Jump to content

ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

Recommended Posts

ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்..வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது.

ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். 

தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது

மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு  டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது.  

எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா?

தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்:

1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு.

2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன.  

இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது?

டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன.

ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன)

கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன.

 "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல்.

எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது.

மேலதிக மூலங்கள்:

https://www.nature.com/articles/d41587-021-00025-3

https://www.nature.com/articles/s41586-021-04232-5

சொற்பட்டியல்:

நோயெதிர்ப்பு - immunity

பிறபொருளெதிரிகள் - antibodies

மாறி வைரஸ் – variant virus

 நிணநீர்க்குழியம் – lymphocyte

 "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell

"ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell

என்பு மச்சை- bone marrow

நிணநீர்க்கணு- lymph node

மண்ணீரல் - spleen

தைமஸ் சுரப்பி- thymus gland

கொலைக் கலம்- Killer T-cell

உதவிக் கலம் – Helper T-cell

தொகுப்பு: ஜஸ்ரின்.

 • Like 11
 • Thanks 7
Link to comment
Share on other sites

 • Replies 53
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா? தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வ

Justin

ஒமிக்றோன் தரும் நோய் கோசான் சொல்வது போல, சுவாசக் குழாயின் மேற்பகுதியோடு தொடர்பான அறிகுறிகளைத் தான் (உ+ம் - மூக்கொழுகல், தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றன) அனேகமானோரில் காட்டுகிறது என அமெரிக்க கேஸ்க

goshan_che

விஞ்ஞானத்தை ஜஸ்டின் அண்ணாவிடம் விட்டு விடுகிறேன்( ஏன்னா என்னால ஏலாது🤣).  அனுபவத்தில், நான் ரெண்டு ஓக்ஸ்போர்ட், ஒரு பைசர். நலமே. ஊசி அடித்தவரிடம் ஒண்டு வெக்டர் வக்சீன், மற்றது MRNA பிரச்சனை இ

 • கருத்துக்கள உறவுகள்

ஆக மிஸ்டர் கொரோனாவுடன் வாழப்பழக வேண்டியதுதான்  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆக மிஸ்டர் கொரோனாவுடன் வாழப்பழக வேண்டியதுதான் .

Edited by தமிழ் சிறி
வறிய… ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு… தடுப்பூசி வாங்குவது பெரிய சுமையாக இருக்கப் போகின்றது.
Link to comment
Share on other sites

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

 • Thanks 1
Link to comment
Share on other sites

17 minutes ago, நிழலி said:

நீங்க வேற நிழலி, அவனவன் 2 சினோபாம் ஊசியை போட்டுட்டே பூஸ்டரா பைசர் ஊசி போடுறாங்கள். பயப்படாதைங்கோ!!

 • Like 1

கலந்து எடுப்பது தான் மிகவும் நன்று என்கிறார்கள்.
நான் மூன்றும் பைசரே போட்டேன்.

எனது மனைவி மக்கள் முதல் இரண்டும் பைசரையும் மூன்றாவதாக மொடோனாவையும் எடுத்திருக்கிறார்கள்.

1 minute ago, Eppothum Thamizhan said:

நீங்க வேற நிழலி, அவனவன் 2 சினோபாம் ஊசியை போட்டுட்டே பூஸ்டரா பைசர் ஊசி போடுறாங்கள். பயப்படாதைங்கோ!!

இலங்கையில் கூடுதலாக முதல் இரண்டும் சினோபாம்(எல்லா வயதினருக்கும்)மூன்றாவதாக பைசரையும் கொடுக்கிறார்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

விஞ்ஞானத்தை ஜஸ்டின் அண்ணாவிடம் விட்டு விடுகிறேன்( ஏன்னா என்னால ஏலாது🤣). 

அனுபவத்தில், நான் ரெண்டு ஓக்ஸ்போர்ட், ஒரு பைசர். நலமே.

ஊசி அடித்தவரிடம் ஒண்டு வெக்டர் வக்சீன், மற்றது MRNA பிரச்சனை இல்லையே? எண்டு கேட்டேன். பிரச்சனை இல்லை மேலும் mixing vaccines likes this is recommended எண்டு சொன்னார்  (முன்பே வாசித்ததுதான் - எண்டாலும் டொக்டரிட்ட போனால் கேள்வி கேட்க வேண்டும் எண்ட சம்பிரதாயதுக்காக கேட்டது🤣).

On 27/12/2021 at 18:30, Justin said:

ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்..வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது.

ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். 

தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது

மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு  டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது.  

எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா?

தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்:

1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு.

2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன.  

இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது?

டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன.

ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன)

கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன.

 "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல்.

எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது.

மேலதிக மூலங்கள்:

https://www.nature.com/articles/d41587-021-00025-3

https://www.nature.com/articles/s41586-021-04232-5

சொற்பட்டியல்:

நோயெதிர்ப்பு - immunity

பிறபொருளெதிரிகள் - antibodies

மாறி வைரஸ் – variant virus

 நிணநீர்க்குழியம் – lymphocyte

 "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell

"ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell

என்பு மச்சை- bone marrow

நிணநீர்க்கணு- lymph node

மண்ணீரல் - spleen

தைமஸ் சுரப்பி- thymus gland

கொலைக் கலம்- Killer T-cell

உதவிக் கலம் – Helper T-cell

தொகுப்பு: ஜஸ்ரின்.

நன்றி ஜஸ்டீன் அண்ணா.

இதனால்தான் நீங்கள் யாழில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கருத்தாளர்🙏🏾.

ஆ…. அப்புறம் கொவிட்டின் போக்கை கடந்த இரெண்டு வருடமாக முடிந்தளவு விஞ்ஞான ரீதியில் அவதானித்து வந்தவன் என்ற ரீதியில்….ஒமிக்ரோனோடு…நாங்கள் pandemic இன் beginning of the end இல் நிற்கிறோம் என்றே நான் உணர்கிறேன்.  

Edited by goshan_che
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
On 27/12/2021 at 13:30, Justin said:

மிக்க நன்றி ஐயனே 🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

30 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்க வேற நிழலி, அவனவன் 2 சினோபாம் ஊசியை போட்டுட்டே பூஸ்டரா பைசர் ஊசி போடுறாங்கள். பயப்படாதைங்கோ!!

30 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் கூடுதலாக முதல் இரண்டும் சினோபாம்(எல்லா வயதினருக்கும்)மூன்றாவதாக பைசரையும் கொடுக்கிறார்கள்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு (20 வயதுக்குட்பட்ட) பைசர் தான் முதலாவது தடுப்பூசியாக செலுத்தப்பட்டது.
ஏனையோருக்கு முதல் இரண்டும் சினோபாம் இப்ப மூன்றாவது பைசர் பூஸ்ரர் தடுப்பூசி செலுத்துகிறார்கள்.
எனது சகோதரர் இன்று பைசர் பூஸ்ரர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

நேற்று மூன்று ஊசிகளையும் பெற்றுக் கொண்ட எனது குடும்ப நண்பரின் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டுவாசலில் வைத்துவிட்டு வந்தேன்.

ஊசிகள் போட்டுக் கொண்டதாலோ என்னவோ லேசான காய்ச்சல் இருமல் தான்.

ஆனாலும் எல்லோருக்கும் பொசிரிவ் என்று காட்டுகிறது.

ஒமிக்ரோன் சேதாரம் இல்லாதுவிடினும் அதிவேகமாக பரவுகிறது.

 • Like 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

8 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று மூன்று ஊசிகளையும் பெற்றுக் கொண்ட எனது குடும்ப நண்பரின் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டுவாசலில் வைத்துவிட்டு வந்தேன்.

ஊசிகள் போட்டுக் கொண்டதாலோ என்னவோ லேசான காய்ச்சல் இருமல் தான்.

ஆனாலும் எல்லோருக்கும் பொசிரிவ் என்று காட்டுகிறது.

ஒமிக்ரோன் சேதாரம் இல்லாதுவிடினும் அதிவேகமாக பரவுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?
கனடாவில் இருந்து வந்த அத்தான் இங்கு எல்லோரும் முகக்கவசம் அணிந்து வெளியே நடமாடுவதை ஆச்சரியமாக கூறினார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?
கனடாவில் இருந்து வந்த அத்தான் இங்கு எல்லோரும் முகக்கவசம் அணிந்து வெளியே நடமாடுவதை ஆச்சரியமாக கூறினார்.

தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்

கனடாவின்  நிலை  அவ்வாறல்ல?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் குடும்பம் முதல் இரண்டு பைசர் மூன்றாவது மொடோனா போட்டுக்கொண்டிருக்கின்றோம்.......நலமாக இருக்கின்றோம்........!  

விளக்கங்களுக்கு நன்றி ஜஸ்டின்.......!   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

கூர்ப்பின் படி ஒரு உயிரி தன்னை தொடர்ந்தும் நிலை நிறுத்த கடுமையாக முயலும். கொவிட்டின் வாழிடங்களாகிய எம்மை அழித்துவிட்டு கொவிட்டும் அழிவதிலும் பார்க்க நாம் வாழ அதில் தான் வாழும் நிலையே கொவிட்டின் நீண்ட கால இருப்புக்கு நல்லது.

தென்னாபிரிக்காவின் நுண்ணுயிராளர்கள், கணிதவியல் மாதிரி வல்லுனர்கள், தொற்று நோய் நிபுணர்கள் சிலரை சமூகவலையில் பிந்தொடர்கிறேன். அவர்களின் கருத்துப்படி, வேகமாக பரவினாலும், மூன்று டோசின் பின்னும் தொற்று வந்தாலும் ஆஸ்பத்திரிக்கு போகும் அளவு குறைவாகவே இருக்கிறதாம்.  யூகேயின் பூர்வாங்க ஆராய்ச்சிகள் காட்டுவதும் இதையே.

தனிபட்டு மிக மோசமான காலத்தை நாம் கடந்து விட்டோம் என்றே என் மனதுக்கு படுகிறது.

வரும் காலம் - வீரியம் குறைந்த ஆனால் இப்போதும் ஆபத்தான வைரசுடன் தகுந்த பாதுகாப்பு எடுத்தபடி வாழும் காலமாக இருக்கும். இது என் எதிர்வுகூறலும், எதிர்பார்ப்பும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்

கனடாவின்  நிலை  அவ்வாறல்ல?

அண்ணை இங்கு என்பதை இலங்கை என புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

அண்ணை இங்கு என்பதை இலங்கை என புரிந்து கொள்ளுங்கள்.

அதைத்தான்  குறிப்பிட்டேன் சகோ

கனடாவில் நிலமை  மோசம்

அவர்  பிழையான நிலமையை விதைக்கிறார்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நேற்று மூன்று ஊசிகளையும் பெற்றுக் கொண்ட எனது குடும்ப நண்பரின் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டுவாசலில் வைத்துவிட்டு வந்தேன்.

ஊசிகள் போட்டுக் கொண்டதாலோ என்னவோ லேசான காய்ச்சல் இருமல் தான்.

ஆனாலும் எல்லோருக்கும் பொசிரிவ் என்று காட்டுகிறது.

ஒமிக்ரோன் சேதாரம் இல்லாதுவிடினும் அதிவேகமாக பரவுகிறது.

மூன்று எடுத்தவர்களுக்கு பொசிட்டிவ் காட்டும் அநேகமா நாலா நாளே சுகமாகிவிடுகின்றது .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரு ஊசிகளும் போட்டுக்கொண்ட என மகளுக்குத் தொற்று இருப்பது வீட்டில் செய்த டெஸ்ட் மூலம் கண்டுபிடித்தோம். அவரை பத்து நாட்கள் மற்றவர்களுடன் பழகவிடாது தனியாகவே விட்டோம். ஒரே ஒருநாள் தலை வலியும் தடிமனும் அதன்பின் ஒன்றுமே இல்லை.

எமக்கும் தொற்றவில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தனிபட்டு மிக மோசமான காலத்தை நாம் கடந்து விட்டோம் என்றே என் மனதுக்கு படுகிறது.

அப்படியானால் நல்லதே ஆனால் இப்போது தானே  கொரோனா தொற்றிவிட்டதாக பேச்சுகள் அதிகமாக உள்ளது.

4 hours ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியானால் நல்லதே ஆனால் இப்போது தானே  கொரோனா தொற்றிவிட்டதாக பேச்சுகள் அதிகமாக உள்ளது.

இன்று யூகேயில் வரலாற்றில் இல்லாத அளவு தொற்று. கடந்த ஒரு கிழமையாகவே 90,000 நாளொன்றுக்கு, ஆயினும் ஆஸ்பத்திரி அனுமதிகள், முந்தைய அலைகளோடு ஒப்பிட்டால் அதிகமில்லை.

தென்னாபிரிக்காவின் ஜோனஸ்பேர்க் உள்ள மாநிலத்தில்தான் இது நவம்பரில் ஆரம்பித்தது, அங்கே தொற்றுகள் மிக அதிகமாக கூடி, ஒரு peak ஐ அடைந்து பின் சடுதியாக குறைந்ததாக வரைபுகள் காட்டுகிறன. முந்தைய டெல்டா அலையோடு ஒப்பிட்டால் ஆஸ்பத்திரி அனுமதியும் 1/3 வீதம் என்கிறார்கள்.

அதே போல் தென்னாபிரிக்காவில் டெல்டா பாதிப்பு அதிகம், ஊசி அடித்தோர் வீதமும் வேறு ஆகவே அதை வைத்து மட்டும் நேரடியாக சொல்ல முடியாது.

யூகேயின் கிறிஸ் விட்டி சொன்னது போல்,  பாதிப்பு குறைந்த விகாரி என்றாலும் ஒமிகிரோன் தொற்றும் வீதம் அதிகம் என்பதால், மிகபெரும்பாலானோர் இந்த அலையில் ஆஸ்பத்திரி போக வாய்ப்பு அதிகம். 

ஆனால் யூகேயில் வரும் பூர்வாங்க தரவுகள் நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

எது எப்படியோ நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை. ஆகவே தொடர்ந்தும் சமூக இடைவெளி பேணல் அவசியமாகிறது.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் பற்றிய புரிதல் இன்னும் உலகத்தாரிடம் சரியாகப்போய் சேரவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

வக்சீன் எந்த வைரஸிற்கும் முடிவாகாது. அது.. வைரஸ் கடுந்தொற்றை குறைக்கலாமே தவிர.  

The combination of Delta and Omicron variants is driving a dangerous tsunami of Covid-19 cases, the World Health Organization (WHO) chief has said.

https://www.bbc.co.uk/news/world-59822209

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒமிக்கிரோன் வந்தால் எப்படி உணரலாம்?

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

நிழலி, ஆம். வெவ்வேறு தடுப்பூசி வகைகளைக் கலப்பதில் ஆபத்தில்லை. அது மட்டுமன்றி கலக்கும் போது உருவாகும் நோயெதிர்ப்பின் வலுவும் சிறிது அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. 

வக்சீன்களைக் கலப்பது பற்றிய தமிழினியின் கேள்விக்கு, நெடுக்கரின் திரியில் நான் அளித்த பதில் கீழே: 

 • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.