Jump to content

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

spacer.png

எதிர்வரும்  பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு.

இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கிறார். 1983 செப்டெம்பரில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இரா. சம்பந்தன், அதன் பின்னர் 1989, மற்றும் 1994 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்த சட்டத்தரணி அருணாசலம் தங்கத்துரை, 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறும் போது அடையாளமறியா நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் குறிப்பிட்டிருந்தன. அருணாசலம் தங்கத்துரையின் படுகொலையின் பின், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1997ஆம் ஆண்டு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன்.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்று கூட அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். அண்மை ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன.

அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை அளவிடும் சுயாதீன இணையத்தளமான மந்த்ரி.எல்கே பங்களிப்பு அளவீடுகளின் படி சம்பந்தன் அவர்களை 225 உறுப்பினர்களில், 219வது இடத்தில் தரமிட்டுள்ளது. இந்த முறை சம்பந்தன் அவர்கள் வெறும் 3 முறையே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கொவிட்-19 அபாயம், அவரது வயது மூப்பு, உடல்நிலை என சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததற்கு பல நியாயங்களும், காரணகாரியங்களும் சொல்லப்படலாம். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற் கடமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளுதலாகும். அதற்காகத்தான் அவர்கள் மக்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். பாராளுமன்ற அமர்விலும், செயற்பாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதன் நோக்கமும், பயனும்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு சம்பளம், பலவகைமைப்பட்ட கொடுப்பனவுகள், தனிப்பட்ட ஊழியர்கள் சிலருக்கான சம்பளங்கள், ஒவ்வோர் அமர்விலும் கலந்துகொள்ள கொடுப்பனவு, குறைந்த விலையில் பாராளுமன்றத்தில் உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அளவு போதுமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பெறும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்ற பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக இரா. சம்பந்தன் அவர்களைப் போன்ற பழுத்த அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒருவேளை பலர் சொல்வது போல அவர் வயத மூப்பின் காரணமாக, அல்லது உடல்நிலையின் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையிலிருக்கிறார் என்றால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்பாவிட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று திருக்கோணமலையில் இன்னொரு இளம் அரசியல்வாதிக்கு வாய்ப்பளித்தலே உசிதமான காரியம்.

44 வயதில் பாராளுமன்றத்திற்கு வந்த இரா. சம்பந்தன், 89 வயதிலும், தன்னால் திருகோணமலை மக்களுக்கு களத்தில் நின்று முழுமையாகப் பணி செய்ய முடியாத நிலையிலும் கூட தனது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது நியாயமா என்ற கேள்வியை அவரும், அவரது ஆதரவாளர்களும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார். அரசியலிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் அவர் விருப்பத்தின் பாற்பட்டது. ஆனால், பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற முடியாத நிலையில்,  திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை தொடர்ந்து சந்தித்து தனது கடமைகளை ஆற்ற முடியாத நிலையில் அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு விடயமல்ல.

அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்கள் அல்ல. சம்பந்தன் அவர்கள் அரசியலில் தொடரும் வரைதான் மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படாது என்பது, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, மாறாக பிரச்சினையின் தீவிரத்தை தள்ளிப்போடும் வழி மட்டும்தான்.

தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது.

சம்பந்தன் ஐயா, நீங்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசியலில் இருக்க விரும்பினால், கூட்டமைப்பின் தலைவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருங்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கே போகாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஏற்புடையதல்ல. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்திய நீங்கள், திருகோணமலை யில் அதைச் செய்யவில்லை. இனியும் அந்த திருகோணமலை ஆசனத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருந்தால், திருகோணமலை மக்கள் வரும் தேர்தலில் உங்களைத் தோற்கடித்து அதை உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவர். அது தமிழருக்கும், தமிழர் அரசியலுக்கும் அழகானதொன்றாக இருக்காது.

ஆகையால் ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓய்வு-பெறுங்கள்-சம்பந்தன்-ஐயா/91-288032

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

49 minutes ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

போட்ட முதல இன்னமும் எடுக்கல.

1 hour ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

5 hours ago, தமிழ் சிறி said:

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

அவருக்கும் விருப்பம் தான்.

ஆனாலும் மக்கள் தீக்குளித்தா என்ன செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

29 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

18 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஷோக்பரன் நல்ல நோக்கத்தில் தான் சொல்கிறார். ஆனால், கூட்டமைப்பிற்குள் நிகழும் சாதாரண விடயங்களைக் கூட தங்கள் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்குப் பாவிக்க ஒரு குழு எப்பவும் காத்திருக்கும்.

சம்பந்தர் பாராளுமன்றம் போய் பேசுவதால் மேலதிக நன்மைகள் எதுவும் கிடைத்துவிடாது, எனவே அதனால் இழப்பில்லை. ஆனால், ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

2 hours ago, Justin said:

ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

 

ஏன்?

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நீங்கள் ஒரு டொக்டர் இப்படி சொல்லக்கூடாது காரணம் உயிர் மரணம் அடையும் எனபது உங்களுக்கு ஐயம்திரிபுறத்தெரியும்.   அடிபாடு.  கருத்து வேறுபாடு   எங்கேயும் எப்போதும் இருக்கும் அதற்காக 89 வயோதிபரை  அவசியம் என்று கூறக்கூடாது.   தொடர்ச்சியாக இளம் தலைவர்களை உருவாக்குவது அவசியம் என்று கூறலாம் இல்லையா   ? ஜேர்மனியில் அடிக்கடி கூறுவது உண்டு பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

திறமைகளை பயிற்சி செய்து மேலும் மேலும் மேம்படுத்த முடியும் கந்தையா அண்ணா  பயிற்சி பற்றி சொன்னதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நான் நினைக்கின்றேன் என்னைப்போல் சம்பந்தரோடு பல மேடைகளில் நேருக்கு நேர் சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த மனிதர்கள் யாழ்களத்தில் இல்லை என்று.......

நான் என்றுமே அவர்களுக்கு ஆதரவாளானகாவே இருந்துள்ளேன். சம்பந்தன் அனுபவம் உள்ள அரசியல் தலைவர். சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தெரிந்த முகம்.2009க்கு பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனையென்றால் சர்வதேச வட்டாரத்திற்கு தெரிந்த ஒரே விலாசம் சம்பந்தன் மட்டுமே.அது மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி கதிரை கூட அவருக்கு வந்து போயுள்ளது. அதன் பலமோ கொஞ்ச நஞ்சமல்ல.....ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக இவரை மட்டுமே சர்வதேசம் இது வரைக்கும் சந்தித்துள்ளது. இவர் நினைத்திருந்தால் சிங்கள இனவாத அரசிற்கு 2012லையே சர்வதேச ஆதரவுடன் பல முட்டுக்கட்டைகளை போட்டிருக்கலாம். இவர் நினைத்திருந்தால் நல்லாட்சி காலத்திலையே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். 

புலிகளின் பயங்கரவாதத்தை அடக்குங்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்போம். இந்த வசனம் யாருக்காவது ஞாபகம் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

ஏன்?

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

15 hours ago, goshan_che said:

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

பிரம்மச் சுவடி என்ர பரணிலதான் இருக்கு சோசான் 🤣🤣

16 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். வேறென்ன,சம்பந்தன் எனக்கு என்ன உறவு முறையானவரா...? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். 

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂 🐟  🦢 🦆 🦥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂🐟  🦢🦆🦥

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//“வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார்.//

 

👆இது அதுல்ல..👇

எல்லா கோட்டையும் அழிங்க... நா முதல்ல இருந்து சாப்புடுரன்…😂😂

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

 

6 hours ago, Eppothum Thamizhan said:

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

நிச்சயமாக 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

நான்  எழுதியதை திரும்பவும் ஒருமுறை  வாசியுங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.