Jump to content

இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!


Recommended Posts

 

இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!
இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது!
இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.
இனிய வாழ்த்துகள் !
 
May be an image of 1 person, standing and indoor
 
 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா

தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

“மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கு” என்றால் என்ன அண்ணே… 😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

“மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கு” என்றால் என்ன அண்ணே… 😂🤣

சிங்களச் சினிமாக்களின் கட்டவுட்டை பார்த்தாலே.. இதுக்கு விளக்கம் விளங்கிடும். 🤣

Link to comment
Share on other sites

உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருது; மலையகத் தமிழ்ப்பெண் நிரஞ்சனிக்கு குவியும் பாராட்டு!

நிரஞ்சனி சண்முகராஜா
News

நிரஞ்சனி சண்முகராஜா ( Photo: Facebook/ Niranjani Shanmugaraja )

 • நடிகை என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளில் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறி வருகிறார் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் மழுப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்கிறார்.
ADVERTISEMENT

நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு, இலங்கை திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழ் நடிகையான நிரஞ்சனி சண்முகராஜா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

இலங்கை மலையகத்தில் பிறந்த நிரஞ்சனி சண்முகராஜா, இலங்கை திரைப்பட உலகில் முன்னணி கலைஞராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்திய வம்சாவளியான நிரஞ்சனி, 1989-ல் பிறந்தவர். சிறு வயது முதல் கலைத்துறை மீது ஆர்வம் அதிகம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் இனிமையாகப் பேசத் தெரிந்தவர்.

கண்டியில் கல்லூரிப் படிப்பை முடித்து 2009-ல் தனியார் வானொலியில் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து வானொலி நாடகத்தில் பின்னணி குரல் கொடுப்பவராகவும், நடிப்பவராகவும் மாறி பின்பு சிங்கள - தமிழ் மேடை நாடகங்களில் தன் முத்திரையைப் பதித்தார் நிரஞ்சனி.

விருது அறிவிப்பு
 
விருது அறிவிப்பு

திரைப்படங்களில் நடிக்க குடும்பத்தினர் முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், நிரஞ்சனியுடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் அவர்களைப் பின்னர் சம்மதிக்க வைத்தது.

 

நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்கு 2011-ல் விருது பெற்றார் நிரஞ்சனி. அதிலிருந்து அவருடைய கலைத்துறை கிராஃப் மேல் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவர தமிழ், சிங்கள படங்களில் நடித்தார்.

`இனி அவன்', `கோமாளி கிங்க்ஸ்' போன்ற திரைப்படங்களில் நடித்த நிரஞ்சனி, இலங்கை திரைப்படத்துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட `கிரிவெசிபுர' என்ற வரலாற்றுப் படத்தில் நாயகியாக நடித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ் - சிங்கள மொழியில் வெளியான `சுனாமி' திரைப்படத்தில் `கல்யாணி' என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததை, இலங்கை ஊடகங்கள் பாராட்டியிருந்தன.

நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

இந்நிலையில்தான் நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் `சுனாமி' படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கை மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை அடிப்படையாக வைத்து இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களை உணர்வு ரீதியாக பதிவு செய்த படைப்பாக அமைந்த இப்படம் இலங்கை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விருது அறிவிப்பின் மூலம் தற்போது உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

தமிழ், சிங்கள நாடகங்கள், திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் இலங்கையில் இதுவரை 8 விருதுகளை பெற்றிருக்கும் நிரஞ்சனி, சர்வதேச அளவில் ஏற்கெனவே பூடானில் நடந்த ட்ரக் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளார். தற்போது நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவிலும் விருது பெற்றுள்ளார்.

நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

நைஜீரியாவில் `பேயல்சா உலக திரைப்பட விழா'வில் 83 நாடுகளின் 1,300 திரைப்படங்கள் கலந்துகொண்டதில், `சுனாமி'க்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.

 

நடிகை என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளில் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறி வருகிறார் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் மழுப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்கிறார்.

இதற்கு முன் மலையகத்திலிருந்து ருக்மணிதேவி என்ற தமிழ் நடிகை இலங்கைத் திரையுலகில் இயங்கியிருக்கிறார். அதற்குப் பின் சிறந்த நடிகையாக நிரஞ்சனி புகழ் பெற்று வருகிறார்.

நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

 

தன் நடிப்புத் திறமையால் இலங்கை மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார் நிரஞ்சனி சண்முகராஜா.

https://www.vikatan.com/arts/international/srilankan-tamil-niranjani-won-best-actress-award-in-international-film-festival-2021

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நிரஞ்சினி சண்முகராஜா. துணிச்சல், தன்னம்பிக்கை கொண்ட தமிழ் பெண்ணாக மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும். 👍👍👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 23:10, nedukkalapoovan said:

தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? 😡 

 இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார்.  

நல்ல காலம் தப்பித்தோம். 

 • Like 7
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விஜய், ரஜினிகாந்தை தெரிந்திருந்த எனக்கு இலங்கை தமிழ் கலைஞர் ஒருவரை அறிமுகபடுத்திய நுணாவிலானுக்கு நன்றி. அவருக்கு அதியுயர்வு கௌரவ விருது அரசினால் வழங்கபட்டது மகிழ்ச்சி.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்  சகோதரி

5 hours ago, tulpen said:

 

நல்ல காலம் தப்பித்தோம். 

சொறியாட்டி அரிப்படங்காது போல...😡

Edited by விசுகு
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நிரஞ்சனி ..........கலைச்சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......!  🌹

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாழ்த்துகள்  சகோதரி

சொறியாட்டி அரிப்படங்காது போல...😡

நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே  எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். 

ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய  வேகத்தை  ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது,  காட்டாதது  வெட்கக்கேடு. அவமானகரமானது. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நிரஞ்சனி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே  எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். 

ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய  வேகத்தை  ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது,  காட்டாதது  வெட்கக்கேடு. அவமானகரமானது. 

 

ஐயா

இது  கருத்துக்களம்

இங்கே அவரவர்  எழுதுபவைகளுக்கு  அவரவரே பொறுப்பு

எழுதும்  கருத்தாளர்கள்  உங்களுக்கான  பதிலை  தருவார்கள்

அவரை திருத்துங்கள் என்ற  கேள்வியை எதற்காக  என்னிடம்  கேட்கிறீர்கள்???

அதற்குள் நீங்கள் எதற்காக தேசியம் அது  இது என்று  சிண்டு முடிகிறீர்கள்???

முதலில்  உங்களை  திருத்துங்கள் சமுதாயம்  தானாக  திருந்தும்

 

 

Edited by விசுகு
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? 😡 

 இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார்.  

நல்ல காலம் தப்பித்தோம். 

அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... கூத்தாடிகளுக்கும் காட்டிக்கொடுப்பாளர்களுக்கும் உருகிற உருக்கம் இருக்கே... சொல்லி வேலையில்ல. 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... 

அதே.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... கூத்தாடிகளுக்கும் காட்டிக்கொடுப்பாளர்களுக்கும் உருகிற உருக்கம் இருக்கே... சொல்லி வேலையில்ல. 

 

2 hours ago, விசுகு said:

அதே.....

இருவருக்கும் நேர்மையாக கருத்துக்கு பதிலெழுத முடியவில்லை. ஆகவே தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து தப்பிக்கொள்கின்றீர்கள்.  இது வழமையாக  நடக்கும் விடயம் தானே. 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

 

இருவருக்கும் நேர்மையாக கருத்துக்கு பதிலெழுத முடியவில்லை. ஆகவே தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து தப்பிக்கொள்கின்றீர்கள்.  இது வழமையாக  நடக்கும் விடயம் தானே. 😂

 

தேசியம் என்பது  உயிரினும்  மேலானது

அதை  எவர்  தமது  அரிப்புக்கு  சொறிஞ்சாலும்  கோபம்  வரும்  உணர்வுள்ளவன்  எவனுக்கும்  வரணும்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

தேசியம் என்பது  உயிரினும்  மேலானது

அதை  எவர்  தமது  அரிப்புக்கு  சொறிஞ்சாலும்  கோபம்  வரும்  உணர்வுள்ளவன்  எவனுக்கும்  வரணும்

இப்படியே  வாய்சவடால் விட்டுக்கொண்டே நமது உயிரைக்காப்பாற்ற விமானமேறி காப்பாற்ற, நான் சுவிற்சர்லாண்டுக்கும், நீங்கள் பிரான்ஸிற்கும் வந்திட்டம்.  இருவரதும் கெட்டித்தனம் தான்.  

“தேசியம் என்பது ஊரான் வீட்டு பிள்ளைகளின் உயிரினும் மேலானது”. 😂

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இப்படியே  வாய்சவடால் விட்டுக்கொண்டே நமது உயிரைக்காப்பாற்ற விமானமேறி காப்பாற்ற, நான் சுவிற்சர்லாண்டுக்கும், நீங்கள் பிரான்ஸிற்கும் வந்திட்டம்.  இருவரதும் கெட்டித்தனம் தான்.  

“தேசியம் என்பது ஊரான் வீட்டு பிள்ளைகளின் உயிரினும் மேலானது”. 😂

 

சரி ஐயா

அப்போ எதுக்கு  யாழ்  களத்தில்  தமிழர்களுடன்  தமிழில் பேசிக்கொண்டு?????

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

 

சரி ஐயா

அப்போ எதுக்கு  யாழ்  களத்தில்  தமிழர்களுடன்  தமிழில் பேசிக்கொண்டு?????

நீங்களே பேசலாம் எண்டா நாங்களும் பேசலாம் தானே! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனையும் தமிழ் மகன் என்று வாழ்த்திப் பின் துயரப்பட்டவர்கள் நாங்கள்.

 இப்போது சகோதரி நிரஞ்சனி சண்முகராசா அவர்களையும் தமிழ் மகள் என்று வாழ்த்துவோம். அவரது நடவடிக்கைகள்பற்றி நிச்சயம் வெளிவரும். அப்போது, மகிழ்வடைவோமா? துயர்படுவோமா?? பார்க்கலாம். 

வாழ்த்துக்கள் சகோதரி!!.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.