Jump to content

அன்னபூரணி -Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

அன்னபூரணி

“ போனகிழமை தான் படம் பாத்தனி , திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க , ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம்  வருசத்திக்கு எண்டு செல்லம்மாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்தரும் பிறக்கிறதில்லை எண்டதால சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி  சண்முகத்தாரும் லேசில விட மாட்டார் . மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார் . ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட  கள்ளு அடிக்கேக்க , சண்முகத்தார் மனிசீட்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய , இவர் சங்கடப்பட அவன்       
  “ ஹம கானிம எக்காய் நம வித்தறாய்   வெனஸ் “ ( எல்லா மனிசியும் ஒண்டு தான் அவனவன்டை மனிசிமாருக்கு ஒவ்வொரு பேர்) எண்ட ஒரு உலக உண்மையச் சொன்னான். அதுக்குப் பிறகு இவர் யோகர் சுவாமி சிஸ்யன் மாதிரி சும்மா இருப்பதே சுகம் எண்ட முடிவுக்கு வந்தார். 

சண்டை தொடங்கி செல்லம்மாக்கா சன்னதம் ஆட வெளிக்கிட்டா புரக்கிராசியார் தோம்பு ஆராஞ்ச மாதிரி நாலு சந்ததியும் சந்திக்கு வரும் , ஆன படியால் சண்முகத்தார் ஒண்டும் பறையாம ஓம் எண்டார். போனமுறை போகேக்கை “திரைக்கு வருகிறது நிறம் மாறாத பூக்கள் “ எண்ட போர்டை பாத்தோண்ணையே மனிசி முடிவெடித்திட்டுது எண்டு நெச்சபடி சண்முகத்தாரும் படம் பாக்க ரெடி ஆனார். இனி என்ன நாலு குடும்பத்தைச் சேத்துப் போனாத்தான் சுகம் எண்டு போட்டு அக்கம் பக்கம் ஆள் சேத்தார் சண்முகத்தார்.

புதுப்படம் எண்ட படியால் 5 show போடுவாங்கள் வேளைக்கு  வெளிக்கிட்டால் தான் வசதியா இருக்கும்  , போனமுறை மூண்டாவது றோவில இருந்து நான் பட்ட பாடு ; ஒரே விசிலடியும் ,சிகரட் மணமும் , மூட்டைப்பூச்சி வேற, நிமிந்து இருந்து பாத்து கழுத்து நோ எண்டு செல்லம்மாக்கா புலம்ப சண்முகத்தார் சாரத்தை மாத்தி வேட்டியைக் கட்டினார். 

போட்டு வந்து விடிய செக்குக்கு எள்ளுக் குடுக்க வேணும் எண்ட யோசினையோட தியட்டருக்கு பக்கத்து பாரின்டை சந்தோசத்தில சண்முகத்தாரும் படம் பாக்கப்  பத்துப் பேரும் வெளிக்கிட்டிச்சினம். 

நேத்துப் போட்டு வந்தவங்களிட்டை நிலமையை கேட்டுப் போட்டுத்தான் வந்தனான் எண்டு கனகலிங்கம் சொல்ல எல்லாரும் வெளிக்கிட்டம் சன்னதியானைக் கும்பிட்ட படி. 

சண்முகத்தார் இந்த முறை செலவைப் பாக்காம ODC ரிக்கற் எடுத்தார். அபிசேக ஆராதனையோட படம் தொடங்கி முடியும் வரை செல்லம்மாக்கா கதைக்கேல்லை ஆனபடியால் இது நல்ல படமாத் தான் இருக்கும் என சண்முகத்தார் முடிவுக்கு வந்தார். படத்தின்டை பாதிப்போட கதைக்காம அமைதியா வந்த மனிசியைப் பாத்திட்டு யோசிச்சார்,உந்த ரீலை வாங்கி்க் கொண்டு போய் ஒவ்வொரு நாளும் போட்டுக் காட்டினா எப்பிடி இருக்கும் வீடு எண்டு. அழுதும் அழாமலும் வந்த செல்லம்மாக்கா கடையை மறத்திட்டா எண்ட சண்முகத்தார் முடிவெடுக்க, திடீரெண்டு தொடங்கினா “ எப்பிடியும நல்லதா ஒரு பத்துச் சீலை எடுப்பம் “ எண்டு. 

என்னெண்டு தான் உந்தப் பெண்டுகள் டக்டக்கெண்டு மாறுறாளவையோ எண்டு யோசிச்சுக் கொண்டு சண்முகத்தார் கடைப்பக்கம போக, கடைக்காரன் கண்டோன்னயே கதிரையைப்போட்டு  வெளீல இருத்தி வைச்சான் போன ஆம்பிளைகளை. நித்திரை வரத் தொடங்க நேரத்தைப் பாத்திட்டு சண்முகத்தார் அந்தரப்பட,  தனக்கும் சண்முகத்தாருக்கும் சம்மந்தம் இல்லை எண்ட மாதிரி செல்லம்மாக்கா சீலைய மட்டும் பாத்துக்கொண்டு இருந்தா. சீலை எண்டு தொடங்கி, வேட்டி சாரம் எல்லாம் வாங்கீட்டு லக்கேஜைப் பற்றிக் கவலைப் படாமல் செல்லமாக்கா வயித்தைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினா. வெளீல வந்து இட்டலியும் வடையும் சாப்பிட்டிட்டு கோப்பியும் குடிச்சிட்டு வெளிக்கிட்டிச்சினம் எல்லாரும். 

ஓவர் speed ஆப் போனாத்தான் பிடி படாமல் போகலாம் எண்டு ஆரோ சொல்ல வேகம் கொஞ்சம் கூடிச்சிது ….அணியத்தில நிண்ட படி யாரும் வாறானோ எண்டு சண்முகத்தார் உத்துப்பாத்த படி வந்தார். சண்முகத்தார் தண்டயல் தம்பிப்பிள்ளைக்கு சொந்தக்காரர் , அதால தான் தன்டை38 அடி கொட்டுக்கு ( வள்ளத்துக்கு ) அம்மான்டையோ மனிசீன்டையோ பேரை வைக்காமல் அன்னபூரணி எண்டு வைச்சவர்.  வாங்கின சாமாங்களை தண்ணி படாம படங்கு போட்டு சுத்தி காத்துக்கு பறக்காம பாரத்துக்கு துடுப்பையும் மேல வைச்சா செல்லம்மாக்கா. விட்ட சுருட்டுப் புகையின்டை திசையையும் காத்தில கரைஞ்ச நேரத்தையும் பாத்து வேகத்தை கூட்டிக்குறைச்சு விடிவெள்ளி பாத்து வீட்டை வந்து சேர விடியச் சாமம் ஆகீட்டிது. 

ஆறு மணிக்கு வெளி்க்கிட்டு காரைக்காலுக்குப் போய் ஒம்பது மணிக்கு second show பாத்திட்டு கொண்டு போன சவுக்காரம் , தேங்காய் எண்ணை ,கறுவா, கராம்பு , ஏலக்காய் எல்லாம் குடுத்திட்டு சீலை ,சாரம் , சம்பா அரிசி, பட்டும் அலுமினியமும் ஏத்திக்கொண்டு வாறது வழமை . திரும்பி ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டை வந்திடலாம். இந்த ஏற்றுமதி இறக்குமதி விளையாட்டில போட்டி பொறமை கூட , போட்டுக் குடுக்கிறதும் கூடிச்சிது. Dummy ஆ ஒரு போட்டை அனுப்பி நிலமையைப் பாத்துத் தான் உண்மையா வெளிக்கிடிறது . பனை மரத்தில ஏறி நிண்டு star toffee கவரால torch ஐ மறைச்சு பச்சை , சிவப்பு எண்டு காட்டிற சிக்னலைப் பாத்துத் தான் போய் வாறது . வாற boat ஐ விட்டுக்கலைச்சுக் கொண்டு வந்த சேர முதல் சாமாங்களை இறக்கிக் கொண்டு போயிடிவினம் , இறங்கின சாமாங்கள் எந்த வீட்டை போனது எண்டு ஆராலேம் பிடிக்கேலாது ஏனெண்டால் எல்லா வீடும் ஒரே மாதிரித் தான் கட்டி இருந்தது.  கடல்லை வாற boat க்கு கால்வாய் மாரி வெட்டி நேர வீட்டுக்குள்ளேயே விடீற மாதிரி ஒரு set up முந்தி இருந்தது எண்டு கதை இருந்தது.

ஆழக்கடலில் இப்பிடி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்திட்டு , இப்பவும்  நம்பிக்கையோடு ஆளுகின்ற நாளை எண்ணி சண்முகத்தாரும் செல்ம்மாக்காவும் காத்து இருக்கினம். 

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்


பி.கு
அன்னபூரணி அம்மாள் என்ற பாயக்கப்பல் 1938 இல் வல்வெட்டித் துறையிலிருந்து வெற்றிகரமாக அமெரிக்காவில் பொஸ்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது . அதன் தலைமை மாலுமியாக இருந்தவர் தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிபிள்ளை என்பவர் 
ஆவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையானபோதிலும் அன்று போட் சுளுவாக போய் வருவது வாஸ்தவம்தான் ........!  😂

நன்றி நிழலி ........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க போறபோக்க பாத்தா போட் எடுத்து யாவாரத்தை தொடங்கலாம் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் தமிழ்நாட்டிற்கு சென்று, படம் பார்த்து விட்டு வருவதை கேள்விப் பட்டுள்ளேன்.
ஆனால்…. மாலையில் சென்று, காலையில் திரும்புவதை இப்போ தான் அறிகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.