Jump to content

அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" )

spacer.png

 

இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். 
 
இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தமது படிப்பும், தமது வேலைகளுமாக கண்களை மூடிக் கொண்டு இருந்தது. இலங்கை அரசினது ஒடுக்குமுறைகள் அதிகரித்த போது இந்த சுயநலக் கூட்டம் தான் முதலில் நாட்டை விட்டு ஓடி வந்தது. ஏற்கனவே வெளிநாடுகளில் வசித்த தமிழர்களில் இருந்த இவர்களை போன்ற பிழைப்புவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு புலி ஆதரவு வேடம் போட்டுக் கொண்டு தேசபக்தி வியாபாரத்தை தொடங்கினார்கள். 
 
வெளிநாடுகளில் இருந்த புலிகளின் சொத்துக்கள் இந்த திடீர் தேசபக்தி வியாபாரிகள் தொடங்கிய அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்தவர்களின் பெயர்களிலேயே இருந்தன.  2009 வைகாசி மாதம் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது; புலிகள் அமைப்பை அழித்தது. புலிகள் அமைப்புக்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கொடுத்த நிதிகள் மற்றும் புலிகளின் முதலீடுகள் என்பன இவர்களின் சொத்துக்களாக மாறின. தமிழ் மக்களின் சொத்துக்களை போராளிகளுக்கும், போரினால் வாழ்வை இழந்த மக்களுக்கும் கொடுங்கள் என்று இவர்களை நோக்கி கேட்டவர்களுக்கு "தலைவரும், புலிகள் அமைப்பும் திரும்பி வந்து கேட்கும் பொது அவர்களிடம் சொத்துக்களை ஒப்படைப்போம்" என்று மறுமொழி சொன்னார்கள்.
 
இவர்கள் இப்படிச் சொல்லி பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. தேசபக்தி வியாபாரத்தை நடத்தி மக்களின் சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றியவர்களில் சிலர் தேசபக்த வேடத்தை கழட்டி விட்டு ஒதுங்கி கொண்டார்கள். சிலர் இலங்கை அரச ஆதவாளர்களாக மாறியிருக்கிறார்கள். சிலர் இந்திய அரசின் கூட்டாளிகளாக மாறி இந்தியாவை விட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு கதியில்லை என்கிறார்கள். 
 
மகிந்த ராஜபக்சவிற்கு கொரோனா நிதியாக மரசு மோரிட்டா சாரா என்னும் தென்னிலங்கையை சேர்ந்த பத்து வயதுக் குழந்தை தான் சேமித்த பணத்தை அனுப்பி வைத்த செய்தி அண்மையில் வெளி வந்தது.  இந்தச் செய்தியை "லங்காசிறி " என்னும் குறுந் தமிழ் தேசிய வியாபார ஊடகம் "மகிந்தவிற்கு ஆனந்தக் கண்ணீரை வர வைத்த பத்து வயது சிறுமி" என்ற தலைப்பிலே பதிவு செய்திருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களை படுகொலை செய்த இனப் படுகொலையாளிக்கு ஆனந்த கண்ணீர் வந்ததை பார்த்து தமிழ் இணையத்தளம் நடத்துபவர்களுக்கு புல்லரித்து போயிருக்கிறார்கள்.
 
கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils) என்னும் அமைப்பு நடத்திய தமிழியல் விழா என்னும் கோமாளிகளின் கூத்தில் வானதி சீனிவாசன் என்ற பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழலை அழைத்தார்கள். தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் வெறுக்கும் பாசிச பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரை அழைத்ததை சிலர் எதிர்த்த போது கனடியத் தமிழர் தேசிய அவையின் அறிவுக் கொழுந்துகள் "உங்களுக்கு அரசியல் தெரியாது. இந்தியாவை ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவரை  கூப்பிட்டு அவரைக் கொண்டு இந்திய அரசிடம் பேசி பல நன்மைகளை எங்களது மக்களுக்கு செய்யவிருக்கும் எங்களது "மாஸ்டர் பிளான்" இது. இதை எதிர்கிறீர்களா?.  எதையும் பிளான் பண்ணித தான் செய்ய வேணும்" என்று விஞ்ஞான விளக்கம் கொடுத்தார்கள்..
 
தமிழ் ஈழத்திற்கான நோர்வே அமைப்பு (Norway Council of Eelam Tamils, NCET) என்னும் அமைப்பின் தலைவராக இருந்த "திடீர் தேச பக்தர்" பஞ்சகுலசிங்கம் கந்தையா என்பவர் Aftenposten என்ற நோர்வே  ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து கேட்டார்கள். அந்த ஊடகம் புலிகள் செய்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கேட்ட போது "புலிகளும் அதே குற்றத்தை (அதாவது   மனித குலத்திற்கு ஏதிரான குற்றங்கள்) புரிந்தவர்கள், ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது. காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது", எனக் கூறி தேசபக்த வேடத்தை கலைத்தார். பின்பு திடீர் தேச பக்தர் பஞ்சகுலசிங்கமும் அவரது பிழைப்புவாதிகள் கூட்டமும் இலங்கை போய் இலங்கை அரசைச் சந்தித்தது.
 
கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகைப் பூவை வைத்து செய்த மலர் அலங்காரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலின் நிருவாக சபையினரும் புலிகள் அமைப்பு  இருந்த போது "நாங்களும் தேச பக்தர்கள் தான்" என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் தான். புலிகள் இருந்த போது பூசைக்குரிய பூவாக கார்த்திகைப்பூ இருந்தது. தேசபக்தி வியாபாரத்தின் தேவை முடிந்த பிறகு கனடா அய்யப்பன் கோவிலின் ஆகம விதிகளில் கார்த்திகைப் பூவுக்கு இடமில்லாமல் போய் விட்டது. விட்டால் "கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா உத்தமனார் வேண்டுவது" என்று ஐயப்பனுக்கு பஜனை பாடினாலும் பாடுவார்கள் போலேயிருக்கிறது.
 
வலதுசாரித் தேசியத்தினது  ஆதரவாளர்கள் வியாபாரிகளாக, பிழைப்புவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாகத் தானே இருப்பார்கள்.  இந்த புலம்பெயர் பிழைப்புவாதிகளில்  பெரும்பாலானவர்கள் இந்துத்துவ பாசிச பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு கிளையான நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களாக தமது வியாபாரங்களை தொடர்கிறார்கள். இவர்கள் பாசிசத்தின் ஆதரவாளர்களாக தொடராது விட்டால் தானே வியப்படைய வேண்டும்!!. 
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இந்தபுலம்பெயர் பிழைப்புவாதிகளில்  பெரும்பாலானவர்கள் இந்துத்துவ பாசிச பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு கிளையான நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களாக தமது வியாபாரங்களை தொடர்கிறார்கள். இவர்கள் பாசிசத்தின் ஆதரவாளர்களாக தொடராது விட்டால் தானே வியப்படைய வேண்டும்!!.//

 

உங்க சண்டைக்க எதுக்கு நாம் தமிழர் கட்சிய இழுக்குரீங்க..??

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் புலிகள் ஆதரவாளர்களில்லை என்பது மட்டுமல்ல நீங்களும் புலிகள் விசுவாசிகள் இல்லையென்பது வெளிப்படையாகவே தெரியுது.

இருபகுதி உங்களிடையேயான  மோதலுக்கு இனத்தையும் போராளிகளையும்  ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறீர்கள் என்பது உங்கள் அறிக்கை போர்களில் அப்பட்டமாக தெரியுது.

போங்க தம்பி ஒரு ஓரமா நின்று அவர்களோட சேர்ந்து விளையாடிட்டு தமிழ் கடையில உழுந்து வடை ரோல்ஸ் ஏதாவது விக்கும் வாங்கி தின்னுபுட்டு பெப்சியோ கோலாவோ வாங்கி குடிச்சிட்டு கிளம்புங்க.

மக்கள் எல்லாம் தெளிவாகி அவரவர் வேலையை பார்க்கபோய் ரொம்ப நாளாச்சு, இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சுக்கொண்டு நீங்கள் ஊருக்க சுத்திக்கொண்டு திரியிறியள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.