Jump to content

இது கடைசி அல்ல இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. பொதுச் செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது கடைசி அல்ல இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. பொதுச் செயலாளர்

உலகை உலுக்கி வரும் ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்கிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.இந்நிலையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும். கொரோனாவைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும். உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

 

http://www.samakalam.com/இது-கடைசி-அல்ல-இன்னும்-நி/

  • Sad 1
Link to comment
Share on other sites

ஆஹா இவங்கள் சீனாக்காரனோடை ஏதோ அக்ரீமெண்ட் போட்டுட்டாங்கள் போல இருக்கே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

ஆஹா இவங்கள் சீனாக்காரனோடை ஏதோ அக்ரீமெண்ட் போட்டுட்டாங்கள் போல இருக்கே!!

உங்கடை கதையை பார்த்தால் மற்றைய நாடுகள் எல்லாம் ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் போல இருக்கே.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.