Jump to content

யாழ் கருத்துக்களம் 2021 - ஒரு மீள்பார்வை


Recommended Posts

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. 

இவ்வாண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் உலகநாடுகள் அனைத்திலும் வழங்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸானது திரிபடைந்து நெருக்கடிகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது.  கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்  வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும், தடுப்பூசிகள் பற்றிய முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் யாழ் கருத்துக்களம் பகிர்ந்துகொண்டு வருகின்றது.

இந்த வகையில் 2021 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம்.

குறிப்பு: 01-01-2021 முதல் 26-12-2021 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது.

 

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் பார்வைகள் கொண்டவை

 1. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021
 2. தரைப்புலிகளின் படிமங்கள்(LTTE Land Tigers Images)
 3. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021
 4. சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
 5. கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம் 💞 
 6. தமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)
 7. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
 8. ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’
 9. வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.
 10. யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

இவற்றுடன் களம் தொடர்பான பின்வரும் திரியும் அதிக பார்வைகளைக் கொண்டிருந்தது.

 

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் கருத்துக்கள் பதியப்பட்டவை

  1. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021
  2. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 
  3. தரைப்புலிகளின் படிமங்கள்(LTTE Land Tigers Images)
  4. சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்  
  5. கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம் 💞   
  6. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
  7. பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
  8. ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ 
  9. எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!
  10. நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல் 

  குறிப்பு: கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய நாற்சந்தியில் உள்ள திரி ஒன்று இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

   

  2021 இல் இணைந்து அதிகம் கருத்துக்கள் பதிந்த உறவுகள் (முதல் ஐவர் மட்டும்)

   1. நன்னிச் சோழன் 20,956
   2. sivarathan1 142
   3. தமிழகன் 108
   4. Aruvadai Nilavu 36
   5. ஆ.சாமி 29

   குறிப்பு: இவ்வாண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்கள் பலர் கருத்துக்கள் மிகவும் குறைவாகவே பதிந்துள்ளமையால் முதல் ஐவர் மட்டும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    

   2021 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

    1. குமாரசாமி   3,108
    2. தமிழ் சிறி  2,320
    3. suvy  2,054
    4. goshan_che 1,791
    5. கிருபன்   1,721
    6. புரட்சிகர தமிழ்தேசியன்  1,090
    7. உடையார்  1,052
    8. பெருமாள்  992
    9. ரஞ்சித்  974
    10. அன்புத்தம்பி 970

     

    2021 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் வழங்கிய உறவுகள்

     1. தமிழ் சிறி  2,346
     2. suvy  2,073
     3. ஈழப்பிரியன்  1,658
     4. குமாரசாமி  1,566
     5. விசுகு  1,378
     6. பெருமாள்  1,342
     7. nunavilan  1,239
     8. உடையார்  1,236
     9. புரட்சிகர தமிழ்தேசியன்  1,123
     10. பையன்26  1,054

      

      

     நன்றி

     யாழ் நிர்வாகம்

     • Like 5
     • Thanks 4
     Link to comment
     Share on other sites

     • கருத்துக்கள உறவுகள்

     வழமையாக கனடா மட்டுறுத்துனர் தானே இதனை வேறு விதமாக தொகுத்து வந்தார் சோ அந்த முறை விருப்ப பட்டவர்கள் மேலும் எழுதவும் தூண்டியது.அதற்குள் ஏன இந்ந வரவு செலவு அறிக்கை மாதிரி நீங்களே அவர் அத்தனை புள்ளி போட்டார் இவர் கருத்து எழுதுனார் இது வேணுமா..முதல் இந்த நியானி ஐடியை இல்லாமல் செய்ய வேணும்..பட் எனக்கு ஒரு பொறாமையும் இல்லை எரிச்சலும் இல்லை..நான் எப்படி கருத்தை வைத்தாலும் மற்ற இணையங்களைத் தேடிப் போகாத உறுப்பினர்.பட் போக வைச்சுடாதீங்கள்...

     • Haha 1
     Link to comment
     Share on other sites

     • கருத்துக்கள உறவுகள்
     56 minutes ago, நியானி said:

     2021 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் வழங்கிய உறவுகள்

     1. தமிழ் சிறி  2,346
     2. suvy  2,073
     3. ஈழப்பிரியன்  1,658
     4. குமாரசாமி  1,566
     5. விசுகு  1,378
     6. பெருமாள்  1,342
     7. nunavilan  1,239
     8. உடையார்  1,236
     9. புரட்சிகர தமிழ்தேசியன்  1,123
     10. பையன்26  1,054

      

     ஒரு நாளைக்கு 5 விருப்புப்புள்ளிகள்தான் போடலாமென்றால் 364 நாட்களுக்கு 1820 விருப்புப்புள்ளிகள்தானே போடமுடியும்? கணக்கு எங்கேயோ இடிக்குதே?? இல்லாவிட்டால் இப்போ 5ஐ விட கூடவும் போடலாமோ ??? 

     Link to comment
     Share on other sites

     7 minutes ago, Eppothum Thamizhan said:

     ஒரு நாளைக்கு 5 விருப்புப்புள்ளிகள்தான் போடலாமென்றால் 364 நாட்களுக்கு 1820 விருப்புப்புள்ளிகள்தானே போடமுடியும்? கணக்கு எங்கேயோ இடிக்குதே?? இல்லாவிட்டால் இப்போ 5ஐ விட கூடவும் போடலாமோ ??? 

      

     7. விருப்புப் புள்ளிகள்
     யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்குவிக்கவும் "கருத்துக்கள உறவுகள்" குழுமத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் இடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
     அத்துடன் தினந்தோறும் கள உறுப்பினர்களின் தங்க, வெள்ளி, வெண்கல முன்னணி நிலைகள் அதிகூடிய விருப்புப் புள்ளிகளின் அடிப்படையில் தானியங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது.

     விருப்புப் புள்ளி வகைகள் (Reaction Types)

     spacer.png

     • Like(+1 புள்ளி)
     • Thanks (+1 புள்ளி)
     • Haha (+1 புள்ளி)
     • Confused(0 புள்ளி)
     • Sad (0 புள்ளி)

     மதிப்பு நிலைகள் (Reputation Levels)

     • Neutral (50 புள்ளிகளுக்கு கீழ்)
     • Good (50 - 100 புள்ளிகள்)
     • Excellent (100 - 250 புள்ளிகள்)
     • ஒளி (250 - 500 புள்ளிகள்)
     • பிரகாசம் (500 - 1000 புள்ளிகள்)
     • நட்சத்திரம் (1000 புள்ளிகளுக்கு மேல்)

     விருப்புப் புள்ளிகள் தொடர்பான விதிகள்:

     • கள உறுப்பினர் ஒருவர் குறித்த 24 மணிநேர இடைவெளியில் அதிக பட்சமாக 8 விருப்புப் புள்ளிகள் மாத்திரமே வழங்க முடியும்.  விருப்புப் புள்ளிகள் வழங்கியவரின் பெயர் புள்ளிகளின் அருகே காண்பிக்கப்படும்.
     • சக கள உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தவும், தரமான பதிவுகளுக்கும் விருப்புப் புள்ளிகள் இடுவது விரும்பப்படுகின்றது.
     • கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது.
     • கள உறுப்பினர்கள் குழுவாகச் சேர்ந்து தமக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது.
     • கள உறுப்பினர் ஒருவர் தனது பதிவுகளுக்கு வேறு பயனர் பெயரில் உள்நுழைந்து விருப்புப் புள்ளிகள் வழங்குதல் கூடாது.
     • கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அல்லது பிற கள உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்குவதற்காக பல உறுப்பினர்கள் பெயர்களில்  கருத்துக்களத்தில் இணைவது கூடாது.
     • கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் "கருத்துக்கள பார்வையாளர்கள்" குழுமத்திற்கு நகர்த்தப்படுவதனால், அவர்கள் கருத்துக்கள் பதியும்வரை விருப்புப் புள்ளிகள் இடும் வசதி நீக்கப்படும்.
     • Thanks 1
     Link to comment
     Share on other sites

     • கருத்துக்கள உறவுகள்

     ஆமா நாலு நாட்டை பிடிக்கிற மாதிரி விதி முறைகளை அமைச்சு வைச்சுட்டு சொல்ல வேண்டியது தானே..ஏதாச்சும் சரி.பிளை திருத்த மோகண்ண தான் சாமம் சாமககா வந்து மாஞ்சு கொண்டு நிக்கனும்.. உங்களுக்கு உறுப்பினர்கள் ஏதாவது கேட்டால் விதி முறைகளை மட்டுமே தூக்கிச் போட்டுட்டு போறது தான் வேலை யா..ஆ..நல்லது உங்கள் பணி தொடரட்டும்..✍️👋 நன்றி ..நாம் யாழில் குப்பை மட்டுமே போட வாறனாங்கள்.

     Edited by யாயினி
     Link to comment
     Share on other sites

     • கருத்துக்கள உறவுகள்

     நம்ம திரி ஒண்டு சக்கை போடு.. போட்டு இருக்குது... பரவாயில்லை...

     நம்ம பங்கு பெயர்... முதல் பத்துக்குள்ள வந்தது சந்தோசம்... 😁

      

     நன்றி, நியானியர், 

     அதிகம், பேசப்பட்ட இலங்கை, இந்திய, தமிழக அரசியவாதி குறித்தும் போட்டால் நல்லா இருக்குமே...

     நம்ம சும்.... வெற்றிக் கொடி கட்டி இருப்பார்.

     Link to comment
     Share on other sites

     • கருத்துக்கள உறவுகள்

     நன்றி நியானி,

     1. பச்சை புள்ளிகள் பற்றிய என் பார்வை தெரிந்ததே.  இந்த வருடம் பச்சை புள்ளிகளை வெளியில் காட்டாமல் நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றம் நல்லதொரு மாற்றம்.

     இதையே நிர்வாகம் இவ்வாறான மீள்பார்வையிலும் கைக்கொண்டு - பச்சை புள்ளிகளை பற்றி தகவல் எதையும் பரிமாறாமல் விட்டால் நல்லம் என்பது என் அபிப்பிராயம்.

     2. நன்னியின் ஆவண காப்பு திரிகள் முன்னிலைபடுவது நல்ல விடயம். யாழ் ஒரு அன்றாட பதிவுத்தளம் என்பதை தாண்டி ஒரு ஆவண காப்புதளமாகவும் மாறுவதோடு மட்டும் இன்றி அவற்றில் பார்வையாளர் ஆர்வமும் இருப்பது மகிழ்ச்சி.

     3. புதியவர் பதியும் அளவு குறைந்தது கவலையான விடயம். அதிலும் நன்னி ஒரு ஆவண காப்பு நோக்கிலும், சிவதரன் தன் யுடீயுப் சானலை பிரபல்யபடுத்தும் நோக்கிலும் அதிக பதிவுகளை இடுபவர்கள். 

     4. ஒரு வருட உழைப்புக்கு நிர்வாகத்துக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

      

     2 hours ago, Nathamuni said:

     நம்ம பங்கு பெயர்... முதல் பத்துக்குள்ள வந்தது சந்தோசம்... 😁

      

     யோவ் நொங்கு,

     அதில பாதி நீங்க போட்ட, sad, confused, LOL குறிகள் ஐயா🤣.

     2 hours ago, Nathamuni said:

     நம்ம திரி ஒண்டு சக்கை போடு.. போட்டு இருக்குது... பரவாயில்லை...

     👏🏾

     பிகு.

     யாழ்கள star content providers சுமந்திரன், சீமானுக்கு கோடானு கோடி நன்றிகள் 🤣.

     இந்த வருடம் சம்பந்தன் ஐயா பின் தங்கி விட்டார். முன்னேற இடமுண்டு🤣.

     Link to comment
     Share on other sites

     4 hours ago, Eppothum Thamizhan said:

     ஒரு நாளைக்கு 5 விருப்புப்புள்ளிகள்தான் போடலாமென்றால் 364 நாட்களுக்கு 1820 விருப்புப்புள்ளிகள்தானே போடமுடியும்? கணக்கு எங்கேயோ இடிக்குதே?? இல்லாவிட்டால் இப்போ 5ஐ விட கூடவும் போடலாமோ ??? 

     இந்தாள் கல்குலேட்டரோட திரியுது! 😂

     Link to comment
     Share on other sites

     • கருத்துக்கள உறவுகள்
     18 hours ago, Justin said:

     இந்தாள் கல்குலேட்டரோட திரியுது! 😂

     என்னசெய்ய நான் 5 க்கு மேல விருப்புப்புள்ளியிட்டால் limit முடிந்ததென்று சொல்லுது. நியானி சொன்னபிறகுதான் தெரிஞ்சிது விருப்பு புள்ளியும் டிசைன் டிசைனா போடோணும் என்று!😃

     Link to comment
     Share on other sites

     Please sign in to comment

     You will be able to leave a comment after signing in     Sign In Now
     ×
     ×
     • Create New...

     Important Information

     By using this site, you agree to our Terms of Use.