Jump to content

இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!

December 29, 2021
 
index 1080x620 1 இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இணக்கம் ஒன்றை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் என்று அறிய வருகின்றது.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ முன்னெடுத்தது. இதில் தமிழ்த் தேசிய கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என 11 கட்சிகள் ஒன்றிணைந்தன.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் வரைவை இந்தக் கட்சிகள் கூடித் தீர்மானித்தன. இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், கட்சித் தலைவர்கள் அநேகமாக இன்று கையொப்பமிடுவர் என்றும் இதன் ஒருங்கிணைப்பாளரும் வரைவை தயாரித்தவருமான ரெலோ கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முஸ்லிம் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட சில விவகாரங்களில் முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பு காட்டின. இதனால், உட்கட்சி முரண்பாட்டை காரணம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடிதத்தில் கையொப்பமிடுவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்தது. எனினும், அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதேவிடயத்தையே மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. எனினும், அந்தக் கட்சியின் செயலாளர் தாம் காலஅவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரு கட்சிகளுடனும் பேச்சு நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்தச் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பில் நடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அறிய வருகின்றது. எனினும், இதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் தமக்கு இதுவரை அப்படி ஓர் அழைப்பு கிடைக்கவில்லை என்றும் கட்சியின் தலைவருக்கு கிடைத்தால் அது தொடர்பில் அவர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கையொப்பமிடுவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் இரு நிலைப்பாடு தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா மறுத்துள்ளார். ரெலோவுடன் தமிழ் அரசுக் கட்சி இணைந்து எடுத்த முடிவில் கட்சி உறுதியாக நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.

https://www.ilakku.org/இந்தியப்-பிரதமருக்கான-கட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிக்கல்தான்.

நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன கிழக்கில் இப்போ இனத்தொகை விகிதம் 30:30:30 தான்.

இப்போதைக்கு கிழக்கு முஸ்லிம்கள் பெரும்பாலும் (சில தமிழரும் கூட) வட-கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பே.

ஆகவே இன்று கிழக்கில் வட-கிழக்கு இணைப்பு பற்றி ஒரு சர்வசன வாக்கெடுப்பு நிகழ்ந்தால் அது தோற்கும்.

இந்த வகையில் தமது மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை முஸ்லிம் கட்சிகள் எடுப்பது அவர்களின் அரசியல் தற்கொலைக்கு சமன்.

ஆகவே தமிழர் முன் இப்போ உள்ள தெரிவுகள் 2 தான்.

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு அதிகாரத்தை பகிர இணங்கல்.

2. வடக்கு-கிழக்கு இணைப்பை மறத்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை மடிக்க  விட்டாலும்

விடாவிட்டாலும் எதையும்  உருப்படியாக பெற விடாதுகள்

உலகின் நாசதாரிகள்😭

Link to comment
Share on other sites

தலைவரின் பேச்சுவார்த்தையில் இருந்து இற்றை வரை பங்கு பற்றி உருப்படியாக எதையும் இவர்கள் செய்ய விடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு அதிகாரத்தை பகிர இணங்கல்

உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

Link to comment
Share on other sites

1 minute ago, வாலி said:

உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

ஆனால் அது சாத்தியமென்றாலும்,”பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்”,  என்று அடம் பிடித்து காலத்த கடத்திக் கொண்டு நிற்கேக்க மான்றில் உடைஞ்சிடும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

இதுதான் சரியாக இருக்கும். வடக்குடன் கிழக்கின் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களை இணைத்துக் கொள்வது.

அதற்குக் கூட கிழக்குத் தனிழர்களின் சம்மதம் வேண்டும். 

சிக்கலான விடயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவனுக்களை கழற்றி விட்டிட்டு நாம் நம் பாட்டில் நகர ஆரம்பித்தால் எல்லாம் நன்றே நடக்கும். சிங்களத்துக்கும் இவர்களுக்கும் தமிழரை விட்டால் அரசியல் செய்ய ஒன்றுமே இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

ஓம்

3 hours ago, வாலி said:

51 % கேட்பானுகள்.

ஆரம்பத்தில் தான் 51 வீதம் கேட்பார்கள் பின்பு ஏறி ஏறி கொண்டு போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

3 hours ago, tulpen said:

முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

ஆனால் அது சாத்தியமென்றாலும்,”பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்”,  என்று அடம் பிடித்து காலத்த கடத்திக் கொண்டு நிற்கேக்க மான்றில் உடைஞ்சிடும். 😂

2 hours ago, ரஞ்சித் said:

இதுதான் சரியாக இருக்கும். வடக்குடன் கிழக்கின் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களை இணைத்துக் கொள்வது.

அதற்குக் கூட கிழக்குத் தனிழர்களின் சம்மதம் வேண்டும். 

சிக்கலான விடயம்தான்.

2வது ஒப்சன் என்பது கிட்டதட்ட கிழக்கு மாகாணத்தையும், அங்கு வாழ் தமிழர்களையும் கை கழுவி விடுவதற்கு சமன் வாலி. வடக்கிலும் கிழக்கிலும் தனிதனியே அலகுகளை உருவாக்குவது, நாம் கஸ்டபட்டு போராடி ஒரு அலகை எடுத்து, மறு அலகை ஈசியாக முஸ்லீம்+சிங்கள மக்களிடம் கொடுப்பது போல. 

அங்கே சில அரசசார் சுயநல அரசியல்வாதிகள் அவர்தம் அடிபொடிகளை தவிர்த்து பெரும்பாலான கிழக்கு தமிழர்கள் வடக்கு தமிழருடன் இணைந்த ஒரு அலகையே விரும்புகிறார்கள் என்பது என் கணிப்பு.

அதே போல் வடக்கு தமிழருக்கும் கிழக்கு தமிழரோடு இணைவதே நீண்டகால நோக்கில் பாதுகாப்பு. அடம்பன் கொடியும்…..

துல்பென் சொல்வது போல் அஷ்ரப் காலத்தில் முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என ஒரு விடயம் பேசப்பட்டது.

நீலனின் திட்ட வரைபிலும் இருந்ததாக நியாபகம்.

கிழக்கு மாகாணத்தின் 40% (முஸ்லீம் பெரும்பான்மை) நிலப்பரப்புகள், மன்னார் மாவட்டதின் ஒரு பிரதேச சபை போன்றவற்றை இணைத்து அவர்களுக்கு ஒரு தனி அலகும், எஞ்சும் நிலத்தில் வட கிழக்கு அலகையும் உருவாக்குவது சாத்தியப்படலாம். எல்லையோர சிங்கள பகுதிகளை வடமத்தி, மொனராகலயுடன் இணைக்க வேண்டி வரலாம். இதே நிலை வவுனியா தெற்கிலும், மணலாற்றிலும் வரலாம்.

இந்த இழப்புகளை- இப்போ இருக்கும் நிலத்தை (செம்மலை, அலம்பில், நாயாறு, கொக்கிளாய், தென்னமரவாடி,  கரடியனாறு, வாகரை, கொக்கட்டிசோலை, புல்லுமலை, அம்பாறை எல்லை கிராமங்கள்) போன்றவற்றை தக்கவைக்க கொடுக்கும் விலை என்று கருதி தமிழர்கள் safeguard at least what you have now அடிப்படையில் முஸ்லிம்களுடன் ஒரு தீர்வுக்கு போக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.

இப்படி ஒரு முஸ்லிம் பெரும்பான்மை அலகை உருவாக்கினால் அதனுள் வரும் தமிழர்களின் உயிர்/உடமை பாதுகாப்பு reciprocal அடிப்படையில் தமிழ் அலகுனுள் வரும் முஸ்லீம்களின் பாதுகாப்பின் பிரகாரம பேணப்படவேண்டும். அதாவது பொத்துவில் தமிழனின் பாதுகாப்பு, முள்ள்ளியவளை முஸ்லீமின் பாதுகாப்பில் தங்கி இருக்கும்.

மேலும் இப்படி ஒரு அலகை உருவாக்கினால் -சிங்கள இனவாதிகளின் கவனம் முழுக்க அவர்கள் மேலேயே இருக்கும். இதையும் நாம் கவனமாக ராஜதந்திரமாக கையாளலாம்.

இல்லாத பட்சத்தில் துல்பென் சொல்வதுபோல், பெற்றோல் மேக்ஸ்தான் வேணும் என்று மெண்டிலை உடைக்கவே வாய்புகள் அதிகம்.

48 இல் இருந்து மெண்டிலை மீள, மீள உடைத்தவர்கள் நாம். இந்த முறையும் அப்படி நடக்க கூடாது என்பது என்வேண்டுதல்.

பிகு

இப்படி ஒரு clean cut solution க்கு தமிழர், முஸ்லீம்கள் உடன்பட்டாலும் இலங்கை உடன்படுவது கஸ்டம். 

அவர்களுக்கு தெரியும் 87 இந்திய இராணுவ வருகை போல, தமிழர், முஸ்லீம்களை விட இப்படி ஒன்று நடந்தால் அதில் அதிகம் பாதிக்க பட போவது தாமே என்று. ஆகவே 86-90 இல் செய்ததை போன்ற இராஜதந்திர நகர்வுகளை செய்ய முனைவர்கள்.

13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம்

ஆரம்பத்தில் தான் 51 வீதம் கேட்பார்கள் பின்பு ஏறி ஏறி கொண்டு போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலையே மிகப்பெரிய முஸ்லீம் நாடு இந்தோனேசியா… பணக்கார முஸ்லிம் நாடுகளில் ஒன்று மலேசியா.. இந்த ரெண்டு நாடுகளும் அடைக்கலம் நாடிவந்த நாடில்லாத ரோகிங்கியா முஸ்லீம்களை போட்டு படுத்தும் பாடு.. இண்டைக்கும் ஒரு போட் அகதிகளை இந்தோனேசியா மலேசியாக்கு திருப்பி அனுப்பி இருக்கு.. இவனுகள் எல்லாம் மதம் மதம் எண்டு வெறிபிடித்து அலைவது மற்றவனுக்கு உபத்திரம் கொடுக்கத்தான் ஒழிய யாருக்கும் உதவ அல்ல.. இந்த பூமியில் இயற்கை அனர்த்தங்களுக்கு அப்புறம் அதிகளவு மக்கள் இறந்தது என்றால் இந்த வீனாப்போன மதவெறியர்களால்தான்..

Indonesia rejects Rohingya refugees, sends boat to Malaysia

At least 100 people, mostly women and children, on board a wooden vessel said to be taking on water denied refuge.

A boat carries Rohingya people stranded at sea, Indonesia,
A boat carries Rohingya people stranded at sea off Indonesia [Aditya Setiawan via Reuters]
Published On 28 Dec 202128 Dec 2021
 
Dozens of Rohingya refugees who were intercepted after their boat ran into trouble off the coast of Indonesia’s Aceh province were being sent into Malaysian waters, authorities said.

At least 100 people, mostly women and children, on board a wooden vessel said to be taking on water were denied refuge in Indonesia and instead pushed into the neighbouring Southeast Asian country.

https://www.aljazeera.com/news/2021/12/28/indonesia-rejects-rohingya-refugees-sends-boat-to-malaysia?fbclid=IwAR1JTD6JKbTo8efw8yx_WqvETQRdeB1TxPr9hkWm5-OjWU55vpvqGE_3G5o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் போகுமா..?! இல்ல.. கதை தானா..?!

உதில இருக்கிற எல்லாருமே 1989 இல் ஹிந்தியப் படை எடுபிடிகளாக இருந்தவர்கள். இவர்களால் ஹிந்தியாவுக்கு ஒரு கடிதத்தைக் கூட அனுப்ப வக்கில்ல.. இப்ப. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடியை பிரிச்சு குடுத்திட்டு நாம் நம்ம பாட்டை பாப்போம். உவனுகளோட சேர்ந்தால் நம்மளை வாழவும் விடான்கள், சாகவும் விடான்கள். சிரங்குமாதிரி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, satan said:

காத்தான் குடியை பிரிச்சு குடுத்திட்டு நாம் நம்ம பாட்டை பாப்போம். உவனுகளோட சேர்ந்தால் நம்மளை வாழவும் விடான்கள், சாகவும் விடான்கள். சிரங்குமாதிரி......

உண்மை...

கூட வைத்திருந்தால் எப்பவும் ஏதெனும் ஒரு சிக்கலை தோற்றுவித்துக்கொண்டே இருப்பாங்கள். சைக்🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் முஸ்லீம்களும் தமக்குள் வடக்குக் கிழக்கு இணைப்புப்பற்றி இணங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் சிங்களவர்கள் இதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்? இந்தியாவிடம் கேட்டால் உடனேயே பெற்றுக் கொடுத்துவிடுவார்களா? 2009 இலிருந்து 2021 வரை 12 வருடங்களில் செய்ய விரும்பாததை இந்தியா ஏன் இப்போது செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்? 

ஆனால் செய்தால் நன்மையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தீர்வு அடிப்படைக்கு வந்து, ஒத்த குரலில் இந்தியாவை நாடும் போது அது வட கிழக்கின் சனதொகையின் அறுதிபெரும்பான்மை எடுத்த முடிவாகிறது.

முதல் முறையாக இலங்கையை தவிர்த்து தமிழ்-முஸ்லிம்-இந்தியா என்று ஒரு நகர்வு நடப்பது முன்னேற்றம்தான்.

12 வருடத்தில் பல அதி தீவிர தமிழ் தேசியர்களுக்கும் கள யதார்தம் ஓரளவு விளங்கி விட்டது என்பது என் கணிப்பு.

அதே போல் 12 வருடத்தில் இலங்கை முஸ்லீம்களும் ஏன் இலங்கையை நம்ப முடியாது என்ற பாடத்தை கற்றுள்ளார்கள்.

அதே 12 வருடத்தில் இந்தியாவும் இலங்கை பற்றி புரிந்தததா என்பதுதான் சந்தேகம்.

முயலட்டுமே.

13 ஐ கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

13 +, சமஸ்டி கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

கஜன்ஸ் இரு தேசத்துக்கு முயலட்டும்.

சில புலம்பெயர் நபர்கள் தனிநாட்டுக்கு முயலட்டும். 

ஏதாவது சரி வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

13 ஐ கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

13 +, சமஸ்டி கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

கஜன்ஸ் இரு தேசத்துக்கு முயலட்டும்.

சில புலம்பெயர் நபர்கள் தனிநாட்டுக்கு முயலட்டும். 

கோஷான்,

இதிலுள்ள வேதனை என்ன தெரியுமோ? இந்தியாவிட்ட நாங்கள் முன்வைக்கப்போற இந்தக் கோரிக்கை,மேலே நீங்கள் சொன்ன எல்லாத்தையும் விடக் குறைந்த தீர்வுதான் எண்டது. அதுகூட, இந்தியா எடுத்துத் தருமோ எண்டு எங்களுக்குத் தெரியாது. சிலவேளை நூற்றுக்கு 5 வீதம் சந்தர்ப்பம் (இதுகூட அதிகம் தான்) இருக்கெண்டு நாங்கள் எடுத்துக்கொள்ளுவோம் இப்போதைக்கு.

மற்றும்படி, நீங்கள் சொன்னது மெத்தச்சரி.

தனிநாடு - சாத்தியமேயில்லை, புலிகளோட அதுவும் போட்டுது

13 - 1987 இல கைச்சாத்திட்டதோட  அதின்ர  கதை முடிஞ்சுது. ஆனால் என்னட்ட ஒரு கேள்வி இருக்குது. புலிகளாலதான் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏலாமல் போட்டுதெண்டு சொன்னவை, இண்டைக்கு என்ன சொல்லப்போகினம்? சிலவேளை புலிகள் இல்லையாம், பிறகு ஆருக்குத் தீர்வு வேணும் எண்டு நெய்க்கினம் போல. 

13 +. - மகிந்தவின்ர புலுடா, நடக்கவே நடக்காது

கஜன் கோஷ்ட்டியின்ர இரு தேசம் - அவையளுக்கே இது நடக்காதெண்டு நிச்சயம் தெரியும்.

ஆனால் ஒண்டு பாத்தியளே, தமிழ்பேசும் கட்சிகள் எண்டு எல்லாரும் சேர்ந்து வரேக்கையும் கஜன் கோஷ்ட்டியிக்கு வர ஏலாமல் இருக்கு. அப்பிடி என்னத்தைத்தான் சாதிக்கப்போயினமோ தெரியேல்லை. அவையள் யாழ்ப்பாண மாநகரசபையோட மல்லுக்கு நிக்கிறதுதான் தங்கட அரசியல் எண்டு நெய்க்கினம் ஆக்கும். 

37 minutes ago, goshan_che said:

12 வருடத்தில் பல அதி தீவிர தமிழ் தேசியர்களுக்கும் கள யதார்தம் ஓரளவு விளங்கி விட்டது என்பது என் கணிப்பு.

இங்கதான் பிரச்சினையே இருக்குது அப்பன்.

கள யதார்த்தம் நல்லா விளங்கி , நாங்கள்  பேசாமலிருப்பம், அவன் செய்யிறதைச் செய்யட்டும், தாரதைத் தரட்டும் எண்டும், வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதெண்டும், அபிவிருத்தி காணும், வேறை ஒரு ம--- வேண்டாம் எண்டும் நினைக்க வெளிக்கிட்டுட்டம். 

1990 இல பிரேமதாசா சொன்ன, "வடக்கை எடுத்துக்கொள்ளுங்கோ, கிழக்கு எங்களிட்டை இருக்கட்டும்" எண்ட இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

தமிழர்களும் முஸ்லீம்களும் தமக்குள் வடக்குக் கிழக்கு இணைப்புப்பற்றி இணங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் சிங்களவர்கள் இதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்? இந்தியாவிடம் கேட்டால் உடனேயே பெற்றுக் கொடுத்துவிடுவார்களா? 2009 இலிருந்து 2021 வரை 12 வருடங்களில் செய்ய விரும்பாததை இந்தியா ஏன் இப்போது செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்? 

ஆனால் செய்தால் நன்மையே!

ஆண்டிகள் கூடி மடம் கட்ட நினைக்கிறோம். வேறொன்றுமில்லை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பேறு வீதத்தை % கட்டுபடுத்தாவிட்டால் வடக்கும் பறிபோகும் அவலம் வெகுதூரத்தில் இல்லை. . 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

13 - 1987 இல கைச்சாத்திட்டதோட  அதின்ர  கதை முடிஞ்சுது. ஆனால் என்னட்ட ஒரு கேள்வி இருக்குது. புலிகளாலதான் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏலாமல் போட்டுதெண்டு சொன்னவை, இண்டைக்கு என்ன சொல்லப்போகினம்? சிலவேளை புலிகள் இல்லையாம், பிறகு ஆருக்குத் தீர்வு வேணும் எண்டு நெய்க்கினம் போல. 

13ம் சட்டம் 1987 இல் நிறைவேறாமல் போக புலிகள் ஒரு பெரும் காரணம் ஆனால் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல.

13 ம் திருத்தத்தை வலுவாக எதிர்த்தோர் இருவர். புலிகள், சிங்கள இனவாத அரசு. இருவரும் எதிர்க்க உண்டான காரணங்கள் எதிரும் புதிருமானவை ஆனால் இருவரும் 13ஐ சரி சமனாக எதிர்த்தார்கள்.

புலிகளோடு அவர்கள் எதிர்த்த (எதிர்பார்த்த) காரணமும் அழிந்து விட்டது. ஆனால் இனவாதிகள் இன்னும் அப்படியே இருப்பதால், முன்பை விட வலுவாக இருப்பதாலும், இதை அமல்படுத்துவது பற்றி இந்தியா அதிக கரிசனை அற்று இருப்பதாலும் - இன்றும் இதை அமல்படுத்த கோரி கடிதம் எழுதும் பால நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஆனால் ஒண்டு பாத்தியளே, தமிழ்பேசும் கட்சிகள் எண்டு எல்லாரும் சேர்ந்து வரேக்கையும் கஜன் கோஷ்ட்டியிக்கு வர ஏலாமல் இருக்கு. அப்பிடி என்னத்தைத்தான் சாதிக்கப்போயினமோ தெரியேல்லை.

நிச்சயமாக இதுவரை தமிழர் தரப்பை இந்தியா taken for granted ஆக நடத்தி வருகிறது என்பது தெளிவு.

அப்படி செய்யாமல் எம்மை கொஞ்சமாவது கனம் பண்ணி நடக்க, 3 உபாயங்களை கையாளலாம்.

1. தமிழ் நாட்டின் மூலம் டெல்லியை நெருக்குதல்

2. நேரடியாக மேற்கினை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்

3. இந்தியாவின் எதிரிகளை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்.

இதில் 1,2 ஐ செய்யும் தமிழ் கட்சி 3 ஐ செய்ய முடியாது.

ஆனால் மூன்றில் ஒன்றைதானும் செய்யாத கஜன்ஸ், 3 ஐ செய்வது போல் பாசாங்காவது செய்யலாம். ஆனால் எதுவும் செய்வதில்லை.

சுமந்திரன் அட்லீஸ்ட் வெளிநாடு வந்து சின்ன சின்ன தலைவர்களை சந்திகிறார், புலம் கூட்டங்களை நடத்துகிறார்.

கஜன்ஸ்? 

மூன்று தலைமுறையாக அந்த குடும்பம் ஒரே ஒரு காரணதுக்காகவே அரசியல் செய்கிறது. 

ஒரு எம்பி சீட். 

அதுக்கு ஒரு கட்சி, அதற்கு ஒரு புலம்பெயர் ஆதரவுதளம் கூட.

கீரை கடை, எதிர் கடை எண்டு காரணம் சொல்லி கொண்டு தேர்தல் நேரம் கஜன்சை ஆதரித்து  எழுதியோர் எல்லாம் இப்போ யாழில் கப்சிப்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

கள யதார்த்தம் நல்லா விளங்கி , நாங்கள்  பேசாமலிருப்பம், அவன் செய்யிறதைச் செய்யட்டும், தாரதைத் தரட்டும் எண்டும், வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதெண்டும், அபிவிருத்தி காணும், வேறை ஒரு ம--- வேண்டாம் எண்டும் நினைக்க வெளிக்கிட்டுட்டம். 

1990 இல பிரேமதாசா சொன்ன, "வடக்கை எடுத்துக்கொள்ளுங்கோ, கிழக்கு எங்களிட்டை இருக்கட்டும்" எண்ட இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. 

இல்லை இது கள யதார்த்தம் விளங்கிய நிலை அல்ல. இது ஒருவகையான all or nothing மனநிலை.

ஒன்றில் தனி நாடு அல்லது வடக்கை மட்டும்   ஒரு மாகாண சபையாகவேணும் தாங்கோ எனும் மனநிலை.

இப்படி கிழக்கை சேர்க்க தயங்க காராணம் முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ/ஆள விரும்பாமை. இது நியாயமான நிலைப்பாடுதான். 

ஆனால் முஸ்லீமோடு நாம் அதிகாரத்தை பகிர விரும்பவில்லை என்பதற்காக கிழக்கு தமிழனை அதே முஸ்லிம்+சிங்கள மேலாண்மைக்குள் பெட்டி கட்டி அனுப்பவும் முடியாது. அப்படி நடந்தால் இராசதுரை-கருணா சொன்னது அனைத்தும் உண்மை என்றாகி விடும்.

Eastern Tamils are not expendables. They are not a bargaining chip. வடக்கு தமிழருக்கு வரும் அதே தீர்வு அவர்களுக்கும் வர வேண்டும்.  இழப்புகளில் அவர்களுக்கு சம பங்கை கொடுத்து விட்டு, பலனை வடக்கு மட்டும் அனுபவிக்க முடியாது.

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லீம்களோடு அதிகாரத்தை பகிரல். இதை நாம் விரும்பவில்லை என்றால்.

2. நிலத்தொடர்பற்ற முஸ்லீம் அலகை ஏற்றல். 

இவைதான் தெரிவுகளாக இருக்க முடியும்.

பாப்போம்….இப்பதானே காத்தான்குடியை விட்டு கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கோம் (எப்ப கையில் வைத்திருந்தோம் விட்டு கொடுக்க🤣). போக, போக களயதார்த உறைப்பு கூடும் போது.   தெரிவு 2 ஐ ஏற்பது இலகுவாகலாம்.

Link to comment
Share on other sites

9 minutes ago, goshan_che said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பிள்ளை பேறு வீதத்தை % கட்டுபடுத்தாவிட்டால் வடக்கும் பறிபோகும் அவலம் வெகுதூரத்தில் இல்லை. . 😢

கொஞ்சம் நடப்பது மாரி கதைப்போம் தோழர். 

ஆரிய குளத்துக்கு என்ன கலர் பெயிண்ட் அடிப்பது என்பதை கூட முடிவு செய்யும் பவர் கூட இல்லாத நாம் எப்படி பிள்ளை பேறு வீதத்தை - அதுவும் ஒரு இனத்தினதை மட்டும் கட்டுப்படுத்த முடியும்?

9 minutes ago, tulpen said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

இந்த மனநிலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அளவுக்கு ஊரில் இல்லை என்பது பெரும் நிம்மதி.

இங்கே மார்தட்டுவது லேசு, முடிவுகள் நம்மையோ, பிள்ளைகளையோ பாதிக்காதுதானே. 

ஆனால் ஒன்று இந்தமுறையும் பெற்றோல் மேக்ஸ்தான் வேணும் எண்டு அடம்பிடித்து மெண்டிலை உடைத்தால் - அடுத்த முறை கிழக்கை முற்றாக இழந்து, வடக்கில் தமிழருக்கு நில தொடர்பற்ற அலகு கோர வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.