Jump to content

“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்

January 5, 2022
 

தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.

 தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும் மகள்

தன் மகனுக்கான நீதி கேட்டு தந்தை மரணித்து விட்டார்.  தாய் நோயுற்ற நிலையில் இருக்க தன் தம்பியினைத் தேடும் பயணத்தில் அக்கா! சாட்சியங்கள் உண்மையினை பேசுகின்றன.  ஆனால் நீதி வழங்கத் தான் யாரும் இல்லை .

அம்மாவை பார்க்க வேண்டும்

 

உள் நாட்டு  யுத்தம்  நிறைவடைந்து விட்டது.  தற்போது நாட்டில் சமாதானமாம்.  மக்கள் எல்லாரும் சந்தோசமாய் நிம்மதியாக வாழ்கின்றார்களாம் என நாடெல்லாம் ஒரே பரவல் பேச்சு. ஆனால் உண்மையாகவே எம் தமிழ் மக்கள் சந்தோசமாக நிம்மதியாக இல்லை.

ஆயுதப்போர்  முடிந்து விட்டது தான்; ஆனால் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் ரணங்களாய் தொடர்ந்து துரத்துகின்றது. கடந்த யுத்த காலத்தில் தந்தையை, மகளை, மகனை, சகோதரர்களை என தம் உறவுகளைத்  தொலைத்துவிட்டும், பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் ஒப்படைத்து விட்டும்  அவர்களின் வருகைக்காக 12 வருடங்களைக் கடந்தும் காத்திருக்கும் அந்த  உறவுகளின் நிலையை யாராறிவார்.

கடந்த போர்க்காலத்தில் தன் உடன் பிறந்த சகோதரனைத் தொலைத்துவிட்டு அவனின் வருகைக்காக இன்னமும் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டுவரும் போராட்டக் களத்தில் போராடிக்கொண்டு, தன் தம்பியின் வருகைக்காகக் காத்திருக்கும் உடன் பிறந்த சகோதரி தான் மகேந்திரன் சிவகாமி.

 

அம்மாவை பார்க்க வேண்டும்

 

“எனது பெயர் மகேந்திரன் சிவகாமி. நான் வவுனியா கூமாங்குளத்தில் வசித்து வருகின்றேன். எனது தந்தையின் பெயர் சின்னச்சாமி நல்லதம்பி. எனக்கு இரு சகோதரர்கள் தான். அதில் ஒருவர் தான் நல்லதம்பி சசிநந்தன். இவர் தான் காணாமல் ஆக்கப்பட்டவர். என்னுடைய மற்றைய சகோதரி திருமணம் செய்தி்ட்டா. என்ரை அப்பா தான் தம்பியைத் தேடி வவுனியாவில் காணாமல் போனவர்கள் போராட்டம் ஆரம்பித்தில் இருந்து போராட்டக் களத்திலேயே இருந்து போராடினவர்.

ஆனால் தம்பியை மீட்க முதலே அப்பா திடீரென இறந்திட்டார். என்ரை அம்மாவுக்கும் வயது போய்ட்டுது. அவவும் தம்பி காணாமல் போனதில் இருந்து யோசிச்சு  வருத்தம். என்ரை அப்பா சொல்லுவார் “தம்பிய வீட்ட மீட்டுகொண்டுவந்து விட்டிட்டு தான் தன் உயிர் போகும்” எண்டு. ஆனால் தம்பி பற்றி தகவல் ஒண்டுமே தெரியாமல் அப்பா இறந்திட்டார்.

தங்கடை மகனை பார்க்க வேணும் என்பது தான் என்ரை அப்பா அம்மாட கடைசி ஆசை.   அதனால தான்  நான் அப்பா இறந்தாலும் தம்பிய மீட்டெடுக்கணும் எண்டு போராடிக் கொண்டிருக்கின்றேன்.

2008 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 29 ஆம் திகதி வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்னால் வைத்துதான் என்ரை தம்பியை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் காலை 7 மணியளவில்  பிடிச்சுக் கொண்டு போன தகவல் தெரியவந்தது.  பிறகு காவல் துறையினரிடம் ஒப்படைத்தவங்கள்.  நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து என்ரை தம்பி குற்றவாளி இல்லை என்று விட்டுவிட்டார்கள்.

வழக்கு முடிஞ்சு வரேக்க நீதிமன்ற வாசலிலேயே சிஐடி எண்டு சொல்லி  ஐந்து பேர் வந்தாங்க. என்ரை தம்பியை எம் கண்முன்னுக்கே பிடிச்சிட்டு போனாங்க. எங்களால முடிஞ்சளவு அவனைக் காப்பற்றப் போராடியும் காப்பாற்ற முடியல. என்ரை தம்பி ஒரு குற்றமும் செய்யல. என்ரை தம்பிய எப்பிடியாவது மீட்கணும். இனியாவது நாங்கள் எல்லாரும் ஒன்றா சேர்ந்து நிம்மதியா வாழணும் எண்டதுதான் எங்கட ஆசை .

தம்பிட  உடுப்பு, சைக்கிள் என அவன் பாவிச்ச பொருட்கள் எல்லாத்தையும் வைச்சிருக்கிறம். அவன்ர படத்த சாமிதட்டிலயே வைச்சு பாத்திட்டு இருக்கிறம். அப்பா அம்மாவை உழைச்சு பார்த்ததும் என்ரை தம்பி தான். அவன் இண்டைக்கோ, நாளைக்கோ வருவான் எண்டு  தான் எல்லாரும் காத்துக்கொண்டு இருக்கிறம் . எப்பிடியாவது என்ரை தம்பிய கண்டுபிடிக்கணும்

அம்மாவை பார்க்க வேண்டும்

தம்பியைக் காணவில்லை எண்டு சொல்லி ரெட்குறோஸ் நிறுவனத்திலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிலும், வவுனியா வன்னி பிரதி காவல்துறை அதிபர் காரியாலயம் என எல்லா இடங்களிலேயும் முறைப்பாடு செய்தனாங்கள். ஆனாலும் அவன் எங்கே இருக்கிறான்? எப்பிடி இருக்கிறான்? எண்டு ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.  என்ரை தம்பி காணாமல் போகேக்க  25வயது. இப்போ அவனுக்கு 38  வயது  13 வருடம் ஆகீட்டுது. என்ரை தம்பிட தகவல் எதுவுமே தெரியல. எவ்வளவோ முறைப்பாடுகள் கொடுத்தும் யாருமே எந்தப் பதிலும் கூறவில்லை.

தம்பி காணாமல் போனதிலிருந்து என்ரை அப்பா அவனை மீட்க எல்லா வழிகளிலும் போராடினவர். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியல. அந்த வலியோட வவுனியாவில காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் நடாத்தினபோது வெயில், மழை எண்டு பார்க்காமல் தொடர்ச்சியா போராட்டத்திற்கு போவார். ஆனால் போராடி கடைசில தம்பிய பார்க்காமல் 06.05.2020 ஆம் ஆண்டு இறந்திட்டார். அன்று தொடங்கி இன்றுவரை என்ரை தம்பிய தேடி நான் போராடிக்கொண்டிருக்கிறன்.

எங்களுக்கு எங்கட தம்பி வேணும். எப்படியாவது எங்கடை தம்பியை மீட்டுத் தாங்கோ. என்ரை அப்பாவால தான் தம்பிய பார்க்க முடியலை. என்ரை அம்மாவாவது கடைசியா தம்பிய பார்க்கணும்  எப்படியாவது என்ரை தம்பிய மீட்டு தாங்கோ?” என தன் உடன் பிறந்த சகோதரன் பற்றி கூறிமுடித்தார் அந்த சகோதரி. இதுவரை அவன் எங்கே என தெரியாது பரிதவித்து நடு வீதியிலே கண்ணீருடன் காத்திருக்கும் அந்த சகோதரியின் நிலையை  என்னவென்று சொல்வது?

அம்மாவை பார்க்க வேண்டும்

 

இவர்களின் கண்ணீருக்கு நீதி எங்கே? இன்னும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும், கணவனைத் தொலைத்த மனைவிமார்கள், மனைவியைத் தொலைத்த கணவன்மார்கள், பெற்றோரை தொலைத்த பிள்ளைகள் என இன்றும் எத்தனை பேர் கண்ணீருடன்  எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி எங்கே! இவர்களின் எதிர்பார்ப்பும் தவிடு பொடியாகித்தான் போகுமா?

கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் தொலைந்து போன தம் உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என தெரியாது. ஆனால் அவர்களுக்காக நாள் தோறும் வீதியிலே காத்திருக்கின்றார்கள் உறவுகள். இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க யார் முன்வருவார்கள். இவர்கள் ரணங்கள் என்றுமே அழியப் போவதில்லை. இவர்களின் வலிகளுக்கு  மருந்து போட யாரும் தயாராகவும் இல்லை.

 

https://www.ilakku.org/i-have-wish-my-brother-will-come-and-see-my-mother/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.