Jump to content

ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஒமிக்கிரோன் வந்தால் எப்படி உணரலாம்?

அண்ணை,

ஒமிக்ரோன் அதிகம் சுவாச மேற்பாதையை பாதிப்பதாயும், ஏனைய விகாரிகள் போல் நுரையீரலை அதிகம் பாதிப்பதில்லை என்றும் வாசித்தேன் ( @Justin முடிந்தால் விளக்கவும்).

ஆகவே மற்றைய கொவிட் விகாரிகளின் அறிகுறிகளோடு, சாதாரண தடிமன் காய்சல்/ மூக்கு ஒழுகல் அறிகுறிகளும் காட்டுவதாக தெரிகிறது.

லண்டனில் உள்ள cold வழக்குகளில் 50 வீதம் ஒமிகிரோனனாக இருக்கலாம் என அண்மைய செய்தி தலைப்பு ஒன்று சொல்கிறது. 

அடிக்கடி lateral flow test செய்து பார்ப்பதே நல்லம் என நினைக்கிறேன் (இதுவும் ஒமிக்கிரோனை தனியாக இனம் பிரிக்காது ஆனால் கொவிட் உண்டா இல்லையா என காட்டும்).

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யூகேயின் முன்ணணி நோயெதிர்ப்பியல் நிபுணர் சேர் ஜோன் பெல் “ நாம் ஒரு வருடத்துக்கு முன் கண்ட நோய் அல்ல ஒமிக்கிரோன்” என்கிறார். 

அது மட்டும் அல்லாமல் “யூகேயில் அதிக (கொவிட்) இறப்பு வீதம் என்பது இனி முடிந்த கதை” (is history) என்றும் சொல்கிறார்.

இதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதில்லை. ஆனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்தபடி cautiously optimistic ஆக இருப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

ஆனால் இந்த ஒரு வருடத்தில் நாம் படித்த பாடம் - வைரசின் போக்கை எதிர்வு கூறுவது மிக கடினமான காரியம். இன்னுமொரு விகாரி வந்து எல்லாவறையும் தலைகீழாக மாற்றலாம். 

ஆகவே நம்பிக்கையோடு ஆனால் விழிப்போடு, தகுந்த பாதுகாப்பு எடுத்தபடி இருப்போம். 

Omicron is ‘not the same disease’ as earlier Covid waves, says UK scientist

Sir John Bell says disease ‘appears less severe’ as other scientists criticise lack of new restrictions in England

Close-up of someone doing a lateral flow testShow caption

Tue 28 Dec 2021 10.29 GMT

Omicron is “not the same disease we were seeing a year ago” and high Covid death rates in the UK are “now history”, a leading immunologist has said.

Sir John Bell, regius professor of medicine at Oxford University and the government’s life sciences adviser, said that although hospital admissions had increased in recent weeks as Omicron spreads through the population, the disease “appears to be less severe and many people spend a relatively short time in hospital”. Fewer patients were needing high-flow oxygen and the average length of stay was down to three days, he said.

A number of scientists have criticised the government’s decision not to introduce further Covid restrictions in England before New Year’s Eve, with some describing it as “the greatest divergence between scientific advice and legislation” since the start of the pandemic.

They have expressed concern that while the Omicron variant appears to be milder, it is highly transmissible, meaning hospital numbers and deaths could rise rapidly without intervention.

The NHS Providers chief executive, Chris Hopson, said it was still unclear what would happen when infection rates in older people started to rise. “We’ve had a lot of intergenerational mixing over Christmas, so we all are still waiting to see, are we going to see a significant number of increases in terms of the number of patients coming into hospital with serious Omicron-related disease,” he told BBC Breakfast.

NHS staff absences caused by having to isolate over Omicron are also causing strain on the health service, with experts predicting up to 40% of staff in London could be off in a “worst case scenario”.

“We’re now seeing a significant increase in the level of staff absences, and quite a few of our chief executives are saying that they think that that’s probably going to be a bigger problem and a bigger challenge for them than necessarily the number of people coming in who need treatment because of Covid,” said Hopson.

George Eustice, the environment secretary, said the government was keeping the level of Covid hospital admissions under “very close review”.

He acknowledged that infection rates from the new Omicron variant were rising but said there was evidence it was not resulting in the same level of hospital admissions as previous waves.

“There is early encouragement from what we know in South Africa that you have fewer hospitalisations and that the number of days that they stay in hospital if they do go into hospital is also lower than in previous variants,” he told the BBC.

“At the moment we don’t think that the evidence supports any more interventions beyond what we have done. But obviously we have got to keep it under very close review, because if it is the case that we started to see a big increase in hospitalisations then we would need to act further.”

John Bell told BBC Radio 4’s Today programme: “The horrific scenes that we saw a year ago of intensive care units being full, lots of people dying prematurely, that is now history, in my view, and I think we should be reassured that that’s likely to continue.”

He said that over the course of multiple waves of Covid, including Delta and Omicron, “the incidence of severe disease and death from this disease has basically not changed since we all got vaccinated”.

He added that quiet streets over the past couple of weeks showed people had been “pretty responsible” with regard to protecting themselves from the virus.

Speaking after the government’s announcementon Monday that they would not be introducing any more Covid restrictions this year, Simon Clarke, an associate professor in cellular microbiology at the University of Reading, warned that the latest data was incomplete.

He cautioned that the latest case figures did not include data for samples taken between Christmas Eve and Boxing Day, and that it would become clear how the virus had moved through the population over the Christmas period in the coming week or so.

Covid: how long are people infectious and how do isolation rules vary?

“While nobody wants to live under tighter controls, the public need to realise that if we end up with a significant problem of hospitalisations and mass sickness, it will be worse than if authorities had acted earlier,” he said.

Speaking on Tuesday, Paul Hunter, a professor in medicine at the University of East Anglia, said people with Covid should eventually be allowed to “go about their normal lives” as they would with a common cold.

“This is a disease that’s not going away. Ultimately, we’re going to have to let people who are positive with Covid go about their normal lives as they would do with any other cold,” he told BBC Breakfast. “If the self-isolation rules are what’s making the pain associated with Covid, then we need to do that perhaps sooner rather than later. Maybe not quite just yet.

“Covid is only one virus of a family of coronaviruses, and the other coronaviruses throw off new variants typically every year or so, and that’s almost certainly what’s going to happen with Covid. It will become effectively just another cause of the common cold.

“Once we’re past Easter, perhaps, then maybe we should start to look at scaling back, depending on, of course, what the disease is at that time.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஒமிக்கிரோன் வந்தால் எப்படி உணரலாம்?

8 minutes ago, goshan_che said:

அண்ணை,

ஒமிக்ரோன் அதிகம் சுவாச மேற்பாதையை பாதிப்பதாயும், ஏனைய விகாரிகள் போல் நுரையீரலை அதிகம் பாதிப்பதில்லை என்றும் வாசித்தேன் ( @Justin முடிந்தால் விளக்கவும்).

ஆகவே மற்றைய கொவிட் விகாரிகளின் அறிகுறிகளோடு, சாதாரண தடிமன் காய்சல்/ மூக்கு ஒழுகல் அறிகுறிகளும் காட்டுவதாக தெரிகிறது.

லண்டனில் உள்ள cold வழக்குகளில் 50 வீதம் ஒமிகிரோனனாக இருக்கலாம் என அண்மைய செய்தி தலைப்பு ஒன்று சொல்கிறது. 

அடிக்கடி lateral flow test செய்து பார்ப்பதே நல்லம் என நினைக்கிறேன் (இதுவும் ஒமிக்கிரோனை தனியாக இனம் பிரிக்காது ஆனால் கொவிட் உண்டா இல்லையா என காட்டும்).

ஒமிக்றோன் தரும் நோய் கோசான் சொல்வது போல, சுவாசக் குழாயின் மேற்பகுதியோடு தொடர்பான அறிகுறிகளைத் தான் (உ+ம் - மூக்கொழுகல், தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றன) அனேகமானோரில் காட்டுகிறது என அமெரிக்க கேஸ்களைப் பார்க்கும் போதும் தெரிகிறது. அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதாலும், பலர் ஏற்கனவே இயற்கைத் தொற்றுக்குள்ளாகி நோயெதிர்ப்பைக் கொண்டிருப்பதாலும் இந்த நிலை என ஊகிக்கிறேன். ஆனால், தடுப்பூசி எடுக்காதோரில், சுவாசக் குழாயின் கீழ் பகுதி வரைச் சென்று தாக்குவதால் ஒக்சிசன் குறைதல் போன்ற தீவிர நோய் நிலை ஏற்படலாம்.

இப்படி சுவாசக் குழாய் மேற்பகுதி மட்டும் பாதிக்கப் படும் நிலைக்குக் காரணம், நாம் மேலே பார்த்த "ரி" வகைக் கலங்களாக இருக்கலாம். ஒமிக்றோன் அன்ரிபொடியின் பாதுகாப்பை மீறி தொண்டையில் இருக்கும் கலங்களினுள் நுழைந்து விடுகிறது. ஆனால், "ரி" வகைக் கலங்களின் கொல்லும் படையணி, இந்தத் தொற்றுக்குள்ளான கலங்களைத் தாக்கி அழிக்கிறது - இதனால் வைரஸ் அழிக்க்கப் பட்டாலும், எங்களுக்கு சிறிது அழற்சி நிலையேற்படும். இது தான் நடக்கிறது என விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.theguardian.com/society/2021/dec/30/covid-hospitals-england-asked-look-4000-emergency-beds
 
நான் மேலே சொன்ன cautiously optimistic கவனமாக எதிர்பார்ப்போடு இருக்கிறேன் என்பதில் ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மேலே உள்ள செய்தி காட்டி நிற்கிறது.

கொவிட்டின் ஆரம்பத்தில் பல படுக்கைகள் கொண்ட நைட்டிங்கேல் ஆஸ்பத்திரிகளை யூகே அமைத்தது. பின்னர் அவற்றை பயன்படுதாமல் வைத்திருந்தனர். 

இப்போ அதிகரிக்கும் தொற்றால் ஒவ்வொரு உள்ளூர் மட்டத்திலும் மினி நைற்றிங்கேல் ஆஸ்பத்திரிகளை அமைத்து 4000 மேலதிக படுக்கைகளை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

ஒமிக்கிரோன் பரவும் வீதம் அதிகம் என்பதால் - ஆசுபத்திரிகளால் தாக்குபிடிக்க முடியாத அளவு நோயாளர் வர இன்னும் வாய்ப்பு உண்டு. 

குறிப்பாக லண்டனில் ஆஸ்பத்கிரிகளில் அனுமதியாகும் நோயாளர் எண்ணிக்கை கிறிஸ்மஸ்சின் பின் அதிகரித்துள்ளது.

பொரிஸ் முடிந்தளவு இந்த முடிவை பின் தள்ளி போட்டாலும் ( ஸ்கொட்லாந்து, வேல்சில் இப்போதே கட்டுப்பாடு வந்து விட்டது, ஆனால் இங்கிலாந்தில் இல்லை), குறுகிய கால நோக்கில் (short term) இங்கிலாந்தில் மேலதிக கட்டுபாடுகள் வர வாய்ப்புகள் அதிகம். ஒரு மினி லாக் டவுன் கூட வரலாம் என்றே நினைக்கிறேன். 

In the short term - we are not out of the woods yet.

medium and long term - there is hope to be cautiously optimistic. என்றே நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

26 minutes ago, Justin said:

ஒமிக்றோன் தரும் நோய் கோசான் சொல்வது போல, சுவாசக் குழாயின் மேற்பகுதியோடு தொடர்பான அறிகுறிகளைத் தான் (உ+ம் - மூக்கொழுகல், தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றன) அனேகமானோரில் காட்டுகிறது என அமெரிக்க கேஸ்களைப் பார்க்கும் போதும் தெரிகிறது.

மிகப்பெரும்பான்மையானவர்கள் ஓமிக்றோன் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த வைரஸ் பெரும் பாதிப்பை தருவதில்லை ஆனால் பெருமளவில் வைரஸை மனித உடல்களில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறான பாதிப்பு குறைந்த வைரஸில் இருந்து உருவாகும் வைரஸ்கள் பாதிப்பு கூடிய வைரஸாக உருவாகும் சாத்தியம் எத்தனை வீதம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

மிகப்பெரும்பான்மையானவர்கள் ஓமிக்றோன் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த வைரஸ் பெரும் பாதிப்பை தருவதில்லை ஆனால் பெருமளவில் வைரஸை மனித உடல்களில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறான பாதிப்பு குறைந்த வைரஸில் இருந்து உருவாகும் வைரஸ்கள் பாதிப்பு கூடிய வைரஸாக உருவாகும் சாத்தியம் எத்தனை வீதம்?

இந்த கேள்வி எனக்கும் உண்டு. அதற்கு முன்,

ஒமிக்கிரோன், டெல்டாவை முற்றாக ஓரம் கட்டி விடுமா? என்பதும் புதிராகவே உள்ளது. யூகே, தென்னாபிரிக்காவில் வந்து சில நாட்களிலேயே ஒமிகிரோன் dominant strain ஆகி விட்டது. ஆனால் ஏனைய பீட்டா போன்ற விகாரிகளை டெல்டா பிரதியீடு செய்தது போல ஒமிக்ரோன் டெல்டாவை முற்றிலுமாக பிரதியீடு செய்யுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

மிகப்பெரும்பான்மையானவர்கள் ஓமிக்றோன் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த வைரஸ் பெரும் பாதிப்பை தருவதில்லை ஆனால் பெருமளவில் வைரஸை மனித உடல்களில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறான பாதிப்பு குறைந்த வைரஸில் இருந்து உருவாகும் வைரஸ்கள் பாதிப்பு கூடிய வைரஸாக உருவாகும் சாத்தியம் எத்தனை வீதம்?

இதற்கு ஒரு இலக்கத்தைக் கொடுக்க முடியுமாவென்று தெரியவில்லை. கொரனா வைரஸ் போன்ற ஆர்.என்.ஏ வைரசுகளின் விகாரம் வேகமாகவும், எழுந்தமானமாகவும் நடப்பது. சில விகாரங்கள் வைரஸ் தப்பி வாழ உதவாது விட்டால் அவை அழியும்- மனிதர்களுக்கு அதிர்ஷ்டம். சில விகாரங்கள் வைரசை பல்கிப் பெருக அனுமதித்தால் வைரசுக்கு அதிர்ஷ்டம்.

ஆனால், தற்போது ஒமிக்றோன்  வைரசுக்கும் மனிதர்களுக்கும் நன்மை தரும் win-win நிலைமை: வைரஸ் பல்கிப் பெருகும், ஆனால் மனிதர்களை பெருமளவில் கொல்லாத நிலை! 

எனவே, எந்தத் திசையில் நகரும் என்று தெரியாத வைரசின் மாற்றங்களை குறைப்பது தான் நாம் செய்யக் கூடியது. தடுப்பூசிகள் , தொற்றியவர்கள் தனிமை பேணிப் பரவலைக் கட்டுப் படுத்தல் ஆகியன மூலம், வைரசுக்கு விளைநிலமில்லாமல் செய்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது! 

Link to comment
Share on other sites

அனைவரது பதில்கள் கொடுத்த தைரியத்தில் இன்று மாலை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மூன்றாம் தடுப்பூசியையும் (Moderna) நானும் மனைவியும் போட்டு விட்டு வந்தோம்.

இது வரைக்கும் பக்க விளைவுகள் ஒன்றும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அனைவரது பதில்கள் கொடுத்த தைரியத்தில் இன்று மாலை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மூன்றாம் தடுப்பூசியையும் (Moderna) நானும் மனைவியும் போட்டு விட்டு வந்தோம்.

இது வரைக்கும் பக்க விளைவுகள் ஒன்றும் இல்லை. 

உங்கள் கவலை எனக்கு மட்டும்தான் புரிகிறதா?☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அனைவரது பதில்கள் கொடுத்த தைரியத்தில் இன்று மாலை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மூன்றாம் தடுப்பூசியையும் (Moderna) நானும் மனைவியும் போட்டு விட்டு வந்தோம்.

இது வரைக்கும் பக்க விளைவுகள் ஒன்றும் இல்லை. 

ஏறத்தாள 12 மணிநேரத்தின் பின்னரே எதிர்வினை காட்டும்.

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

இதற்கு ஒரு இலக்கத்தைக் கொடுக்க முடியுமாவென்று தெரியவில்லை. கொரனா வைரஸ் போன்ற ஆர்.என்.ஏ வைரசுகளின் விகாரம் வேகமாகவும், எழுந்தமானமாகவும் நடப்பது. சில விகாரங்கள் வைரஸ் தப்பி வாழ உதவாது விட்டால் அவை அழியும்- மனிதர்களுக்கு அதிர்ஷ்டம். சில விகாரங்கள் வைரசை பல்கிப் பெருக அனுமதித்தால் வைரசுக்கு அதிர்ஷ்டம்.

ஆனால், தற்போது ஒமிக்றோன்  வைரசுக்கும் மனிதர்களுக்கும் நன்மை தரும் win-win நிலைமை: வைரஸ் பல்கிப் பெருகும், ஆனால் மனிதர்களை பெருமளவில் கொல்லாத நிலை! 

எனவே, எந்தத் திசையில் நகரும் என்று தெரியாத வைரசின் மாற்றங்களை குறைப்பது தான் நாம் செய்யக் கூடியது. தடுப்பூசிகள் , தொற்றியவர்கள் தனிமை பேணிப் பரவலைக் கட்டுப் படுத்தல் ஆகியன மூலம், வைரசுக்கு விளைநிலமில்லாமல் செய்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது! 

தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா? 

மூன்றாவது தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் பாதிப்பு குறைந்த ஓமிக்றோன் தொற்று ஏற்படுகிற போது...:rolleyes:

ஒன்று இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நிபுணர் tvல்  மூன்றாவது தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட சாதரணமானவர்களுக்கு  6 மாதத்திற்கு பின்பு தான் போட சேண்டும் என்றார். இப்போது 6 மாதங்களுக்கு முன்பே குத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

அதைத்தான்  குறிப்பிட்டேன் சகோ

கனடாவில் நிலமை  மோசம்

அவர்  பிழையான நிலமையை விதைக்கிறார்

நான் குறிப்பிட்டது இலங்கையில் எல்லோரும் முகக்கவசம் அணிவதைப் பற்றி கனடா அத்தான் ஆச்சரியப்பட்டதை.
கனடா நிலவரம் சற்று சரியில்லை என்பது தெரியும் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா? 

large.86001AF2-757B-497A-84FE-6462AC1CACCB.jpeg.35d3b3459f76274d424520c69aa13dd0.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா? 

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

மூன்றாவது தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் பாதிப்பு குறைந்த ஓமிக்றோன் தொற்று ஏற்படுகிற போது...:rolleyes:

ஒன்று இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நிபுணர் tvல்  மூன்றாவது தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட சாதரணமானவர்களுக்கு  6 மாதத்திற்கு பின்பு தான் போட சேண்டும் என்றார். இப்போது 6 மாதங்களுக்கு முன்பே குத்துகிறார்கள்.

கற்பகதரு,  இவ்வாறு இயற்கை நோயெதிர்ப்பை மட்டும் நம்பி ஒமிக்ரோனைப் பரவ அனுமதிப்பது பெருந்தொற்று ஆரம்பத்தில் சுவீடன் செய்ததை விட அதிக ஆபத்தான செயல் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இதன் காரணங்கள் கீழே:  

1. ஒமிக்றோன் காட்டுத் தீ போல பரவுகிறது. 200 பேரில் ஒருவர் தான் மரணிப்பர் என வைத்துக் கொண்டாலும், 1000 பேருக்குத் தொற்ற அனுமதித்தால் 5 மரணங்கள். ஒரு லட்சம் பேரில் தொற்றை அனுமதித்தால் 500 மரணங்கள். இப்படி பகுதியெண் அதிகரிக்கும் அதே வேகத்தில் மரண எண்ணிக்கையான தொகுதியெண்ணும் அதிகரிக்கும். இந்த வாரம் அமெரிக்காவின் கேஸ்களின் எண்ணிக்கை ~243,000. இவர்களுள் 0.5% பேர் அடுத்த 10 நாட்களுக்குள் மரணப் பட்டியலில் சேர்வர். அவர்கள் வயதானவர்கள், உடல் பலவீனமானோர் என இருந்தாலும் - இதைத் தடுக்கக் கூடிய வழி இருக்கும் போது, தடுக்காமல் விடுவது தவறு - அந்த தடுப்பு வழி, மூன்றாவது டோஸைக் கொடுப்பதால் நோய்த்தீவிரம், பரவல் இரண்டையும் குறைப்பது தான்.

2. கோவிட் தடுப்பூசிகளின் நீண்டகால விளைவுகள் பற்றி மக்கள் இன்னும் பயம் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளாக இருந்த போது நிஜமான நோய் தரும் வைரசுகளைக் கொன்று அல்லது வலுவற்றதாக்கி அதையே உடலினுள் தடுப்பூசியாக எடுத்துக் கொண்ட நாம், இன்று வைரசின் ஒரு பாகத்தை மட்டும் மூன்று நாட்களுக்கு உடலினுள் வைத்திருந்தால் நீண்ட காலப் பாதிப்பு வந்து விடக் கூடும் என்று அஞ்சுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒன்று இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நிபுணர் tvல்  மூன்றாவது தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட சாதரணமானவர்களுக்கு  6 மாதத்திற்கு பின்பு தான் போட சேண்டும் என்றார். இப்போது 6 மாதங்களுக்கு முன்பே குத்துகிறார்கள்.

அதெல்லாம் தடுப்பூசியின் கையிருப்பை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அவன் சொல்லுறான் நாங்கள் குத்திக்கொள்கிறோம் அவ்வளவுதான்! கேள்வி கேட்டால் அது விஞ்ஞானம் உங்களுக்கு அதெல்லாம் புரியாதென்று அலப்பறைவேற! இந்த WHO எதுக்கு இருக்குதென்றே தெரியவில்லை!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

2. கோவிட் தடுப்பூசிகளின் நீண்டகால விளைவுகள் பற்றி மக்கள் இன்னும் பயம் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளாக இருந்த போது நிஜமான நோய் தரும் வைரசுகளைக் கொன்று அல்லது வலுவற்றதாக்கி அதையே உடலினுள் தடுப்பூசியாக எடுத்துக் கொண்ட நாம், இன்று வைரசின் ஒரு பாகத்தை மட்டும் மூன்று நாட்களுக்கு உடலினுள் வைத்திருந்தால் நீண்ட காலப் பாதிப்பு வந்து விடக் கூடும் என்று அஞ்சுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 

முதலாவது conventional vaccine. இது எத்தனையோவருட சோதனைகளின்பின் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். MRNA vaccine பலவருடங்களாக சோதனையில் இருந்தும் அதற்கான அனுமதிகிடைக்கவேயில்லை. இந்த கொரோனா பெருந்தொற்றுடன் emergency usage க்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Eppothum Thamizhan said:

முதலாவது conventional vaccine. இது எத்தனையோவருட சோதனைகளின்பின் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். MRNA vaccine பலவருடங்களாக சோதனையில் இருந்தும் அதற்கான அனுமதிகிடைக்கவேயில்லை. இந்த கொரோனா பெருந்தொற்றுடன் emergency usage க்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
 
 உங்கள் தகவல்கள் முற்றிலும் சரியானவையல்ல: 

1. பாரம்பரிய தடுப்பூசியும், கோவிட் தடுப்பூசிகளும் ஒரே விஞ்ஞானத் தரத்திலான சோதனைக்குள்ளானவையே - பரிசோதனைக் காலம் மட்டும் அனுமதிக்கப் பட்ட போது 6 வாரங்களாக இருந்து இப்போது 1 வருடம் தாண்டி விட்டது! கோவிட் தடுப்பூசிகள் விரைவாக வெளிவர பரிசோதனை நிலைகள்overlap  ஆனதும், முதலீடுகள் உடனே கிடைத்ததுமே காரணம். சொல்லப் போனால், போலியோ தடுப்பூசியைப் பரிசோதித்த போது இருக்காத வெளிப்படைத் தன்மை, கோவிட் தடுப்பூசிகளைப் பரிசோதித்த போது இருந்தது.  

2. பைசருக்கு முழு அனுமதி கிடைத்து விட்டது அமெரிக்காவில். மொடெர்னா இன்னும் முழுதாக பரிசோதனை முடிவுகள் கிடைக்காமையால் முழு அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால், real world data இன் படி மொடெர்னாவின் தரம் பைசரை விட சிறிது அதிகம் என்பது கடந்த ஒரு வருடத்தில் நிரூபிக்கப் பட்டு விட்டது.  

3. mRNA வக்சீன்கள் வைரசுக்கெதிராகப் பரீட்சிக்கப் பட்டது இதுவே முதல் முறை. பல வருடங்களாக ஆய்வு கூடப் பரிசோதனையில் இருந்தது சில புற்று நோய்கள் உட்பட்ட நோய்களுக்கெதிரான எம்.ஆர்.என்.ஏ சிகிச்சை முறைகள் மட்டுமே, வக்சீன்கள் அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 19:08, Eppothum Thamizhan said:

இந்த WHO எதுக்கு இருக்குதென்றே தெரியவில்லை!!

😁 WHO தலைவர் 2022 ல் கோவிட் தோற்கடிக்கபடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/news/world-59840513

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 18:16, Eppothum Thamizhan said:

முதலாவது conventional vaccine. இது எத்தனையோவருட சோதனைகளின்பின் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். MRNA vaccine பலவருடங்களாக சோதனையில் இருந்தும் அதற்கான அனுமதிகிடைக்கவேயில்லை. இந்த கொரோனா பெருந்தொற்றுடன் emergency usage க்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
 
நீங்கள் குறிப்பிட்ட தகவல் சரியானதே. எம் ஆர் என் ஏ வக்சீன்.. அவசரகால நிலைக்கான காலக்கட்ட அனுமதியை தான் பெற்றுக்கொண்டது. ஆனால் எம் ஆர் என் ஏ வக்சீன் சோதனை என்பது பலகாலமாகவே நிகழ்ந்து கொண்டிந்த ஒன்று. 

The history of mRNA vaccines: A timeline that shows the key scientific innovations in the development of mRNA vaccines.

https://www.nature.com/articles/d41586-021-02483-w

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pfizer becomes first Covid vaccine to gain full FDA approval

By Bernd Debusmann Jr
BBC News, Washington

Published
23 August
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு மறந்து போயிருக்கும்.. 2003 வாக்கில் சார்ஸ் வைரஸ் பரவல் தென்கிழக்காசியாவில் தொடங்கிய போது உலகம்.. விரைந்து செயற்பட்டதோ.. தென்கிழக்காசிய நாட்டவர்கள் மீது பயணக் கண்காணிப்பு விடப்பட்டமை.

அதுக்கும் கொவிட்டுக்கும் என்ன தொடர்ப்பு..??!

கொவிட் 19 நோய்க்காரணிக்கான (வைரஸ்) குறியீடு SARS-CoV2. 2003 இல் சீனாவை மையப்படுத்தி பரவியதன் குறியீடு SARS CoV.

Epidemiological profiles of SARS-CoV and SARS-Cov-2 in Singapore and its  promising containment strategies — JOGH

சிங்கப்பூர் இந்த இரண்டையும் கண்ட நாடு. முன்னையது 238 தொற்றுக்களில் 28 மரணங்களையும் தற்போதையது 59000 தொற்றுக்களில் 29 மரணங்களையும் பதிவு செய்துள்ளது சிங்கப்பூரில்...

முன்னைய சார்ஸுக்கும் இன்றைய கொவிட் க்கும் பெரிய வித்தியாசம் என்றால்.. வகையில் ஒத்திருந்தாலும்.. தற்போதைய கூடிய தொற்றும் ஆற்றலைக் கொண்டிருப்பது தான். அந்த விடயத்தில்.. இந்த சார்ஸ் திரிபுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற அதேவேளை.. சிங்கப்பூர்.. சீனா போன்ற நாடுகள் தமது முன்னைய அனுபவத்தை பாடமாக்கி.. தற்போதை சூழலை நன்கு கட்டுப்படுத்திக் கொண்டிருக்க..

மேற்கு நாடுகள்.. வக்சீன் மூலம்.. சமாளிக்க நினைத்து.. சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்த வைரஸ் தொற்றையும் வெறும் வக்சீனை மட்டும் வைச்சுக் கொண்டு சமாளிக்க முடியாது. குறிப்பாக துரித தொற்று துரித திரிபுகளை பிறப்பிக்கும் வைரஸ்கள் விடயத்தில்.. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறை தான் தொற்றைக் குறைக்கும்.. அல்லது கட்டுப்படுத்த உதவும். மேற்கு நாடுகள் அந்த எல்லையை தொட இன்னும் காலம் எடுக்கும். நிச்சயம்.. 2022ம் சவால் மிக்க ஆண்டாகவே இருக்கும்..! 

2003 இல் தெற்காசியாவோடு போன சார்ஸ்.. 2019/20 எப்படி உலகம் பூராவும் பரவியது..??!

எனவே 2022 சார்ஸுக்கான முடிவாக இருக்காது. இந்தக் குறித்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி அதிகரித்த ஒன்றாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் இதை விட மோசமான நிலைகளில் சார்ஸ் மீளலாம்..2003 இல் இருந்து 2020 ல் மீளப் பிறந்த கணக்காய். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் குறிப்பிட்ட தகவல் சரியானதே. எம் ஆர் என் ஏ வக்சீன்.. அவசரகால நிலைக்கான காலக்கட்ட அனுமதியை தான் பெற்றுக்கொண்டது. ஆனால் எம் ஆர் என் ஏ வக்சீன் சோதனை என்பது பலகாலமாகவே நிகழ்ந்து கொண்டிந்த ஒன்று. 

The history of mRNA vaccines: A timeline that shows the key scientific innovations in the development of mRNA vaccines.

https://www.nature.com/articles/d41586-021-02483-w

நெடுக்ஸ் நீங்கள் தந்துள்ள டைம்லைன் 2020 டிசம்பர் முதலில் emergency approval கிடைத்தது வரைதான் காட்டுகிறது. 

ஆனால் பைசருக்கு 2021 ஆகஸ்ட்டில் full approval கிடைத்து விட்டதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

Booster shot போடலாமா, விடலாமா 🤔

போடலாம். இது ஒரு புது விடயமே அல்ல. போலியோ உட்பட எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு எதிராக காலத்துக்கு காலம் ஊக்கத் தடுப்பூசி போடுவது..  குறித்த நோய்களுக்கு எதிராக எமது உடல் போராடுவதற்கான ஆற்றலை அதிகரிக்க உதவும். அது கொவிட் பொருந்தொற்றுக்கும் பொருந்தும். 

6 minutes ago, goshan_che said:

நெடுக்ஸ் நீங்கள் தந்துள்ள டைம்லைன் 2020 டிசம்பர் முதலில் emergency approval கிடைத்தது வரைதான் காட்டுகிறது. 

ஆனால் பைசருக்கு 2021 ஆகஸ்ட்டில் full approval கிடைத்து விட்டதாக தெரிகிறது.

இருக்கலாம். ஆனால்.. பைசர் முதலில் பாவனைக்கு வந்த போது அவசரகால அனுமதியுடன் தான் வந்தது. அதன் பின் வாழும் மனிதர்களையே சோதனைக் கருவியாக்கி.. முழு அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.

ஆனால்.. இந்தப் பெருந்தொற்றை அமெரிக்கா எதிர்பார்த்த அல்லது மறைமுகமாக தோற்றுவித்த ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம். ஏனெனில்.. அமெரிக்கா எதிரி நாட்டு அணு.. மற்றும் ஏவுகணைகள் குறித்த அச்சத்தை விட உயிரியல் ஆயுதப் பாவனை தொடர்பில் கடும் அச்சம் கொண்டிருந்தது. 

குறித்த நேர அட்டவணையை பார்த்தால்.. கொவிட் பெருந்தொற்றுக்கு சில ஆண்டுகள் முன்னரே அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்த எம் ஆர் என் ஏ வக்சீன் தயாரிப்புக்கு நிதி கொடுத்திருக்கிறது.. ஆலோசனையும் கொடுத்திருக்கிறது. அதற்கும் மேல் ஒரு படி.. பில்கேட்ஸ் ஒரு பெருந்தொற்றை எப்படிக் கையாள்வது என்று மில்லியன் டொலர் செயற்திட்டம் ஒன்றை நடத்தியும் இருந்தார். அதில் அவரின் மனைவி சார்ந்த அறக்கட்டளையில் இருந்தும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தமை.. ஊடகங்களில் வெளிவந்திருந்தன. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.