Jump to content

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.


Recommended Posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நசீர் அகமட்..சம்பந்தர் ஐயாவின் வண்டியைத் தடவி (ஆதார புகைப்படம்  யாழிணையத்தில் இப்பவும் இருக்கு)கிழக்கு மாகாணமுதல்வர் பதவி எடுத்தபின் ...கிழக்கில் செய்த அநீதி கணக்கில் அடங்காது..அதுவும் புல்லாவுடன் சேர்ந்து பறித்த காணிகள்  அதிகம் ..பதவி பறிப்பும் அதிகம்....இதிலை பெரிய அளவிலை படம் அடித்து...அதுக்கு கலர்  அடித்து...கலர் காட்டி வாக்கு ,துவேசம் பரப்ப முனைகின்றார்...அதைவிட புலிப் பூச்சாண்டிகாட்டவும் முனைகின்றார்...போதாக்குறைக்கு..நடுவரும் சாணாக்கியனை சாடமுனைகின்றர்...சாணக்கியனனின் சாணக்கியமான விவாதத்தினால் அதிகம் அடக்கப்படுகிறார்...இந்த விடையத்தில் சாணக்கியனுக்கு சபாஸ்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2018ஆம் ஆண்டுதான் அவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அவரை 12 வருடங்களாக இவ்வாறன செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். அவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் எந்தவித இனவாதமோ, மதவாதமோயின்றி செயற்படும் ஒரு மேலதிக அரசாங்க அதிபர். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அடித்துவிரட்டி காணிகளை அபகரித்தாக கூறியிருந்தார். எந்த பாரபட்சமுமின்றி அரச நிர்வாகத்தினை மேற்கொள்கின்ற மாவட்ட நிர்வாகத்தினை இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவது வேதனைக்குரிய விடயம்.

சந்திரிகா பண்டார நாயக்க அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்டது பண்ணம்பல அறிக்கையாகும். அது வர்த்தமானியல்ல. முன்னாள் அமைச்சர் அஸ்ரப் இது தொடர்பான பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தார். அந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி எட்டு கிராம சேவையாளர் பிரிவுடன் உருவாக்கப்பட்டது.

பண்ணம்பல அறிக்கையென்பது யுத்தகாலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகும். அந்த காலத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரமிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த காலகட்டம்.


அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள், நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலகட்டம். அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களை நிறைவேற்றினார்கள். அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் புனானை கிழக்கு பகுதியும், காராமுனையும் உள்ளது. அதன் நிர்வாகமும் வாகரை பிரதேச செயலகம் முன்னெடுத்துவருகின்றது. இதனை கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கின்றனர். இன்று புனானை கிழக்கு பிரதேசம் கோறளைப்பற்று வடக்கில் இருந்தாலும் ரிதிதென்ன போன்ற சில கிராமங்களில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.

அதேபோன்று பல தமிழ் கிராமங்கள் அதில் உள்ளன. கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என கூறும் பல பகுதிகள் முழுக்கமுழுக்க தமிழர்கள் வாழும் பகுதி. தமிழ் பகுதிகளையெல்லாம் இணைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

மயிலங்கரச்சி கோறளைப்பற்று மத்தியில் காணப்படும் தமிழ் கிராமமாகும். அப்பகுதி மக்கள் தங்களுக்கு கோறளைப்பற்று மத்தியுடன் நிர்வாக ரீதியாக இருக்க விரும்பம் இல்லையென்று கடிதம் தந்துள்ளார்கள். அதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளின் நிர்வாகத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுக்கின்றது. அதனையே மயிலங்கரைச்சி மக்கள் கோருகின்றனர்.

தியாவட்டுவான் இன்றும் கோறளைப்பற்று மத்தியுடனேயே உள்ளது. ஆனால் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் அது கோறளைப்பற்று வடக்குடன் உள்ளதாக கூறுகின்றார்.

இது கூட தெரியாதவராகவே அவர் இருக்கின்றார். பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் தியாவட்டுவான் கிராம சேவையாளர் பிரிவு எங்கு இருக்கின்றது என்று கேட்டு தெரிந்தாவது பேசியிருக்க வேண்டும்.

நிலத்தொடர்பு இல்லாமல் மட்டக்களப்பில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கூறியிருந்தார்.

காணிக்களவு  காணிக்களவு என்று அடிக்கடி கத்திய நசீரு அகமதுவுக்கு..இது நல்ல பதிலடி...(வியாழேந்திரன் பேச்சில் இருந்து)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, lusu said:

 

அற்புதமான கருத்துக்கள். 

இவர் போன்று சிந்திக்கும் தமிழ்பேசும் சமூகம் உருவாகவேண்டும்.இவரின் உண்மையான பேச்சு இலங்கை இஸ்லாமிய  தமிழர்கள் தொடர்பான என் தனிப்பட்ட நிலைப்பாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழ்பேசும் சமூகமாக ஒன்றிணைவோம். அடிமட்ட சாதாரண மக்களின் மனங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்கள் தொடங்கப்படல் வேண்டும். என்னால் முடிந்த அத்தனை உதவிகளும் இருக்கும். 

 

நேற்றும் கூட பேரினவாதி கோட்டா தான் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டதாக அவருக்கு ஒரு விருது வழங்கும் நிகழ்வில் தெரிவித்து இருக்கின்றார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.