு மற்றும் புல்லாவெளி ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன் 142 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 77 பேர் வலுத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவை நிச்சயமாக பகைப் படையினரின் சிறிய குழுக்களுடனான தவிர்க்கத்தக்க கைகலப்புகளின் மேல்விளைவு அன்று.

சிறிலங்கா தரைப்படை செய்தித் தொடர்பாளரின் புள்ளிவிரிப்புகள் கூட, ஆனையிறவு தளத்திற்கு அருகாமையில் கரையோரத்திலும் உட்பகுதியிலும், பின்னிருந்து பாய்வும் படையேற்பாடுகளுடன் விடுதலைப் புலிகளின் பாரிய சண்டை உருவாக்கங்கள் வலிதாக்குதல் நடவடிக்கைகளில் மிண்டியுள்ளன என்பதை ஐயத்திற்கு இடமின்றி சுட்டிக்காட்டுகின்றன.

எனவே புலிகளின் தடூக உத்திகளின் நோக்கம் அடைந்தாயிற்று. வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு ஆகியவற்றைக் கைப்பற்றி வலிதாக்குதலின் முதல் கட்டத்தில் தளத்திற்கான ஈற்று உயிர்நாடியைத் துண்டித்தனர்.

யாழ்ப்பாணத்திற்கான நெடுஞ்சாலை மற்றும் கிளாலி கடற்கரை புலிகளால் திறம்பட துண்டிக்கப்பட்டால், நுழைவாயிலிலுள்ள தானைவைப்பிற்கு படையேற்பாடு வழங்குவதற்கான ஒரே சாத்தியமான வழியை கிழக்கு கடற்கரையோரம் வழங்குவதால் இது கூட்டுப்படைத்தளத்தின் ஈற்று உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.

சிறிலங்கா வான்படையின் மட்டுப்படுத்தப்பட்ட வான்தூக்கும் திறமையைக் கொண்டு தளத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாது.

விடுதலைப்புலிகளை குறைத்து மதிப்பிடத் தயாராக இல்லையென்றாலும், சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளர்கள், இயக்கம் பாரிய இழப்புகளைச் சந்தித்திருக்கலாம் என்றும், இந்தப் பெரிய தளத்தை நேரடியாகப் பெறுவதற்குத் தம்மை பெரிதாக்கிக்கொள்ளும் நிலையிலில்லை என்றும் கருதுகின்றனர்.

புலிகள் ஆனையிறவு முகாமை 1991 இல் முற்றுகையிட்டனர். அப்போது அதுவொரு சமரணியாலும் சேணேவி மற்றும் கவசங்களின் துணைக்கூறுகளாலும் வைத்திருக்கப்பட்டது. புலிகள் 500க்கும் மேற்பட்ட போராளிகளை தானைவைப்பை பரம்ப முயன்றதில் இழந்தனர்.

'பலவேகய' எனப்படும் நடவடிக்கையில், கட்டைக்காடு-வெற்றிலைக்கேணியில் உவர்க்கத்தலையைப் பாதுகாத்து, ஆனையிறவு வரை சென்று சண்டையிட்டதன் மூலம் சிறிலங்கா தரைப்படையானது முகாமைக் ஓம்பியது.

இன்று தளம் ஒரு முழுப் படைப்பிரிவாலும் துணை அலகுகளாலும் வைத்திருக்கப்பட்டுள்ளது. ஆனையிறவுத் தளத்தை தனிமைப்படுத்துவதற்கும் அதைவிட முக்கியமாக யாழ்ப்பாணத்துக்குள் ஒரு கேந்திரக் காலடியைப் பெறுவதற்கும் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு புலிகள் அதே உவர்க்கத்தலையைப் பாதுகாப்பதில் ஆச்சரியமில்லை.

1996 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் குடாநாட்டை விட்டு வெளியேறிய போது, அது அவர்களின் முடிவின் ஆரம்பம் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்தது.

இன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் திரும்பி வந்துள்ளனர், அவர்களின் படைத்துறைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கவியலா வகையில் அவர்களின் ஆயுதசாலை அளப்பருவாக மிகுதியாகியுள்ளது.

 

 


 

 

புலிகள் பரந்தன் மீது தாக்குதல், உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4375
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 11:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

பரந்தனில் நேற்று இரவு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றது என்று வடக்கிலுள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலில் ஏராளமான படைவீரர்கள் காயமடைந்தும் இறந்தும் இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

பரந்தன் தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்புகள் புலிகளால் பரம்பப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரம் தெரிவித்தது. எவ்வாறாயினும், கொழும்பில் உள்ள படைத்துறை தலைமையகப் பேச்சாளர், பரந்தன் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதை முற்றாக மறுத்துள்ளார்.

பரந்தனிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் தளத்தின் மீது புலிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இன்று பிற்பகல் புலிகளின் குரல் சிறப்பு ஒலிபரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா தரைப்படை களமுனைக்கு படையினரை விரைந்தனுப்புவதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், ஆனையிறவு சிறிலங்கா தரைப்படைத்தளத்திற்கு அருகிலுள்ள களப்பில்(கடனீரேரி) இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா வான்படையின் எம்.ஐ. 24 உலங்குவானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

உலங்குவானூர்தியிலிருந்த இரண்டு வானோடிகளும் இரண்டு சூட்டாளர்களும் கொல்லப்பட்டதாக கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படைத் தலைமையக வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

 


 

 

பரந்தன் சிறிலங்கா தரைப்படை முகாம் கைப்பற்றப்பட்டது - விடுதலைப் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4376
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:24
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

பரந்தன் சிறிலங்கா படைமுகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று இலண்டன் அலுவலகங்களிலிருந்து கூற்றுரையொன்றில் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் உள்ள கேரதீவு மற்றும் சங்குப்பிட்டி ஆகிய இடங்களில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து 78 விடுதலைப் புலிகள் சண்டையில் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்குப் பகுதியில் கேந்திர வகையாக அமைந்துள்ள பரந்தன் படைமுகாம், 24 மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்த உக்கிரமான சண்டையின் பின்னர் இன்று புலிப் போராளிகளிடம் வீழ்ந்துள்ளது."

"பரந்தன் சந்தியும் அதைச் சுற்றியுள்ள பரப்புகளும் இப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன."

"நேற்று அதிகாலையில் தமிழ்ப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் தானைவைப்பு நகரத்தின் மீது சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலைத் தொடங்கியபோது பரந்தனுக்கான சமர் தொடங்கியது. "

"முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளை விரைவாகப் பரம்பிய விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள், பல மணிநேரம் நீடித்த கடுமையான சண்டையில் சிறிலங்காப் படையினருடன் மிண்டின."

"புலிகளின் பாரிய கடுந்தாக்குதலின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் சிறிலங்காப் படையினர் முற்றிலும் சீர்குலைந்து நகரை விட்டுப் பின்வாங்கினர். பகைப் படையினருக்குப் வலுத்த சேதங்களை ஏற்படுத்திய பின்னர், புலிப் போராளிகள் பெருமளவிலான படைக்கலன்கள், கணைகள் மற்றும் படைய ஊர்திகளை மீட்டனர்."

"ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு சுற்றளவைக் காக்கும் நன்கு அரணப்படுத்தப்பட்ட படைநிலையான பரந்தனின் வீழ்ச்சி, முதன்மைத் தளத்தை ஒரு தீவிர அச்சுறுத்தலுக்குப் புலப்படுத்தியுள்ளது"

"இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகள் சாவகச்சேரி வட்டக்கூறில் கேரதீவு மற்றும் சங்குப்பிட்டி கடற்படைத் தளங்களைப் பரம்பியதோடு அதிநவீன கதுவீ ஏந்தனங்கள் உட்பட ஏராளமான படைக்கலன்களையும் மீட்டுள்ளன."

"சண்டையில், வான்படையின் ஒரு எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்தி தமிழ் கரந்தடிப்படைகளால் கிளாலி களப்பின் மீது வீழ்த்தப்பட்டது."

"யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சி வட்டக்கூறிலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மற்றும் சேணேவி தளங்கள் மீது புலிகளின் சண்டைப் பிரிவுகள் சேணேவி மற்றும் கணையெக்கி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன."

"யாழ் குடாநாட்டை விடுவிப்பதற்கான தற்போதைய படையெழுகையில் 31 பெண் போராளிகள் உட்பட 78 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்."

 

 


 

 

எம்.ஐ.-24 வான்குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4378
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 10:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022

விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்ஐ- 24 உலங்குவானூர்தியிலிருந்து உயிரிழந்த நான்கு சிறிலங்கா வான்படை ஆளணியினரின் பெயர்கள் இன்று சிறிலங்கா படைத்துறையால் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவர்கள் சதளத் (Squadron) தலைவர் டைரோன் சில்வெஸ்டர்பிள்ளை, பறனை லெப். (Flight Lt.) எச்.எஸ்.டி சில்வா, முதல் அலுவலர் சி.சி.அனுர மற்றும் கோப்ரல் அதுகோரள ஆகியோர் ஆவர்.

அவர்களின் சடலங்கள் சிறிலங்கா தரைப்படையினரால் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாக படைத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு எதிராக தமது நிலைகளை வலுவெதிர்த்துக்கொள்ளும் சிறிலங்கா தரைப்படையினருக்கு இந்தத் தாக்குதல் உலங்குவானூர்தியானது நெருக்கமான வான் ஆதரவை வழங்கியதாக படைத்துறை தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 18 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் கூட்டுப்படைத்தளத்தினுள் முன்னகர்கின்றனர் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4384
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:15
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/06/2022

ஆனையிறவில் சிறிலங்கா தரைப்படையின் தளத்தை நோக்கி முன்னகரும் விடுதலைப் புலிகள் கூட்டுப்படைத்தளத்தின் மையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளனர் என்று இன்று புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது. பரந்தனில் இரண்டு தளங்கள் பரம்பப்பட்டதால் நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையின் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வானொலி தெரிவித்துள்ளது.

நடுவண் தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்பு நிலைகளை புலிகள் தாக்கி வருகின்றனர் என வானொலி மேலும் தெரிவித்துள்ளது.

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் படைத்தொகுதி தலைமையகமும் அதற்கு அப்பால் உள்ள மற்றுமொரு முகாமும் நேற்று கைப்பற்றப்பட்டதாக வானொலி தெரிவித்துள்ளது.

ஆனையிறவு தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்பு நிலையில் விடுதலைப் புலிகள் முன்னகர்ந்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட பரப்புகளில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினரின் சடலங்கள் கிடப்பதாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.

 

 


 

 

புலிகள் மேலும் இரண்டு போர்க் கைதிகளை விடுவிக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4386
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:34
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்கு வட்டக்கூறில் படை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா தரைப்படை வீரர்களை விடுவித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கூற்றுப்படி, கெப்பிட்டிக்கொலாவ பரப்பைச் சேர்ந்த ஏ.திஸாநாயக்க (22) மற்றும் கம்பளையைச் சேர்ந்த ஆர்.சந்தனபண்டார (23) ஆகிய படையினர் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

போர்க் கைதிகள் அதிகாரநிறைவாக இன்று காலை 11 மணியளவில் செஞ்சிலுவைச் சங்க நிகராளி திரு.டேனியலிடம் ஒப்படைக்கப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.

செஞ்சிலுவைச் சங்கத்தினர் படைவீரர்களை வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக புலிகள் தெரிவித்தனர்.

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் போது சரணடைந்த 9 போர்க் கைதிகளை முன்னர் விடுதலைப் புலிகள் விடுதலை செய்திருந்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 20 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

பின்வாங்கியதை சிறிலங்கா தரைப்படை மறுக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4399
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:12
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/06/2022

சிறிலங்கா படைத்துறையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா தரைப்படை வெற்றிலைக்கேணியில் மட்டும் தனது வலுவெதிர்ப்பை "மறுசீரமைத்துள்ளது" என்று தெரிவித்தார். மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆகிய இரண்டு பேரணிகள் மீதான தாக்குதல்களும் தற்கொலை குண்டுதாரிகளாலேயே நடந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனையிறவு பரப்பிலுள்ள வெற்றிலைக்கேணியைத் தவிர, வலுவெதிர்ப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளதைத் தவிர, அங்குள்ள எந்த நிலையிலிருந்தும் சிறிலங்கா தரைப்படையானது பின்வாங்கவில்லை என்று படைத்துறைப் பேச்சாளர் மறுத்தார்.

எவ்வாறாயினும், கடந்த வாரத்தின் முற்பகுதியில் வெற்றிலைகேணி, கட்டைக்காடு மற்றும் புல்லாவெளி தளங்களிலிருந்தும், வெள்ளிக்கிழமை பரந்தனில் இருந்தும் சிறிலங்கா தரைப்படைப் பிரிவுகள் தந்திரவழிவகையாக வெளியேறியதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தன.

பரந்தனுக்கு வடக்கே இரசாயன தொழிற்சாலையையும் கைப்பற்றியதென்ற புலிகளின் கூற்றுக்களை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

பிரிகேடியர் தென்னக்கோன், விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா தரைப்படையானது பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறினார்.

"புலனாய்வு ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, டிசம்பர் 18 வரையிலான 3 நாட்களில், சிறிலங்கா தரைப்படை 300 புலிப் போராளிகளைக் கொன்றுள்ளதோடு 1000 பேரை காயமடையச் செய்துள்ளனர். சிறிலங்கா தரைப்படை 87 வீரர்களை இழந்ததோடு 870 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 65 சதவிகிதத்தினர் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் கூறினார்.

சிறிலங்கா தரைப்படை சனிக்கிழமையன்று 600 புலிகளைக் கொன்றது அல்லது காயப்படுத்தியது, என்றார்.

சண்டை தொடங்கியதில் இருந்து 78 போராளிகளை மட்டுமே இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று கொழும்பு மாநகர மைதானம் மற்றும் ஜா-எல அரசியல் கூட்டங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளே பொறுப்பு என பிரிகேடியர் தென்னகோன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதிபர் தேர்தல் நாளன்று நாடளாவிய வகையில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு காவல்துறையினரும் சிறிலங்கா தரைப்படையும் தயார் நிலையில் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், ஜா-எலவில் தமது பேரணியில் குண்டுவெடிப்பு ஆளும் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் சிறிலங்கா தரைப்படை முன்னாள் தலைமைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் லக்கி அல்கம (ஓய்வு) உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். பேரணியில் கைக்குண்டு வீசப்பட்டதாகக் கருதப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 


 

 

சேணேவி பரிமாற்றம் யாழ்குடாநாட்டை அதிரச் செய்தது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4400
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:14
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/06/2022

ஆனையிறவிலுள்ள சிறிலங்கா படைத்தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்பு நிலைகளில் கடுஞ்சண்டை நடைபெற்று வருவதாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் இன்று தமிழ்நெற்றிடம் தெரிவித்தன. அப்பகுதியிலுள்ள வலுவெதிர்ப்பு நிலைகள் மற்றும் முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் சேணேவிகளால் குத்தி வருகின்றனர்.

குடாநாட்டிற்குள் உள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது புலிகள் தங்கள் சேணேவித் தாக்குதல்களை முடுக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்கா தரைப்படை தனது பல சேணேவி நிலைகளை குடாநாட்டின் உட்பகுதிக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் கோப்பாய், புத்தூர் மற்றும் சிறுப்பிட்டி ஆகிய இடங்களில் சிறிலங்கா தரைப்படை தெறோச்சிகளை அமைத்துள்ளதாக குடியிருப்பாளர்கள் மனத்துயர் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் கிறித்தவக் கல்லூரியின் கணினி அறையின் கண்ணாடிகள் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த படையினரின் சேணேவிகள் சுடத் தொடங்கிய போது உடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தரைப்படை சேணேவி நிலைகள் புலிகளின் பகரடித் தாக்குதலுக்கு உள்ளானால் கொல்லப்படுவோமோ என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

இதற்கிடையில், புலிகளின் குரல் வானொலி மூலம் குடாநாட்டின் பொதுமக்களை சிறிலங்கா தரைப்படை முகாம்கள் மற்றும் சேணேவி நிலைகளில் இருந்து விலத்தியிருக்குமாறு புலிகள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவு தெற்கு வலுவெதிர்ப்பு நிலைகள் சரிவு - புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4409
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:09
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/06/2022

பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள மேலும் இரண்டு படைத்தளங்களைப் பரம்பிய பின்னர் ஆனையிறவில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் நடுவண் தள முகாம் மீது விடுதலைப் புலிகள் இன்று ஒருங்கிணைந்த சேணேவித் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவிக்கின்றனர்.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பரப்பில் விடுதலைப்புலிகளிடம் மேலும் இரண்டு படைத்தளங்கள் இடிந்ததைத் தொடர்ந்து ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வட்டக்கூறைச் சுற்றி நன்கு அரணப்படுத்தப்பட்ட வலுவெதிர்ப்புகள் சிதைந்துள்ளன."

"546 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மற்றும் குரக்கன்கட்டுக்குளம் படைமுகாமைக் கொண்டிருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைத் தளம் நேற்று பல மணித்தியாலங்கள் நீடித்த கடுமையான சண்டையின் பின்னர் தமிழ்ப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

"விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் கனதியான சேணேவி மற்றும் கணையெக்கி பல்லத்தை மூட்டியதில் சிறிலங்கா படையினரின் விறைப்பான எதிர்ப்பு சரிந்தது. எறிகணைத் தாக்குதலின் உக்கிரத்தால் படைத்துறைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது, சிறிலங்கா படையினர் மொத்தமாக ஆனையிறவு மையத் தளத்திற்கு முற்றிலும் சீர்குலைந்து தப்பியோடினர்.

“இந்த இரண்டு தளங்களின் வீழ்ச்சியுடன், ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்புச் சுற்றளவைக் கொண்டிருந்த பரந்தன் புலம் முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

"பாரிய ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் வடக்கு-கிழக்கு மற்றும் தெற்கு கைகளின்(Flanks) வலுவெதிர்ப்புக் கட்டமைப்புகளை உருவாக்கிய கடற்படைத் தளங்கள் மற்றும் படைமுகாம்களைப் பரம்பி, புலிகளின் சண்டைப் பிரிவுகள் இன்று சிறிலங்கா தரைப்படையின் 54 ஆவது படைப்பிரிவின் படைத்துறைத் தலைமையகம் அமைந்துள்ள நடுவண் தள முகாம் மீது ஒருங்கிணைந்த சேணேவி தாக்குதலைத் தொடங்கியுள்ளன."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவு வலிதாக்குதலை புலிகள் முடுக்கிவிட்டுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4416
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:34
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

விடுதலைப் புலிகள் வடக்கு தானைவைப்பு மீது வலிதாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்பிற்கு அருகாமையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பையும் குடாநாட்டையும் இணைக்கும் கேந்திர தரைப்பாலத்திற்கு அருகாமையிலுள்ள பரந்தனின் வடக்குப் பரப்புகளுக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் பிரிவுகளால் இந்தக் கூட்டுப்படைத்தளம் ஒருமுகப்படுத்தப்பட்ட சேணேவி மற்றும் கணையெக்கி பல்லத்தின் கீழ் வந்துள்ளது. நுழைவாயில் தானைவைப்பிற்கான சமர் விரைவில் தீர்க்கமான கட்டத்தை எட்டக்கூடும் என்று வடக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, மருதங்கேணி மற்றும் தாளையடியில் வசிக்கும் மக்கள் விரைவில் அப்பரப்பை விட்டு இயன்றளவு வேளைக்கு டிச.24 வெள்ளிக்கிழமைக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்துறை இன்று பிற்பகல் அறிவித்ததாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரமான ஆழியவளை வட்டாரங்கள் தமிழ்நெற்றின் வடமராட்சி செய்தியாளரிடம் தெரிவித்தன. 

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்குக் கரையோரப் பரப்புக்குள் அண்மைக்காலமாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் மருதங்கேணியின் தெற்குப் பரப்பை புலிகள் கைப்பற்றினர். தாளையடியானது மருதங்கேணிக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய கடற்கரை ஊராகும்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

வெற்றிலைக்கேணியை நோக்கி சிறிலங்கா தரைப்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4425
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 12:55
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்திலுள்ள வெற்றிலைக்கேணியை நோக்கி சிறிலங்கா தரைப்படை இன்று அதிகாலை முதல் இருமுனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக வடக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கரையோரத்திலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிலைக்கேணிக்கு வடக்கேயுள்ள தாளையடியிலிருந்து சிறிலங்கா தரைப்படை பிரிவுகள் தங்கள் வலுவெதிர்ப்பு நிலைகளிலிருந்து வெளியேறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனையிறவு களப்பினூடாக சுண்டிக்குளம் முகத்துவாரத்தை நோக்கி சிறிலங்கா தரைப்படையினரின் மற்றுமொரு சேர்படையினர் நகர்வதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது.

வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்கரையில் உவர்க்கத்தலையை வைத்துள்ள விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

இயக்கச்சி அருகே கடும் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4426
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:11
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

யாழ்ப்பாணத்தில் ஆனையிறவு தளத்திற்கு வடக்கே இயக்கச்சிக்கு அண்மித்த சங்கத்தார்வயல் மற்றும் கோயில்வயல் ஆகிய இடங்களில் நேற்று சிறிலங்கா தரைப்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக யாழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் பிரிவுகள் அப்பகுதியிலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது தாக்குதல் நடத்தியபோது சண்டை வெடித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்கச்சியிலிருந்து சங்கத்தார் வயல் 1.5 கிலோமீட்டர் தொலைவிலும், கோயில்வயல் 3.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி மயானத்திற்கு அருகிலுள்ள படையினரின் சேணேவி தளத்தின் மீது நேற்று காலை 10 மணி தொடக்கம் 11.30 மணிவரை புலிகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு படைவீரர்கள் சாடையாக காயமடைந்தது மட்டுமோடு தளத்திற்கு எந்தச் சேதமுமில்லை என்று சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகள் பூநகரியின் திசையிலிருந்து சேணேவி எறிகணைகளை வீசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண நகரத்திலிருந்து தென்கிழக்கே ஆறு கிலோமீற்றர் தொலைவில் களப்பு கரையோரமாக நேற்று மாலை 1 மணி முதல் 4 மணி வரை தனங்கிளப்பு மற்றும் கோயிலாக்கண்டி ஆகிய இடங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படையினர் மீது புலிகள் சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகளை வீசினர்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, தொடர்தட கவசவூர்தி சேதமடைந்ததோடு தாக்குதலில் பத்து படைவீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காயமடைந்த 170 படையினர் நேற்று இரவு வடக்கு களமுனையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் 45 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 


 

 

பரந்தன் இழப்பை சிறிலங்கா மறுக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4427
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:52
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று ஆனையிறவில் உள்ள அதன் கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்பை விடுதலைப் புலிகள் பரம்பியதை மறுத்துள்ளதுடன், "இந்தக் கூற்று உள்ளூர் மற்றும் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் புலிகளின் தவறுத்தகவல் பரப்புரையின் ஒரு பகுதியாகும்." என்று கூறியது.

இன்று ஒரு கூற்றுரையில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாவது:

“ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்புச் சுற்றளவைக் கொண்ட பரந்தன் புலம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக விடுதலைப் புலிகள் 21 டிசம்பர் 1999 அன்று தமிழ்நெற்றில் வெளியிட்ட செய்தியின்படி கூறுவது முற்றிலும் பொய்யானதோடு அது உள்ளூரையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றும் புலிகளின் தவறுத்தகவல் பரப்புரையின் ஒரு பகுதியாகும்."

"ஆனையிறவிற்குக் கிழக்கே முட்டுதல்கள் தொடர்வதோடு வலுவெதிர்ப்பை மீறும் பயங்கரவாதிகளின் அனைத்து முயற்சிகளையும் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதால் அவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் அப்பரப்பை முழு கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதோடு பரந்தன் பொதுப்பகுதி மற்றும் தெற்கு நோக்கி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்."

டிசம்பர் 21 அன்று பன்னாட்டு செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தொலைநகல் அனுப்பிய கூற்றுரையில், புலிகள் கூறியது:

"பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பரப்பில் விடுதலைப்புலிகளிடம் மேலும் இரண்டு படைத்தளங்கள் இடிந்ததைத் தொடர்ந்து ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வட்டக்கூறைச் சுற்றி நன்கு அரணப்படுத்தப்பட்ட வலுவெதிர்ப்புகள் சிதைந்துள்ளன."

"இந்த இரண்டு தளங்களின் வீழ்ச்சியுடன், ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்புச் சுற்றளவைக் கொண்டிருந்த பரந்தன் புலம் முழுவதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது." என்று அந்த கூற்றுரையில் கூறப்பட்டுள்ளது.

இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் அதிகாரிகளை, பாதுகாப்பு அமைச்சின் மறுப்பு தொடர்பாக இன்று தமிழ்நெற் தொடர்பு கொண்ட போது, டிசம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட அவர்களின் ஊடக வெளியீட்டில் கூறியது போல், விடுதலைப் புலிகளின் படைகள் பரந்தன் பரப்பின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாக வலியுறுத்தினார்கள்.

"சிறிலங்கா அரசாங்கம் தான் ஊடக தணிக்கைக்குப் பின்னால் அனைத்துலக சமூகத்திடம் இருந்து தங்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை மறைக்க ஒரு தவறுத்தகவல் பரப்புரையை நடத்துகிறது," என்று அவர்கள் கூறினர்.

 

 


 

 

இயக்கச்சி அருகே கடும் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4428
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:18
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

இயக்கச்சிப் பொதுப் பகுதியிலுள்ள சங்கத்தார்வயலில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கடும் சண்டை தொடர்வதாக புலிகளின் குரலின் வணிக சேவையான தமிழீழ வானொலி இன்று மாலை தனது செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் நேற்றும் இன்றும் சிறிலங்கா அரசாங்கப் படையினர் நடுவணில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் பெருந்தொகையிலான படைக்கலன்கள், கணைகள் மற்றும் படைய ஏந்தனங்களை சிறிலங்கா படையினரிட்டமிருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அந்த வானொலி தெரிவித்துள்ளது. சங்கத்தார்வயலைச் சுற்றி பல படைவீரர்களின் சடலங்கள் சிதறிக் கிடப்பதாக வானொலி மேலும் தெரிவித்தது.

ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் சங்கத்தார்வயல் என்ற ஊர் அமைந்துள்ளது.

இயக்கச்சிச் சந்தியிலிருந்து தெற்கே ஒரு மைல் தொலைவிலும், கண்டி வீதிக்கு (ஏ9 நெடுஞ்சாலை) கிழக்கே ஆனையிறவுக்கு வடக்கே இரண்டரை மைல் தொலைவிலும் உள்ளது.

சண்டை தொடர்கிறது என்று வானொலி கூறியது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 25 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவு சரணடைவை புலிகள் வலியுறுத்துகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4430
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 5:33
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

ஆனையிறவுப் பகுதியில் உள்ள தளங்களில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா தரைப்படையினரை சரணடையுமாறு விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக யாழ் குடாநாட்டில் வசிக்கும் மக்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

"சரணடைந்தவர்கள் மன்னிக்கப்படுவதோடு பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்கும் அனுப்பப்படுவார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட குடும்பத்துடன் இருப்பர்" என்று வானொலி கூறியது.

இன்று சிங்கள மொழியில் புலிகளின் குரல் ஊடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சரணடைந்த அனைத்து படைவீரர்களையும் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு புலிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக புலிகளின் குரல் தனது சிங்கள ஒளிபரப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக சரணடைந்த சிறிலங்கா தரைப்படை வீரர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்புவதற்காக விடுவிக்கப்பட்டதாக புலிகளின் குரல் ஒளிபரப்பு சுட்டிக்காட்டியது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை கண்காணிக்கப்பட்ட புலிகளின் குரல் ஒலிபரப்பின்படி, ஆனையிறவுப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமது படைய மடுத்தலில் புதிய பிரிவுகளை களமிறக்கியுள்ளனர்.

இயக்கச்சி பொதுப் பகுதியிலுள்ள சங்கத்தார் வயல் பகுதியில் வியாழக்கிழமை முதல் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

புலிகள் நேற்றும் இன்றும் சிறிலங்கா அரச படையினர் நடுவணில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும், பெருந்தொகையிலான படைக்கலன்கள், கணைகள் மற்றும் படைய ஏந்தனங்களை சிறிலங்கா தரைப்படையிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக புலிகளின் குரலின் வணிக சேவை தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் இயக்கச்சி உயிரிழப்புகளை பெயரிட்டுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4433
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:14
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

யாழ் குடாநாட்டின் இயக்கச்சி பொதுப் பகுதியில் கடும் சண்டைகள் இடம்பெற்று வரும் நிலையில் வியாழன் அன்று சிறிலங்கா தரைப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் தமது போராளிகளில் 12 பேர் கொல்லப்பட்டதாக வன்னியில் விடுதலைப் புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.

அவர்கள் இவ்வாறு பெயரிடப்பட்டனர்:

  • பிரிகேடியர் கதிரொளி (தனபாலசிங்கம் சுஜீபன், கொக்குத்தொடுவாய்)
  • கரும்புலி மேஜர் செழியன் (மகேந்திரராஜா பாலமுரளி, யாழ்ப்பாணம்)
  • கப்டன் தமிழ்வேந்தன் அல்லது இளவிழியன் (பாலசிங்கம் வசந்தன், வவுனியா)
  • கப்டன் புரட்சி (ராமசாமி செல்வராசன், மன்னார்)
  • லெப். பாணன் (சன்னாசி நாகராசா, வட்டக்கச்சி)
  • வராகமூர்த்தியன் (நாகையா ஜீவநாதன், மட்டக்களப்பு)
  • வாகராயன் (மயில்வாகனம் செல்வநாயகம், யாழ்ப்பாணம்)
  • சிங்கதரன் (பரசுராமன் மாயூரதன், மட்டக்களப்பு)
  • தில்லைகுமார் (தம்பிராசா பேரின்பநாயகம், மட்டக்களப்பு)
  • பேரின்பம் (முத்துக்குமாரசாமி மகாசிவநாராயணன், யாழ்ப்பாணம்)
  • கலைப்புலவன் (தர்மலிங்கம் வரதன், யாழ்ப்பாணம்).

டிசம்பர் 22 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் கணேசபுரத்தில் சிறிலங்கா படையினருடனான முட்டலில் லெப். அன்பன் (திருநாவுக்கரசு உதயகுமார்) கொல்லப்பட்டதாகவும், அதே நாளில் மூதூரில் ஏற்பட்ட மற்றொரு முட்டலில் வானதி (மணிகராசா துசந்தினி, திருகோணமலை) கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 

இதேவேளை, ஆனையிறவுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள கூற்றுரையில் தெரிவித்துள்ளது.

 

 


 

 

யாழ்ப்பாணத்திற்கு புதிய கட்டளையாளர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4434
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 11:43
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

மேஜர் ஜெனரல் நிகால் ஜெயக்கொடி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாதுகாப்புப்படை கட்டளையாளராக அடுத்த வாரம் முதல் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அடுத்த வாரம் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கவுக்குப் பகரமாக அவர் நியமிக்கப்படுவார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேஜர் ஜெனரல் நிகால் ஜெயக்கொடி, இந்தியாவின் புதுதில்லியிலுள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் 12 மாத பாடநெறியை முடித்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா திரும்பினார்.

அவர் இந்தியா செல்வதற்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தில் படைத்துறை ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தார்.

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் சண்டை பரவி வருகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4435
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:03
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

ஆனையிறவுப் பரப்பில் விடுதலைப் புலிகள் இயக்கம் 'ஓயாத அலைகள் - 3' நடவடிக்கையைத் தொடர்ந்ததால், சண்டைகள் நடைபெற்று வருவதாக புலிகளின் குரல் வானொலி இன்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், விடுதலைப் புலிகளும் சிறிலங்கா தரைப்படையும் அப்பரப்பிற்கு வலுவூட்டல்களை நகர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பகுதி உட்பட யாழ்ப்பாணக் குடாநாட்டின் புதிய பரப்புகளில் விடுதலைப் புலிகளின் படையினர் நிலைகொண்டு வருவதாக இந்த வார இறுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பரவி வரும் சண்டையிலிருந்து விலத்திய பரப்புகளுக்குச் சென்ற மக்கள் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கின் தாளையடி மற்றும் மருதங்கேணி பகுதிகளிலுள்ள மக்களை அவர்களின் பாதுகாப்பிற்காக கரையோரமாக நாகர்கோவில் ஊரிற்குச் செல்லுமாறு புலிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் இன்று காலை தெரிவித்தனர்.

தெற்கே புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு பரப்புகளுக்கும் செல்லலாம் என புலிகள் அறிவுறுத்தியுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படைத்துறை நிலைகளை நோக்கி இன்று காலை விடுதலைப் புலிகள் பூநகரி மற்றும் கேரதீவு பகுதிகளில் இருந்து சேணேவிகளால் சுட்டுக்கொண்டிருந்தனர்.

சிறிலங்கா வான்படையின் கிபிர் தரைத்தாக்குதல் தாரை வானூர்திகள் பூநகரி மற்றும் கேரதீவு பரப்புகளில் குண்டுவீச்சுகளை நடத்தி வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வலிகாமம் பரப்பிலுள்ள முகாம்களிலிருந்து பெருமளவிலான சிறிலங்கா படையினர் பின்வாங்கப் பெற்றுள்ளதாகவும், அவர்கள் ஆனையிறவு பரப்பிற்கு அனுப்பப்பட்டதாக கருதப்படுவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண நகருக்கு தெற்கே 25 மைல் தொலைவிலிள்ள பளையில் தற்போது பெருமளவிலான சிறிலங்கா தரைப்படையின் படையினர் நிலையெடுத்துள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா தரைப்படையானது கூடுதல் படையினரோடு சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகள் உட்பட்ட கணைகளை அனுப்பியதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. சிறிலங்கா தரைப்படைக்குச் சொந்தமான பாரவூர்திகள் மற்றும் பெட்டிபூட்டிய இழுபொறிகள் குடாநாட்டின் தெற்கு நோக்கி நகர்வதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவு அருகே கடும் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4437
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:38
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

இயக்கச்சி சிறிலங்கா தரைப்படை தளத்திற்கு வடக்கேயுள்ள சிறிலங்கா தரைப்படையின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால், ஆனையிறவு பரப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் சண்டை வெடித்தது.

விடுதலைப் புலிகள் சிறிலங்கா தரைப்படை நிலைகளை சேணேவி மற்றும் கணையெக்கி கொண்டு குத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், படையினர் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் கூறின.

யாழ்ப்பாண நகரின் புறநகர்களான நாவற்குளி, கைதடி தெற்கு, மறவன்புலவு, கோவில்கண்டி மற்றும் அரியாலை கிழக்கு, கொழும்புத்துறை தெற்கு ஆகிய ஊர்கள் மீது எறிகணைகள் தாக்கியதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

நாவற்குளி வீடமைப்புத் திட்டத்திலுள்ள பல வீடுகள் நேற்றிரவு எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எறிகணைகள் விடுதலைப் புலிகளால் வீசப்பட்டதா அல்லது சிறிலங்கா தரைப்படையினராலா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இந்த ஊர்களிலுள்ள பொதுமக்கள் ஓம்பலான பரப்புகளுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

உமையாள்புரம் முகாம் முற்றுகையிடப்பட்டுள்ளது - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4438
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 7:46
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

ஆனையிறவின் முதன்மை சிறிலங்கா படைத்தளத்திற்கு தெற்கே அமைந்துள்ள உமையாள்புரத்திலுள்ள சிறிலங்கா படைத்தளத்தின் சில பகுதிகளை விடுதலைப்புலிகள் பரம்பியுள்ளதாக இன்று மாலை புலிகளின் குரலின் வணிக சேவையான தமிழீழ வானொலி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தரைப்படையின் விறைப்பான எதிர்ப்பையும் மீறி, புலிகள் 10 சிறிலங்கா தரைப்படை முகாம்களையும், 25 சிறு முகாம்களையும் கைப்பற்றியுள்ளதாக வானொலி கூறியது.

உமையாள்புரம் புலிகளால் முற்றுகைக்கு உள்ளாகியிருப்பதாகவும் புலிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாகவும் வானொலி கூறியது.

ஆனையிறவிற்குத் தெற்கேயுள்ள சிறிலங்கா தரைப்படை மீதும், ஆனையிறவுக்கு வடக்கே இயக்கச்சி பொதுப் பகுதியிலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீதும் விடுதலைப் புலிகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக புலிகளின் குரல் இன்று நண்பகல் தனது சிறப்பு செய்தி ஒளிபரப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சண்டையில் 17 புலிகள் கொல்லப்பட்டதாகவும், இறந்தவர்களின் பெயர்களை கூறியதாகவும் அந்த வானொலி மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, காயமடைந்த 69 சிறிலங்கா படையினர் இன்று பகலில் அநுராதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

உமையாள்புரம் படைத்தளம் கைப்பற்றப்பட்டது - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/cat.html?catid=13&year=1999&view=
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 10:03
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

புலிகளின் குரல் வானொலி தனது இரவு செய்தி ஒலிபரப்பில், விடுதலைப் புலிகள் ஆனையிறவு தளத்திற்கு சுமார் 5 கி.மீ. தெற்கேயுள்ள உமையாள்புரத்திலுள்ள பெரிய சிறிலங்கா படைமுகாமை பரம்பிவிட்டதாக கூறியுள்ளது.

இதனால் மேலும் 10.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவை புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வானொலி தெரிவித்துள்ளது.

உமையாள்புரம் சிறிலங்கா தரைப்படை படைத்தொகுதியின் தலைமையகம் விடுதலைப் புலிகளின் கைகளில் சிக்கியபோது அதைச் சுற்றி 40 சிறுமுகாம்கள் இருந்தன.

மேலும், 22 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கூறிய அந்த வானொலி அவர்களின் பெயர்களையும் வழங்கியுள்ளது.

வானொலி தனது நண்பகல் ஒலிபரப்பில், உமையாள்புரத்தைச் சுற்றி நடந்த சண்டையில் கொல்லப்பட்ட மேலும் 17 போராளிகளின் பெயரைக் கூறியதால் உமையாள்புரத்துக்கான 2 நாள் சமரில் புலிகளின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 28 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா தரைப்படை யாழ்ப்பாணத் தீவுகளை அரணப்படுத்துகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4444
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:38
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/06/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கேயுள்ள தீவுகளிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் படையினர், ஆனையிறவிலுள்ள கேந்திர சிறிலங்கா தரைப்படை தளத்தின் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தியுள்ளதால், விழிப்பூட்டப்பட்டுள்ளதாக வடக்கு நகர வலுவெதிர்ப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

நேற்று பிற்பகல் பூநகரியிலிருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட 10 எறிகணைகள் மண்டைதீவு கடற்கரையை தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பரப்புகளின் கரையோரத்தில் புதிய முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் மற்றும் சேணேவி நிலைகளை சிறிலங்கா தரைப்படை நிறுவியுள்ளதோடு யாழ்ப்பாணக் களப்பில் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதேவேளை, ஆனையிறவுப் பரப்பில் படையினரும் விடுதலைப் புலிகளும் நீண்ட தொலைவி சேணேவித் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

பரந்தனுக்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உமையாள்புரத்திலுள்ள சிறிலங்கா படைமுகாமை நேற்று மாலை விடுதலைப் புலிகள் பரம்பியதாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 30 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் சண்டை வெடிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4448
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/06/2022

கேந்திரமான ஆனையிறவுத் தளத்திற்கு வடக்கே, சிறிலங்கா தரைப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று அதிகாலையில் இருந்து மீண்டும் கடும் சண்டை வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளும் அரசாங்கப் படையினரும் தொடர்ந்து சேணேவி மற்றும் கணையெக்கிச் சூடுகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தின் மேற்குக் கரையோரத்திலிள்ள பல படைமுகாம்கள் மீது விடுதலைப் புலிகள் நீண்ட தொலைவு சேணேவிகளால் சுட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறிலங்கா வான்படையின் கிபிர் குண்டுதாரிகளும், தாக்குதல் உலங்குவானூர்திகளும், பூநகரி மற்றும் கேரதீவு பரப்புகளிலுள்ள புலிகளினுடையவை என்ற ஐயத்திற்கிடமான இலக்குகளைத் தாக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தில் பாசையூர், குருநகர் மற்றும் கொழும்புத்துறை ஆகிய கரையோரப் புறநகர்களில் இன்று காலை வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், சேத விரிப்புகள் உடனடியாகத் தெரியவில்லை என்று ஆதாரங்கள் தெரிவித்தன.

தென்மராட்சி கோட்டத்திலுள்ள சாவகச்சேரி, பளை மற்றும் ஏனைய பரப்புகளுக்கு சிறிலங்கா தரைப்படை தொடர்ந்தும் வலுவூட்டல்களை அனுப்பி வருவதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

புலிகள் வைத்திருந்த பரப்புகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4450
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:58
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/06/2022

விடுதலைப்புலிகள் தமது படை நடவடிக்கையின் போது புதிதாக கைப்பற்றப்பட்ட பரப்புகளில் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீள்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வன்னியிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப கட்ட நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்ட மாங்குளம், ஒலுமடு மற்றும் கரிப்பட்டமுறிப்பு பரப்புகளில் பெருமளவிலான பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனுக்கு கிழக்கே முரசுமோட்டை, ஊரியான் மற்றும் அதனைச் சூழவுள்ள சிற்றூர்களில் இருந்து இடம்பெயர்ந்த ஊர்மக்களை மீள்குடியேற்றவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுடன் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டிசம்பர் 28ஆம் திகதி வன்னியில் உள்ள நெடுங்கேணியில் கூட்டம் இடம்பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா படையினரின் ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது தப்பியோடுய மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்ல விருப்பம் வெளிக்காட்டியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் மீள்குடியேற்றம் ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கலுக்குள் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

madhu_shelling_1.jpg

'20 நவம்பர் 1999 அன்று எறிகணை தாக்குதலுக்கு உள்ளான மடு தேவாலயம் சேதமடைந்தது. தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர்.'

 

madhu_shelling_2.jpg

'தேவாலயம் எறிகணைவீச்சிற்கு உட்பட்டவுடனேயே ஏதிலிகளில் ஒரு பகுதியினர்'

 

madhu_shelling_victims.jpg

'எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது நான்கு புதல்வர்களின் உடல்களுக்கு முன்னால் ஒரு இளம்தாய் அழுகிறார்.'

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.