Jump to content

இளவேனிலும்உழவனும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

1970 ம்ஆண்டு வசந்த காலத்தில் எழுதிய கவிதை. அது புரட்ச்சி வரபோகிறது என்கிற நம்பிக்கையுடன் இலங்கையின் இராணுவப் புவியியலைப் படிக்க நான் காடு காடாக அலைந்த காலம். 1970 பதுகளில் வடகிழக்கு மாகாணத்தில் புரட்ச்சியின் மையம் வன்னி என உணர்ந்தேன். அதனை பிரகடனப் படுத்தும் வகையில் ”பாலி ஆறு நகர்கிறது” ”நம்பிக்கை” என்ன சில கவிதைகள் எழுதினேன். இது வன்னிக் காட்டுப்புற விவசாயிகளின் வாழ்வியல் பற்றிய கவிதை. எழுதிய கவிதைகளில் ஒன்று. இக் கவிதையில் வரும் ”காலச்சுவடு” என்கிற படிமம் அப்பவே பிரபலமானது. சுரா தான் வாசித்தவற்றுள் நீங்க உருவாக்கிய காலசுவடு சிறப்பான படிமம் என்று பாராட்டினார். லவினர்கள் சொற்களை செல்வம் செல்வாக்குள்ளவர்கள் பதிவுசெய்து தனி உடமையாக்க உருவாக்குவதில்லை. தமிழுக்காகவே உருவாக்குகிறோம். அதுதான் காலத் துயர்.
*
இளவேனிலும்உழவனும்.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
காட்டைவகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
வீடுதிரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில்
கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
.May be an image of 1 person and grass
தொட்டதெல்லாம் பொன்னாக
தேவதையின் வரம்பெற்ற
மாலைவெய்யில்
மஞ்சட்பொன் சரிகையிட்ட
நிலபாவாடை
நீளவிரிக்கிறது.
இதயத்தைக்கொள்ளையிட
வண்ணத்துப்பூச்சிகள்
வழிமறிக்கும்
காட்டுமல்லிகைகள்
காற்றையேதூதனப்பி
கண்சிமிட்டும்.
அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும்எருதுகளோ,
தரிக்கா.
.
ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்
1970
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, poet said:

கவிதை வரிகளுக்கு நன்றி புலவரே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டைவகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
 
அழகிய உவமானம்..❤️❤️
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மிகவும்  சிறப்பாக இருக்குது ஐயா .......பாராட்டுக்கள்......!  🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.