Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

அரச படையினர் 50 பேர் கொல்லப்பட்டனர் -  புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4451
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:29
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/06/2022

நாட்டின் வடக்கில் நேற்று இடம்பெற்ற கடுமையான சண்டையில் 50 இற்கும் மேற்பட்ட அரச படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக புலிகளின் குரல் இன்று காலை தெரிவித்துள்ளது.

புலிகள் அரசாங்கப் படையினரின் 16 சடலங்களையும் பெருந்தொகையிலான படைக்கலன்களையும் கணைகளையும் மீட்டதாக வானொலி தெரிவித்துள்ளது.

16 சடலங்களையும் சிறிலங்கா தரைப்படையிடம் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வானொலி தெரிவித்துள்ளது. சண்டையில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக வானொலி கூறியது.

வடக்கில் நேற்று கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றதாகவும் வானொலி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எங்கு மோதல்கள் இடம்பெற்றன என்பதை வானொலி குறிப்பிடவில்லை.

ஆனையிறவு தளத்தின் மேற்கு வலுவெதிர்ப்புக் கோடுகளின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலை படையினர் நேற்று முறியடித்ததாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணக் களப்பில் குறைந்தது 4 விடுதலைப் புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அறுகுவெளி, மறவன்புலவு மற்றும் மணியந்தோட்டம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் படையினர் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகாலை 2.30 மணியளவில் ஆரம்பித்து நண்பகல் வரை நீடித்த இந்த நடவடிக்கையில் சிறிலங்கா வான்படையின் தாரை வானூர்திகளும் உலங்குவானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்மராட்சி கோட்டத்திலிருந்து நேற்றைய நாள் பொதுமக்கள் பலர் இடம்பெயர்ந்ததாக யாழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

யாழ்ப்பாணக் களப்பில் மோதல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4454
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:37
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/06/2022

நேற்று காலை 9.30 மணியளவில் யாழ். களப்பில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையின் அதிரடிப்படைப் பிரிவுக்கும் இடையில் இடம்பெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதோடு மேலும் மூன்று படகுகள் சேதமடைந்துள்ளன என்று புலிகளின் குரல் வானொலியின் வணிக சேவையான தமிழீழ வானொலி  இன்று மாலை தெரிவித்தது.

மூழ்கிய வோட்டர் ஜெட்டின் கலக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக வானொலி கூறியது.

வானொலியின் படி, கப்டன் அறிவரசன் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகன்) என அடையாளம் காணப்பட்ட ஒரு கடற்கரும்புலி சமரில் இறந்தார்.

தென்மராட்சியின் மேற்குக் கரையோரத்திலுள்ள கிளாலியிலுள்ள இறங்குதுறையானது சிறிலங்கா கடற்படையின் அதிசிறப்பு சிறப்புப்படைப் பிரிவான சிறப்புப் படகு சதளத்தின்(squad) கட்டளையின் கீழ் உள்ளது.

 

 


 

 

16 சிறிலங்கா தரைப்படையினரின் உடலங்களை புலிகள் ஒப்படைத்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4455
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:46
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/06/2022

தீவின் வடக்கில் கொல்லப்பட்ட 16 சிறிலங்கா தரைப்படை வீரர்களின் உடலங்களை விடுதலைப் புலிகள் இன்று மல்லாவியிலுள்ள செஞ்சிலுவைச் சங்க நிகராளியிடம் ஒப்படைத்ததாக அந்த அமைப்பின் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

இன்றிரவு 9 மணியளவில் பிரமனாலன்குளம் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகளிலுள்ள சிறிலங்கா தரைப்படையிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார். 

சிறிலங்கா தரைப்படையிடமிருந்து விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரின் சடலத்தை செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்டதாகவும், அது வன்னிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த புலித்தேவன் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.

வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 16 புலி உறுப்பினர்களின் பெயர்களையும் வானொலி வழங்கியது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • நன்னிச் சோழன்

    199

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்     இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தம

நன்னிச் சோழன்

இறுவெட்டுகள்   இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போரிலக்கியப்பாடல் இறுவெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.   ஆனையிறவு: பாட

நன்னிச் சோழன்

காலக்கோடு     01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு சனவரி மாதம் 1ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மோதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4457
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 11:50
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 23/08/2022

இன்று காலை 7 மணியளவில் யாழ் குடாநாட்டில் இயக்கச்சியில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் 40 சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக புலிகளின் குரல் தனது இரவு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது.

சண்டையின் போது மீட்கப்பட்ட சிறிலங்கா தரைப்படையினரின் இரண்டு சடலங்களை விடுதலைப் புலிகள் கையளித்ததாக வானொலி தெரிவித்துள்ளது.

வானொலியின்படி, அதிகாலை இயக்கச்சி சுற்றாடலுக்குள் முன்னகர முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தன.

சிறிலங்கா தரைப்படை முன்னகர்வதற்கான அவர்களின் முயற்சியை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு பின்வாங்கினர். மோதலைத் தொடர்ந்து படைக்கலன்களையும் கணைகளையும் புலிகள் மீட்டுள்ளனர்.

இந்தச் சண்டையில் விடுதலைப் புலிகள் 6 உறுப்பினர்களை இழந்ததாக வானொலி மேலும் கூறியுள்ளது.

இன்று மாலை வடக்கில் சமர்க்களத்திலிருந்து காயமடைந்த 50 படையினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அனுராதபுர வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் உயிரிழப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்களைப் பெறத் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு சனவரி மாதம் 10ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் வான் தாக்குதல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4495
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:17
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
23/08/2022

இலங்கை வான்படையின் கிபிர் தாரை வானூர்திகள் இன்று காலை 9 மணி முதல் தீவின் வடக்கே பூநகரி-கேரதீவு பரப்பில் வான் தாக்குதலை நடத்தியது. வான் தாக்குதல் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்ததாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஆனையிறவு பரப்பில் இன்று அதிகாலையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டுப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விரிப்புகள் தெரியவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவுக்குட்பட்ட புலோலியின் வடக்கில் சிறிலங்கா தரைப்படையினர் நேற்று சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பொதுயிடத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டு, முகமூடி அணிந்த தலையாட்டிகள் முன்பாக உசாவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

செம்பியன்பற்றைச் சேர்ந்த கந்தசாமி மாதரூபன் வயது 18, தாளையடி வத்தராயன் தெற்கைச் சேர்ந்த கந்தசாமி ரவிக்குமார் வயது 20 ஆகிய இரு இளைஞர்கள் மேலதிக உசாவல்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பருத்தித்துறை சிறிலங்கா தரைப்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு 8 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக மாலையில் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 

 

*******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆறு சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4516
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:23
தமிழாக்கம்: நன்னிச் சோழன்,
23/08/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பில் இன்று அதிகாலை 6 சிறீலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வலுவெதிர்ப்பு கோடுகளுக்குள்ளால் ஊடுருவி அவர்களை கத்தியால் வெட்டிக்கொன்றதாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணக் களப்பின் கரையில் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4604
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 4:07
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
23/08/2022

இன்று அதிகாலை மூன்று மணியளவில் யாழ்ப்பாணக் களப்பின் கரையில் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையே சண்டை எழுந்தது. யாழ்ப்பாண நகரின் தென்கிழக்கே தனங்கிளப்பு, அறுகுவெளி மற்றும் கேரதீவு களப்புக் கரையோரங்களில் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையிலான மோதல்கள் பதிவாகியுள்ளன.

இரு தரப்பினரும் கணையெக்கி மற்றும் சுடுகலச் சூடுகளை அரைமணி நேரத்திற்கும் மேலாக பரிமாற்றிக்கொண்டதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று பிற்பகல் வரை சண்டை பற்றிய கூடுதல் விரிப்புகள் கிடைக்கவில்லை. இந்தப் பரப்பில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் பிரிவுகளை அகற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா தரைப்படை கடந்த மாதம் முதல் ஈடுபட்டு வருகிறது.

1996ல் குடாநாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக, கடந்த வாரம் யாழ்ப்பாண நகருக்கு தென்கிழக்கில் அரணத்தில் படைமுகாம்களை நிறுவியுள்ள புலிகளின் நிலைகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களுக்கு சிறிலங்கா தரைப்படை அழைப்பு விடுத்தது.

1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி முதல் புலிகள் தனங்கிளப்பு மற்றும் கேரதீவில் சிறிலங்கா தரைப்படையுடன் பலமுறை மிண்டியுள்ளனர். குடாநாட்டை பூநகரியின் முதன்மை நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர தரைப்பாலம் மற்றும் வலசை ஆகியவை கேரதீவில் உள்ளன.

 

 


 

 

வடமராட்சி கடலில் மோதல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4606
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:00
தமிழாக்கம்: நன்னிச் சோழன்,
23/08/2022

தீவின் வடக்கே வடமராட்சி கிழக்கின் கரையோரத்தில் நேற்றிரவு தவிபுவினருக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

மோதல்கள் பற்றிய கூடுதல் விரிப்புகள் கிடைக்கவில்லை.

வத்திராயன் மற்றும் உடுத்துறை ஆகிய ஊர்கள் சிறிலங்கா கடற்படையின் படகுகளிலிருந்து நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

இயக்கச்சியில் மோதல்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4621
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 5:27
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
23/08/2022

ஆனையிறவுக்கு வடக்கே இயக்கச்சிக்கு அருகிலுள்ள குறிஞ்சாதீவில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை 6 மணியளவில் வெடித்த இந்தச் சண்டை இரவு முழுவதும் நீடித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் விரிப்புகள் தெரியவில்லை.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மன்னாரில் மோதல்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4626
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 11:16
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
23/08/2022

தீவின் வடமேற்கிலுள்ள மன்னார் மாவட்டத்தில் இன்று காலை விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளும் சிறிலங்கா தரைப்படையும் கணையெக்கிச் சூடுகளை பரிமாறிக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறீலங்கா படையினர் மாந்தை மற்றும் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து மன்னார்-பூநகரி வீதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாப்பாமோட்டையை நோக்கி முன்னகர முற்பட்ட போது காலை 6 மணியளவில் சண்டை வெடித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தள்ளாடி தளத்தில் நிலைகொண்டுள்ள படையினர் இன்று காலை 6 மணிமுதல் பாப்பாமோட்டையை நோக்கி எறிகணைகளை வீசி வந்தனர். காலை 10 மணியளவில் சண்டை முடித்துக்கொள்ளப்பட்டது.

உயிரிழந்தோர் விரிப்பு உடனடியாகத் தெரியவில்லை.

இதேவேளை, மன்னார் நகரில் இன்று காலை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது 3000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுவிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களின் அடையாளங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

மன்னார் நகரில் நேற்றிரவு முதல் 2000 இற்கும் மேற்பட்ட படையினரால் வலுத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அஞ்சல், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத்துறை துணையமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் நாளைய நாள் வருகையை முன்னிட்டு இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரில் இரெலிகொம் நிறுவியுள்ள புதிய தொலைபேசி நிலையத்தை அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மன்னார் மோதல்களில் நான்கு படையினர் காயமடைந்துள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4633
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:52
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
26/08/2022

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் நேற்று இடம்பெற்ற மோதலில் 4 சிறிலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படையினர் புலிகளின் சேணேவி நிலைகளை இடமாற்றம் செய்வதற்கும், மன்னாரில் இருந்து புலிகளின் சேணேவித் தாக்குதல்களை திசைதிருப்புவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். புதிய தொலைபேசி நிலையத்தை திறப்பதற்காக மன்னாருக்கு வருகை தரும் முக்கியபுள்ளிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் இது மேற்கொள்ளப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், புலிகளின் குரல் வானொலி தனது காலை செய்தி ஒலிபரப்பில் முருங்கன், தள்ளாடி மற்றும் மாந்தை ஆகிய இடங்களிலிருந்து சிறிலங்கா தரைப்படை சேணேவிகளால் சுட்டதாகக் கூறியது. பள்ளிமுனையிலிருந்து சிறிலங்கா கடற்படை சேணேவிகளால் சுட்டதாகவும் வானொலி மேலும் கூறியுள்ளது.

 

 

*******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவில் கடும் சண்டை வெடிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4674
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 11:16
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
26/08/2022

தீவின் வடக்கே ஆனையிறவுப் புலத்தில் இன்று அதிகாலையிலிருந்து விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படை வீரர்களுக்கும் இடையில் சண்டை எழுந்தாக படைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சண்டையில் 15 சிறிலங்காப் படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படையினர் தாக்குதலை முறியடித்ததாக சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளின் 14 சடலங்களையும் சில ஆய்தங்களையும் படையினர் மீட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தளத்தின் தெற்கு வலுவெதிர்ப்புக் கோடுகள் மீது புலிகள் இருமுனைத் தாக்குதலைத் தொடுத்ததாகவும், 8 வலுவெதிர்ப்பு நிலைகளை அழித்ததாகவும் சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய சண்டை குறித்து விடுதலைப் புலிகள் கருத்துத் தெரிவிக்கவில்லை.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவில் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகள் மீறப்பட்டன

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4682
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:25
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
26/08/2022

ஆனையிறவிற்குத் தெற்கே உமையாள்புரம் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 700 மீற்றர் நீளமுள்ள சிறிலங்கா தரைப்படையின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோடுகள் அழிக்கப்பட்டதாக புலிகளின் குரல் இன்று தெரிவித்துள்ளது.

அங்கு சிறீலங்கா தரைப்படையுடனான கடும் மோதல்களில் 21 புலிப் போராளிகள் கொல்லப்பட்டதாக வானொலி கூறியது.

இறந்தவர்களின் பெயர் விரிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வானொலி தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்செயலான வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு விடுதலைப்புலிப் போராளிகள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். வானொலி தாரகன் (சிவலிங்கம் தயாளன், மட்டக்களப்பு) மற்றும் வர்ணப்பிரியன் (வரதராஜ் வேணுகன், மட்டக்களப்பு) என்று அவர்களின் பெயர்களை வழங்கியது.

யாழ் குடாநாட்டில் அரியாலையில் பெப்ரவரி 16 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மற்றுமொரு உறுப்பினர் கொல்லப்பட்டதாக வானொலி மேலும் தெரிவித்தது. வானொலி அவரது பெயரை தூயவன் (கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த மஹரேடோ ரொபேட் கெனடி) என்று வழங்கியது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4686
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 12:06
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
26/08/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சிக் கோட்டத்தில் உசன் என்ற இடத்தில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்தியை நேற்றிரவு 8.25 மணியளவில் விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர். 

உலங்குவானூர்தியில் இருந்த ஒரு வானோடியும் ஒரு சூட்டாளரும் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெல் வித உலங்குவானூர்தி தாக்குதலுக்குள்ளான போது காயமடைந்த படையினரை முகமாலையிலிருந்து பலாலிக்கு வெளியேற்றுவதற்காகச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதையடுத்து உலங்குவானூர்திக் குழுவினர் கொடிகாமத்தின் தென்கிழக்கே ஒட்டுபேயில் பொதுப்பரப்பில் அவசரமாக தரையிறங்கியுள்ளனர். உலங்குவானூர்தியில் இருந்த குழுவினர் நால்வர் மற்றும் உயிர்ச்சேதமடைந்திருந்த 4 படைவீரர்களில் குழுவினரைச் சேர்ந்த இருவர், ஒரு துணை வானோடி மற்றும் ஒரு சூட்டாளர், ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று கூற்றுரை கூறியது.

இதேவேளை, ஆனையிறவுப் பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் சேணேவி மற்றும் கணையெக்கிச் சூட்டுப் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக யாழ். மேலதிக விரிப்புகள் தெரியவில்லை.


 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

தாளையடி முகாம் மீது கடற்புலிகள் எறிகணை வீச்சு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4695
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:33
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
26/08/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள தாளையடி சிறிலங்கா படைமுகாம் மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் கணையெக்கி எறிகணைகளை வீசியுள்ளனர். புலிகள் தங்கள் படகு ஒன்றிலிருந்து முகாம் மீது எறிகணை தாக்குதல் நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில எறிகணைகள் முகாமுக்குள் விழுந்ததுடன், அப்பகுதியில் அடர்த்தியான கரும்புகை காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், சேத விரிப்புகள் தெரியவில்லை.

சுமார் 7.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த சிறிலங்காக் கடற்படைப் படகுகள் உடுத்துறையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி எறிகணைகளை வீசி பகரடி கொடுத்தன.

வடமராட்சிக் கடற்பரப்பில் புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் சிறு சூட்டுச் சண்டை இடம்பெற்றதாக அப்பரப்பு மீனவர்கள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா தரைப்படை தென்மராட்சி முகாம்களை வலுப்படுத்துகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4717
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 12:31
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
26/08/2022

சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள எழுதுமட்டுவாளில் கடந்த வாரம் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து தென்மராட்சிப் பரப்பிலுள்ள முகாம்களைச் சுற்றி சிறிலங்கா தரைப்படை வலுவெதிர்ப்பை வலுப்படுத்தி வருவதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

இடிவாருவகம் (Bulldozer) உள்ளிட்ட கனவகை இயந்திரங்களைப் பயன்படுத்தி சாவகச்சேரி நகர முகாமைச் சுற்றி மண்ணரண்களை அமைப்பதுடன், அருகிலுள்ள தோட்டங்களிலிருந்து வெட்டப்பட்ட பனை மற்றும் தென்னை மரக்குத்திகளைப் பயன்படுத்தி காவலரண்களை வலுப்படுத்துகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனங்கிளப்பு மற்றும் அறுகுவெளி பரப்புகளிலிருந்து சாவகச்சேரி நகரை நோக்கி புலிகள் முன்னகர்வதை எதிர்நோக்கி, சாவகச்சேரிக்கு அருகிலுள்ள கண்ணாடிப்பிட்டியிலுள்ள இந்து மயானத்தில் கூடுதலான காவலரண்களை சிறிலங்கா தரைப்படையினர் கட்டி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அச்செழு படைத்தொகுதி முகாமில் படைவீரர்கள் அதிகவன நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை மற்றும் நள்ளிரவில் வட்டொலி(siron) ஒலித்து படைவீரர்களின் அணிய நிலையை அதிகாரிகள் அவ்வப்போது சரிபார்த்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

தனங்கிளப்பில் மோதல்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4777
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:13
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
27/08/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சி கோட்டத்திற்குட்பட்ட தனங்கிளப்பில் இன்று காலை சிறிலங்கா தரைப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணியளவில் தனங்கிளப்பில் உள்ள அவர்களது முகாமிலிருந்து கரையை நோக்கி சிறிலங்கா தரைப்படையினர் முன்னகர முற்பட்ட போது சண்டை எழுந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் இரண்டு மணி நேரம் மோதல் நீடித்தது. மேலும் விரிப்புகள் தெரியவில்லை.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணக் கடற்கரையில் சிறிலங்கா தரைப்படையும் புலிகளும் துவந்துவம்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4786
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:04
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
27/08/2022

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்குக் கடற்பகுதியில் இன்று அதிகாலையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் சுடுகலன் மற்றும் கணையெக்கிச் சூட்டுப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள உடுத்துறை மற்றும் வத்திராயன் ஆகிய பரப்புகளில் காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இந்தப் பரிமாற்றம் நீடித்ததாக அப்புல வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றும் வியாழக்கிழமையும் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை புலிகளால் தமது நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைத் தாக்குதல்களுக்கு சிறிலங்கா தரைப்படை திருப்பியடிப்பது போல்  தோன்றியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதே பரப்பில் நேற்று காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை கணையெக்கி மற்றும் சுடுகலச் சூட்டோசை கேட்டதாக கடற்கரையில் மேலும் வடக்கே வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

இப்புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை மீது படையினர் சுடுகலச் சூடு நடத்தியதாகவும், இதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் சிறிலங்கா தரைப்படையின் யாழ்ப்பாணத் தலைமையகம் நேற்று தெரிவித்தது.


 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

உடுத்துறை மோதலில் நான்கு பேர் உயிர்ச்சேதம் - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4790
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:44
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
27/08/2022

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் மார்ச் 8 புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் மூன்று சிறிலங்கா தரைப்படையின் அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்தச் சண்டையில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் வானொலி இன்று காலை தெரிவித்துள்ளது.

உடுத்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதற்கு சிறிலங்கா தரைப்படைப் பிரிவு சென்றபோது சண்டை வெடித்தது. இறந்த அதிரடிப்படையினரிடமிருந்து ஆய்தங்களையும் புலிகள் மீட்டனர்.

இறந்த புலி உறுப்பினர் நிலவரசன் (பால் ராஜதுரை ரொபின், யாழ்ப்பாணம்) என வானொலி அடையாளம் சொன்னது.

யாழ்ப்பாணத்தின் ஏனைய இடங்களில், இயக்கச்சிக்கு வடக்கே சுமார் 8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளையில் உள்ள கரந்தை என்ற சிற்றூரில் வசிக்கும் பொதுமக்களை அப்பரப்பை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா தரைப்படை உத்தரவிட்டுள்ளது.

பளையில் தமது நிலைகளை விரிவுபடுத்துவதற்குப் படையினர் திட்டமிட்டு இருக்கலாம் என யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் கரந்தையில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்கள் தமது கம நிலங்களை விட்டு வெளியேற மறுத்துள்ளனர்.

வவுனியா - மன்னார் வீதியில் 'செக்டார் 11' இல் காவல்துறை நிலையங்கள் மீது விடுதலைப் புலிகள் கணையெக்கி எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். எறிகணைத் தாக்குதலால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் ஏவுநிலைகள் என ஐயப்படும் இடங்களை நோக்கி காவல்துறையினர் கணையெக்கி எறிகணைகளை வீசி பகரடி கொடுத்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகளும் சிறிலங்கா தரைப்படையினரும் வாயில் தளத்திற்கு அருகே தாவடி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4807
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:29
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
27/08/2022

ஆனையிறவுத் தளத்தின் கிழக்கிலும் வடக்கிலும் பல இடங்களில் நேற்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் மோதல் ஏற்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள படைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடுத்துறையில் புலிகளின் பதுங்ககழிக் கோடு ஒன்றின் மீது படையினர் சுடுகலச் சூடு நடத்தியதாகவும், வத்திராயனில் நேற்று புலிகளுடன் சூட்டுச் சண்டையில் மிண்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனையிறவு தளத்திற்கு கிழக்கேயுள்ள உடுத்துறை மற்றும் வத்திராயன் ஆகியவை அதை அண்டிய கரையோர ஊர்கள் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தக் கடற்கரையின் பெரும்பாலான தெற்கு வட்டக்கூறை புலிகள் கைப்பற்றினர்.

சிறிலங்கா தரைப்படை தனது சிறப்புப்படைப் பிரிவுகளின் முன்னெடுப்புகளின் மூலம் இந்தப் பரப்பை மீட்பதற்கு கடந்த வாரம் முதல் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், புலிகள் உடுத்துறை மற்றும் அதன் தெற்கே உள்ள வெற்றிலைக்கேணி உட்பட்ட கடற்கரைப் பகுதிகளிலுள்ள அரணத்தில் படைமுகாம்களை நிறுவியுள்ளதாகத் தெரிகிறது. ஆனையிறவு தளத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கில் பல பகுதிகளிலும் அவர்கள் மடுக்கின்றனர்.

சிறிலங்கா தரைப்படைக்கும் புலிகளுக்கும் இடையிலான தாவடிகள் இந்தப் பரப்புகளில் இரு கன்னையினதும் வலுவெதிர்ப்புகளுக்கு முன்னால் கிட்டத்தட்ட நாளாந்தம் நிகழ்கின்றன. ஆனையிறவின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள இந்தப் பரந்து விரிந்த தானைவைப்பின் நீண்டகால வலுவெதிர்ப்பிற்கு இன்றியமையாததாக இருக்கும் இந்த முக்கிய பிரிவுகளை முற்றாக துடைப்பதற்குத் தமக்கு அதிகமான படையினர் தேவைப்படுவதாக சிறிலங்கா தரைப்படை கூறுகிறது.

நேற்று, ஆனையிறவுத் தளத்தின் மற்றொரு முன்னணி வட்டக்கூறான தட்டுவன்கொட்டியில் சிறிலங்கா படையினரும் புலிகளும் மோதிக்கொண்டனர். புலிகள் தமது பிரிவுகள் மீது கைக்குண்டுகளை வீசியதாகவும், இந்த மோதலில் குறைந்தபட்சம் ஒரு விடுதலைப்புலிப் படைவீரர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தரைப்படை தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

மட்டுவிலில் விடுதலைப்புலிகள் - சிறிலங்கா படையினர் மோதல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4818
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:16
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
27/08/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சிக் கோட்டத்திற்குட்பட்ட மட்டுவிலில் இன்று மாலை 4.30 மணிமுதல் சிறிலங்கா தரைப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தோர் விரிப்பு உடனடியாக தெரியவில்லை.

எவ்வாறாயினும் இரண்டு பாடசாலை சிறுவர்கள் சுடுகலச் சூட்டிற்கு இலக்காகி இன்று மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 14 வயதுடைய சத்தியசீலன் தயாகரன் மற்றும் 16 வயதுடைய மார்க்கண்டு கண்ணபவன் ஆகிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மாலை வகுப்புகளுக்குச் சென்ற போது காயம் அடைந்ததாக அப்பரப்பு மக்கள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை ஆனையிறவுப் பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் கணையெக்கிச் சூடு இடம்பெற்றதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு தனி சம்பவத்தில். குடாநாட்டின் தென்கிழக்கு கடற்பகுதியில் வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் இன்று காலை 8.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் தாக்குதல் தொடர்ந்தது என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

அப்பரப்பில் உள்ள படைய அதிகாரிகளிடம் ஊர்மக்கள் செய்த முறைப்பாடுகளை அடுத்து சிறிலங்கா கடற்படை தாக்குதலை நிறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலால் படகுகள் மற்றும் மீன்பிடி முட்டுகள் சேதமடைந்தன என்று அவர்கள் கூறினர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணக் கடற்கரைத் தளம் மீது புலிகள் எறிகணை வீச்சு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4860
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:02
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
27/08/2022

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் உள்ள ஆனையிறவுத் தளம் மற்றும் சிறிலங்கா தரைப்படையின் நிலைகள் மீது இன்று காலை முதல் விடுதலைப் புலிகள் சேணேவி மற்றும் கணையெக்கி வீச்சுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

தற்போது அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மற்றும் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்திலுள்ள வெற்றிலைகேணி-கட்டைக்காடு வட்டக்கூறில் உள்ள அவர்களின் நிலைகளிலிருந்து புலிகள் சிறிலங்கா படைமுகாம்கள் மற்றும் வலுவெதிர்ப்புகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

யாழ்ப்பாண நகரிலிருந்து படையக் கட்டுப்பாட்டிலுள்ள கரையோர ஊரான தாளையடிக்குச் சென்ற காலை பேருந்து கத்தாப்பு சந்தியில் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டது. கண்டி வீதியின் (ஏ9) கிழக்கிலும், கரையோரப் பரப்புகளிலும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பேருந்தைத் திருப்பிய மருதங்கேணி முகாமைச் சேர்ந்த படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு நாவற்குளி சந்தியில் விடுதலைப் போராளிகளின் இரு சேணேவி எறிகணைகள் வீழ்ந்தன. நாவற்குளியானது ஏ9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ளது.

விடுதலைப்புலிகளும் சிறிலங்கா தரைப்படையினரும் யாழ்ப்பாண நகரத்தின் தென்கிழக்கில் ஒவ்வொருவரின் வலுவெதிர்ப்புகளில் நாளாந்தமான கணையெக்கித் தாக்குதல்களைத் தொடர்ந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மிண்டுதல்களின் விளைவாக, இந்த வட்டக்கூறில் கமக்காரர்கள் தங்கள் வயல்களுக்குச் செல்வதையோ அல்லது வேலை செய்வதையோ சிறிலங்கா தரைப்படை தடை செய்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 27,28,29 & 30ம் திகதிகளில் 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சாவகச்சேரி சிறிலங்கா தரைப்படையை புலிகள் குத்துகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4888
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:09
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
28/08/2022

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்மராட்சிக் கோட்டம் மற்றும் குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரச் சமர் வலயங்களிலிருந்து தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு அருகில் உள்ள தம்புத்தோட்டத்தில் சிறிலங்கா தரைப்படையின் 52-3 படைத்தொகுதி மீது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சு நடத்தினர். இதற்கிடையில் இன்று சிறிலங்கா தரைப்படையானது பருத்தித்துறை-கொடிகாமம் வீதியில் கருக்காயில் உள்ள மற்றொரு முகாமை காலி செய்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் சேணேவிப் பிரிவுகள் இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொடிகாமம் - கச்சாய் வீதி மற்றும் சாவகச்சேரி - கச்சாய் வீதியில் இரண்டு மணித்தியாலங்கள் சிறீலங்கா படைநிலைகளின் மீது தாக்குதல் நடத்தியது.

சமர் வலயங்களுக்கு அருகில் வலுவெதிர்ப்பை வலுப்படுத்துவதற்காக இன்று பருத்தித்துறை மற்றும் கொடிகாமம் இடையேயான சாலையில் வரணி வட்டக்கூறிலிருந்த தனது முகாம்களில் ஒன்றை தரைப்படை புய்த்தது.  இன்று பிற்பகல் அங்கு சென்ற தமிழ்நெட்டின் யாழ்.செய்தியாளர், இங்கு படையினர் விட்டுச் சென்ற கட்டிட பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை கருக்காய் மக்கள் அகற்றி வருகின்றனர் என்றார்.

சாவகச்சேரிக்குத் தெற்கே ஏ9 ஒட்டுவெளிக்கு அப்பால் யாரையும் செல்ல சிறிலங்கா தரைப்படை அனுமதிக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கம் இன்று சாவகச்சேரியை கடக்க அனுமதிக்கப்படவில்லை.

சண்டையிலிருந்து தப்பிக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏ9 மற்றும் மிருசுவிலுக்கும் பளைக்கும் இடைப்பட்ட உட்பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களுக்குள் நுழைந்துள்ளனர்.

நேற்று புலிகளால் கைப்பற்றப்பட்ட கரையோரப் புலமானது சிறிலங்கா வான்படையின் கிபீர் தாரை வானூர்திகளால் குண்டுவீசப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் சுடுகலப் படகுகளால் கடலிலிருந்து குத்தப்படுவதாக இன்று சமர் வலயத்திலிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்தனர்.

குண்டுவீச்சுகள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூன்று பொதுமக்களும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் செம்பியன்பற்றில் புதைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஒருவர் உடுத்துறையைச் சேர்ந்த சம்மட்டியான வைரவப்பிள்ளை பொன்னுச்சாமி வயது 40, என்றும் மற்றவர் தாளையடியைச் சேர்ந்த திருமதி மரியதாஸ் என்றும் அடையாளம் காணப்பட்டார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

நாகர்கோவில் சிறிலங்கா தரைப்படை பல்லத்தை எதிர்த்தது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4893
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 12:32
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
28/08/2022

யாழ்ப்பாணம் கிழக்கு கடற்கரையில் உள்ள நாகர்கோவிலில் உள்ள சிறிலங்கா படைமுகாம் மீது விடுதலைப் புலிகள் நேற்று இரவு சேணேவி மற்றும் கணையெக்கி கொண்டு பல்லம் நடத்தினர். இரவு 8 மணியளவில் தொடங்கிய இந்த எறிகணைவீச்சு இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

நாகர்கோவில் முகாமின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டிற்கு முன்னால் விடுதலைப் புலிகளின் நிலைகளோடு சிறிலங்கா வான்படை பொருதிய போது இன்று அதிகாலை 1 மணி வரை சிறிலங்கா தரைப்படையும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. புலிகள் தாக்கியதில் சுமார் பத்து படையினர் காயமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், உயிரிழப்புகள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பருத்தித்துறையில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

குடத்தனையில் இருந்து வரணி ஊடாக கொடிகாமம் - பருத்தித்துறை வீதியை சந்திக்கும் சந்தியில் உள்ள மற்றுமொரு சிறிய முகாமை தரைப்படை காலி செய்தது. இந்தச் சந்திப்பிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கருக்காயில் உள்ள முகாமிலிருந்து நேற்று சிறிலங்கா தரைபப்டை வெளியேறியது.

இதற்கிடையில், சண்டை மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் நாகர்கோவிலில் இருந்து தொடர்ந்து வெளியேறினர். தாளையடி மற்றும் மருதங்கேணி வட்டக்கூறுகளில் படுகாயமடைந்த பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவின் ஊர்திகள் மூலம் வன்னிக்கு பண்டுவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக போர் வலயங்களிலிருந்து வெளியேறிய ஏனையோர் தெரிவித்தனர்.

 

 


 

 

வானொலி புலிகளின் களச்சாவுகளை பட்டியலிட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4894
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:24
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/08/2022

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இரண்டு கரும்புலிகளும் அந்த அமைப்பின் 'எல்லைப்படை' உறுப்பினர் ஒருவருமாக மொத்தம் முப்பத்தொரு புலிகள் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் இன்று நண்பகல் தனது சிறப்பு ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாழ்ப்பாணத் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட புலிகளின் மொத்த எண்ணிக்கை அறுபது ஆகும்.

மார்ச் 26 முதல் யாழ்ப்பாணத்தில் நடந்த சண்டையில் இருபத்தியொன்பது பேர் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் ஏற்கனவே அறிவித்திருந்தது. குடாநாட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு வட்டக்கூறுகளில் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் சமீபத்திய கட்டத்தில் கொல்லப்பட்ட முப்பத்தொரு போராளிகளில்:

யாழ்ப்பாணம் - 12
கிளிநொச்சி - 4
மன்னார் - 6
மட்டக்களப்பு - 1
திருகோணமலை - 2
வவுனியா - 1
முல்லைத்தீவு - 2
மல்லாவி - 1
இரணைதீவு - 1
நெடுங்கேணி - 1

இன்று புலிகளின் குரலால் பட்டியலிடப்பட்ட களச்சாவடைந்த 13 புலிகள் புலிகளின் மகளிர் சண்டைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர், வானொலியின் கூற்றுப்படி, கரும்புலி ஆவார். முன்னம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாழ்ப்பாணத்தில் களச்சாவு என புலிகளின் குரலால் பட்டியலிடப்பட்ட 29 புலிகளில் ஏழு பேர்கூட மகளீர் சண்டைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

 


 

 

புலிகளும் சிறிலங்கா தரைப்படையும் மேலதிகத்திற்காக உகளுகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4896
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:04
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28/08/2022

இந்தக் கிழமை குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரத்தில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை விடுதலைப்புலிகள் திடமாக்கினர். ஓயாத அலைகள்-03 வலிதாக்குதலுக்கு எதிராக தென்மராட்சியில் அதன் வலுவெதிர்ப்பை வலுப்படுத்த சிறிலங்கா தரைப்படை மாதகல் மற்றும் வரணியில் இருந்து படைகளை மீளக் களமிறக்கியது. இதற்கிடையில், வடமராட்சி கடற்பகுதியில் மீண்டும் மீன்பிடிக்க சிறிலங்கா தரைப்படை தடை விதித்துள்ளது.

மீன்பிடித் தடையால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் பல கடற்கரையோர ஊர்களில் - பருத்தித்துறை அருகே கற்கோவளம் முதல் தொண்டைமானாறு வரை- உள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் சமூகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று மாலை தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) இரவு முதல் உக்கிரமான சமர் நடந்த குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டம் மற்றும் வடமராட்சி கிழக்கின் சில பகுதிகளில் பொதுவாக இன்று பிற்பகலில் சண்டையின் தீவிரம் தணிந்தது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குக் கரையோரத்தில் உள்ள மாதகலில் சிறிலங்கா தரைப்படை தனது நிலைகளில் ஒரு பகுதியை இன்று புய்த்தியது. பழைய கரையோர ஊரான மாதகல் 1992 இல் படையினரால் கைப்பற்றப்பட்டது ஆகும். அது பலாலி - காங்கேசன்துறை - கூட்டுப்படைத்தளத்தின் நீட்சியாக இருந்து வருகிறது.

பொதுமக்கள், சிறிலங்கா தரைப்படையினரால் தமது பயன்பாட்டிற்கென உடைமைகள் எடுத்துச் செல்லப்பட்ட மாதகல் தளத்தின் வெளியேற்றப்பட்ட பகுதிக்குள் தமது பொருட்களைத் தேடிச் சென்றதாக தமிழ்நெட்டின் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கிலிருந்து உறுதிப்படுத்தப்படாத அறிக்கையின்படி, நேற்றிரவு விடுதலைப் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஏ9 வீதியில் தாளையடியிலிருந்து புதுக்காடு சந்தி வரையிலான வீதியில் வைரவர் கோவிலடியில் இருந்த சிறிலங்கா தரைப்படையானது விடங்குதீவுக்கு பின்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாளையடி-புதுக்காடு வீதியில் வைரவர் கோவிலடியிலிருந்து மேலும் மேற்கே விடங்குதீவு உள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

கடற்புலிகளின் கேந்திரங்கள் சிறிலங்கா தரைப்படையினை கவலை கொள்ளவைக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4897
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:22
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 
28/08/2022

ஆனையிறவுக்கான படையினரின் தற்போதைய வழங்கல் பாதையை துண்டிக்கும் நோக்கில் கடற்புலிகள் மேற்கொண்டு வரும் ஈரூடக நடவடிக்கைகள் குறித்த அச்சங்களுக்கு நடுவணில் சிறிலங்கா தரைப்படை யாழ்ப்பாணக் களப்பில் மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறைக்கு இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தத் தடையானது யாழ்ப்பாணத்தின் கரையோரப் புறநகர்களிலுள்ள மீனவர்கள் களப்பில் போட்ட வலைகளை நாசமாக்கிவிடும் என்று உள்ளூர் மீனவர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

வடமராட்சியிலும் நேற்று முதல் மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்புலிகள் யாழ்ப்பாணக் கடலிலும் களப்பிலும் தங்கள் நடமாட்டத்தைத் திட்டமிடுவதற்காக மீனவர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதாக சிறிலங்கா தரைப்படையும் சிறிலங்கா கடற்படையும் நம்புகிறது. ஆனால் பல மீனவர் சங்கங்களின் செய்தி தொடர்பாளர்கள் இதை மறுக்கின்றனர்.

புலிகளின் அண்மைய தாக்குதலின் முக்கிய மடுத்தல் கிழக்குக் கடற்பரப்பில் இருந்ததாகவும், புலிகளின் படையினரையும் ஆய்தங்களையும் சிறிலங்கா தரைப்படை தானைவைப்புகளுக்கு அருகில் தரையிறக்குவதில் கடற்புலிகள் முக்கிய பங்கு வகித்ததாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

வடமராட்சி வட்டக்கூறிலும் யாழ்ப்பாணக் களப்பிலும் கடற்புலிகளின் அதிகளவான செயற்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்தச் சூழ்நிலையில் மீன்பிடித்தலைத் தடுப்பது தவிர்க்க முடியாதது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் தற்போது சாவகச்சேரிக்குத் தெற்கே உள்ள கேரதீவு சந்தியிலிருந்து தனங்கிளப்புச் சந்தி வரையிலான வீதியின் இருபுறமும் சுமார் ஆறு கிலோமீற்றர் வரையிலான உவர்க்கத்தலையை வைத்துள்ளனர். (இந்தச் சாலை இச்சந்தியிலிருந்து வடக்கே திரும்பி சாவகச்சேரி நகருக்கும் மேற்கே தனங்கிளப்பு ஊரிற்கும் செல்கிறது.)

மூன்று மாதங்களுக்கும் மேலாக வான் மற்றும் சேணேவித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் படையினரால் புலிகளை இந்தப் பகுதியிலிருந்து அகற்ற முடியவில்லை. இந்த உவர்க்கத்தலையில் இயங்கும் விடுதலைப் புலிகளின் படையினர் ஊர்திகளையும் இயக்குகின்றனர்.

புலிகள் கேரதீவு - தனங்கிளப்பு கடற்கரையிலிருந்து குடாநாட்டிற்குள் எந்தவொரு பெரிய மடுத்தலையும் ஏவுவதைத் தடுப்பதற்கு யாழ்ப்பாணக் களப்பிலும் கடற்புலிகளின் வலுவை இல்லாமலாக்குவது இந்தத் தருணத்தில் முக்கியமானது என்று சிறிலங்கா தரைப்படை கூறுகிறது. 

சிறீலங்கா படைத் திட்டமிடலாளர்கள், கிளாலி அல்லது தென்மராட்சிக் கோட்டத்தின் கரையோரத்தில் யாழ்ப்பாணக் களப்புடன் கூடிய தந்திரசார் பொருத்தமான இடமொன்றில் ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் அடுத்த கட்டமாக கடற்புலிகள் பாரிய ஈரூடக வலிதாக்குதலைத் தொடங்கலாம் என்றும் ஐயுறவடைகின்றனர்.

இவ்வாறான ஒரு வலிதாக்குதலின் வெற்றியானது ஆனையிறவு தளத்திற்கான தற்போதைய வழங்கல் பாதையை துண்டிக்கக்கூடும், இது பளை உட்பகுதியிலும் கரையோரத்திலும், புலோப்பளையிலிருந்து கடற்கரை சிற்றூரான கேற்பளி, அல்லிப்பளை, பின்னர் மிருசுவிலுக்கு அருகில் ஏ9 சந்தியிலுள்ள ஆசைப்பிள்ளை வரை, நீண்ட கடினமான மாற்றுப்பாதையை எடுக்கும். 

இது யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் தானைவைப்பிற்கு ஒரு பெரிய படையேற்பாடுசார் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று சிறிலங்கா தரைப்படை உணர்கிறது.

 

 


 

 

பளை நோயாளி காயங்களுக்கு உள்ளானார்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4898
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:23
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/08/2022

படுகாயமடைந்த பொதுமக்கள் இன்று பளையிலிருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கோட்டத்தின் பல வட்டக்கூறுகளில் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கடந்த மார்ச் 28ஆம் திகதி இராசலிங்கம் சிறிரஞ்சினி ராஜேஸ்வரி என்ற பெண் பலத்த காயங்களுடன் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வார தொடக்கத்தில் நடந்த குறுக்குச்சூட்டில் காயமடைந்த மேலும் ஐந்து பொதுமக்கள் பளை மருத்துவமனையில் அவருக்கு அவசர பண்டுவம் அளிக்கப்பட்டது. அவரது இடுப்புப் பகுதி துண்டுச்சிதறலால் வலுத்த சேதமடைந்துள்ளது.

நேற்று பளை வைத்தியசாலை அதிகாரிகளின் அவசர முறையீட்டை அடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும் கத்தோலிக்க தேவாலயமும், இன்று கர்ப்பிணிப் பெண்ணுடன் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்கு சிறிலங்கா தரைப்படையுடன் ஏற்பாடுகளைச் செய்திருந்தன. காயமடைந்தவர்களில் ஒருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பளையிலிருந்து உள்பகுதி மற்றும் யாழ்ப்பாணக் களப்பு வழியாக மிருசுவிலுக்குப் பேருந்து மூலம் ஆறு நோயாளிகளையும் சிறிலங்கா தரைப்படை ஏற்றிச் சென்றது. அவர்கள் மிருசுவிலில் உள்ள சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறிரஞ்சினி ராஜேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது பளைக்கு கொண்டு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக அவரது சடலத்தை இறுதிக் கிரியைக்காக எடுத்துச் செல்வதில் அவரது நெருங்கிய உறவினர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதில் சிக்கல் இருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பளையில் இருந்து இன்று அழைத்து வரப்பட்ட காயமடைந்த ஏனைய பொதுமக்கள் –

செல்லையா நந்தகுமார் வயது 36, புலோப்பளை
பொன்னையா லோகராஜா, 38, வண்ணான்கேணி
அப்பாக்குட்டி ரேவதி, 28 பாளை
செல்லத்துரை கமலாஜினி, 20, பளை

 

 


 

 

யாழ்ப்பாணப் போர் வலயங்களில் அகதிகள் நெருக்கடி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4900
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:38
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/08/2022

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பளை வட்டக்கூறில் இடம்பெயர்ந்துள்ள 7500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசிக்கஞ்சி வேகமாக தீர்ந்து வருவதாக உள்ளுர் அலுவலர்கள் மற்றும் கத்தோலிக்கத் தேவாலய வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளனர். ஆனையிறவு தானைவைப்பிற்கு வடக்கே பளை மற்றும் மாசரில் எறிகணை வீச்சிலிலிருந்து தப்பியோடிய மக்களுக்கு மார்ச் 27 திங்கட்கிழமை முதல் ஏ9 நெடுஞ்சாலையில் பளை மற்றும் எழுதுமட்டுவாள் இடையே உள்ள உட்புறத்தில் நடந்த சண்டையின் காரணமாக அனைத்து பொதுமக்கள் போக்குவரத்தும் இடைத்தங்கியுள்ளதால் உணவளிக்க நிதியோ பொருட்களோ இல்லை என்று அவர்கள் கூறினர். 

யாழ்ப்பாண நகரத்தை தளமாகக் கொண்ட அனைத்துலக மற்றும் உள்ளூர் மனிதநேய முகவரகங்களால் இந்த நெருக்கடிக்கு இதுவரை மறுமொழியளிக்க முடியவில்லை என்று அலுவலர்கள் மற்றும் தேவாலய ஊழியர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், சண்டை வெடித்த போது போர் வலயத்திலிருந்து யாழ்ப்பாண நகரத்திற்கு வந்த சுமார் 109 பேருக்கு உணவு அல்லாத நிவாரணப் பொருட்களை வழங்கியது. நிலைமையை மதிப்பிடுவதற்காக செஞ்சிலுவைச் சங்கம் இன்று மிருசுவில் வரை சென்றது.

இதற்கிடையில், மார்ச் 28 செவ்வாய்கிழமை முதல் யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்திலிருந்து போர் வலயத்தை விட்டு வெளியேறிய இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆனையிறவு களப்பின் தென்கிழக்கில் உள்ள கரையோர ஊரான சுண்டிக்குளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இக்குடும்பங்கள் செம்பியன்பற்று, கட்டைக்காடு, மருதங்கேணி ஆகிய பரப்புகளைச் சேர்ந்த குடும்பங்களாகும். இந்த ஊரில் தற்காலிக தங்குமிடங்கள் எதுவும் கிடைக்காததால் பெரும்பாலான குடும்பங்கள் திறந்தவெளியில் வசித்து வருவதாக உதவி முகவரக வட்டாரம் இன்று தெரிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கின் தெற்கு வட்டக்கூறுகளில் போர் வலயத்திற்கு அருகிலுள்ள யாழ்ப்பாணத்தின் படையக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத பொதுமக்கள், தாளையடியில் உள்ள சிறிலங்கா படைத்துறை கூட்டுப்படைத்தளம் வீழ்ச்சியடைந்த பின்னர் வத்திராயன், ஆழியவளை, வெற்றிலைக்கேணி மற்றும் சுண்டிக்குளம் வழியாக முல்லைத்தீவுக்குப் பழைய கரையோரப் பாதையில் செல்கின்றனர். 

செம்பியன்பற்று மற்றும் வத்திராயன் ஆகிய சிற்றூர்கள் முறையே அதன் வடக்கிலும் தெற்கிலும் தாளையடியுடன் இணைந்துள்ளன. தாளையடிக்குத் தெற்கே உள்ள கரையோர ஊர்களுக்கான ஏ9 (கண்டி வீதி) க்கு குறுகிய அணுகலானது மருதங்கேணி சந்தியில் உள்ள பழைய கரையோர வீதியிலிருந்து முதன்மை நெடுஞ்சாலையில் புதுக்காட்டுச் சந்தி வரை மேற்காகப் பிரியும் வீதியாகும்.

மருதங்கேணி சந்தியும் ஊரும் தாளையடியிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் பிந்தைய ஊரிலிருந்து ஏ9 செல்லும் சாலையில் உள்ளது. தாளையடியில் உள்ள சிறிலங்கா தரைப்படை தளத்தின் முன்னரங்க வலுவெதிர்ப்பு சுற்றுவட்டாரங்கள் செம்பியன்பற்று மற்றும் வத்திராயனுக்கும் பரவியது. தளத்தின் ஒரு பிரிவுத்தளம் மருதங்கேணி சந்திப்பில் இருந்தது.

கடந்த வாரம் தாளையடித் தளம் மற்றும் மாமுனை முகாம் வீழ்ச்சியுடன் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கும் யாழ்ப்பாணத்தின் தென்கிழக்குக் கரையோரத்திற்கும் இடையில் குடாரப்பு வரையிலான போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் பழைய கரையோர வீதியில் படைநிலைகள் எதுவும் இல்லை. இதனால்தான் இந்தப் புலத்தில் உள்ள சில பொதுமக்கள் வன்னிக்குத் தஞ்சத்திற்காகவும் பண்டுவத்திற்காகவும் தெற்கே செல்கின்றனர் என யாழ்ப்பாணத்தில் உள்ள உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் போர் வலயங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஐநூறு பேர் இருப்பதாக அலுவல்கள் தெரிவித்தனர். அவர்கள் இப்போது நகரத்தில் உள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 


 

 

பொதுமக்கள் போர் வலத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4901
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 11:11
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29/08/2022

யாழ்ப்பாணம் ஆனையிறவு தானைவைப்பிற்கு அருகில் உள்ள பச்சிலைப்பள்ளி கோட்ட மக்களை நாளை பிற்பகலுக்குள் தமது ஊர்களை விட்டு வெளியேறி கொடிகாமத்தில் ஓம்பலான இடத்திற்குச் செல்லுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாளை மதியம் பச்சிலைப்பள்ளியிலிருந்து மக்கள் வெளியே செல்வதற்கு வசதியாக காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூட்டை நிறுத்திவைத்திருப்போம் என்று புலிகள் தெரிவித்தனர்.

இன்று மாலை புலிகளின் குரல் வானொலியில் புலிகளின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் சண்டை உருவாக்கங்கள் மேலும் யாழ்ப்பாணத்திற்குள் தள்ளுவதற்கு இயல்பானநிலையில் இருப்பதாக புலிகள் தெரிவித்தனர்.

பச்சிலைப்பள்ளி மக்களை, புலோப்பளை, கிளாலி, கச்சாய் வழியாக கொடிகாமம் செல்லும் மாற்றுப்பாதையில் செல்லுமாறும் ஏ9 வழியை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

சிறிலங்கா தரைப்படையின் தளங்கள், முகாம்கள் மற்றும் சேணேவி நிலைகளிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவு நகர்ந்து செல்லுமாறும் அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

நாளை பச்சிலைப்பள்ளியில் இருந்து கொடிகாமம் வரை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு உதவுமாறு புலிகள் மனிதநேய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளிக் கோட்டமானது புலோப்பளை கிழக்கு, புலோப்பளை மேற்கு, அல்லிப்பளை, வண்ணான்கேணி, முல்லையடி, தம்பகாமம், சோரன்பற்று, மாசார் மற்றும் தன்மாங்கேணி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.

மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு இளம் மீனவர்களான பரஞ்சோதி 21, மற்றும் அசோக் 25 ஆகியோர் நேற்று மாலை 4 மணியளவில் கடலுக்குச் செல்லும்போது செம்பியன்பற்று கடற்கரையில் சிறிலங்கா வான்படை குண்டுவீசித் தாக்கியதில் துண்டுகளாக வெடித்துச் சிதறியதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது. 

ஆனையிறவுத் தளம் மற்றும் இயக்கச்சித் தளத்தின் மீது நேற்றிரவு புலிகள் தாக்குதல் நடத்தியதாக வானொலி தெரிவித்துள்ளது. புலிகளின் குரலின்படி நேற்று இந்த வட்டக்கூறில் சிறிலங்கா தரைப்படையின் இழுபொறி ஒன்றும் அவர்களால் தாக்கப்பட்டது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சுடுகல நிலைகள் பளை மருத்துவமனையை அச்சுறுத்துகின்றன

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4904
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 7:50
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30
/08/2022

பளை மருத்துவமனைக்கு வந்து பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையை இனி நடத்த முடியாது என பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரி மருத்துவர் செந்தில் நந்தன் அம்பிகைபாகன் இன்று தெரிவித்தார். மருத்துவமனையின் சுற்றாடல் சமர் வலயமாக மாறியுள்ளதால், அந்த மருத்துவமனையை உடனடியாக மூட வேண்டும் அல்லது நடுநிலையான மனிதநேய அமைப்பினால் பொறுப்பேற்று நடத்தப்பட வேண்டும் என்றார். இதேவேளை, நேற்று பளை மருத்துவமனையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளர்கள், சிறிலங்கா தரைப்படை பல சேணேவி நிலைகளை மருத்துவமனையின் சுற்றாடல்களுக்கு நகர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பண்டுவம் பெற வேண்டியவர்கள் அச்சத்தில் முதலுதவி மற்றும் மருந்தினை பெற்றுவிட்டுச் செல்கின்றனர் என மருத்துவர் அம்பிகைபாகன் தெரிவித்தார்.

பளை மருத்துவமனையில் வைத்தியரின் கூற்றுப்படி உணவு மற்றும் மருந்துகளின் கையிருப்புகளும் வேகமாக தீர்ந்து வருகின்றன. அவர் முறையிட்டதற்கு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த மறுமொழியும் வரவில்லை என்றார். மருத்துவர் அம்பிகைபாகனின் வேண்டுகோளை பரிசீலித்து வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அலுவலர்கள் தெரிவித்தனர்.

அனைத்துலக மனிதநேய அமைப்புகள் போர் வலயத்திற்கு அருகில் செல்வது தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்படுவதால், இந்த நேரத்தில் நிலைமையைக் கையாள்வதற்கான எந்தவொரு ஒருங்கிணைந்த நடவடிக்கையும் சாத்தியமில்லை என்று அவர்களில் ஒருவர் மேலும் கூறினார்.

அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நேற்று சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

 

 


 

 

முதன்மை வழங்கல் பாதைக்கான சமர்கள் வஞ்சினம் கொள்கின்ற

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4905
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:28
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/08/2022

ஆனையிறவு தானைவைப்பிற்கு வடக்கே ஏ9 நெடுஞ்சாலையில் புலிப் படையினர் நேற்றைய நாள் சிறிலங்கா தரைப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையை முறியடித்து, தற்போது தமது கட்டுப்பாட்டில் இருந்த பாதையை மீளக் கைப்பற்றியதாக புலிகளின் குரல் இன்று காலை செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட சிறிலங்கா தரைப்படையினர் சண்டையில் கொல்லப்பட்டதாகவும், சமர் நடந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் ஏந்தனங்களை புலிகள் மீட்டுள்ளதாகவும் வானொலி கூறியது.

புலிகளின் குரலின்படி, சிறிலங்கா தரைப்படை நேற்று காலை 11 மணியளவில் இந்த நடவடிக்கையை ஆரம்பித்தது.

இதேவேளை, இன்று அதிகாலை 2 மணி முதல் புலிகள் நிலைகொண்டுள்ள எழுதுமட்டுவாள் மற்றும் பளைக்கு இடையில் ஏ9 ஐ ஒட்டியுள்ள ஊர்களான இத்தாவில் மற்றும் இந்திரபுரம் ஆகிய இரு ஊர்களில் கடும் சண்டை இடம்பெற்றதாக மிருசுவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா தரைப்படை மார்ச் 29 முதல் வாயில் தானைவைப்பிற்கான முதன்மை வழங்கல் பாதையின் இந்தத் துண்டை மீண்டும் கைப்பற்ற பல முயற்சிகளை மேற்கொண்டது. மார்ச் 27 திங்கட்கிழமையன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கு வட்டக்கூறுக்குள் புலிப் படையினர் தற்போதைய வலிதாக்குதலின் முதல் அலையில் தாங்களாகவே இங்கு அரணத்தில் படைமுகாம்களை நிறுவியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை, மார்ச் 31, அதிசிறப்பு வான்-நடமாட்ட படைத்தொகுதி (Elite Air-mobile Brigade) மற்றும் சிலோன் இலகு காலாட்படையின் ('சிறிலங்கா இலகு காலாட்படை'யின் பழைய பெயர்) ஒரு சமரணி ஏ9 இல் இத்தாவில் வட்டக்கூறில் புலிகளுடன் சமர் புரிந்தது. இந்தச் சண்டை நேற்றும், அதிகாலையிலும் தொடர்ந்ததாக இன்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளால் கைக்கொள்ளப்பட்டுள்ள ஆனையிறவு தானைவைப்பிற்கான முதன்மை வழங்கல் பாதையின் துண்டை மீளக் கைப்பற்றுவதற்கு 'வலி சக்கர' என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட நடவடிக்கையை சிறிலங்கா தரைப்படை ஆரம்பித்துள்ளதாக அரச நிறுவனமான 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' இன்று பிற்பகல் செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. 

விடுதலைப் புலிகள் இன்னமும் முதன்மை வழங்கல் பாதையில் நிற்பதாக போர் வலயமூடாக வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

 


 

 

போர் வலய அகதிகள் வந்துசேர்ந்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4906
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:02
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/08/2022

யாழ்ப்பாணம் பளை மற்றும் பச்சிலைப்பள்ளி பகுதிகளில் உள்ள ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று காலை தாமதமாக கிளாலியை வந்தடைந்ததாக வடக்கிலுள்ள கத்தோலிக்க தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலான பொதுமக்கள் கிளாலியில் சிறிலங்கா தரைப்படையால் தடுக்கப்பட்டனர். கிளாலியைத் தாண்டி மிருசுவிலுக்குச் செல்ல நண்பகல் வரை சுமார் 200 குடும்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இன்று கிளாலி மற்றும் மிருசுவிலில் இருந்த தமிழ்நெற் செய்தியாளர் தெரிவிக்கையில், கத்தோலிக்க தேவாலயமே போர் வலயத்திலிருந்து வரும் மக்களை ஆற்றும் ஒரே அமைப்பாகும் என்றார்.

பளை மற்றும் பச்சிலைப்பள்ளியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் கிளாலியில் சிறிலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகளை அடுத்து, யாழ் மறைமாவட்டத்தின் மதகுரு நாயகம் வண. ஜே.பி.இ.செல்வராஜா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்கா பாதுகாப்புப் படைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, கிளாலியில் இருந்து அனைவரையும் மிருசுவிலுக்கு அழைத்து வர அவரிடம் அனுமதி பெற்றார்.

மிருசுவிலுக்குச் செல்ல விடாமல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பொதுமக்களை விடுவிப்பதற்காக மதகுரு நாயகம் பாதுகாப்புப் படைக் கட்டளையாளரின் அனுமதியுடன் கிலாலிக்கு விரைந்த போது பிற்பகல் 4.15 மணியளவில் தாமதமாகிவிட்டதாக தமிழ்நெட்டின் யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஏழு பாதிரியார்களைத் தவிர, அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால், அகதிகளின் நிலை மிகவும் துயரமாக இருப்பதாக தமிழ்நெட் செய்தியாளர் தெரிவித்தார். போரில் காயமடைந்த பலரும் வெளியேறியதால் அவர்களின் உடையில் இரத்தமும் சேறும் தெறிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, சாவகச்சேரி கோட்டச் செயலாளர் திரு.எஸ் சுந்தரம்பிள்ளை போர் வலயத்திலிருந்து மிருசுவிலுக்கு வரும் அகதிகளுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கு முதலில் யாழ்ப்பாண கச்சேரியில் அனுமதி பெற வேண்டும் என்ற காரணத்தினால் சமைத்த உணவை வழங்க மறுத்துவிட்டார்.

யாழ்ப்பாணம் கத்தோலிக்க தேவாலய வட்டாரங்கள் தெரிவிக்கையில், அகதிகள் நெருக்கடி தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமைத்த உணவை வழங்க மறுத்த கோட்டச் செயலாளராலும், யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துலக உதவி நிறுவனங்களால் மிருசுவில் பகுதிக்குச் செல்ல இயலாமை அல்லது தயக்கம் காட்டுவதாலும் நிலைமை நாளை மேலும் மோசமடையலாம் என தமிழ்நெற் செய்தியாளர் தெரிவித்தார்.

 

 


 

 

முதன்மை வழங்கல் பாதைக்கான வலிதாக்குதல் முறியடிக்கப்பட்டது - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4907
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 10:28
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30/08/2022

சாவகச்சேரிக்கு தென்கிழக்கே 14.5 கிலோமீற்றர் தொலைவில் முகமாலையின் ஏ9 வீதியில் தாக்குதல் நடத்தி தமது வலுவெதிர்ப்பை பரம்புவதற்காக இன்று பிற்பகல் சிறிலங்கா தரைப்படை மேற்கொண்ட இருமுனை நடவடிக்கையை தாம் முறியடித்ததாக விடுதலைப் புலிகள் இன்று மாலை தெரிவித்தனர். தங்களின் படையினர் சிறிலங்கா தரைப்படை மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு முக்கிய சமர் தகரி அழிக்கப்பட்டதுடன் மற்றொன்று சேதமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். சமரில் தரைப்படையிடமிருந்து .50 கனவகை இயந்திர சுடுகலன் பொருத்தப்பட்ட தென்னாப்பிரிக்காவின் 'பஃவல்' ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் முகமாலைக்கு அண்மையாக எழுந்த கடுமையான சண்டையில் பல சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் தனது இரவு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏ9 நெடுஞ்சாலையின் எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடையிலான பகுதியை மீளக் கைப்பற்றுவதற்கு தரைப்படை மேற்கொண்டுள்ள மூன்றாவது நடவடிக்கை இதுவாகும் என வானொலி மேலும் தெரிவித்துள்ளது. முகமாலை என்ற ஊரானது ஏ9 நெடுஞ்சாலையில் பளையின் திசையில் எழுதுமட்டுவாளிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்திகள் சிறீலங்கா தரைப்படையினரின் வலிதாக்குதலின் போது பொதுப்பகுதியை தாக்கியதாக முகமாலைக்கு அண்டையிலிருந்து தப்பிச் சென்ற பொதுமக்கள் இன்று தெரிவித்தனர். முகமாலை மற்றும் அருகிலுள்ள சிற்றூர்களில் கனவகை ஆயுதம் தரித்த புலிகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏ9 ஐ மீளக் கைப்பற்றுவதற்காக தரைப்படை 'வலிசக்கர' என்ற குறியீட்டுப்பெயர் சூட்டப்பட்ட நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவின் அரச வானொலி நிலையம் இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஆனையிறவு ஊடாக வவுனியாவிற்கு தென்கிழக்கே செல்லும் ஏ9 நெடுஞ்சாலையே (கண்டி வீதி) இப்போது குடாநாட்டின் நுழைவாயில் தானைவைப்பிற்கான ஒரே சாத்தியமான முதன்மை வழங்கல் பாதையாகும்.

கடந்த வாரம் முதல் ஆனையிறவு தளத்திற்கு மாற்று வழங்கல் பாதையாக சிறிலங்கா தரைப்படை பயன்படுத்திய ஏ9 இன் மேற்கே உள்ள உட்புற வீதி அதிக போக்குவரத்துக்கு ஏற்றதல்லதோடு நெடுஞ்சாலைக்கும் யாழ்ப்பாணக் களப்பிற்கும் இடையிலான நிலப்பரப்பை அணுகக்கூடிய விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கும் புலப்பட்டுள்ளது. 

முகமாலைக்கும் இத்தாவிலுக்கும் இடையில் புலிகள் வைத்திருக்கும் ஏ9இன் துண்டானது ஆனையிறவு தானைவைப்பின் முதன்மை வழங்கல் பாதையில் உடைப்பு மட்டுமன்றி குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரம் மற்றும் உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் புலிகளை கிளாலி மற்றும் அங்கிருந்து சாவகச்சேரி வரை செல்லும் புலத்துக்குள் செல்ல உதவும் ஒரு திறவலாக ஆனையிறவுத் தளத்திற்கான தற்போதைய வழங்கல் பாதை உள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணியளவில் தனங்கிளப்பு படைமுகாம் மீது புலிகள் சேணேவி மற்றும் கணையெக்கிகளால் கனதியான பல்லத்தை ஏவியதாக தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 3ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா தரைப்படை மீண்டும் முகமாலை செல்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4909
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:06
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 1
/09/2022

யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் தானைவைப்பிற்கான முதன்மை வழங்கல் பாதையில் இன்று காலை சிறிலங்கா தரைப்படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஏ9 நெடுஞ்சாலை துண்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் கடுமையான சண்டை வெடித்தது.

முகமாலைக்கான சமர் இன்று பிற்பகல் எழுதுமட்டுவாளுக்குத் தெற்கே ஏ9 இல் அரணத்தில் படைமுகாம்களை நிறுவியுள்ள பாரியதாக வலுவூட்டப்பட்ட சிறிலங்கா தரைப்படைப் பிரிவுகளுக்கும் விடுதலைப்புலிகளின் படையினருக்கும் இடையில் மீண்டும் வஞ்சினம் கொண்டது.

இதற்கிடையில், சிறிலங்கா தரைப்படையானது வடமேற்கு யாழ்ப்பாணத்தின் வலிகாமக் கோட்டத்திலிருந்து அதிகமான படையினரை புய்த்தி தெற்கு வட்டக்கூறில் தனது நிலைகளை வலுப்படுத்தியது, அங்கு ஆனையிறவுத் தளத்திற்கான ஒரே ஏலுமான வழங்கல் பாதையைத் துண்டிக்கவும், மேலும் நிலத்தைக் கைப்பற்றவும் புலிகள் அதிக படையினரையும் படைக்கலன்களையும் குவித்து வருகின்றனர்.

சுழிபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்த படைமுகாம் நேற்று புய்க்கப்பட்டது. சங்கானை மற்றும் வட்டுக்கோட்டையில் உள்ள சிறிலங்கா தரைப்படை முகாம்களிலிருந்தும் படையினர் போர்முனைக்கு மாற்றப்பட்டனர். கொடிகாமம் வீதியில் வரணிக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான அனைத்துப் படை நிலைகளும் புய்க்கப்பட்டுள்ளன.

நாகர்கோவிலிலுள்ள தமது தளத்திலிருந்து புலிகளின் பிடியிலிருந்த கரையை நோக்கி முன்னகரும் தரைப்படையின் முயற்சி வெற்றியளிக்கவில்லை என தமிழ்நெட்டின் வடமராட்சி செய்தியாளர் தெரிவித்தார். நாகர்கோவிலுக்குத் தெற்கேயுள்ள பரப்பில் கிபிர் தாரை வானூர்திகள் வான்குண்டுகளை வீசியதாக அவர் கூறினார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் இன்று 15.30 ஊடக அறிக்கையில் முகமாலையில் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டதாகவும் நான்கு அதிகாரிகள் மற்றும் 72 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏ9 இல் நேற்றைய சண்டை பற்றிய பாதுகாப்பு அமைச்சின் ஊடக வெளியீடு பின்வருமாறு -

"ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 11 மணியளவில் கொடிகாமம் மற்றும் பளைக்கு இடைப்பட்ட முகமாலை பரப்பில் பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் படையினர் நடவடிக்கையை மேற்கொண்டனர். படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளதோடு சுமார் 75 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளதாகவும் நம்பப்படுகிறது. பயங்கரவாதிகள் கனமான சேணேவிகளால் அவ்விடத்தோடு மிண்டினர். மாலை 6.30 மணியளவில் உள்ளே சிக்கியிருந்த பயங்கரவாதிகள், சுற்றிவளைப்பில் சிக்கிய பயங்கரவாதிகளையும், உயிரிழந்தவர்களையும் வெளியே அனுப்புவதற்காக, சுற்றிவளைப்பை உடைக்க எதிர்த்தாக்குதலை தொடுத்தனர்."

"பயங்கரவாதிகளின் உந்துகணை மற்றும் சேணேவித் தாக்குதல் காரணமாக இரண்டு கவசத் தகரிகள் சேதமடைந்தன. சகதியில் சிக்கிக் கொண்ட ஒரு தகரியை சொந்தப் படையினரே அழித்தனர். கண்காணிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் தொடர்பாடலானது பகலில் 25 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. 04 வீரர்கள் செயலில் கொல்லப்பட்டனர். 02 அதிகாரிகள் மற்றும் 35 படையினர் காயமடைந்துள்ளனர். 02 அதிகாரிகள் மற்றும் 37 படையினர் சிறு காயங்களுக்கு உள்ளாகி பலாலி படைய மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவருகின்றனர்."

 

 


 

 

சிறிலங்கா தரைப்படையின் கவச மடுத்தல் முறியடிக்கப்பட்டது - விடுதலைப் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4910
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:08
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 1/09/2022

முகமாலையில் நேற்று இடம்பெற்ற கடுமையான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளால் லண்டன் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டது. 2 தகரிகளை அழித்ததாகவும், மேலும் ஐந்தை சேதப்படுத்தியதாகவும் புலிகள் தெரிவித்தனர்.

கூற்றுரையின் முழு உரை பின்வருமாறு:

"யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சி வட்டக்கூறில் ஏ9 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை கைக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகளை வெளியேற்றுவதற்காக அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட வலிதாக்குதல் தாக்குதலானது நேற்றிரவு சிறிலங்கா படையினரிற்கு பாரிய உயிரிழப்புகள் மற்றும் கவசத்தின் அழிவோடு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. 

"ஆனையிறவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் முகமாலைப் பகுதியில் வெடித்த கடுமையான சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்காப் டையினர் கொல்லப்பட்டதோடு முந்நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நன்கு ஆயுதம்பூண்ட மற்றும் நன்கு அரணத்தில் படைமுகாம்களை நிறுவியுள்ள விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகள் ஆறு மணிநேரம் கடுமையாகப் பொருதி அரசாங்கப் படையினைரின் இருமுனை நடவடிக்கையை முறியடித்தனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சண்டையானது இரவு 9 மணியளவில் முடிவடைந்ததோடு இறந்த படைவீரர்கள், எரியும் தகரிகள் மற்றும் கைவிடப்பட்ட கணைகள் மற்றும் படைக்கலன்களுடன் ஒரு குப்பைக்கூளமான அடிச்சுவட்டை விட்டுச் சென்றது.

"வலிதாக்குதல் மடுத்தலை முன்னெடுத்த ஒரு கவசப் பிரிவானது கடுமையான பின்னடைவைச் சந்தித்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி வலுவெதிர்ப்புக் கோட்டிற்கு அருகே இரண்டு முதன்மை சமர் தகரிகள் எரிக்கப்பட்டதோடு மேலும் 5 தகரிகள் கடுமையாக சேதமடைந்தன. 50 கலிபர் கனவகை இயந்திர சுடுகலன்கள் பொருத்தப்பட்ட இரண்டு தென்னாப்பிரிக்க 'பஃவல்' கவசவூர்திகளையும் தமிழ்ப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். 25 துமுக்கிகள் மற்றும் 25 இறந்த படைவீரர்களின் சடலங்களையும் விடுதலைப் புலிப் போராளிகள் மீட்டுள்ளனர்.

"இரண்டு படைப்பிரிவுகளை வைத்துள்ள ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்திற்கான முதன்மை வழங்கல் பாதை துண்டிக்கப்பட்டதில் கடுமையான படையேற்பாட்டுச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சிறிலங்கா தரைப்படையானது கேந்திர நெடுஞ்சாலையில் உள்ள புலிகளின் வலுவெதிர்ப்பு நிலைகளை பரம்ப பல வீண் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையில், புலிகள் எழுதுமட்டுவாள் மற்றும் பளைக்கு இடைப்பட்ட பரப்புகளில் தமது கனமான ஆயுதம்பூண்ட அடிபாட்டுப் பிரிவுகளை நகர்த்தி, தமது வலுவெதிர்ப்பு நிலைகளை திடமாக்கி வருகிறனர். "

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.